Thursday, December 26, 2013

உலகத்திற்க்கு வானவியலை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் ‘இந்துக்கள்’

 
உலகத்திற்க்கு வானவியலை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் ‘இந்துக்கள்’ ஜோதிட மற்றும் வானவியல் மேதை வராகமிகிரர் விக்கிரமாதித்தனின் அரசவையை அலங்கரித்த ந...வரத்தினங்களுள், புகழ் மிக்க ஒருவராய் வீற்றிருக்கும் பேறு பெற்றவர் ஜோதிட மாமேதை, வராகமிகிரர். இவரது ‘பஞ்ச்சித்தாந்தம்’ எனப்படும் நூல், வானியல் சாஸ்திரத்தின் அரிச்சுவட்டில் நீங்கா இடம் பெற்றுள்ளது. சந்திரனுக்கும் மற்ற கோள்களுக்கும் சுயமாக ஒளி வீசும் தன்மை இல்லை என்றும், அவைகள் சூரியனிடமிருந்தே ஒளியைப் பெற்று பிரதிபலிக்கின்றன என்றும் தமது கருத்தை வெளியிட்டார். இவரது ‘பிருஹத் சம்ஹிதை’ மற்றும் ‘பிருஹத் ஜாதக்’ ஆகிய நூல்கள், நட்சத்திரக் கூட்டங்கள் மற்றும் கிரகங்களின் நிலைகள், அவை பூமியின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களையும் (அதாவது தாவர, விலங்குகளின் மீது) விளக்குகின்றன. இவரது தாவரவியல் துறையிலான ஆய்வுகளில், மரம், செடி கொடிகளுக்குத் துன்பத்தை விளைவிக்கும் நோய்களையும் எடுத்தியம்பி உள்ளார். ஜோதிடவியலுக்கும், வானியலுக்கும் வராகமிகிரரின் தனிதுவமான பங்களிப்பு என்றென்றும் போற்றத்தக்கது
 
 
 
 

No comments:

Post a Comment