மகரிஷி வத்சநாபருக்கு ஓர் உண்மை தெரியும். மனம்தான் பாவங்களின் பிறப்பிடம் என்பதுதான் அது. மனத்தில் ஓர் எண்ணம் தோன்றினால் எப்படியும் அது பின்னர் செயலாகிவிடும். அப்படி எண்ணம் செயலாவதை யாரும் தடுக்க இயலாது. நெடுநாள் தியானம் செய்து இந்த அரிய உண்...மையைக் கண்டுகொண்டார் அவர். எண்ணம் என்பது குழந்தை. ஒரு குழந்தை பிறந்தால் அது வளர்ந்து காலப் போக்கில் மனிதனாவது எவ்வளவு இயல்பானதோ அதுபோலவே ஓர் எண்ணம் மனத்தில் தோன்றினால் அது வளர்ந்து என்றேனும் ஒருநாள் செயலாக மாறுவதும் சர்வ நிச்சயம். எனவே, பாவங்களின் விளைநிலமாக இருக்கும் மனத்தை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு சிறு கெட்ட எண்ணமும் வராமல், மனத்தில் மாசில்லாதவனாக இருக்க முடிந்தால் அதைவிடப் பெரிய அறநெறி வேறில்லை.
தான் கண்டுகொண்ட இந்த உண்மையை அடிக்கடி உறுதிப்படுத்திக் கொண்ட வத்சநாபர், தன் இதயத்தில் எந்தத் தீய எண்ணமும் ஒருபோதும் எழாதவாறு நன்கு கண்காணித்துக் கொண்டார். அப்படித் தீய எண்ணம் வருமானால் அதைக் கிள்ளி மனத்தை விட்டு வெளியே எறியவும் கற்றுக் கொண்டார். பல்லாண்டுகள் ஆயிற்று இந்தக் கடினமான பயிற்சிக்கு. அப்படி மனத்தை நன்கு பழக்கியபின் இனித் தன் மனம் மறந்தும் தீய நினைவுகளில் தோயாது என்று அவருக்கு உறுதி ஏற்பட்டது. அவரிடம் தன் மனத்தை வென்றுவிட்டோம் என்கிற பெருமித உணர்வும் தோன்றியது. ஆனால், அந்தப் பெருமித உணர்வின்மேல் ஒரு பலத்த அடி விழக் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர் அப்போது உணரவில்லை.
எந்தத் தீய நினைவும் தோன்றாத மாசற்ற மனத்துடன், அவர் பல்லாண்டுகள் தவம் செய்யும் உத்தேசத்தில் வைராக்கியத்தோடு ஓர் ஆல மரத் தடியில் அமர்ந்தார். நிமிர்ந்து உட்கார்ந்து, மூச்சை இழுத்துவிட்டு, கண்களை மூடிக் கடும் தவத்தில் ஆழ்ந்தார். காலம் தன்னைச் சுற்றி விறுவிறுவென்று வேகமாக மாறிக் கொண்டிருந்ததை அவர் ஒருசிறிதும் உணரவில்லை. தவத்தைத் தவிர வேறு எந்தச் சிந்தனையும் இல்லை. இறைவனைத் தவிர வேறு எந்தச் சிறு நினைப்பும் அவர் எண்ணத்தை ஊடுருவவில்லை.
அவரைச் சுற்றியிருந்த மரங்களில் இலைகளெல்லாம் சரசரவெனக் கீழே உதிர்ந்தன. இலையுதிர்காலம் முடிந்து மீண்டும் மரங்கள் பச்சைப் பசேல் எனத் தளிர்விட்டன. பூக்கள் கொல்லென்று பூத்துக் குலுங்கின. வசந்த காலம் கோலாகலமாய்த் தொடங்கியது. இப்படிப் பல்வேறு பருவ காலங்கள் தோன்றியும் மறைந்தும் உலகம் வேகவேகமாய் ஓடிக் கொண்டே இருந்தது. ஆனால், வத்சநாபர் அமர்ந்த தவநிலையில் மட்டும் எந்த ஒரு சிறு மாற்றமும் இல்லை. அசைவே இல்லாமல் சிலை போல ஒருவர் கண்மூடி அமர்ந்திருந்தால் அவரைச் சுற்றி மண் மேடிடத்தானே செய்யும்? அவரைச் சுற்றிப் புற்றும் தோன்றிவிட்டது.
