Saturday, April 26, 2014

பிரசன உபநிஷதம்-ஒரு கண்ணோட்டம்

பிரசன உபநிஷதம்-ஒரு கண்ணோட்டம்
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ஆன்ம ஒளியில் விழித்தெழிந்தது. அதன் தவப் புதல்வர்களாகிய ரிஷிகள், இருளைக் கடந்து, பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை நான் அறிந்து கொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை (வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ பரஸ்தாத் தமேவ விதித்வா திம்ருத்யு மேதி நான்ய; பந்தா வித்யதே யனாய-சுவேதாஸ்வர உபநிஷதம் 3.8), அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே கேளுங்கள்(ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா-சுவேதாஸ்வதர உபநிஷதம் 2.5) என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்லாமல், பிற உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவி அழைத்தனர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோ கூட ஊடுருவ முடியாத காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் இந்த உலகைப் புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.
உலகிலேயே மிகப்பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது என்பது யாருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்.... ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம். வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்.... அவை கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும் என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தர். ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்.
அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனைகள்), பிராம்மணம்(யாக விவரங்கள்), ஆரண்யகம்(உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப்பற்றிய ஆராய்ச்சி)
உபநிஷதங்கள்: உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள். வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர். உபநிஷதங்கள் பல. அவற்றுள் 108 பொதுவாகக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கௌசீதக, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றும் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார். 14 உபநிஷதங்களும் கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைத்துள்ளன.
வேதம்-உபநிஷதம்
ரிக்- ஐதரேய, கவுசீதகி
யஜுர்- ஈச, கட, தைத்திரீய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, மைத்ராயணீ, மஹாநாராயண
சோம-கேன, சாந்தோக்ய
அதர்வண- ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய
பிரச்ன உபநிஷதம்
அதர்வண வேதத்தைச் சேர்ந்த உபநிஷதம் இது. ப்ரச்ன என்றால் கேள்வி. இந்த உலகம் எப்படி உண்டாயிற்று, உயிரினங்கள் எவ்வாறு தோன்றின, மனிதன் என்பவன் யார், கடவுள் யார், மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பன போன்ற சில அடிப்படைக் கேள்விகளை நெஞ்சில் சுமந்துகொண்டு பாரதத்தின் பல பகுதிகளிலிருந்தும் 6 பேர் அறிவைத் தேடி புறப்படுகின்றனர். பிப்பலாத முனிவரைப்பற்றி கேள்விப்பட்டு அவரிடம் செல்கின்றனர். 6 பேரும் அவரிடம் கேட்கின்ற 6 கேள்விகளுக்கப் பதிலாக அமைந்திருப்பதால் இது ப்ரச்ன உபநிஷதம் எனப்படுகிறது. இந்த 6 கேள்விகளும் இதில் 6 அத்தியாயமாக அமைந்துள்ளன; மொத்தம் 63 மந்திரங்கள் உள்ளன.
மாண்டூக்ய உபநிஷதத்தில் பேசப்படுகின்ற விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்ற மூன்று நிலைகளை ஆராய்வதால், பிரச்ன உபநிஷதத்தை மாண்டூக்ய உபநிஷதத்தின் துணை உபநிஷதமாகக் கருதுவதும் உண்டு.
மையக் கரு: மனிதன், உலகம், இறைவன் என்ற முப்பொருள் உண்மைகளை உபநிதஷதங்கள் ஆராய்கின்றன. ஒவ்வோர் உபநிதஷதமும் தனக்கென்று ஒரு கோணத்தில் இந்த அடிப்படை உண்மைகளை அணுகுகின்றன. அறிவைத் தேடுகின்ற, 6 பேருடைய தேடலின் வெளிப்பாடாக பிரச்ன உபநிஷதம் இந்த உண்மைகளை ஆராய்கிறது. 6 பேர் கேட்ட 6 கேள்விகளும் இதோ
1. உயிரினங்கள் எங்கிருந்து தோன்றின?
2. மனிதனில் என்னென்ன சக்திகள் செயல்படுகின்றன?
3. அந்தச் சக்தி எப்படி செயல்படுகிறது?
4. மனிதன் தூங்கும்போது தூங்காமல் அவனில் விழித்திருப்பது யார்?
5. ஓங்கார தியானம் என்றால் என்ன?
6. ஆன்மா எங்கே இருக்கிறது?
உயிரினங்கள், மனிதன், ஆன்மீக சாதனை, ஆன்ம அனுபூதி என்று அறிவுத்தேடல் படிப்படியாக ஆன்மீகத்தேடலில் நிறைவுறுவதைப் பிரச்ன உபநிஷதத்தில் காண்கிறோம். அடிப்படை ஆற்றலான பிராணனைப்பற்றி இங்கே சிறப்பாக ஆராயப்படுகிறது.
வித்யைகள்: அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்றடைவதே வாழ்க்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம். உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் வாழ்ந்த படியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஒவ்வோர் உபநிதஷங்களும் தங்களுக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகின்றன. இவை வித்யை எனப்படுகின்றன. வித்யைகள் எண்ணற்றவை. தற்போது சுமார் 35 வித்யைகள் மட்டுமே இந்த 14 முக்கிய உபநிஷதங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. காலங்கள் பல கடந்து விட்டதாலும், வேறு பல காரணங்களாலும் இந்த வித்யைகளின் செயல்முறையோ சரியான பொருளோ நமக்கு தெரியாமல் போய் விட்டது.
பிரச்ன உபநிஷதத்தில் பரமபுருஷ வித்யை கூறப்பட்டுள்ளது. 5:2-7இல் அமைந்துள்ளது. ஓங்கார தியானம் பற்றியது இது.
மொழிபெயர்ப்பு: ஸ்ரீசங்கரர் , ஸ்ரீமத்வர் போன்றோர் இந்த உபநிஷதத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ளனர். ஸ்ரீசங்கரரின் விளக்கவுரைக்கு ஸ்ரீஆனந்தகிரியும், ஸ்ரீமத்வரின் விளக்கவுரைக்கு ஸ்ரீராகவேந்திர தீர்த்தரும் மேலும் தெளிவுரை எழுதியுள்ளனர். ஸ்ரீராமானுஜர் உபநிஷதங்களுக்கு விளக்கவுரை எழுதவில்லை. அவரது கருத்தைத் தழுவி ஸ்ரீரங்கராமானுஜர் விளக்கவுரை எழுதியுள்ளார்.
இந்த மொழிபெயர்ப்பு, பிரச்ன உபநிஷதத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன.
1. தத்துவப் பின்னல்களைக் கருத்தில் கொள்ளவில்லை. இறைவன் என்ற மாபெரும் சக்தியுடன் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
2. காலம், இடம் போன்ற இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.
ஒரு வார்த்தை: உபநிஷதங்களை நமக்கு அளித்த முனிவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தி எதையும் கூறாமல், எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு கூறினார்கள் (இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே ஈசாவாஸ்ய உபநிஷதம் 10,13) என்றே குறிப்பிடுகிறார்கள். அதாவது, இந்த உண்மைகள் தங்கள் திறமையால் பெறப்பட்டவை அல்ல, மகான்களின் அருளால் கிடைத்தவை என்று அவர்கள் கூறுவதுபோல் உள்ளது இது.
நாம் எத்தகைய மனப்பாங்குடன் உபநிஷதங்களை அணுக வேண்டும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான பொருளை அறிந்து கொள்வது சாத்தியம் அல்ல. பிரார்த்தனைபூர்வமாக, உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மை பெற்று இறைவனை நோக்கி நாம் முன்னேறமுன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும்மீண்டும் படித்து, மந்திரங்களின் பெருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும். பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. பொருள் புரியவில்லை என்பதற்காகச் சோர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளில் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.
சாந்தி மந்திரம்: எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிராகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது. அதுபோல், அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.
உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.
பிரச்ன உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம் இது.
ஓம் பத்ரம் கர்ணேபி ச்ருணுயாம தேவா
பத்ரம்பச்யேமாக்ஷபிர் யஜத்ரா
ஸ்திரைரங்கைஸ் துஷ்ட்டுவாக்ம்ஸஸ்தனூபி
வ்யசேம தேவஹிதம் யதாயு
ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்த ச்ரவா
ஸ்வஸ்தி ந பூஷா விச்வ வேதா
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்ட்டநேமி
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாது
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
தேவா-ஓ தேவர்களே! கர்ணேபி-காதுகளால்; பத்ரம்-நல்ல விஷயங்களை; ச்ருணுயாம-கேட்க வேண்டும்; யஜத்ரா-பூஜிக்கத் தகுந்தவர்களே; அக்ஷபி-கண்களால்; பத்ரம்-நல்ல விஷயங்களை; பச்யேம-காண வேண்டும்; ஸ்திரரங்கை-உறுதியான அங்கங்களுடன் கூடிய; தனூபி-உடலுடன்; யதாயு-ஆயுள் முழுவதும்; துஷ்ட்டுவாம்ஸ-உங்களைத் துதிக்க வேண்டும்; தேவ ஹிதம்-தேவர்களுக்கு நன்மை செய்த வண்ணம்; வ்யசேம-வாழ வேண்டும்; வ்ருத்த ச்ரவா-பழம்புகழ்பெற்ற; இந்த்ர-இந்திரன்; ந-நமக்கு; ஸ்வஸ்தி-நன்மை செய்யட்டும்; விச்வ-தேவா-எல்லாம் அறிகின்ற; பூஷா-சூரியன்; ந-நமக்கு; ஸ்வஸ்தி-மங்கலம் செய்யட்டும்; அரிஷ்ட்டநேமி-தீமையை அழிக்கின்ற; தார்க்ஷ்ய-கருடன்; ந-நமக்கு; ஸ்வஸ்தி-நன்மை செய்யட்டும்; ப்ருஹஸ்பதி-பிருகஸ்பதி; ந-நமக்கு; ஸ்வஸ்தி-நன்மை; ததாது-தரட்டும்!
தேவர்களே! காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும். பூஜிக்கத் தகுந்தவர்களே! கண்களால் நாங்கள் நல்ல விஷயங்களைக் காண வேண்டும். உறுதியான அங்கங்களுடன் கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்க வேண்டும். தேவர்களுக்கு நன்மை செய்த வண்ணம் வாழ வேண்டும்! பழம்புகழ் பெற்ற இந்திரன் நமக்கு நன்மை செய்யட்டும். எல்லாம் அறிகின்ற சூரியன் நமக்கு மங்கலம் செய்யட்டும். தீமையை அழிக்கின்ற கருடன் நமக்கு நன்மை செய்யட்டும். பிருகஸ்பதி நமக்கு நன்மை தரட்டும்!
உலகியலில் மூழ்கடிப்பதற்கான விஷயங்கள், உயர் வாழ்க்கையில் தூண்டுகின்ற விஷயங்கள் ஆகிய இரண்டுமே மனிதனின் முன்னால் வருகின்றன; அறிவாளி இரண்டாம் வகையைத் தேர்ந்தெடுக்கிறான் என்று கட உபநிஷதம் கூறுகிறது. அவ்வாறு நல்லவற்றையும் உயர்ந்தவற்றையும் தேர்ந்தெடுப்பதற்கு நமது உடம்பிற்கும் புலன்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கும், அந்த முயற்சியில் தேவர்களின் துணையை நாடுவதற்குமான மந்திரம் இது.
தேவர்கள் யார்? அவர்களுக்கு நன்மை செய்வது என்பது என்ன?
சூரியன் உதிப்பது, கடலில் அலைகள் எழுவது, நட்சத்திர மண்டலங்கள் வானவெளியில் வலம் வருவது என்று இயற்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் சக்தியின் வெளிப்பாட்டைக் காண்கிறோம். இந்தச் சக்திகள் ஒவ்வொன்றையும் ஒரு தேவனாக உருவாக்கப்படுத்தினர் நமது முன்னோர், இந்திரன், வருணன், வாயு என்றெல்லாம் நமது வேதங்கள் கூறுகின்ற தேவர்கள் இத்தகைய இயற்கை ஆற்றலின் உருவகங்களே.
மனித வாழ்வு வளம்பெற வேண்டுமானால் இந்த இயற்கை ஆற்றல்களை வளம்பெறச் செய்ய வேண்டும், அதாவது மனிதன் இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும். உலகில் எத்தனை கோடி உயிரினங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் உணவும் வாழ வசதியும் வழங்குவதற்கு இயற்கை அன்னை தயாராகவே இருக்கிறாள். ஆனால் அதற்கு அவளுடன் இயைந்து வாழ்வது இன்றியமையாதது. இயற்கையை நாம் அழித்தால் நாமும் அழிவோம். மாறாக நாமும் இயற்கையும் பரஸ்பரம் பேணி வாழ்ந்தால் இயற்கையும் வாழும், நாமும் வாழ்வோம்.
இந்தப் பரந்த கருத்துடன் உபநிஷதம் ஆரம்பிக்கிறது.

உன்னை நீ புரிந்து கொள்

உன்னை நீ புரிந்து கொள்
இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரினங்களும் ஒரு நாள் இந்த உலகை விட்டு பிரிந்து செல்லத்தான் வேண்டும். மனிதர்களாகிய நாம், ஆடு மாடு மாதிரி இறக்க கூடாது. ஆனந்தமும், அமைதியும் நிரம்பி அதன்பின் இந்த உடலில் இருந்து உயிர் பிரிந்தால் அதுதான் பூரணத்துவம் ஆகும்.
பூரணத்துவத்திற்கு வேண்டிய காரியங்களை நாம் செய்வதாக இருந்தால் நம்மை நாம் அறிய வேண்டும். நமக்கு சாப்பாடு வேண்டும். உத்தியோகம் வேண்டும். கல்யாணம் செய்து மக்களை பெற்று இல்லற தர்மத்தை கடைப்பிடித்தாக வேண்டும்.
ஒழ...ுக்கமாக நான்கு பேருக்கு உதவியாக நல்ல பெயருடன் வாழ்ந்த மனிதன், இந்த உலகத்தை விட்டு பிரியும் போது சமுதாயம் அவனுக்காக கண்ணீர் வடிக்கிறது. தானும் அமைதியடைந்து பிறருக்கும் தன்னால் முடிந்தவரை அமைதியை தந்து வாழக்கற்று கொள்பவனே மனிதர்களுள் சிறந்தவனாகிறான்.
தாயிற் சிறந்த தெய்வம் இல்லை; சந்நியாசம் வாங்கிவிட்ட மகன் எதிரே வந்தால் தந்தையாக இருந்தாலும் வணங்க வேண்டும். ஆனால் சந்நியாசம் வாங்கிவிட்டாலும் தாயை வணங்கித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் தாயை விட சிறந்த தெய்வம் வேறெதுவும் இல்லை.

-காஞ்சிப்பெரியவர்

அர்த்தம் அனர்த்தமாகும் தருணங்கள்!

