Wednesday, October 19, 2011

கேதார கௌரி விரதம்.

தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சில தீய எண்ணங்கள் என்னும் இருட்டு உள்ளது. தவிர அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்றவற்றையும் நம்மில் புகுந்து நம்மை தவறான பாதைக்கு இட்டுச்செல்கிறது. தேவையற்ற இந்த எண்ணங்களை அகற்றவும், தீய குணத்தை எரிக்கவும் தீபம் பயன்படுகிறது.

அறியாமை இருள் நீக்கும் தீபத்தை வரிசையாக வைத்து வ 'தீபம்' என்றல் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.

ஸ்கந்த புராணத்தின்படி சக்தியின் 21 நாள் கேதார கெளரி விரதம் முடிந்து இந்த தினத்தில்தான் சக்தியை தன்னில் ஒருபாதியாக சிவன் ஏற்றுக்கொண்டார் என்கின்றன புராணங்கள் அந்த நாளே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டு தோறும் புரட்டாசி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி வரை (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். இவ் விரதம் இவ்வருடம் 06.10.2011 வியாழக்கிழமை ஆரம்பமாகி 26.10.2011 புதன்கிழமை வரை அமைவதாக சோதிடம் கணித்துள்ளது. இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன.

கணவன் – மனைவி ஒற்றுமை

"கேதாரம்" என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி' இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இப் பெயர் உண்டாயிற்று. சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுகின்றது.

சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்ற விரதமே கேதார கௌரி விரதமாகும்.
பக்தர்கள் இவ்விரதத்தினை மன ஒருமைப்பாட்டுடனும், புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும். இதனை விட சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பதும் இவ் விரதத்திற்கு வழங்கப்படும் அடுத்த சிறப்பாகும்.

அர்த்தநாரீஸ்வரர் ஆன கதை

பிருங்கி முனிவர் அதிதீவிர சிவபக்தர். ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன் கயிலைநாதன்தான் என்றும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றெல்லாம் கூறி உள்ளார்ந்த பக்தியுடன் சிவனை மட்டுமே வணங்குவார். சிவனைத்தவிர வேறு யாரையும் சிந்திக்காத அவரது போக்கு பிற கடவுளரை அவமதிக்கும் வகையில் அமைந்ததுண்டு. அப்படி ஒரு நிலை பார்வதிக்கே ஏற்பட்டது. கயிலையில் தன் கணவருடன் அமர்ந்திருக்கும் போது அங்கு வரும் பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னை திரும்பியே பார்க்காமல் போவதும் கண்டு பார்வதி மனம் வருந்தினாள்.

எப்படியாவது பிருங்கி முனிவர் தன்னையும் வணங்கவேண்டும் என்று எண்ணிய பார்வதி இறைவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள். வழக்கம்போல கயிலாயம் வந்த பிருங்கி முனிவர் சிவனுடன் நெருக்கமாக பார்வதி அமர்ந்திருந்ததைக் கண்டு கலங்கவில்லை. வண்டு உருவம் எடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து சிவனை மட்டுமே வலம் வந்தார்.

பார்வதியின் சாபம்

இதனைக்கண்டு ஆத்திரமடைந்த பார்வதி, தன்னை அவமதித்த முனிவரின் கால்கள் முடமாகிப்போகட்டும் என்று சபித்தாள். உடனே அது பலிக்கவே நடக்க சக்தியில்லாமல் முனிவர் தடுமாறினார். ஆனால் தனது பக்தருக்கு நேர்ந்த கதியை கண்ட இறைவன் பிருங்கி முனிவர் ஊன்றி நடக்க ஒரு குச்சியை அளித்தார்.

முனிவருக்கு ஆதரவாக சிவன் நடப்பது கண்டது பொறுக்காத பார்வதி அவரை விட்டு விலகி பூலோகம் வந்தாள். தன்கணவரை விட்டு ஒருகணமும் பிரியாத வரம் வேண்டும் என்று தவமிருந்தாள். கடுமையான தவத்திற்கு இளகிய இறைவன் பார்வதியை காண பூலோகம் வந்தார். சிவனை கண்ட பார்வதி ஒருநாளும் உமை விட்டு பிரியாக வரம் வேண்டும் என்று வேண்டினாள்.਍ഀ
பார்வதியின் எண்ணத்தை உணர்ந்த இறைவனும் தன்னுடலுடன் பார்வதியை இணைத்து அர்த்தநாரீஸ்வரராய் ஆனார். இவ்வாறு அம்பிகை இறைவனின் உடலில் ஒருபாதியாகி, கணவரிடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக்கொண்ட நாள்தான் கேதார கௌரி விரதநாள். கணவன் மனைவியிடையே மாறாத அன்பை வளர்த்துக்கொள்ளும் பண்டிகைதான் இந்த கேதார கௌரி விரதம். 21 நாள் விரதம் இருந்து தீபாவளி தினத்தன்று சிவனை வேண்டி வணங்கினால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

தம் மாங்கல்யபலம் நீடிக்கவும். கணவரின் மீதான அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டியும் கேதார கெளரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடிக்கின்றனர். அன்றைய தினத்தில் தீபாவளிப் பண்டிகைக்கான பூஜைகள் முடிந்த பின்னர், பூஜையறையில் விளக்கேற்றி சிவ பார்வதியின் படத்தின் முன்பு அமர்ந்து தியானம் செய்யவேண்டும். ஓம் நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை நாள்முழுவதும் துதிக்க வேண்டும்.

மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டும் என்றும் மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இதனை அனுஷ்டிப்பர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதுண்டு. விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.மேலும் முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் "பாரணம்' பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.

பிரம்மா, விஷ்ணு, இந்திரன்

இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது.

இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை. இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார். எனவே நாமும் இவ் அரிய நோன்பினை நோற்று பரம் பொருளின் பூரண கடாட்சத்தினைப் பெற்று "வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோமாக!'

Thursday, October 13, 2011

பக்தி கதைகள் எல்லா உயிர்களையும் நேசி!

விவசாயி ஒருவர் தன் பண்ணையில் ஆயிரம் பசுக்களை வளர்த்தார். அவை நன்றாகப் பால் கறந்தன. கிடைத்த வருமானத்தில் பெரிய வீடு கட்டினார். மகளை பெரிய இடத்தில் கட்டிக் கொடுத்தார். இரண்டு மகன்களை நன்றாகப் படிக்க வைத்தார். அந்தப் பிள்ளைகள் பொறுப்பானவர்கள். பசுக்களுடன் அவர்கள் அன்பாக இருந்தனர். காலம் கடந்தது. பண்ணையில் இருந்த சில பசுக்களிடம் பால் வற்றி விட்டது. அவை கிழடாகி விட்டதால் பால் குறைந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்ட விவசாயி, அடிமாட்டு வியாபாரிக்கு ஆள் அனுப்பினார். தன் மனைவியை அழைத்து, அடியே! சில மாடுகள் கிழடாகி பால் குறைந்துவிட்டது. அதை அடிமாட்டுக்கு அனுப்பி விட வேண்டியது தானே! பணமும் கிடைக்கும், என்றான். அவளும் ஆமோதித்தாள்.
இதை பிள்ளைகள் இருவரும் கேட்டனர். தந்தையிடம் சென்றனர். அப்பா! வயதாகி விட்டால் எதற்குமே நாம் பயன்படமாட்டோமா? என்றனர். அதிலென்ன சந்தேகம்! நிற்கக் கூட முடியாது. கால்கள் தள்ளாடும், கைகள் நடுங்கும், என்றார் தந்தை. அந்த நேரத்தில் நம்மை யார் காப்பாற்றுவார்கள்? என்ற பிள்ளைகளிடம், நம் வளர்ச்சிக்கு காரணமானவர்கள் தான் காப்பாற்ற வேண்டும். உதாரணத்துக்கு பெற்றவர்களை பிள்ளைகள் காப்பாற்ற வேண்டும், என பதிலளித்தார். அப்பா! நம் மாடுகள் கிழடாகி விட்டாலும், அவை இதுவரை நம்மோடு வாழ்ந்து பால் தந்து நம் வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளன. அவற்றை மட்டும் கொல்ல வேண்டும் என்கிறீர்களே! இது என்ன நியாயம்! நம்மைப் போல நம் வளர்ச்சிக்கு காரணமான அந்த விலங்குகளையும் நேசிக்க வேண்டுமல்லவா! என்ற பிள்ளைகளின் பேச்சு, விவசாயியின் மனதில் சம்மட்டி அடியாய் விழுந்தது. மாடுகளை அடிமாட்டுக்கு அனுப்பும் எண்ணத்தைக் கைவிட்டு தனியிடத்தில் கட்டி வைத்து, அவை இயற்கையாக மரணமடையும் வரையில் உணவு கொடுத்தார்.

