மாயம் செய்வதில் வல்லவர் என்பதால் கிருஷ்ணருக்கு "மாயன்' என்ற பெயருண்டு. ஆனால்,
அவருக்கும் முந்தியவர் வாமனர் தான். "மாயா வாமனனே மதுசூதா நீயருள்வாய்' என்கிறது
ஆழ்வார் பாசுரம். ஏனென்றால் குள்ள வடிவத்தில் வந்த வாமனர், மகாபலியிடம் மூன்றடி மண்
கேட்டார். சம்மதித்த பலியிடம், இரண்டு அடியால் மண்ணையும், விண்ணையும் அளந்து
திரிவிக்ரமராக விஸ்வரூபத்துடன் நீண்டு வளர்ந்தார். மூன்றாவது அடியை அளக்க
வழியில்லாமல், மகாபலி தன் சிரம் தாழ்த்தி விஷ்ணுவை வணங்கினான். அவர் அவனை
பாதாளத்தில் அழுத்தி எல்லா உலகங்களையும் தன்னுடையதாக்கிக் கொண்டார்
No comments:
Post a Comment