Saturday, February 28, 2015

நீங்கள் மனசு வைத்தால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள்

நீங்கள் மனசு வைத்தால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள்
பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு. பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில், உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில் வைக்க முடியா விட்டால், அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லி விட்டால் போதும். ஒருவர், அப்படி பூஜை செய்த போது, இல்லாத பொருளுக்கெல்லாம், அதன் பெயரைச் சொல்லி, அட்சதாம் சமர்ப்பயாமி என்று 
சொல்லிக் கொண்டே பூஜையை முடித்து விட்டார். பூஜை செய்பவர், சாஸ்திரிகளுக்கு தட்சணை கொடுக்க வேண்டும்.
இவர்தான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதை போதும் என்று சொல்லி இருக்கிறாரே... பூஜை முடிந்ததும், தட்சினார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமி என்று சொல்லி, தட்சணைக்கு பதிலாக, அட்சதையை நீட்டினாராம், பூஜை செய்தவர். என்ன இது? தட்சணை எங்கே... என்றார் சாஸ்திரிகள். அதுதான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதையே போதும் என்றீர்களே... பிடியுங்கள் அட்சதையை... என்றார்.
பூஜையின் போது, தூபம், தீபம், விபூதி, கண்ணாடி, குடை, சாமரம், விசிறி இவைகளை சமர்ப்பணம் செய்வது வழக்கம். தூபத்தில் அக்னி தேவன், தீபத்தில் சிவன், விபூதியில் மகேஸ்வரன், கண்ணாடியில் சூரியன், குடையில் சந்திரன், சாமரத்தில் மகாலட்சுமி, விசிறியில் வாயுதேவன் உள்ளனர். அதனால், இந்த உபசாரங்களோடு பூஜை செய்ய வேண்டும். நைவேத்யத்தின் போது முத்திரை காட்டுவது, துர்தேவதைகளை விரட்டி விடும். எல்லாருமே, மகாலட்சுமி நம் வீட்டுக்கு வர வேண்டும், என்று தான் விரும்புவர். சிலர், மகாலட்சுமி படம் பேட்ட காலண்டரை வாங்கி வந்து, பூஜை அறை அல்லது ஹாலில் மாட்டி திருப்திப்படுவர். விடியற்காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை தரிசனம் செய்தால் நல்லது என்பதற்காக, சிலர், படுக்கை அறையிலும் மாட்டி வைப்பர்.
இல்லத்தரசியானவள், காலையில் எழுந்து பல் விளக்கி, குளித்து, நெற்றிக்கிட்டு, தலையை கோதி, வாசல் பெருக்கி, கோலமிட்டு, வீட்டுக்குள் வந்து சுவாமி படத்துக்கு முன் விளக்கேற்றி, நமஸ்காரம் செய்து, முடிந்தால் இரண்டு பூவை போட்டு, அதற்கு பின் தான், காபி விஷயத்தை கவனிக்க வேண்டும். அத்துடன், வீட்டில், வேத கோஷம், துதிப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். வீட்டில் மூலைக்கு மூலை குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது. காலையில், முடிந்தால், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது புண்ணியம். வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும், கன்றுக்கும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வலம் வருவது பெரிய புண்ணியம். வீட்டில் ஆச்சார அனுஷ்டானங்கள் இருந்தாலே, மகாலட்சுமி வாசம் செய்வாள். மனசு வைத்தால், இதையெல்லாம் செய்யலாம்.

Friday, February 27, 2015

பெரியார் கடைசிவரை... பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

பெரியார் கடைசிவரை... பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!
( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)...
நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.
சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.
இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.
எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.
உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்
சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !
அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...
என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கை' உண்டு.
என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.
நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !
கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.
இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..
இது என்ன பூ எனக்கேட்டால்
அதன் பெயரை சொல்லலாம்..!
நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..
அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!
கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்-laxmi narayanan

திருமணம் செய்தால் தேர் பார்த்தல் தவறு

திருமணம் செய்தால் தேர் பார்த்தல் தவறு கடந்த தப்பாக எண்ணுவதுடன்
கருத்தரித்த பெண்ணாக இருந்தால் எந்த காரணம் கொண்டும் தேர் பார்த்தால் ?
கருவில் இருக்கும் குழந்தை கருவிலே அழிந்து விடும் என்று முட்டாள்தனமாக மிரட்டிய சமுதாயத்திற்கு பதிவு செய்கின்றேன்!!
காரணம்..?
அன்று அவை பொய் என்பதை உறுதிப்படுத்தி- இன்று நான் ஒரு குழந்தைக்கு தந்தை என்பதை முன்னோர்களது முட்டாள்களோடு பின் பற்றும் உள்ளங்களுக்கு அறிவிக்கின்றேன்.
இறைவன் அழிப்பது தீயவரையே தவிர - நல்ல உள்ளங்களது செயலை அல்ல.!!!

Thursday, February 26, 2015

நாமக்கட்டி பூமிக்கு வந்த கதை!

நாமக்கட்டி பூமிக்கு வந்த கதை!
பெருமாளை வணங்குபவர்கள் நெற்றியில் திருநாமம் இடுகின்றனர். இந்த நாமக்கட்டி பூமிக்கு வந்த வரலாறு தெரியுமா?
வேதகால மகரிஷியான கஷ்யபருக்கும், அவரது துணைவி விநதைக்கும் பிறந்தவர் கருடன். தன் அன்னையின் பெயரால் வைநதேயன் என அழைக்கப் பட்டார். ஒருசமயம், விநதை தன் சக்களத்திக்கு அடிமையாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடிமைத்தளை தீர வேண்டுமானால், தேவலோகம் சென்று அமுதக்கலசத்தைக் கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார் கருடன். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்று, அன்னையை விடுவித்தார். இவரது அசாத்திய வலிமை கண்ட விஷ்ணு, இவரைத் தனக்கு வாகனமாக்கிக் கொண்டார். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்த கிரீடாசலத்தை பூலோகத்திற்கு கொண்டு வந்து திருப்பதி ஏழுமலையை உருவாக்கியவர் கருடன். அதில் கருடனின் பெயரால் கருடாத்ரி என்றொரு மலையும் உண்டு. ராவணனின் மகனான இந்திரஜித், லட்சுமணன் மீது நாகபாசத்தைத் தொடுத்தான். லட்சுமணன் அதில் கட்டுண்டு கிடந்தபோது, கருடன் அவரைக் காப்பாற்றினார். திருப்பாற்கடலின் மத்தியிலுள்ள சுவேதத் தீவிலிருந்த பாற்கட்டிகளை பூலோகத்திற்கு கொண்டு வந்ததும் கருடனே! இந்தக்கட்டியே சுவேதமிருத்திகை என்னும் நாமக்கட்டியாக பயன்படுகிறது.

ஓம் தேங்காய் உடைக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

ஓம் தேங்காய் உடைக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.
ஸ்கந்தபலா,க்ஷீரபலா ,பரசுராம சுபம் சுபம் சுபம்

மருதாணி இடும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம்.

. மருதாணி இடும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம்.
யாதேவீ சர்வ பூதேஷு கியாதி ரூபேண சமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ:

அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும்.


1. பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம். இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது. மாலைநேரத்திலும், ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது. இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம். அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும். எனவே, உங்கள் தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்