பக்தி கதைகள் பொன்னைப் போல மனம் இருந்தா செல்வம் வேறில்லை!

பொன் வேண்டுமா! பொன்மனம் வேண்டுமா! என்று கேள்வி கேட்டால் பெருமைக்கு வேண்டுமானால் பொன்மனம் என்பர் சிலர். ஆனால், மனம் பொன்னின் மீது தான் அலைபாயும். ஒரு பெரியவர் தினமும் தியானம் செய்வார். அவர் மனதில் ஆசைகள் இல்லை. நாளடைவில் ஒரு தபஸ்வியாகவே மாறிவிட்டார். ஊரை விட்டு ஒதுங்கி சிவசிந்தனையிலேயே இருந்தார். சிவபெருமான் தன் மனைவி பார்வதியிடம், இந்த பெரியவருக்கு நாம் ஏதாவது பரிசளிக்க வேண்டும். சமீபகாலமாக இந்திரனின் போக்கு சரியில்லை. அவனது பதவிக்கு இவரை அமர்த்தி விடலாம், என்றார். பார்வதியும் சம்மதம் சொன்னாள்.
இந்த விஷயம் இந்திரன் காதுக்கு எட்டிவிட்டது. பயந்து போன அவன், ஒரு தங்கப்பெட்டியில் நவரத்தினங்களை நிரப்பி, அந்தணர் போல் மாறுவேடமணிந்து தபஸ்வியிடம் சென்றான். தபஸ்வியே! நான் ஒரு அந்தணன். எங்கள் ஊர் கோயில் திருப்பணிக்காக பக்கத்து நாட்டு மன்னனிடம் பொருள் பெற்று வருகிறேன். அவசரமாக நான் வெளியூர் போக வேண்டியுள்ளது. அதுவரை இந்தப் பொருளை நீங்கள் பாதுகாத்து வையுங்கள். திரும்பி வந்து வாங்கிக் கொள்கிறேன், என்றான். தபஸ்வியும் சம்மதித்தார். அதன்பிறகு அவரால் தியானத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. ஐயோ! இது அடுத்தவர் பொருளாயிற்றே! யாரும் திருடிச் சென்று விடுவார்களோ என பயந்து அதிலேயே கவனம் செலுத்தினார்.
சிவசிந்தனை மறைந்தது. இதனால் ஆசை தலை தூக்கியது. நான்கைந்து நவரத்தினத்தை எடுத்தால் தெரியவா போகிறது என நினைத்து பெட்டியைத் திறந்து ரத்தினங்களை எடுத்தார். அதை பக்கத்து ஊருக்கு போய் விற்று கிடைத்த பணத்தில் கண்டதையும் சாப்பிட்டார். தபஸ்வி என்ற இலக்கணத்திற்கு மாறாக நடந்தார். அதனால் சிவலோக பதவியை இழந்தார். இந்த உலகில் கிடைக்கும் பொருள் தற்காலிக இன்பத்தையே தரும். இறைநினைவு என்ற செல்வமே, இருக்கும்போதும், இறந்தபின்னும் நிரந்தர இன்பத்தை அளிக்கும்.

பக்தி கதைகள்படிச்சா போதாது ... பண்பு வேணும்!

இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தனர். குடலைப்பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமிகூட அவர் அருகில் செல்ல பயந்தாள். என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன், என்றாள். அவர் அருகில் செல்லும் தகுதி அவரது பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது.
தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் அவரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத் தானே அவர் அங்கு வந்திருக்கிறார்! தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார். பிரகலாதா! என்னை மன்னிப்பாயா? என்றார். அவனுக்கு தூக்கி வாரிபோட்டது. சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்? என்றான். உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு, என்றார் நரசிம்மர். பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது. மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள், என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது, என்றான். பணம் இருக்கிறது, படிப்பு இருக்கிறது. ஆனால், ஆசை வேண்டாம் என்கிறான் பிரகலாதன். குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்கவும், நாடாளவும் மட்டும் அல்ல! இறை சிந்தனையையும் வளர்த்துக் கொள்வதற்கு!
படித்தால் மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. பகவானை கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகிப் போனான். இந்த சின்னவயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே! ஆனாலும், அவர் விடவில்லை. இல்லையில்லை!
ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும், நரசிம்மர் விடாமல் கெஞ்சினார். பகவான் இப்படி சொல்கிறார் என்றால், தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும் என்று முடிவெடுத்த பிரகலாதன், இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள், என்றான். நரசிம்மர் அவனிடம், பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் என் இடத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர், என்றார். தந்தை கொடுமை செய்தாரே என்பதற்காக அவரை பழிவாங்கும் உணர்வு பிரகலாதனிடம் இல்லை. சரஸ்வதிபூஜை வேளையில், படித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு இதுதான்

பக்தி கதை

இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தனர். குடலைப்பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமிகூட அவர் அருகில் செல்ல பயந்தாள். என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன், என்றாள். அவர் அருகில் செல்லும் தகுதி அவரது பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது.
தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் அவரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத் தானே அவர் அங்கு வந்திருக்கிறார்! தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார். பிரகலாதா! என்னை மன்னிப்பாயா? என்றார். அவனுக்கு தூக்கி வாரிபோட்டது. சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்? என்றான். உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு, என்றார் நரசிம்மர். பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது. மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள், என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது, என்றான். பணம் இருக்கிறது, படிப்பு இருக்கிறது. ஆனால், ஆசை வேண்டாம் என்கிறான் பிரகலாதன். குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்கவும், நாடாளவும் மட்டும் அல்ல! இறை சிந்தனையையும் வளர்த்துக் கொள்வதற்கு!
படித்தால் மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. பகவானை கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகிப் போனான். இந்த சின்னவயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே! ஆனாலும், அவர் விடவில்லை. இல்லையில்லை!
ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும், நரசிம்மர் விடாமல் கெஞ்சினார். பகவான் இப்படி சொல்கிறார் என்றால், தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும் என்று முடிவெடுத்த பிரகலாதன், இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள், என்றான். நரசிம்மர் அவனிடம், பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் என் இடத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர், என்றார். தந்தை கொடுமை செய்தாரே என்பதற்காக அவரை பழிவாங்கும் உணர்வு பிரகலாதனிடம் இல்லை. சரஸ்வதிபூஜை வேளையில், படித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு இதுதான்!

இரவில் நெல்லிக்காய் சாப்பிடலமா?