அர்த்தம் அனர்த்தமாகும் தருணங்கள்!
சாங்கியம் என்ற சொல்லிற்கு சாஸ்திரம் அல்லது தத்துவம் என்று பொருள் கொள்ளலாம். வாழ்க்கையின் தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு வரும் வழிகள் அனைத்தையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையின் இரண்டாம் அத்தியாயமான “சாங்கிய யோகத்தில்” தொட்டு விடுகிறார். பின்வரும் மற்ற அத்தியாயங்களில் விளக்கமாக சொல்லப்படும் அம்சங்களும் இந்த சாங்கிய யோகத்தில் சுருக்கமாக சொல்லப்பட்டு விடுகின்றன.
சுதர்மம் பற்றி விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாக கர்மத்தின் அல்லது செயலின் சூட்சுமத்தை விளக்க முற்படுகையில் ஆரம்பத்திலேயே சொல்லும் வார்த்தைகள் அவை சொல்லப்பட்ட காலத்தை எண்ணிப் பார்க்கையில் புரட்சிகரமானவை என்றே சொல்ல வேண்டும்.
“அறிவிலிகள் வேதங்களின் மேலெழுந்த வாரியான அர்த்தம் கொண்டு அதைத் தவிர வேறொன்றும் இல்லையென்று சாதிக்கின்றனர். இவர்கள் சொர்க்கத்தையே லட்சியமாகக் கொண்டு கோஷம் செய்கிறார்கள். இவர்கள் போகத்திற்கும், அதிகாரத்திற்கும் வேண்டி சடங்குகள் செய்கிறார்கள். அவற்றினால் அவர்கள் புத்தி மழுங்கி விடுகிறது. எனவே மகோன்னதமான லட்சியத்திற்கு வேண்டிய நிச்சயமான புத்தி அவர்களிடம் இல்லாமல் போய் விடுகிறது”
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், வேதங்களே எல்லாம் என்று முழுமையாக நம்பப்பட்டும், பின்பற்றப்பட்டும் வந்த கால கட்டத்திலேயே ஸ்ரீகிருஷ்ணர் வேதங்களை மேலெழுந்தவாரியாக புரிந்து கொள்வதையும், சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதையும் உறுதியான வார்த்தைகளால் சாடுகிறார்.
இது இக்கால மனிதர்கள் கவனித்து தெளிவடைய வேண்டிய ஒரு விஷயம். எந்த மதமானாலும் அந்த மத புனித நூல்களை மேலெழுந்த வாரியாகப் படித்து அரைகுறையாய் புரிந்து கொள்வதால் தீமையே விளையும் என்பதற்கு மதங்களின் பெயரால் இக்கால ஆன்மிகவாதிகள் செய்யும் குளறுபடிகளும், சண்டை சச்சரவுகளுமே நல்ல உதாரணம்.
மதங்கள் மனிதனை உயர் நிலைக்கு உயர்த்தும் நோக்கத்திலேயே உருவாக்கப் படுபவை. உருவாக்கியவர்களின் நோக்கம் உயர்ந்ததே. மத உபதேசங்களில் பலவும் அந்தந்த கால கட்டங்களின் அப்போதைய சூழ்நிலைகளிற்கும், தேவைகளுக்கும் ஏற்பவே இருந்தன. ஆரம்பத்தில் மிகத் தூய்மையாகவும், உருவாக்கப்பட்ட நோக்கங்களில் இருந்து தடம் மாறாமலும் இருந்த மதங்களின் உபதேசங்கள் காலம் செல்லச் செல்ல சிறு சிறு மாறுதல்களை அடைய ஆரம்பிக்கின்றன. பிற்காலத்திய மனிதர்களின் சொந்தக் கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகள் அந்த உபதேசங்களில் இடைச்செருகல்களாகும் வாய்ப்புகள் மிக அதிகம். அதுவும் வாய் மொழிகள் வழியாகவே உபதேசங்கள் செய்யப்பட்ட பழங்காலத்தில் இதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
மேலும் உபதேசங்கள் செய்யப்பட்ட ஆரம்ப மொழி பெரும்பாலான மதங்களில் இக்கால மொழியாக இல்லை. அந்த மொழியில் இருந்து பல மொழிகள் வழியாக மொழி பெயர்க்கப்பட்டு இக்காலத்தில் நாம் அறியப்படும் புனித உபதேசங்கள் எந்த அளவுக்கு அதன் ஆரம்பத் தூய்மை மாறாமல் இருக்கின்றன என்பது சர்ச்சைக்குரியதே.
ஒருவரைப் பற்றி இன்னொருவர் சொன்ன கருத்துகளை அட்சரம் மாறாமல் அப்படியே திருப்பிச் சொன்னாலும் குரலின் ஏற்ற இறக்கங்களை மாற்றினால் முதலில் சொன்னதற்கு நேர் எதிர்மாறான அபிப்பிராயத்தை மற்றவர்கள் மனதில் ஏற்படுத்தி விட முடியும். பலருக்கிடையில் கலகம் மூட்டி விடும் இந்தக் கலையில் வல்லுனர்கள் பலரையும் நாம் சர்வ சாதாரணமாக நம்மிடையே பார்க்கலாம்.
இப்படியெல்லாம் இருக்கையில் எந்த மத புனித நூலாக இருந்தாலும் அதை மிக ஆழமாகப் படித்தால் மட்டுமே சொல்லப்பட்டவற்றின் நோக்கத்தையும், உண்மையான அர்த்தத்தையும் ஒருவரால் அறிந்து கொள்ள முடியும். அப்படி ஆழமாகச் செல்பவருக்கே அன்னப்பறவை நீரையும், பாலையும் பிரித்து பாலை மட்டுமே உட்கொள்வது போல் படிக்கின்ற விஷயங்களில் இருந்து உண்மையைப் பிரித்து அறிய முடியும். எனவே அந்த நூலில் இருந்து அங்கொரு பகுதி, இங்கொரு பகுதியைப் படித்துக் கொண்டு அதை முழுவதுமாக அறிந்து கொண்டு விட்டதாக ஒருவர் நினைப்பது பேதைமையே.
அரைகுறையாக அறிந்தவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல சொர்க்கம், அதிகாரம், போகம் போன்றவையே குறிக்கோளாக அமைகிறது. அதை அடையும் வழிகளாக அந்த புனித நூல்களில் சொல்லப்படும் சடங்குகள், சம்பிரதாயங்களை எல்லாம் மிக முக்கியமாக எடுத்துக் கொள்கின்றனர். எந்த மதத்திலும் உண்மையான சாரத்தை அறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக சடங்குகள், சம்பிரதாயங்களையே பிரதானமாக எடுத்துக் கொள்வது சாரத்தை விட்டு சக்கையை முக்கியமாக எடுத்துக் கொள்வது போன்றது தான். அப்படிக் கண்மூடித்தனமாகச் செய்தால் புத்தி மழுங்கி விடும் என்று ஸ்ரீகிருஷ்ணர் எச்சரிக்கிறார். புத்தி மழுங்கும் போது மேன்மையான செயல்கள் செய்யத் தேவையான தெளிவோ, உறுதியோ இருப்பதில்லை என்கிறார் அவர்.
ஸ்ரீகிருஷ்ணர் எதையும் சிந்திக்காமல் அப்படியே பின்பற்றுவதை ஊக்குவிக்கவில்லை. பகவத் கீதை முழுவதும் அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரை பல கேள்விகள் கேட்கிறான். அப்போது அப்படி சொன்னாய், இப்போது இப்படி சொல்கிறாய், குழப்புகிறாய் என்றெல்லாம் சொல்கிறான். ஸ்ரீகிருஷ்ணர் அது போன்ற கேள்விகளை அனுமதிக்கவே செய்கிறார். நான் கடவுள், எல்லாம் அறிந்தவன், அதனால் நான் சொல்கிறபடி நீ கேட்டு நட என்ற ரீதியில் அவருடைய உபதேசம் இல்லாததும், ஒரு விஷயத்தை அனைத்து கோணங்களில் இருந்து பார்த்து தெளிவடைய வைக்கும் விதமாய் உபதேசம் இருப்பதுமே கீதையின் மிகப்பெரிய சிறப்பம்சம்.
சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் ஆரம்பத்தில் மனிதனை நன்னெறிப்படுத்தவே உருவாக்கப்பட்டவை. அவை உருவாக்கப்பட்ட கால சூழ்நிலைகளின் தேவைகளும், தாக்கங்களும் அவற்றில் இருக்கக் கூடும். அவற்றில் சில மாறி விட்ட இக்காலத்திற்குப் பொருத்தமற்றதாகக் கூட இருக்கலாம். அவற்றின் நோக்கம் என்ன என்ற ஆழமான அறிவு இருந்தால் மட்டுமே இக்காலத்திற்கும் பொருந்துவனவற்றை தேர்ந்தெடுத்துப் பின்பற்றி பலனடைய முடியும்.
மேலும் சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவை ஓர் இலக்கை எட்ட உதவும் வாகனங்கள் போன்றவை. அவை இலக்கை விட எப்போதுமே முக்கியமானதாகி விடக்கூடாது. இலக்கை அடைந்த பிறகு அவற்றின் பயனும் இல்லாமல் போய் விடுகிறது. கரையை அடைந்த பின்னும் படகை யாரும் தங்களுடன் எடுத்துச் செல்வதில்லை. கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான உவமையைக் கூறுகிறார். “நாலா புறமும் தண்ணீர் இருக்கையில் கிணற்றின் பயன் எப்படியோ, அதே அளவு பயன் தான் உண்மையை உணர்ந்தவனுக்கு வேதச் சடங்குகளாலும்”.
இன்றைய காலத்தில் மதங்கள் மற்றும் புனித நூல்களின் முக்கிய நோக்கத்தை மறந்து விடுகிறார்கள். சடங்குகள் சட்டங்கள் போல கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை போன்று சித்தரிக்கிறார்கள். இல்லாவிட்டால் நரகத்தை அடைய நேரிடும் அல்லது துயரம் சம்பவிக்கும் என்கிற பயம், சடங்குகளை செய்தால் சொர்க்கம் கிடைக்கும் அல்லது அதிர்ஷ்டம் அடைவோம் என்கிற ஆசை தான் பெரும்பாலான மக்களின் இன்றைய ஆன்மிகத்திற்கான காரணம் ஆகி விடுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் இந்த அணுகுமுறையை புத்தி மழுங்க வைக்கும் முட்டாள்தனம் என்கிறார்.
வெறுமனே வேதங்களைப் படித்து வைத்திருப்பதும், மனப்பாடம் செய்து சொல்ல முடிவதும் அக்காலத்திலேயே மதிக்கப்பட வேண்டிய ஒரு தகுதியாகக் கருதப்படவில்லை. இதற்கு மஹாபாரதத்திலேயே பல உதாரணங்கள் இருக்கின்றன. கௌசிகன் என்ற பிராமணன் வேதங்களை நன்கு படித்தறிந்தவன். பிரம்மச்சரிய விரதம் இருந்து பல சக்திகளையும் பெற்றவன். அப்படிப்பட்டவன் தர்மவியாதன் என்பவரிடம் உபதேசம் பெற அனுப்பி வைக்கப் படுகிறான். தர்மவியாதன் ஆசிரமம் ஒன்றில் வசிக்கும் முனிவராக இருக்கக்கூடும் என்று எண்ணி கௌசிகன் தேடிப் போனால் அந்த நபர் ஒரு கசாப்புக் கடைக்காரனாக இருப்பதைக் கண்டு அவன் திடுக்கிட நேர்கிறது. இறைச்சி விற்பவனாக இருந்தாலும் தர்மவியாதன் தான் செய்கின்ற தொழிலில் நியாயமானவனாகவும், தாய் தந்தைக்கு சிரத்தையுடன் சேவை செய்கிறவனாகவும், தர்மம் அறிந்தவனாகவும் இருந்ததால் கௌசிகன் என்ற பிராமணனுக்கு உபதேசம் செய்யும் தகுதியைப் பெற்று விடுகிறான்.
அதே போல சாண்டோக்கிய உபநிடதத்தில் உத்தாலகர் என்பவர் தன் மகன் ஸ்வேதகேதுவை உண்மையான ஞானம் பெற்று வர ஒரு குருவிடம் அனுப்புகிறார். ஸ்வேதகேது அறிவில் சிறந்தவனாக இருந்ததால் விரைவில் வேதங்கள் அனைத்தும் கற்று தேர்ந்து விடுகிறான். இனி படிக்க எதுவும் இல்லை என்கிற அளவு கற்று முடிந்தவுடன் அவன் தந்தையிடம் திரும்புகிறான். அவன் வரும் போதே அவனிடம் வேதங்கள் அனைத்தையும் கற்ற கர்வம் தென்படுவதை உத்தாலகர் கவனித்து துக்கத்தில் ஆழ்கிறார்.
எங்கே கர்வம் இருக்கிறதோ அங்கே ஞானம் இல்லை என்றல்லவா அர்த்தம்? நெல்மணிகளைத் தாங்கும் வரை பணியாமல் நேராக நிற்கும் கதிர் நெல்மணிகளைப் பெற்றவுடன் தானாகத் தலைவணங்குவது போல உண்மையான ஞானம் பெற்றவனிடம் தாழ்மையும் எளிமையும் தானாக அல்லவா வந்து விட வேண்டும்?
வேதங்களைக் கரைத்துக் குடித்த மகனாக திரும்பி வந்தும் ஆனந்தமடைவதற்கு பதிலாக தந்தை துக்கமாக இருக்கிறாரே என்று வருந்திய ஸ்வேதகேது காரணம் கேட்டறிந்து பின் மீண்டும் ஆழமாகப் பொருளுணர்ந்து கற்று ஞானியாக மாறுவதாகச் செல்கிறது கதை.
ஆகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வெறும் புனித நூலறிவு பெறுவதை உண்மையான ஞானம் என்று எடுத்துக் கொள்ளும் முட்டாள்தனம் நம் முன்னோரிடம் இருக்கவில்லை. ஆனால் அந்த முட்டாள்தனம் இன்றைய மக்களிடம் அதிகம் இருப்பதால் தான் ஆன்மிக மோசடிகள் அதிகமாக நடக்கின்றன. ஞானத்தை விட சடங்குகள் முக்கியத்துவம் பெறுவதால் தான் இன்றைய பெரும்பாலான மக்களின் ஆன்மிகம் அறிவு சார்ந்ததாக இருப்பதில்லை. இந்த உண்மையை ஸ்ரீகிருஷ்ணரின் மேற்கண்ட சுலோகங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

Friday, April 25, 2014

இராகவனே! தாலேலோ!

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!
...
புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!


கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!


தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!


பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே!
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கதை:

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கதை:

ஒரு குரு, தனது சிஷ்யனுக்கு, உபதேசம் செய்தார். நீயும் பிரம்மம், நானும் பிரம்மம். எல்லாம் கடவுள் என்று. சிஷ்யன் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டுக் கொண்டான். வெளியே ஞானத் திமிருடன, செருக்குடன் நடந்தான். ஒரு மதம் பிடித்த யானை அவ்வழியே வந்தது. அனைவரும் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினர். யானைப் பாகனும் விலகிப் போ, விலகிப் போ என்று கத்தினான். அவனோ, நானும் பிரம்மம், இந்த யானையும் பிரம்மம், நான் எதற்கு நகர வேண்டும் என்றான். அவனை யானை துதிக்கையால் சுழற்றி தூக்கி எறிந்தது.

ரத்தக் காயங்களுடன் குருவிடம் வந்து முக்கி முனகிய வாறே, குருவே! நானும் பிரம்மம், யானையும் பிரம்மம், ஆனால் அந்தப் பிரம்மம் இந்தப் பிரம்மனைத் தூக்கிப் போட்டுக் காயப்படுத்தியது. ஏனோ? என்றான்.

சிஷ்யா!, சிறிது விளக்கமாகச் சொல். யானை தனியாக ஓடி வந்ததா? மற்ற யாரும் அங்கு இல்லையா?

குருவே, யானைப் பாகன் விரட்டவே எல்லோரும் ஓடிவிட்டனர். நான் அவன் சொன்னதை மறுத்து நானும் பிரம்மம் , யானையும் பிரம்மம் என்று வாளாவிருந்தேன்.

சிஷ்யா!, யானையை பிரம்மம் என்று நீ கருதினாய். அதன் மீதிருந்த பாகன் என்ற பிரம்மம் சொன்னதை கேட்கவில்லையே. அவனும் பிரம்மம்தானே! என்றார்.

ஆக, குரு சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் குருவின் கட்டளையை மீறியதால் அவர் துயரம் அடைந்தார்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கதை:
ஒரு குரு, தனது சிஷ்யனுக்கு, உபதேசம் செய்தார். நீயும் பிரம்மம், நானும் பிரம்மம். எல்லாம் கடவுள் என்று. சிஷ்யன் உன்னிப்பாகக் ...கவனித்துக் கேட்டுக் கொண்டான். வெளியே ஞானத் திமிருடன, செருக்குடன் நடந்தான். ஒரு மதம் பிடித்த யானை அவ்வழியே வந்தது. அனைவரும் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினர். யானைப் பாகனும் விலகிப் போ, விலகிப் போ என்று கத்தினான். அவனோ, நானும் பிரம்மம், இந்த யானையும் பிரம்மம், நான் எதற்கு நகர வேண்டும் என்றான். அவனை யானை துதிக்கையால் சுழற்றி தூக்கி எறிந்தது.
ரத்தக் காயங்களுடன் குருவிடம் வந்து முக்கி முனகிய வாறே, குருவே! நானும் பிரம்மம், யானையும் பிரம்மம், ஆனால் அந்தப் பிரம்மம் இந்தப் பிரம்மனைத் தூக்கிப் போட்டுக் காயப்படுத்தியது. ஏனோ? என்றான்.
சிஷ்யா!, சிறிது விளக்கமாகச் சொல். யானை தனியாக ஓடி வந்ததா? மற்ற யாரும் அங்கு இல்லையா?
குருவே, யானைப் பாகன் விரட்டவே எல்லோரும் ஓடிவிட்டனர். நான் அவன் சொன்னதை மறுத்து நானும் பிரம்மம் , யானையும் பிரம்மம் என்று வாளாவிருந்தேன்.
சிஷ்யா!, யானையை பிரம்மம் என்று நீ கருதினாய். அதன் மீதிருந்த பாகன் என்ற பிரம்மம் சொன்னதை கேட்கவில்லையே. அவனும் பிரம்மம்தானே! என்றார்.
ஆக, குரு சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் குருவின் கட்டளையை மீறியதால் அவர் துயரம் அடைந்தார்.

ராம ராஜ்யம்.........

ராம ராஜ்யம்.........
ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தில் நூறாவது ஸர்க்கத்தில் 76 ஸ்லோகங்கள் உள்ளன. அற்புதமான இந்த ஸ்லோகங்களில் ஸ்ரீராமர் தனது தம்பி பரதனைக் குசலம் விசாரித்து கேட்கும் போது கேட்கப்பட்ட கேள்விகளைக் காணலாம். ராம ராஜ்யம் எப்படி அமைய வேண்டும் என்பதில் ராமரது உள்ளக் கிடக்கையைத் தெரிவிக்கும் ஸ்லோகங்களாக இவை அமைந்துள்ளன.
பரதனை நோக்கி ராமர் கேட்கும் கேள்விகளில் ஒன்று இது:-...
கச்சித் அஷ்டாதசான்யேஷு ஸ்வபக்ஷே தச பஞ்ச ச I
த்ரிபித்ரிபிரவிஞாதை வேத்ஸி தீர்த்தானி சாரகை: II
– நூறாவது ஸர்க்கம், 36வது ஸ்லோகம்.

அன்யேஷு – பிறர்களிடத்தில் அஷ்ட தச – பதினெட்டும் ஸ்வபக்ஷே – தன் பக்கத்தில் தச பஞ்ச ச – பதினைந்தும் (அதாவது மேற்சொன்ன பதினெட்டில் மந்திரி, புரோஹிதர், இளவரசு தவிர்த்து) உள்ள தீர்த்தானி – ராஜ்யாதிகாரிகளை அவிஞாதை: – ஒருவரை ஒருவர் அறியாதபடி த்ரிபி: த்ரிபி: – ஒவ்வொருவருக்கும் மூன்று மூன்றாக சாரகை: – வேவுகாரர்களைக் கொண்டு வேத்ஸி கச்சித் – அறிந்து வருகின்றாயா?
இங்கு ராமர் குறிப்பிடும் பதினெட்டு பேர்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம்:
1) மந்திரி 2) குலகுரு 3) இளவரசு 4) சேனாதிபதி 5) வாயில்காப்போன் 6) அந்தப்புர காரிய நிர்வாஹம் செய்பவன் 7) சிறைச்சாலையின் அதிகாரி 8) பணத்திற்கு அதிகாரி 9) அரசனின் ஆக்கினையை வெளியிடுவோன் 10) வியவகாரத்தைக் கேட்போன் 11) சேனைகளுக்குச் சம்பளம் முதலியவைகளைக் கொடுப்பவன் 12) நகரத்தைச் சோதித்தல், நகர பிராகாரத்தைக் காத்தல் முதலிய தொழில்களைப் புரிபவன் 13) சேனை தவிர மற்ற எல்லோருக்கும் கொடுக்க வேண்டிய சம்பளத்தை மொத்தமாக வாங்கிக் கொண்டு அதைத் தனித் தனியே பிரித்துக் கொடுப்போன் 14) அரசன், மந்திரி முதலியவர்களுக்குத் தக்க ஆசனம் அளித்தல், சபாசதர்களை வரவேற்றல், சபைக்கு வர அதிகாரமற்றவர்களைத் தடுத்தல், சபையைச் சத்தமில்லாமல் செய்தல், சபையைக் காத்தல் முதலியவற்றைப் புரிபவர்களின் தலைவன் 15) தாயாதிகளின் பாக விஷயத்தில் நேரும் வழக்கைத் தர்ம சாஸ்திரப்படி தீர்ப்பவன் 16) அரசனின் ஆணைப்படி தண்டனைகளை ஏவுபவன் 17)மலையரண், நீரரண், காட்டரண் முதலியவைகளைக் காப்பவன் 18) ராஜ்யத்தின் எல்லையைக் காப்பவன்
மிகுந்த ஆச்சரியத்திற்குரிய இந்த நிர்வாக அமைப்பு (administration set up) இன்றைய நவீன காலத்திற்கும் பொருந்துகிறது அல்லவா?
Cabinet Ministers, advisor, Minister of State, Commander, treasury, Defence, Security Judicial Officer, Prison Warder என்று இப்படி சரிக்குச் சரியான ஆங்கில வார்த்தைகளைப் போட்டுப் பார்த்தால் இன்று நாம் காணும் அரசியல் நடைமுறையும், சமூக நடைமுறையும் ஒரு லட்சிய நாட்டில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதாக அமைகிறதல்லவா?
நிர்வாகம் செம்மையுற நடை பெறுகிறதா, லஞ்ச லாவண்யம் இல்லாமல் நடை பெறுகிறதா என்பதைச் சரிபார்க்க மூன்று மூன்று பேரை வைத்து உளவு பார்க்கும் முறையும் சொல்லப்பட்டு இருப்பதை நோக்கும் போது லஞ்சமில்லா நாடு என்ற லட்சிய நாட்டையே நாம் பார்க்க முடிகிறது.
இது ராமராஜ்யத்தின் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டும் ஒரே ஒரு ஸ்லோகம் தான்!

