Tuesday, December 31, 2013

பில்லி, சூனியம், ஏவல் உண்மையா? –

பில்லி, சூனியம், ஏவல் உண்மையா?

சித்து வேலைகளிலேயே மிக மோசமான வகைகள் எல்லாம் உங்கள் மனதில்தான் நிகழ்கின்றன. மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அது வெகு சொற்பம் மட்டுமே. நல்லது, கெட்டது என இரண்டு வகைகளிலும், உங்களுக்கு நீங்களே செய்து கொள்வதுதான் மிக அதிகம்.

நம்மைச் சுற்றி இருக்கும் மக்களின் நோக்கங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நமக்குள் என்ன நடக்கிறது என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதை 100% நாம் விரும்பிய வழியில் உருவாக்க இயலும்.
எனவே உங்கள் மனதை நேர்மறையான மந்திரவித்தையாக மாற்றிவிட்டால், மற்றவர்களுடைய பில்லிசூனியங்களை நீங்கள் புறக்கணித்துவிடலாம். ஆனால் உங்கள் மனமே பில்லிசூனியமாக இருந்தால், உங்களை அழிப்பதற்கு யாரோ ஒருவர் கொஞ்சம் கொளுத்திவிட்டால் போதும் அது சுலபமாகிவிடும்.

மற்றவர்கள் உங்கள் மீது எந்த நோக்கத்தோடு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்றாலும், அவர்களுடைய நோக்கங்களை உங்களால் ஓரளவு மாற்றியமைக்க முடியும். கோடிக்கணக்கான மக்கள் உங்களை விரும்பும்படியாக சூழ்நிலையை உங்களால் உருவாக்க முடியும். ஒருவகையில் பார்த்தால், நீங்கள் அவர்களுடைய நோக்கங்களையும் கட்டுப்படுத்துகிறீர்கள், ஆனால் அது 100% சாத்தியமில்லை.

உங்களுடைய சொந்த குடும்பமே கூட திடீரென்று உங்களுக்கு எதிராகத் திரும்பிவிடும். இதை நாம் தினசரி வாழ்க்கை சூழ்நிலையில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? எனவே மற்றவர்கள் உங்கள் மீது என்ன நோக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட, முதலில் உங்கள் மனம் உங்களுக்குச் செய்யக் கூடிய கொடூரமான செயல்களைப் பற்றி பார்க்க வேண்டியது அவசியம்.

உங்கள் மனதை நீங்கள் சரி செய்துவிட்டால், மற்றவர்களுடைய மந்திர வித்தைகள் – அவை நல்லவையோ அல்லது பில்லிசூனியங்களோ, உங்கள் மேல் அவை தாக்கம் ஏற்படுத்தாது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அவை உங்கள் மேல் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறைவாக இருக்கலாம், ஆனால் அவற்றால் உங்கள் வாழ்க்கையின் பாதையை மாற்ற முடியாது.

சித்து வேலைகள் செய்வது ஓர் விஞ்ஞானம். அது இன்றைய உலகில் பெரும்பாலும் தொலைந்தேவிட்டது. நாம் இதனை இழந்தது சரியல்ல. உண்மையில் சித்துவேலைகளை நேர்மறையாகவும் பயன்படுத்த முடியும். இந்த முறைகள் ஒருவருடைய சொந்த சக்திநிலைகளையோ அல்லது வெளிப்புற சக்திநிலைகளையோ குறிப்பிட்ட சில விஷயங்களைப் செய்வதற்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தொழில்நுட்பம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக மக்கள் இதனை துஷ்பிரயோகம் செய்துவிட்டனர். நேர்மறையான மந்திர வித்தைகளை விட, எதிர்மறையான பில்லிசூனிய வித்தைகள் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடியவை. எனவே அதற்கு கிடைத்த ஆதரவினால், நிறைய பேர் மந்திர வித்தைகளை நேர்மைறையாக பயன்படுத்துவதை விட்டுவிட்டு முறையற்ற வகைகளில் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

ஒரு குறிப்பிட்ட திறமை உருவானது கெட்ட விஷயத்திற்காக இல்லை. அதைப் பயன்படுத்தும் கைகள்தான் அது நல்லதா, கெட்டதா என்பதை தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு திறமையும் நல்வாழ்வுக்காகவும் பயன்படுத்தப்படலாம் அல்லது மக்களை அழிப்பதற்காகவும் பயன்படுத்தப்படலாம்.

நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள். சில நேரங்களில், சில விஷயங்கள் எதிர்மறையான நோக்கங்களோடு செய்யப்படுகின்றன, வேறு சில சமயங்களில் மிகவும் எதிர்மறையான விஷயங்கள் நேர்மறை நோக்கங்களோடு செயல்படுத்தப் படுகின்றன.

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் மனித குலத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதங்கள், ஆனால் துர்திர்ஷ்டவசமாக, அவற்றைப் பயன்படுத்தத் துவங்கிய நூறு வருடங்களுக்குள், அவற்றை நமக்கு எதிராக திசை மாற்றிவிட்டோம். இதனால் மனித குலத்தின் பிழைப்புக்கு மட்டுமல்லாமல், இந்த பூமிக்கே அவை அச்சுறுத்தலாக மாறி நிற்கின்றன.

நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில், நாம் உபயோகிக்கும் இந்த தொழில்நுட்ப விந்தைகளை நீங்கள் நேர்மறை மந்திரவித்தைகள் என்பீர்களா அல்லது எதிர்மறையான பில்லிசூனியங்கள் என்பீர்களா? உண்மையில் பார்த்தால், உங்களுக்கு எப்படி விருப்பமோ அவற்றை அப்படி அழைக்கலாம். அவை துவங்கும்போது நல்ல நோக்கங்களுடனே துவங்கப்பட்டிருக்கலாம் அல்லவா?

அதே போல பில்லிசூனியம் என்று நீங்கள் அழைக்கும் விஷயங்களும் நல்ல நோக்கங்களுடன்தான் துவங்கின. ஆனால் மக்கள் அவற்றை பலவிதமான வழிகளில் துஷ்பிரயோகம் செய்யத் துவங்கிவிட்டனர். ஆனால் இன்றைய நிலையில் பில்லிசூனியத்தைச் செய்யத் தெரிந்தவர்கள் மிகக் குறைவாக இருப்பதால், அவை குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

அவர்களுடைய நேரத்தையும், சக்தியையும் உங்கள் மீது செலவழிக்கும் அளவுக்கு நீங்கள் அவ்வளவு பெரிய மனிதரா? நீங்கள் ஒரு சக்ரவர்த்தியாக இருந்தால், நம்மை யாரோ ஏதோ செய்துவிடுவார்கள் என்று நீங்கள் கவலைப்படலாம் அல்லது ஒரு தங்க சுரங்கத்தின் மேல் உட்கார்ந்திருந்தால், இதுபோன்ற விஷயங்களைப் பற்றி கவலைப்படலாம்.

அப்படி எதுவும் இல்லை என்கிறபோது நீங்கள் இவ்வளவு வருந்தத் தேவையில்லை. யாரும் தங்களுடைய நேரத்தை, சக்திகளை, பணத்தை உங்கள் மீது பில்லிசூனியம் வைப்பதற்காக பயன்படுத்தப் போவதில்லை. நீங்களே உங்கள் சொந்த மந்திரவித்தைகளை உங்களுக்குள் செய்வதுதான் நல்லது.

ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்” என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது

ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்” என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது.

பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே!

பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகிய யோகங்கள் கைவந்த ஒருவர், காஞ்சிப் பெரியவர்.

கைப்பிடி அவலிலேயே காலமெல்லாம் வாழும் அந்த மகா யோகி, தள்ளாத வயதிலும் வாலிபனைப் போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார்.

தெய்வ நம்பிக்கை உச்சத்துக்குப் போய் விட்டால், வயது தோன்றாது .

பழுத்துப் போன பழம், மரத்தைக் கேளாமலேயே கீழே விழுகிறது.

முதிர்ந்த ஞானிகள் யாரிடமும் எதற்கும் விளக்கம் கேட்பதில்லை; அவர்களே முடிவெடுக்கிறார்கள்..

அவர்களுக்குத் திடீரென்று ஏதோ ஒன்று தோன்றுகிறது என்றால், ‘தெய்வம் அவர்களோடு பேசுகிறது’ என்று பொருள்.

ஒரு ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன்.

”இது என்ன பார்வை? ஆற்றில் வெறும் தண்ணீர் தான் ஓடுகிறது” என்று எண்ணினான் மற்றொருவன்.

ஆனால் ஆற்றைப் பார்த்தவனுக்கு என்ன தோன்றிற்று?

‘ஆறு என்ற ஒன்று ஆண்டவனால் படைக்கப்படவில்லை. வெறும் நீரை மட்டுமே இறைவன் படைத்தான். அது ஆறாக உருக்கொண்டு, இரண்டு கரைகளையும் ஏற்படுத்திக் கொண்டது. மனிதருக்கில்லாத புத்தி, தண்ணீருக்கு இருக்கிறதே’ என்று வியந்தானாம்.

சிருஷ்டியை வியப்போடு நோக்கி, ஆழ்ந்த கருத்துக்களைக் கண்டுபிடிப்பது ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம்.

படிப்பறிவும், கேள்வியறிவும் மட்டுமே அவர்களுக்குத் துணை புரிவதில்லை.

உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது.

அதோ, அந்த ஒளியோடு அந்த மகா யோகி போய்க் கொண்டிருக்கிறார்.

அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரையன்று.

அது ஆன்ம யாத்திரை.

நாற்பது வயதுக்குள்ளாகவே பகவத் பாதாள் ஸ்ரீ ஆதி சங்கரர், காலடியில் இருந்து புறப்பட்டு, இமயம் முதல் குமரி வரை தன் காலடியை பதித்தார்.

அந்தக் கால்களிலும் காலணி இல்லை; இந்தக் கால்களிலும் இல்லை.

ஆயினும் கற்கள் அந்தக் கால்களை உறுத்தவில்லை.

முட்கள் தைத்தாலும் வலிப்பதில்லை. தெய்வத்தின் கருணை இந்தப் பாதங்களைப் பாதுகாக்கிறது.

உலகத்தில் அவர்களுக்குள்ள உறவெல்லாம், தெய்வம் மட்டுமே.

அந்தத் தெய்வத்தின் பரிபாஷையைச் சாதாரண மனிதனுக்குச் சொல்லும் துதுவர்கள் அவர்கள்.

அதனால் தான் மற்ற மனிதர்களின் தலையை விட அவர்களது பாதங்கள் உயர்ந்திருக்கின்றன.

லோகயாத சுகத்தை முற்றும் துறந்து விட்டுத் தார்மிக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது, தர்மம் நடைபாதை விரிக்கிறது.

மகா யோகம் மலர்கள் தூவுகிறது.

மகாராஜக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்குக் கிடைக்கிறது.

ஆந்த்ராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப்படவில்லை. அங்கி போய்க் காஞ்சிப் பெரியவர் ஓரிரவு தங்கினாராம். ‘சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது என்று ஆந்திர மக்களெல்லாம் சந்தொஷப்பட்டார்களாம்..

அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலைமையை உண்டாக்க கூடாது.

உலகெங்கிலும் உள்ள அஞ்ஞானிகளுக்கு ஞானக் கண் பேரொளி.

அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால், ‘இந்து மதம் என்றால் என்ன?” என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்” என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.