நெல்லியில் மகாவிஷ்ணு நித்யவாசம் செய்கிறார். எனவே நெல்லியமுதம் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான். சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.
ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும்,இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் புத்தி, வீர்யம், தேஜஸ் குறைந்து விடும்.

கடவுளுக்கு உருவம் உண்டா?

ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த ஒரு பக்தர், கடவுளுக்கு உருவம் உண்டா? என்று கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணர், இறைவன் உருவம் உடையவர், உருவம் அற்றவர்-இந்த இரண்டும் அவரே! அதாவது பனிக்கட்டியையும், தண்ணீரையும் போல என்று பதில் கூறினார். இறைவன் என்பவன் முடிவில்லாமல் பரந்து கிடக்கும் மகா சமுத்திரத்தைப் போன்றவன். சமுத்திரம் அதீத குளிர்ச்சியின் காரணமாக சில இடங்களில் உறைந்திருக்கும். அவ்விதம் உறைந்த பனிக் கட்டிகள் பலவித வடிவங்களில் இருக்கும். ஆனால் சிறிது வெப்பம் அதிகரித்ததும் பனி உருகி நீரோடு நீராகக் கலந்து விடும். பனிக்கட்டியும் நீரும் ஒரே சமுத்திரத்தைச் சேர்ந்தவைதான். இறைவனும் அப்படித்தான். பக்தியின் குளிர்ச்சியால் அவன் பக்தர்களுக்கு தகுந்தாற்போல பலவேறு வடிவங்களில் தோன்றுகிறான். ஞானம் என்ற வெம்மை செயல்பட ஆரம்பித்ததும், அவனும் வடிவமற்றவானாகி விடுகிறான். இவ்வாறாக, சாதாரண பக்தனுக்கு வடிவம் தேவைப்படுகிறது. ஆனால் அனைத்தும் அறிந்த ஞானிக்கு வடிவம் தேவைப்படுவதில்லை.

தங்கம் கனவில் வரலாமா?

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு பவுன் பத்து ரூபாய் இருந்தது ஒரு காலம். இப்போழுது இருபது ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது. அந்த தங்கம் கனவில் வந்தால் நோய்கள் உருவாகும், கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழிலுக்கு செய்த முதலீடுகளில் பிரச்சனைகள் உருவாகலாம், ஆனால் தஙகத்தேர் கனவில் வந்தால் காரிய வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.

அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன

அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண்விழிப்பதாகும்.உஷத்காலம் உஷஸ் என்னும் பெண் தேவதையைப்பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான். இதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால்தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணிவரை.

சரஸ்வதியின் சிறப்பும் வழிபாடும்!

சரஸ்வதியின் வாகனங்கள்: சரஸ்வதிக்கு ஞான சரஸ்வதி, ஆகமச் செல்வி, ஆகமசுந்தரி, ஞானச்செல்வி என்று பல பெயர்கள் உண்டு. சரஸ்வதியை வேதங்கள் அன்னத்தின் மீது அமர்ந்திருப்பவளாகப் போற்றுகின்றன. அன்ன வாகனத்துடன் உள்ள சரஸ்வதியை அம்சவல்லி என்பர். அன்னம், அப்பழுக்கற்ற வெண்மை நிறமுடையது. அதுபோல், ஒருவர் கற்கின்ற கல்வியும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதையும், படித்தவர்கள் வெள்ளை மனதினராக இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது. அவளது வெள்ளைப்புடவை, அவள் அமர்ந்துள்ள வெள்ளைத் தாமரை ஆகியவையும் இதையே உணர்த்துகின்றன. தென்னகத்தில் கலைமகளை மயில் வாகனம் கொண்டவளாகப் போற்றுகின்றனர். ரவிவர்மாவின் ஓவியங்களில் சரஸ்வதிக்கு மயிலே வாகனமாக குறிக்கப் பட்டுள்ளது. மயில் தோகை விரிப்பதும், மடக்கிக் கொள்வதும் ஒருவன் கற்ற கல்வி பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும் என்பதையும், அவனுக்கு அடக்கம் வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.
சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை: தெட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம். இதற்கு காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி,தெட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர். மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் பெற்றிருப்பதைக் காணலாம். கொண்டைக் கடலை உ<யிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லையென்றால், அவரது <<உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர். மனித வாழ்வின் உயிர்நாடி கல்வி. அந்த <கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை (சுண்டல்) நைவேத்யம் செய்கிறோம்.
சொல் கிழவியைத் தெரியுமா?
ஒட்டக்கூத்தர் கலைமகளின் பக்தராக விளங்கினார். நாமகளின் அருளால் பாடும் திறம் பெற எண்ணினார். இதற்காக ஹரிநாதேஸ்வரம் என்னும் கூத்தனூரில் ஓடும் அரசலாற்றில் நீராடி கலைவாணியின் திருவடிகளை சிந்தித்து தியானத்தில் ஆழ்ந்தார். கலைவாணி அவர் முன் தோன்றி, தன் வாயிலிருந்த தாம்பூலத்தை (வெற்றிலை) கூத்தருக்கு கொடுத்தாள். அப்போதிருந்து பேரறிவும், ஞானமும் பெற்றார் ஒட்டக்கூத்தர். கூத்தருக்கு கலைமகள் காட்சி கொடுத்து அருளிய திருத்தலம் என்பதால் கூத்தனூர் என்ற பெயர் ஏற்பட்டது. தாம் பாடிய தக்கயாகப்பரணியில் இத்தேவியை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே என்று பாடியிருப்பது இவரின் பக்தியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. கிழத்தி என்பதற்கு கிழவி என்றும், தலைவி என்றும் பொருளுண்டு. சொல்லுக்கு (வாக்கு) தலைவி என்பதால் இவளை ஒட்டக்கூத்தர் இப்பெயரிட்டு அழைத்தார். இவளுக்கு வாக்தேவி என்றும் பெயருண்டு.
கல்விக்கோயில்: சிவபெருமானை அலட்சியப்படுத்தும் விதமாக தட்சன் ஒரு யாகம் நடத்தினான். சிவன், தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். அவர், யாகத்தை அழித்ததுடன், யாகத்தை முன்னின்று நடத்திய பிரம்மதேவனையும் தண்டித்தார். மேலும், அவரது மனைவியான கலைமகளின் மூக்கினையும் அரிந்தார். பயந்து நின்ற அவள் தன் கணவன் பிரம்மனுடன் சீர்காழிக்குச் சென்று சிவனை வழிபட்டாள். இந்த நிகழ்ச்சியை திருஞானசம்பந்தர், நாவினாள் மூக்கரித்த நம்பர் என்று குறிப்பிடுகிறார். மேலும், நாவியலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலங்கோயில் என்றும் பாடியுள்ளார். சீர்காழி ஒரு கல்வித்தலம் ஆகும். மாணவர்கள் ஒருமுறையேனும் சீர்காழி சென்று, அங்கு அருள்புரியும் தோணியப்பரையும், அம்பாளையும், திருஞானசம்பந்தரையும் வணங்கி வந்தால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம். இவ்வூரில் அவதரித்த சம்பந்தருக்கு, இத்தலத்தில் தான் அம்பிகை தாயாக இருந்து பால் புகட்டினாள்.