தன்னைச் சுற்றிப் புற்றுமண் மூடியிருப்பதையும் அவர் உணரவில்லை. அவர் உள்ளம் இறைநாமத்தை விடாமல் ஜபித்துக் கொண்டே இருந்தது. தேவலோகத்திலிருந்து இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் தேவேந்திரன். ‘இதேதடா சங்கடம்?’ எனச் சிந்திக்கலானான் அவன். கடும் தவத்தின் மூலம் பெற்ற ஆற்றல் காரணமாக அவர் தனது இந்திர பதவியை அடைந்துவிட்டால் என்ன செய்வது? அவருக்கு இந்திர பதவியின்மேல் ஆசை இராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படி அவர் தன் பதவிக்கு வந்துவிட்டால் தன் நிலை என்ன ஆகும்? எனவே, உடனடியாக அவர் தவத்தைக் குலைக்க அவன் முடிவுசெய்தான்.
தன் கட்டளைக்குக் கீழ்ப்படியும் வருண பகவானை அழைத்தான். முனிவர் வத்சநாபர் இருக்கும் இடத்தில் கடும் மழை பொழியுமாறு உத்தரவிட்டான். மழையில் நனைந்து புற்றுமண் கரையட்டும். பெருமழை காரணமாக அவர் தவத்தை நிறுத்தட்டும். இதுவே இந்திரன் திட்டம். இந்திரனின் கட்டளையை ஏற்ற வருணன் தன் அதிகாரத்திற்கு உட்பட்ட அத்தனை மேகங்களையும் உரக்கக் கூவி அழைத்தான். ‘காட்டுங்கள் உங்கள் தீவிரத் தை!’ என ஆணையிட்டான். அடுத்த கணம் மேகங்கள் வத்ச நாபர் இருக்கும் பிரதேசத்தில் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கின. கடகடவென இடி இடித்தது. பளிச் பளிச் என மின்னல் மின்னியது. பிரளய காலமே வந்துவிட்டாற்போல் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது.
சிறிது நேரத்திலேயே வத்சநாபரைச் சுற்றி மூடியிருந்த புற்றுமண் கரைந்து ஓட ஆரம்பித்தது. தர்ம தேவதை இந்த நிகழ்ச்சிகளையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன கொடுமை இது! தன் உள்ளத்தில் ஒரு தீய நினைவுகூட வராமல் கண்காணித்த பின் தவத்தில் அமர்ந்திருக்கும் உத்தமமான மகரிஷி இந்த வத்சநாபர். இவர் நிச்சயம் இந்திர பதவிக்கெல்லாம் ஆசைப்படப் போவதில்லை. இவர் லட்சியம் முக்தி அடைவதாகத் தான் இருக்கும். இதைப் புரிந்துகொள்ளாத தேவேந்திரன் தேவையில்லாமல் இவரைத் துன்புறுத்துகிறானே!
கோகுலத்தில் இந்திரன் மழைபொழிந்தபோது கண்ணன் கோவர்த்தனகிரியைத் தூக்கி கோபர்களையும், கோபிகைகளையும் காத்தானே! அப்போது அவமானப்பட்டது போதாதா? இன்னும் இந்திரனின் சூழ்ச்சியும் ஆணவமும் அடங்கவில்லையே? இவன் மழைபொழிந்து மகரிஷி வத்சநாபரின் தவம் தடைபடுவது சரியல்ல. இவர் நிஷ்டை கலையாமல் இருக்க நாம் உதவ வேண்டும். தர்மதேவதை ஒரு முடிவுசெய்தாள். சடாரென்று தன்னை ஒரு மாபெரும் எருமையாக உருமாற்றிக் கொண்டாள். அவள் எடுத்த எருமையின் வடிவம் நான்கைந்து யானைகள் சேர்ந்த உருவைப் போல் பிரமாண்டமாய் இருந்தது.
வத்சநாபரை நோக்கி நடந்த அந்த எருமை தன் நான்கு கால் களின் கீழும் வத்சநாபர் இருக்கும் விதத்தில் தன் கால்களைப் பரப்பி நின்று கொண்டது. இப்போது எருமை மாட்டின்மேல் மழைபெய்யத் தொடங்கியது! என்ன ஆச்சரியம்! எருமையின் பாதுகாப்பில் இருந்த வத்சநாபர் மேல் ஒரு சொட்டு மழைநீர்கூட விழவில்லை. மழையைப் பற்றிய உணர்வே இல்லாமல் அவர் தொடர்ந்து தவத்தில் ஆழ்ந்திருந்தார். தர்ம தேவதையிடம் தன்னால் போட்டி போட இயலாது என்பதை உணர்ந்த இந்திரன் சோர்வடைந்தான்.