Tuesday, February 24, 2015

கால்களுக்கு கவனிப்பைக் கொடுத்தால், உடலின் எல்லாப் பாகங்களும் செம்மையாகும்

கால்களைக் கண்களைப் போல் பாதுகாத்தால்,....!!!
திரும்பத் திரும்ப கால்கள், கால்கள் என்று சொல்கிறாரே என்று பார்க்காதீர்கள். கால்களைச் சரிவரக் கவனித்தால், உடம்பின் ஒட்டுமொத்த பாகங்களையும் கவனித்துக்கொண்ட மாதிரி! காரணம், நம்முடைய கால்களுக்கும் உடம்பின் அனைத்துப் பாகங்களும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
பாதங்களின் ஒவ்வொரு பகுதியையும் இதமாகப் பிடித்துவிடுகிறோம்; விரல்களைச் சொடுக்கெடுத்து, மென்மையாக வருடிக் கொடுக்கிறோம். முதுகின் தண்டுவடப் பகுதிகளுக்கும் ஒத்தடம் கொடுப்பது போல், கைகளைக் கொண்டு தடவிக் கொடுக்கிறோம்.
இவையெல்லாம் என்னென்ன நன்மைகளை நமக்குத் தருகின்றன தெரியுமா?
காலின் கட்டைவிரலில் ஆணிக்கால் வருகிற இடத்தின் மையப்பகுதி, தலை, சைனஸ், கழுத்து, தைராய்டு எனப்படும் சுரப்பிகளுடன் தொடர்புகொண்ட பகுதி.
சுண்டுவிரலின் கீழ்ப்பகுதி, கைப்பகுதிகளுடனும் அதையடுத்த பகுதி தோள்பட்டைகளுடனும் தொடர்புகொண்டது.
பாதத்தின் விரல்களில் இருந்து முக்கால் பகுதிக்கு வந்துவிட்டால், பெருங்குடல் மற்றும் மலக் குடல் ஆகியவற்றுடன் சம்பந்தம் கொண்டதாகிவிடுகிறது. இவை வலது பாதத்துக்கானது!
இடது பாதத்தின் நான்கு விரல்களுக்கும் கீழுள்ள பகுதி, நுரையீரல் மற்றும் இதயத்துடன் தொடர்பு கொண்டது. பாதத்தின் நடுப்பகுதி, வயிறு மற்றும் மண்ணீரலுடன் சம்பந்தம் கொண்டிருக்கிறது. பாதத்துக்கு மேலேயுள்ள மணிக்கட்டு, கருப்பை, பிறப்புறுப்பு, கீழ் இடுப்பு, நிணநீர்ச் சுரப்பி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது.
பாதங்களில் செய்யப்படுகிற பயிற்சிகளால், கால்கள் பலம் அடைகின்றன. வயிற்றின் எல்லாப் பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீரடைகிறது. கீல் வாதம், கணுக்கால் வீக்கம், முழங்கால் வலி, குடைச்சல், நரம்பு வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்.
முதுகெலும்பை வருடிக்கொடுப்பதன் மூலம், அதிலிருந்து புறப்படும் நரம்புகள் புத்துணர்சி பெறுகின்றன. மூத்திரக்காய் மற்றும் அடிவயிற்றுப் பகுதியின் இயக்கம் சீரடைதல் எனச் செயல்பாடுகள் செவ்வனே அமைகின்றன.
உடலின் முக்கியமான உட்பகுதிகளான இதயம், சுவாசப் பைகள், குடல், மூளை, சுரப்பிகள் போன்றவை சுறுசுறுப்புடன் செயல்படத் துவங்குகின்றன. செரிமானக் கோளாறு என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலை ஏற்படும்.
மலச்சிக்கல் இருந்தால் மனச்சிக்கல் இருக்கும்; மனச்சிக்கல் இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும் என்பார்கள். எனவே, மலச்சிக்கலில் இருந்து விடுபட்டால், உடலின் எந்தப் பகுதியிலும் சிக்கல் ஏதும் வராமல் தடுத்துவிடலாம்.
ஆக, கால்கள் குறித்து அதிகக் கவனம் செலுத்துவது நல்லது. கால்கள்தானே என்று கால்வாசி, அரைவாசி ஈடுபாட்டை மட்டும் காட்டினால், அவை முழுவதுமான பயன்களை நமக்கு வழங்காது. அரைகுறையாகச் செயல்பட்டதை 'பாதிக் கிணறுதான் தாண்ட முடிஞ்சுது’ என்று சொல்வோம், இல்லையா? அப்படி பாதிக் கிணறு தாண்டினால், முடிவு... அந்தக் கிணற்றிலேயே விழவேண்டியதுதான். எனவே, முழுமையான செயல்பாடு ரொம்ப முக்கியம்.
அன்பர்களே! கால்களைக் காதலியுங்கள்; உங்கள் குழந்தைகளைப் போல் நல்லவிதமாகப் பராமரியுங்கள்; உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் காட்டுகிற கனிவையும் அன்பையும் கால்களிடமும் காட்டுங்கள்.
கால்களைக் கண்களைப் போல் பாதுகாத்தால், அது ஆபத்துக் காலங்களில் நம்மைக் கை கொடுத்துக் காப்பாற்றும் என்பதை மறந்துவிடாதீர்கள்!
அடுத்து... வஜ்ராசனம் பற்றிப் பார்ப்போம்.
இந்தப் பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்னதாக ஒரு விஷயம்.
எந்தவொரு ஆசனத்தையும் குருவின் உதவியோடு செய்வதே உத்தமம். ஒரு விஷயத்தைக் கட்டுரையாகச் சொல்வது எளிது. உரிய படங்களைக் கொண்டு அந்தக் கட்டுரையை விளக்கிவிடலாம். ஆனால், கட்டுரையையும் படங்களையும் வைத்துக்கொண்டு, ஆசனப் பயிற்சிகளில் ஈடுபடுவது அத்தனை சரியல்ல!
கொஞ்சம் பிசகினாலும் உடலில் சிக்கல்கள் வந்துவிடும்; நூலிழை தவறினாலும், நொந்துகொள்ள நேரிடும். ஆகவே, குருவின் உதவி மிக மிக அவசியம்.
''போன வருஷம் வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன். இப்ப, ஆறு மாசமா திடீர்னும் தொப்பை போட்ருச்சு. போன தீபாவளிக்கு எடுத்த பேன்ட்டைக்கூட போட்டுக்க முடியலை. வேகமாக நடக்கமுடியலை; ஒரு பத்தடி தூரம் ஓடி, பஸ்ஸைப் பிடிக்க முடியலை; ரெண்டு மாடி ஏறினாலே மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்குது!'' என்று அலுத்துக்கொண்ட ஓர் அன்பர், தொப்பையால் உடல்ரீதியாக மட்டுமின்றி, மனரீதியாகவும் தனக்கு நேர்ந்துள்ள பிரச்னைகளை விவரித்தார்.
உணவின் மீது கவனம் வைத்தாலே நம்மில் பலரும் தொப்பையில் இருந்து மீண்டுவிடலாம்; உடலின் மீதும் கவனம் வைத்தால், தொப்பை எனும் தொந்தரவு வரவே வராது!
ஆனாலும், அவை குறித்து ஆழ்ந்து யோசிக்காமல், தொப்பை வளர்ந்து, பூதாகரமாக இருக்கிற வேளையில், நொந்துகொள்வதும், நொறுங்கிப்போவதும், மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிப்பதும் ஏன்?
சரி, கவலையை விடுங்கள்! தொப்பை போன்ற பல பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கு, வஜ்ராசனம் பேருதவி செய்கிறது. இந்தப் பயிற்சியை மேற்கொள்ளத் துவங்கிவிட்டால், உடலில் ஏற்படுகிற மாற்றத்தையும் புத்துணர்ச்சியையும் நம்மால் மிக எளிதாக உணரமுடியும்.
வஜ்ராசனப் பயிற்சியில் எவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ, அவர்களுக்குத் தைராய்டு பிரச்னை போன்ற உபாதைகள் வர வாய்ப்பே இல்லை. தொப்பை என்பது வயிற்றில் வருவது மட்டுமே! ஆனால், தைராய்டு பிரச்னை என்பது கைகள், கழுத்து, முகம் எனப் பல இடங்களில் பரவி, நம்மை மிகப் பருமனானவராகக் காட்டக்கூடியது!
ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாவதற்கும், குண்டாக உள்ளவர்கள் ஒல்லியாக இருப்பதற்கும் ஆசைப்படுகின்றனர். உலகின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று!
கால்கள் வேர்கள் ( வேதாத்திரி மகரிஷி ) part = 2
'சுவாமி, உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கும்போது, கால்களுக்கு மட்டும் ஏன் இத்தனைக் கரிசனம் காட்டச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் அன்பர் ஒருவர்.
அவரே தொடர்ந்து... ''அலுவலகத்திலோ வீட்டிலோ ஏதேனும் வேலை செய்யும் போதெல்லாம் கைகளைத்தான் பயன்படுத்து கிறோம். மின்விசிறிக்குக் கீழே அமர்ந்து செய்கிற வேலையாக இருந்தாலும் சரி, மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பல ஏரியாக்களில் அலைவதாக இருந்தாலும் சரி... கால்களுக்குப் பெரிய வேலை எதுவுமே இல்லியே?! கண்கள் கவனமாகப் பார்க்கின்றன; முன்னேயும் பின்னேயும் பக்கவாட்டிலும் வருகிற மற்ற வாகனங்களுக்குத் தக்கபடி வண்டியைச் செலுத்தவேண்டும் என எந்நேரமும் புத்தி விழித்துக்கொண்டு செயல்படுகிறது. மனம், புத்தி, கண்கள் ஆகியன ஒன்று சேர்ந்து ஒரே எண்ணத்துடன் பணியாற்றுகின்றன. அதேபோல், வண்டியை பேலன்ஸ் செய்து ஓட்டுவதற்குத் தோதாக, நம் முதுகு நிமிர்ந்தும் வளைந்தும் செயல்பட்டபடி இருக்கிறது. கைகள் ஹேண்டில்பாரைப் பற்றியிருக்கின்றன. அப்படியிருக்க... கால்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கவனம் செலுத்தவேண்டும்? இத்தனைக் கரிசனம் எதற்காக?'' என்றார்.
உடனே அங்கிருந்த மற்ற அன்பர்கள், அவரைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தனர். கைகளை உயர்த்திச் சிரிப்பை நிறுத்தினேன். ''ஏன் சிரிக்கிறீர்கள்? அவரது சந்தேகம் நியாயமானது! நீங்கள் இப்படிச் சிரித்தால், உங்களில் வேறு சிலரின் இதுபோன்ற சந்தேகங்கள் கேட்கப்படாமலே போகலாம்; விடைகள், வினாக்களுக்காக ஏங்கித் தவிக்கும்'' என்று சொல்லிவிட்டு, அந்த அன்பரைப் பார்த்தேன்.
''நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். ''ஆமாம்'' என்றார். ''நிம்மதியாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கும் ''ஆமாம்'' என்றார். ''சரி, மிகப் பெரிய சந்தோஷமும் நிம்மதியும் எப்போது, எதனால் கிடைப்பதாக உணர்கிறீர்கள்?'' என்று கேட்டேன். சற்றே யோசித்தவர், ''ஆபீஸ் செல்வதற்குப் புதிதாக பைக் வாங்கினேன். இப்போது ஆபீஸ் சென்று வருவது சுலபமாக, சுகமாக இருக்கிறது, சுவாமி!'' என்றார். தொடர்ந்து, ''என் மகன் ஆசைப் பட்டபடி, அவனை இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறேன். இதைவிட வேறென்ன நிம்மதி வேண்டும்?'' என்றார். பிறகு அவரே, ''என் மனைவிக்குச் சமீபத்தில் தங்க வளையல் வாங்கித் தந்தேன். அவளது முகத்தில் அப்படியரு பிரகாசம்!'' என்று வெட்கத்துடன் தெரிவித்தார். ''அவ்வளவுதானா? இன்னும் இருக்கிறதா?'' என்று புன்சிரிப்புடன் கேட்டேன்.
''கிராமத்தில் உள்ள என் அப்பாவின் குடை, கிழிந்து, கம்பிகள் உடைந்துவிட்டன. அதேபோல், அம்மாவின் மூக்குக்கண்ணாடி வளைந்தும் நெளிந்துமாக, கீழே குனிகிறபோதெல்லாம் விழுந்துவிடுகின்றன. போன மாதம் ஊருக்குச் சென்றபோது, அப்பாவுக்கு குடையும் அம்மாவுக்கு ஒரு மூக்குக் கண்ணாடியும் வாங்கிக் கொடுத்தேன். அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம். என் மனதின் பூரிப்புக்கும் நிறைவுக்கும் அளவே இல்லை'' என்று சொல்லும்போது அந்த அன்பரின் கண்கள் கலங்கியிருந்தன.
மோட்டார் சைக்கிள், கல்லூரிப் படிப்பு, தங்க வளையல் எல்லாமே காஸ்ட்லிதான்! ஆனால், அப்பாவுக்கு வாங்கித் தந்த குடையிலும், அம்மாவின் மூக்குக் கண்ணாடியிலும் அத்தனை நிம்மதியும் சந்தோஷமும் பரவிக் கிடக்கின்றன. பிறந்தது முதல் இன்றைய நாள் வரையிலான நம்முடைய இந்தப் பயணத்துக்கு, அவர்கள்தானே வித்து! வேர்களுக்கு நீருற்றினால் தானே மரத்துக்குத் தெம்பு?!
அப்படித்தான்... மரமென ஓங்கி உயர்ந்து, வளர்ந்து நிற்கிற நமக்கான வேர்கள், நம் கால்கள்!
வஜ்ராசனம் தெரியுமா?
இரண்டு தொடைகளும் சேர்ந்த நிலையில், இரண்டு பாதங்களும் பின்னுக்குச் செல்ல, மண்டியிட்டு அமருங்கள். அதாவது, உங்களுக்குப் பின்பக்கத் தில், வலது கால் பெருவிரலை இடது கால் பெருவிரல்மீது வைத்துக் கொண்டு, குதிகால்களை நன்றாக விரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த உள்ளங்கால்களுக்கு இடையே பிருஷ்டத்தை, அதாவது நமது பின் பாகத்தை வசதியாக வைத்துக்கொண்டு, அமருங்கள். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். இரண்டு கைகளையும் பின்னால், முதுகின் மேல் பகுதிக்குக் கொண்டு வரவும். கட்டைவிரல்கள் தவிர, மீதமுள்ள எட்டு விரல்களும் முதுகை மேலிருந்து கீழாக அழுத்தியபடி, கீழ் முதுகு வரை அழுத்துங்கள்.
அதாவது, முதுகெலும்பு எனும் பகுதியை எட்டு விரல்களும் தொட்டுக் கொண்டே வரட்டும். கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் ஐந்தைந்து முறை செய்யுங்கள்.
நம்முடைய முதுகை நம்மால் பார்க்கமுடியாது. அதனால் என்ன?!
நமது முதுகை, கால்கள் தாங்கிக் கொள்ளும். 'உனக்கு நான், எனக்கு நீ' என்று பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்ளும். முதுகெலும்பில் தெம்பில்லை எனில், கால்கள் ரொம்ப நேரம் நிற்காது. கால்களுக்கு வலு இல்லையெனில், முதுகெலும்பு நொந்து போகும்.
சட்டென்று முதுகு வளையும். 'என்னன்னே தெரியலீங்க... பத்து நிமிஷம் நின்னாலே, முதுகு சுருக்குனு பிடிச்சுக்குது' எனப் பலரும் புலம்புவதைக் கேட்டிருக்கலாம்!
அதுமட்டுமா? அலுவலகத்தில், நீண்ட நேரம் கால்களை அசைக் காமல் வைத்திருந்தபடி உட்கார்ந்திருந்தாலோ அல்லது பைக்கில் எந்த அசைவுமின்றி கால்களை அப்படியே வைத்திருந் தாலோ, பிறகு எங்கேனும் வண்டி நிற்கும்போதோ அல்லது அலுவலக நாற்காலியில் இருந்து எழுந்திருக்கும்போதோ என்ன செய்வீர்கள்?!
கால்களை உதறுவீர்கள்; விரல்களைச் சுருக்கி விரிப்பீர்கள்; தொடைகளில் செல்லமாக அறைந்து கொள்வீர்கள்; ஆடுதசையை மெள்ளப் பிடித்து விடுவீர்கள். முதுகின் பக்கவாட்டுப் பகுதியில் கைகளை வைத்துக் கொண்டு, அப்படியும் இப்படியுமாகத் திரும்புவீர்கள்; பிறகு, பின்னோக்கி முதுகை வளைத்து, அண்ணாந்து பார்த்துவிட்டு, அப்படியே குனிந்து பார்ப்பீர்கள். அப்போது உடலுக்குள் ஒரு பரவசம் ஓடுவதை உணர்ந்திருக்கிறீர்களா?
வேர்களில் நீரூற்றினால் செடி, மரமாகும்; கால்களுக்கு கவனிப்பைக் கொடுத்தால், உடலின் எல்லாப் பாகங்களும் செம்மையாகும்

