Monday, December 30, 2013

பாரதியாரின் நற்சிந்தனைகள்:-

பாரதியாரின் நற்சிந்தனைகள்:-
 
* தீமை செய்யும் புகைக்கு நடுவில் ஒளி தரும் நெருப்பு இருப்பதைப் போல, பகைவனின் உள்ளத்திலும் அன்பே வடிவான கடவுள் வீற்றிருக்கிறார். ... * தெளிந்த தேனில் சிறிது விஷம் சேர்ந்தாலும், அது பயனற்றாகி விடும். அதுபோல, உள்ளத்தில் வஞ்சகம் மிக்க தீய எண்ணம் புகுந்தால் மனமும் பாழாகி விடும். * பிறருக்கு கேடு நினைப்பவன் தனக்கே தீங்கு உண்டாக்கிக் கொள்கிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது. * அன்பே வாழ்வின் அடிப்படை என்பதை உணருங்கள். தின்ன வரும் கொடிய புலியைக்கூட அன்போடு போற்ற வேண்டும். அன்னை பராசக்தியே புலி வடிவில் வருவதாக எண்ணி வணங்க வேண்டும். * உலகில் எல்லாரும் எதிர்த்து நின்றாலும் அச்சம் சிறிதும் கொள்ளக் கூடாது. தேடிய பொருள் அனைத்தையும் இழந்து விட்ட நிலையிலும், அச்சம் கொள்வது ஆகாது. * உயிரை எடுக்கும் காலனைக் கூட புல்லைப் போல மதியுங்கள். பயம் என்னும் பேயை ஓட விரட்டுங்கள். - பாரதியார்

No comments:

Post a Comment