இந்த முனிவர் இந்திர பதவிக்கு ஆசைப்படுவார் என்று தான் ஏன் அவசரப்பட்டுத் தவறாக முடிவெடுக்க வேண்டும்? தர்ம தேவதையே இவரை ரட்சிப்பதால் இவர் பதவி ஆசை கொண்டவராக இருக்க இயலாது. எனவே, மழையை நிறுத்துவோம் என முடிவுசெய்தான். வருணனுக்கு உடனடியாக மழையை நிறுத்துமாறு கட் டளையிட்டான். வருணனின் கட்டளைப்படியே மழைபொழிந்த அத்தனை மேகங்களும் விலகிக் கொண்டன. மழை முற்றிலுமாக நின்றுவிட்டது. சிலுசிலுவென்று ஈரக்காற்று வீசத் தொடங்கியது.
வத்சநாபரை மழை நீரிலிருந்து காத்த அந்த எருமை இப்போது மழை இல்லாததால் அவரை விட்டு விலகிச் சற்றுத் தள்ளி நின்று கொண்டது. மௌனமாக அவரையே கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் நெடுநாளைக்குப் பிறகு தவம் கலைந்து கண்திறந்தார் வத்சநாபர். ஆச்சரியத்தோடு சுற்றுப்புறங்களைப் பார்த்தார். எங்கும் மழைநீர் தேங்கியிருந்தது. அந்தப் பிரதேசமே வெள்ளக் காடாய் இருந்தது. எனவே, கனமழை கொட்டியிருப்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், என்ன வியப்பு! அவர் அமர்ந்திருந்த இடத்தில் மட்டும் சொட்டுத் தண்ணீரைக் கூடக் காணோம்.
கடும் வெய்யிலடித்ததுபோல அந்த இடம் மட்டும் உலர்ந்து காணப்பட்டது. இது எப்படி என வியப்போடு சுற்றுமுற்றும் பார்த்தார். சற்றுத் தொலைவில் மிகக் கம்பீரமாக யானையை விடப் பெரியதாக ஓர் எருமை நின்று கொண்டிருப்பதை கவனித்தார். அதன் பிரமாண்டமான தோற்றம் அவரை திகைக்க வைத்தது. இத்தனை பெரிய எருமையை அவர் இதுவரை கண்டதில்லை. அந்த எருமைதான் தன்மேல் மழை நீர் விழாமல் தன்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என்பதை அவரால் சுலபமாய் ஊகிக்க முடிந்தது. அந்த எருமை யார் என அவர் அறியவில்லை.
என்றாலும் அதனிடம் அவருக்கு நன்றியுணர்ச்சி தோன்றியது. எப்போதும் மனத்தைக் கட்டுப்படுத்தும் அவர் அப்போது அதனை மறந்தார். மனம்தான் ஒரே கணத்தில் பல்வேறு நினைவுகளில் ஆழும் தன்மை உள்ளதாயிற்றே? அந்த எருமைமேல் மனம் நன்றி பாராட்டிய அந்தக் கணமே அந்த எருமையின் மாபெரும் வடிவத்தையும் அது நினைத்துப் பார்த் தது. இந்த எருமையைக் கொன்றால் இதன் மிகப்பெரும் தோல் எத்தனை இசைக் கருவிகளுக்குப் பயன்படும் என்றும், அசைவ உணவு உண்பவர்கள் இதன் மாமிசத்தை எத்தனை காலம் உண்ண முடியும் என்றும் அவர் மனம் சிந்திக்கத் தொடங்கியது.
இந்தச் சிந்தனை எழுந்த மறுகணமே வத்சநாபர் தன் உள்ளத்தில் மிகுந்த வெட்கமடைந்தார். என்ன நினைப்பில் ஈடுபடுகிறது என் மனம்! என்னை மழையிலிருந்து காத்தது இந்தப் பிரமாண்டமான காட்டெருமை. ஆனால், அது கொல்லப்பட்டால் என்னென்ன பயன் என்று நினைக்கிறது என் மனம்! என்னை மழையிலிருந்து காப்பாற்றிய எருமைக்கு நான் செய்யும் நன்றிக் கடனா என் இந்த நினைப்பு! சீச்சீ! நானும் ஒரு மனிதன் என உயிர் வாழ்கிறேனே! என் மனத்தில் தோன்றும் தீய நினைவுகள் அத்தனையையும் முற்றிலுமாக அழித்து விட்டேன் என்று மனப்பால் குடித்தேனே?