கலசம் என்பது என்ன?

கலசம் என்பது என்ன? 
மண் அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு பாத்திரம் - செம்பு - சிறுபானைதான் கலசம் எனப்படுகிறது. இந்தக் கலசத்தில் மாவிலைகள் செருகப்பட்டு, அவற்றின் நடுவில் ஒரு தேங்காய் வைக்கப்படும். வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உரு வாக்கும் வகையில் நுணுக்கமாகக் கட்டப்படுகிறது. பானையின் மேல் அழகான வடிவங்கள் வரையப்படுவதும் உண்டு. இந்தப் பானை கலசம் என்றழைக்கப்படுகிறது. இது நீரினாலோ அல்லது அரிசியினாலோ நிரப்பப்படும். இது பூர்ண கும்பம் என்றழைக்கப்படுகிறது. இது போன்றே ஜடப்பொருளான நமது உடல் தெய்வீகமான சக்தியால் உயிர்பெறும் பொழுது அற்புதமான, போற்றத்தக்க செயல்களை செய்யக்கூடியதாக மாறுகிறது. மரபுப்படி நடத்தப் பெறும் கிருகப் பிரவேசம், திருமணம், தினசரி பூஜைகள் போன்ற சமயங்களில் இத்தகைய கலசம் வைக்கப்படுகிறது. மேலும், விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில், வருவோரை வரவேற்கும் வகையில் இக்கலசத்தை வைக்கிறார்கள். பெரியோர்களையும் முக்கியப் பிரமுகர்களையும் பூரண கும்பம் கொடுத்து வரவேற்பது மரபு.பூஜிப்பது ஏன்? உலகைப் படைக்கும் முன் பகவான் விஷ்ணு, பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது. அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார். கலசத்தில் உள்ள நீரானது, எந்த நீரிலிருந்து படைப்பில் உள்ள அனைத்தும் தோன்றியதோ, அந்த நீரைக் குறிக்கிறது. அந்தப் புனித நீர்தான் அனைத்திற்கும் உயிர் அளிக்கும் சக்தி படைத்தது. இந்த நீர் எண்ணிலடங்கா உருவங்களையும் வடிவங்களையும் உயிர்த் துடிப்பும் உணர்வும் உள்ள பொருள்கள் மற்றும் ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் படைக்கும் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேலும், உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் படைக்கும் சக்தியையும் பெற்றது, இது. கலசத்தில் உள்ள இலைகளும் தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்றியுள்ள நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கலசம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது. புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேரவேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர், கலச நீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.ஆலய கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அமுத கலசத்தை ஏந்தியவாறு இறைவன் தோன்றினார். இவ்வமுதம் அனைவருக்கும் இறவாவரத்தை அருளியது. எனவே, கலசமும் இறவாத் தன்மையைக் குறிக்கிறது. ஞானியர் என்போர் நிறை மனிதர்கள். இதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய உண்மை சொரூபம், பூர்ணமான -எங்கும் நிறைந்த - பேருண்மையேயன்றி வேறில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அவர்கள் என்றும் குறைவற்ற மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து விளங்குகின்றனர். உலகில் உள்ள மங்களகரமான அனைத்தையும் குறிப்பவர்களாக அவர்கள் விளங்குகின்றனர். அந்த நிறை மனிதர்களின் பெருமையைப் போற்றும் வகையில் பூர்ணகும்பத்துடன் அவர்கள் வரவேற்கப்பட்டனர். இது அவர்களிடத்து நமக்கு உள்ள பக்தி நிறைந்த மரியாதையை நாம் முழுமனதுடன் வெளிப்படுத்துவதன் அடையாளமாகும்.

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...
================================================
1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

Monday, February 23, 2015

முன்னோர் வழிபாடு .

