#சித்திரை மாதப் பிறப்பையொட்டியே நாட்டின் மற்ற மாநிலங்களின் புத்தாண்டு கொண்டாட்டங்களும் அமைக்கின்றன. வட இந்தியாவில் பைசாகி என்றும் கேரளாவில் விஷு என்றும் ஆந்த...ிராவில் யுகாதி என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு உள்ள வரவேற்பு சித்திரை மாதப் பிறப்பிற்கு இல்லை என்று ஒரு சாரார் கூறினாலும் அவற்றை பொய்ப்பிக்கும் வகையில் தமிழர்கள் இப்பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சித்திரையில் செய்வது என்ன?
சித்திரை திங்கள் புலருவதற்கு முதல் நாள் இரவு வீட்டில் நிலைக் கண்ணாடி முன்பாக தட்டில் பல வகையான பழங்கள், பணம், காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவர். காலையில் எழுந்து அந்த தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் விழிப்பர். இதனால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது. இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சித்திரை மாதத்தில் திருமாலின் அவதாரம்
* சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் என்று கூறப்படுகிறது. சித்திரை மாதத்தை வசந்த காலம் என்றும் அழைப்பர்.
* சித்திரை முதல் நாளை பிரம்மதேவன் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
* சித்திரை மாத திருதியை திதியில் மகா விஷ்ணு மீன்(மச்சம்) அவதாரம் எடுத்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.
* சித்திரை சுக்ல பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது.
* சித்திரையில் தான் அம்மன் கோயில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை நடத்துவது போன்ற இறைவழிபாடுகள் நடக்கின்றன. ராம நவமியும், சித்திரை திங்களில் தான் கொண்டாடப்படுகிறது.
* திருமாலின் அவதாரம் பரசுராமன் இந்நாளில் தான் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் அவதரித்ததும் இந்நாளில்தான்.
* சித்திரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தங்கப்பலகையில் வரைந்த சித்திரத்தில் தோன்றியவர் சித்திரகுப்தன்.
* சித்திரை மாத வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அக்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் தங்கம் வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்பது ஐதீகம்.
* சித்திரை மாத பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு வந்ததாக புராணம் கூறுகிறது. அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வ செழிப்பு ஏற்படும்.
* சித்திரையில் சொக்கநாதர்& மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
* சித்ரா பவுர்ணமியன்று தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டு பேறுகள் பெற்றதாக புராணம் கூறுகிறது. மதுரையில் கள்ளழகர் விழாவும் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது விசேஷம். ஈசனை வணங்க வரும் தேவர்களின் அருளாசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பல்வேறு சிறப்புகளை கொண்ட சித்திரை தாயை நாமும் வரவேற்போம்.
மா கோலமிட்டு சித்திரை பாவையை வரவேற்போம்
சித்திரை பிறப்பன்று முக்கனிகளையும் வைத்து வழிபாடு நடத்துவது தொன்று தொட்டு நடக்கிறது. கோடை தொடங்குவதற்கு முன்பாக இளவேனில் காலத்தில் தான் சித்திரை பிறக்கிறது. சித்திரை பிறப்பன்று வீடுகளில் முக்கனிகளை வைத்த வழிபாடு நடத்துவது மட்டுமின்றி இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவு படைப்பதும் வழக்கம். தை மகளை வரவேற்க வீடுகளின் முன் கோலமிட்டு, வண்ண தோரணம் கட்டி வரவேற்பது போல் சித்திரை பாவையையும் வரவேற்கவேண்டும்.கோலம் நம் தமிழர் பண்பாட்டின் அழகிய அடையாளம். மாக்கோலம் இட்ட காலத்தில் எறும்புகளுக்கும், சிறு பூச்சியினங்களுக்கும் உணவளித்து மகிழ்ந்த கலாசாரம். வெண் பூக்களில் வண்ணம் சேர இன்று சின்னச் சின்ன விழாக்களில் கூட பூக்களும் வண்ணங்களும் இணைந்து கோலங்கள் ஜொலிக்கிறது. வண்ணங்களின் கைதட்டலை குழந்தைகள் பார்த்து மகிழ்வது இன்றளவும் கோலங்களில் இருந்தே துவங்குகிறது. சித்திரை திருமகளை வரவேற்பதற்கும் வண்ணக் கோலங்கள் ஜொலிக்கத்தான் போகிறது.
நன்றி:தினகரன்

No comments:
Post a Comment