அமைதி புறாவை காக்க துப்பாக்கி எடு..!
மாகாபாரத போர் எப்படி நடந்தது அதன் மூலம் என்ன நிகழ்ந்தது யார் யாரெல்லாம் வென்றார்கள் யாரெல்லாம் தோற்று ஓடினார்கள் அந்த யுத்த களத்தில் மடிந்தது எத்தனை பேர் அங்கங்கள் சிதைந்து போனது எத்தனை பேருக்கு என்பது நமது திண்ணையிலேயே உட்கார்ந்து வெற்றிலை இடிக்கும் பல் போன பாட்டி முதல் தொட்டிலில் அமர்ந்து கொண்டு கள்ளம்கபடம் இல்லாமல் சிரிக்கும் பல் முளைக்காத குழந்தை வரைக்கும் தெரியும்
குருசேத்திர பூமியில் யுத்தம் முடிந்த பிறகு மடிந்து போன யானைகள் குதிரைகள் காளைகள் மலைபோல குவிந்து கிடந்ததுவாம் மனித உடல்களோ எண்ணவே முடியாத அளவிற்கு இமயமலை உயரம் போல காட்சி அளித்ததுவாம் கங்கை ஆறுக்கு இணையாக குருதி ஆறு அந்த பாலைவன பூமியில் பெருக்கெடுத்து ஓடியதுவாம் யுத்தம் முடிந்த போது பிழைத்து நின்ற ஜீவன்கள் பாண்டவர்களும் குருட்டு அரசனும் அவன் மனைவி காந்தாரியும் மட்டும் தானாம்
போர்களத்தில் மடிந்தது ஆண்கள் மட்டுமென்றால் கணவனை இழந்த காரிகைகள் எத்தனை பேர் மகனை பறிகொடுத்த அன்னையர்கள் எத்தனை பேர் சொந்த சகோதரனையும் இணைபிரியாத நண்பர்களையும் பறிகொடுத்து விட்டு ஆதரவு இல்லாமல் வாழவும் வழி இல்லாமல் சாகவும் முடியாமல் பரிதவித்த மக்கள் கூட்டம் எத்தனை பேர் இருப்பார்கள் அவர்கள் நிலையை எண்ணி பார்க்கவே இரக்கமுள்ள மனதிற்கு துணிச்சல் இல்லை
இத்தனை கொடுமையான இந்த போர்களத்திற்கு யார் காரணம் சம்மந்தமே இல்லாத உயிர்கள் துடிதுடித்து சாவதற்கு யார் பொறுப்பு பங்காளிகளுக்குள் நடந்த பாகபிரிவினை தகராறில் சொந்தமே இல்லாத மக்கள் கூட்டம் ஒட்டு மொத்தமாக செத்து போனதற்கு யாரை சூத்திரதாரி என்று குற்றம் சாட்டுவது சந்தேகமே வேண்டாம் சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாதான் இத்தனை கொடுமைக்கும் மூல காரணம்
தவழக்கூட முடியாத சின்னஞ்சிறு குழந்தையாக தொட்டிலில் கிடந்தவன் சகடாசூரனை சாகடித்தான் பூதகியின் விஷ முலையை கடித்து உயிர்பரித்தான் காளிங்கனின் ஆணவத்தை அடக்க தலையின் மீள் ஏறி நின்று தாண்டவம் ஆடினான் பூமியோடு ஒட்டி பிறந்த கோவர்த்தன கிரியை பிடுங்கி எடுத்து குடையாக பிடித்தான் மல்லாதி மல்லனான மாமனை அடக்கி வாகை சூடினான் அப்பேர் பட்ட வீராதி வீரனான மாதவன் சொல்பேச்சு கேட்காத துரியோதன கூட்டத்தை தனி ஒருவனாக நின்றே தாக்கி அழித்து வெற்றி வாகை சூடியிருக்கலாமே அப்படி அவன் செய்திருந்தால் அப்பாவி படை வீரர்கள் பலர் மடியாமல் இருந்திருக்கலாமே செய்தானா அவன் செய்யத்தான் நினைத்தானா
