Friday, November 1, 2013

அன்னதானம்..!

அன்னதானம்..!

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை,
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி,...
யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரைதானே.
- திருமூலர்.

நமது கடந்த பிறவிகளில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே நாம் மனிதப்பிறவி எடுத்திருக்கிறோம். அதே போல நமது பெற்றோர்களின் ஐந்து முந்தைய தலைமுறையினர் செய்த நல்வினைகள் மற்றும் தீவினைகளின் தொகுப்பில் எட்டில் ஒரு பங்கையும் சேர்த்தே அனுபவிக்கும் விதமாக நமது பிறப்பு அமைந்திருக்கிறது. மீதி ஏழு பங்குகள் பிற நமது தாத்தா பாட்டியின் பேரன் பேத்திகளுக்குப் பிரிந்துவிடும்.

நமது கர்மாக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டும். நம் சார்பாக வேறு யாரும் அதைச் சுமக்க முடியாது; மாற்ற முடியாது. பூஜைகள், பரிகாரங்கள் மூலமாக நமது தீயக்கர்மாக்களை நம்மால் குறைக்க முடிந்தாலும், அந்த பூஜைகள், பரிகாரங்களில் நாம் நேரடியாகக் கலந்து கொண்டால் மட்டுமே நமது தீயக்கர்மவினைகள் குறைய துவங்கும். அதே சமயம் அந்தப் பூஜைகள், பரிகாரங்களை நாம் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவைகள் சூட்சுமமாகச் செயல்படும். இது எல்லோருக்கும் இலகுவான செயலல்ல.

ஆனால், இவற்றை விட இகுவானவழி பசித்த உயிர்களுக்கு உணவளித்தலாகும். மனிதர் மட்டுமல்ல எவ்வுயிரினதும் பசிப்பிணியைத் தீர்க்கும் போதும் ஆன்மலாபம் உண்டு. மற்ற எந்தத் தானம் செய்யினும் யாரையும் போதுமென்ற அளவுக்குத் திருப்தி்ப்படுத்த முடியாது. எத்தகைய பசியாக இருப்பினும் ஒரு எல்லையில் போதுமென்று கூறுவர். மற்ற எந்தத் தானங்களையும் விட அன்னதானம் என்னும் உயிர்காக்கும் தானம் மிக உயர்வான அறமாகும்.

நமது கர்மவினையை இலகுவாக மாற்றும் சக்தி (கலியுகத்தில்) அன்னதானத்துக்கு மட்டுமே உண்டு. ஆகவே, பசித்தோர்க்கு அன்னதானம் செய்வோம். சகவான்மாக்களை இன்புறச் செய்வோம். நாமும் இன்புற்று வாழ்வோம்.

No comments:

Post a Comment