எதெல்லாம் சுதர்மம்?

எதெல்லாம் சுதர்மம்?
சுதர்மத்தின் முதல் படி ஒவ்வொருவரும் தங்களுக்கு உண்மையாக நடந்து கொள்வதே. தங்களுக்கு உண்மையாக நடந்து கொள்ள முடியாதவர்கள் அடுத்தவர்களுக்கு எப்படி உண்மையாக நடந்து கொள்ள முடியும்? எனவே தான் பிறப்பாலும், தன்மையாலும் வீரனான அர்ஜுனன், அது வரையில் தன் சுதர்மத்தைப் பின்பற்றி வாழ்ந்ததில் எந்த பிரச்னையும் இல்லாத அர்ஜுனன், குருக்‌ஷேத்திர பூமியில் மடியப் போகும் உறவுகளைக் கண்டு சுதர்மத்தை விட்டு விலக நினைப்பதை தவறு என பகவான் கிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார்.
சுதர்மத்தின் அடுத்த படி என்ன? மற்றவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள். நாம் பிறக்கும் போதே அந்த கடமைகளும் பிறந்து விடுகின்றன. எந்த பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்தோமோ அவர்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகள், எந்த சமூகத்தில் நாம் பிறக்கிறோமோ அதற்கு செய்ய வேண்டிய சேவைகள் ஆகியவை எல்லாம் சுதர்மத்தின் அடுத்த படி ஆகின்றன. இன்னொரு விதமாக சொல்லப் போனால் அந்தக் கடமைகள் நாம் பிறக்கும் முன்னே நமக்காகக் காத்திருக்கின்றன. நம் பெற்றோர், சமூகம், நாடு என்று நாம் வாழ எங்கிருந்தெல்லாம் பலன்களை அடைகிறோமோ அங்கெல்லாம் நம் கடமைகளும் கூடவே இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
இது ஒரு வழிப் பாதையல்ல. பலனாக அவர்களிடம் இருந்து நேரடியாகவோ, வேறு வழியாகவோ நாம் நிறைய பெறாமல் வளர்ந்து ஆளாக முடியாது. அந்தக் கடனைத் திருப்பித் தந்தாக வேண்டும். அதுவே சுதர்மம். இங்கு கடன் தள்ளுபடி இல்லை. இந்த சுதர்மத்தைச் செய்யாமல் கோடி கோடியாய் திருப்பதி உண்டியலில் போட்டு வணங்கினாலும் அது ஒருவருடைய கணக்கில் இறைவனால் வரவு வைத்துக் கொள்ளப்பட மாட்டாது.
சுதர்மத்தைப் பொறுத்த வரை இன்னொரு முக்கிய அம்சம், தேவையானதை தேவையான அளவே செய்ய வேண்டும் என்பதே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது இந்த விஷயத்திற்கும் மிக நன்றாகவே பொருந்தும். மேலும் அளவுக்கு மீறி ஒன்றைச் செய்கையில், செய்ய வேண்டிய இன்னொன்றில் குறைபாடு இருக்கவே செய்யும் அல்லவா? சில நல்ல விஷயங்களே கூட தேவைக்கதிகமாக நீளும் போது அதன் விளைவுகள் நன்மையானதாக இருப்பதில்லை. சில உதாரணங்களைப் பார்ப்போம்.
பிள்ளைகளைப் பாசத்துடன் வளர்க்க வேண்டும். இது ஒரு தந்தையின் தர்மம். ஆனால் திருதராஷ்டிரன் கண்மூடித்தனமான பாசத்தை பிள்ளைகளுக்குக் காட்டி வளர்த்ததில் தீமையே விளைந்தது. பிள்ளைகள் மேல் உள்ள அளவு கடந்த பாசம் அவனை உறுதியுடன் பிள்ளைகளின் தவறுகளைக் கண்டித்து திருத்த விடவில்லை. அது கடைசியில் அவர்களுடைய அழிவுக்கே அல்லவா வழி வகுத்தது? திருதராஷ்டிரனும், காந்தாரியும் பிள்ளைகளுக்கு புத்தி சொல்லாமல் இல்லை. ஆனால் ஏதோ பேருக்கு புத்தி சொன்னார்களே ஒழிய அதில் தேவையான அளவு ஆத்மார்த்தமான உறுதி இருக்கவில்லை. புத்திமதிகளைக் கேட்காமல் போன போது ஆரம்பத்திலேயே தேவையான அளவு கண்டிப்பாக அவர்கள் இருக்கவில்லை. எனவே வெளிப்பார்வைக்கு தங்கள் கடமைகளைச் செய்வது போல காட்சி தந்தாலும், அதில் தேவையான விளைவை ஏற்படுத்தும் அளவு உறுதி இல்லா விட்டால் அப்போதும் அது சுதர்மம் ஆகாது, அதில் அதர்மமே விளையும் என்பது அனுபவம்.
(சில அறிஞர்கள் திருதராஷ்டிரனை மனமாகவும், காந்தாரியை புத்தியாகவும் உருவகம் செய்கிறார்கள். திருதராஷ்டிரன் இயல்பாகவே குருடன். காந்தாரியோ கணவன் காணாத உலகத்தைத் தானும் காண விரும்பாமல் கண்களைக் கட்டிக் கொண்டாள். மனம் விருப்பு வெறுப்புகளின் தன்மை உடையதால் உண்மையை அறிய முடியாத குருட்டுத் தன்மை உடையது. அதை வழிநடத்த வேண்டிய புத்தியும் அதே போல குருடாகவே மாறுமானால் அந்த இரண்டின் கூட்டணியில் உருவாகும் விளைவுகள் கௌரவர்கள் நூறு பேரைப் போல மோசமானதாகவே இருக்கும் என்று மிக அழகாக வியாக்கியானம் செய்கிறார்கள்.)
வாழ்க்கையில் தொடர்ந்து கிடைக்கும் ஒவ்வொரு உறவிலும், வகிக்கும் ஒவ்வொரு பொறுப்பிலும் கூட அதனுடன் சில தார்மீகக் கடமைகள் ஒரு மனிதனுக்கு வந்து சேர்கின்றன. அதுவும் சுதர்மத்தின் ஒரு அங்கமே. அந்தக் கடமைகளை சரிவரச் செய்யா விட்டால் மற்ற விதத்தில் அந்த மனிதன் எத்தனை மேன்மை படைத்தவனானாலும் சுதர்மம் தவறியவனாகிறான். அதற்கும் மகாபாரதத்திலேயே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். கர்ணனைப் போன்ற தர்மவான் இல்லை. பகவான் கிருஷ்ணரே அவனிடம் கையை ஏந்தியும் இருக்கிறார். அவனிடம் தர்மம் பெற்றும் இருக்கிறார். அந்த அளவு புண்ணியாத்மாவான கர்ணன் நண்பன் துரியோதனன் தவறு செய்யும் போது சுட்டிக் காட்டி இடித்துரைக்காமல் கூட்டு போனதை நண்பனாக சுதர்மம் தவறியதாகச் சொல்லலாம்.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
என்கிறார் திருவள்ளுவர். இதில் “மேற்சென்று” என்ற சொல் பொருள் பொதிந்தது. கருத்து கேட்டால் சொல்வேன் என்கிற நிலையை ஒரு நண்பன் எடுத்து விடக் கூடாது. நண்பன் நெறி கடந்து செல்லும் போது தானாக வலியச் சென்று இடித்துரைப்பது தான் உண்மையான நண்பனுக்கு அடையாளம். அவன் சொன்னால் துரியோதனன் கேட்டிருப்பானா என்பது வேறு விஷயம். நியாயமற்ற செயல்களைச் செய்தால் அழிவு நிச்சயம் என்பதால், நியாயமற்ற செயல்களைச் செய்யும் நண்பனைத் திருத்த முற்படுவதன் மூலம் அவனை அழிவில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் அல்லவா? இப்படி சுதர்மம் என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விட முடிந்த சொல் அல்ல. சுதர்மம் என்பது விரிவான அர்த்தங்களைக் கொண்ட நுணுக்கமான சொல்.
முன்பு சொன்னது போல அதிகமாகச் செய்தலும் சுதர்மம் அல்லாத செயல். சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு வங்கித் தேர்வு நடக்கும் மையத்திற்குச் செல்ல நேர்ந்தது. தேர்வு எழுத வந்த சுமார் 18 வயது இருக்கக்கூடிய மாணவனுடன் அவன் தந்தையும் வந்திருந்தார். பேனா, ஹால் டிக்கெட் முதற்கொண்டு அந்த தந்தையே தன் கையில் வைத்திருந்தார். எந்த அறையில் அவன் தேர்வு எழுத வேண்டும் என்பதையும் அவரே சென்று தேடிக் கண்டு பிடித்து அவனை அங்கு அவன் அமர வேண்டிய இருக்கையில் அமர்த்தி அந்தப் பேனா, ஹால் டிக்கெட் இத்தியாதிகளை அவனிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றார். தேர்வு எழுதி முடித்து வரும் வரை அடிக்கடி மகனை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்த செயலைப் பார்த்து அந்த தந்தை தன் சுதர்மத்தைப் பின் பற்றியிருக்கிறார், கடமையைச் செய்திருக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது. அந்த மகனின் ஏழெட்டு வயதில், உண்மையிலேயே அவர் மேற்பார்வையும் உதவியும் தேவைப்பட்டு இருக்கக்கூடிய காலத்தில், அவர் இதைச் செய்திருப்பது அவர் கடமை . ஆனால் அவனுடைய 18 வயதில் அவர் இதைச் செய்வது அவனுக்குத் தீமையே. அவனாகச் செய்ய வேண்டியவற்றை அவர் செய்து அவனுடைய வளர்ச்சியை அவர் தடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அங்கு கண்கூடாகப் பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது.
சிலர் தங்கள் வீட்டில் ஒரு துரும்பைக் கூட நகர்த்த உதவ மாட்டார்கள். ஆனால் அடுத்தவர்கள் வீட்டில் ஓடாக உழைப்பார்கள். மற்றவர்கள் பாராட்டில் புளங்காகிதம் அடைவார்கள். பரோபகாரிகள் என்று அவர்களைச் சொல்லலாமே ஒழிய சுதர்மத்தை அனுசரிக்கிறவர்கள் என்று கூற முடியாது.
அது போல சில விதமான உதவிகளும் தர்மமோ, சுதர்மமோ ஆகாதவை. எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஒருவர் அடிக்கடி கடன் தொல்லையில் மாட்டிக் கொள்வார். ஜப்தி, கைது நிலை வரும் போது அவருடைய உடன் பிறந்தோர் எல்லாம் அவர் கடனை அடைத்து அவரைக் கரையேற்றி விடுவார்கள். இது போல் பல தடவை நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஓரிரு முறை உதவியது உதவியாக இருக்கலாம். ஆனால் எப்படியும் இவர்கள் நமக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையை அந்த நபரிடம் வளர்த்து விட்டு பொறுப்பற்ற முறையில் வாழ வழி செய்த உதவிகளை எல்லாம் உடன் பிறந்தவர்களின் தர்மம், சுதர்மம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. கடைசியில் அவர்களும் உதவ முடியாத நிலை ஏற்பட்டு அந்த நபர் சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாள் தலைமறைவாகிற நிலை வந்து விட்டது.
எனவே சுதர்மம் என்ன என்பதில் நமக்கு தெளிவில்லையானால் சுதர்மம் என்ற பெயரில் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதற்கு அது காரணமாகி விடும். சுதர்மம் என்ற பெயரில் எத்தனையோ அனர்த்தங்களை நாம் செய்ய நேர்ந்து விடும். நமது உள்நோக்கம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. அதன் விளைவுகளையும் யோசித்து உதவுவதும், செயல்படுவதும் முக்கியம். நம் உதவி அடுத்தவர்களை சோம்பேறிகளாவும், பொறுப்பற்றவர்களாகவும் ஆக்குமானால் அது கண்டிப்பாக சுதர்மம் அல்ல.
பகவான் கிருஷ்ணர் சொல்லும் சுதர்மம் கண்மூடித்தனமானதல்ல. அது இதய பூர்வமானது. அறிவுபூர்வமானது. ஆக்கபூர்வமானது. உலகில் ஒவ்வொருவரும் தங்கள் சுதர்மத்தை சரியாகக் கடைபிடிப்பார்களேயானால் இந்த உலகம் ஒரு சொர்க்க பூமியாகி விடும் என்பதில் சந்தேகமேயில்லை

Thursday, April 24, 2014

ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும்.-வாரியார்

ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும்போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல், யாரிடம் பழகினாலும் அளந்து பழகாவிட்டா...ல் துன்பம் வந்து சேரும்.
* நம் உடம்பின் அளவுகோல் கண். கண்ணின் தன்மையைக் கொண்டே அவன் எப்படிப்பட்டவன் என்பதை கணக்கிட்டு விடலாம். மனிதனின் மனநிலையைக் கண்களே காட்டிக் கொடுக்கும் தன்மையுடையது.
* இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தூக்கம் வந்தால் ஒழிய படுக்கையில் படுப்பது கூடாது. தூக்கம் வராவிட்டால் மனதை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் அறநூல்களையும், தர்மசாஸ்திரங்களைப் படியுங்கள்.
* குடும்பம் பசுமரத்தைப் போன்றது. அதில் மனைவி வேர். கணவன் அடிமரம். பிள்ளைச் செல்வங்கள் கிளைகள். அன்பு இலைகள். கருணை மலர்கள். அம்மரத்தில் விளையும் பழங்கள் தான் அறச்செயல்கள். மரங்கள் பலவிதமான உயிர்களுக்கும், பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் நிழலும், கனிகளும் தருவது போல, நமது குடும்பம் என்னும் மரத்தால் மற்றவர்கள் பயன்பெற வேண்டும்.
-வாரியார்


