Monday, May 19, 2014

பன்றியா? பசுவா?

பன்றியா? பசுவா?

வாரிசு இல்லாத செல்வந்தன் ஒருவன் துறவி ஒருவரை சந்தித்தான். சுவாமி எனக்குக் குழந்தைச் செல்வம் இல்லாததால் என் செல்வம் முழுமையும் என் மரணத்திற்குப் பின் பொதுச் சொத்தாகத்தான் மாறப்போகிறது. ஆனால், என்னை ஒருவரும் மதிப்பதில்லையே.....! என வருத்தமாகக் கேட்டான். அவனிடம் துறவி கேட்டார், எல்லோரும் விரும்புவது பன்றியையா, பசுவையா? இதில் என்ன சந்தேகம் சுவாமி, பசுவைத்தான்..! என்னப்பா இப்படிச் சொல்கிறாய். பசு, பாலை மட்டும்தான் தருகிறது. ஆனால் பன்றி தன்னையே அல்லவா இறைச்சியாகத் தருகிறது? ஆனால் சுவாமி, பசு உயிருடன் இருக்கும்போதே பிறருக்கு உதவுகிறது. பன்றி இறந்தபின் அல்லவா பிறரால் பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது..? அதனால்தானே பசுவுக்குப் பெருமை? பதிலளித்த பணக்காரனிடம் துறவி அமைதியாகச் சொன்னார்.. நீயும் பசுவைப்போல் இருக்கும்போதே பிறருக்கு உதவு.. உன்னையும் புகழ்வார்கள்..

No comments:

Post a Comment