Sunday, May 26, 2013

கோயில் தரிசனம் முடித்துவிட்டு சிறிதுநேரம் அமர்ந்து செல்வது ஏன்?

கோயில் தரிசனம் முடித்துவிட்டு சிறிதுநேரம் அமர்ந்து செல்வது ஏன்?

இறைவனை தரிசித்துவிட்டுச் செல்லும் பக்தர்களுக்கு வீடு வரை துணைக்கு சில தேவர்கள் வருவதாக ஐதீகம். நாம் அவர்களை ஏற்று மகிழ்ந்து சிறிதுநேரம் உட்கார்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்துவது மரபு. இது ஒருவகை. மற்றொன்று, தரிசனம் முடிந்ததும் கண்மூடி தியானத்தில் அமர்ந்து சுவாமியை நினைத்தால், பலன் முழுமையாக கிடைக்கும்.

பவுர்ணமியில் கிரிவலம் வருவதன் நோக்கம் என்ன

பவுர்ணமியில் கிரிவலம் வருவதன் நோக்கம் என்ன?.
நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். "ஓஷதீநாம் பதி:' என்று சந்திரனுக்குப் பெயருண்டு. இதற்கு "தாவரங்களின் தலைவன்' என்று பொருள். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும். பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும்.

சுபநிகழ்ச்சிகளுக்குப் பட்டுப்புடவை உடுத்துவது ஏன்?

**

பட்டுத்துணிகளுக்கு "விழுப்பு' என்னும் தீட்டு தோஷம் கிடையாது. கோயில் விழாக்கள், வீட்டில் நடக்கும் பூஜைகள் இவற்றிற்கு பட்டுப்புடவை அணிவது சிறப்பு. ஆண்பெண் இருபாலரும் பட்டு உடைகளை விசேஷங்களில் அணியலாம். புடவையில் இப்படித்தான் ஜரிகை இருக்கவேண்டும் என்றில்லாமல் எளிய பட்டாடைகளே போதுமானது. விலைவாசியைக் கருத்தில் கொண்டு கணவரைக் காப்பாற்றுங்கள்.

வீட்டில் பூஜைக்கு நந்தி இருக்கும் மணியை பயன்படுத்தலாமா?

நந்தி இருக்கும் மணியை வீட்டில் பூஜைக்குப் பயன்படுத்தலாமா?

நந்தி இருந்தால் தான் மணிக்கு லட்சணமே. சைவர்கள் நந்தி மணியையும், வைணவர்கள் நாமம் பொறித்த மணியையும் பூஜைக்குப் பயன்படுத்துவர்.