கண்ணன் செய்யாத மாயங்கள் தான் உண்டா மண்ணை தின்ற வாயை திறக்க சொன்ன அன்னைக்கு பவள வாய்க்குள்ளேயே அண்டங்கள் அத்தனையும் காட்டியவன் அல்லவா அவன் பிறந்த அன்றே யமுனை நதியை பிளந்து வழி எற்படுத்தியவன் அல்லவா அவன் எங்கோ வெகு தொலைவில் பாஞ்சாலியின் புடவை அவிழ்க்க பட்ட போது துவாரகையில் இருந்தவாறே கோடிகணக்கான ஆடைகளை கொடுத்து அவள் மானத்தை காப்பாற்றிய மாய கண்ணனுக்கு தர்மன் ஆடிய சூதாட்ட பலகையில் ஒரே ஒரு தாயகட்டையை மாற்றி போட்டு வெற்றி அடைய வைக்க முடியாதா என்ன அதை ஏன் அவன் செய்யவில்லை அப்படி மட்டும் செய்திருந்தால் பாஞ்சாலியின் சபதம் ஏது பாண்டவர்களுக்கு வனவாசம் ஏது பாரத போர் தான் ஏது ஏன் அவன் அதை செய்யவில்லை எதற்க்காக அவன் செய்யாமல் இருந்தான்
முடியாததை செய்யவில்லை என்றால் குற்றம் சொல்ல ஏதும் இல்லை முடிந்த செய்யாதவனை குற்றவாழி என்று சொல்லவதை தவிர வேறு வழியில்லை ஆகவே பாரத போரை தடுக்க முடிந்தும் தடுக்காத கிருஷ்ணன் குற்றங்களை சுமக்கும் கோபுரம் என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது
ஒரு சிறிய காரியத்திற்குள்ளேயே பல பெரிய காரணங்களை வைத்திருக்கும் கண்ணன் காரணமே இல்லாமலா இந்த போர்களத்திற்கு வழி ஏற்படுத்தி இருப்பார் நிச்சயம் இருக்காது அலைவீசும் கடலுக்குள் அடி ஆழத்தில் மறைந்து கிடக்கும் முத்துக்களை போல கண்ணனின் கருத்தை பகுத்து ஆய்ந்து உள்நுழைந்தால் ஏராளமான விடைகள் வெளிச்சமாக நமக்கு கிடைக்கலாம் ஆனாலும் வானத்தையும் பூமியையும் மூன்றடிகளால் அளந்து நின்ற திருவிக்ரமனின் திருவுள்ளத்தை திறனாய்வு செய்ய நமக்கு திறன் ஏது ஆனாலும் யாகசாலையில் கொட்டி கிடக்கும் புனிதமான நெய்யை நக்கி பார்க்க ஆசை பட்ட நாய் குட்டியை போல் நாயகனின் நற்கருத்தை நாமும் உணர ஆசைப்படலாம் அல்லவா?
குருசேத்திரம் என்பது மனித வாழ்க்கை அதில் பாண்டவர்கள் என்பது ஐம்புலன்கள் ஐம்புலங்களையும் தாக்கி அழித்து வெற்றிவாகை சூடவரும் பேராசைகள் தான் துரியோதன கூட்டம் அந்த கூட்டத்தின் மத்தியில் புலன்களை நல்வழி படுத்தவும் மரணமில்லாத முத்தி மார்க்கத்திற்கு அழைத்து செல்லவும் பாடு படும் ஆத்மா தான் கிருஷ்ண பரமாத்தமா ஆசைகளை அடக்க முனையும் போராட்டம் தான் பாரத போர் என்று உயர்ந்த அளப்பரிய தத்துவ விளக்கத்தை நமது பெரியவர்கள் பலர் கொடுத்திருக்கிறார்கள் அவைகள் அனைத்துமே உயர்ந்தவைகள் உன்னதமானவைகள் வணங்க தக்கவைகள் என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது ஆனால் அந்த தத்துவ ஞானங்களை புரிந்து கொள்கின்ற சக்தி நமக்கிருக்கிறதா? என்று உள்ளுக்குள் உணர்ந்து எண்ணி பார்த்தோம் என்றால் நம்மிடம் அத்தகைய அறிவு திறன் இல்லை என்பது தெரியவரும் எனவே மகாபாரத போரின் தத்துவத்தை கண்ணுக்கு தெரிகின்ற வெளிப்பொருளோடு ஒப்பிட்டு சிந்தித்து பார்ப்பது தான் நமக்கழகு.