என்னைவிட வேடதாரி வேறு யார் இருக்கக் கூடும்? என்னைக் காத்த எருமையின் இறப்பைப் பற்றிய சிந்தனை எழுந்த மனத்தோடு நான் இனி உயிர்வாழ்வது சரியல்ல. எண்ணம் தானே செயலின் வித்து! அதுதானே தான் கண்டுணர்ந்த உண்மை! செயலாகக் கூடிய தீய எண்ணம் தோன் றிவிட்டால், அது அந்தச் செயலைச் செய்வதற்குச் சமம்தானே! இத்தகைய தீய எண்ணத்தை நினைத்த நான் இறப்பதுதான் சரி. வெட்கமடைந்த மனத்தோடு, விறுவிறுவென்று அவர் மலை உச்சிக்கு நடக்கத் தொடங்கினார். ‘இறைவனே! என் மனத்தில் தோன்றிய தீய நினைவை மன்னிப்பாய் அப்பா,’
என்றெண்ணிய அவர் மலையிலிருந்து சடாரெனக் கீழே குதித்தே விட்டார். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. அந்த பிரமாண்டமான எருமை மீண்டும் தர்ம தேவதையாக உருக்கொண்டது. அவர் கீழே விழாமல் மெல்லத் தன் பூப்போன்ற கைகளால் பக்குவமாய்த் தாங்கி அவரை அப்படியே மலையின் கீழே இருந்த புல்வெளியில் கிடத்தினாள் தர்ம தேவதை. தர்மதேவதையை நேரில் தரிசித்த வத்சநாபர் இருகரம் கூப்பி வணங்கினார். அவர் விழிகளில் கண்ணீர் திரையிட்டது. தர்மதேவதை கனிவோடு அவரைப் பார்த்துப் பேசத் தொடங்கினாள்:
‘‘வத்சநாபரே! தன் மனத்தை ஆராய்ந்து ஆராய்ந்து தங்களை மேலும் மேலும் தூய்மைப் படுத்திக் கொள்பவர்கள் உலகில் ஒருசிலர் உண்டு. அவர்களே உயர்ந்த ஆன்மாக்கள். அவர்கள் எல்லோரையும் விட நீங்கள் பெரிதும் உயர்ந்து விட்டீர்கள். ஒரு சிறு தீய எண்ணம் மனத்தில் தோன்றியதன் பொருட்டாக உயிரையே விடவும் துணிந்துவிட்டீர்கள். உங்களைப் போன்ற தூய மனிதர்களால் உலகம் பெருமை அடைகிறது. போய் மீண்டும் தவத்தில் ஈடுபடுங்கள். கட்டாயம் நீங்கள் விரும்பியவாறு உங்களுக்கு முக்தி கிட்டும்.’’ பெரும் நிறைவில் ஆழ்ந்த வத்ச நாபர், தொடர்ந்து தவம் செய்யலானார்.
காலப் போக்கில் அவர் முக்தி அடைந்தார். அவர் முக்தி அடைந்தபோது அவர் ஆன்மாவை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப் புஷ்பக விமானம் வந்தது. கைலாகு கொடுத்து அவரைப் புஷ்பக விமானத்தில் ஏற்றி அழைத்துச் சென்றவன் யார் தெரியுமா? ஒருகாலத்தில் அவர் தவத்தைக் கலைப்பதற்காக வருணனை ஏவிய அதே இந்திரன்தான்! இப்போது அவரைக் கைகூப்பி வணங்கினான். அந்தக் காட்சியைக் கண்ட தர்மதேவதை நகைத்துக் கொண்டாள். அகலிகையிடம் தீய எண்ணத்தைக் கொண்டிருந்த இந்திரன் வத்சநாபர் போன்ற தூய ஆன்மாக்களை வணங்கியாவது மனத்தூய்மை பெறட்டும் என்று எண்ணியது தர்ம தேவதையின் மனம்.
(மகாபாரதத்தில், அம்புப் படுக்கையிலிருந்த பீஷ்மர், தர்ம புத்திரருக்கு, மனத்துக் கண் மாசிலன் ஆதலே அனைத்தறன் என்ற நீதியை விளக்கிச் சொன்ன கதை இது.)

No comments:
Post a Comment