கடவுள் வழிபாட்டின் அவசியம்!
கடவுள் வழிபாட்டின் முக்கியத்துவத்தை விளக்கிக் கொண்டிருந்த குரு, தினமும் மூன்று வேளையாவது கடவுளை வணங்க வேண்டுமென்று அறிவுறுத்தினார். கடவுள்தான் எல்லாம் அறிந்தவராயிற்றே. அவரை தினமும் வணங்க வேண்டுமா? எப்போதாவது வணங்கினால் போதாதா? என்று கேட்டான். அன்றைக்கு அவருடைய உபன்யாசத்தைக் கேட்க வந்த ஓர் இளைஞன்.
துறவி அவனுடைய கேள்விக்கு நேரடியாக பதில் தராமல், அடுத்த வாரமும் தன் பிரசங்கத்துக்கு வரச் சொன்னார். அடுத்த வாரம் வந்த அவன் கண்களில் ஒரு பித்தளை செம்பு பட்டது. போன வாரம்தான் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்த அந்தச் செம்பு இப்போது களிம்பு பிடித்துப் போயிருப்பதைக் கண்டான். குருவிடம் வேறு எதையும் கேட்கும் முன், ஏன் இப்படி இந்த செம்பை அழுக்காக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? போன வாரம்கூட பளிச்சென இருந்ததே! என்று கேட்டான்,
தினமும் இதை புளிபோட்டு தேய்த்து வைப்பது வழக்கம். ஒரு வாரமாகச் செய்யவில்லை. அதனால்தான் இப்படி! என்ற துறவி, வெளியே வெறுமனே வைக்கப்பட்டதாலேயே இந்தச் செம்பு இப்படிக் களிம்பு பூத்துவிட்டதே. நம் மனசு ஜம்புலன்களாலும் எப்படி அலைக்கழிக்கப்படுகிறது. அதைத் தடுக்க, அது மேலும் மேலும் அழுக்கடைந்து விடாமல் இருக்க, கடவுள் வழிபாடுதானே ஒரே வழி? செம்பை எப்படி தினம் தினம் துலக்கி வைக்கிறோமோ, அதேபோல மனதைத் துலக்க, தினமும் குறைந்தபட்சம் மூன்று முறையாவது வழிபாடு மிக அவசியம் என்றார்.
No comments:
Post a Comment