போர் போராட்டம் சண்டை என்பவைகள் ஆக்கிய பொருட்களை அழிக்க கூடியது என்பது மட்டும் தான் நமது கண்களுக்கு பெரிதாக தெரிகிறது நாணயத்தில் இரண்டு பக்கம் இருப்பது போல யுத்தம் என்பதிலும் இரண்டு பக்கம் இருக்க வேண்டுமல்லவா? ஒரு பக்கம் குருதி பெருக்கெடுக்கும் வன்முறை களம் யுத்தம் என்றால் அதன் இன்னொரு பக்கம் என்ன? என்றாவது ஒரு நாள் போர்களத்தின் மறுபக்கத்தை நமது மனம் சிந்தித்து பார்த்திருக்கிறதா? அப்படி பார்த்திருந்தால் உள்ளதை உள்ளப்படி ஒத்துக்கொள்ளும் ஞான துணிச்சல் நமக்கு வந்திருக்கும் ஆனால் நாம் கடிவாளம் கட்டிய குதிரை போல் ஒரே பக்கத்தை மட்டுமே பார்த்து பேசியதையே பேசும் கிளிகளாக வாழ்ந்து வருகிறோம்
உண்மையில் போர்களம் போராட்டம் என்பவைகள் இல்லை என்றால் இன்று நாம் பெற்றிருக்கின்ற வசதிகள் வளர்சிகள் வெற்றிகள் எவற்றையுமே கண்டிருக்க முடியாது உலோகங்களால் ஆயுதம் கண்டுபிடித்த மனித கூட்டத்திற்கும் கல்லாயுதம் பயன்படுத்திய மனித கூட்டத்திற்கும் நடந்த போரின் முடிவு தான் நாகரீக சமூகத்தின் முதல் பிறப்பு வரலாற்று ஏடுகளை புரட்டி பார்த்தால் ஆயிரகணக்கான யுத்தங்களை மனித சமூகம் நடத்தியிருக்கிறது ஒவ்வொரு யுத்தத்தின் முடிவிலும் வெற்றி பெற்ற கூட்டம் வளர்ச்சியை நோக்கி முன்னேறியிருக்கிறது போராட்டங்களே இல்லாமல் உயிர் கூட்டம் வாழ்க்கையை நடத்தி கொண்டிருந்தால் இன்று வரை நீயும் நானும் பச்சை மாமிசத்தையும் கிழங்கு வகைகளையும் சாப்பிட்டு கொண்டு மரக்கிளையில் தான் வாழ்க்கையை நடத்தி கொண்டிருப்போம்
நடந்து முடிந்த பெரிய யுத்தங்கள் பலவற்றையும் அவை முடிந்த பிறகு உலகம் கண்டிருக்கும் மாற்றத்தையும் சற்று உன்னிப்பாக பாருங்கள் முதல் உலகமாக யுத்தம் யாரால் துவக்கப்பட்டது என்பது நமக்கு தெரியும் அந்த யுத்தத்தில் ஜெர்மனி அடைந்த படு தோல்வியும் நாமறிவோம் இனி எக்காலத்திலும் அறிஞர்கள் பலரை விஞ்ஞானிகள் பலரை உலகமே இன்று வரை வியந்து பார்க்கும் தத்துவ மேதைகள் பலரை உலகுக்கு தந்த ஜெர்மன் நாடு எழுந்து நிற்காது உலக சமூகத்தோடு போட்டி போட்டு வளராது அந்த நாடு இனி காணப்போவது சாம்ராஜிய மேடுகள் அல்ல சாம்பல் மேடுகளை மட்டுமே என்று உலகம் முழுவதும் பேசப்பட்டது நம்பப்பட்டது அப்போதைய வல்லரசான பிரிட்டிஷ் ஏகாதிபத்தயம் தன்னை தட்டி கேட்க யாருமே இல்லை என்ற கனவில் மிதந்தது
ஆனால் நடந்தது என்ன யாருமே எதிர்ப்பார வண்ணம் யாருமே கணக்கிட முடியாத அசுர பலத்தோடு ஜெர்மன் நாடு அடுத்த இருப்பது ஆண்டுகளில் வளர்ச்சி பெற்று இரண்டாவது உலக போருக்கு பிள்ளயார் சுழி போட்டது இங்கிலாந்தை தோல்வியின் விளிம்பிற்கு தள்ளியது இளம் சிங்கமென்று கொக்கரித்து நின்ற சோவியத்து ருசியாவின் பிடரியை பிடித்து ஆட்டி வைத்தது ஆரம்பத்தில் ஹிட்லர் பெற்ற மாபெரும் வெற்றியை கண்டு அமெரிக்காவே கூட நடுங்கியது இனி இந்த நாடு எழும்பவே எழும்பாது என்று எல்லோராலும் முடிவு கட்டப்பட்ட ஜெர்மனால் தான் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் உறக்கத்தை இழந்தனர் ஜெர்மனுக்கு இத்தகைய அசுர சக்தியை கொடுத்தது முதல் உலக போர் என்றால் அது மிகையில்லை.