ரத ஸ்தாபன முறை---உத்தர காமிக ஆகமம்

உத்தர காமிக ஆகமம்
ரத ஸ்தாபன முறை
71வது படலத்தில் ரதஸ்தாபன முறை கூறப்படுகிறது. முதலில் அமைக்கும் முறையை முன்னிட்டு தேர் இவைகளின் பிரதிஷ்டை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு தேரும் சக்கர அமைப்புகளால் பலவிதமாக கூறப்படுகிறது. அதில் மூன்று சக்கரம் முதல் 9 சக்கரம் வரையிலான ஏழு ரத பேதங்கள் கூறப்படுகின்றன. இரண்டு சக்கரம் உடையது. சகடம் என்று கூறி ரத பேதமான சகட விஷயம் கூறப்படுகிறது. பிறகு ரதவிஷயத்தில் உள் அமைப்பு, வெளி அமைப்பு என்ற இவைகளில் நிர்மாண விதியும் அவை சேர்க்கும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு வெளி அமைப்புகளின் நிரூபண விஷயத்தில் பாரம், அ÷க்ஷõத்தரம், சிகை, விஷ்டை, அக்ஷம், சக்கரம், உபபீடம் என்று உருப்புகள் கூறப்பட்டுள்ளன. வெளி அமைப்பு நிரூபணத்தில் உபபீடத்திற்கு மேல் அதிஷ்டானம் அமைக்கவும் அதிஷ்டானத்திற்கு மேல் பாதவர்க்கம், பாதவர்க்கத்திற்கு மேல் பிரத்யரவர்க்கம் செய்யவும் என கூறப்படுகிறது. இவைகளை அமைக்கும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு இந்த முறைப்படி அமைக்கப்பட்டது முதல் தளமாகும். இந்த முதல் தளத்துடன் கூடியது ஏகதளரதம் என்றும் ஒரு தளத்தை உடைய தேரை அமைக்கும் முறை. பிறகு இரண்டுதளம் உடைய தேர் இருக்கிறதா இல்லையா என சந்தேகம் ஏற்படுகிறது. அதனால் இரண்டுதளம், மூன்று தளம் உடைய ரதங்களை செய்யும் விஷயத்தில் அமைக்கும் முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு அனேக தளத்தை உடைய தேர் அமைக்கும் விஷயத்தில் செய்யவேண்டிய விசேஷ அமைப்பு நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறு தேர் அமைக்கும் முறை கூறி அந்த விஷயத்தில் சுபம் ஆயாதி என்ற கணக்கிடும் முறை வர்ணிக்கப்படுகிறது. முடிவில் இங்கு சகடை, பல்லக்கு முதலியவைகளில் சுபத்திலும் சுபஆயாதி அளவு முறை சம்மதம் என அறிவிக்கப்படுகிறது. பிறகு ரதத்தை ஸ்தாபனம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. அதில் சில்பியை திருப்தி செய்வது முறையாக பிரோக்ஷணம் முதலான சம்ஸ்காரங்கள் கூறப்படுகின்றன. பிறகு ரக்ஷõ பந்தன முறை கூறப்படுகிறது. பிறகு ரத்தின் உருவமானது சக்ரம் முதலான இடங்களில் பூஜிக்கவேண்டிய சூர்யன் முதலான தேவதைகளின் நிரூபணம், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், இவர்கள் ரதத்தின் அதிபர்கள் சிகரத்தின் அதிபதி சதாசிவன், ஸ்தூபிநாயகன் சிவன், தாமரை மொட்டுக்களின் அதிபன் அனந்தன் பிறகு, ரதத்தின் முன்பாக ஸ்தண்டிலம் அமைத்து ஸ்தண்டிலத்தில், கும்பஸ்தாபன முறை கூறப்படுகிறது.
அதில் 9 கும்பங்களை ஸ்தாபித்து மத்ய கும்பத்தில் சிவனையும், கிழக்கில் சூர்யனையும், ஆக்னேயதிக்கில் சந்திரனையும் தெற்கில் மஹாவிஷ்ணுவையும், நிருதியில் ஆதாரசக்தியையும் மேற்கில் விருஷபரையும் வாயு திக்கில் அனந்தரையும், வடக்கு திக்கில் தர்மாதிகளையும் ஈசான கும்பத்தில் சேஷனையும் கும்பமூர்த்தித் தன்மையாக பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஹோம விதி நிரூபிக்கப்படுகிறது. அங்கு ஸ்தாபிக்கப்பட்ட கடங்களுக்கு தேரை சுற்றிலுமோ 9 அல்லது 5 குண்டமோ அல்லது கிழக்கு திக்கில் 1 குண்டமோ அல்லது எல்லா இடத்திலும் ஸ்தண்டிலமோ அமைத்து குண்ட அக்னி ஸம்ஸ்கார முறையாக ஹோமம் செய்யும் முறை கூறப்படுகிறது. இங்கு 9,5,1 என்ற குண்டங்களை அனுசரித்து ஹோமம் செய்யும் முறையில் விசேஷம் கூறப்படுகிறது. இவ்வாறாக அதிவாச விதியில் செய்முறைகள் விளக்கப்பட்டது. பிறகு இரண்டாம் நாள் காலையில் நல்ல முகூர்த்த காலத்தில் மந்திரந்நியாச பூர்வமாக அந்தந்த கும்பத்தில் உள்ள ஜலங்களால் அந்தந்த பிரதேசத்தில் சம்ப்ரோக்ஷிக்கவும் என்று ரத சம்ப்ரோக்ஷண விதி சொல்லப்பட்டது. முடிவில் யார் இவ்வாறாக ரதத்தை தயார் செய்து சம்ப்ரோக்ஷணம் செய்கிறானோ அந்த மனிதன் இந்த லோகத்தில் தனவானாகவும், ஸ்ரீமானாகவும், விருப்பப்பட்ட பயனையும் அடைகிறான் என்று பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு ரதத்தை நன்கு தயாரித்து வெள்ளோட்டம் என்கிற ரதயாத்திரை செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறாக ரதஸ்தாபனத்தில் செய்முறை விளக்கம் கூறப்பட்டுள்ளது. பிறகு பல்லக்கானது பைடீ, சேகரீ, மண்டீ, என மூன்று விதமாக ஆகும் என கூறி அந்த மூன்று விதங்களின் செய்முறை விளக்கம் அதற்கு உபயோகமான விருக்ஷங்கள் நிரூபிக்கப்படுகின்றன. சிபிகாப்ரோக்ஷணமானது. சிம்மாசன பிரதிஷ்டா விதியில் கூறியுள்ளபடி செய்யவும் என அறிவிக்கப்படுகிறது. பிறகு கட்டில், மஞ்சம், அமைக்கும் முறை அதை செய்வதற்கு உபயோக மான திரவ்யங்கள் விளக்கப்படுகின்றன. இவ்வாறு சிறிய மஞ்சம் கட்டில் செய்யும் முறையும், விளக்கப்படுகிறது. இவ்வாறாக 71வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. லக்ஷணத்துடன் ரத பிரதிஷ்டையைக் கூறுகிறேன். சக்கரத்தின் கணக்கை கொண்டு ரதம் பலவிதமாக சொல்லப்படுகிறது.
2. மூன்று சக்கரம், நான்கு சக்கரம், ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என பலவகையிலும் ஆகும். ஆனால் இரண்டு சக்கரமுள்ளது சகடம் என்றும் சொல்லப்படும்.
3. சக்ரத்தின் மேலுள்ள பலகை அமைப்பின் அகலம் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது முழம் உள்ளதாக இருக்கும். அதன் நீளமும் இப்பொழுது சொல்லப்படுகிறது.
4. அச்சின் மேல்பாகமாக கூறப்பட்டுள்ளது. தேரின் மேல்பாகம் கூறப்படுகிறது. படகு போன்று வளைவான அமைப்பாக அமைக்கவும். தேரின் கீழ் விரிப்பு நீளம்போல் கனமாக உள்ளதாகவும்
5. தேரின்கீழ் விரிப்பின் வெளி அகல அளவின் அரைபாக அளவு நீளமோ கால்பாக அதிகமோ, கால்பாக குறைந்ததாகவோ அதற்கிடைப்பட்டதான ஆறு அளவு உடையதாக
6. தேரின் கீழ் விரிப்பு பாகத்தின் ஆதாரத்திற்கு கீழாக அச்சின் மேல் பாகம் அமைக்கவும். எங்கெங்கு பாரத்தை உடைய அச்சுக்கும் சேர்க்கை உள்ளது என்பது இப்பொழுது சொல்லப்படுகிறது.
7. இரும்பு பட்டைகளாலும் முளைகளாலும், மிகப்பெரிய முனையுள்ள ஆணிகளாலும் எப்படி கட்டினால் அது வலுவாக இருக்குமோ அப்படி மிக வலுவாக கட்ட வேண்டும்.
8. அச்சைக் காப்பதற்காக நடுபக்கம் இவைகளில் அவைகளின் நடுவிலுள்ள இரு பக்கங்களில் அவைகளின் கனத்திற்கு ஸமமாக பலவித சிகைகளாக உடையதாக செய்தல் வேண்டும்.
9. அச்சுவரை தொங்குகிறதாக இரும்பு பட்டையால் நன்கு கனமாக உள்ளதாக அமைத்தல் வேண்டும். ஒவ்வொரு சக்ரத்திற்கும், ஸமமாகவோ, ஸமமில்லாமலோ அச்சாணி அமைத்தல் வேண்டும்.
10. மேல் நோக்கிய தலைபாகத்தை விட்டு பூமியை நோக்கி கீழே உள்ளதாக சிறிது வெட்டப்பட்டதாகவும் அச்சின் மேல்பாகத்தில் நுழைவதற்காகவும் அல்லது மேல் பாகத்தையோ செய்ய வேண்டும்.
11. எல்லா அச்சுகளிலும் மேல் பாகமாக இருப்பதற்காகவும் திவாரத்தில் நுழைப்பதற்காகவும் குறைக்கவும் தேரில் கீழ்பலகை அகலத்தை அறுபது பாகமாக பிரிக்க வேண்டும்.
12. அதற்கு ஸமமாகவோ அறுபதுக்கு ஐந்து பாகமாகவோ அதிகரிக்கவும். கால்பாகம், குறைந்த அளவின் இரண்டு மடங்கு நீளமுடைய அடிபாகமாக கூறப்பட்டுள்ளது.
13. அதன் நுனி, அடி பாகத்தின் பாதியை, எட்டு பாகமாக அதிகரிக்கவும். ஓர் பாகத்திலோ, முக்கால், அரை பாகத்தினாலோ, நீளத்தில் அமைக்கப்படவேண்டும்.
14. அதன் நுனியிலோ, அதை அடைந்ததாலோ, ஸமபத்ரம் என்ற அமைப்பை செய்யவும். அவைகளின் அளவு பாதத்திற்கு கூறப்பட்ட முறைப்படி செய்ய வேண்டும்.
15. பின்பாகமான பத்ர அமைப்பிலிருந்து அதிகமானதாக நுனிபாக பத்ரம் அமைக்கப்படவேண்டும், பத்ரத்தை பத்ரத்தின் நுனிகள் விருப்பப்பட்ட அளவுகளால்
16. பிரும்மாஸனத்தை செய்தோ, செய்யாமலோ இருக்கவும், பத்ரம், உபபத்ரம் இவைகளின் அளவு ஒன்று பட்டதாகவோ வேறுபாடான அதிகமாகவோ இருக்கலாம்.
17. தேரின் பத்ர, உபபத்ரங்களின் அளவு எவ்வாறு நன்கு சேர்க்கப்பட்டு இருக்கிறதோ அந்த எல்லா அளவும் தேர்கீழ்பரப்பு பலகைக்கு கனமாகும். கீழ்பரப்பு பலகையில் இடைவெளி அமைக்க கூடாது.
18. மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு முழங்கை அளவு நீளமுள்ளதாகவும் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து பாகம் அகலமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.
19. அச்சுக்குமேல் பாகத்தில் இரண்டு முதல் ஒன்பது எண்ணிக்கை வரையிலாக பாரம் என்ற கீழ்விரிப்பு பாகமாகும். மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு பாகமாக அகலத்தில் அரைபாகமாக கொடுங்கை அமைப்புகளை
20. சேர்க்கவும், கம்பங்களின் நடுவில் பலகைகளுக்கு வேறு ஆஸனங்களை (விட்டங்களை) அமைக்கவும். கீழ் விரிப்பு அமைப்புகளில் நுனி, அடி, நடுவிலோ விருப்பப்பட்ட விட்டங்களை சேர்க்க வேண்டும்.
21. மேல் பாகத்தில் வெளியில் தெரியும்படி துவாரங்களை ஐந்து முடிச்சுக்களை உடையதாகவும், நான்கு பாகம் முதல் பதினெட்டு பாகம் வரையிலாக
22. அதிகமான விஸ்தாரத்தை செய்யவும், சக்ரத்தின் கடையாணி, இடைவெளி ஐந்து பாகத்திலிருந்து பாகம் அதிகமானதாக இருக்க வேண்டும்.
23. பந்துபாகம் வரையிலும் சக்ரத்தின் அச்சு கனமும் ஏதுண்டோ அதை வெளியில் தலைபாகம் தெரியும்படி கீழ் வெளிபரப்பு அச்சின் இடைவெளி இதற்கு சமமாகும்.
24. இவைகள் எல்லாம் அச்சின் நீளமாகும். அச்சு உருண்டையாகவோ சதுரமாகவோ இருக்கலாம்.
25. அகன்ற அமைப்பை உடைய நடுபாகத்துடன் கூடியதாகவோ இல்லாமலோ ஐந்து உருப்பு அமைப்பென்பதான கார்யங்களை மரத்தினாலும் இரும்பினாலும் செய்ய வேண்டும்.
26. எவ்வாறு பலமுள்ளதாகவும், அகலமாகவும் இருக்குமோ அவ்வாறே கனமுள்ளதாகவும் அமைக்கவும், சக்ரங்களுக்கு பிரமாணம் தேருக்கு வெளியிலும் பாரத்திற்கு இடைவெளியிலும் ஆகும்.
27. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறுபாக குறைந்தோ அதிகப்படுத்தியுமோ செய்து இரண்டு பாகத்திலிருந்து, எட்டு பாகம் வரை சக்ரங்களின் கனமாக கூறப்பட்டுள்ளது.
28. ஒன்று, இரண்டு, மூன்றங்குல மதிகமாக நாபி தேசத்தில் ஆகும் அவ்வாறே வெளிபாக சக்ரத்தின் வட்டமும் அவைகளின் நடுவில் கோடு போன்ற அமைப்பை
29. கீழும், மேலும், ஒன்று, இரண்டு, மூன்றம்சங்களால் மெலிந்ததாகவும், இருபத்திநான்கு முதல் எட்டு அதிகத்தால் அறுபத்திநான்கு வரை எண்ணிக்கையுள்ள அம்சங்களால் மெலிந்ததாகவும் அமைக்க வேண்டும்.
30. தேரோட்டுபவர் முருகன், அல்லது நந்திகேஸ்வரர் அல்லது பிரம்மா, அல்லது விஷ்ணு, இந்திரன் இப்படியும் இருக்கலாம்.
31. கீழ்விரிப்பு பலகையின் மேல் உபபீடம் அமைக்கவும். அதன் அளவு கூறப்படுகிறது. ஓர் பாகத்திலிருந்து இரண்டுமுழம் வரை ஓர்பாக அதிகரிப்பால்
32. பாரத்தின் உபான அமைப்பிலிருந்து வெளிக்கொணர்ந்து பாரத்தின் வெளியில் ஓர் அம்சத்திலிருந்து பாகத்தின் வெளி அமைப்பு அதிகரிப்பால் ஆறு பாகம் வரையிலோ
33. இருபத்தி ஒன்பது அம்சம் வரையிலோ பீட உயரத்தை பிரிக்கவும். மூன்று, இரண்டு, ஐந்து, ஒன்று, ஒன்பது, ஒன்று மூன்று என்ற அம்சங்களாலும்
34. மூன்றுபாக, ஒவ்வோர் பாகத்தினால், கீழிருந்து ஆரம்பித்து செய்யவும். உபாநம், பத்மம், கம்பம், கர்ணம், கம்பம் இவைகளும்
35. பத்மம், வாஜநம், கம்பம் இவைகளை மேற்கூறிய அளவுகளால் கூறப்பட்டுள்ளது. கால்பாகம், அரைபாகம், மூன்றுபாகம், இரண்டு பாகத்தினாலோ
36. மூறு பாகத்தினாலோ நான்கு பாகங்களால் குறைவாகவோ, அதிகமாகவோ அமைக்கவும். இவைகளின் நுழைவு, வெளிக் கொணர்தலை அழகின் அதிகரிப்பால் செய்ய வேண்டும்.
37. ஆலயத்திற்கு சொல்லப்பட்ட உபபீடம் ஏதுண்டோ அதை இங்கு செய்யலாம். நாற்கோணங்களிலும் நடுவிலும், அவ்வாறே பத்ரம், உபபத்ரம் என்ற அமைப்புகளிலும்
38. பொம்மை போன்ற அமைப்புகளால் நாடக அமைப்புகளாலும் கழுத்து பாகத்தை அலங்கரிக்கவும். உபபீடத்தின் உயரளவிலாவது உபபத்ரபீடம் செய்ய வேண்டும்.
39. உபபத்ர பீடத்திற்கு மேல் நன்கு கனமான பலகையால் மேலே மூடுவதை செய்யவும். பலகையின் பாரமத்தியில் பாதம் முதலியவைகளால் அலங்கரிக்க வேண்டும்.
40. பலகையின் நடுவிலிருந்து பாரம் என்ற தாமரை மொட்டு அமைப்புகளை காம்புடன் கூடியதாக செய்யவும். தண்டின் அளவு இரண்டு, ஏழு, மூன்று அங்குலத்திற்கு மேற்பட்டதாகவும்
41. நூறு அம்சம் வரையிலும் கூறப்பட்டுள்ளது. அதன் அடிபாகம் நான்கு பாதத்திலிருந்து எட்டம்சம் வரை கனத்தையுடையதாக வட்டவடிவமாகவோ, எண்கோண வடிவமாகவோ அமைக்கலாம்.
42. ஆறு, பன்னிரெண்டு பாகம் வரை நுனியில்லாமல் வளைந்ததாக செய்து கும்பம் போல் அழகுடன் கூடியதாகவோ இரண்டு கண்டிகையை அடிப்படையாகவோ
43. தாமரையை பலகையுடன் கூடியதாயும், அதற்குமேல் தாமரை மொட்டையும் செய்யவும். அதையும் நான்கம்சம் ஆரம்பித்து ஓர்பாக அதிகரிப்பால்
44. எட்டம்சத்துடன் கூடியதாய் அந்த விஸ்தார நடுவரையிலுமாக அதன் முக்கால் பாகம் அகலமுமோ, அதன் கடைசிக்கு ஸமமான அளவிலுமோ
45. மெலிந்த நுனியையுடையதாகவும், வட்ட வடிவமாகவும் எண்கோண வடிவமாகவும் விரிந்த வெளிப்பட்ட இதழை உடையதாகவும், வெளிப்பக்கத்தில் அலங்காரம் செய்ய வேண்டும்.
46. கீழ்விரிப்பு பலகையின் மேல் சிறிது வெளிப்பட்ட அமைப்பை உடைய வாஜநத்தை அமைக்கவும். விருப்பப்பட்ட பலஅமைப்புடன் மேலே வாஜனத்தின் இடைவெளியில்
47. அது வெளிக்கொணர்ந்ததாகவோ, கழுத்து பாகம் வரை உபபீடத்தை அமைக்கவும். இரண்டுவித மரங்களாலோ, ஓர் மரத்தினாலோ
48. அதற்கு சம்பந்தப்பட்டதாக செய்யவும், விருப்பப்படி அச்சுக்கு மேற்பட்ட தேசத்தில் பஞ்சக்ரஹி என்ற இரண்டு கட்டின் அமைப்பை அறிஞர்களால் செய்ய வேண்டும்.
49. விடுபட்ட கனமும் விஸ்தாரமும் அதன் சம்பந்தப்பட்ட வேறு அமைப்புகளையும் பத்ரத்தின் அடியிலும் நுனியிலும், ஸமபத்ரம் என்ற அமைப்பிலும் அவ்வாறே செய்ய வேண்டும்.
50. உட்பட்ட வாஜனத்தின் மேல் உபபீட களத்தின் முடிவு வரை உபபீடத்தின் முடிவில் பாதங்களை செய்யவேண்டும்.
51. அந்த பாதத்தின் மேல் இரண்டு பலகை செய்யவும். பஞ்சக்ராஹி என்ற அமைப்பை உடைய நன்கு சேர்க்கப்பட்ட இரண்டு விட்டங்களை செய்ய வேண்டும்.
52. பத்ரமென்ற அமைப்பின் நுனியிலும், நடுவிலும் மேற்கூறியபடி செய்யவும். உபபீடத்திற்கு மேல் அதிஷ்டானம் என்ற அமைப்பை செய்ய வேண்டும்.
53. அந்த அதிஷ்டானம் உபபீடத்திற்கு ஸமமாகவோ, அதன் அரை பாகமாகவோ, ஒன்றரை பங்காகவோ, அதன் நடுவில் ஆறுபாக அளவினாலோ எது பொருந்துமோ அதை ஏற்க வேண்டும்.
54. 28 பாகமாக, அதன் உயரமானது ஸமமாகும். பத்து, இரண்டு, ஒன்று, ஏழு, ஒன்று, ஒன்று, இரண்டு, ஒன்று, ஒன்று, இரண்டு
55. பத்மம், கர்ணம், பத்மம், குமுதம், பத்மம், வாஜனம், சதந்தத்தை கண்டத்தை கம்பத்தை, மஹாவாஜனத்தையும் செய்ய வேண்டும்.
56. உபபீடத்திற்கு கூறப்பட்டபடி கூடுதல் குறைத்தலை செய்ய வேண்டும். உள்ளடக்கமும் வெளிக்கொணர்தலும் முன்பு கூறியபடியே செய்ய வேண்டும்.
57. இந்த உபபத்ரம், பத்ரம் என்ற அமைப்பை உள்பக்கமாக அமைக்கவும். அதிஷ்டானத்திற்குமேல் பாதவர்கம் செய்தல் வேண்டும்.
58. அதிஷ்டானத்திற்கு ஸமமாகவோ இருமடங்காகவோ செய்ய வேண்டும். அதற்கு இடைபட்டு ஒன்பது அளவிலோ, பாதத்தின் எட்டில் ஓர் அம்சமாகவோ
59. பொம்மை போன்ற பாதங்களால் நாட்டிய அமைப்புகளாலும் பெரிய யாளி உருவங்களாலும், லிங்கம், பூதம், யானை போன்ற பாதங்களாலும் வர்க அமைப்பை எங்கும் அலங்கரிக்க வேண்டும்.
