Friday, November 1, 2013

கங்கா ஸ்நானம் பற்றிய ஒரு தொகுப்பு :

கங்கா ஸ்நானம் பற்றிய ஒரு தொகுப்பு :

‘யார் செஞ்ச புண்ணியமோ, இப்போ நாம அனுபவிக்கிறோம்’’ என்று நாம் சில நல்ல விஷயங்களை அனுபவிக்கும்போது சொல்வோம். ஆனால், ‘‘யார் செஞ்ச புண்ணியமோ நமக்கும் புண்ணியமா சேருது’’ என்றுதான் கங்கையைப் பற்றிக் கூற வேண்டும். பாரதத்தாயே பேரழகு என்றால் அதற்கு அணிகலனாகவும் அலங்காரமாகவும் விளங்குகிறாள், கங்கை. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளோடும் சம்பந்தமுள்ளதுதான் கங்கை. விஸ்வாமித்திரர் கங்கையின் மகிமையைச் சொல்லக் கேட்டு ராமபிரான் வியக்கிறார். ஸ்ரீ சுகப் பிரம்மம் பாகவதத்தில் கங்கையை ஆராதிக்கிறார். மகாபாரதத்தில் பாரத ரத்னமான பீஷ்மரின் தாயே கங்கையாக இருக்கிறாள். சிவ, விஷ்ணு, அம்பிகைக்கு எத்தனை அஷ்டோத்திரங்கள், துதிகள் உண்டோ அத்தனையும் கங்கைக்கும் உண்டு. காசியில் கங்கைக்கு நடத்தப்படும் ஆரத்தியை காண கண்கோடி வேண்டும். அது நித்தம் நித்தம் நடைபெறும் காசி தீபாவளி!

புராண காலம் தொட்டு இன்று வரை கங்கை ஓடிக் கொண்டிருக்கிறாள். பாவங்களை தன்னிடத்தே கரைத்துக் கொண்டும் புண்ணியச் சாரலை வீசிக்கொண்டும் யுகம் யுகமாக பிரவகிக்கிறாள். எத்தனை ரிஷிகள் கங்கைக் கரையில் அமர்ந்து தவமியற்றியிருக்கிறார்கள்! எப்பேற்பட்ட மாமன்னர்கள் இவளை தொழுதிருக்கிறார்கள்! ஆதிசங்கரர்கூட, ‘‘நான் இப்படியே கங்கை ஓரமாக ஒரு புல்லாக இருக்க மாட்டேனா’’ என்று உருகுகிறார். கங்கையின் தீர்த்தத்தை மொண்டு குடித்து கரையருகே தவமியற்றி ஆத்மானந்தம் அடைந்த ரிஷிகள் ஆயிரக்கணக்கில் உண்டு. வயது முதிர்ந்த நிலையில் பலர் காசியில் போய் நிரந்தரமாகத் தங்கிவிடுவர். தம் சரீரத்திலிருந்து பிரியும் உயிர் மோட்சத்தை அடைய கங்கை உதவுகிறாள் என்ற ஆழமான நம்பிக்கை. அத்தகைய மகிமை கொண்ட கங்கையின் சரிதம்தான் என்ன?

மகாபலிச் சக்ரவர்த்தி குனிந்து வாமனரின் மூன்றாம் அடிக்காகத் தன் சிரசை அளித்தான். பிறகு நிமிர்ந்து பார்க்க, வாமனரின் திருமேனி நெடுநெடுவென வளரத் தொடங்கியது. வானம் தாண்டி, திசையெங்கும் அடைத்து நின்றது. ஒட்டுமொத்த பிரபஞ்சமுமே அவரின் திருமேனியாக உள்ளதைப் பார்த்து தன்னை மறந்தான். ஓரடியில் பூமியை அளந்த வாமனரின் திருப்பாதம், இரண்டாவது அடியில் பிரம்ம லோகம் முதலான சகல லோகத்தையும் அளந்து அதையும் தாண்டி நின்றது. பிரம்ம லோகத்தில் பெருமாளின் திருவடியை கண்ட பிரம்மா வியந்தார். ஸ்தம்பம் போன்றிருந்த அந்த பெரும் பாதத்தில் தான் அனுஷ்டானத்திற்காக வைத்திருந்த தீர்த்தத்தை அபிஷேகம் செய்தார்.

அந்த தீர்த்தம், அந்த பிரமாண்ட பாதம் முழுமைக்கும் போதாமல் நகக் கணுவின் ஓரமாகச் சென்று வழிந்தது; ஆறாக ஓடத் தொடங்கியது. ஆரம்பமான அந்த பிரம்ம லோகத்தில் அந்நதி விஷ்ணுபதி என்று அழைக்கப்பட்டது. சகல ரிஷிகளும் எம்பெருமானின் திருப்பாதத்தையும் அதில் படர்ந்து பாய்ந்தோடிய கங்கையையும் கண்டு தொழுதார்கள். பெரிய ஸ்தம்பம் ஒன்றில் வெற்றிக் கொடி பறந்தால் எப்படியிருக்குமோ அதுபோல கங்கை இங்கு பாத நகக்கணுவின் ஓரமாக அலை அலையாக பொங்கிப் பரவினாள். கங்கை, பிரம்மாவிடமிருந்து விஷ்ணு திவ்ய பாத ஸ்பரிசம் பட்டு நேராக துருவ லோகத்திற்குள் நுழைந்தாள். துருவ ஸ்வாமியோ, ‘‘என் குலதெய்வத்தினுடைய சரணார விந்த தீர்த்தம் என்மீது விழுகிறதே’’ என்று ஆனந்தமானார்.

அருகேயிருக்கும் சப்தரிஷிகளையும் சில்லென நனைத்தாள். இவ்வாறு ஒவ்வொரு உலகத்தையும் புனிதமாக்கிக் கொண்டே நகர்ந்தாள். சொர்க்க லோகத்திற்குள் புகுந்தாள். அவளை ‘‘மந்தாகினி’’ என்று அழைத்து துதித்தார்கள். பூவுலகத்திற்குள் இறங்காது அங்கேயே சுழித்து சுழன்று கொண்டிருந்தாள் மந்தாகினி. தனக்கும் அவள் பிரவாகம் கிட்டாதா என்று பூலோகம் ஏங்கியது. சூர்ய வம்சத்தில் வந்த சகரன் எனும் அரசன், சுமதி என்றழைக்கப்பட்ட பெண்ணை மணந்து அறுபதாயிரம் பிள்ளைகளை பெற்றான். சகரன் மிகச் சிறப்பாக ஆட்சி செய்தான். அசுவமேத யாகங்கள் செய்து நாட்டை வளமாக்கினான். அப்போது இந்திரன், சகரன் தன்னுடைய இந்திர பதவியை பறித்துக் கொண்டுவிடுவானோ என பயந்தான். ஆகவே, அசுவமேத யாகத்தில் பயன்படுத்தப்படும் குதிரையை மறைத்தான்.

சகரன் தன்னுடைய அனைத்து பிள்ளைகளையும் யாகக் குதிரையை தேடும்படி அனுப்பினான். பூமண்டலத்தின் மேல்பகுதியில் தேடினார்கள்; கிடைக்காததால் பூமிக்கு கீழேயுள்ள பாதாளத்தை ஊடுருவி பயணித்தனர். பாதாளத்தில் தவமிருந்த கபில முனிவருக்கு அருகே யாகக் குதிரையை கண்டனர். கோபமானார்கள். இவர்தான் இதைக் கவர்ந்து வந்திருப்பார் என நின

No comments:

Post a Comment