வாஸ்து பகவான்
வாஸ்து பகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியில் இருபாதம் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
தேவர்களை அசுரர்கள் துன்புறுத்தி சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்திய போது கெடு மதி படைத்த அந்த அசுரர்களை ஒன்றும் செய்ய இயலாமல் தவித்த தேவர்கள். சிவபெருமானை அணுகித் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகின்றனர்.
சிவபெருமான் கடுங்கோபம் கொள்ள அரவது உடலில் இருந்து வெளிப்படுகிறார் வாஸ்து பகவான்.
வாஸ்து பகவானால் அசுரர்கள் அழிக்கப்படுகின்றனர்.
அசுரர்களை அழித்தபின் பூமியெங்கம் கெடுமதியாளர்களின் உடல் பரவிக் கிடக்க, சிவபெருமானை வணங்கி நின்ற வாஸ்து பகவான், தங்கள் உடலில் இருந்து தோன்றிய நான் தங்களது ஆணையை ஏற்று நின்கிறேன் என்று கூறுகிறார்.
உடனே சிவபெருமான் வாஸ்து பகவானை நோக்கி பூமியெங்கும் இறந்து கிடக்கும் அசுரர்களின் உடல்களை அப்புறப்படுத்து என்று கட்டளையிட வாஸ்து பகவான் கட்டளையை ஏற்று அவ்வாறே இட்ட பணியினை செய்து முடிக்கிறார்.
பணியினை முடித்தவர் மீண்டும் சிவபெருமானை அணுகி அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று வினவ சிவபெருமான். வாஸ்து பகவானிடம் பூமியில் படுத்துறங்கி வருடத்தில் எட்டு நாட்கள் மட்டும் விழித்தெழுந்து என்னை பூஜை செய் என்று கூறுகிறார்.
வாஸ்து விழிக்கும் நேரம் மக்கள் அவரை வழிபட்டு வந்தால் மாந்தர்கள் வாழும் பூமி மக்கள் பயன்பாடு உள்ள இடங்கள், கட்டடங்கள், புதுமனை போன்ற இடங்களில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படும்.
வதம் செய்த அரக்கர்களின் உடல்களை அகற்றி பூமியை சுத்தப்படுத்தியது போன்று, மக்கள் வாழும் இடத்தில் கேடுகள் அகன்று ஐஸ்வர்யம் ஏற்படும் என்பது வாஸ்து புராணம் கூறும் உண்மையாகும்.
வாஸ்துவின் கொள்கைகள்
புராணக் கதைகளிலிருந்து வாஸ்துவின் கொள்கைகள் பிறந்தது. பழங்கால வையகத்தின் சட்டத்தால் திணிக்கப்பட்டாலும், காலத்தால் மாறாதது.
5000 ஆண்டுகளுக்கு முன்னிருந்ததே போல் இன்றும் உள்ளது.
வாஸ்து முறைப்படி உள்ளும் புறமும் மாற்றிக் கொள்ளும் தகுதி உடையவை காற்று நெருப்பு போன்ற மூலக் கூறுகளிலும் மனித உடல் உறுப்புகளிலும் அடங்கியுள்ள அடிப்படை சக்திகள் ஒன்றே ஒன்று.
கட்டடங்களும், உருவங்களும் சிஷீsனீவீநீ கொள்கைகளின் அடிப்படையில் ஒத்து போகக் கூடியவை என வாஸ்து கூறுகிறது.
வையகத்து பாகங்களின் அமைப்புகளில் ஒரு பிரிவாக அவைகள் விளங்குகின்றன.
ஒரு நியைதியில் அதிர்வு ஏற்படுத்துகிறது.
நல்ல அதிர்வுகள் வீட்டில் வசிப்பவர்களுக்கு நற்பலன் அளிக்கிறது.
வாஸ்துவில் குறுக்கு நெடுக்கு குவியல்களாக சக்திகோடுகள் பூமியின் குறுக்கே வடக்கிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும் பயணம் செல்கின்றன.
நாம் வசிக்கும் இடத்திலும் வேலை செய்யும் இடத்திலும் இந்த திசையைப் பொறுத்து அமைந்துள்ளது.
இவை வீட்டில் வசிப்பவர்களின் மீது நேரிடை பலன் அளிக்கவில்லை.
சூரியன் உதிக்கும் கிழக்கு திசை எல்லா ஆரம்பத்திற்கம் குறிக்கிறது
(Represent). மாலை சூரிய அஸ்தமனம் முடிவை குறிக்கிறது.
அறியாமையும், இருளையும் குறிக்கிறது.
துருவ நட்சத்திரம் உள்ள இடம் வடக்கு திசையைக் குறிக்கிறது.
இந்த ஆகாயத்தின் ஒரு நிலையான இடம் நிலையான பாதுகாவலான நிலையைக் குறிக்கிறது.
தெற்கு கடந்த காலத்தையும் நமது முன்னோர்களையும் குறிக்கிறது.
(எதிலிருந்து எல்லா உருவம் தோன்றுகிறதோ அந்த முக்கியமான இடம் பூமியையும், பூமியின் மேற்பரப்பையும் இணைப்பதே வாஸ்து விஞ்ஞானம் முழுமையானது) சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் உலக வாழ்க்கைக்கு அளவற்ற ஆனந்தம் அளிக்கும்
No comments:
Post a Comment