60. அதற்கு இடைவெளியில் திவாரமிட்டு ஆணி போன்றவைகளால் நன்கு செப்பனிடவும். பாதவர்கத்தின் மேல் விரிப்பு அமைக்கவும். அதன் அமைப்பும் முகப்பும் கூறப்படுகிறது.
61. மூன்று பாகம் முதல் ஒவ்வோர்பாக அதிகரிப்பால் ஒன்பது பாகம் வரை அலங்கரிப்பு கூறப்படுகிறது.
62. பாரத்தின் உச்சம் பதினாறு பாகத்தில் மூன்று, ஒன்று, இரண்டு, ஏழு இவைகளாலும் ஒன்று, ஒன்று, ஒன்று, அம்சங்களால் மேற்பட்ட வாஜநம்
63. நித்ரா, கபோதம், ஆலிங்கம், வாஜநம், பிரதிவாஜநம், பிரவேசம், நிர்மகம் என்ற பெயருள்ள குறிப்புகளை ஆலய அமைப்பு முறைப்படி செய்ய வேண்டும்.
64. இது முதல் தளத்திற்கு கூறப்பட்டுள்ளது. ஸமமான ஆரம்பத்தையுடைய பத்ரமானது ஆகும். பாதம் வரையிலுமோ, பத்மம்வரை அடியிலிருந்து குறைந்ததாகவோ
65. இரண்டு பக்கத்திலும், ஒன்று முதல் ஆறு பாகம் வரை நுழைவின்றியோ அமைப்புடையது உபபத்ரமாகும்.
66. ஓர் தளமுடைய தேர் அமைப்பு கூறப்பட்டு இரண்டு தளத்துடன் கூடியதாகவோ அமைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆறு முதல் முப்பது அம்சம் வரை அடிபாகம் வரை ஸமமாகவோ
67. விளிம்பின் உயரம் வரை இரண்டு தளத்தின், பாதம், கபோதம் இவைகளின் உயரமாகும். இந்த முறைப்படியே மூன்று தள தேரையும் அமைக்க வேண்டும்.
68. நல்ல மரத்தின் ஓர் அங்குல கனம் அல்லது வேண்டிய அளவு கனமுள்ள பலகைகளால் மேல் பாகத்தை வலுவாக மூடவேண்டும்.
69. பத்ர பீடத்தையும் உபபத்ர பீடத்தையும் இவ்விதமே செய்ய வேண்டும். இவ்வாறே போவதற்கும் வெளியில் வருவதற்கும் அமைக்க வேண்டும்.
70. போவதற்கும், வெளியில் வருவதற்கும் வழியில்லாது போனால் நல்ல கயிற்றையாவது வைக்க வேண்டும்.
71. பல தளங்கள் இருக்குமேயானால் அதில் விசேஷம், சொல்லப்படுகிறது. தேரில் ஏறுவதற்காக படிகட்டுபோல் அமைக்கவும்.
72. பத்ரபீட அமைப்பிற்கு கூறியபடி அகல நீளத்தை முன்பும், பின்பும் அமைக்கவும். பத்ர பீடத்திற்கு ஒவ்வொரு பக்கத்திலும் நுழைவு அமைப்பு இருக்க வேண்டும்.
73. அதன் அமைப்பு முறை படிக்கட்டை மேல் அமைக்கவும். உபபத்ர பீடமின்றியோ பத்ர பீடத்தை பாரம் என்ற விரிப்புத்தளம் வரையிலுமோ செய்ய வேண்டும்.
74. இவைகள் இல்லாமல் இருந்தாலும் உபபீடம் மட்டும், அமைத்து அதன் மேல் இறைவனை எழுந்தருளச் செய்ய வேண்டும்.
75. உபபீடமின்றி மசூரம் என்ற அமைப்பை மட்டுமோ செய்யவும். வெளியில் உள்ளபடி செய்வது கூறி உள்ளே செய்வது இங்கு கூறப்பட்டுள்ளது.
76. பாத வர்க்கத்தின் இடைவெளியில் கம்பத்தின் மேலாக, க்ஷúத்ர பாதங்களை அமைக்கவும். மேல்பாக கம்பத்தை கட்டப்பட்டதாக அமைக்கலாம்.
77. அதற்கு மேல் நுனியாக விளிப்பை பஞ்சக்ராஹி என்ற அமைப்பை கூடியதாகவோ, இல்லாமலோ அமைக்கவும் பலவித ஆஸன அமைப்புகளை ஒவ்வொன்றுக்கும் அமைக்க வேண்டும்.
78. மிகுந்த காந்தியை உடையதாயும், தராசின் முகஅமைப்பை அனுசரித்ததாயும் அதற்குமேல் ஜயந்தீ என்ற அமைப்புகளையும், அதற்குமேல் விரிப்பையும் அமைக்க வேண்டும்.
79. விருப்பப்பட்ட கனம், உயரத்திலிருந்தவாறு விஜியை அமைக்கவும். பலவித தாழ்பாள், பட்டிகை, பஞ்ச க்ராஹி என்ற அமைப்புகளால்
80. பெரிய ஆணிகளாலும், பெரிய தாழ்பாளாலும் உயர்ந்த கீல்களாலும் கூர்மையான வளைந்த பட்டைகளாலும் நன்கு கட்ட வேண்டும்.
81. இது ரங்கம் என்ற அமைப்பை கூறியுள்ளது, தோரணத்துடன் கூடியோ, தோரணமின்றியோ பாதங்களுடன் சேர்ந்துள்ளதோ தேர் எனப்படுகிறது. அதன் அளவு கூறப்பட்டுள்ளது.
82. நான்கு தளம் ஆரம்பித்து அரை தாள அளவாக அதிகரிக்கவும். மூன்றங்குலம் முதல் எட்டு அங்குலம் வரை காலின் கன அளவாகும்.
83. கால்பாக அங்குல அதிகரிப்பால் மூன்றங்குலம் வரை பாதத்தின் அகலம் கூறப்பட்டு ஆலயம் போன்ற பாதத்தின் அளவு கூறப்படுகிறது.
84. நுனியிலும் அடியிலும் சிகையுடன் கூடியதாயும், கும்பம் முதலான அமைப்புகளுடன் கூடியதாய் பாதங்களை அமைக்கவும். பலவித கூர்மையான அமைப்புகளை பலகைகளில் அமைக்க வேண்டும்.
85. தாள அளவிற்கு கீழிருக்கும் விட்டங்களால் பாதத்தின் அடிபாகத்தை கட்ட வேண்டும். அவ்வாறே இரும்பு கம்பிகளால் தாங்கும்படி நன்கு இறுக்கமாக கட்ட வேண்டும்.
86. பாதத்திற்கு மேல் விரிப்பை அமைக்கவும். கொடுங்கை அமைப்பதற்கு உரியதாகவும் அந்த விரிப்பு சிகை போன்ற அமைப்பினால் கொடுங்கை என்ற அமைப்பை உடையதாயும்
87. தங்கம், வெள்ளி, ஆகிய தகடினாலும், தாமிரங்களால் பலகைகளாலும் மற்ற இடங்களை பிரகாசிக்கின்ற ஸ்தூபியுடன் கூடியதாக மூட வேண்டும்.
88. சுபம், ஆயாதி, என்று கணக்களவுடன் கூடியதாக ரதம் கூறப்பட்டது. அந்த ரதம், அகல, நீளத்தால் சிறு குறிப்புடன் கூறப்படுகிறது.
89. இரண்டு ஸகள பிம்பமூர்த்திக்கும் நீள அகலத்திலோ இரண்டு, மூன்று நான்கு அளவுகளால் குறைத்தோ, கூட்டியோ செய்யவேண்டும்.
90. ஏழு, ஐந்து, ஆறு, ஏழு ஆகிய அளவுகளால் நீளத்தையும், அகலத்தையும் மூன்று, பதினைந்து அளவாக அமைக்கவும். முற்பது முழம் இந்த ரதத்தில் கூறப்பட்டுள்ளது.
91. சட்டத்தேர் பல்லக்கு முதலியவைகளிலும் சுபாசுபம் கூறப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த பிரதிஷ்டை சொல்லப்படுகிறது.
92. ரதசில்பியை அனுப்பிவிட்டு சுத்தமான ஜலத்தால் ரதத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். கோஜலம், கோமயம், தர்பை தீர்த்தம் இவைகளாலும் சுத்தம் செய்ய வேண்டும்.
93. பஞ்ச கவ்யத்தால் பிரோக்ஷித்து புண்யாக தீர்த்தத்தாலும், அஸ்த்ரமந்ர தீர்த்தத்தாலும் புரோக்ஷித்து சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.
94. தாமரை மொட்டு போன்ற இடத்தில் ரக்ஷõபந்தனம், ஹ்ருதயமந் திரத்தால் செய்ய வேண்டும். வஸ்த்ரம் ஸமர்பித்து ஆலயத்திற்குச் சொன்னவாறு தத்வ தத்வேஸ்வரர்களோடு கூடவும்,
95. மூர்த்தி, மூர்த்தீஸ்வரர்களோடு கூடவும், தெற்கு வடக்கிலுள்ள சக்ரத்தில் சூர்ய, சந்திரனையும் பூஜிக்க வேண்டும்.
96. அச்சில் விஷ்ணுவையும் கீழ் விரிப்பு பலகையில் ஆதார சக்தியையும், உபபீடத்தில் வ்ருஷபத்தையும் ஆதாரத்தில் அனந்தனையும் பூஜிக்க வேண்டும்.
97. தர்மாதிகளையும் அதர்மாதிகளையும் பாதத்தில் பூஜித்து அதற்கு மேல் அதச்சனம் ஊர்த்வச்சத்தையும் இவைகளை பூஜிக்க வேண்டும்.
98. விரிப்பு பலகையில் மேலும் கீழும் பத்மகர்ணிகையையும் பூஜித்து நவ சக்திகளையும் பூஜித்து சிவாஸனத்தை கல்பிக்க வேண்டும்.
99. பிரும்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன் இவர்கள் ரதத்தின் அதிபர்கள், சிகரத்தில் ஸதா சிவபெருமானும், ஸ்தூபியில் சிவபெருமானும் நாயகராவார்.
100. தாமரை, மொட்டுகளில் அனந்தன் ஆலய அமைப்பினால் வ்யாப்த்தமாக அறியவும். அதில் நூல் வஸ்திரம், கூர்ச்சம் இவைகளோடு கூடிய
101. தங்கம், கூர்ச்சம், ஒன்பது கும்பங்களை வைத்து நடுகும்பத்தில் சிவபெருமானையும் கிழக்கில் உள்ள கும்பத்தில் சூர்யனையும், தென்கிழக்கில் சந்திரனையும்
102. தெற்கில் விஷ்ணுவையும், வடமேற்கில் உள்ள கும்பத்தில் சக்தியையும், மேற்கில் வ்ருஷபத்தையும் வடமேற்கில் உள்ள கும்பத்தில் அனந்தரையும் பூஜிக்க வேண்டும்.
103. தர்மாதிகளை வடக்கில் உள்ள கும்பத்திலும், ஈசான கும்பத்திலும் சேஷனையும் சந்தன, புஷ்பங்களாலும், பூஜித்து ஹோம கர்மாவையும் செய்ய வேண்டும்.
104. நிறுவப்பட்ட கும்பங்களை சுற்றியோ அல்லது இரதத்தின் நான்கு பக்கங்களிலோ ஒன்பது குண்டங்களையோ ஐந்து குண்டங்களையோ அல்லது கிழக்கில் ஒரு குண்டத்தையே அமைக்க வேண்டும்.
105. குண்டஸம்ஸ்காரத்தையும் செய்து, பிரதானத்தில் ஸாங்கமாக சிவபெருமானை நூற்றுக்கணக்கான ஹோமத்தால் சந்தோஷிக்க செய்ய வேண்டும்.
106. அந்தந்த திக்குகளில் உள்ள குண்டங்களில் சூர்யன் முதலியவர்களையும் ஐந்து குண்டமாக இருக்குமேயானால் ஒவ்வொரு குண்டத்திலும் இரண்டிரண்டு தேவதைகளையும் பூஜிக்க வேண்டும். ஒரே குண்டமாக இருக்குமேயானால் எல்லா தேவதைகளையும் பூஜிக்கவும். (சூர்யன், சந்திரன், விஷ்ணு - ஆதாரசக்தி, வ்ருஷபன், ஆனந்தன், தர்மாதிகள், அதர்மாதிகள், சேஷன், சிவபெருமான்.
107. ஸமித்து, நெய், அன்னம், பொறி, எள், இவைகளால் ஹோமம் செய்ய வேண்டும். தத்வ தத்வேஸ்வரர்களையும் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களையும் பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும்.
108. பலா, அத்தி, அரசு, ஆல், இவைகளை கிழக்கு முதலிய திக் குண்டங்களுக்கு உகந்தது. வன்னி, நாயுறுவி, பில்வம், இச்சி இவைகளை தென் கிழக்கு முதலிய குண்டங்களில் ஹோமம் செய்ய வேண்டும்.
109. பிரதானத்திற்கு பலாச சமித்து சிறந்ததாகும் என சொல்லப்படுகிறது. பூர்ணாஹுதியையும் கொடுத்து, இரண்டாம் நாளில் கும்ப, அக்னி, இவைகளை பூஜித்து
110. நல்ல முஹுர்த்த வேளை வந்தபொழுது ஆசார்யன் மந்திரம் நியாஸம் செய்து ஜ்யோதிஷர் சில்பி இவர்களுடன் கூடினவராய்
111. அந்தந்த கும்பங்களில் உள்ள தீர்த்தங்களால் அந்தந்த இடங்களுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இங்கு சொல்லாதவை பொதுவான ஸ்தாபன கர்மாவில் சொல்லப்பட்டபடி செய்யவேண்டும்.
112. எவன் இவ்வாறு ரதத்தை அமைத்து பிரதிஷ்டை செய்கிறானோ அவன் இங்கேயே செல்வந்தனாகவும் லக்ஷ்மீகடாக்ஷம் பொருந்தியவனாகவும் ஆகி விரும்பிய பயனையும் அடைவான்.
113. ரதத்தை இவ்வாறு தயார்செய்து தேரோட்டத்தையும் செய்ய வேண்டும். பைடீ, சேகரீ, மண்டீ, என தேர் மூன்று வகைப்படும்.
114. பதினைந்து அங்குலம், முதற்கொண்டு ஐந்தைந்து அங்குலமாக விருத்தி செய்து, தொண்ணூற்றாவது அங்குலம் வரை பல்லக்கின் விஸ்தாரம் கூறப்பட்டுள்ளது.
115. இருபத்தியோரு அங்குலம் முதல் ஒரு மாத்ரையளவு அதிகரிப்பால் நூற்றி தொண்ணூற்றி ஒன்பது அங்குலம் நீளம் அமைக்க வேண்டும்.
116. யானை கண் விழி அமைப்பை வெளி, நடு உள்பக்கம், உதாரணமாக கூறப்பட்டுள்ளது. தேவர்களுக்கும், அரசர்களுக்கும் பாதத்திற்கு வெளிப்பட்டதாக அமைக்க விசேஷமாக கூறப்பட்டுள்ளது.
117. பாத நடுவில் பொதுவான பரப்பளவு முறையை அறியவும், இவ்வாறு யவை அளவால் யானைக் கண் அமைப்பை செய்வது நடுநிலையாக கூறப்பட்டுள்ளது.
118. கால் பாகமளவு யானைக் கண் அமைப்பை உள்ளிட்டதாக செய்வதை எல்லாவற்றிற்கும் கூறப்பட்டுள்ளது. மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது ஆகிய மாத்ரை அளவுகளால் அகலத்தை செய்ய வேண்டும்.
119. கனத்தின் முடிவில் பதினான்கு விதஸ்தி அளவாக கூறப்பட்டுள்ளது. விதஸ்தி என்பது நீட்டப்பட்ட கட்டை விரல் முதல் சுண்டு விரல் வரையுள்ள அளவாலோ ஆயாமம் என்ற அளவுகளை அறிய வேண்டும்.
120. பரப்பளவினால் நீளத்திலிருந்து அல்லது எல்லா அமைப்பிலிருந்து அளவை கிரஹிக்கவேண்டும். எட்டு. மூன்று, எட்டு, பன்னிரெண்டு, பதினான்கு என்ற அமைப்புகளால் அமைக்கவேண்டும்.
121. எட்டு இருபத்தியேழு, குறைந்ததாகவோ முப்பது, ஏழு இவைகளால் வரிசையாக ஆயம் முதலிய அமைப்புகளை அறியவேண்டும்.
122. ஆயம், வ்யயம், யோநி, நக்ஷத்ரம், வாரம் இவைகளை விஸ்தாரத்திலோ ஆயாமம் என்ற அளவினால் வ்யயம் (கழிப்பதை) செய்ய வேண்டும்.
123. ஆயாமென்ற அளவினால் யோநியையும் அந்த அளவினால் நக்ஷத்ர அமைப்பினால் கூறப்பட்டுள்ளது. ஆயாயமென்ற அளவால் விஸ்தாரத்தை சேர்த்து திதிவார அமைப்பை உயரமாக செய்ய வேண்டும்.
124. மூன்று மாத்திரை, ஒரு மாத்திரை அளவுகளால் அதன் பிரிவுகளால் இரண்டாக கூறப்பட்டுள்ளது. ஓர்முழ அளவு உயரத்தை அறியவும், அலங்காரம் கூறப்பட்டுகிறது.
125. மூன்று மாத்திரை முதல் கால்பாத மாத்திரை அதிகரிப்பால் பதினெட்டங்குலம் வரை யானை கண் அமைப்பின் அகலமாகும்.
126. ஐந்து மாத்ரை ஆரம்பித்து கால்மாத்ரை அதிகரிப்பால் ஏழு மாத்ரை வரை யானைக்கண் அமைப்புகளை அதிகரிக்கவும் செய்யலாம்.
127. ஐந்து மாத்ரை முதல் கால்பாக மாத்ரை முதலான ஏழு மாத்ரை வரை ஓர்முழம் அளவு வட்ட வடிவமாகவோ, நாற்கோணமாகவோ அமைக்க வேண்டும்.
128. நீள்வட்டவடிவமாகவோ, செவ்வகபாகமாகவோ கைஅமைப்பாக கூறப்பட்டுள்ளது. பதினெட்டம்சத்திலிருந்து அம்ச வ்ருத்தியால் தன்பரப்பால் ஆறம்சம்வரை
129. இஷ்டிகை இரண்டுகை பாகங்களாலும் கர்ணம் கூறப்படுகிறது. ஆனால் கை அமைப்பால் அதன் பிரிப்பின் எட்டு அம்சம் வரையக விசேஷம் கூறப்பட்டுள்ளது.
130. கால் மாத்ரையிலிருந்து, கால்மாத்ரை அதிகரிப்பால் நான்கு மாத்ரைவரை பட்டிகையின் கனமும், அகலமும் முறைப்படி அமைக்க வேண்டும்.
131. ஸர்பம், சிங்கம், யானை, குதிரை, மனிதர்கள், வித்யாதரர்களாலும் பொம்மை போன்ற அமைப்பு பாதங்களாலும் பட்டைகளின்றி வாஜனம் என்ற அமைப்புகளாலும்
132. பெரிய கம்பங்களாலும், கொடிகளாலும் பெரிய ஆணிகளாலும், மூளையில் கட்டப்பட்டவைகளால் நல்ல அம்சங்கள் புறா தங்குமிடம் பிரதிவாஜனங்களாலும் அழகுள்ளதாக செய்ய வேண்டும்.
133. மீன்களாலும் வலயங்களாலும், சிறிய குண்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டு, தங்கம், தாம்ரம், தந்தம், மரவேலைப்பாடுகளால்
134. அழகான பல்லக்கு செய்ய வேண்டும். இது பைடீ எனப்படும். சிகரத்தோடு கூடியது சேகரீ எனப்படும்.
135. பாதங்களோடு கூடிய மஞ்சங்களால் மண்டபாகரமாக உள்ளது மௌண்டீ எனப்படும். பெருவாகை, கருப்புநிறமுள்ள மரம் (கருங்காலி) பலா, வேம்பு, அர்ஜூனம்
136. இலுப்பை, கருங்காலி மற்றும் பாலுள்ள மரங்கள் பல்லக்கு அமைப்பிற்கு கூறப்பட்டுள்ளது. இது போன்ற இன்னும் உயர்ந்த மரங்களால் லக்ஷணங்களோடு பல்லக்கு தயாரிக்க வேண்டும்.
137. இதற்கும் ஸிம்மாஸனத்தைப்போல் புரோக்ஷணம் செய்ய வேண்டும். (பர்யங்க அளவுடன்) பாதத்துடன் பல்லக்கின் விஸ்தாரத்தை சொல்லப் போகிறேன்.
138. மூன்று மடங்கு இடைவெளி உள்ளதாக விஸ்தாரமும், நான்கு பாதங்களுடன் கூடியதாகவும், பாதத்தின் அளவும் கூறப்பட்டுள்ளது.
139. மூன்றங்குலத்திலிருந்து மூன்றங்குல அதிகரிப்பால் ஐம்பதுமுழம் வரை பாதத்தின் நீளம் கூறப்பட்டு, இரண்டங்குலத்தால் பாத வ்ருத்தியுடன் கூறப்பட்டுள்ளது.
140. பாதத்தின் அடியில் பதினைந்து மாத்திரை அகலமாகும். பலவித கெண்டி அமைப்புடனும் பலவித தாமரை, பலகோடு அமைப்புகளோடும்
141. பல கர்ணபாகங்களுடனும் மூன்று மடங்கு இருப்பினால் கூடியதும் அதன் பக்கங்களில் யானைக் கண் போன்ற அமைப்புகளை உடைய பலகையையோ செய்ய வேண்டும்.
142. அதிகமான பலகையையோ, நன்கு அழகாகவும் பலமாகவும் இருக்கும்படி அமைக்கவும். பலவித பட்டைகளும் பலவித கம்பங்களையும் உடையதாக வேண்டும்.
143. பலவித ஆப்புகளையும் பலவித உயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டும், உலோகத்தாலோ தந்தத்தாலோ, மரத்தினாலோ எல்லா திரவ்யங்கள் கலந்ததாகவோ
144. பல்லக்கை ஆயம் என்ற கணக்கு வகைகளால் சேர்ந்ததாக செய்வது ஐச்வர்யத்தை கொடுக்கும். இது பர்யங்கம் (விரிப்பு) என்ற அமைப்பை உடையதாகும். பாலபர்யங்கமும் அவ்வாறேயாகும்.
145. பல்லக்கைப்போல் நீட்டப்பட்ட கர்ண வேலைப்பாடின்றி கேடயத்தின் பாகத்துடன் கூடி ஓர்பட்டிகையோடு கூடியதும்.
146. காலின் அடியில் வேம்பு முதலிய மரங்களால் ஏற்படுத்தப்பட்ட சிறிய சக்கரத்தோடு கூடியது பாலபர்யங்கம் என்று பெயர்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தேர் முதலியவைகளின் அமைப்பு முறையாகிற எழுபத்தோராவது படலமாகும்.