முன்னோர் வழிபாடு .
வேதவேள்விகளைப் புரிவதை விடவும் , கோயில் , குளங்களுக்குச் சென்று சுவாமி கும்பிடுவதை விடவும் முன்னோர்களை வழிபடுவதுமுக்கியம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன .
' மாதுர் தேவோ பவ ; பிதுர் தேவோ பவ ; ' -- என்பது சாஸ்திரத் தொடர் .
முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்தது தமிழ்நெறி . ஒருவன் தான் சம்பாதித்த பணத்தை ஆறு வகையாகப் பிரித்துக் கொண்டு செலவிட வேண்டும் என திருவள்ளுவர் கூறியிருக்கிறார் .
ஒரு பகுதி அரசனுக்குரிய வரி , தென்புலத்தார் , தெய்வம் , விருந்து , சுற்றம் , தன் சொந்தச் செலவுகள் என்று ஐந்து வகை . ஆக மொத்தம் ஆறு வகை .
இவற்றுள் தென்புலத்தார் என்பது தெற்கில் உள்ள பிதுர்லோகத்தில் வாழும் முன்னோர்களைக் குறிக்கும் . தெய்வ வழிபாட்டை விடத் தென்புலத்தார் வழிபாட்டுக்குத் திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுத்ததைத் " தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை " என்ற இந்தக் குறள் காட்டுகிறது
--- புலவர் . வே . மகாதேவன்

சண்டிகேஸ்வரர் .


சண்டிகேஸ்வரர் .
எப்பொழுதும் சிவ தியானத்திலேயே இருப்பவர் சண்டிகேஸ்வரர். சிவ பூஜைக்கும், தியானத்திற்கும் இடையூறு விளைவிப்பவர் யாராயினும் அவரைக் கோபத்துடன் தண்டிப்பவர்.
இதனாலேயே ' சிவ நிந்தகரிபு ' என்று ஒரு பெயர் உண்டு.
இவரது இயற்பெயர் ' விசாரசருமர் '. சிவ பூஜைக்கு இடையூறு செய்த தமது தந்தையின் கால்களை மிகுந்த கோபத்துடன் துண்டித்தார். இதனால் இவருக்கு' சண்டிகேஸ்வரர் ' எனப் பெயர் வரலாயிற்று. ( சண்ட = கோபம் ).
சிவபெருமானுக்கு பூஜித்த மலர்களையே ( சிவ நிர்மால்யம் ) இவர் ஏற்றுக் கொள்வார். சிவபெருமானுக்கு நிவேதனம் செய்த உணவையே தமக்கு ஏற்றுக் கொள்வார். இவையனைத்துமே இவரது பக்தியை பாராட்டி சிவபெருமான் அருளியவையாகும்.

Friday, February 20, 2015

இந்த ராகம் கேட்டால் இந்த நோய்கள் குணமாகும் .........

இந்த ராகம் கேட்டால் இந்த நோய்கள் குணமாகும் .........
ஆகிர் பரவி - அஜீரணத்தையும், ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தையும், மூட்டு வலிகளையும் குணப்படுத்துகிறது .
பைரவி - முட்டி மற்றும் முழங்கால் வலி .
சந்திரகௌன்ஸ் - பசியின்மை .
தர்பாரி கானடா - தலைவலி .
தீபக் - அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல், குடற்கற்கள் .
குஜரிகோடி - இருமல், சளி .
குணகளி - மலச்சிக்கல், தலைவலி, மூலம் .
ஜோன்புரி - வாயுக்கோளாறு, பேதி, மலச்சிக்கல் .
ஜெய் ஜெய் வந்தி - பேதி, தலைவலி, மூட்டுவலி .
( த்வஜாவந்தி )
மால்கௌன்ஸ் - குடல் வாயு .
பூர்விகல்யாணி - இரத்தசோகை, டென்ஷன், குடல் எரிச்சல் .
பூர்ய தனஸ்ரீ - இரத்தசோகை .
சோஹானி - தலைவலி.
வசந்த பஹார் - குடற்கற்கள் .
யெமன் கல்யாணி - மூட்டுவலி.