போர் தாக்குதலால் இதுவரை அழிக்கவே முடியாத மாபெரும் தழும்பை பெற்ற நாடு எது என்றால் அது ஜப்பான் தான் அமெரிக்க தான் கண்டு பிடித்த அணுகுண்டுகளை பரிசோதனை செய்து பார்த்ததே ஜப்பான் நாட்டின் மீது தான் ஜப்பான் நாட்டின் மீது விழுந்த போர் என்ற மரண அடி அந்த நாட்டை எந்த வகையிலும் வீழ்த்திவிட வில்லை போருக்கு பிறகு தான் அது பொருளாதார வல்லரசாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது போரினால் அந்நாடு மனசோர்வு அடைந்திருந்தால் இனி நம்மால் ஆகாது என்று கைகட்டி உட்கார்ந்திருந்தால் இன்று அது அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருக்கும் ஆனால் போர் கொடுத்த உத்வேகம் அதை பிரம்மாண்டமாக வளரவைத்து விட்டது
அமெரிக்காவை எடுத்து கொள்வோம் அது வளர்ந்ததே வல்லரசாக மாறியதே போர்களங்களால் தான் போர் இல்லை என்றால் அமெரிக்க பறந்து விரிந்த ஒரு வறுமை தேசமாக இருந்திருக்கும் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு போர் வலியை அமெரிக்கா உணர்திரா விட்டால் இன்று உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் தீவிரவாதம் கலகலத்தது போயிருக்காது போர்களால் நாடுகள் மட்டும் வளரவில்லை விண்வெளி ஆய்வு மருத்துவ ஆய்வு புதிய புதிய கண்டு பிடிப்புகள் எதுவுமே வளர்ந்திருக்காது
போர் இல்லாத சமாதான காலங்களில் மனித சமூகம் சோம்பலோடும் அசட்டையோடும் ஏனோ தானோ என்றும் இருந்து விடுவது இயற்க்கை ஆனால் போர்காலங்களில் நிலமையே வேறுவிதமாக மாறிவிடுகிறது நமக்குள் உறங்கி கிடக்கும் சக்திகளை கிளறி விட்டு அசாதாரணமான அறை கூவல்களை எதிர்கொள்ள வகை செய்கிறது இதை வேறுவிதத்தில் மாற்றி சொல்வதென்றால் போர்காலமானது மனதிற்குள் இனம்புரியாத இறுக்கத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கி எவ்வளவு சிக்கலான பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வைத்து விடுகிறது சுருங்க சொல்வதனால் போர் என்பது துயரங்களை மோதி மிதித்து வெற்றியை நோக்கி மனிதனை நடை போட செய்கிறது
இது என்ன வளர்ச்சி ஒன்றை அழித்து அதன் மீது வளருவது வளர்ச்சியா மனித தன்மை என்பதே இல்லாத செயல் அல்லவா இது இத்தகைய போர்களத்தை கிருஷ்ணன் விரும்பி இருப்பானா? அதை வரவேற்றும் இருப்பானா? என்று நமது மனம் மீண்டும் குழம்புகிறது நன்றாக யோசித்து பார்த்தால் ஒவ்வொரு தனிமனிதனும் தினசரி வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் போராடி கொண்டிருக்கிறான் மற்றவற்றை அழித்து கொண்டிருக்கிறான் என்பது நமக்கு புரியும் அது மட்டுமல்ல மற்றவைகளை அழிக்காவிட்டால் மனிதனால் வாழவே