அர்ஜுனனுக்கு காண்டீபம் கிடைத்தது எப்படி?

அர்ஜுனனுக்கு காண்டீபம் கிடைத்தது எப்படி?
அர்ஜுனன் என்றதும் அவனது கையிலுள்ள வில் நினைவுக்கு வரும். வில்வித்தையில் மிகவும் உயர்ந்தவன் அர்ஜுனன். இந்த வில்லின் பெயர் காண்டீபம்.
இதனால் அர்ஜுனனுக்கு காண்டீபன் என்ற பெயர் உண்டு. இதைக் கொண்டே அவன் குரு÷க்ஷத்ர யுத்தத்தில் கவுரவர்களை வென்றான். இந்த காண்டீபம் அவனுக்கு கிடைத்தது எப்படி தெரியுமா?
...
சுவேதன் என்ற மகாராஜா சில கோரிக்கைகளுக்காக நூறு ஆண்டுகள் ஒரு யாகம் செய்தான். யாகத்தீயில் நெய் விடப்பட்டது. தீக்கடவுளாகிய அக்னிதேவன் இதைக் குடித்து குடித்து மந்தகதியாகி விட்டான். மந்தநோய் தீர வேண்டுமானால், தனது ஆக்ரோஷத்தை (வெப்பத்தை) யார் மீதாவது காட்ட வேண்டுமென்ற நிலை ஏற்பட்டது. அவன் ஒரு அந்தணன் போல் வேடமிட்டு, அர்ஜுனனினிடம் வந்தான். அர்ஜுனா! எனக்கு பசிக்கிறது. உணவு தாயேன், என்றான்.
அவன் நெருப்புக்கடவுள் என்பதை அறியாத அர்ஜுனனும் உணவளிப்பதாக வாக்கு கொடுத்து விட்டான். எனக்குரிய உணவு காண்டவவனத்தில் இருக்கிறது, என அந்தணர் கூறவே, அந்த வனத்தைக் கைப்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
உடனே அக்னிதேவன் தன்னிடமிருந்த பிரம்ம தனுசுவாகிய காண் டீபத்தையும் (பிரம்மனால் வழங்கப் பட்ட வில்), வெள்ளைக் குதிரைகள் பூட்டிய அழியாத தேர் ஒன்றையும் கொடுத்தான். கண்ணபிரான் தேர் செலுத்த, அர்ஜுனன் அதில் ஏறிச் சென்றான். இந்திரனுக்குச் சொந்தமானது அந்த வனம். அதைக் காக்க அர்ஜுனனுடன் இந்திரன் போராடினான்.
ஆனால், அவனை வென்ற அர்ஜுனன் அந்தக் காட்டில் இருந்த அரக்கர்களையும் கொன்றான். பின்னர், அந்தணர் வேடத்தில் இருந்த அக்னிதேவன் காண்டவ வனத்திற்குள் நுழைந்தான். தீப்பற்றி எரிந்தது. அந்தக் காட்டை தனக்கு உணவாக்கிக் கொண்டான் அக்னி. இப்படியாக, அர்ஜுனனுக்கு பெயர் சொல்லும்படியான ஒரு ஆயுதம் கிடைத்தது.

சூர்ப்பனகை

சூர்ப்பனகை
ராமாயணக் கதைக்கு முக்கிய காரணமானவளே சூர்ப்பனகை. அவள் தான், சீதையின் அழகு பற்றி தன் அண்ணன் ராவணனிடம் கூறி அவனை உசுப்பேற்றியவள். முற்பிறப்பில் இவள் ஆனந்த குருஎன்பவளுக்கு மகளாகப் பிறந்தாள். அப்போது அவளது பெயர் சுமுகி. ஆனந்தகுருவிடம், சத்தியவிரதன் என்ற மன்னனின்மகனான சங்கசூடணன் என்பவன் பாடம் படித்தான். சங்கசூடணனை சுமுகிஒருதலைப்பட்சமாகக்காதலித்தாள்.ஒருநாள் பாடத்தில் சந்தேகம் கேட்க குருவின் வீட்டுக்கு சங்கசூடணன் சென்றான். குரு வீட்டில் இல்லை. சுமுகி தனித்திருந்தாள். தன் காதலை சங்கசூடணனிடம் வெளிப்படுத்தினாள். பெண்ணே! குரு துரோகம் பொல்லாதது. குருவின் மகளான உன்னை என் தங்கையாகவே நினைக்கிறேன், என சொல்லிவிட்டு போய்விட்டான். ஏமாற்றமடைந்த சுமுகி, தந்தை வீட்டுக்கு வந்ததும் தன்னை சங்கசூடணன் கெடுத்து விட்டதாக பழி போட்டு விட்டாள். இதை நம்பிய குரு, மன்னனிடம் இதுபற்றி புகார் தெரிவித்தார். மன்னனும் அதை நம்பி, தன் மகனின் கை, கால்களை வெட்டிவிட்டான். சங்கசூடணன் பூமியில் விழுந்து, தர்மம் அழிந்து விட்டதா? எனக் கதறினான். உடனே பூமி பிளந்தது. உள்ளிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டான். சங்கசூடா! இப்பிறப்பில் உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய சுமுகியை மறுபிறப்பில் நானே பழிவாங்குவேன், என்றான். சங்கசூடணன் மறுபிறப்பில் ராவணனின் தம்பியாக (விபீஷணன்) பிறந்தான். அவனது தங்கையாக சுமுகி பிறந்தாள். அவளே சூர்ப்பனகை எனப் பெயர் பெற்றாள். ஆதிசேஷன் லட்சுமணனாகப் பிறந்து அவளது மூக்கை அறுத்தான். பாவம் செய்தவன் தண்டனை அனுபவித்தே தீருவான்.
ராமனுக்காக காத்திருந்த சூர்ப்பணகை!
வயதானதால் கூனியான கிழவி த்ரிவக்ரை, கூடை நிறையப் பூக்கள் மற்றும் அரைத்த சந்தனத்துடன் தினமும் அதிகாலை நேரத்தில் வீட்டைப் பூட்டிவிட்டு மதுரா நகரில் உள்ள அரண்மனைக்குப் புறப்படுவாள். இது அவளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பணி! அரண்மனையை அடைந்ததும், மகாராஜா கம்சனிடம் பூக்களையும் சந்தனத்தையும் கொடுத்துவிட்டு, வீடு திரும்பி வந்து மறுபடியும் கதவை மூடிக் கொள்வாள். அதன் பின் கதவு திறக்காது. எத்தனையோ முறை விளையாட்டாகச் சிறுவர்களும், உண்மையாகவே கம்சனின் காவலர்களும் தட்டிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், கதவு திறந்ததில்லை! அந்த வீட்டுக்குள் அப்படி என்ன இருக்கிறது? தினமும் கிழவிக்குப் பூக்களும் சந்தனமும் எப்படி கிடைக்கிறது? என்பது எவருக்கும் தெரியாத ரகசியம். பலரும் த்ரிவக்ரையிடம் கேட்க முயன்றனர். எவரையும் அவள் ஒரு பொருட்டாக மதிக்காததால், அவள் எவரது கேள்விக்கும் பதில் சொன்னதில்லை. அவ்வளவு ஏன்... மகாராஜா கம்சனே கேள்வி கேட்டபோதும் அவள் பதில் சொன்னதில்லை. இவ்வளவு வாசனை நிறைந்த மலர்களும் கமகமக்கும் சந்தனமும் வேறு எங்கும் கிடைக்காததால், கம்சனும் அதன்பின் அவளைத் தொந்தரவு செய்வதில்லை.
அந்தக் கிழவியின் ஆயுள் குறித்தும் மதுரா மக்களிடையே மிகுந்த கருத்து வேறுபாடுகள் உண்டு. தங்களுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே அவள் கிழவியாக இருப்பதாகவும், நெடுங்காலமாக இப்படி அரண்மனைக்குச் சென்று சேவை செய்து வரும் அவள் வயது எப்படியும் ஆயிரத்தைத் தாண்டும் என்றும் மதுராவில் உள்ள பெரியவர்கள் சொல்வார்கள். த்ரிவக்ரையை பொதுமக்கள் எவரும் அலட்சியம் செய்வதில்லை. அவளும் எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தன் பணியைத் தொடர்ந்தாள். யாராலும் அசைக்கக்கூட முடியாத சிவ தனுசை, சிறுவன் கிருஷ்ணன் முறித்து விட்டான்... தன்னைக் கொல்ல வந்த யானையைப் பந்தாடி விட்டான்... தாக்க வந்த கம்சனின் வீரர்களை கிருஷ்ணனின் சகோதரனான பலராமன், பரலோகத்துக்கே அனுப்பிவிட்டான் என்கிற செய்திகள் காட்டுத்தீ போல மதுரா நகரில் பரவின. இப்படிப்பட்ட வீரச் சிறுவர்களைப் பார்க்கும் ஆவலில் மக்கள் அவர்களைத் தேடி வந்தனர். அப்போதும் மதுரா நகரின் எல்லா வீட்டுக் கதவுகளும் திறந்து கிடக்க... மூடியிருந்த ஒரே வீடு த்ரிவக்ரையினுடையது மட்டுமே. கிருஷ்ணா... நேராக அரண்மனைக்குப் போய் நம்மை அழைத்த கம்சனின் கதையை முடிக்கலாம்! என்று அழைத்தான் பலராமன்.
அதைவிட நாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமை ஒன்று இருக்கிறது அண்ணா. நீங்கள் செய்த பாவத்துக்கான பரிகாரமும் இதில் அடங்கி இருப்பதால், தாங்களும் கண்டிப்பாக என்னுடன் வர வேண்டும்! என்று ஆரம்பித்தான் கண்ணன். பாவமா? நான் அப்படி எதையும் செய்ததாக நினைவில்லையே கண்ணா! இன்னும் சொல்லப் போனால் இதுவரை இந்த மதுரா நகருக்கே நான் வந்ததில்லை. பின் எப்படி பாவம் செய்திருக்க முடியும்! என்று ஆச்சரியத்துடன் கேட்டான் பலராமன். அண்ணா, இது விதியின் விளையாட்டு! என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். அங்கு வந்தால் உங்களுக்கே புரியும்! - பதிலளித்து நகர ஆரம்பித்தான் கண்ணன். பலராமனும் பின்தொடர்ந்தான். வழிநெடுகத் தங்களைப் பார்த்து உற்சாகமாகக் குரல் கொடுத்த மக்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டே நடந்தான் கண்ணன். அந்தத் தெருவில் ஒரே ஒரு வீடு மட்டும் மூடப்பட்டிருந்தது. அதுதான் த்ரிவக்ரையின் வீடு. மனதுக்குள் காதல் மணியடித்தது. அந்த வீட்டை நெருங்கி, அதன் கதவைத் தட்ட முயன்றான் கண்ணன். அவர்களைச் சூழ்ந்து நின்ற மக்கள் கூட்டம் பக்கென்று சிரித்தனர். கண்ணா... இது வீண் வேலை! அது யாருக்காகவும் திறக்காத கதவு. சிவ தனுசு போல் உன்னால் உடைக்கவும் முடியாது! என்று குறும்புக்கார இளம்பெண் ஒருத்தி சொன்னாள். இந்த வீட்டில் இருப்பவரிடம் பாவ மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறான் கண்ணன்! என நினைத்த பலராமன், வேகமாக முன்வந்து அந்தக் கதவைத் தட்டினான் அப்படியும் அந்தக் கதவு திறக்கவில்லை.
கோபப்பட்ட பலராமன், பலம் கொண்ட மட்டும் தட்டிப் பார்த்தான். பலனில்லை. ஆவேசத்தில் கதவை எட்டி உதைத்தான். திறக்கவில்லை. கடைசியாக, கதவை உடைக்க முயன்ற பலராமனைத் தடுத்தான் கண்ணன். அண்ணா, இது காதல் கதவு. தட்டினால் திறக்காது. தொட்டால்தான் திறக்கும்! என்றவாறு கதவின் மீது ஆசையுடன் கை வைத்தான் கண்ணன். மெள்ளத் திறந்தது கதவு. நீர் நிறைந்த கண்களுடன் அவர்களை வரவேற்றாள் த்ரிவக்ரை. ஊர்மக்கள் திறந்த வாய் மூடாமல் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க... கண்ணனும் பலராமனும் உள்ளே நுழைந்ததும் கதவு மறுபடியும் மூடிக் கொண்டது. வருடக் கணக்கில் காக்க வைத்து விட்டேனா?! என்று குறும்புடன் சிரித்தான் கண்ணன். யார் இது? என்று தெரியாமல் விழித்தான் பலராமன். ராமா! உன் காதலுக்காக இன்னும் எத்தனை யுகங்கள் ஆனாலும் சுகமாகக் காத்திருப்பேன்.. ஒரு தவம் போல் பார்த்திருப்பேன்! என்று த்ரிவக்ரை சொன்னதும் பலராமனுக்குப் பளிச்சென்று விஷயம் புரிந்தது. கண்ணா...! இவள் ராவணன் சகோதரி சூர்ப்பணகையா! ராம யுகத்தில் இருந்து உன் காதலுக்காகக் காத்திருக்கிறாளா? என்றபடி த்ரிவக்ரையின் காலடியில் விழுந்தான் பலராமன். பிறகு, என்னை மன்னியுங்கள். உங்கள் காதலைப் புரிந்து கொள்ளாமல், உங்களுக்கு மாபெரும் தண்டனை அளித்து விட்டேன்! என்றவாறு கண்ணீர் சிந்தினான். பலராமனின் கண்ணீர்த் துளிகள் தன் உடலில் பட்டதும், அழகான இளமங்கையின் தோற்றம் பெற்றாள் த்ரிவக்ரை. எழுந்திருங்கள் லட்சுமணா... நான் ராட்சத குலத்தில் பிறந்ததால், காதலை வெளிப்படுத்தத் தெரியாமல் தவறு இழைத்து விட்டேன். தவறு என்னுடையதுதான்! என்றாள் த்ரிவக்ரை.
கம்சனுக்கு மட்டும்தானா... எனக்கு மலர்களும் சந்தனமும் கிடையாதா? என்று கண்ணன் ஆவலோடு கேட்டான். அதற்காகத்தானே காத்திருக்கிறேன்! என்றவள் கைகளை விரித்து, ராம்...ராம்... என்று சொன்னாள். உடனே வானில் இருந்து பூமாரி பொழிந்தது. அந்த யுகத்தில் நான் ராமனாக அவதாரம் எடுத்ததால், சீதையைத் தவிர வேறு எவரையும் மனதால்கூட நினைக்க முடியாத நிலை. இப்போது நான் மனிதனும் கடவுளும் கலந்த அவதாரம். அதனால் என்னை கண்ணா என்றே நீ அழைக்கலாம்! நீங்கள் கண்ணனாகவோ, பாற்கடலில் வாசம் செய்யும் பரந்தாமனாகவோ இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை வனத்தில் நான் சந்தித்த ராமனுக்காகத்தான் காத்திருக்கிறேன்; இனிமேலும் காத்திருப்பேன். உங்களை வேறு பெயர் சொல்லி நான் அழைக்கமாட்டேன்! என்று சொல்லி அன்புடன் சந்தனத்தை எடுத்து கண்ணனின் கன்னத்தில் பூசினாள் த்ரிவக்ரை. அடுத்த கணமே ஸ்ரீராமனாக மாறி நின்றான் கண்ணன். தான் இனியும் அங்கிருப்பது சரியல்ல என்று நினைத்த பலராமன். கண்ணா! நான் ஊரைச் சுற்றிப் பார்க்கிறேன். நீ வந்து சேர்! என்று கிளம்ப முற்பட்டான். லட்சுமணா, எங்கேயும் போகாதே, நானும் சீதையும் இருந்த குடிலை எப்படி கவனமாகக் காவல் காத்தாயோ அதேபோல் இப்போதும் செய்.ஒரு பெண்ணின் காதலை நோகச் செய்த உன் பாவம் தீரும்! என்று கண்ணன் சொல்ல, வெளியே லட்சுமணனாக நின்றான் பலராமன். அவன் பின்னாலேயே கண்ணன் வெளியே வந்தான். என்ன கண்ணா, ராமனாக இருந்த நீ அதற்குள் வந்து விட்டாய்? என்று அவசரம் அவசரமாகக் கேட்ட பலராமன், யதேச்சையாக உள்ளே பார்த்தான்; அதிசயப்பட்டான். அங்கே... ஸ்ரீராமனுக்கு அன்புடன் அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் த்ரிவக்ரை. நல்ல வேலை செய்தாய் கண்ணா... அவள் காதலின் புனிதத்தின் முன் வேறு எப்படியும் தப்பிக்க முடியாது. இனி யுகம் யுகமாக அவள் காதலிக்கட்டும்! என்று சொல்லிவிட்டு பலராமன் நடக்கத் தொடங்கினான். கண்ணனும் தன் கடமை முடிந்த திருப்தியில் கம்சனைப் பார்க்கக் கிளம்பினான்.