Thursday, February 19, 2015

கடிவாளம் - கண்ணதாசன்


கடிவாளம் - கண்ணதாசன்.
நமது உடம்பு எங்கே இருக்கிறது என்பது முக்கியமல்ல; மனம் எங்கே இருக்கிறது என்பது தான் முக்கியம். 
உடம்பு போகின்ற இடங்களுக்கெல்லாம் மனது தொடர்ந்து வருவதில்லை. உடம்பை மயிலாப்பூரிலே உட்கார வைத்து விட்டு, மனது சிங்கப்பூர் வரையிலே சென்று திரும்பிவிடும். 
மனது போகின்ற வேகம் மிகப் பெரியது என்பதாலே தான் `வாயு வேக மனோ வேகம்…’ என்றெல்லாம் நம்முடைய மூதாதையர்கள் வருணித்தார்கள். 
அதைத்தான் சிவவாக்கியர் மிக அழகாகச் சொன்னார், `மனத்திலே அழுக்கைச் சுமந்தவன் காட்டிலே போய் இருந்தால் கூட அந்த அழுக்கு அவனோடேயே இருக்கும்’ என்று. 
மனத்திலே அழுக்கில்லாதவன், ஒரு தாசியின் மார்பின் அருகிலே அமர்ந்திருந்தால் கூட, அவன் அந்த மார்பகத்தைப் பார்ப்பதில்லை. அவன் மனது அந்த தாசியை நாடுவதில்லை. பிறப்பை அறுத்து விட்ட பிறவியாகவே அவன் அங்கே காட்சியளிக்கிறான். 
ஆகவே, நன்மைகள் தீமைகள் அனைத்துமே மனத்தின் கண் தான் இருக்கின்றன என்பதனை, நான் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. 
அனைத்தும் துறந்தும் கூட, கூட வந்த நாயைத் துறக்க முடியாத பத்ரகிரியாரைப் போல, எல்லாவற்றையும் துறந்தாலும் கூட இந்த மனது செய்கின்ற வேலையைத் துறக்க முடியாமல் நாம் அவதிப்படுகிறோம். 
`காதி விளையாடி இருகை வீசி வந்தாலும் 
தாதி மனம் நீர்குடத்தே தான்’ 
என்றார் பட்டினத்தார். 
என்னதான் ஆட்டம் போட்டுக் கொண்டு போனாலும், தாதி நீர்க் குடத்திலே தான் மனத்தை வைத்திருப்பாள். தாதி என்றால் 
வேலைக்காரி.தண்ணீர் தூக்கி வருகின்ற வேலைக்காரி, என்னதான் வேடிக்கைப் பேச்சுப் பேசட்டும், விளையாடட்டும், அவள் இடுப்பிலே இருக்கிற குடத்தின் மீதும், தண்ணீரின் மீதும்தான் மனது லயித்திருக்கும். 
ஞானிகளுடைய உள்ளமும் அப்படியே தான். அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதிலே லயித்து விடுவார்கள். 
ஆனால், சராசரி மனிதன் அவஸ்தைப்படுவதெல்லாம் இந்த மனத்தின் போக்கினாலே தான். 
கல்யாணத்தில் ஒரு கருப்புப் பெண் கிடைத்தால், மனது சிவப்புப் பெண்ணுக்காக ஏங்குகிறது; சிவப்புப் பெண் கிடைத்து விட்டால், கருப்புப் பெண்ணைக் காணும் போதெல்லாம் ஏங்குகிறது. 
ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுக்கு வீட்டுச் சாப்பாடு பிரமாதமாக தோன்றுகிறது. வீட்டிலேயே சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுக்கு ஓட்டல் பலகாரம் மிக அற்புதமாகத் தோன்றுகிறது. 
மாறுபட்ட உணர்வுகளே மனத்தின் லயங்கள். 
மனிதன் தன்னை அறியும்படி வைப்பதும் அந்த மனதுதான்; தன்னை அறிய விடாமல் தடுப்பதும் அந்த மனதுதான். 
நான் எல்லாவற்றையும் விட உயர்ந்தவன் என்ற ஆணவத்தை உண்டாக்குவதும் அந்த மனதுதான்; நான் எல்லாரையும் விடத் தாழ்ந்தவன் என்ற அறிவை உணர்த்துவதும் அந்த மனதுதான். 
`நாம் என்னதான் உயர்ந்தவர்களாக இருந்தாலும், பணிந்து போக வேண்டும்’, என்ற பணிவை உண்டாக்குவதும் அந்த மனதுதான். 
ஆகவே, தன்னை அறிய வேண்டிய மனிதன், முதன் முதலிலே வெல்ல வேண்டிய பெரிய எதிரி மனது. 
உடம்பிலே ரத்தக் கொதிப்பு ஏறுவதற்கு உடம்பு மட்டும் காரணமல்ல; மனத்தின் டென்ஷன் தான் முக்கியமான காரணம் என்று மருத்துவ நிபுணர்களும், மனோதத்துவ நிபுணர்களும் கூறுகிறார்கள். 
ஒரு மனிதனைப் பார்த்து அனைவரும், `அடடா! எவ்வளவு அழகாக நீ இருக்கிறாய்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கட்டும். அவன் மனது அதைக் கேட்டுக்கேட்டு, தான் அழகாக இருப்பதாகவே நினைத்து, பூரித்துப் பூரித்து அவனுக்கு இல்லாத ஒரு அழகு முகத்திலும், மனத்திலும் வந்து விடுகிறது. 
புவனத்திலுள்ள நிபுணர்களில் விஞ்ஞான நிபுணர்களைக் கூடப் பெரிதாக நினைப்பதில்லை; ஆனால், மனோதத்துவ நிபுணர்களையே உலகம் பெரிதும் மதிக்கிறது. 
காரணம், மனத்தை நன்றாக அறிந்து கொண்டவன்தான், உலகை வெல்ல முடியும்; எதையும் வெல்ல முடியும் என்று உலகம் கருதுகிறது; ஒவ்வொரு மனிதனுடைய உள்ளமும் கருதுகிறது. 
திருமூலர் திருமந்திரத்திலே சொன்னார்: 
`தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; 
தன்னை அறியாமற் தானே கெடுகின்றான். 
தன்னையே அறியும் அறிவை அறிந்தபின் 
தன்னையே, அர்ச்சிக்கத் தானிருந் தானே!’ 
`தானே தனக்குப் பகைவனும், நண்பனும் 
தானே தனக்கு மறுமையும், இம்மையும் 
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும் 
தானே தனக்குத் தலைவனும் ஆமே!’ 
தன்னை அறிந்திருந்தால் அவனுக்குக் கேடில்லை. 
மனிதன் எதனாலே கெடுகிறான்? தன்னை அறியாமலே கெடுகிறான். 
தன்னை அறியக்கூடிய அறிவு மட்டும் அவனுக்கு வந்து விடுமானால், எல்லோரும் தன்னை அர்ச்சிக்கும்படியும், தானே தனக்குப் பூஜை செய்யும்படியும் வளர்ந்து விடுவான். 
உனக்குப் பகைவன் யார்? நீயே! 
உனக்கு மரணம் எது? நீயே! 
உண்மை எது? நீயே! 
நீ விதைத்த வினைப்பயனை அறுக்க வேண்டியவன் யார்? நீயே!
உனக்குத் தலைவன் யார்? நீயே! 
உனக்குத் தொண்டன் யார்? நீயே! 
எல்லாம் நீயே! 
எல்லாம் நானே என்பதற்கு மூலம் எது? மனது! 
`மனத்துக்கண் மாசிலன்ஆதல் அனைத்து அறன் 
ஆகுல நீர பிற’ 
என்றான் வள்ளுவன்
உடம்பு களங்கப்பட்டிருக்கலாம்; ஆனால், மனது களங்கப்படாதிருக்குமானால், அந்த உணர்வு கூடப் பரிசுத்தமாக ஆகிவிடுகிறது. 
முதலில் யார் மீதாவது நீ குற்றம் சாட்ட விரும்பினால், உன் மீதே குற்றம் சாட்டிப் பழகு. 
ஒரு கண்ணாடியின் முன்னால் நின்று கொள். அதில் உன்னுடைய பிரதிபிம்பம் தெரியும். அதைப் பார்த்துக் கையைக் காட்டி, `நீ குற்றவாளி, நீ குற்றவாளி, நீ குற்றவாளி’ என்று மூன்று முறை சொல். 
நீ சொல்வது கண்ணாடியைப் பார்த்து; கண்ணாடி சொல்வது, உன்னைப் பார்த்து. 
அதாவது, நீ உன் மனதுக்குச் சொல்கிறாய்; உன் மனது உனக்குச் சொல்கிறது. 
மனது உனக்குச் சொல்கிறது என்னும் போது மனதுக்கு அப்பாற்பட்டது எது? உன் உடம்பு; உன் கண்; உன் உயிர்; அனைத்துக்குமே அந்த மனது சொல்கிறது, `நீ தான் குற்றவாளி’ என்று. 
`நான் குற்றவாளி, நான் தவறானவன், நான் சிறியவன், நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், நான் மரியாதையாக இருக்க வேண்டும்’ என்றெல்லாம் உணர, தன்னை உணர்ந்து கொள்கின்ற தன்மை என்பது ஒரு லயமாக, ஒரு ராகமாக, ஒரு சுருதியாக, ஒரு பாவமாக நம் மனதுக்குள்ளேயே எழுந்து விடுகின்றது. 
எப்போது மனிதன், தன்னை உணர்ந்து கொண்டு விடுகிறானோ, அப்போது மனது பாடமாகி விடுகிறது. 
பச்சை இலை தான் புகையிலை. அது பாடம் செய்து வைத்தால் எவ்வளவு நாட்கள் இருக்கின்றது? 
ஒரு வெற்றிலையை எடுங்கள்; அதை ஒரு புத்தகத்துக்குள் வையுங்கள்; பல காலம் கழித்துப் பாருங்கள்; அந்த வெற்றிலையின் நிறம் மாறி, அது காய்ந்து போயிருந்தாலும் கூட அப்படியே, அதன் தன்மை கெடாமல் இருக்கும். 
இதுதான் மனத்தைப் பாடம் பண்ணுகிற முறையாகும். 
மனது பாடமாகி விட்டால், யார் இறந்தாலும் கூட அழுகை வராது; எது நிகழ்ந்தாலும் கூட அதிலே போய் மனது ஒட்டிக் கொள்ளாது. 
காஞ்சிப் பெரியவர்களோ, மற்ற ஞானிகளோ எந்த மரணத்திற்காவது துக்கம் கொண்டாடினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யாருடைய மரணத்திற்காவது அவர்களுடைய கண்களிலே இருந்து கண்ணீர் வந்திருக்கிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 
மரணம் ஏன் அவர்களை அழச் செய்யவில்லை? மனது மரத்துப் போய் விட்டது; மனம் பாடமாகி விட்டது. 
