Monday, September 15, 2014

வைராக்கியம் என்பது, எல்லாவற்றையும் துச்சமாக மதித்து விட்டுவிடுவது என்பது தான்

வைராக்யமானவன் நான்' என்று சிலர் பேச்சளவில் சொல்வார்கள். ஆனால், செயலில் அதை வெளிப்படுத்த மாட்டார்கள். வைராக்யம் என்றால் "மனஉறுதி' என்று மட்டும் பொருள் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் வைராக்கியம் என்பது, எல்லாவற்றையும் துச்சமாக மதித்து விட்டுவிடுவது என்பது தான்.
பரதனை இதற்கு உதாரணமாகச் சொல்வார்கள். தாய் கைகேயியின் சூழ்ச்சியால், தனக்கு கிடைத்த ராஜ்யத்தை அவன் பெரிதாக மதிக்கவில்லை. அதைப் புறக்கணித்து விட்டு, சகோதரன் ராமன் இருக்கும் இடத்தை நோக்கி சத்ருகனனுடன் புறப்பட்டான். பரதனின் பெருமையை, "ஆயிரம் ராமன்களுக்கு இணையானவன் பரதன்' என கவிச்சக்கரவர்த்தி கம்பர் குறிப்பிடுகிறார். ராமன் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பும் வரை, ராம பாதுகைக்கு பட்டாபிஷேகம் செய்து, ஒரு பிரதிநிதியாக பரதன் நாட்டை ஆட்சி செய்தான்.

1 comment:

  1. worst heart is having enmity, dishonesty,Cruelty etc., Bharadhan had purest heart.

    ReplyDelete