விஷ்ணுவின் முகத்தில் இருந்து பெரிய ஒளி உண்டாயிற்று சிவனிடம் இருந்தும் சக்தி ஒளி
வந்தது. பிரமனிடம் இருந்தும் ஒளி கிளம்பியது. மற்றும் உள்ள எல்லா தேவர்களின்
அம்சங்களிலிருந்தும் ஒரு சக்தி தோன்றியது. அந்தந்த தேவர்களின் மூலம் உண்டான
சக்திகள், ஒளிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்தன.
சிவனது ஒளியினாலே சக்திக்கு முகம் உண்டாயிற்று. எமனது ஒளியாலே கூந்தல் முளைத்தது. விஷ்ணுவின் மூலம் கைகள் வந்தன. சந்திரன் ஒளியால் ஒரு கொங்கைகள், இடையோ இந்திரனது ஒளியல் வந்தது. வருணன் சக்தி முழங்காலாகவும், தொடையாகவும் ஆயிற்று. பிரமனது நிலையால் கால்கள் வரப்பெற்றன. சூரியன் தன்மையால் கால் விரல்களும் தென்பட்டன.
எட்டு வசுக்களால் கைவிரல்கள் எழுந்தன. குபேரனின் வழியாக மூக்கும், பிரசாபதியினால் பற்களும், அக்னியினால் மூன்று கண்களும் வரப்பெற்றாள். சந்தியா நிலை புருவங்களை உண்டாக்கியது. காற்று காதுகளைக் கொடுத்தது. இன்னும் பல தேவர்களது உதவியும், சக்தியும் கிடைக்கப் பெற்று மகா சக்தியாக அம்பிகை திகழ்ந்தாள்.
மகிஷாசுரனை அழிக்க மகாசக்தி புறப்பட்ட போது மும் மூர்த்திகளும் மற்றவர்களும் போட்டி போட்டி ஆயுதங்களை கொடுத்தனர்.
1. மகாசக்திக்கு சிவபிரான் தன் சூலத்தில் இருந்து ஒரு சூலயத்தைத்தந்தார்.
2. பெருமாள் சக்கரத்தின் மூலம் இன்னொரு சக்கரம் வரவழைத்து அளித்தார்.
3. வருணன் சங்கு வழங்கினான்.
4. அக்கினி தேவன் மிகுந்த திறன் தந்தான்.
5. வாயுதேவன் வில்-அம்புகளைக் கொடுத்தான்.
6. இந்திரனோ வஜ்ஜிரம் என்ற ஆயுதம் வேறு அதோடு ஐராவதம் என்ற யானையின் மணியை அளித்தான்.
7. எமன் காலதண்டம் எனும் தண்டாயுதம் தந்தான்.
8. கடல் அரசனான வருணன் பாசம் கொடுத்தான்.
9. பிரமன் ஜபமாலையை வழங்கினான்.
10. சூரிய தேவனோ தனது கதிர்களை சக்தியின் கால்களில் பரவும்படி செய்து உணர்வு ஊட்டினான்.
11. காலம் (நாள்) என்பதோ பளபளவென்ற சக்தியையும், கேடயத்தையும் கொடுத்தது.
12. பாற்கடல் தூய முத்துமாலை ஆரம் கொடுத்தது.
13. விசுவகர்மா என்ற தேவதச்சன் சிறந்த கோடரியையும், பலதரப்பட்ட போர்க் கருவிகளையும் தந்தான்.
14. கடலோ வாடாத தாமரை மலர் மாலை ஒன்றை அவள் தலையில் சூட்டிக் கொள்ளவும், மற்றொன்றை மார்பில் போட்டுக் கொள்ளவும் தந்தது. கையிலும் அழகாக வைத்துக் கொள்ள ஒரு தாமரையையும் தந்தது.
15. மலைகளில் சிறந்த இமயவனோ வாகனத்திற்காகச் சிங்கத்தையும், பற்பல வண்ண கற்களையும் கொடுத்தான்.
16. செல்வச் சீமானான குபேரன் குடிக்கத் தகுந்த பாத்திரத்தைக் கொடுத்தான்.
17. இப்பரந்த நிலத்தைத் தாங்கிடும் ஆதிசேஷனோ பெரிய இரத்தின மணிகளாலே அழகுபடுத்தப்பட்ட பாம்பு மாலையைப் பரிசாக அளித்தான்.
18. மற்றும் உள்ளவர்கள் தங்கள் தங்கள் போர்க் கலங்களையும், அணிகலன்களையும் தேவிக்கு கொடுத்து மிகவும் மரியாதை செய்தார்கள்.

No comments:
Post a Comment