உள்ளத்தில் அன்பிருந்தால் உருவத்தில் அழகு வரும்! . . . . ஒரு சிறுவன் கடவுளைச் சந்திக்க விரும்பினான்.அவரைச் சந்திக்க வெகு தூரம் செல்ல வேண்டும் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.எனவே ஒரு பையில் இரண்டு பாக்கெட் பிஸ்கட்டும்,ஒரு போத்தல் தண்ணீரும் எடுத்துக் கொண்டான்.வீட்டை விட்டுப் புறப்பட்டான்.
சிறிது தூரம் சென்றதும் ஒரு பூங்காவைக் கண்டான்.அதன் உள்ளே சென்றபோது அங்கு ஒரு வயதான பெண்மணியைக் கண்டான்.ஒரு இருக்கையில் அமர்ந்து அங்கு சுற்றித் திரிந்த புறாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.சிறுவன...் அவள் அருகில் சென்று அமர்ந்தான். அவன் தன் பையிலிருந்து போத்தலை எடுத்துத் தண்ணீர் குடிக்க எண்ணினான்.அந்தப் பெண்ணைப் பார்த்தால் பசியுடன் இருப்பது போல் தோன்றியது.ஒரு பாக்கட் பிஸ்கட்டை எடுத்து இரு பிஸ்கட்டுகளை அவளுக்குக் கொடுத்தான்.அவள் அதை நன்றியுடன் வாங்கிக் கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

அவள் சிரிப்பது அழகாக இருந்தது.அதை மீண்டும் பார்க்க வேண்டும் என அவனுக்குத் தோன்றியது.அவளுக்குக் குடிக்கத்தண்ணீர் கொடுத்தான்.அதை வாங்கிக்கொண்டு அவள் மீண்டும் சிரித்தாள்.சிறுவன் மிக மகிழ்ச்சியடைந்தான். மாலை வரை இருவரும் அங்கேயே அமர்ந்திருந்தனர்—பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டும், தண்ணீர் அருந்திக்கொண்டும்.
இருட்டத் தொடங்கியது.சிறுவன் வீடு திரும்ப எண்ணினான்.புறப்படும் முன் அந்தப் பெண்ணைக் கட்டிப் பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.அந்தப் பெண்மணியும் தன் சிரிப்பின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
வீட்டின் கதவைத் திறந்த சிறுவனின் தாய் அவன் முகத்தில் தெரியும் எல்லையற்ற மகிழ்ச்சியைக் கண்டாள்.அவள் கேட்டாள்”இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாயே,என்ன செய்தாய்?”
சிறுவன் சொன்னான்”இறு நானும் கடவுளும் சேர்ந்து பிஸ்கட் சாப்பிட்டோம்;நீர் அருந்தினோம்.இது வரை அப்படி ஒரு அழகான சிரிப்பை நான் பார்த்ததில்லை”
அதேபோல் அந்த வயதான பெண்ணும் எல்லையற்ற மகிழ்வுடன் வீடு திரும்பினாள். அவள் மகன் அவள் முகத்தில் தெரியும் அமைதியையும், ஒளியையும் பார்த்துக் கேட்டான் ”இவ்வளவு மகிழ்ச்சியடைய இன்று என்ன செய்தீர்கள்?”
அவள் சொன்னாள்” இன்று கடவுள் எனக்குப் பிஸ்கட்டும் ,தண்ணீரும் அளித்தார். இருவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டோம்.தெரியுமா!அவர் நான் நினைத்ததை விட மிக இளமையாய் இருக்கிறார்!”
நாம் பல நேரங்களில் ஒரு தொடுகை,ஒரு புன்னகை,ஒரு இனிய சொல்,ஒரு கவனம், ஒரு கேட்டல்,ஆகிய சிறு விஷயங்களை மறந்து விடுகிறோம் !நினைவு கொள்ளுங்கள்; அவை சக்தி வாய்ந்தவை;நம் வாழ்க்கையை,மற்றவர் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்கக்கூடியவை.
அன்பே சிவம்!
உள்ளத்தில் அன்பிருந்தால் உருவத்தில் அழகு வரும்

No comments:
Post a Comment