புதுமனை புகும்போது பசுவை உள்ளே அழைப்பது ஏன்

பசுவின் உடலில் மகாலெட்சுமி வாசம் செய்வதாக கருதுவதால் பசுவை தரிசனம் செய்வது நல்லது. அவ்வாறு செய்தால் லட்சுமி கடாட்சம் உருவாகும். பசுவிற்கு பூஜை செய்வது, பணிவிடைகள் செய்வது, வைக்கோல் போடுவது, கழுத்தில் ஆதரவாகத் தடவி கொடுப்பது, புல் அள்ளிப் போடவது, மேய்வதற்கு பூமியை அளிப்பது போன்றவைகளை செய்வதால் மிகுந்த புண்ணியம் வந்து சேரும். புதுவீடு கிரகப்பிரவேசம் செய்யும்போது பசுவும், கன்றும் கொண்டு வந்து பூஜை செய்வது வழக்கம். அவ்வாறு செய்யும் போது மகாலெட்சுமி வீட்டிற்கு வருவதாக நம்பிக்கை. கன்றில்லாமல் பசுவை மட்டும் அழைக்கக் கூடாது.

கோவில் விழாக்களில் கரகாட்டம் ஆடும் பழக்கம்

கிராமப்புற கோவில் விழாக்களில் கரகாட்டம் முக்கிய இடம் பிடிக்கிறது. ஆடி மாதத்தில் பெரும்பாலான அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும் என்பதால், அங்கே இந்த கரகாட்டத்தையும் நாம் கண்டுரசிக்கலாம். இந்த கரகாட்டத்திற்கும் மாரியம்மனுக்கும் நிறையவே தொடர்பு உள்ளது. விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்த தமிழர்கள், தங்களது விவசாயம் செழிக்க பருவம் தவறாமல் மழை பெய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அதையொட்டி மழை தெய்வமாகிய மாரி(மழை) அம்மனையும் ஆற்றுக் கடவுள்களான கங்கை மற்றும் காவேரி அம்மனையும் மழை வேண்டி வழிபட்டனர். இந்த தெய்வங்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக தண்ணீர் நிரம்பிய குடத்தை தலையில் ஏந்தி ஆடிப்பாடவும் செய்தனர். இந்த வழிபாடு தான் பின்னாளில் கரகாட்டமாக உருவெடுத்தது என்கிறார்கள்.

மணமேடையில் மறைந்துள்ள ரகசியங்கள் தெரியுமா?

மணக்கோலம் காணும் மணமக்கள், மணமேடையில் தாலிகட்டிக் கொள்வர். அந்த மணமேடை தத்துவார்த்த ரீதியாக அமைக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரியாது. தாலி கட்டி முடிந்ததும் மணமேடையை மூன்று முறை வலம் வரச் சொல்வது வழக்கம். ஆலயத்தை வலம் வருவது போல மணப்பந்தலை வலம்வர காரணம் மணப்பந்தலில் அமைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் யாவும் தெய்வ வடிவங்களாகும். பந்தலில் ஊன்றப் பட்டிருக்கும் நான்கு கால்களும், நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. திருமணம் விக்னேஷ்வரர் சாட்சியாகவும், அக்னிசாட்சியாகவும் நடைபெறுகிறது. அரசன் ஆணைக்கால் என்று அரசானிக்கால் வைக்கப்படுகிறது. குபேரனுக்குரிய நவதானியமும் வைக்கப்பட்டுள்ளது. மணப்பந்தலை வலம் வரும் பொழுது தெய்வத்தை, திருவிளக்கை, அக்னியை, மரத்தை வலம் வந்து, அவற்றின் அருளையும் பெறுகின்றோம்.
கோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கின்றாள். சூரிய உதயத்திற்கு முன் வாசலில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்.கோலத்தில் புள்ளி,கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்படும் போது காலினால் அழிக்க கூடாது. கையால் அழிக்க வேண்டும். வீட்டின் வெளிமுற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல அமர்ந்தவாறும் போடுதல் கூடாது. வேலையாட்களாலும் போடுதல் கூடாது.சுபகாரியங்களின் போது இரண்டைக்கோடு வருவது போலவும் அசுபகாரியங்களின் போது ஒற்றைக்கோடு வருவது போல் போட வேண்டும்.
பயன்கள்: தமிழர்கள் இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். பசு சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக் கூடிய காலகட்டத்தில் வாசல் தெளித்து பெருக்கும் போது பிராண வாயு, அதாவது முழுமையான ஆக்ஸிஜன், சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது. மேலும் குணிந்து பெருக்குதல், குணிந்து கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியது. பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. நமது இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி வருவதாக ஐதீகம் இருக்கிறது. பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தயாள குணம் வெளிப்படும் விதமாக, எறும்பு, ஈ எல்லாம் சாப்பிடுவதற்கு தானம், தர்மம் செய்வது மாதிரியானதும் இருக்கிறது. அதனால் கோலமிடுதல் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் எல்லாம் கிடையாது. நம்ம வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல், உபசரிக்கும் குணம் மேலும் மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது.

ஆன்மிக தகவல்கள்

காலை ஐந்து மணிக்கு விளக்கேற்றி வழிபட விரும்புகிறேன், ஆனால், அந்நேரத்தில் வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு நல்வழி காட்டுங்கள்.இரவு ஒன்பது மணிக்கு "டிவி'யை அணைத்து விட்டு எல்லாரையும் தூங்கச் சொல்லுங்கள். காலை ஐந்து மணிக்கு எல்லாருமே எழுந்துவிடலாம். ஆனால், இந்த பதிலை உங்கள் வீட்டார் ஏற்றுக்கொள்ள வேண்டுமே! "சுகமாக "டிவி', பார்ப்பதையும், காலைத் தூக்கத்தை கெடுக்கிறேன்' என்றும் உங்கள் வீட்டினர் என்னை சபிக்காமல் இருந்தால் சரி!

* சூரியகாந்தி எண்ணெய், பாமாயிலை விளக்கேற்ற பயன்படுத்தலாமா?
எண்ணெய் என்ற சொல்லே நல்லெண்ணெயைத்தான் குறிக்கிறது. எள்+நெய்=எண்ணெய். இதுதான் விளக்கேற்ற உயர்ந்தது. தைல தீபம் என்று தான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. "திலம்' என்றால் "எள்'. திலத்திலிருந்து எடுக்கப்படுவதால் "தைலம்' என்று பெயர். சாஸ்திரம் ஏற்பட்ட பொழுது சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்றவை கிடையாது. அதனால் சாஸ்திரங்கள் விட்டிருக்கலாம் என்று கேட்பீர்கள்! அதற்கு மின்சார விளக்கே போதுமே?

* மலைக்கோயிலுக்குச் செல்லும் பொழுது, குரங்குகள் பூஜைப் பொருட்களை எடுத்துச் சென்று விடுகின்றன. இதனால் உண்டாகும் மனக்கஷ்டம் நியாயமானதா?
குரங்குகள் நம்மைப்போல் சிந்திக்கத் தெரியாதவை. உங்கள் மனம் கஷ்டப்படும் என்று அவற்றிற்குத் தெரிந்திருந்தால் இதுபோல் செய்யுமா? சிந்திக்கத் தெரிந்த நாமே அவற்றிடம் ஏமாந்து விடுகிறோமே! ஜாக்கிரதையாக இருந்து கொண்டால் போதும். இதையும் மீறி இப்படி நடந்தால் சுவாமியே எடுத்துக் கொண்டதாக சமாதானமாகிக் கொள்ளுங்கள். வீட்டில் சுவாமி நிவேதனத்திற்காக வைத்திருக்கும் இனிப்பை விபரம் அறியாத குழந்தை சாப்பிட்டு விட்டால் என்ன செய்கிறோம்? சோலைமலை, முக்கொம்பு போன்ற இடங்களில், குரங்குகளிடம் படாதபாடு பட்ட அனுபவம் எனக்கும் உண்டு.

