Friday, December 20, 2013

வெளியே வீசு

வெளியே வீசு



நீ பீதியாக, பயமாக, பதட்டமாக உணர ஆரம்பிக்கும் சமயங்களில் முழுமையாக சுவாசக்காற்றை வெளியேற்று. காற்றை வெளியே வீசு. எல்லா பதட்டங்களையும் காற்றின் மூலம் வெளியே வீசுவதாக உணர்ந்து பார். பின் காற்றை உள்ளிழு. புதிய காற்றை எடுத்துக் கொள், அதன் மூலம் உனது நுரையீரல், மற்றும் சுவாசம் செல்லும் பாதை யாவும் விரிவடைவதாக உணர். வெறுமனே ஏழு சுவாசங்கள் போதும், திடீரென அங்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதை பார்ப்பாய்....



இதை குறைந்தது இரண்டு வாரங்களுக்கு செய். இதில் மிக முக்கியமான விஷயம் நீ சுவாசத்தை வெளியேற்றும் போது உனது பதட்டத்தையும் சேர்த்து வெளியேற்றுகிறாய் என்ற யுக்தியை நினைவில் கொள்வதுதான். சுவாசம் பல்வேறு விஷயங்களை வெளியேற்றவும் உதவும், பல்வேறு விஷயங்களை உள்ளிழுக்கவும் உதவும்.

-ஓஷோ-

No comments:

Post a Comment