ஓசோன் மண்டலமும் – கம்ப ராமாயணமும்...
சூரியனுடைய ஒளி நேராக, எந்த வித தடையும் இல்லாமல் உலகின் மேல் படுமானால் இங்குள்ள ஜீவ ராசிகள் எல்லாம் பொசுங்கிவிடும். அந்த ...ஒளியை மிதப்படுத்தி உலகுக்கு அனுப்புவர்கள் வாலகில்ய முனிவர்கள். இதுபற்றிய செய்தி கம்பராமாயனத்தில் இருக்கிறது. தண்டகாரண்யத்தில் வசிக்கும் இந்த முனிவர்கள் கட்டைவிரல் அளவே உயரமானவர்கள். இவர்கள் பறக்கும் ஆற்றல் படைத்தவர்கள். பறவைகளைப் போல தானியங்களையும் உண்பார்கள். இவர்கள் தவத்தில் மிகச் சிறந்தவர்கள். சாந்தசீலர்கள், காமம், வெகுளி, மயக்கம் ஆகிய தீய பண்புகள் நீங்கப் பெற்றவர்கள். இவர்கள் பகுதி நேர முறையில் வானில் பறந்து சென்று, சூரியனுடைய ஒளியை மிதமாக்கி உலகுக்கு அனுப்புவார்களாம்! இவர்களது வேள்வியையையும் ஸ்ரீ ராமர் காத்தார் எனக் கூறப்பட்ட்து. இக்கால விஞ்ஞானமும் சூரிய ஒளி நேராக உலகுக்கு வரவில்லையென்றும், ஓசோன் மண்டலம் மூலமாக கண்ணுக்கு தெரியாத புலப்படாத வாயு அணுக்கள் தடுத்து மிதமாக்கி உலகுக்கு அனுப்புகிறது என்று கூறுகிறது.
No comments:
Post a Comment