முடியாது என்பதும் தெரியவரும் பிறந்தது முதல் இறப்பது வரையிலும் நமது உடலில் சுவாசம் என்ற குதிரை ஓடிக்கொண்டே இருக்கிறது ஒவ்வொரு சுவாசமும் காற்றில் கலந்திருக்கும் பல்லாயிர கணக்கான நுன்னூயிர்களை ஒழித்து கட்டியபடிதான் நடக்கிறது மற்றவற்றை அழிப்பது பாவமென்றால் நான் மூச்சு விடாமல் மரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம் விரும்பியோ விரும்பாமலோ உயிர்கள் அனைத்தும் போர்களத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது அதனால் தான் வாழ்க்கை என்பதே பெரிய போராட்டம் என்று அழைக்கப்படுகிறது
உடல்களை வெட்டி உயிர்களை வதைத்து நடத்தும் போர்கள் எதற்கு எதிரிகள் திருந்தும் வரை அமைதியாக இருந்து விடலாமே அது தானே மிக உயர்ந்த அஹிம்சா தர்மம் என்று இன்றைய நவீன வாதிகள் பலர் பேசுகிறார்கள் எதிர்ப்பை காட்டாமல் மெளனமாக இருப்பது அஹிம்சை அல்ல அது கோழைத் தனம் காந்தி ஆயுதம் எடுக்கவில்லை தான் கத்தி இன்றி ரத்தமின்றி யுத்தம் நடத்திய உத்தமர் தான் ஆனால் அவரும் ஒருவகையில் ஆயுத தாரிதான் அவர் போராட்டத்திலும் ஆயுதம் இருந்தது அந்த ஆயுதம் சாதாரண ஆயுதமல்ல அணுகுண்டை விட வலிமையான அகிம்சை என்ற ஆயுதமாகும் அதை கொண்டு தான் அவர் எதிரிகளை தாக்கினார் நாம் நினைப்பது போல அகிம்சை என்பது மெளனமல்ல தாக்குவது! சக்தமில்லாமல் ரத்தம் வராமல் உடல் வலிக்காமல் உள்ளத்தை மனதை ஆத்மாவை எழ்ந்திருக்கவே முடியாத அளவு வலிமையோடு தாக்குவதாகும்
உயிர் வாழவேண்டுமென்றால் உயிர்கள் ஒவ்வொன்றும் இறைத்தன்மையை நோக்கி முன்னேற வேண்டுமென்றால் போர் என்பது அவசியம் இதை நடத்த மாட்டேன் என்று புறமுதுகு காட்டி யாராலும் ஓட முடியாது அப்படி ஓட நினைக்கும் எவனுக்கும் வாழ்வதற்கான தகுதி இல்லாமல் போய்விடுகிறது எனவே போர்களங்களை கண்டு ஒதுங்காதே அதில் முட்டி மோதி முன்னேற பார் அந்த முன்னேற்றம் என்பது பாண்டவர்களை போல் என்னை மையமாக வைத்து இருக்குமென்றால் அதன் பெயர் வெற்றி அது தான் உயிர்களின் முத்தி என்பது கண்ணனின் கருத்து
இந்த கருத்தை நம்மை போன்ற சாதாரண ஜீவன்கள் புரிந்து கொள்ளவேண்டும் போர்களங்களில் பங்கு பெற்று வாழ்க்கையை அர்த்தபடுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எழுந்திரு காண்டீபம் கையில் எடு போராடு எதிரிகளை வீழ்த்து வெற்றி மாலை சூடு என்று கண்ணன் சொல்கிறான். மகாபாரத போரையும் முன்னின்று நடத்தியிருக்கிறான் இதை உணர்ந்தால் நமது போராட்ட களமான வாழ்க்கை வெற்றி என்ற ராஜபாட்டையை நோக்கி நகரும் எனவே சமாதானமாக வாழ சண்டை என்பது அவசியம்.

No comments:
Post a Comment