அந்த ஞானப் பாசத்தை தரிசித்த போது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது.

கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும்.

செஞ்சி கோட்டைக்குப் போகிறவர்களெல்லாம் ராஜா தேசிங்கு அல்ல.

காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகளல்ல.

ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு, ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார்.

அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்...தாய், குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும் பொது, அவரைப் பற்றிப் பாட வேண்டும்.

பள்ளிக் கூடப் பாடப் புத்தகங்களில் அவரைப் பற்றிக் குறிக்க வேண்டும்.

ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்” என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது.

மேதைகளும், கற்புக்கரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம்.

பசுக்களிலே மலட்டுப் பசுக்களைக் கூட அறுக்கக் கூடாது என்பது இந்துக்களின் வாதம்.

யோகிகளில் ஒரு சாதாரண யோகியைக் கூட ஒதுக்கக் கூடாது என்றால் இந்த மகா யோகியைப் பிராமணதல்லாதோர் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?

அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.

புத்தன் சொன்னதை விட அவர் நமக்கு அதிகமாகச் சொல்லியிருக்கிறார்.

ஏசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்திருக்கிறார்.

அவர் ஜாதி வெறியராகவோ, மத வெறியராகவோ ஒரு நாளும் இருந்ததில்லை.

அரசியல் வில்லங்களில் மாட்டிக் கொண்டதில்லை.

பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே.

அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.

அந்தக் காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லுங்கள்.

அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்

கிரகண காலத்தில் கட்டாயம் குளிக்கத்தான் வேண்டுமா?

கிரகண காலத்தில் கட்டாயம் குளிக்கத்தான் வேண்டுமா?

சூரியன் அல்லது சந்திரன் மீது பூமியின் நிழல் படர்ந்து மறைக்கப்படுவதை கிரகணம் என்கிறோம். சூரிய, சந்திர ஒளி இல்லையேல் பகல், இரவு என்னும் காலங்கள் இல்லை. மழை பெய்யாது. பயிர்கள் விளையாது. பூமி மற்றும் அதில் வாழும் உயிர்கள், அவற்றின் உணவுப் பொருட்கள் எல்லாமே சூரிய சந்திர ஒளிக்கதிர்களினால் அன்றாடம் தமக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கின்றன. இப்படி இறையருளால் இயற்கையாக நமக்குக் கிடைக்கும் சூரிய சந்திரர்களின் இயல்பான ஒளி மறைக்கப்ப...ட்டு குறிப்பிட்ட நாழிகை அவற்றின் கிரகண கால ஒளி, பூமி மற்றும் அதில் உள்ள எல்லாவற்றின் மீதும் படுகிறது. இதனால் 'மஹா ஸ்பரிசம்' என்னும் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இன்றைய விஞ்ஞானிகளும் கிரகணத்தினால் சில மாறுபாடுகள் ஏற்படுவதையும் நேரடியாகக் கண்களால் பார்க்கக் கூடாது என்றும் கூறுகின்றனர். எனவே இந்த தோஷம் நீங்குவதற்காக கிரகணம் விட்ட பிறகு தலைக்கு குளித்து, விபூதி குங்குமம் இட்டுக் கொண்டு இறைவழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்

Monday, December 30, 2013

நேர் வகிடு

ஒரு சமயம், காஞ்சிப்பெரியவர் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். வரிசையில் நின்ற தம்பதி ஒரு தட்டில் பூ, பழம், கல்கண்டு கொடுத்து அவரை வணங்கினர். திருமணமாகி ஏழு ஆண்டாகியும் குழந்தைப் பேறு இல்லாததைச் சொல்லி வருந்தினர்.
பெரியவர், ஒரு கணம் அந்த பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்து, ""எத்தனை வருஷமா கோணல் வகிடு எடுத்து தலைவாருகிறாய்?'' என்று கேட்டார்.
அந்த பெண்ணோ, நினைவு தெரிந்த நாளாக இப்படியே தலை சீவுவதாக தெரிவித்தாள்.
""இன்று முதல் நேர் வகிடு எடுத்துக்கோ! அப்படியே தலை வாரி, அதில் குங்குமம் இட்டுக் கொள். சவுந்தர்ய லஹரி, ஆதித்ய ஹ்ருதயம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் இரண்டு மாதம் படித்து வா'' என்று சொல்லி ஆசியளித்தார். பெரியவர் கூறியபடியே அந்த பெண்ணும் செய்து வந்தாள். பெரியவரிடம் ஆசி பெற்று சென்ற, 51வது நாளில், மருத்துவரிடம் சோதித்தபோது, அவள் தாய்மை அடைந்தது உறுதியானது.
பெண்குழந்தை பிறந்தது. குழந்தையை மடத்திற்கு அழைத்து வந்து பெரியவரிடம் ஆசி பெற்றனர். அவர்களிடம் பெரியவர், ""உங்கள் குல தெய்வம் எது?'' என கேட்டார். அவர்கள், ""திருவாச்சூர் மதுரகாளியம்மன்'' என்றனர். பெரியவர் குழந்தைக்கு ""மதுராம்பாள்'' என்று பெயரிட்டு ஆசியளித்தார். அந்த தம்பதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நற்செயல்கள் செய்யும் போது, நமக்கு மிரட்டல்கள் வரத்தான் செய்யும்

தேவலோக வைத்தியர்களான அஸ்வினி தேவர்கள், நோயுற்ற மனிதர்களை இறக்க விடாமல், உயிர் கொடுக்கும் பிரம்ம மந்திரத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தனர்.
கடவுள் மனிதனைப் படைக்கிறார். அந்த மனிதர்களில் சிலர் மட்டுமே தீர்க்காயுளுடன் உள்ளனர். சிலர் அற்ப ஆயுளிலேயே இறந்து போகின்றனர். பலர் நடுத்தர வயதில் காலமாகின்றனர். பிறந்தவர்கள் ஏன் இறக்க வேண்டும்? எனவே, இறந்தாலும் அவர்களை எழுப்பி அவர்களுக்கு மறுபிறவி கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணெத்தால், இந்த மந்திரத்தைக் கற்றாக வேண்டும் என அவர்கள் துடித்தனர்.
ஆனால், இந்த பிரம்ம மந்திரம் தெரிந்தவர்கள் வெகுசிலரே இருந்தனர். இவர்களின் முயற்சி பற்றி அறிந்த இந்திரனுக்கு கடும் கோபமும், பொறாமையும் ஏற்பட்டது.
""இவர்கள் இந்த மந்திரத்தைக் கற்றால், நிலைமை என்னாவது? ஒருவன் கூட சாகமாட்டானே! அப்படியானால், அஸ்வினி தேவர்களுக்கு புகழ் பெருகிவிடுமே! தன்னை யாரும் மதிக்கமாட்டார்களே,'' என்று நினைத்தான்.
அந்த மந்திரம் தெரிந்த மகரிஷிகளை அழைத்தான்.
""ரிஷிகளே! பிரம்ம மந்திரத்தை அஸ்வினி தேவர்களுக்கு போதித்தால், இறப்பென்பதே இல்லாமல் போய், பிரபஞ்சம் நிலைகுலைந்து விடும். எனவே இதை அவர்களுக்கு போதிக்கக்கூடாது. மீறினால் போதித்தவரின் தலையை வாங்கிவிடுவேன்,''
என எச்சரிக்கை விடுத்தான்.
அந்த முனிவர்களில் தத்யங்கர் என்பவர் தனி ரகம். மிகுந்த இரக்கமுள்ளவர். உயிர்கள் தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்.
இந்திரனின் மிரட்டலுக்கு பயப்படாத அவர், உலகநலன் கருதி அம்மந்திரத்தை அஸ்வினி தேவர்களுக்கு கற்றுக் கொடுத்து விட்டார். மந்திரம் கற்ற தேவர்கள், தங்கள் சக்தியால் முனிவருக்கு குதிரை தலையைக் கொடுத்து, உங்களது இந்த தலையை இந்திரன் கொய்தாலும், உங்கள் சொந்தத் தலையைப் பொருத்தி, தாங்கள் கற்றுத்தந்த பிரம்ம மந்திரத்தைக் கொண்டு மீண்டும் உயிரூட்டி விடுகிறோம்,'' என்றனர்.
இந்திரனும் முனிவரின் தலையை வெட்ட, அவருக்கு சொந்தத்தலையை மீண்டும் பொருத்தி உயிரூட்டினர் அஸ்வினி தேவர்கள்.
நற்செயல்கள் செய்யும் போது, நமக்கு மிரட்டல்கள் வரத்தான் செய்யும். ஆனால், அந்த மிரட்டல்களைக் கண்டு அஞ்சவும் கூடாது. அவற்றை புத்திசாலித்தனத்துடன் சாதகமாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும். இனி மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டீர்கள் தானே!

தீர்த்தம், பிரசாதம் ஏன்?

வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள
வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருக வேண்டும். ஏதேனும் ஒரு சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். "ப்ர' என்றால் "கடவுள்'. நாம் படைக்கும் வெறும் சாதம், "ப்ர' என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது, "ப்ரசாதம்' (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும்

பசுவிற்கு அகத்திக்கீரை,கொடுத்தால் சிறப்பு

பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதற்குரிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.
"ஸர்வ காம துகே தேவி
ஸர்வ தீர்த்தாபிக்ஷேசினி
பாவனே ஸுரபி ஸ்ரேஷ்டே
தேவி துப்யம் நமோஸ்துதே!''

""எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன்'' என்பது இதன் பொருள். இதைச் சொல்லி பசுவை வழிபட்டால், முன்னோர் சாபம், குடும்ப சாபம் தீரும். பிதுர் ஆசி பூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் விரைவில் நடந்தேறும்.

ஒருவரது ஜாதகத்தில் லக்ன தெய்வங்கள்

ஒருவரது ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். அதில் "ல/' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ராசிக்கட்டம் தான் லக்னம். உதாரணத்துக்கு இந்த படத்தைப் பாருங்கள். "ல/' என்று குறிப்பிடப்பட்டுள்ள கட்டத்தில் புதன் இருக்கிறது. அதாவது, கன்னியில் புதன் உள்ளது. இவர் கன்னி லக்னக்காரர். இவருக்குரிய தெய்வங்கள் பெருமாள், ராமன், கிருஷ்ணர். இது @பால, ஒருவரது லக்னத்தில் சூரியன் இருந்தால், சூரிய நாராயணர், சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தால் மகாலட்சுமி, பாலா, திரிபுரசுந்தரி உள்ளிட்ட அம்பிகையர், செவ்வாய் இருந்தால் முருகன், லட்சுமி நரசிம்மர், குரு இருந்தால் சிவன், தட்சிணாமூர்த்தி, பெருமாள், சனி இருந்தால் வெங்கடாஜலபதி, சாஸ்தா (ஐயப்பன்), யோக நரசிம்மர், ஆஞ்சநேயர், ராகு இருந்தால் துர்க்கை, கேது இருந்தால் விநாயகர் அல்லது ராமானுஜர் போன்ற ஆச்சார்யர்களைத் தரிசிக்க வேண்டும். இந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களைத் தினமும் ஜபிப்பது பலனை அதிகரிக்கும்

வாசுதேவனின் பொருள்

கண்ணனை "வாசுதேவ் கிருஷ்ணா' என்று குறிப்பிடுவர். வசுதேவரின் பிள்ளையாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். கிருஷ்ணர் பூவுலகில் பிறப்பதற்கு முன்பே, "வாசுதேவன்' என்ற பெயர் வழக்கில் இருந்தது. விஷ்ணு சகஸ்ர நாமத்தில் கடைசியில் இடம்பெறும் பலன் கூறும் ஸ்லோகத்தில்(பலச்ருதி), ""எல்லா உயிர்களிலும் வசிக்கும் வாசுதேவனாகிய உனக்கு நமஸ்காரம்'' என்று கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணாவதாரத்திற்கு முன்பே, விஷ்ணு எடுத்த அவதாரம் நரசிம்மர். விஷ்ணு மீது பக்தி கொண்ட பிரகலாதன், அசுரக்குழந்தைகளுக்கு பெருமாளைப் பற்றி உபதேசிக்கும் போது, அவரை "வாசுதேவன்' என்னும் பெயரால் குறிப்பிடுகிறான்

தீர்த்தம், பிரசாதம் ஏன்?

வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள
வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருக வேண்டும். ஏதேனும் ஒரு சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். "ப்ர' என்றால் "கடவுள்'. நாம் படைக்கும் வெறும் சாதம், "ப்ர' என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது, "ப்ரசாதம்' (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும்.

தெய்வானை திருக்கல்யாணம் பங்குனியில் நடத்துவது ஏன்?

திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த முருகனுக்கு, தனது மகள் தெய்வானையைத் திருமணம் செய்து தர முன் வந்தான் தேவர்களின் தலைவனான இந்திரன். இந்த நிகழ்ச்சி "கந்தசஷ்டி' திருவிழாவாக, ஐப்பசி மாதம் கொண்டாடப்படுகிறது. அங்கு, சம்ஹாரத்திற்கு மறுநாளே, தெய்வானை திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. ஆனால், திருப்பரங்குன்றத்தில் பங்குனி சுவாதி நட்சத்திரத்தில் திருமணம் நடக்கிறது.
ஸ்கந்தபுராணத்தை சமஸ்கிருதத்தில் எழுதியவர் வியாசர். தமிழில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதியுள்ளார். இந்த புராணத்தில் ஒரு காட்சி...
சூரசம்ஹாரம் முடிந்ததும், இந்திரன், முருகனிடம், வெற்றிப்பரிசாக, தன் மகள் தெய்வானையை மணம் முடித்து கொடுக்க விரும்புவதாகக் கூறுகிறான். முருகனும் அதை ஏற்று, "நாளையே திருமணம் நடக்கட்டும்' என்கிறார்.
ஆனால், "திருப்பரங்குன்றத்தில் திருமணத்தை நடத்தலாமே' என்கிறான் இந்திரன். உடனே படைகளுடன் முருகன் கிளம்புகிறார். தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்த இந்திரன், திருப்பரங்குன்றத்தில் ஒரு அழகிய நகரையும், திருமணப் பந்தல் உள்ளிட்டவற்றையும் நிர்மாணிக்க கட்டளையிடுகிறான். விஸ்வகர்மாவும் அந்தப்பணியைச் செய்கிறார்.
முருகன் சொன்னபடி மறுநாளே திருமணம் என்ற வகையில் திருச்செந்தூரில் திருமணம் நடக்கிறது. ஒரு நகரை நிர்மாணித்து, அங்கே நடத்த கால அவகாசம் வேண்டும். அந்த அடிப்படையில், திருப்பரங்குன்றத்தில் பங்குனி மாதம் திருமணம் நடத்தப்படுகிறது. புராணத்தில், இரு மாறுபட்ட தகவல் இருப்பதால் ஏற்பட்ட மாற்றமே இது.
மதுரையில், மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா, ஒரு காலத்தில் மாசி மாதம் தான் நடத்தப்பட்டது. ஆனால், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், சோழவந்தான் அருகிலுள்ள தேனூரில் சித்திரை மாதமே நிகழ்ந்தது. அந்த நிகழ்ச்சியை மதுரைக்கு மாற்றியவர் திருமலை நாயக்கர். மீனாட்சி திருவிழாவையும், அழகர் திருவிழாவையும் இணைத்து, சித்திரையில் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்தார். இதுபோன்ற மாற்றங்கள், பாண்டிய மன்னர்களால் திருப்பரங்குன்றத்திலும் செய்யப்பட்டிருக்கலாம்.

கோயிலுக்கு ஏன் போகணும்?

அருவிகளில் குளித்தாலோ, மலைப்பிரதேசங்களான ஊட்டி போன்ற இடங்களுக்கு சென்றாலோ, கடற்கரைப் பக்கம் போனாலோ உடலுக்கு நல்லது என்கிறது அறிவியல். இங்கே போனால் சுத்தமான காற்றை சுவாசிப்போம். உடல் ஆரோக்கியமடையும். ஆனால், இருக்கிற விலைவாசியில், அந்தப் பக்கமெல்லாம் எல்லாராலும் போய் வர முடிகிறதா என்ன!
இந்தக் குறையைத் தீர்க்கத்தான், உள்ளூரிலேயே கோயில்களைக் கட்டி வைத்தார்கள்.
கருவறையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். அப்போது, அப்பகுதியில் காற்று மண்டலம் ஈரமாகும். எதிர் மின்னோட்டம் அதிகமாகும். ஈரப்பதமும், எதிர் மின்னோட்டமும் இருக்கும் இடத்தில் ஆக்சிஜன் அதிகமாக வெளிப்படும். சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கும் போது, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பெல்லாம் சீராகும்.
இதனால் தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். இனிமேலாவது, உங்கள் ஊர் கோயில்களைப் புதுப்பியுங்கள். தினமும் அபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். கோயில்களுக்கு தினமும் சென்று வாருங்கள். உங்கள் உடலுக்கு நல்லது...புரிகிறதா!

12 வருடம் மலை ஏறமுடியுமா!

சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால்வைத்தாலே பாதி நோய்கள் தீர்ந்து விடும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகள் தொடர்ந்து, காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் "உலக உயிர்கள் அனைத்தும் ஒன்றே' என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறலாம். முருகனின் திருவடி நிழலில் வசிக்கும் வாய்ப்பும் இவர்களுக்கு உண்டு. பழநி முருகனுக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய்கள் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தம் (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது நவபாஷாண சிலை. கோயிலின் அமைவிடம் மலை. தீர்த்தம் சரவணப்பொய்கை. ஆக, எல்லா வகையிலும் உயர்ந்த முருகத்தலம் பழநி

ஐயப்பன் பக்தர்கள் சாலையில் மரண ஊர்வலத்தைக் காண நேர்ந்தால்

ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் உறவினர்கள் வீட்டில் மரணம் ஏதேனும் நேர்ந்தால் அங்கு செல்லக்கூடாது. அத்தியாவசியமாக செல்ல வேண்டும் என்றால், மாலையை கழற்றிவிட்டு செல்லவேண்டும். அந்த ஆண்டு மலைக்கு செல்லக்கூடாது. பணி காரணமாக வெளியில் செல்லும்  வீட்டிற்கு வந்து கோமியம் தெளித்து நீராடிவிட்டு, அதன்பிறகே பூஜை செய்ய வேண்டும்.

செல்லாக்காசு என்றால்

செல்லாக்காசு என்றால் "செல்லாத துட்டு' என்று நினைத்துக்கொள்வர். ஆனால், திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரிய வகை மீன் இனத்தின் பெயர்தான் "செல்லாக்காசு'. ரமணாஸ்ரமும் அருகில் உள்ள பலாக்கொத்து என்ற இடத்தில் அகத்தியர் தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில்தான் இந்த அபூர்வ வகை மீன் வாழ்கிறது

கார்த்திகை 1ல் மாலை அணிய முடியவில்லையா?

சபரிமலை செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1ம் தேதி மாலை அணிவது வழக்கம். இந்த நாளில் மாலை அணிய முடியாவிட்டால், சனிக்கிழமை அல்லது உத்திர நட்சத்திர நாளில் மாலை அணிந்து விரதம் ஆரம்பிக்கலாம். கோயில் அர்ச்சகர் அல்லது குருசாமி கையினால் மாலை அணிந்துகொள்ள வேண்டும். மாலை அணிந்த கோயிலை வலம்வந்து தேங்காய் உடைத்து சுவாமிகளை வணங்க வேண்டும். ருத்திராட்ச மாலையோ, துளசி மணி மாலையோ அணியலாம். 41 நாட்கள் விரதம் இருப்பது மேன்மையானது. கருப்பு அல்லது நீல ஆடையை அணிந்துகொள்ள வேண்டும். செருப்பு அணியக்கூடாது. கட்டில், மெத்தையில் தூங்கக்கூடாது. தலையணை பயன்படுத்தக் கூடாது. மாமிசம் மற்றும் மதுபானம் கூடாது. மற்றவர்களுக்கு தீங்கு உண்டாக்கக்கூடிய செயல்களை செய்தல், பொய் சொல்லுதல், ஆசை கொள்ளுதல், தாம்பத்யம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

ஆன்மிகத்தை விட சிறந்த அறிவியல் வேறேதும் இல்லை

மகாபாரதப்போர் நடந்த இடம் எது என்றால் குருக்ஷேத்திரம் என்பார்கள். குருக்ஷேத்திரம் எங்கிருக்கிறது என்று கேட்டால் ஹரியானாவில் இருக்கிறது என்று கூட தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், குருக்ஷேத்திர யுத்தம், ஒரு அறிவியல்
தத்துவத்தையும் எடுத்துச்சொல்வது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்! மனம் தான் நம் செயல்களுக்கு காரணமாக அமைகிறது என்பது அறிவியல் கலந்த ஆன்மிக உண்மை. ஒவ்வொரு நாளும் நமக்குள்ளும் குருக்ஷேத்திர யுத்தம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
மனசு தான் குருக்ஷேத்திரம். அதில் இருக்கும் நல்ல எண்ணமே நியாயத்திற்காகப் போராடும் தர்மர் தலைமையிலான பாண்டவர்கள். தீய எண்ணங்களே அநியாயத்தின் பக்கமிருக்கும் துரியோதனன் தலைமையிலான கவுரவர்கள். ஓயாமல் இருபிரிவுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கிறது.
பாண்டவர்களும், கவுரவர்களும் ஒரே பரம்பரையில் பிறந்த தாயாதிகள்(சகோதரர்கள்). அதேபோல, நல்லதும், கெட்டதும் ஒரே மனதில் உற்பத்தியானவை தான். அர்ஜூனன், தன் சொந்த பந்தத்தினர் மீது அம்பு விட தயங்கியது போல, உலகியல் வாழ்வில் ஈடுபடும் நமது புத்தியும், ஒன்றைச் செய்வதா வேண்டாமா என திண்டாடுகிறது.
அப்போது விவேகம் என்னும் கிருஷ்ணர், நம் புத்திக்கு வழிகாட்ட வருகிறார். பாரதப்போரில், விவேகமாக நடந்த கிருஷ்ணர் மூலம் நியாயம் ஜெயித்தது. நம் மனதில் நடக்கும் குருக்ஷேத்திர போரிலும் நன்மை ஜெயிக்க, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இப்போது புரிந்து கொண்டீர்களா! ஆன்மிகத்தை விட சிறந்த அறிவியல் வேறேதும் இல்லையென்று!