மனத்தைப் பாடம் செய்து கொண்டு விட்டால், தன்னை உணருகின்ற தன்மை, மிகச் சுலபமாக வந்து விடும். 
ஆயிரம் பேர் கூடி, நம் மீது குற்றம் சாட்டினால் கூட, நமக்குச் சிரிப்பு வரும். 
பத்தாயிரம் பேர் கூடி நமக்குப் புகழ் மாலை சூட்டினாலும், நமக்கு உடம்பிலே புல்லரிப்பு ஏற்படாது. 
அதனால்தான், மனத்தைப் பாடம் செய்து கொள்ள வேண்டும் என்றனர் ஞானிகள். கீழே உள்ள பாடல்களைப் பாருங்கள்: 
`மனத்தகத் தழுக்கறாத மவுனஞான யோகிகள் 
வனத்தகத் திருக்கினும் மனத்தகத் தழுக்கறார் 
மனத்தகத் தழுக்கறுத்த மவுனஞான யோகிகள் 
முலைத்தடத் திருக்கினும் பிறப்பறுத் திருப்பரே!’ 
- சிவவாக்கியர் 
`அலையுமனத்தை யகத்தடக்கு மவனேசரியை கடந்தோனா 
மலையுமனத்தை யகத்தடக்கு மவனேகிரியை முடிந்தோனா 
மலையு மனத்தை யகத்தடக்கு மவனே யோக தற்பரனா 
மலையு மனத்தை யகத்தடக்கு மவனே ஞானி யதிசூரன்’! 
- நிட்டானுபூதி 
`ஓங்கிய பரசீ வைக்கிய முணர்ந்திடு முணர் வாலன்றிச் 
சாங்கிய மகத்தி னாலுஞ் சார்ந்திடு மியோகத் தாலும் 
வீங்கிய கன்மத் தாலும் வேறுபா சனையி னாலு 
மோங்கிய முத்திப் பேற்றை யொன்றுவ தென்றுமில்லை!’ 
- விவேக சூடாமணி 
மனத்திலே அழுக்கு அற்றுப் போகாதவன், மனது பாடமாகாதவன், எதற்கும் வளைந்து கொடுக்கிறவன், எதிலும் ஆசை வைக்கிறவன், காட்டுக்கு ஓடினாலும் கூட, அவனுடைய ஆசை சுற்றிக் கொண்டே இருக்கும். 
அந்தக் காட்டிலே இருக்கின்ற மரங்களையும், சுற்றிலும் இருக்கின்ற நிலங்களையும் பார்த்தால், இதில் கொஞ்சம் நமக்கு இருக்கக் கூடாதா என்று தோன்றும். 
எவளாவது ஒரு பெண் வழியிலே போனால் கூட, `இவளை வைத்து நாம் குடும்பம் நடத்தக் கூடாதா?’ என்று தோன்றும். 
ஓடியது காட்டுக்கு; பாடியது துறவறப் பாட்டு; ஆனால், தேடியதோ பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை. 
காட்டுக்குப் போனாலும் கூட மனது அப்படி ஆகி விட்டால், அந்த லயத்துக்கு ஆட்பட்டு விட்டால், அது இந்த உடம்பையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போய் விடுகிறது. 
ஆனால், `மனது பக்குவப்பட்டு விட்டால், அவன் காட்டுக்குப் போக வேண்டியதில்லை’ என்பது தான் சிவவாக்கியர் வாக்கு. 
அவன் அங்கே இருக்கட்டும், பங்களாவிலே இருந்தாலும் அதைக் காடாக மாற்றிக் கொள்ள முடியும்; காட்டிலே இருந்தாலும் அதைப் பங்களாவாக மாற்றிக் கொள்ள முடியும். 
ஓடுகின்ற வண்டிக்குள் இருந்து கொண்டே, ஓடாமல் இருப்பவனே உண்மை சந்நியாசி; உண்மையில் மனத்தை அடக்கியவன். 
சாப்பாட்டைக் காணும் போது பசி எடுக்காதவன், மனத்தை அடக்கியவன். 
பெண்ணைக் காணும்போது இச்சை கொள்ளாதவன் மனத்தை அடக்கியவன். 
பணத்தைக் காணும் போது, இது நமக்கு இருக்கிறதா என்று எண்ணாதவன், மனத்தை அடக்கியவன். 
அடுத்தவனுடைய வீட்டைப் பார்த்து, `ஐயோ! இவ்வளவு பெரிய வீடா!’ என்று எண்ணாதவன், மனத்தை அடக்கியவன். 
எந்த ஞானியைப் பார்த்தாலும், `மனத்தை அடக்கு, மனத்தை அடக்கு’ என்று ஏன் சொல்லுகிறார்கள்? 
சகல துன்பங்களுக்கும் அதுதான் காரணம். 
நான் ஏற்கெனவே அர்த்தமுள்ள இந்துமதத்தின் இதர பகுதிகளில் விவரித்துள்ளபடி, `இந்த மனத்தின் லயத்தினாலே தான்’ மனிதன் 
கெடுகிறான்.அதனால்தான், `மனஸ்’ என்ற மூலத்தைக் கொண்டு `மனுஷ்யன்’ என்ற வடமொழி வார்த்தை உருவாயிற்று. 
கலைவாணர் ஒரு கதை சொல்லுவார். அதை நானும் பல தடவை மேடைகளில் சொல்லி இருக்கிறேன். 
நோயுற்ற ஒருவன், ஒரு வைத்தியரிடம் போனான். `ஐயா! எனக்கு இன்ன நோய், அதற்கு ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்’ என்று 
கேட்டான்.அந்த சித்த மருத்துவன் ஒரு லேகியத்தை எடுத்துக் கொடுத்தான். 
`நல்லது ஐயா! இந்த லேகியத்தை சாப்பிடும் போது ஏதாவது பத்தியம் உண்டா?’ என்று கேட்டான் அந்த நோயாளி. 
`பத்தியம் வேறொன்றுமில்லை. லேகியத்தைச் சாப்பிடும் போது, குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது; அவ்வளவு தான்!’ என்று மருத்துவன் சொன்னான். 
நடந்தது அவ்வளவுதான். பிறகு, அவன் எப்போது லேகியத்தை எடுத்தாலும், எதிரே குரங்கு வந்து நிற்பது போல் தோன்றும்; கடைசி வரையில் அவன் சாப்பிட முடியவில்லை. 
ஏன்? `குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது’ என்று வைத்தியன் சொன்னது அவன் மனத்தில் பதிந்து விட்ட காரணத்தால், லேகியத்தைத் தொட்டாலே அவனுக்குக் குரங்கு ஞாபகம் வரத் தொடங்கிற்று. 
லேகியத்திற்கும், குரங்கிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? அவன் அதைச் சொல்லாமல் இருந்திருந்தால், இவன் அதை நினைக்கப் போகிறானா? கிடையாது. 
அவன் சொல்லிவிட்ட காரணத்தால், மனது அதைச் சுற்றியே வட்டமிட்டது. லேகியத்தைத் தொடும் போதெல்லாம் `குரங்கு, குரங்கு’ என்கிற எண்ணமே வந்தது. 
அதன் விளைவாகக் கடைசி வரை அவனால் அந்த லேகியத்தைச் சாப்பிட முடியவில்லை. 
சில பேரைப் பார்க்கிறோம். தவறு செய்து விடுகிறார்கள். `ஏண்டா நீ இந்தத் தவறைச் செய்தாய்?’ என்று கோபத்தோடு கேட்டால், `ஐயோ, நான் என்ன செய்வேன்? என் மனது கேட்கவில்லையே! நான் அங்கே போனேன்’ என்கிறான். 
மனது எதற்குக் கேட்கும்? யாரிடம் கேட்கும்? நீ சொன்னால் மனது கேட்க வேண்டும்! அப்படிக் கேட்டால் தான் உனக்குள் அடங்கியது 
மனது.மனதுக்குள் அடங்கியவனல்ல மனுஷ்யன்! மனுஷ்யனுக்குள் அடங்கியதுதான் மனது. இதுதான் வடமொழியினுடைய சாரம். 
பெரிய ஞானிகள் எல்லாம் அப்படித்தான் வாழ்ந்தார்கள். 
அவர்கள் ஏன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்? மனத்திலே டென்ஷன் இல்லை; நோயில்லை; நோய்க்கு அவர்கள் மருத்துவம் பார்த்துக் கொள்வதுமில்லை. தனக்கு நோய் இருப்பதாக அவர்கள் உணர்வதும் இல்லை. 
இந்த மனத்தை அடக்குவதற்கு வெறும் பக்தி லயம் மட்டும் போதுமா என்றால், போதாது. இது சாதாரணமாக வரக்கூடிய ஒன்றல்ல. எல்லோருக்கும் வந்து விடாது. எல்லோருக்கும் இது வந்து விடுமானால் ஊரிலே போட்டி இருக்காது; உலகத்தில் போர் இருக்காது. 
சில பேருக்கு மட்டுமே இது வருகின்ற காரணத்தால்தான், உலகத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது; அவர்களை ஞானிகள் என்கிறோம். மேதைகள் என்கிறோம். 
நாமெல்லாம் மனதுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
`என் மனசாட்சி அப்படிச் சொல்கிறது; என் மனது இப்படிச் சொல்கிறது’ என்று நாம் அடிக்கடி பேசுவோம். 
மனது சொன்னதை எது கேட்கிறது. மூளையா, கண்ணா, காதா? 
அந்த மனத்தாலே ஆட்டி வைக்கப்படும் இந்த உடம்பு கேட்கிறது; அந்த உடம்பு அதன்படி செயல்படுகிறது. 
ஏன், அந்த மனத்தை உன்னுடைய இஷ்டத்துக்கு, உன் மூளையினுடைய இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கக் கூடாது, `நான் சொல்கிறபடி கேள்’ என்று? 
முந்திய அத்தியாயங்களில் சொன்னது போல மனத்தை அடக்கி,
`மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய் 
ஒன்றைய பற்றி யூசலாடுவாய்’ 
என்றானே பாரதி, அப்படி ஊசலாடுகின்ற மனதை உள்ளுக்குள்ளேயே அடக்கி வைத்து, பக்குவப்படுத்தி, பாடம் பண்ணி வாழக் கற்றுக் கொண்டு விட்டால், உறவு, பந்தங்கள், இரவு, பகல், இறப்பு, பிறப்பு எதிலேயும் பற்றும், பாசமும் இன்பமும், கண்ணீரும், புன்னகையும் மாறி மாறி வர வேண்டிய அவசியமே இருக்காது. 
கோடை வரலாம்; வசந்தம் வரலாம்; பனிக்காலங்கள் வரலாம்; பருவங்கள் மாறுமே தவிர, உலகத்தினுடைய உருவம் மாறினாலும் கூட, உன்னுடைய நிலைமை மாறாது, மனதை மட்டும் உன்னால் அடக்க முடியுமானால்.

