ஏழரை சனி என்னவெல்லாம் செய்யும்?
பொதுவாக ஏழுரை சனி என்பது வாழ்க்கையில் ஒவ்வொருக்கும் மூன்று சுற்று ஏற்படும். முதல் சுற்று மங்கு சனி என்றும், வாலிய மற்றும் மத்திம வயதினருக்கு வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும், வயதான காலத்தை எட்டும் போது வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் சொல்வர்....
உங்களின் ராசிக்கு முன்னும், உங்கள் ராசிக்குள்ளும், அடுத்துள்ள ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம்.
ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச் சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திரன் ராசிக்கு 12ம் இடம். ஆகவே அது விரையச் சனி காலம். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகள் என நஷ்டமாகவே அக்காலம் கழியும்.
அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) ஜென்மச் சனி என்பார்கள். அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் எல்லாதுக்குமே போராட்டம் தாங்க. மன உளைச்சல் அதிகமாக இருக்கும்.
அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச் சனி என்பார்கள். அந்தக் காலக்கட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைவாக இருக்கும்.
முதல் பகுதியான விரையச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும் திருமணங்கள் பிரச்னையும், போராட்டமாகவே அமையும். முடிந்தவரை இந்த காலக்கட்டத்தில் திருமணத்தை தள்ளி வைப்பது நல்லது.
இரண்டாவது சுற்றில் (பொங்கு சனியில்) சனீஷ்வர பகவான் கைதூக்கி விடுவார். அதாவது பலவிதமான கஷ்டமான அனுபவங்களைக் கொடுத்த பின் கைதூக்கி விடுவார்.
மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடிவடையும் நேரமாக இருந்தால், அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப கடவுளின் திருவடியை அடையும் காலம். அதனாலேயே கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வர். ஆனால் இது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும், எந்த தசா புத்தியில் அது வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மூன்று சுற்றுக்களை கடந்து வாழ்பவர்களும் பலர்.
அஷ்டமச்சனி என்பது, ஒருவரின் ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி இருக்கிறாரோ, அதை வைத்துக் கூறுவது. பொதுவாக அஷ்டச்சனி என்பது. ஏழரை ஆண்டு அனுபவிக்கும் தொல்லைகளை அந்த இரண்டரை வருடத்திலே கொடுத்துவிடும்.
இதனால் சனி பகவானின் கொடுமையில் இருந்து நீங்க, முடிந்தவரை எந்த தவறும் செய்யாமல், இறை வழிபாட்டை கடைப்பிடித்தால் சிரமங்கள் இன்றி தப்பிக்கலாம்.

No comments:
Post a Comment