சபரிமலைக்கு, வீட்டிலிருந்து கிளம்பும்போது, திரும்பிப் பார்க்காமல் கிளம்ப வேண்டும்

சபரிமலைக்கு, வீட்டிலிருந்து கிளம்பும்போது, வீட்டையோ, மனைவி, குழந்தைகளையோ, பெற்றோரையோ திரும்பிப் பார்க்காமல் கிளம்ப வேண்டும். பக்தன் தனது ஆன்மாவை இறைவனிடமே முழுமையாக சமர்ப்பித்திருக்கிறான். ஐயப்பனுடன் ஒன்றியிருக்கிறான் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

அசுர கிரகமான ராகுவின் ஆதிக்கம்

அசுர கிரகமான ராகுவின் ஆதிக்கம் ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு நாழிகை என்பது 24 நிமிடம். ஆக, ஒன்றரை மணி நேரம் ராகு காலம் இருக்கும். கிழமையைப் பொறுத்து ராகுவேளை மாறும். இந்த நேரத்தில் வெளியூர் பயணம், புதியமுயற்சி, சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்வது கூடாது. இந்த நேரத்தில் உக்ர தெய்வங்களான துர்க்கை, பைரவர், சண்டீதேவி, நரசிம்மர், பிரத்யங்கிரா, காளி, அங்காரகர்(செவ்வாய்) போன்ற தெய்வங்களை வழிபட பயம் நீங்கி மனதில் தைரியம் பிறக்கும்

கோயிலுக்குள் ஓடாதீர்கள்!

கோயில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகார வலம் வந்து வணங்குவது வழக்கம். சிலர், வேலைக்குப் போக வேண்டும், ஊருக்கு அவசரமாக கிளம்ப வேண்டும் என்ற நோக்கத்தில், வேக வேகமாக கோயிலை வலம் வருவார்கள். சில நேரங்களில் ஓட்டப்பந்தயம் கூட நடப்பதுண்டு. சிலர் ஒரு கையால் நமஸ்கரித்து விட்டு, அல்லது வாயருகே கையைக் கொண்டு வந்து முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்து விட்டு வேகமாக கோயிலைக் கடப்பார்கள். இவையெல்லாம் சாஸ்திரப்படி தவறு. ஒரு நிறைமாத கர்ப்பிணி, எப்படி பவ்யமாக நடப்பாளோ, அந்தளவு வேகத்தில் தான் பிரகாரத்தை வலம் வர வேண்டும். அப்போது, அந்த தெய்வத்தின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். கதை பேசிக்கொண்டும், சேஷ்டைகள் செய்தபடியும் கோயிலை வலம் வரக்கூடாது. குழந்தைகள் சப்தம் செய்தால், அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி, அமைதிப்படுத்த வேண்டும். இவ்வாறு வலம் வருவதால், முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் விலகி விடும்.

திருவாதிரை விரதம் இருப்பது எப்படி?

மார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூச வேண்டும். சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய <உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடரவும் செய்யலாம். ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம்.

நடராஜர் நடனம் ஆடுவது ஏன்?

ஒவ்வொரு யுகம் முடிந்ததும் உலகம் அழிந்து போகும். அப்போது சிவன், எல்லா உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொள்வார். அப்போது, ஒவ்வொரு உயிரின் தலையிலும் அது செய்த பாவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்ப்பார். அடேங்கப்பா! இந்த <<உயிர்கள் எத்தனை பெரிய பாவ மூட்டைகளை கரைக்க வேண்டியிருக்கிறது! அதற்கு ஏகப்பட்ட பிறவிகள் எடுக்க வேண்டுமே என்று வருத்தப்படுவார். அப்போது, அவர் உள்ளத்தில் கருணை பொங்கும், மீண்டும் உயிர்களைப் படைக்க முடிவெடுப்பார். மகிழ்ச்சியில் அப்போது நடனம் புரிவார். அதையே "ஆனந்த தாண்டவம்' என்பர். சிவன் நடனமாடும் போது "நட(ன)ராஜர் என்ற பட்டப்பெயர் பெறுவார்.

பசு நெய்.. பசுஞ்சாண வரட்டி

கோயில்களில் ஹோமம் செய்யும் போது, பசு நெய்யை ஊற்றுகிறார்கள். நெய் கலந்த அரிசியை இடுவதும் உண்டு. இப்படியெல்லாம், நெய்யை ஊற்றலாமா! நாலு ஏழை பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடாதா என்று வாதம் செய்வோர் உண்டு. ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, ஹோம குண்டங்களில் இடப்படும் பொருட்கள், அக்னி மூலமாக, எந்த தெய்வங்களுக்குரிய மந்திரத்தைச் சொல்கிறோமோ, அந்த தெய்வங்களையோ, தேவர்களையோ அடையும் என்று சொல்கிறது.
அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா?
பசுநெய்யை ஹோமத்தில் விடும் போது, சுற்றுச்சூழல் தூய்மையடைகிறது. காற்றிலுள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த அரிசியை ஹோமத்தில் இடும்போது, அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு உள்ளிட்ட சில வாயுக்கள் கிளம்புகின்றன. இவை <ரத்த அழுத்தம், தலைவலி, ஆஸ்துமா, குடல்களில் ஏற்படும் நோய்களை குணமாக்கும் சக்தியுடையவை. நரம்பு மண்டலம் வலுவடையும். டென்ஷன் குறையும்.
வீடுகளில் இடமிருந்தால் பசுஞ்சாண வரட்டியையும் எரிக்கப் பயன்படுத்துங்கள். அந்தக்காலத்தில், வீட்டுக்கு வெளியே இருக்கும் பரந்த இடத்தில், பசுஞ்சாணம் சேகரித்து, வரட்டி தட்டி காயவைத்து வெந்நீர் போட, சமைக்க என பயன்படுத்தினார்கள். இந்தச் சாம்பலை செடி, கொடிகளில் தெளித்தால் பூச்சிகள் ஓடிவிடும். பல் தேய்க்க இந்த சாம்பலை பயன்படுத்துவார்கள். தேமல் இருந்து, அதில் பூசினால் குணமானது.
என்னதான் நவீனம் வளர்ந்தாலும், பசுவளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும். சுத்தமான நெய், வரட்டி முதலானவை கிடைக்க வீட்டுக்கு வீடு ஏற்பாடு செய்ய வேண்டும். பசுக்களை தெருக்களில் அலைய விடக்கூடாது. பசு வளர்ப்புக்கென இடம் ஒதுக்க வேண்டும். அருகிலேயே மேய்ச்சலுக்கு பயன்படும் வகையில் புல் வளர்க்க வேண்டும். பசுக்களைப் பாதுகாத்தால், ஆன்மிக ரீதியாக புண்ணியம். அறிவியல் ரீதியாக ஆரோக்கியம்.

நடராஜரின் கையிலுள்ள அக்னி

நடராஜரின் கையிலுள்ள அக்னி ஞானத்தின் குறியீடு. ஞானத்தீ யார் மனதில் எரிகிறதோ, அவருக்கே கடவுள் தரிசனம் கிடைக்கும் என்பதை அவர் ஏந்தியுள்ள தீச்சட்டி உணர்த்துகிறது. இறைவன் செய்யும் தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றில், நெருப்பு அழித்தலைக் குறிக்கும். மனதில் இருக்கும் "அறியாமை' என்னும் காட்டை நடராஜர் அழிக்கிறார் என்பதை அவர் ஏந்தியுள்ள நெருப்பு காட்டுகிறது. கையில் கற்பூரம் வைத்துக் கொண்டு ஒருவன் ஒன்றைச் சொன்னால், "சொல்வது சத்தியம்' என்பர். நடராஜரும் நமக்கொரு சத்தியம் செய்து கொடுக்கிறார். "தன்னை நம்பி வந்தவர்களை

நிச்சயதார்த்தத்துக்கு பிறகு திருமணத்தை நிறுத்தலாமா?

ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தமும் செய்து விட்டார்கள். அதன்பிறகு தான் அந்தப் பையன் ஒழுக்கக்கேடானவன், கடுமையான நோயுள்ளவன், அவர்கள் குடும்பத்தில் ஒழுக்கக்குறைவானவர்கள் இருப்பதாக தகவல் கிடைத்தல் போன்ற பெரிய காரணங்கள் தெரிய வருகிறது. அப்படியானால், நிச்சயித்த மாப்பிள்ளையை வேண்டாமென சொல்லி விடலாமா என்று கேட்டால், ""தாராளமாக அவனை ஒதுக்கி விட்டு, வேறு மாப்பிள்ளை தேடலாம்,'' என்கிறார் ராமபிரானின் குலகுருவான வசிஷ்டர். அதே நேரம், அந்த மணமகனிடம் ஒரு ஒழுக்கக்கேடும் இல்லாமல், அழகில்லை, வேலை சரியில்லை. பணமில்லை என்ற காரணங்களைக் காட்டி, நிச்சயதார்த்த்தை நிறுத்தினால் அது பாவம். இவற்றையெல்லாம் முன்கூட்டியே நன்றாக விசாரித்திருக்க வேண்டும். இதே போல, மணமகளுக்கு கொடிய நோய் ஏதேனும் இருந்தால், அதுபற்றி முன்கூட்டியே மணமகன் வீட்டாரிடம் தெரிவித்து விட வேண்டும். இதை மறைத்து திருமணம் செய்து கொடுத்தால் அவர்களை நூறு தடவை சவுக்கால் அடித்தால் கூட தவறில்லை என்று தர்மசாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது .

முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்.

2 - ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்.

3 - ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்

சொர்க்க வாசல், பரமபத வாசல் இவை இரண்டும் ஒன்றா? மாறுபட்டதா?

சொர்க்க வாசல், பரமபத வாசல் இவை இரண்டும் ஒன்றா? மாறுபட்டதா?

பரமபதம் எனில் மிக உயரிய ஸ்ரீமந் நாராயணன் வாசம் செய்யும் வைகுண்டத்தையே குறிக்கும். வைஷ்ணவ ஆகமங்களில் பரமபத வாசலுக்கு விசேஷ பூஜைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தாதா, விதாதா, பதங்கர், புவங்கர், பதிரன், வருணன், கஜலக்ஷ்மீ மற்றும் பல தேவதைகளை ஆராதித்து பிறகு அந்த கதவுகளின் திறவுகோலுக்கு விஷ்ணுவை பூஜை செய்யுமாறு ஆகமங்கள் பணித்திருக்கின்றன. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், பொதுப்படையாக நாம் கூறும் ஸ்வர்கம், நரகம் ...என்பதற்கும், மேலே குறிப்பிட்டுள்ள பரமபத வாசலும் வேறானவையே. எனினும், வழக்கத்தில் சொர்க்க வாசல் என்றே அழைக்கிறோம். இதில் தவறேதும் இல்லை. எவரொருவர் ஸ்ரீமந் நாராயணனிடம் சரணாகதி அடைந்து தங்களின் வாழ்க்கையை நடத்துகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் வல்ல பகவான் தனது திவ்ய கடாக்ஷத்தினால் நம்முடைய அனைத்து கர்ம வினைகளையும் போக்கி வைஷ்ணவ சம்ப்ராயத்தில் மிகவும் உயர்ந்த பதமான பரமபதத்தில் நம்மை இருக்க அருளுவார் என்பதின் வெளிப்பாடே நாம் சொர்க்க வாசல் அல்லது பரமபத வாசல் உள்செல்வது

பக்தவத்சலன் என்பவன் யார்?

