வேல் - தமிழர் வீரத்தின் அடையாளம்
தமிழ்க்கடவுள் முருகனின் போர்க்கருவியே வேல் ஆகும். இதன் பொருட்டு தமிழர்கள் தமது வரலாற்றின் ஆதியிலிருந்தே வேல் வழிபாட்டை மேற்கொண்டுவருகின்றனர். 'வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது. ஆகவே, வேல் தமிழர்களின் அளப்பரிய வீரத்தினை பறைசாற்றுவதாகவும் அதன் மூலம் கிட்டும் வெற்றியின் அடையாளமாகவும் திகழ்கிறது.
போர்மரபினராகிய தமிழர்கள் வேலினை உடலின் பல்வேறு பாகங்களில் குத்திக்கொண்டு முருகனுக்கு காவடி எடுத்தனர். இதற்கு, "அலகு குத...்துதல்" என்று பெயர். இது போர்க்களத்தில் காயமடைந்தவுடன் உடலில் வழிந்தோடும் குருதியை கண்டு பயங்கொள்ளாமல் இருப்பதற்காக தமிழர்கள் பின்பற்றிய வழிமுறையாகும்.
"வெற்றிவேல், வீரவேல்" என்ற வீரமுழக்கத்தோடேதமிழர்கள் செருக்களத்தை நோக்கிப் பாய்ந்தனர். தற்காலத்திலும் பெரும்பாலான தமிழர்கள் தங்களுடைய பெயரின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ "வேல்" சேர்த்துக்கொள்வர்.
வேல் பற்றி இதுவரை கிடைக்கப்பெற்ற தமிழ் நூல்களில் மிகத்தொன்மைவாய்ந்த தமிழர் வாழ்வியல் இலக்கண நூலான தொல்காப்பியத்திலிருந்து,
"வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும்
தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய"
வேல் பற்றி தமிழரின் வீரத்தை போற்றும் சங்ககால நூலான புறநானூற்றிலிருந்து,
"பிறர்வேல் போலா தாகி, இவ்வூர்
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே"
வேல் பற்றி தமிழரின் புனித நூலான திருக்குறளில் படைச்செருக்கு அதிகாரத்தில் காணப்படுகிறது. படைச்செருக்கு எனும் குறிப்பிட்ட அதிகாரத்தின் மூலம் வேல் மற்றும் தமிழரின் போரியலுக்குமான வலுவான தொடர்பினை வள்ளுவப் பெருந்தகை அறியப்படுத்துகிறார்.
"கான முயலெய்த வம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது."
"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்."
"விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி
னொட்டன்றோ வன்க ணவர்க்கு."
இத்துணை பெருமைமிக்க தொன்மைவாய்ந்த தமிழரின் மரபு அடையாளம் தான் "வேல்" ஆகும்

No comments:
Post a Comment