செல்வ பெட்டகத்தின் திறவுகோல்

செல்வ பெட்டகத்தின் திறவுகோல்::::::::::::::
:::::::1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.
2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.
3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத் துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .
4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.
5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச் சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.
6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.
7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.
8.கடை அல்லது அலுவலகத்திற்கு "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.இல்லை என்றால் பணப்பெட்டிக்காவது தினமும் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.
9.வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு மேற்கு நோக்கி அமர்ந்து "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு இவற்றில் தெளிக்கவும்.

இரவு தூக்கம் வரவில்லையென்றால்...?

இரவு தூக்கம் வரவில்லையென்றால்...?
இரவு தூக்கம் வரவில்லையென்றால் அல்லது தூக்கம் கலைந்து விட்டாலும், இரண்டு கைகளிலும் கையின் கட்டை விரல் (Thumb Finger) நுனியையும், நடுவிரல் (Middle Finger) நுனியையும் தொடுமாறு வைத்துக் கொண்டு மற்ற அனைத்து விரல்களையும் நேராக வைத்துக் கொண்டு இருந்தால், எளிதில் தூக்கம் வரும். இதற்காக மருத்துவரை தேடி ஓட வேண்டாம்.

வேதம் ஒரு புத்தகம் அல்ல !!!நல்லவன் கையில் வேதம் அமிர்தம்


வேதம் ஒரு புத்தகம் அல்ல !!!
தமிழில் வேதத்தை “எழுதாக் கிளவி” என்பார்கள். அதாவது வேதத்தை எழுதி வைத்துப் படிக்க மாட்டார்கள். வேதத்தைப் பாராயணம் செய்வார்கள். சொல்லும் விதம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுக்கு கவனம் செலுத்துவார்கள். அப்படி உச்ச்சரிக்கபப்டும் ரிக் வேதத்தையே பாட்டாகப் பாடும்போது, இறைவனே நேரில் வருவான் என்பது வேதத்தின் சிறப்பு. இறைவனைக் கவர்வது, வேதக் கருத்தாக இருப்பின், ரிக் வேதம் சொன்னால் கூட இறைவன் வர வேண்டும். ஆனால் அதை சாம கானமாக இசைக்கப்படும்போது, அந்த கானத்துக்குத் தான் இறைவன் கவரப் படுகிறார் என்றால், அங்கே பொருள் முக்கியமல்ல, ஓசை நயமே முக்கியம் என்று தெரிகிறது. அமிர்த வர்ஷிணி போன்ற ராகங்கள் இசைக்கப் படும்போது, இயற்கையே கவரப்பட்டு, மழை பொழிகிறது என்று கேள்விப்படுகிறோம். ஆக, ஓசையானது ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்தி அதன் மூலம் வேண்டும் பலன்களைத் தருகிறது என்று தெரிகிறது.
வேதம் என்பது இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம். வேதத்தின் ஆதாரம் அதன் ஓசை நயத்தில் இருப்பதால்தான் அதை வாய்மொழியாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். வேதம் சொல்வதை ‘வேத கோஷம்’ என்பார்கள். கோஷ்டியாக, கூட்டமாகச் சொல்ல வேண்டும். வேதத்தின் ஓசை நயத்தால், பலன் கிடைப்பதை அக்னி ஹோத்திரம் என்னும் ஹோமத்தைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சியில் அறிந்துள்ளனர்.
அதிராத்திரம் என்னும் ஹோமத்திலும் அப்படிப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடந்தன.
வேத மந்திரங்கள் சொல்லி நடத்தப்படும் யாகம் என்பதே, ஒரு விஞ்ஞானக் கூடத்தில் செய்யப்படும் பௌதிக அல்லது வேதியல் மாற்றம் போலத்தான். இன்னின்ன மாற்றம் அலல்து பலன் வேண்டுமென்றால், இன்னின்ன வகையில் ஹோமமும், வேத மந்திரம் ஓதப்படுதலும் வேண்டும் என்பதே வேதத்தின் ஆதார பயன். இந்த மந்திரங்களில் இந்திரன், வருணன், சூரியன், அக்கினி என்று பல பெயர்களும் வரும். அர்த்தம் என்று பார்த்தால் பல இடங்களிலும் கோர்வையாக அர்த்தம் இருக்காது. அங்கே அர்த்தத்துக்கு முக்கியத்துவம் இல்லை. ஓசை நயமோ, அதிர்வலைகளோ அல்லது அது போன்ற வேறு எதற்கோ தான் முக்கியத்துவம் இருக்கிறது. இந்து மதத்தை வழி நடத்திச் சென்ற மூன்று ஆச்சர்ய புருஷர்களும் வேதத்தை எழுதி, அதற்குப் பொருள் சொல்லவில்லை. இதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
வேதத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை. தாங்கள்தான் அதைச் செய்த ஆசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளவும் இல்லை. ஏனென்றால் தியானத்திலும், தவத்திலும் அமிழும் போது தானாகவே அவர்கள் வாயில் புறப்பட்ட சொற்களே வேதம் ஆயிற்று. அவற்றை ஓதும் போது, இயற்கை முதல் இறைவன் வரை அனைத்துமே ஆட்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த ஓதுதல் சுய நலத்துக்ககச்க் செய்யப்படவில்லை. உலக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வேதம் ஓதப்பட்டது. அதன் பொருள் அறிந்து அதை ஆராய்ச்சி செய்வது என்பது ஹிந்து மரபில் கிடையாது.
வேதம் சொல்லும் கருத்து என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும் என்றால், தவம் செய்தவர்களையும், ரிஷிகளையும், ஞானிகளையும் நாடிச் சென்று அவர்களிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். அப்படி எழுந்தது உபநிஷத்துக்கள். வேதம் சொல்லும் ஞானத்தை உபநிஷத்துக்கள் மூலமாகத் தான் அறிய முடியும். அப்படித்தான் அறிந்தனர். வேதம், உபநிஷத்துக்கள் ஆகிய இவை இரண்டுமே செவி வழியாக அறியப்படவே, இவற்றுக்கு சுருதி என்று பெயர். இவற்றை எழுதிப் படிக்கவில்லை.
வேதம் ஓதுதலும், கட்டுப்பாடான தவ வாழ்கை மேற்கொள்ளுதலும், ஆத்ம ஞானம் தேடுவதற்கு உதவியது. லௌகீக விஷயங்களுக்கு அவை தேவை இல்லை. குறுந்தொகையில் (156) ஒரு பாடல் வரும். பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் என்னும் பாண்டிய சேனாதிபதி ஒருவர் அதைப் பாடியுள்ளார். அதில் தலைவன், தலைவியைப் பிரிந்து வருந்துவான். அப்பொழுது அங்கே ஒரு பார்ப்பனர் வருகிறார். கையில் புரச மரத்திலிருந்து எடுக்கப்பட்ட தண்டம் என்னும் கோலுடனும், கமண்டலத்துடனும், விரத உணவை உண்பவராகவும் அந்தப் பார்ப்பனர் சித்தரிக்கப்படுகிறார். அவரிடம் தன் பிரிவாற்றாமைக்கு ஒரு வழி கேட்கலாமா என்று தலைவன் எண்ணுகிறான். அப்புறம் தோன்றுகிறது, இவரைக் கேட்டு என்ன பயன் என்று.தலைவன் சொல்லுகிறான், பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, உன்னுடைய எழுதாக் கல்வியில் என் பிரிவுத் துன்பத்துக்கு மருந்து இருக்கிறதா? இல்லையே! என்கிறான்.
ரிக் வேதத்தை ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஆரிய – திராவிடப் போராட்டத்தை நம்பும் நம் திராவிடத் தலைவர்கள், இந்தப் பாடலை மறந்தது ஏன்?வேதமே எழுதாத கல்வி.அந்தக் கல்வியில் காதல், லௌகீகம் போன்றவற்றைப் பற்றி ஒன்றும் இல்லை.போரும், அதில் வெற்றியும் பற்றி இருந்தால் இந்த சேனாதிபதி அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருப்பானா?அது ஆரிய – திராவிடக் கதை சொல்லியிருந்தால், தமிழர்கள் அதை அன்றே அறிந்திருக்க மாட்டார்களா?
வேதம் என்பது படித்துப் பொருள் சொல்ல அல்ல. அது கதைப் புத்தகமும் அல்ல.அது சரித்திரப் புத்தகமும் அல்ல, அதிலிருந்து நம் சரித்திரத்தைத் தெரிந்து கொள்ள.தமிழ் வேதம் என்று போற்றப்படும் திருக்குறளே வேதம் எப்படிப்பட்டது, எதற்குப் பயன் படுவது என்பதற்குச் சாட்சி.பொய்யா மொழி என்று திருக்குறளைப் போற்றும் சங்கப் புலவர் வெள்ளி வீதியார், அது செய்யா மொழிக்கு (யாராலும் இயற்றப்படாத வட மொழி வேதம் ) திரு வள்ளுவர் மொழிந்த பொருள் என்கிறார். (திருவள்ளுவ மாலை).அந்த செய்யா மொழியும் சரி, பொய்யா மொழியும் சரி, ஆரிய- திராவிடப் போராட்டத்தைச் சொல்லவில்லை. திருக்குறள் இந்திய சரித்திரம் பற்றிச் சொல்லவில்லை.
அது போல வேதமும் சரித்திரப் புத்தகம் அல்ல.
வேதம் உதவுவது ஆத்ம ஞானத்துக்கு, இறைவனை அடைவதற்கு.
அதைப் பிரித்து பொருள் சொல்வது என்பதை ஐரோப்பியரே செய்தனர்.
அவர்களுக்கு இந்திய சரித்திரம் வேண்டுமென்றால், புராண இதிகாசங்களை நாடி இருக்க வேண்டும். அவை தெள்ளத் தெளிவாக நம் பழைய சரித்திரத்தைக் கூறுகின்றன. அவற்றில் இந்த ஆங்கிலேயருக்கும் ஐரோப்பியருக்கும் சுவாரசியம் இல்லை. வேதம் என்பது குறிப்பிட்ட வாழ்க்கை முறைகளைப்பின்பற்றுபவர்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நியதியை உடைத்து அவர்கள் அதைப் படித்ததினால் வந்த வினை இன்றும் நம்மை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது, காரணமில்லாமல் அந்த நாளில் அப்படிப்பட்ட நியதிகள் போடவில்லை என்று புரிகிறது.
நல்லவன் கையில் வேதம் அமிர்தம்.
அதுவே சுயநலமிக்க வல்லவன் கையில் ஒரு அம்பாகி விடுகிறது

யுகங்களில் அன்பு:

யுகங்களில் அன்பு:
முதல் யுகமான கிருத யுகத்தில் அன்பே பிரதானமாக இருந்த காரணத்தினால், சத்தியத்தால் நான்கு கால் பாய்ச்சலுடன் செல்ல முடிந்தது.
இரண்டாம் யுகமான, திரேதா யுகத்தில் பொறாமை நுழைந்து சத்தியத்தின் ஒரு காலை உடைத்தது.
சுயநலம் தனது ஒரு காலை அடியெடுத்து வைத்தது. அதனால், சுயநலத்தின் காரணமாய் கைகேயி “பரதன் நாடாள வேண்டும். இராமன் காடேற வேண்டும்” வரம் கேட்டாள். தனது கணவனை இழந்தாள். இராவணனும், தனது சுகமே பிரதானம் என்று கருதி சீதையை கவர்ந்து சென்றான். சுயநலத்தின் காரணமாய், அறிவுரை கூறிய அன்புத்தம்பியை விரட்டினான். மற்றொரு தம்பியை இழந்து, மகனை இழந்து, அனைத்தும் இழந்து தன் இன்னுயிரையும் இழந்தான்!
மூன்றாம் யுகமான, துவாபரயுகத்தில் பொறாமை சத்தியத்தின் இன்னொரு காலையும் உடைத்தது.
ஒரே குடும்பத்தினுள்ளே பொறாமை புகுந்து, சுயநலம் இரண்டு கால்களுடன் நின்றது. “ஊசி முனை அளவு இடம் கூட கொடுக்க மாட்டேன்.” என்று துரியோதனனை கூற வைத்தது, சுயநலமில்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? தம்பிகள், நண்பன், உறவினர்கள் இழந்து தனிமையில் தன் இன்னுயிரையும் இழந்தான்.
நான்காம் யுகமான, துன்ப யுகமான கலியுகத்தில், தூய அன்பும் சத்தியமும் ஒற்றைக்காலுடன் நொண்டியடிக்கின்றன.
சுயநலம், பொறாமை, பேராசை, கோபம், இன்னாச்சொல் ஆகியன மூன்று காலுடன், முக்காலியில் அமர்ந்தது போல தீர்க்கமாய் உட்கார்ந்து உள்ளன. அதனால், கணவன் – மனைவிக்கிடையே, உடன்பிறந்த சகோதரர்க்கு இடையே, (சில குடும்பங்களில்) பெற்றோருக்கும்-பிள்ளைகளுக்கும் இடையே, நண்பர்களுக்கிடையே அன்பு குறைந்து, சுயநலம் மேலோங்கியுள்ளது.
சுயநலத்தினால், இராவணன், துரியோதனன் அழிந்தது அறிவோம். அப்பாதை விடுத்து,
பிறரிடத்தில் தூய அன்பு செலுத்துவோம். 
ஆனந்தமாய் வாழ்வோம்.