பக்தவத்சலன் என்பவன் யார்?

''வத்சலன் என்றால் அருளக் கூடியவன் என்ற பொருள் மட்டுமல்ல. சுலபமாகக் கிடைக்கக் கூடியவன் என்றும் பொருளுண்டு. பக்தனுக்கு, இறைவன் சுலபமாகக் கிடைப்பான் என்பதால், பெருமாளுக்கு பக்தவத்சலன் என்று பெயர் வைத்தனர். பிரகலாதன், துருவன் போன்ற சிறுவர்கள் முதல் பிருகு, சுகப் பிரம்மர் போன்ற மகரிஷிகள் வரை யார் தன் மீது நிஜமான பக்தி செலுத்தினாலும் நேரில் வந்து விடக்கூடியவர் பெருமாள். இதனால் தான் அவர் பக்தவத்சலன் எனப்பட்டார்''

பாரதியாரின் நற்சிந்தனைகள்:-

பாரதியாரின் நற்சிந்தனைகள்:-
 
* தீமை செய்யும் புகைக்கு நடுவில் ஒளி தரும் நெருப்பு இருப்பதைப் போல, பகைவனின் உள்ளத்திலும் அன்பே வடிவான கடவுள் வீற்றிருக்கிறார். ... * தெளிந்த தேனில் சிறிது விஷம் சேர்ந்தாலும், அது பயனற்றாகி விடும். அதுபோல, உள்ளத்தில் வஞ்சகம் மிக்க தீய எண்ணம் புகுந்தால் மனமும் பாழாகி விடும். * பிறருக்கு கேடு நினைப்பவன் தனக்கே தீங்கு உண்டாக்கிக் கொள்கிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது. * அன்பே வாழ்வின் அடிப்படை என்பதை உணருங்கள். தின்ன வரும் கொடிய புலியைக்கூட அன்போடு போற்ற வேண்டும். அன்னை பராசக்தியே புலி வடிவில் வருவதாக எண்ணி வணங்க வேண்டும். * உலகில் எல்லாரும் எதிர்த்து நின்றாலும் அச்சம் சிறிதும் கொள்ளக் கூடாது. தேடிய பொருள் அனைத்தையும் இழந்து விட்ட நிலையிலும், அச்சம் கொள்வது ஆகாது. * உயிரை எடுக்கும் காலனைக் கூட புல்லைப் போல மதியுங்கள். பயம் என்னும் பேயை ஓட விரட்டுங்கள். - பாரதியார்

அமைதி புறாவை காக்க துப்பாக்கி எடு..!

அமைதி புறாவை காக்க துப்பாக்கி எடு..!

மாகாபாரத போர் எப்படி நடந்தது அதன் மூலம் என்ன நிகழ்ந்தது யார் யாரெல்லாம் வென்றார்கள் யாரெல்லாம் தோற்று ஓடினார்கள் அந்த யுத்த களத்தில் மடிந்தது எத்தனை பேர் அங்கங்கள் சிதைந்து போனது எத்தனை பேருக்கு என்பது நமது திண்ணையிலேயே உட்கார்ந்து வெற்றிலை இடிக்கும் பல் போன பாட்டி முதல் தொட்டிலில் அமர்ந்து கொண்டு கள்ளம்கபடம் இல்லாமல் சிரிக்கும் பல் முளைக்காத குழந்தை வரைக்கும் தெரியும்

குருசேத்திர பூமியில் யுத்தம் முடிந்த பிறகு மடிந்து போன யானைகள் குதிரைகள் காளைகள் மலைபோல குவிந்து கிடந்ததுவாம் மனித உடல்களோ எண்ணவே முடியாத அளவிற்கு இமயமலை உயரம் போல காட்சி அளித்ததுவாம் கங்கை ஆறுக்கு இணையாக குருதி ஆறு அந்த பாலைவன பூமியில் பெருக்கெடுத்து ஓடியதுவாம் யுத்தம் முடிந்த போது பிழைத்து நின்ற ஜீவன்கள் பாண்டவர்களும் குருட்டு அரசனும் அவன் மனைவி காந்தாரியும் மட்டும் தானாம்

போர்களத்தில் மடிந்தது ஆண்கள் மட்டுமென்றால் கணவனை இழந்த காரிகைகள் எத்தனை பேர் மகனை பறிகொடுத்த அன்னையர்கள் எத்தனை பேர் சொந்த சகோதரனையும் இணைபிரியாத நண்பர்களையும் பறிகொடுத்து விட்டு ஆதரவு இல்லாமல் வாழவும் வழி இல்லாமல் சாகவும் முடியாமல் பரிதவித்த மக்கள் கூட்டம் எத்தனை பேர் இருப்பார்கள் அவர்கள் நிலையை எண்ணி பார்க்கவே இரக்கமுள்ள மனதிற்கு துணிச்சல் இல்லை

இத்தனை கொடுமையான இந்த போர்களத்திற்கு யார் காரணம் சம்மந்தமே இல்லாத உயிர்கள் துடிதுடித்து சாவதற்கு யார் பொறுப்பு பங்காளிகளுக்குள் நடந்த பாகபிரிவினை தகராறில் சொந்தமே இல்லாத மக்கள் கூட்டம் ஒட்டு மொத்தமாக செத்து போனதற்கு யாரை சூத்திரதாரி என்று குற்றம் சாட்டுவது சந்தேகமே வேண்டாம் சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாதான் இத்தனை கொடுமைக்கும் மூல காரணம்

தவழக்கூட முடியாத சின்னஞ்சிறு குழந்தையாக தொட்டிலில் கிடந்தவன் சகடாசூரனை சாகடித்தான் பூதகியின் விஷ முலையை கடித்து உயிர்பரித்தான் காளிங்கனின் ஆணவத்தை அடக்க தலையின் மீள் ஏறி நின்று தாண்டவம் ஆடினான் பூமியோடு ஒட்டி பிறந்த கோவர்த்தன கிரியை பிடுங்கி எடுத்து குடையாக பிடித்தான் மல்லாதி மல்லனான மாமனை அடக்கி வாகை சூடினான் அப்பேர் பட்ட வீராதி வீரனான மாதவன் சொல்பேச்சு கேட்காத துரியோதன கூட்டத்தை தனி ஒருவனாக நின்றே தாக்கி அழித்து வெற்றி வாகை சூடியிருக்கலாமே அப்படி அவன் செய்திருந்தால் அப்பாவி படை வீரர்கள் பலர் மடியாமல் இருந்திருக்கலாமே செய்தானா அவன் செய்யத்தான் நினைத்தானா

கண்ணன் செய்யாத மாயங்கள் தான் உண்டா மண்ணை தின்ற வாயை திறக்க சொன்ன அன்னைக்கு பவள வாய்க்குள்ளேயே அண்டங்கள் அத்தனையும் காட்டியவன் அல்லவா அவன் பிறந்த அன்றே யமுனை நதியை பிளந்து வழி எற்படுத்தியவன் அல்லவா அவன் எங்கோ வெகு தொலைவில் பாஞ்சாலியின் புடவை அவிழ்க்க பட்ட போது துவாரகையில் இருந்தவாறே கோடிகணக்கான ஆடைகளை கொடுத்து அவள் மானத்தை காப்பாற்றிய மாய கண்ணனுக்கு தர்மன் ஆடிய சூதாட்ட பலகையில் ஒரே ஒரு தாயகட்டையை மாற்றி போட்டு வெற்றி அடைய வைக்க முடியாதா என்ன அதை ஏன் அவன் செய்யவில்லை அப்படி மட்டும் செய்திருந்தால் பாஞ்சாலியின் சபதம் ஏது பாண்டவர்களுக்கு வனவாசம் ஏது பாரத போர் தான் ஏது ஏன் அவன் அதை செய்யவில்லை எதற்க்காக அவன் செய்யாமல் இருந்தான்

முடியாததை செய்யவில்லை என்றால் குற்றம் சொல்ல ஏதும் இல்லை முடிந்த செய்யாதவனை குற்றவாழி என்று சொல்லவதை தவிர வேறு வழியில்லை ஆகவே பாரத போரை தடுக்க முடிந்தும் தடுக்காத கிருஷ்ணன் குற்றங்களை சுமக்கும் கோபுரம் என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது

ஒரு சிறிய காரியத்திற்குள்ளேயே பல பெரிய காரணங்களை வைத்திருக்கும் கண்ணன் காரணமே இல்லாமலா இந்த போர்களத்திற்கு வழி ஏற்படுத்தி இருப்பார் நிச்சயம் இருக்காது அலைவீசும் கடலுக்குள் அடி ஆழத்தில் மறைந்து கிடக்கும் முத்துக்களை போல கண்ணனின் கருத்தை பகுத்து ஆய்ந்து உள்நுழைந்தால் ஏராளமான விடைகள் வெளிச்சமாக நமக்கு கிடைக்கலாம் ஆனாலும் வானத்தையும் பூமியையும் மூன்றடிகளால் அளந்து நின்ற திருவிக்ரமனின் திருவுள்ளத்தை திறனாய்வு செய்ய நமக்கு திறன் ஏது ஆனாலும் யாகசாலையில் கொட்டி கிடக்கும் புனிதமான நெய்யை நக்கி பார்க்க ஆசை பட்ட நாய் குட்டியை போல் நாயகனின் நற்கருத்தை நாமும் உணர ஆசைப்படலாம் அல்லவா?

குருசேத்திரம் என்பது மனித வாழ்க்கை அதில் பாண்டவர்கள் என்பது ஐம்புலன்கள் ஐம்புலங்களையும் தாக்கி அழித்து வெற்றிவாகை சூடவரும் பேராசைகள் தான் துரியோதன கூட்டம் அந்த கூட்டத்தின் மத்தியில் புலன்களை நல்வழி படுத்தவும் மரணமில்லாத முத்தி மார்க்கத்திற்கு அழைத்து செல்லவும் பாடு படும் ஆத்மா தான் கிருஷ்ண பரமாத்தமா ஆசைகளை அடக்க முனையும் போராட்டம் தான் பாரத போர் என்று உயர்ந்த அளப்பரிய தத்துவ விளக்கத்தை நமது பெரியவர்கள் பலர் கொடுத்திருக்கிறார்கள் அவைகள் அனைத்துமே உயர்ந்தவைகள் உன்னதமானவைகள் வணங்க தக்கவைகள் என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது ஆனால் அந்த தத்துவ ஞானங்களை புரிந்து கொள்கின்ற சக்தி நமக்கிருக்கிறதா? என்று உள்ளுக்குள் உணர்ந்து எண்ணி பார்த்தோம் என்றால் நம்மிடம் அத்தகைய அறிவு திறன் இல்லை என்பது தெரியவரும் எனவே மகாபாரத போரின் தத்துவத்தை கண்ணுக்கு தெரிகின்ற வெளிப்பொருளோடு ஒப்பிட்டு சிந்தித்து பார்ப்பது தான் நமக்கழகு.