* முன்னோர் திதியன்று ஏழைகளுக்கு அன்னதானமும், குழந்தைகளுக்கு கல்விக்கான உதவியும் செய்தால் தர்ப்பணம் செய்த பலனைத் தருமா? விளக்கம் தேவை.
மற்ற எந்தக் காரியமாக இருந்தாலும் மாற்று வழியை சிந்தித்துச் செயல்படலாம். முன்னோர் திதி என்ற காரியம் மட்டும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியன செய்துதான் ஆக வேண்டும் அன்னதானம், கல்விக்கு உதவி என்று எல்லாமே மிகப்பெரிய புண்ணிய செயல்கள் தான். ஆனால் பிதுர்காரியத்தோடு இவற்றை ஒப்பிடாதீர்கள்.

* காளஹஸ்தியில் ராகு கேது பரிகாரம் செய்யும்படி ஜோதிடர் கூறுகின்றனர். வசதியில்லாதவர்கள் எளிமையாக செய்யும் வழி இருந்தால் தெரிவியுங்கள்.
திருநாகேஸ்வரம் (கும்பகோணம் அருகே) திருப்பாம்புரம் (கும்பகோணம்-பேரளம்) கீழப்பெரும்பள்ளம் (பூம்புகார் சமீபம்) ஆகிய திருத்தலங்களில் செய்து கொள்ளலாம். இதுவும் உங்கள் ஊர் கோயில்களில் நவக்கிரக சந்நிதி இருந்தால் அங்கேயே செய்து கொள்ளுங்கள்

நரசிம்ம அவதாரம்

பகவான் எதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்றால், சர்வ வாஸ்துக்களினுள்ளேயும் அவன் வியாபித்திருப்பதை நாம் உணர்வதற்காகவே. விஷ்ணு புராணத்தில் ஒரு சுலோகத்தில் ஹே விஷ்ணு நாராயணா நீ எப்போதும் எங்கும் பரவியிருக்கிறாய். அது தர்ம சூக்ஷ்மமான விஷயம். ஆனால் அப்படி நீ பரவியிருப்பதை எல்லோரும் உணர வேண்டும் என்பதால் அல்லவா நரசிம்ம அவதாரம் பண்ணினாய் என்று வருகிறது.


நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். காயத்ரியின் மத்தியிலே ஒளிப்பிழம்பாய் இருப்பவன் பகவான் மகா விஷ்ணு. ஆயிரம் நாமம் என்பது யாரைக் குறிக்கிறது? விச்வம், விஷ்ணு என்று சொல்லிக்கொண்டே வந்தோமானால் நரசிம்மனிடத்திலே தான் எல்லாம் போய் முடியும். சகஸ்ரநாமத்தில் முதன் முதலில் சொல்லப்பட்ட அவதாரம் எது என்றால் நரசிம்ம அவதாரம் தான்.


சகஸ்ரநாமத்தின் நடுவிலும் நரசிம்மனே பேசப்படுகிறான். நரசிம்மன் இருக்கிற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயரும் நின்று கொண்டிருக்கின்றான். நரசிம்மனை பார்த்து ஸ்ரீ நரசிம்ஹாய நம என்று ஒரு புஷ்பத்தை போட்டு அர்ச்சனை செய்து அவனை தியானம் செய்தால் எல்லா பிரம்ம வித்தையும் கிடைத்த பலன் நமக்கு உண்டாகும். அனைத்து பிரம்மவித்தைகளின் நிலைகளும் அந்த பரமாத்மா தான்.


யார் தன்னை உபாசிக்கிறார்களோ அவர்களுக்கு பலனை கொடுக்கக்கூடியவன் நரசிம்மன். அடித்த கை பிடித்த பெருமாள் என்று பெயர் அவனுக்கு. எங்கடா என்று அடித்துக் கூப்பிட்டால் இதோ என்று வந்து நம் கையை பிடித்துக்கொள்வான். வேறு எந்த அவதாரத்திலாவது இந்த அதிசயம் உண்டா..

யார் யாரைப் பூஜிப்பது?

பகைவனை வெல்ல - காளியை வழிபடவும்.


செல்வம் விரும்பினால் - சண்டியைப் பூஜிக்கவும்


அரசர்களை மயக்க - சாம்பவி பூஜை செய்யவும்


இன்னல், எளிமை அகல - துர்க்கையை வழிபடவும்


போரில் வெற்றிபெற - துர்க்கையை வழிபடவும்


கொடும் பகைவனை அழிக்க - துர்க்கையை வழிபடவும்


மறுமையில் நன்மை பெற - துர்க்கையை வழிபடவும்


மனவிருப்பம் நிறைவேற - சுபத்திரையை பூஜிக்கவும்.


நோய் விலக - ரோகிணியை வணங்கவும்.

எட்டு வித செல்வங்கள்

மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் எட்டு வித செல்வங்களுக்கு மகாலட்சுமி அதி தேவதையாகும். மகாலட்சுமியின் எட்டு விதமான தோற்றத் உருவங்களை, முழுமையான பக்தியோடு வழிபடும் எவரும் மகாலட்சுமியின் அருளால் இன்பமும் மகிழ்ச்சியும் இழையோடும் எட்டு விதமான அஷ்ட போக வாழ்க்கையைப் பெறுவார்கள். அவை வருமாறு:-


1.குடும்பத்தில் அன்பும், பண்பும், அழகும் கொண்ட, கணவன்-மனைவி அமைவார்கள்.


2.மன உல்லாசத்துக்கு ஆதாரமாக விளங்கும் சிறந்த உடைகளைப் பெறுவார்கள்.


3.அழகு மிளிரும் அணிகலன்களை அடைவார்கள்.


4.ருசி மிளிரும் உணவு வகைகள் கிடைக்கும்.


5.நலன் தரும் தாம்பூல வகைகள் குறைவில்லாமல் கிடைக்கும்.


6.அற்புதமான நறுமணப் பொருள்களைப் பெறுவார்கள்.


7.மனத்திற்கு மகிழ்ச்சியூட்டும் இன்னிசை.


8.மன உல்லாசத்துக்கு உதவும் மண மலர்கள் கிடைக்கும்.


இந்த எட்டு போகங்களும் முழுமையாக அமையப் பெற்றதுதான் உயர்ந்த வாழ்க்கை

நவராத்திரிக்கு பூஜிக்க வேண்டிய மலர்கள்

ஒவ்வொரு அம்பிகைக்கும் உகந்த மலர்கள் உள்ளன. அவற்றைத் தேர்ந்தெடுத்து பூஜித்தல் அவசியம்.


முதல் நாள்: வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை மலர்களால் மகேஸ்வரியை அர்ச்சிக்க வேண்டும்.


இரண்டாம் நாள்: மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்வது நலம் பயக்கும்.


மூன்றாம் நாள்: மருக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.


நான்காம் நாள்: ஜாதிமல்லி மற்றும் மணமுள்ள மலர்களால் அர்ச்சனை செய்யவும்.


ஐந்தாம் நாள்: முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது உகந்தது.


ஆறாம் நாள்: செம்பருத்தி மற்றும் சிவந்த நிறமுள்ள மலர்கள்.


ஏழாம் நாள்: மல்லிகை, முல்லை போன்ற சுகந்த மணமுள்ள மலர்களால் அர்ச்சிப்பது விசேஷம்.


எட்டாம் நாள்: ரோஜா போன்ற சுகந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.


ஒன்பதாம் நாள்: செந்தாமரை மற்றும் வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் வளம் பெருகும்.

நவராத்திரியில் படைக்க வேண்டிய பிரசாத முறைகள்


நவராத்திரியின் 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும்.