சுதர்மமே சிறந்தது!

சுதர்மமே சிறந்தது!
இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு தத்துவத்தை பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். அது தான் சுதர்மம்.
பகவத்கீதையின் ஆரம்பம் ”தர்மம்” என்ற சொல்லில் துவங்குவதை முன்பு குறிப்பிட்டிருந்தேன். பகவத் கீதை “மம” என்ற சொல்லில் முடிகிறது. ’மம’ என்றால் “என்னுடைய” என்று அர்த்தம். “தர்மம்” மற்றும் “என்னுடைய” என்ற சொற்களுக்கிடையில் 700 சுலோகங்கள் கொண்ட பகவத் கீதை ஒளிர்கிறது. இதைக் குறிப்பிடும் பல அறிஞர்கள் “என்னுடைய தர்மம்” என்பதன் விளக்கமே பகவத் கீதையின் முழு சாராம்சமும் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையே. அர்ஜுனனிற்கு தர்மம் எது என்று விளக்கிய கீதையைப் படிக்கையில் அவரவர் தர்மத்தை ஒவ்வொருவரும் உணராமல் இருக்க முடியாது. சுதர்மம் பகவத் கீதையின் மிக முக்கியமான தத்துவம்.
ஆன்மாவின் நிரந்தரத்தையும், உடலின் அழியும் தன்மையையும் கூறிய பகவான் சுதர்மம் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். அரசகுலத்தவனான அர்ஜுனனுக்கு அறப் போரைக் காட்டிலும் சிறந்த சுயதர்மம் இல்லை என்றும், தேடாமலேயே வரும் தர்மயுத்தம் சொர்க்கத்தின் கதவைத் திறந்து வைத்திருப்பதைப் போன்றது என்றும், அதிர்ஷ்டசாலிகளிகளுக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய பாக்கியம் என்றும் சொல்கிறார். அந்த அறப்போரை நடத்தாமல் போனால் கடமையையும், கௌரவத்தையும் கொன்று பாவத்தை அடைய நேரிடும், பழி வந்து சேரும் என்று எச்சரிக்கிறார்.
இப்படி எல்லா கோணங்களிலும் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனிற்கு வலியுறுத்தும் சுதர்மத்தை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
ஒரு மனிதன் பிறக்கும் போதே அவன் சுதர்மமும் பிறந்து விடுகிறது. ஒருவன் எதற்காக படைக்கப்பட்டானோ அதைச் செய்வது அவன் சுதர்மம். ஒருவனுடைய சுதர்மம் அவன் உண்மையான இயல்பையும், மனப்போக்கையும் ஒத்து அமைவது. அந்த சுதர்மத்தை ஒட்டியே அவன் திறமைகளைப் பெற்றிருப்பான். அதை செய்வதாலேயே அவன் அமைதி அடைய முடியும். இதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று ஒன்றும் கிடையாது. சுலபம், சிரமம் என்றெல்லாம் கணக்கிட்டு எடுத்துக் கொள்வதோ, தள்ளி விடுதலோ கூடாது.
பிறரது தர்மம் சில சமயங்களில் சிறந்ததாகத் தோன்றலாம். ஆனால் அதைக் கடைபிடிப்பதால் நன்மை உண்டாகாது. வினோபா கூறுவார்: “மீன்களிடம் ‘நீரை விட பால் அதிக மதிப்புடையது. அதனால் நீங்கள் பாலில் வந்து வாழுங்கள்’ என்று எவரேனும் சொல்வாராயின் மீன்கள் அதை ஏற்குமா? மீன்கள் நீரில் தான் வாழும். பாலில் அவை இறந்து போகும்”.
அதே போல பிறரது தர்மம் சுலபமாகத் தோன்றலாம். அப்படி தோன்றி அதைக் கடைபிடித்தாலும் அது ஒருவர் வாழ்வை சிறப்பிக்காது. அர்ஜுனனுக்கு இந்த போரைச் செய்வதை விட சன்னியாசம் பெற்றுக் கொண்டு எங்காவது போய் விட்டால் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றினாலும் அவனால் உண்மையாக சன்னியாசியாக முடியுமா? காட்டுக்கே போனாலும் எல்லாவற்றையும் துறந்து விட அவனால் முடியுமா? அஹிம்சையை அவனால் பின்பற்ற முடியுமா? அவனால் சும்மா இருக்க முடியுமா? ஓரிரு நாட்களுக்கு அவனது இயல்பான தன்மைகளை அவன் அடக்கி வைக்கலாம். ஆனால் அத்தன்மைகள் விரைவில் அவனையும் மீறியல்லவா வெளிப்படும்.
இது அவன் பிரச்னை மட்டுமல்ல. நம்மில் பலருடைய பிரச்னையும் தான். நமக்கு அடுத்தவர்கள் தொழில் சுலபமாகத் தெரியும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல், நம்முடைய வேலைகளில் இருக்கும் எல்லா கஷ்டங்களும் தெரியும் நமக்கு அடுத்தவர்கள் தொழில் பிரச்னை இல்லாததாகத் தெரியும். அவரவர் தொழிலில் உள்ள பிரச்னைகளை அவரவரே அறிவார்கள். அடுத்தவர் தொழிலை சில நாட்கள் செய்து பார்த்தால் தான் அதில் உள்ள சிக்கல்கள் புரியும். எனவே பிரச்னைகளைப் பார்த்து பின்வாங்கி அடுத்தவர்களுடைய கடமையோ, தொழிலோ நம்முடையதை விட சிறந்தது என்று எண்ணுவது உண்மைக்குப் புறம்பானது.
எதற்காகப் பிறந்தோமோ அதைச் செய்யாமல் யாரும் தங்கள் வாழ்வில் நிறைவையும், அமைதியையும் பெற முடியாது. இது இந்தக் காலத்திய மனிதர்கள் அலட்சியம் செய்யும் ஒரு மாபெரும் உண்மையாகும். இன்று தொழிலில் உயர்வு, தாழ்வு என்று பார்க்கிறோம். இலாப நஷ்டங்கள் பார்க்கிறோம். ஆனால் நம் இயல்புக்கும், திறமைக்கும் ஏற்ற தொழில் தானா, இதில் நமக்கு மனநிறைவு கிடைக்குமா என்றெல்லாம் பார்க்க மறந்து விடுகிறோம். இன்றைய இளைஞர்களை மூளைச்சலவை செய்து டாக்டர்களாக்கவும், இன்ஜீனியர்களாக்கவும் மட்டுமே ஆக்க, படாத பாடு படும் பெற்றோர்கள் இதை எண்ணிப்பார்க்க மறந்து விடுகிறார்கள்.
எதில் நமக்கு உண்மையான ஈடுபாடு உள்ளதோ அதை ஒட்டியே நம் சுதர்மம் அமையும். எது சுதர்மம் என்று அறிந்து கொள்ள அங்குமிங்கும் செல்ல வேண்டாம். மனதினுள் ஆத்மார்த்தமாகக் கேட்டுக் கொண்டால் போதும். அப்போது பதில் கிடைக்கும். சுதர்மத்தின் வழியே நடக்கையில் கிடைக்கும் சந்தோஷமே அலாதி. அப்படி நடக்கையில் தான் ஒரு மனிதன் உண்மையாக வாழ்கின்றான்.
கணித மேதை பாஸ்கலின் தந்தை அவரை கிரேக்கம், லத்தீன் போன்ற பழைய மொழிகளில் பாண்டித்தியம் பெற வைக்க எண்ணினார். ஆனால் பாஸ்கலுக்கோ கணிதம் என்றால் உயிராக இருந்தது. அவருடைய தந்தை கணித புத்தகங்கள், உபகரணங்கள் எல்லாம் அவருக்குக் கிடைக்காதபடி செய்து பாஸ்கலை ஒரு அறையில் அடைத்து வைத்துப் பார்த்தார். பாஸ்கல் பூட்டிய அறைக்குள் கரித்துண்டால் தரையில் கணிதக் குறியீடுகளால் கோட்பாடுகளை எழுதிப் பார்ப்பார். ஒரு கால காலத்தில் அவருடைய தந்தை தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. பாஸ்கல் தன் தந்தையின் கட்டாயத்திற்காகத் தன் கணித ஈடுபாட்டை தியாகம் செய்திருந்தால் இன்று இந்த உலகம் எத்தனையோ கணித மேம்பாட்டை இழந்திருக்கும்.
ஒவ்வொருவரும் அவரவர் சுயதர்மத்தின் படி, இயல்பாக அமைந்துள்ள திறமையின் படி செயல் புரியும் போது அவர்களும் நிறைவை உணர்கிறார்கள். அவர்களால் சமூகத்திற்கும் நன்மைகள் கிடைக்கின்றன. அப்படி இல்லாமல் அதற்கு எதிர்மாறாக அவர்கள் இயங்கும் போது அவர்களும் சந்தோஷமாக இருப்பதில்லை. அவர்களால் உண்மையான நற்பலன்கள் கிடைப்பதும் அரிதாக இருக்கிறது.
பண்டைய காலத்தைப் போல இக்காலத்தில் வாழ்க்கை முறை எளிமையாக இல்லை. நடைமுறைச் சிக்கல்களும் தற்போது அதிகம் இருக்கின்றன. வருமானத்தை வைத்தே வாழ்க்கையின் வெற்றி இக்காலத்தில் தீர்மானிக்கப் படுகிறது. சில துறைகளில் ஒருவருக்கு மிகுந்த ஈடுபாடும், திறமையும் இருக்கலாம். ஆனால் அத்துறையிலோ வருமானம் சிறிதும் இல்லை என்றால் அவர் எப்படி சுதர்மத்தை மேற்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமே. அப்படி வருமானத்திற்காக வேறு ஒரு தொழில் செய்ய நேர்ந்தாலும் பகுதி நேரமாவது தனக்கு இயல்பாக திறமையும் ஆர்வமும் உள்ள துறைக்கு ஒருவர் ஒதுக்க வேண்டும்.
இதைத் தான் விமானத்தைக் கண்டு பிடித்த ரைட் சகோதரர்கள் செய்தார்கள். பணவசதி அதிகம் இல்லாத அவர்களுக்கு விமானத்தை உருவாக்கும் முயற்சியில் முழுவதுமாக ஈடுபட முடியாத சூழ்நிலை இருந்தது. ஆராய்ச்சி பல ஆண்டுகள் நீண்டதால், அதற்கு நிறையவே பணமும் தேவைப்பட்டதால், அவர்கள் தினசரி வருமானத்திற்கு சைக்கிள் கடை ஒன்றை வைத்து பல ஆண்டுகள் தங்கள் பிழைப்பை நடத்தினார்கள். ஓய்வு நேரங்களில் அவர்கள் விமான ஆராய்ச்சிகளையும் செய்தார்கள். அதனாலேயே அவர்களால் சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது.
எத்தனையோ துறைகளில் பெரும் சாதனைகள் புரியும் அளவு திறமை உள்ளவர்கள் வருமானம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேறு ஒரு தொழிலில் முழு நேரமும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை நாம் இன்று பல இடங்களில் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெறுமையினை அடிக்கடி உணர்கிறார்கள் என்பது கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய தனித் திறமையைப் பற்றி யாராவது நினைவுறுத்தினால் அவர்கள் முகத்தில் சோகம் படர்வதையும் பார்க்க முடியும். எது நமது உண்மையான இயல்போ, எதைச் செய்கையில் நாம் நூறு சதவீதம் நாமாக இருக்கிறோமோ, அதற்கு எதிர்மாறாக வாழ்ந்து யாரும் நிறைவைக் காண முடியாது. எனவே இக்காலத்தில் சூழ்நிலையின் காரணமாக வேறு தொழில் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தாலும் ஒருவன் சுதர்மத்தை அடியோடு மறந்து விடக்கூடாது.
சுதர்மத்தை கைவிடுவது தற்கொலைக்கு சமமானது. இதனாலேயே பகவான் கிருஷ்ணன் சுதர்மத்தை மிக முக்கியமாக வலியுறுத்துகிறார். இன்னொரு இடத்தில் “சுயதர்மத்தைச் செய்கையில் ஒருவன் இறந்து போனாலும் நல்லதே” என்று கூட கூறுகிறார். சுதர்மத்தைப் பின்பற்றாமல் இருக்க எத்தனையோ காரணங்களை ஒருவன் தேடிக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அந்தக் காரணங்களில் ஒன்று கூட மேன்மையானதாக இருக்க முடியாது.
இக்காலத்தில் தொழிலில் நேர்மையில்லை, ஈடுபாடில்லை, உயிரில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகம் எழுவதற்குக் காரணம் மனிதர்கள் சுதர்மத்தைப் புறக்கணிப்பது தான். எந்திரங்களாய் அவர்கள் மாறிவிடக் காரணமும் அது தான்





ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?



ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?
”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் திரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான்.
ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”
பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமைகளையும் நண்பர் பெயரிலேயே வைத்திருந்ததால் வெற்றிகரமாக நடந்து வந்த வியாபாரத்தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும் தான்’ என்று சொல்லி நண்பர் ஏமாற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழுதார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடுமைகளைச் சொல்லி மனம் குமுறினார்.
இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்ட சுவாமி சுகபோதானந்தா அடுத்தபடியாக அவர்களிடம் “உங்களுக்குப் பிடிக்காத போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன்னார்கள்.
“சரி. அந்த சினிமாவின் வீடியோ காஸெட்டை (சி.டி, டி.வி.டி எல்லாம் வர ஆரம்பிக்காத காலகட்டம் அது) தேடிப் பிடித்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு வரை திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள்” என்றார்.
ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அவர்கள் “ஐயையோ...முடியவே முடியாது. முடிகிற காரியமாக வேறு எதையாவது சொல்லுங்கள்” என்றார்கள்.
“நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும் கூட உங்களுக்குப் பிடிக்காத காட்சிகள் தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் சுகபோதானந்தா.
அவருடைய அழகிய வார்த்தைகளில் “கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமேயொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”
இது அறிவுபூர்வமாக எல்லோருக்கும் புரியக் கூடிய நல்ல விஷயம். ஆனால் மனம் அறிவின் படியா நடக்கிறது? எதை நினைக்கக் கூடாது என்று கட்டளை இடுகிறோமோ அதைப் பற்றியே அல்லவா மனம் பிடிவாதமாக நினைக்கிறது. இந்த காயங்கள் ஒவ்வொரு முறை நினைக்கும் போது புதிய காயம் போலல்லவா வலிக்கிறது. இந்த காயங்களை ஆற வைப்பதெப்படி? மறப்பதெப்படி?
இது சாத்தியமாக வேண்டுமானால் இரண்டு மாபெரும் உண்மைகளை நினைவில் இருத்த வேண்டும்.
ஒன்று எந்த அநியாயமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டனைகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே. அது சில சமயங்களில் நம் கண்ணிற்குப் படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்திரம் இல்லை. ஹிந்தியில் ஒரு அழகான பழமொழி உண்டு. ’இறைவனின் பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை’. இது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியே தெரியாமல் தனக்குள்ளேயே புழுங்கும்படியான எத்தனையோ வேதனைகள் உண்டு. எனவே வெளித் தோற்றத்தை வைத்து எதையும் எடை போடுவது சரியானதாக இருக்காது.
எனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தர் பல அப்பாவி ஏழை ஊழியர்களை ஏமாற்றி, அவர்களுக்கு சேரவிருந்த பணத்தைத் தராமல் ஏமாற்றியவர். அவருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உண்டு. அவர் அப்படி ஏமாற்றியவர் என்றாலும் அவருடைய செல்வச் செழிப்பில் ஒரு குறையும் கடைசி வரை இருக்கவில்லை. அவர் கடைசியாக விற்ற சொத்து ஒன்று எதிர்பாராத நல்ல விலைக்குப் போய் அவர் இலாபத்தை பல மடங்கு ஈட்டித் தந்தது. இதையெல்லாம் பார்க்கையில் ’ஏமாற்றிய ஆள் நன்றாகத் தானே இருக்கிறார். அவருக்குப் பணம் சேர்ந்து கொண்டே தானே இருக்கிறது’ என்று யாருக்குமே தோன்றுவது இயற்கை.
ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு. அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.
’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தவறிழைத்தவர் தண்டனை பெறாமல் தப்புவதில்லை என்றறிந்து தெளியும் போது காயத்தின் தீவிரம் குறையும்.
இரண்டாவது உண்மை நமக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் எதுவுமே காரணம் இல்லாமல் வருவதில்லை. அவை நாம் நம் முந்தைய செயல்களால் சம்பாதித்தவையாக இருக்கலாம், நம்முடைய குறைபாடுகளால் நாம் வரவழைத்தவையாக இருக்கலாம், அல்லது நாம் புடம் போட்ட தங்கமாக மாறத் தேவையான அனுபவங்களாக இருக்கலாம். இதை ஒத்துக் கொள்ள நமக்கு சிறிது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இது மாபெரும் உண்மை.
இதற்கு நாமே காரணம், அல்லது நம் பக்குவத்தினை அதிகப்படுத்த கிடைத்த பாடம் இது என்று உணரும் போது ஒரு அனுபவத்தின் கசப்புத் தன்மை குறைகிறது. தெளிதலும், மறந்து முன்னேறுவதும் சாத்தியமாகிறது.
இந்த உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு சுவாமி சுகபோதானந்தா சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள். நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மைக் காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே இதெல்லாம் புரியும் போது அது வரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.