போர் போராட்டம் சண்டை என்பவைகள் ஆக்கிய பொருட்களை அழிக்க கூடியது என்பது மட்டும் தான் நமது கண்களுக்கு பெரிதாக தெரிகிறது நாணயத்தில் இரண்டு பக்கம் இருப்பது போல யுத்தம் என்பதிலும் இரண்டு பக்கம் இருக்க வேண்டுமல்லவா? ஒரு பக்கம் குருதி பெருக்கெடுக்கும் வன்முறை களம் யுத்தம் என்றால் அதன் இன்னொரு பக்கம் என்ன? என்றாவது ஒரு நாள் போர்களத்தின் மறுபக்கத்தை நமது மனம் சிந்தித்து பார்த்திருக்கிறதா? அப்படி பார்த்திருந்தால் உள்ளதை உள்ளப்படி ஒத்துக்கொள்ளும் ஞான துணிச்சல் நமக்கு வந்திருக்கும் ஆனால் நாம் கடிவாளம் கட்டிய குதிரை போல் ஒரே பக்கத்தை மட்டுமே பார்த்து பேசியதையே பேசும் கிளிகளாக வாழ்ந்து வருகிறோம்

உண்மையில் போர்களம் போராட்டம் என்பவைகள் இல்லை என்றால் இன்று நாம் பெற்றிருக்கின்ற வசதிகள் வளர்சிகள் வெற்றிகள் எவற்றையுமே கண்டிருக்க முடியாது உலோகங்களால் ஆயுதம் கண்டுபிடித்த மனித கூட்டத்திற்கும் கல்லாயுதம் பயன்படுத்திய மனித கூட்டத்திற்கும் நடந்த போரின் முடிவு தான் நாகரீக சமூகத்தின் முதல் பிறப்பு வரலாற்று ஏடுகளை புரட்டி பார்த்தால் ஆயிரகணக்கான யுத்தங்களை மனித சமூகம் நடத்தியிருக்கிறது ஒவ்வொரு யுத்தத்தின் முடிவிலும் வெற்றி பெற்ற கூட்டம் வளர்ச்சியை நோக்கி முன்னேறியிருக்கிறது போராட்டங்களே இல்லாமல் உயிர் கூட்டம் வாழ்க்கையை நடத்தி கொண்டிருந்தால் இன்று வரை நீயும் நானும் பச்சை மாமிசத்தையும் கிழங்கு வகைகளையும் சாப்பிட்டு கொண்டு மரக்கிளையில் தான் வாழ்க்கையை நடத்தி கொண்டிருப்போம்

நடந்து முடிந்த பெரிய யுத்தங்கள் பலவற்றையும் அவை முடிந்த பிறகு உலகம் கண்டிருக்கும் மாற்றத்தையும் சற்று உன்னிப்பாக பாருங்கள் முதல் உலகமாக யுத்தம் யாரால் துவக்கப்பட்டது என்பது நமக்கு தெரியும் அந்த யுத்தத்தில் ஜெர்மனி அடைந்த படு தோல்வியும் நாமறிவோம் இனி எக்காலத்திலும் அறிஞர்கள் பலரை விஞ்ஞானிகள் பலரை உலகமே இன்று வரை வியந்து பார்க்கும் தத்துவ மேதைகள் பலரை உலகுக்கு தந்த ஜெர்மன் நாடு எழுந்து நிற்காது உலக சமூகத்தோடு போட்டி போட்டு வளராது அந்த நாடு இனி காணப்போவது சாம்ராஜிய மேடுகள் அல்ல சாம்பல் மேடுகளை மட்டுமே என்று உலகம் முழுவதும் பேசப்பட்டது நம்பப்பட்டது அப்போதைய வல்லரசான பிரிட்டிஷ் ஏகாதிபத்தயம் தன்னை தட்டி கேட்க யாருமே இல்லை என்ற கனவில் மிதந்தது

ஆனால் நடந்தது என்ன யாருமே எதிர்ப்பார வண்ணம் யாருமே கணக்கிட முடியாத அசுர பலத்தோடு ஜெர்மன் நாடு அடுத்த இருப்பது ஆண்டுகளில் வளர்ச்சி பெற்று இரண்டாவது உலக போருக்கு பிள்ளயார் சுழி போட்டது இங்கிலாந்தை தோல்வியின் விளிம்பிற்கு தள்ளியது இளம் சிங்கமென்று கொக்கரித்து நின்ற சோவியத்து ருசியாவின் பிடரியை பிடித்து ஆட்டி வைத்தது ஆரம்பத்தில் ஹிட்லர் பெற்ற மாபெரும் வெற்றியை கண்டு அமெரிக்காவே கூட நடுங்கியது இனி இந்த நாடு எழும்பவே எழும்பாது என்று எல்லோராலும் முடிவு கட்டப்பட்ட ஜெர்மனால் தான் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் உறக்கத்தை இழந்தனர் ஜெர்மனுக்கு இத்தகைய அசுர சக்தியை கொடுத்தது முதல் உலக போர் என்றால் அது மிகையில்லை.

போர் தாக்குதலால் இதுவரை அழிக்கவே முடியாத மாபெரும் தழும்பை பெற்ற நாடு எது என்றால் அது ஜப்பான் தான் அமெரிக்க தான் கண்டு பிடித்த அணுகுண்டுகளை பரிசோதனை செய்து பார்த்ததே ஜப்பான் நாட்டின் மீது தான் ஜப்பான் நாட்டின் மீது விழுந்த போர் என்ற மரண அடி அந்த நாட்டை எந்த வகையிலும் வீழ்த்திவிட வில்லை போருக்கு பிறகு தான் அது பொருளாதார வல்லரசாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது போரினால் அந்நாடு மனசோர்வு அடைந்திருந்தால் இனி நம்மால் ஆகாது என்று கைகட்டி உட்கார்ந்திருந்தால் இன்று அது அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருக்கும் ஆனால் போர் கொடுத்த உத்வேகம் அதை பிரம்மாண்டமாக வளரவைத்து விட்டது

அமெரிக்காவை எடுத்து கொள்வோம் அது வளர்ந்ததே வல்லரசாக மாறியதே போர்களங்களால் தான் போர் இல்லை என்றால் அமெரிக்க பறந்து விரிந்த ஒரு வறுமை தேசமாக இருந்திருக்கும் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு போர் வலியை அமெரிக்கா உணர்திரா விட்டால் இன்று உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் தீவிரவாதம் கலகலத்தது போயிருக்காது போர்களால் நாடுகள் மட்டும் வளரவில்லை விண்வெளி ஆய்வு மருத்துவ ஆய்வு புதிய புதிய கண்டு பிடிப்புகள் எதுவுமே வளர்ந்திருக்காது

போர் இல்லாத சமாதான காலங்களில் மனித சமூகம் சோம்பலோடும் அசட்டையோடும் ஏனோ தானோ என்றும் இருந்து விடுவது இயற்க்கை ஆனால் போர்காலங்களில் நிலமையே வேறுவிதமாக மாறிவிடுகிறது நமக்குள் உறங்கி கிடக்கும் சக்திகளை கிளறி விட்டு அசாதாரணமான அறை கூவல்களை எதிர்கொள்ள வகை செய்கிறது இதை வேறுவிதத்தில் மாற்றி சொல்வதென்றால் போர்காலமானது மனதிற்குள் இனம்புரியாத இறுக்கத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கி எவ்வளவு சிக்கலான பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வைத்து விடுகிறது சுருங்க சொல்வதனால் போர் என்பது துயரங்களை மோதி மிதித்து வெற்றியை நோக்கி மனிதனை நடை போட செய்கிறது

இது என்ன வளர்ச்சி ஒன்றை அழித்து அதன் மீது வளருவது வளர்ச்சியா மனித தன்மை என்பதே இல்லாத செயல் அல்லவா இது இத்தகைய போர்களத்தை கிருஷ்ணன் விரும்பி இருப்பானா? அதை வரவேற்றும் இருப்பானா? என்று நமது மனம் மீண்டும் குழம்புகிறது நன்றாக யோசித்து பார்த்தால் ஒவ்வொரு தனிமனிதனும் தினசரி வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் போராடி கொண்டிருக்கிறான் மற்றவற்றை அழித்து கொண்டிருக்கிறான் என்பது நமக்கு புரியும் அது மட்டுமல்ல மற்றவைகளை அழிக்காவிட்டால் மனிதனால் வாழவே முடியாது என்பதும் தெரியவரும் பிறந்தது முதல் இறப்பது வரையிலும் நமது உடலில் சுவாசம் என்ற குதிரை ஓடிக்கொண்டே இருக்கிறது ஒவ்வொரு சுவாசமும் காற்றில் கலந்திருக்கும் பல்லாயிர கணக்கான நுன்னூயிர்களை ஒழித்து கட்டியபடிதான் நடக்கிறது மற்றவற்றை அழிப்பது பாவமென்றால் நான் மூச்சு விடாமல் மரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம் விரும்பியோ விரும்பாமலோ உயிர்கள் அனைத்தும் போர்களத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது அதனால் தான் வாழ்க்கை என்பதே பெரிய போராட்டம் என்று அழைக்கப்படுகிறது

உடல்களை வெட்டி உயிர்களை வதைத்து நடத்தும் போர்கள் எதற்கு எதிரிகள் திருந்தும் வரை அமைதியாக இருந்து விடலாமே அது தானே மிக உயர்ந்த அஹிம்சா தர்மம் என்று இன்றைய நவீன வாதிகள் பலர் பேசுகிறார்கள் எதிர்ப்பை காட்டாமல் மெளனமாக இருப்பது அஹிம்சை அல்ல அது கோழைத் தனம் காந்தி ஆயுதம் எடுக்கவில்லை தான் கத்தி இன்றி ரத்தமின்றி யுத்தம் நடத்திய உத்தமர் தான் ஆனால் அவரும் ஒருவகையில் ஆயுத தாரிதான் அவர் போராட்டத்திலும் ஆயுதம் இருந்தது அந்த ஆயுதம் சாதாரண ஆயுதமல்ல அணுகுண்டை விட வலிமையான அகிம்சை என்ற ஆயுதமாகும் அதை கொண்டு தான் அவர் எதிரிகளை தாக்கினார் நாம் நினைப்பது போல அகிம்சை என்பது மெளனமல்ல தாக்குவது! சக்தமில்லாமல் ரத்தம் வராமல் உடல் வலிக்காமல் உள்ளத்தை மனதை ஆத்மாவை எழ்ந்திருக்கவே முடியாத அளவு வலிமையோடு தாக்குவதாகும்

உயிர் வாழவேண்டுமென்றால் உயிர்கள் ஒவ்வொன்றும் இறைத்தன்மையை நோக்கி முன்னேற வேண்டுமென்றால் போர் என்பது அவசியம் இதை நடத்த மாட்டேன் என்று புறமுதுகு காட்டி யாராலும் ஓட முடியாது அப்படி ஓட நினைக்கும் எவனுக்கும் வாழ்வதற்கான தகுதி இல்லாமல் போய்விடுகிறது எனவே போர்களங்களை கண்டு ஒதுங்காதே அதில் முட்டி மோதி முன்னேற பார் அந்த முன்னேற்றம் என்பது பாண்டவர்களை போல் என்னை மையமாக வைத்து இருக்குமென்றால் அதன் பெயர் வெற்றி அது தான் உயிர்களின் முத்தி என்பது கண்ணனின் கருத்து

இந்த கருத்தை நம்மை போன்ற சாதாரண ஜீவன்கள் புரிந்து கொள்ளவேண்டும் போர்களங்களில் பங்கு பெற்று வாழ்க்கையை அர்த்தபடுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எழுந்திரு காண்டீபம் கையில் எடு போராடு எதிரிகளை வீழ்த்து வெற்றி மாலை சூடு என்று கண்ணன் சொல்கிறான். மகாபாரத போரையும் முன்னின்று நடத்தியிருக்கிறான் இதை உணர்ந்தால் நமது போராட்ட களமான வாழ்க்கை வெற்றி என்ற ராஜபாட்டையை நோக்கி நகரும் எனவே சமாதானமாக வாழ சண்டை என்பது அவசியம்.

