கங்கையை கடப்பதற்காக குஹனுடைய ஓடத்தில் ஏறிய ஸ்ரீராமன் , கரையை அடைந்ததும் , ஒடக்கூலி கொடுத்த போது , அதை வாங்க மறுத்து விட்டான் குஹன் : அதற்கான காரணத்தை அவர் க...ேட்டபோது , '' ஐயனே ...நாம் இருவரும் ஒரே தொழில் செய்து வருகிறோம் !......ஒரே தொழில் செய்பவர்கள் ஒருவருக்கொருவர் கூலி கொடுப்பதோ , வாங்கவோ கூடாது !'' என்றான் குஹன் :..
ஸ்ரீராமனுக்கு ஏதும் புரியவில்லை : '' என்ன
...ஒரே தொழிலா ? '' வியப்புடன் கேட்ட ஸ்ரீராமனுக்கு பணிவுடன்
பதிலளித்தான் குஹன் : '' ஆம் ஐயனே !....நான்
எனது ஓடத்தின் மூலமாக மனிதர்களை ஏற்றி
கொண்டு , கங்கை ஆற்றை கடந்து
சென்று அடியவர்களை கரை சேர்க்கிறேன் !....அது
போல ' சம்சாரம் ' என்ற கடலில் அகப்பட்டு
தத்தளித்து கொண்டிருக்கும் மனிதர்களை ' கருணை ' என்ற ஓடத்தில்,
ஏற்றி கொண்டு ' வீடுபேறு ' என்ற கரையில் சேர்க்கிறீர்கள்
!...அதனால் நாமிருவரும் செய்யும் தொழில் ஒன்றே என்று
கூறினேன் ஐயனே !'' அவனின் வார்த்தைகள் கேட்டு
, புன்னகையுடன் அவனை ஆலிங்கனம் செய்து
கொண்டார் ஸ்ரீராமன்
No comments:
Post a Comment