முதல் நாள்:-


காலை: பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதத்தை பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும், இன்னல் கள் தீர்ந்து இன்பம் சேரும்.


மாலை: செவ்வாய்க்கிழமையாக அமைந்துள்ளதால் செவ்வாயான அங்காரகனுக்கும், துர்க்கைக்கும் உகந்த தான சிவப்பு காராமணி சுண்டலை வினியோகிக்கலாம்.


இரண்டாம் நாள்:-


காலை: தயிர் சாதம் பிரசாதம், இதன் மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம்.


மாலை:
புதன்கிழமையாதலால் புத பகவானுக்குகந்த பாசிப்பருப்பை சுண்டலாக நிவேதனம் செய்து தாம்பூலத்துடன் அளிக்கலாம்.


மூன்றாம் நாள்:-


காலை: தேங்காய் சாதத்தை பிரசாதமாக வழங்குவது சிறந்தது. இதனால் கவலைகள் நீங்கி செல்வம் பெருகும். எதிர்ப்புகள் விலகும்.


மாலை: வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்தது. கொண்டைக்கடலை சுண்டல் விநியோகிக்கலாம்.


நான்காம் நாள்:-


காலை: எலுமிச்சை சாதத்தை பிரசாதமாக அளிக்கலாம். இதனால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும்.


மாலை: வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானுக்காக அரிசியுடன் வெல்லம், தேங்காய் சேர்த்து அரிசிப்புட்டு செய்து தாம்பூலத்துடன் அளிக்கலாம்.


ஐந்தாம் நாள்:-


காலை: வெண்பொங்கலை பிரசாதமாகக் கொடுப்பது உகந்தது. இதன் மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும்.


மாலை: இது தவிர நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் கொடுப்பது நல்லது.


ஐந்தாம் நாள்:


சனிக்கிழமையாக அமைவதால் சனிபகவானுக்கு கருப்பு கொண்டைக்கடலை சுண்டல் செய்யலாம்.


ஆறாம் நாள்:-


காலை: புளியோதரையை பிரசாதமாகக் கொடுக்கலாம். இதன் மூலம் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும்.


மாலை: ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவானுக்காக கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு, போன்றவற்றை தாம்பூலத்துடன் கொடுக்கலாம்.


ஏழாம் நாள்:-


காலை: சர்க்கரைப் பொங்கல், இதனால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும், பொருளாதார முன்னேற்றம் ஏற்பாடும்.


மாலை: சந்திரபகவானுக்காக அரிசி கலந்த தேன் குழல், தட்டை முதலியவற்றை தாம்பூலத்துடன் கொடுக்கலாம்.


எட்டாம் நாள்:-


காலை: பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, ஆகியவை சேர்ந்த பருப்பு பாயசத்தை, உடையுடன் நிவேதனம் செய்ய வேண்டும். கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம்.


மாலை: மாலையில் நவதானியம் சுண்டல் கொடுக்கலாம்.


ஒன்பதாம் நாள்:-


காலை: சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசலை நிவேதனம் செய்யலாம்.


மாலை: கருப்பு கொண்டைக்கடலை சுண்டலுடன் தாம் பூலத்துடன் கொடுக்கலாம்.

விளக்குத்திரியின் பலன்கள்

1. பஞ்சுத்திரி- வீட்டில் மங்கலம் நிலைக்கும்.


2. தாமரைத்தண்டுத்திரி- முன்வினைப் பாவம் நீக்கும். செல்வம் தரும்.


3. வாழைத்தண்டுத்திரி- தெய்வ குற்றம் நீக்கி மனச் சாந்தி தரும். புத்திரபேறு உண்டாகும்.


4. வெள்ளெருக்கன் பட்டைத் திரி- வறுமையைப் போக்கும். கடன் தொல்லை தீரும். பெருத்த செல்வம் சேரும்.


விளக்கேற்றும் திசைகள்:


1 வடக்குத்திசை தொழில் அபிவிருத்தி. செல்வம் சேரும்.


2. கிழக்குத்திசை- சகல சம்பத்தும் கிடைக்கும்.


3. மேற்குத்திசை- கடன்கள் தீரும். நோய் அகலும்,


4. தெற்குத்திசை- இந்த திசையில் தீபம் ஏற்றக் கூடாது.

நவராத்திரி கன்னி பூஜை பலன்கள்

நவராத்திரி ஒவ்வொரு நாளும் கன்னிகையர்களை பூஜிக்க வேண்டும். இரு வயது முதல் 10 வயதுக்கு உட்பட்ட கன்னியர்களே இந்தப் பூஜைக்கு உரியவர். இக்கன்னியர்களுக்கு குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சண்டிகா, ஸாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்று பெயர் சூட்டி ஸ்ரீரஸ்து, ஸ்ரீயுக்தம் என்ற சொற்களை முதலாகக் கொண்ட மந்திரங்களைக் கூறி பூஜிக்க வேண்டும். ஒவ்வொரு கன்னி பூஜைக்கு ஏற்ப நமக்கு பலன்கள் கிடைக்கும்.


1. குமாரியைப் பூஜிப்பதால் வறுமை நீங்கும். பகை விலகும். ஆயுள் விருத்தியாகும். செல்வச் செழிப்பு உருவாகும்.


2. திரிமூர்த்தியைப் பூஜிப்பதால் தன, தானிய விருத்தி, தர்ம சிந்தனை விருத்தி, புத்திரா புத்திரி விருத்தி ஏற்படும்.


3. கல்யாணியைப் பூஜிப்பதால் கல்வியில் வெற்றி, அரச போகம் கிட்டும்.


4. ரோகிணியைப் பூஜிப்பதால் வியாதிகள் தீரும்.


5. காளியைப் பூஜிப்பதால் பகை தீரும்.


6. சண்டிகையைப் பூஜிப்பதால் செல்வம் சேரும்.


7. சாம்பவியைப் பூஜிப்பதால் வெற்றி கிட்டும், வறுமை அகலும், ராஜ சம்போகம் கிட்டும்.


8. துர்க்கையைப் பூஜிப்பதால் பகைவர் அழிவர். செய்ய முடியாத காரியங்கள் செய்யக் கூடியதாக மாறும்.


9. சுபத்திரையைப் பூஜிப்பதால் மங்களம் உண்டாகும். மன நிம்மதி கிட்டும். லட்சியம் நிறைவேறும்.

Friday, October 7, 2011

தியானம்

தியானம் செய்வதனால் உடலில் ஏற்படுகின்ற கோபம், ஆணவம், பிடிவாதம், பற்றின்மை, அமைதியின்மை போன்றவை விலகி நம்மை நிம்மதிபடுத்துகின்றன. மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது. உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம். வட திசையும், கிழக்கு திசையும் சிவனாகவே கருதப்படுவதால், இத்திசைகள் சிறப்பானவை. எனவே கிழக்கு, வடக்கு என இரு திசைகளைப் பார்த்தே தியானம் செய்ய வேண்டும். வடதிசையில் வீசும் காந்தக் கதிர்கள் மூளையை பாதிப்படைய செய்யும் என்பதால், அத்திசையில் தலை வைத்து தூங்கவோ, உணவு உண்ணவோ கூடாது.
தியானம் செய்தால் நாம் பல நன்மைகளை அடைகின்றோம். ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரித்து, மன உளைச்சல், மன அழுத்தம் நீங்குகிறது, அலைபாயும் மனம் அமைதியடைகிறது, சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது,நோய் இன்றி பெரு வாழ்வு கிடைக்கிறது, மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது,உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது. பொறுமை, விடாமுயற்சி தான் தியானத்தில் வெற்றி பெற ஒரே வழி.