புனித சின்னங்களை தரையில் கோலமாக போடுவது அவமரியாதை இல்லையா?

சில வீடுகளில், “ஓம்” என்ற எழுத்தை வாசலில் கோலமாக போடுகிறார்கள். அதை பார்க்கும் போது மனதிற்கு சங்கடமாக இருக்கிறது. புனித சின்னங்களை தரையில் போடுவது அவமரியாதை இல்லையா? விளக்கம் தரவும்.

சிலருக்கு எது புனிதம், எது புனிதமில்லை என்ற அறிவு இருப்பதே இல்லை. தனக்கு பிடித்தமான சினிமா நடிகரின் படத்தை யாராவது தப்பி தவறி கீழே போட்டு விட்டால் வானத்திற்கும், பூமிக்கும் குதிப்பார்கள். ஆனால் அவர்களோ தனது பெற்றோர் படத்தையோ, இறைவனின் திருவுருவ படத்தையோ குப்பை மேட்டில் எறிந்தால் கூட கண்டுகொள்ள ம...ாட்டார்கள் இது கலியுக கொடுமை.

“ஓம்” என்பது ஹிந்து மதத்தின் தனிப்பட்ட சொத்து அல்ல, அது உலகம் முழுமைக்கும் சொந்தமானது. ஜைனர்களும், பெளத்தர்களும் அதை அப்படியே பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் ஆமென் என்ற வார்த்தையில் ஓம் நடு மையமாக மறைந்துள்ளது. இஸ்லாமியர்களின் ஆமீன் என்பதில் ஓம் இருக்கிறது.

பூமியில் மூன்று பங்கு உயிரினம் தண்ணீரில் வாழ்கிறது. ஒரு பங்கு உயிரினம் காற்றில் வாழ்கிறது. ஆனால் அகில புவனமும் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தில் வாழ்கிறது. அதனால் தான் அதை உலகுக்கே பொதுமையானது என்று துணிந்து கூறுகிறேன். அப்படிப்பட்ட பிரணவ மந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டியது மனிதனின் முதல் கடமை.

“ஓம்” என்ற அட்சரத்தை மனித காலடிகள் படாத ஆலய வளாகங்களில், பூஜை அறையில் கோலமாக போடுவது தொன்று தொட்டு இருந்து வருகிற மரபு. எனவே அதை நாமும் கடைபிடிக்கலாம். அதில் தவறில்லை இவைகள் தவிர வேறு எந்த இடத்திலும் புனித சின்னங்களை தரையில் வரையக்கூடாது. அது சரி இப்போது நமது தமிழ்நாட்டில் பெண்கள் தினசரி கோலம் போடுகிறார்களா? ஆச்சரியமாக இருக்கிறதே கோலம் போடுவதை பெண்ணடிமை தனத்தில் சேர்க்கவில்லையா?

நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள்.

நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள்.

காடு, மலைகளில் வாழ்ந்த சித்தர்கள் நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்தார்கள். நோய்கள் அவர்கள் அருகே வர அஞ்சியது. தங்கள் ஆயுள் ரகசியத்தை அவர்கள் சொல்லி இருந்தாலும், நாம் தான் அதன்படி வாழ மறுக்கிறோம். 18 சித்தர்களில் ஒருவரான தேரையார் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு பட்டியலே இடுகிறார்.

மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் இப்படி சொல்கிறார் :

பால் உணவு உட்கொள்ளுங்கள்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளியுங்கள்.

படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்து படுங்கள்.

புளித்த தயிர் உணவை விருப்பி உட்கொள்ளுங்கள்.

பசிக்கும்போது மட்டுமே உணவை உட்கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

இரவில் நன்றாக தூங்குங்கள்.

பெண்ணுடன் மாதம் ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.

வாழைக்காயை உணவுக்கு பயன்படுத்தும்போது பிஞ்சிக் காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் . முற்றிய காய்களை கறி சமைத்து உண்ணக்கூடாது.

உணவு உட்கொண்ட உடனேயே சிறிது தூரம் நடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும்.

6 மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்ள வேண்டும்.

4 மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிடுங்கள்.

1 1/2 மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டு சளி போன்ற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்துகொள்ள வேண்டும். ( இது ஆண்களுக்கு மட்டும் )

4 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

3 நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இட வேண்டும். (பெண்களுக்கு மட்டும்)

விரும்பிய தெய்வங்கள், குருவை வணங்குங்கள்.

இவற்றை எல்லாம் ஒருவர் தனது வாழ்நாளில் பின்பற்றி வந்தால் எமன்
அவரை நெருங்கி வரவே பயப்படுவான் என்கிறார் தேரையார்.

எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு தேரையாரின் அறிவுரை :

பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்த்து விடுங்கள்.

கரும்பு போன்ற இனிப்பவர்களாக இருந்தாலும் வயதில் மூத்த பெண்களுடனும் இனிய வாசம் தரும் தலைமுடியைக் கொண்ட விலைமாதர்களுடன் உடலுறவு கொள்ளாதீர்கள்.

காலை இளம் வெயிலில் அலையாதீகள்.

மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்கி வைத்திருக்காதீர்கள்.

முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்று இருந்தாலும் அதை மறுநாள் உண்ணவேண்டாம்.

உலகமே பரிசாக கிடைக்கிறது என்ற போதும், பசிக்காத போது உணவு உட்கொள்ளாதீர்கள்.

உணவு உட்கொள்ளும்போது தாகம் அதிகம் எடுத்தாலும், இடைஇடையே தண்ணீர் குடிக்கக்கூடாது.

மயக்கும் மனம் வீசும் கந்தம், மலர்கள் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகரக்கூடாது .

மாத விலக்கான பெண்கள், ஆடு, கழுதை போன்றவை வரும் பாதையில் எழும் புழுதி உடல்மேல் படும்படி நெருங்கி நடந்து செல்லாதீர்கள்.

இரவில், விளக்கு வெளிச்சத்தில் நிற்பவர் நிழலிலும், மர நிழலிலும் நிற்பதை தவிர்த்திடுங்கள்.

பசியின் போது உணவு உட்கொண்ட உடனேயும் உடலுறவு வைத்துக்கொள்ளாதீர்கள்.

மாலை நேரத்தில் தூங்குதல், உணவு உட்கொள்ளுதல், அளவுக்கு மீறிய காமச் செயல்களில் ஈடுபடுதல், அழுக்கான ஆடை அணிந்திருத்தல், தலையை வாரி முடி உதிரச்செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.

மற்றவர்கள் கை உதறும்போது அவர்களது நகத்திலிருந்து விழும் தண்ணீரும், குளித்து தலை துவட்டும் போது உதிரும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்காதீர்கள்.

-இப்படி சொல்கிறார் அவர்.

தேரையார் சித்தர் கூறிய அனைத்தையும் ஒரே நாளில் பின்பற்றுவது என்பது இயலாத காரியம். ஏனென்றால், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை அப்படி. அதனால், படிப்படியாக முயற்சிப்போம். நோய், நொடியின்றி நாளும் நலத்தோடு வாழ்வோம்.

Sunday, December 29, 2013

காமாட்சி விளக்கு

காமாட்சி விளக்கு
விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது. பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து வைத்துள்ளனர்.
சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள் கின்றனர். புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எ...ல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன் திருவிளக்கே.
புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, "நிறைநாழி'' எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் மீது தீபம் ஏற்றப்படும். பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம். மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.
குத்து விளக்கு :
குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து-நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம். ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்களுடன் கிடைக்கின்றன. உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக் குரியவையாகவும்,சில அலங்காரத்திற்குஉரியவையாகவும் விளங்குகின்றன.
பாவை விளக்கு :
ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது. இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம்.
தீபங்கள் பதினாறு :
தூபம், தீபம் புஷ்பதீபம் (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர (புலி) தீபம், ஹம்ஸ் (அன்னம்) தீபம், கும்ப (குடம்) தீபம், குக்குட (கோழி) தீபம், விருக்ஷ தீபம், கூர்மா (ஆமை) தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.
தூக்கு விளக்குகள் ஒன்பது :
1. வாடா விளக்கு
2. ஓதிமத்தூக்கு விளக்கு
3. தூண்டாமணி விளக்கு
4. ஓதிம நந்தா விளக்கு
5. கூண்டு விளக்கு
6. புறா விளக்கு
7. நந்தா விளக்கு
8. சங்கிலித் தூக்கு விளக்கு
9. கிளித்தூக்கு விளக்கு.
பூஜைவிளக்குகள் ஒன்பது :
சர்வராட்சததீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாகர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன. சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும்.
கைவிளக்குகள் ஏழு :
கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, சம்மனசு விளக்கு, கணபதி விளக்கு, கைவக் விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும்.
நால்வகை திக்பாலர் தீபங்கள் :
ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.
அஷ்டகஜ தீபங்கள் எட்டு :
ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சர்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம்.

Saturday, December 28, 2013

இறைவன் மேல் பக்தி சித்திப்பதற்கு ஏழு சாதனங்கள் வேண்டியிருப்பதாக சாத்திரமானது வலியுறுத்துகின்றது

இறைவன் மேல் பக்தி சித்திப்பதற்கு ஏழு சாதனங்கள் வேண்டியிருப்பதாக சாத்திரமானது வலியுறுத்துகின்றது அவையாவன
விேவகம் விமோகம் அப்பியாசம் க்கிரியா கல்யாண அனுத்தாசம் அனுவசானம் இந்த ஏழும் அவையாகும்
விவேகம் என்றால் தர்மா தர்மங்கள் குறித்த ஞானம் சரீர சக்தி மனச்சக்தி வாக்ச்சக்தி இதையெல்லாம் விவேகவான்கள் தேடிக் கொள்வார்கள்
விமோகம் என்பது என்னவென்றால் உலக இன்பங்களில் பற்றில்லாமல் பகவத் விடயங்களில் பற்றுடன் இருத்தல் ஆகும்
அப்யாசம் என்பது இந்த முதல் கூறிய இருவிடயங்களையும்... இடைவிடாது கடைப்பிடித்தலாகும்
க்கிரியை என்பது அதற்குன்டான காரியங்களைச் செய்தல்
எப்பொழுதும் பகவத் விடயத்திலே ஈடுபடும் படியான காரியங்களைச் செய்தல்
கல்யாண என்பது பகவானுடைய திருக்கல்யாண குணங்களை எப்பொழுதும் சிந்தனை பண்ணிக் கொண்டே இருப்பது
அந்தப் பகவானின் திருக்கல்யாண குணங்கள் ஒவ்வொன்றும் நம்மை இழுத்துக் கொண்டே போய்விடும் ஒரு குணத்தை அனுபவித்து முடிந்தாலல்லவா எல்லா குணங்களையும் அனுபவிப்பது குறித்து யோசிக்கலாம் எல்லா குனங்களும் ஏற்றமுடையவை எப்போதும் அவற்றையே சிந்தனை பண்ணிக் கொண்டிருப்பது
அனவசாதனம் என்றால் பாகவதஉத்தமர்களிடத்திலே ஆசூயைப் படக்கூடாது இறைவனிடத்திலே பிரபக்தியோடு இருக்க வேண்டும் அதிலும் நம் போன்ற பக்தர்களிடத்திலே அன்யோன்யமான பரேமையுடனும் அன்புடனும் அடியேன் அடியேன் என்று பணிந்து முந்தி நிற்க வேண்டும் அவ்வாறு நாம் பகதியோடு இருப்பதைத்தான் பகவான் விரும்புகின்றான்
அனுத்தாசம் பசி தூக்கத்தைப் பொறுக்கும் திறன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அவற்றிலே நாட்டம் கொள்ளக் கூடாது
உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே என்று அந்த எம்பெருமானையே நினைத்திருக்க வேண்டும் பசி தாகம் என்பன போன்ற இத்யாதி லோக கர்மாககளுக்கு இடம் கொடுக்கக் கூடாது

விரத உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது என்பது ஏன்?