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தி வேண்டும்..


 
சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.
{நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ---ர விஷவைத்யஸ்ய ஸ--ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மே}
இதன் பொருள்: போகமோட்ச உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்.
ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்..

Wednesday, February 18, 2015

அறிவியல் உண்மை - கோயில் ப்ரசாதம்

அறிவியல் உண்மை - கோயில் ப்ரசாதம்
கடையில் வாங்கும் தேங்காய்,பழம்,பூ வேறு. அதே தேங்காய்,பழம்,பூவை தெய்வத்துக்குப் படைத்து அா்ச்சனை செய்த பிறகு திருப்பிப் பெறும் அவைகள் வேறு. அா்ச்சனைக்கு முன் இருக்கும் அவைகளின் சக்தி அளவைவிட, அா்ச்சனைக்குப் பின் கிடைத்த அவைகளின் சக்தி அளவு அதிகம்.
இது வெறும் தெய்வ நம்பிக்கை விஷயம் மட்டுமல்ல. அறிவியல்பூா்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
இதோ ஆதாரம்:
பால் தாண்டன் என்ற ஒரு அமொிக்கா் இந்து சாஸ்திர சம்ப்ரதாயம் பற்றி ஆராய்ச்சி செய்ய நவீன கருவிகளுடன் இந்தியாவுக்கு வந்தாா். அவருக்கு எழுந்த முதல் கேள்வி, ப்ரசாதம் பற்றிய சந்தேகம்தான்.
கடையில் வாங்கிய பழம்,தேங்காய்,பூ,வெற்றிலை,பாக்கு ஆகியவற்றை தனது ரேடியோ கிராப் (பொருட்களில் இருக்கும் சக்திக் கதிா்களை அளக்கும் கருவி) கருவியால் பரிசோதித்து குறித்துக் கொண்டாா். இதே தேங்காய்,பழம்,பூ ,வெற்றிலை,பாக்கு ஆகியவற்றை அா்ச்சனைக்குக் கொடுத்து ப்ரசாதமாக திருப்பி வாங்கினாா். மீண்டும் இந்தப் பொருட்களை ரேடியோ கிராப் மூலம் பரிசோதித்தாா். அவற்றின் சக்திக் கதிா் அளவுகள் பல மடங்கு அதிகரித்திருந்தன. எப்படி என்று அவருக்கு ஆச்சரியம்!
பூஜையின் முக்கிய விஷயம் என்ன என்று கேட்டாா். மந்திரம் சொல்லி அா்ச்சனை செய்வாா்கள் என்று பதில் கிடைத்தது. அப்படியானால் ,மந்திரத்தில்தான் சக்கிக் கதிா் அளவை அதிகரிக்கும் விஷயம் இருக்கிறது என தீா்மானித்தாா். அதனையும் சோதிக்க விரும்பினாா். கடையில் பூஜைக்குரிய அதே பொருட்களை வாங்கினாா். அதனை எடுத்துக் கொண்டு ஒரு அா்ச்சகா் வீட்டிற்குச் சென்று ,நீங்கள் கோயிலில் அா்ச்சனையின் போது சொல்லும் மந்திரத்தைச் சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டாா்.
அா்ச்சகரின் அறையில் இருந்த சக்திக் கதிா் அளவை ரேடியோ கிராப்பால் அளந்தாா். மந்திரம் முடிந்ததும் மீண்டும் அளந்தாா். அப்போது அதிகரித்து இருப்பது தெரியவந்தது.பிறகு,பூஜை பொருட்களின் மற்றொரு தட்டைக் கொடுத்து ,இதனை உங்கள் வீட்டின் சாதாரண அறையில் வைத்து அா்ச்சனை மந்திரங்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டாா். அதிலும் அதிகமாக இருந்தது.இதுபோல் பல இடங்களிலும் மந்திரங்களின் சக்தியை ஆய்வு செய்து வியந்தாா்.அவரது ஆய்வுக் கண்டுபிடிப்புகளை ,இந்து அறிவியல் அதிசயம் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இவரது ஆய்வுக் கட்டுரையைத் தொடா்ந்து அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக் கழக ஆய்வுக்குழு , இந்து சடங்குகளின் மருத்துவ தன்மைப் பற்றி ஆய்வுகளைத் தொடங்கியுள்ளன. (31.03.2004 தினமலா் பக்தி மலரில் வந்த கட்டுரை)
ஆனால், இன்றோ விமானம் குறித்து சாஸ்திரம் கூறிய கருத்துக்களை ஆய்வாக இந்திய அறிவியல் மாநாட்டில் படித்தவரைப் பற்றி பத்திரிகைகள், மேதாவிகளாக தங்களைச் சொல்லிக் கொள்பவா்கள் கடுமையாக விமா்சிக்கிறாா்கள். இந்து சமய பெருமைகள் இந்தியா்களால் காப்பாற்றப்படவோ,பாதுகாக்கவோ,புரிந்து கொள்ளவோ முடியாது! காரணம் போலி மதச்சார்பின்மை பித்துத்தான்!
(அமரபாரதியிலிருந்து)

குருஷேத்திரம்

கிருதயுகத்தில் வாழ்ந்த சம்வர்ணன் என்ற அரசன் நன்கு வித்யைகளைக் கற்றவன். தன் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான்.சில காலம் கழித்து மன்னன் சில காலம் ஏகாந்த வாசம் செய்யத் தீர்மானித்து, ராஜ்ய பாரத்தை தன் குரு வசிஷ்டரிடம் பரிபாலனை செய்ய ஒப்புவித்து வனம் சென்றான்.வனத்தில் சூரிய பகவான் மகள் தபதியை சந்தித்து மனதை பறி கொடுத்தான். இருவரும் ஒருவரையொருவர் விரும்பினர்.
மன்னன் நாட்டிற்குத் திரும்பினான். அவன் உற்சாகமின்றி இருப்பதைக் கண்ட வசிஷ்டர் காரணத்தை புரிந்து கொண்டார். அவர் தமது யோக சக்தியின் மூலம் சூரிய மண்டலத்தை அடைந்து சூரிய பகவானிடம் பேசி சம்வர்ணன் தபதி திருமணத்தை நடத்தி வைத்தார்.அவர்களுக்கு குரு என்ற மகன் பிறந்து எல்லா கலைகளையும் கற்று உரிய வயதில் அரியணை ஏறி செங்கோலாச்சி மக்களிடம் நற்பெயர் பெற்றான். யோக கலைகளில் வல்லவனாக விளங்கினான். மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தான்.
தனது மக்களுக்கு அஷ்டாங்க யோகமாகிய நற்செல்வங்களை வழங்க நினைத்து அவற்றை வளர்க்க ஏற்ற இடத்தை தேடி, முடிவில் ‘சரஸ்வதி’ நது ஓடிய ‘சமந்தகம்’ என்ற இடத்தை அடைந்தான் குரு.
[எட்டு வித யோகம் – தவம், உண்மை, மன்னிப்பு, கருணை, தூய்மை, தானம், யோகம், பிரம்மச்சரியம்]
அங்கே சிவபெருமான், எமன் இவர்கள் வாகனங்களைக் கொண்டு அந்த நிலத்தைத் தங்கக் கலப்பையால் உழுதார். இந்திரன் இதைப் பார்த்து பரிகாசம் செய்தான். குரு அதைப் பொருட்படுத்தவில்லை.அப்போது மகாவிஷ்ணு அங்கு தோன்றி, “மன்னா! உன் எண்ணம் நல்லது தான் ஆனால் யோக விதைகளை விதைக்காமல் பயிர் எப்படி வரும்” என்றார்.
‘பகவானே, என் உடலில் அஷ்டாங்க தர்மங்கள் உள்ளன. பூமியை உழும் போது என் உடல் நசிந்து பூமியில் கலந்து விடும். அப்போது அந்த தர்மங்கள் முளைக்கும்’ என்றான் குரு.அதற்கு பகவான் கூறினார் ‘அதற்கு வெகுகாலம் பிடிக்கும். மாறாக உன் அங்கங்களையே விதையாகக் கொடு. உனக்காக நான் இந்த நிலத்தை உழுகிறேன் என்றார்.உடனே குரு தனது அங்கங்களையெல்லாம் வெட்டி பகவானே இதை ஏற்றுக்கொண்டு யோக விதைகள் முளைக்க அருள் புரியுங்கள் என வேண்டினான். மக்களுக்காக குரு செய்த தியாகத்தை மெச்சி மகாவிஷ்ணு அவனை ஆசிர்வதித்தார்.
உடனே குரு வெட்டுண்ட அங்கங்களைத் திரும்பப் பெற்றான். “ஓ ராஜனே! இனி இந்தத் தலம் உன் பெயரால் குருஷேத்திரம் என்று அழைக்கப்படும். இது தர்மஷேத்திரமாகவும் விளங்கும். இன்று முதல் நானும் மற்ற தேவர்களும் இதனைக் காவல் காப்போம். இங்கே யுத்தத்தில் மடிந்தவர்களுக்கு சுவர்க்கத்தில் இடம் கிடைக்கும்” என்று வரம் அளித்தார் மகாவிஷ்ணு.மகத்தான காரியத்தைச் சாதித்த குரு சொர்க்கம் அடைந்தான். குருஷேத்திரம் இப்படியான ஒரு தர்ம பூமி என்பதால் தான் கௌரவர்களும், பாண்டவர்களும் இங்கே தர்மயுத்தம் செய்தனர்.