ஆன்மிக கதை-இனியாவது திருந்த முயற்சி பண்ணுங்க

இப்போதெல்லாம், அதிகாரிகளிடம் காசு பணம் இல்லாட்டி பேசவே முடிவதில்லை. எதுக்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கிறாங்க. திருட்டு புத்தியால் ஒரு அதிகாரி மாட்டிகிட்ட கதையைக் கேளுங்க!
ஒரு திருடன், கோடீஸ்வரனாகி செட்டிலாக நினைத்தான். அவனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ""நீ இன்னும் பெரிய திருடனாக மாறி நிறைய சம்பாதிப்பாய்,'' என ஆசிர்வதித்தாள்.
திருடனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அதே நேரம் மகனிடம்,""எனக்காக ஒன்று செய்வாயா?'' என்றாள்.
""என்ன!'' என்ற அவனிடம், ""பொய் சொல்லமாட்டேன் என உறுதி கொடு,'' என்றாள். இவனும் சத்தியம் செய்து கொடுத்து விட்டான். அம்மா இறந்து போனாள்.
அடுத்த சில நாட்களிலேயே அரண்மனை கஜானாவில் திருடச் சென்றான். வழியில் குதிரையில் வந்த ஒருவனைப் பார்த்தான். ""எங்கே போகிறாய்?'' என்றான். பொய் சொல்வதில்லை என்ற சத்தியம் செய்திருந்ததால், திருடப்போகும் விஷயத்தை மறைக்காமல் சொன்னான்.
வந்தவன் அவனிடம், ""அப்படியானால், நானும் வருகிறேன். திருடுவதில் ஆளுக்குப் பாதி,'' என்றான். திருடன் ஒப்புக்கொண்டான்.
கஜானாவிற்கு சென்ற அவர்களில், குதிரையில் வந்தவன் வெளியே நின்று யாரும் வருகிறார்களா என்று கண்காணிக்க, திருடன் உள்ளே புகுந்து ஒரு பெட்டியை உடைத்தான். மூன்று வைரக்கற்களை எடுத்தான். வைரக்கல்லை உடைத்து ஒன்றரை வீதம் பங்கு வைத்தால் சரியாக இருக்காது என்பதால், இரண்டை எடுத்து வந்தான். ஆளுக்கொன்றாக பிரித்துக் கொண்டு போய்விட்டனர்.
மறுநாள் விஷயம் வெளியாக மந்திரி கஜானாவிற்கு சென்றார். ஒரு கல் மட்டும் இருந்தது. ஆசையில், அதை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்ட அவர், மூன்றுமே திருட்டு போய்விட்டதாக மன்னனிடம் சொல்லிவிட்டார்.
திருடன் கைது செய்யப்பட்டான். பொய் சொல்வதில்லை என சத்தியம் செய்திருந்ததால் நடந்த உண்மையை விசாரணையின் போது சொல்லிவிட்டான்.
மன்னனும் அவனிடம்,""நீ சொல்வது உண்மையே. அன்று குதிரை மீது திருடன் போல் வேடமிட்டு வந்தது நான் தான். நீ இரண்டு கல்லை எடுத்து ஒன்றை என்னிடம் கொடுத்து விட்டாய். இன்னொன்றை இந்த மந்திரி எடுத்து ஒளித்து வைத்ததும் எனக்கு தெரியும்,'' என்றவன் மந்திரியை சிறையில் தள்ளினான். திருடனின் உண்மைத் தன்மையைப் பாராட்டி மந்திரியாக்கி விட்டான்.
தப்பு செய்யும் அதிகாரிகள் மாட்டும் காலம் வரும்! இனியாவது திருந்த முயற்சி பண்ணுங்க சாமி!

ஆன்மிக கதை

பயம் தான் அனைத்துக் குற்றங்களுக்கும் ஆணி வேராகிறது. பயத்தில் தான் பொய் சொல்லும் வழக்கம் உருவாகிறது.
ஒரு மன்னர் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்தார். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு "புத்திமான்' என்ற பட்டமும், பத்தாயிரம் பொற்காசு பரிசு என்றும் அறிவித்தார்.
போட்டி இதுதான். மன்னர் மக்களுக்கு சில ஆடுகளை வழங்குவாõர். எல்லா ஆடுகளையும் நல்லமுறையில் வளர்க்க வேண்டும். மறுவருடம் ஆடுகளை அரண்மனையில் ஒப்படைக்கும் போது, எடை கூடவோ, குறைந்திருக்கவோ கூடாது. இதுதான் போட்டி. மக்களும் ஆர்வமாக போட்டியில் பங்கேற்றனர்.
அடுத்த ஆண்டில் ஆடுகள் எடை போடப்பட்டன. எல்லா ஆடுகளும் ஏதோ ஒரு வகையில் பெருத்தோ, எடை குறைந்தோ இருந்தன. கடைசியாக ஒரு இளைஞன் தனது ஆடுடன் வந்தான். அதை எடை போட்டால் இம்மியளவு பிசகாமல் அப்படியே இருந்தது.
""எப்படி ஆட்டின் எடையை சரியான அளவில் வைத்திருந்தாய்?'' என்றார் மன்னர். இதை தினமும் காட்டுக்கு கொண்டு செல்வேன். அங்கிருந்த வேடர்களிடம், ஒரு புலியைப் பிடித்து கூட்டில் அடைக்கும்படியும், அதன் முன்னால் இந்த ஆட்டைக் கட்டி வைத்து புல் போடும்படியும் செய்வேன். ஆடு சாப்பிட்டாலும், புலி பயத்தில் கிலி பிடித்து எடை கூடவே இல்லை,'' என்றான்.
ஆக, பயமுள்ளவன் தன் வாழ்க்கையில் முன்னேறவே மாட்டான். பயத்தை அறவே விடுவோமா!

ஆன்மிக கதை

கடவுள் என்பவர் யார்? மனிதர்களைப் போல இருப்பாரா? ஒளியாய் பிரகாசிப்பரா? கையில் அரிவாள், கத்தி, சூலம் வைத்திருப்பாரா? அவருக்கு இரண்டு கையா, நான்கா, எட்டா, பதினாறா அதற்கு மேலா! தலைகள் எத்தனை...' இப்படி பல குழப்பம் நீண்டகாலமாக இருக்கிறது. சரி...அவரை நேரில் பார்த்து விட்டால் சந்தேகம் தீர்ந்து விடுகிறது என்றால், கண்ணில் படவே மாட்டான் என்கிறார்.
கடவுளைக் காண வேண்டும் என்ற ஆவல் ஒரு மன்னனுக்கு ஏற்பட்டது. காட்டில் இருக்கும் முனிவர்களையெல்லாம் அரண்மனைக்கு அழைத்து வர உத்தரவு போட்டான். முனிவர்களும் வந்து சேர்ந்தனர்.
அவர்களிடம், ""நீங்கள் கடவுளுக்கு யாகம் செய்வதாக சொல்லிக்கொண்டு, அரண்மனையில் இருந்து ஏராளமாக நிதி பெறுகிறீர்கள். யாகத்தின் அவிர்பாகத்தை (பலன்) அவர் பெற்றுச் செல்வதாகச் சொல்கிறீர்கள். உங்களில் சிலர் கடவுளை நேரிலும் பார்த்ததாகச் சொல்கிறீர்கள். எனக்கும் அவரைப் பார்க்க ஆசை. இப்போதே, என்னை காட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். யாகபலனை கடவுள் வாங்க வரும்போது, அவரை என்னிடம் அறிமுகம் செய்து வையுங்கள்,'' என்றான். முனிவர்கள் திகைத்தனர். ஒருமுனிவர் மட்டும், ""மன்னா! கொஞ்சம் பால் கொண்டு வரச் சொல்,'' என்றார்.
ஒரு பாத்திரத்தில் பால் வந்தது. ""இதிலுள்ள வெண்ணெயை எடுத்து தா!''.
முனிவர் இப்படி கேட்கவும் மன்னன் அவரிடம், ""அதெப்படி முடியும்! இதை தயிராக்க வேண்டும், தயிரைக் கடைந்தால் பாலுக்குள் மறைந்திருக்கும் வெண்ணெய் வெளிப்படும்,'' என்றான்.
""இதே போல் தான் கடவுளும்..."வா' என்றால் உடனே வந்துவிட அவர் நமது வேலைக்காரர் அல்ல. முனிவர்கள் ஆன்மிகப்பயிற்சிகளின் மூலம் தங்கள் அகக்கண்களால் அவரைப் பார்க்கின்றனர். சிலர் இதில் தீவிரமாக மூழ்கி நேரில் காணும் பாக்கியம் பெறுகின்றனர். முயற்சி உள்ள ஒவ்வொருவனும் கடவுளைக் காண்பான்,'' என்றார்.