Wednesday, April 23, 2014

நாரதர்
உலகம் தோன்றிய காலத்திலேயே தோன்றிய ரிஷி நாரதர். அவர் பாதாளம், மேல்லோகம், பூலோகம் ஆகிய மூவுலகங்களுக்கும் சஞ்சாரம் செய்பவர் என்பதால் திரிலோக சஞ்சாரி என்று அழைக்கப்பட்டார். ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டு நடத்தி வெற்றியடையச் செய்வதில் இவர் கைதேர்ந்தவர். பரம்பொருளான நாராயணனின் நாபிக்கமலத்தில் (தொப்புள்) பிரம்மா அவதாரம் செய்தார். பிரம்மாவின் மனதிலிருந்து சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்று நால்வர் பிறந்தனர். இவர்களைப் பார்த்து பிரம்மா,நீங்கள் எல்லாரும் ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விஸ்தரியுங்கள், என்று கட்டளையிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணமூர்த்தியை அடைவதே தங்கள் குறிக்கோள் என்ற அவர்கள், இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டனர். எனவே பிரம்மா, மீண்டும் உலக சிருஷ்டியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார். தன் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றில் இருந்தும் புலஸ்தியர், புலஹர், அத்ரி, கிருது, மரீசி, ஆங்கிரஸ், பிருகு, தட்சன், கர்தமர், வசிஷ்டர் என்று ரிஷிவர்க்கத்தைப் படைத்தார். இவர்களில் பிரம்மாவின் கழுத்தில் இருந்து பிறந்தார் நாரதர். பிரபஞ்சத்தில் பலகோடி மக்களை உருவாக்கும்படி படைப்புக்கடவுள் அந்த ரிஷிகளுக்கு கட்டளையிட்டார். இவர்களில் நாரதரைத் தவிர மற்றவர்கள், தந்தையின் கட்டளையை ஏற்று, இவ்வுலகை விஸ்தரிக்கும்பணியில் முழுமூச்சாய் ஈடுபடத் தொடங்கினர். நாரதருக்கு இதில் உடன்பாடில்லை. தந்தையின் சொல்லை புறக்கணித்தார். அதோடு மட்டுமல்லாமல், பிரம்மாவுக்கே உபதேசம் செய்யும் அளவுக்குத் துணிந்து விட்டார்.
அப்பா! நீங்கள் தீயவழியில் செல்லும்படி என்னைத் தூண்டுகிறீர்கள். சத்விஷயங்களைப் பிள்ளைக்குச் சொல்லித் தரவேண்டியது தான் ஒரு தந்தையின் கடமை. அதைவிடுத்து இவ்வாறு தவறுக்கு வழிவகுப்பது நல்லதல்ல. நான் எம்பெருமானுடைய பாதார விந்தங்களை அன்றி மற்றொன்றைச் சிந்திக்காதவன். உலக சுகங்களை மறந்த என்போன்றவர்களை ஆதரிக்க வேண்டியது தான் உங்கள் கடமை,என்று புத்திமதி சொன்னார்.பிரம்மதேவருக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. தன் பிள்ளை நாரதரைச் சபித்தே விட்டார். நாரதா! உன் அறிவு அழிந்து போகக் கடவது. நீ பெண் பித்தனாக வாழ்வாய். பருவமங்கையர் ஐம்பது பேரை மணம் செய்து கொண்டு காமாந்தகாரனாகத் திரிவாய். சங்கீதம், வீணையில் பாண்டித்யம், குரல்வளம் என்று குதூகலத்தோடு சிற்றின்பத்தில் மூழ்கிப் போவாய். உன் அழகையும், இளமையையும் கண்டு பெண்கள் மயங்கித் திரிவார்கள். பார்ப்பவர் கண்ணுக்கு கந்தர்வனைப் போல வாலிபனாகத் தெரிவாய், என்று சாபமிட்டார். மேலும், நீ தேவகூட்டத்தில் உபபர்ஹணன் என்று பெயரில் பிறந்து, இரண்டு லட்சம் ஆண்டுகள் சுகபோகங்களில் திளைப்பாய். அப்பிறவி முடிந்ததும், மறுபடியும் ஒரு தாசியின் வயிற்றில் பிறப்பாய். அப்போது உத்தம சிரேஷ்டர்களின் சகவாசம் உண்டாகும். அவர்கள் சாப்பிட்ட எச்சிலை உண்ட புண்ணியத்தால் ஸ்ரீகிருஷ்ணரின் அருள் கிடைக்கும். மீண்டும் என் மகனாகப் பிறவி எடுப்பாய். அப்போது தான் ஞானம் உண்டாகும், என்று சாபமிட்டு தன் கோபத்தை தணித்துக் கொண்டார். நாரதர் பிரம்மாவின் சாபத்தை கேட்டு கதறி ஓலமிட்டார். அப்பா! இது தான் ஒரு தந்தைக்கு அழகா! நான் பல நீசப்பிறவிகளை எடுப்பதால் உங்களுக்கு என்ன பெருமை உண்டாகப்போகிறது. இருந்தாலும் உங்களுக்காக இப்பிறவிகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், என் சிறுவிண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். எப்பிறவி எடுத்தாலும், எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் பாதாரவிந்தங்களை மறக்காத பாக்கியத்தை மட்டும் தாருங்கள்,என்று வேண்டிக் கொண்டார். நாராயணா, நாராயணா என்று சொல்லிக்கொண்டே திரிந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் புஷ்கரம் என்னும் ÷க்ஷத்திரத்தில் கந்தர்வன் ஒருவன் நீண்டகாலமாக பிள்ளையில்லாமல் வருந்திக் கொண்டிருந்தான். அவன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான். கந்தர்வனின் தவத்தை மெச்சிய சிவன் அவன் முன்தோன்றி பிள்ளை வரம் தந்தார். பிரம்மசாபத்தின் பயனாக, நாரதர் கந்தர்வனின் மகனாக உபபர்ஹணன் என்ற பெயரில் பிறந்தார். சித்திரரதன் என்ற மன்னனின் மகள்களான ஐம்பது பெண்களையும் மணந்து சிற்றின்பத்தில் திளைத்தார். ஆனால், வீணாகானமும், ஸ்படிகமாலையும் கொண்டு ஹரிபக்தி கொண்டவனாகவும் வாழ்ந்தார். கந்தர்வனாக இருக்கவேண்டிய காலம் முடிவடைந்ததும் உயிர்நீத்தார். கான்யகுப்ஜ தேசத்தில் திரமிளன் என்ற அரசன் இருந்தான். அவனது நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்த சந்தர்ப்பத்தில் திரமிளனின் மனைவி கலாவதி கருவுற்று ஒரு ஆண்குழந்தையை ஈன்றாள். திரமிளனுக்கு குழந்தை வந்த நேரம், நாட்டில் மழை பெய்து நீர்வளம் நிறைந்தது. அதனால் நீர் என்ற பொருளில் நாரதன் என்று குழந்தைக்கு பெயரிட்டனர். (நாரம் என்றால் தண்ணீர். கடலில் மிதப்பவர் என்பதால் தான் திருமாலுக்கே நாராயணன் என்ற பெயர் ஏற்பட்டது) ஒருநாள் நாரதரின் சகோதரர்களான சனகாதி முனிவர் நால்வரும் அதிதிகளாக கலாவதியிடம் வந்து உணவு பெற்றனர். சிறுவன் நாரதன் அவர்கள் சாப்பிட்ட மீதி உணவை வாங்கி சாப்பிட்டான். பணிவோடு நடந்து கொண்ட அந்தச் சிறுவன் மீது அன்பு கொண்டு அதிதிகள், அவனுக்கு ஸ்ரீகிருஷ்ணமந்திரத்தை உபதேசித்தனர். அன்று முதல் சிறுவன் நாரதன் கிருஷ்ணதாசனாக மாறிவிட்டான். சதா கிருஷ்ண தியானத்தில் இருந்த நாரதருக்கு கிருஷ்ணரும் குழந்தை வடிவில் காட்சி தந்து மறைந்தார். மீண்டும் கிருஷ்ண தரிசனம் வேண்டி அழுதார் நாரதர். அப்போது, வானில் அசரீரி ஒலித்தது. நாரதா! பிரம்மாவின் சாபம் இன்றோடு உனக்கு நீங்கியது. மீண்டும் அவர் உடம்பிலேயே ஐக்கியமாகி விடுவாய் என்றது. பின்னர் மீண்டும் பிரம்மாவின் கழுத்தில் இருந்து பிறவி எடுத்து திரிலோகசஞ்சாரியாக மாறிவிட்டார். ராமாயணத்தை எழுதிய வால்மீகிக்கு ராமநாமத்தை உபதேசித்தவர் நாரதரே. பக்தபிரகலாதனுக்கு தாயின் கருவில் இருக்கும்போதே அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அவனை நாராயண பக்தனாக்கினார். சின்னஞ்சிறு குழந்தை துருவனுக்கு விஷ்ணுமந்திரத்தை உபதேசித்து அவனை நட்சத்திர மண்டலத்தில் ஒளிவிடச் செய்தார். கலகப்பிரியராக இருந்து பல கலகங்களையும் ஏற்படுத்தி நன்மை ஏற்படச் செய்தார்

Monday, April 21, 2014

நமது கடமைகள் பற்றி வேதங்கள் கூறுகின்றன ..


நமது கடமைகள் பற்றி வேதங்கள் கூறுகின்றன ....
யஜுர் வேதம் --- தைத்திரீய உபநிஷதம் ..
1:11.1-11.8
...
கல்வி முடிந்து வெளியேறுகின்ற மாணவர்களுக்கு, பிரியும் வேளையில் ஆச்சாரியர் அளிக்கும் செய்திபோல் அமைகிறது இந்தப் பகுதி. குருகுலவாசம் முடிந்த பின் மாணவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான கடமைகள் இதில் கூறப்படுகின்றன.
11.1. வேதங்களைக் கற்பித்த பிறகு ஆச்சாரியார் மாணவர்களுக்கு சில அறநெறிகளைப் போதிக்கிறார்: உண்மை பேசுங்கள். தர்ம வழியில் செல்லுங்கள். கல்வியைக் கைவிடாதீர்கள். ஆச்சாரியருக்கு விருப்பமான செல்வத்தைக் கொடுத்து அவரை மன நிறைவு பெறச் செய்யுங்கள். சந்ததிச் சங்கலியை வெட்டாதீர்கள்.
11.2. உண்மையில்ருந்து விலகாதீர்கள். தர்மத்திலிருந்து விலகாதீர்கள். நன்மை தருபவற்றிலிருந்து விலகாதீர்கள். நற்செயல்களிருந்து விலகாதீர்கள். கற்பதிலிருந்தும் கற்றுக்கொடுப்பதிருந்தும் விலகாதீர்கள். தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளிருந்து விலகாதீர்கள்.
11.3. தாயைத் தெய்வமாகப் போற்றுங்கள். தந்தையைத் தெய்வமாகப் போற்றுங்கள். ஆசிரியரைத் தெய்வமாகப் போற்றுங்கள். விருந்தினரைத் தெய்வமாகப் போற்றுங்கள்.
11.4. தீமை விளைவிக்காத செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக் கூடாது. நற்பண்புகளை வளர்க்கின்ற செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக்கூடாது.
11.5. நம்மைவிட உயர்ந்தவர்களோ தூயவர்களோ வரும்போது எழுந்து, அவர்கள் அமர இருக்கை அளித்து, அவர்களின் களைப்பைப் போக்கி உபசரிக்க வேண்டும்.
11.6. நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன் தானம் செய்ய வேண்டும்; ஏனோதானோ என்று தானம் செய்யக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும். பணிவுடனும் மரியாதையுடனும் தகுந்த அறிவுடனும் தானம் செய்ய வேண்டும்.
11.7. உங்கள் கடமை என்ன, குறிப்பிட்ட சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பவை பற்றி உங்களுக்குச் சந்தேகம் எழுமானால் சான்றோர்களைப் பின்பற்ற வேண்டும். ஆழ்ந்து சிந்திக்கின்ற, மன ஒருமைப்பாடு மிக்க, சுதந்திரமான, கோணல் புத்தி இல்லாத, நல்வழியில் நடக்கின்ற அந்த சான்றோர்கள் அந்த விஷயங்களில் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படி நீங்களும் செயல்படுங்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களை அணுகும் போதும், அதுபோலவே, சான்றோர்களைப் பின்பற்றுங்கள்.
11.8. இதுவே கட்டளை. இதுவே அறிவுரை. இதுவே வேத ரகசியம். இதுவே இறையானை. இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறே செய்யப்பட வேண்டும்.
இவ்வாறாக ஆச்சாரியார் சீடர்களுக்கு உபதேசித்தார்

ஜபத்திற்குரிய இடங்கள் ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும்


ஜபத்திற்குரிய இடங்கள் ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்றுகீதையில் 6வது அத்தியாயத்தில் 11- 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.
சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.
பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம்,
தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.
கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம்
செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும்.
ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.
சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது.
பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.
கருங்கல் மீதிருந்து ஜபம்செய்தால்வியாதி; வெறும்தரையில்ஜபம்செய்தால் துக்கம்;
மான் தோல்மீது ஜபம்செய்தால்ஞானம்;
புலித்தோல்மீது ஜபம் செய்தால் மோக்ஷம்;
வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதிநிவர்த்தி,
(வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்)
கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்

மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான்இருக்கிறது


மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான்இருக்கிறது. லட்சக்
கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்திபெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில...் சாத்தியமற்றதாக இருக்கிறது.
ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சிலவழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.

1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின்ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.
சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய
ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ
சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது
மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.
உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும்தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில்மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்குஉள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பலசாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களைசெவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகைநேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே
ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.
2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி
தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை
நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்குகவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகாஅக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம்செய்ய வேண்டும்.
இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாகஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ணசதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு
ஏற்றவையே.
3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில்மந்திரஸித்தியை
விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில்தொடங்கி குறிப்பிட்ட அடுத்ததிதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும்ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.
4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது.அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக்கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.
5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி
இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில்
மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறைமூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.
6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே
நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்யவேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம்முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில்செய்ய வேண்டும்.
7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால்அம்மந்திரம் ஸித்தியாகிறது.
8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறைநவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்திஏற்படுகிறது.
9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக
பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ளஎழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்துகுளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில்அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.
10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும்மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும்மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.
11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக்
கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.
12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும்கிடைக்கின்றன.

குபேரன் கதை:

Ananthanarayanan Ramaswamys Foto
Ananthanarayanan Ramaswamys Foto

குபேரன் கதை:
விச்ரவசு என்றொரு முனிவர்; சிறந்த சிவபக்தர்.
அவர் யாகம் ஒன்று செய்ய விரும்பினார்.
...
ஆனால், திருமணம் ஆனவர்களே யாகம் செய்ய முடியும் என்பதால், பரத்வாஜ முனிவரின் மகளை மணந்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வைஸ்ரவணன் என்று பெயர் வைத்தார்.
தந்தையைப் போலவே இவனும் பக்திமானாக இருந்தான். ஒருநாள் பெற்றோரிடம் சென்று, தான் பிரம்மனைக் குறித்து தவமியற்றப் போவதாகச் சொன்னான்.
அவர்களுக்கும் அதில் மகிழ்ச்சியே! அவனை மனதார ஆசீர்வதித்து அனுப்பினர். வைஸ்ரவணன் அமைதியான ஓரிடத்துக்குச் சென்று, தவத்தில் மூழ்கினான். அது சாதாரண தவம் இல்லை.
முதலில் ஆகாரமின்றி தண்ணீரை மட்டுமே அருந்தி தவமிருந்த வைஸ்ரவணன், பிறகு தண்ணீரையும் தவிர்த்து வெறும் காற்றை மட்டுமே புசித்தபடி தவத்தைத் தொடர்ந்தான்.
அவனது பக்தி வைராக்கியத்தைக் கண்டு அகமகிழ்ந்த பிரம்மதேவன், அவன் முன் காட்சி தந்தார். என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். தங்களைத் தரிசித்ததே பெரும் பாக்கியம்.
இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்? என்று பணிவுடன் கூறினான் வைஸ்ரவணன்.
இதனால் மேலும் மகிழ்ந்த பிரம்மதேவன், அவனை அஷ்டதிக் பாலகர்களில் ஒருவனாகவும், எல்லாச் செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதியாகவும் நியமித்தார்.
இப்படி அருள்பெற்ற வைஸ்ரவணனே குபேரன் ஆவார். தீபாவளி தினத்தில் பூஜிக்கவேண்டிய தெய்வங்களில் இவரும் ஒருவர்.
அன்று இவரை வழிபட, வறுமைகள் அகன்று நமது வாழ்வு வளம் பெறும்.