நவராத்திரவிரதம்

நவராத்திரவிரதம்

நவராத்திரவிரதம்புரட்டாதி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) நோன்பாகும். இது தட்சணாயண் காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.

நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றதுஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் (அனுஷ்டிக்கப்படும் ) நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.

மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான் அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்[

இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின்உள்ளுறையாகும்.

ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசை யன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூஜை தொடங்கவேண்டும். நறுமணமுள்ள சந்தனம், பூ (புஸ்பம்), இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், வடை, பாயாஸம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். புனுகு கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தணம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்யவேண்டும்.

குமாரி பூஜை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூஜைக்கு உரியவர்கள் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூஜிக்கப்படவேண்டும். பூஜிக்கப்படும் குமாரிகள் நோயற்றவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். குமாரிகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞசள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்.

நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.

ஆயலங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.

விரதம் கைக்கொள்ளுவோர் (அனுஷ்டிப்போர்) அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் பாரணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.

விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாரணையைப் பூர்த்தி செய்யலாம்.

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது[

விரதகாலங்களில் ஓதத்தக்க கேத்திரப்பாடல்கள்

  1. அபிராமி அந்தாதி
  2. இலட்சுமி தோத்திரம் (கனகதார தோத்திரம்)
  3. சகலகலாவல்லி மாலை
  4. சரஸ்வதி அந்தாதி

தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு,பிரம்மா (மும்மூர்த்திகள்)விடம், தேவர்கள் முறையிட்டிருக்கின்றனர்.

மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர். தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்கள், சண்டன்,முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, “யார் என்னை போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் மணப்பேன்என்றாள்.

அதற்கு சண்டனும், முண்டனும், “தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை. பெண்ணான நீ எம்மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வா…’ என்றனர். அதற்கு தேவி, “தெரிந்தோ, தெரியாமலோ, சபதம் செய்து விட்டேன். நீ போய் ராஜாவிடம் சொல். அவர்கள் எப்படி சொல்கின்றனரோ, அப்படியே நடக்கட்டும்…’ என்றாள்.இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும், இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி.அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். இவன் கடுந்தவம் செய்து, ஒரு வரம் பெற்றிருக்கிறான். இவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான்.

அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான். ரக்த பீஜனை தேவி அழிக்கத் துவங்கி, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றி,உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது. உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடிக்க வேண்டும் என்று ஆணையிட்டாள். சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து, இறந்து
விடுகிறான். இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி. முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது,நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது,வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.

பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினம்.நவராத்திரி பூஜையை நிறைய பேர் சேர்ந்து சமஷ்டி பூஜையாகச் செய்யலாம். எப்போதுமே கூட்டுப் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம்.நவராத்திரியின் போது காலையில் பூஜையை அனுஷ்டானங்களுடன் செய்ய வேண்டும். தேவி மகாத்மியத்தில் ஒவ்வொரு நாளுக்கும், ஒரு அத்யாயம் அல்லது குறிப்பிட்ட வழிமுறைப்படி பாராயணம் செய்ய வேண்டும்.முதல் மூன்று நாட்கள், துர்க்காஷ்டகமும், இரண்டாவது மூன்று நாட்கள், லட்சுமி அஷ்டோத்திரமும், மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதி அஷ்டோத்திரமும் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.பூஜைக்குப் பயன்படுத்தும் பூக்களில் வாடல், அழுகல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல், வெற்றிலையும் அழுகலோ அல்லது கோணலாகவோ இல்லாமல் தேர்வு செய்ய வேண்டும். பாக்கும் நல்ல பாக்காக இருக்க வேண்டும். ஏனென்றால், தேவிக்கு நாம் சிறப்பானதைத்தான் படைக்க வேண்டும். பூஜை செய்வது நம் வசதியைப் பொறுத்தது. பூஜை முடிந்த பிறகு, தினமும் ஒரு தம்பதிக்கு விருந்து படைக்கலாம் அல்லது ஒன்பது நாட்களில் ஏதாவது ஒரு நாள், இந்த விருந்து உபசாரத்தைச் செய்யலாம். இது செய்ய இயலாதவர்கள், சுமங்கலிக்கு ஒரு நாள் கண்டிப்பாக விருந்து உபசாரம் செய்வது அவசியம். அதே போல், ருது அடையாத கன்யா பெண்களையும் உபசரித்து, உணவளித்து, தாம்பூலம் கொடுக்க வேண்டும். வசதி குறைந்தவர்கள், குத்து விளக்கையே தேவியாக நினைத்து பூஜை செய்து, தம்மால் முடிந்ததை நிவேதனம் செய்து, யாராவது ஒருவருக்கு, மனதார தாம்பூலம் கொடுத்தாலே, பூஜையின் முழுப் பலனும் கிடைக்கும். மூல நட்சத்திரத்தன்றே சரஸ்வதியை ஆவாஹனம் செய்ய வேண்டியது முக்கியம். சரஸ்வதியை விக்ரக வடிவத்திலோ அல்லது புஸ்தக வடிவத்திலோ ஆவாஹனம் செய்யலாம்.ஆத்மார்த்தமாக, மனம் ஒப்பி பூஜை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் நமக்கு தேவிதான் கொடுக்கிறாள்.அவளுக்குச் செலுத்தும் சிறு நன்றிதான் இந்த நவராத்திரி பூஜை.









கொலு‌வி‌ல் ஒன்பது படிகள் அமை‌ப்பத‌ன் நோ‌க்க‌ம்
நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.



கொலு வைப்பது குறித்து பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளதை இங்கே காணலாம்.
தன் எதிரிகளை வெற்றிக் கொள்வதற்காக மகாராஜா சுரதா குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்கிறார்.
குரு கூறியபடி பரிசுத்தமான ஆற்று மணலைக் கொண்டு காளிரூபத்தை செய்கின்றான். அதை காளியாக அலங்கரித்து, தெய்வத்தின் மீது பற்றுடன் உண்ணா நோன்பிருந்து மனதாலும் மெய்யாலும் வேண்டுகிறான்.
அம்பிகை அவன் வேண்டுதலை பூர்த்தி செய்து அரக்கர்களையும், பகைவர்களையும் அழித்துப் பின் ஒரு புதுயுகத்தினையே உண்டு பண்ணுகிறாள்.



புராணத்தில், ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையினால் என்னைப் பூஜித்தால் நான் உனக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்கிறாள் அம்பிகை தேவி
இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனை பூஜிக்கிறோம்.