விரத உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது என்பது ஏன்?

விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு இருத்தல் என்று பொருள். விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். சாப்பிட்டால் மலஜலம் கழிக்க நேரிடுமே என்பதால் ...தண்ணீர் கூட குடிக்காமல் பசித்திருந்து, சிந்தனை மாறாமல் இருப்பதையே உபவாசம் என்ற நிலையில் முதன்மையாகக் கூறியுள்ளனர். உபவாசம் என்றால் இறைவனுக்கு அருகில் இருத்தல் என்று பொருள். முறையாக இருக்க இயலாதவர்கள் கூட அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன

அக்னிசாட்சியாக திருமணம்....... ஏன்?

அக்னிசாட்சியாக திருமணம்....... ஏன்?
 
 இந்த காலத்தில் நடைபெறும் திருமணங்கள் தமிழ் முறைப்படியும் இல்லாமல் வைதீக முறைப்படியும் இல்லாமல் இரண்டும் கலந்து நடைபெறுகின...்றன. திருமணத்தின் போது நடத்தப்படும் சடங்குகள் எல்லாம் அறிந்து செய்வதில்லை. எந்திரம் போல் முன்னுக்கு பின் முரண்பாடாக செய்து வருகிறார்கள். எனவே தமிழ்த் திருமண முறைகளை தொகுத்துள்ளேன். திருமண உறுதி (நிச்சயதார்த்தம்): திருமண உறுதி சடங்கை நிச்சயதார்த்தம் என்று வட மொழியில் சொல்வர். காலப்போக்கில் நிச்சயதார்த்தம் என்ற சொல்லே நிலைத்து விட்டது. மணமக்களை சார்ந்த இரு வீட்டாரும் சான்றோர்களையும்,சுற்றத்தார்களையும் அவையில் கூட்டி மணநாள் குறித்து ஒப்புதல் செய்து திருமணத்தை உறுதி செய்வதாகும். சடங்கு முறைகள் : அவையில் சான்றோர்களுடன் மணமக்களை சார்ந்த பெற்றோர்கள் அமர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையிட்டு சந்தானம், பன்னீர் கொண்டு நலுங்கு செய்து கொள்ள வேண்டும். இரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம், மஞ்சள் வைத்து அதில் திருமண உறுதிப்பத்திரத்தை எழுதி கையொப்பம் இட்டு வைக்க, சான்றோர் (இரு நகல்கள்) சபையில் படித்து காட்ட வேண்டும். மணமக்களை மேடைக்கு அழைத்து சங்கல்பம் செய்து திருமண உறுதி புடவையும், அணிகலன்களையும் கொடுத்தல் வேண்டும். மணமகள் அப்புடவையை அணிந்து வந்து சபையோரை வணங்க வேண்டும். சான்றோர்கள் மஞ்சள், அரிசி தூவி ஆசீர்வதித்து பின் மகளிர் நலுங்கு இடுதல் வேண்டும். தமிழ்திருமுறை, திருமண தீபம்: மனையில் மூன்று கலசங்கள், மஞ்சள் பிள்ளையார், முளைப்பாலிகை, நவகோள்கள் வைத்து இரு குத்து விளக்கில் ஒன்றில் மணமகள் வீட்டாரும், மற்றொன்றில் மணமகன் வீட்டாரும் தீபம் ஏற்ற வேண்டும். அம்மை அப்பர் கலச வழிபாடு: மூன்று கலசத்தில் முதல் கலசம் கொண்டு புண்ணிய வாசம் செய்த பிறகு அடுத்த இரு கலசங்களில் இத்திருமணத்துக்கு சாட்சியாக அம்மை அப்பர் தெய்வத்தையும் ஆவாஹனம் செய்து வரவழைக்க வேண்டும். நவகோள் வழிபாடு: முழு பச்சை பாக்குகள் ஒன்பதை எடுத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பஞ்சாங்கத்தில் உள்ளபடி கிரகங்களை வரிசை கிரமமாக நிறுத்தி தமிழ் நவக்கிரஹ மந்திரத்தை சொல்லி நவக்கிரக பூஜையை முடித்த வேண்டும். முளைப்பாலிகை வழிபாடு: தமிழ் திருமணங்களில் முளைப்பாலிகை வழிபாடு மிக முக்கியமாக இடம் பெறுமாம் திருமண விழாவில் இறைவனின் திருவுளத்தை அறிந்த கொள்வதற்கே முளைப்பாலிகை வழிபாடு செய்தல் வேண்டும். மணமக்களை கன்னியர்களாக வரவழைத்தல்: மணமகள், மணமகனை மேடைக்கு வரவழைத்து அம்மை அப்பர், நவகோள், முளைப்பாலிகை இவற்றை வணங்க செய்து புண்ணியகவாசம் செய்த நீரை மணமக்கள் மீது தெளித்து புத்தாடை மற்றும் தங்க நகைகளை கொடுக்க வேண்டும். மங்கள நான் வழிபாடு: மங்கல நானை தேங்காயில் சுற்றி மஞ்சள் அரிசி தட்டில் வைக்க வேண்டும். மங்கல நாணில் உள்ள திருமாங்கல்யத்தை மேலாக வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து, தர்ப்பையில் மங்கல நாணின் பாதத்தை தொட்டு கொண்டு தமிழ் வேத மந்திரம் அல்லது அபிராமி அந்தாதி பாடலை பாட வேண்டும். முன்னோர்கள் வழிபாடு: வந்தவுடன் மணப்பொங்கல் வைத்திருப்பார்கள். அதற்கு பூஜை செய்து விட்டு, முன்னோர்கள் உருவப் படத்தையோ அல்லது அருவமான மஞ்சள் கூம்பையோ வைத்து மங்கல பொருட்கள் கொண்டு அலங்கரித்து உதிரிப்பூக்கள் கொண்டு தமிழ் மந்திரம் சொல்லி வழிபட வேண்டும். பாத பூஜை: பெற்றோர்களுக்கு மணமக்கள்பாத பூஜை செய்யும்போது நாற்காலியில் அமர்ந்து நிதானமாக பாத பூஜையை ஏற்று மணமக்களை ஆசீர்வாதிக்க வேண்டும். மணமகள் தான் முதலில் பாத பூஜை செய்ய வேண்டும். மங்கல நான் ஆகுதி: அவையோர்க்கு அனுப்பி ஆசீர்வதிக்கப்பட்ட மங்கல நாணை குண்டத்தில் அருகில் வைப்பார்கள். திருமந்திரம் ஓதி மணமக்களை தொட்டு வணங்கி தமிழ் வேதியர் திருமந்திரம் ஓதி பெரிய மனிதரிடம் மங்கல, நானை கொடுக்க அவர் மணமகனிடம் கொடுக்க மணமகள் கழுத்தில் பூட்டி மூன்று முடிச்சு இட வேண்டும். விளக்கேற்றும் உரிமை, பட்டம் கட்டுதல்: மணமக்கள் பின்புறம் நாத்தனார்கள் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி நிற்க வேண்டும். தாலி கட்டிய பிறகு மணமகளின் அப்பா, மணமகளின் தாய்மாமன் இவர்கள் மணமகளுக்கு நெற்றியில் பட்டம் கட்ட வேண்டும். அக்னி வலம் நிகழ்ச்சி: மணமகன் சுண்டு விரலோடு மணமகள் சுண்டு விரலை சேர்த்து கொண்டு அக்னி வலம் வரவேண்டும். காமாட்சி அம்மன் தீபத்தோடு மணமகனுக்கு முன்னே ஒரு பெண் செல்ல வேண்டும். மணமகளுக்கு பின்னால் முளைப்பாலிகையை ஏந்திக்கொண்டு சிறுமிகள் செல்ல வேண்டும். அம்மி மிதித்தத்தலும் மெட்டி அணிவித்தலும்: அம்மி மிதித்தல், மெட்டி அணிவித்தல் நிகழ்ச்சி அக்னி வலம் வரும் பொழுது மூன்றாவது சுற்றில் நடைபெறும் அம்மி, என்பது கருங்கல்லால் ஆனது. இது உடையுமே தவிர வளையாது. மணமகளானவள் குடும்ப கௌரவத்தை காப்பாற்ற இந்த அம்மியை போல் உழைத்து தேய்ந்து உடைய வேண்டுமே தவிர, குடும்ப கௌரவத்தை என் இஷ்டத்துக்கு வளைக்கமாட்டேன் என்று உறுதி கூறும் நிகழ்ச்சி. ஆசீர்வாத நிகழ்ச்சி: வேதியர் தமிழ் வேத மந்திரம் ஓதி மணமக்களுக்கு திருநீறுஇட்டு ஆசீர்வதித்த பின் பெரியோர்கள் தத்தம் குல வழக்கப்படி மஞ்சள் அரிசி தூவி வாழ்த்துவார்கள். இறுதியில் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து சிறப்பாசனத்தில் அமர செய்து வாழ்த்துவார்கள்.

தாய்லாந்து மன்னர் திருப்பாவை, திருவெம்பாவை பாடலை பாடித்தான் முடிசூடுகிறார்கள்

தமிழர்கள் ஆகிய நாம் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று"

தாய்லாந்து நாட்டின் சிறப்பு ஒன்று சொல்றேன் ( தமிழர்கள் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று என்று சொல்லிவிட்டு தாய்லாந்து நாட்டின் சிறப்பு பற்றி சொல்கிறாரே என்று யாரும் நினைக்க வேண்டாம்)
இதை படிங்க :
...
பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய பாடல் "திருப்பாவை".

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடிய பாடல் "திருவெம்பாவை"

தென்கிழக்கு ஆசிய நாட்டில் உள்ள ஒரு நாடு "தாய்லாந்து"

இந்த மூன்றுக்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்காதிங்க மேல படிங்க :

தமிழர்கள் மார்கழி மாதத்தில் வீதி தோறும் திருவெம்பாவை பாடல்களைப் பாடிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர்.

விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

தாய்லாந்து மன்னர் திருப்பாவை, திருவெம்பாவை பாடலை பாடித்தான் முடிசூடுகிறார்கள்.
(இந்த விஷயம் திருப்பாவை, திருவெம்பாவை பெருமை என்பதை காட்டிலும் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர்கள் முடிசூட்டிக்கொள்வதினால் தாய்லாந்து மன்னர்களுக்குத்தான் பெருமை என்பது உண்மைதானுங்க

திவசத்தின் போது 3 பிண்டம் கொடுக்கப்படுவது

குழந்தை பிறக்க மூலகாரணமான பொருள் ஆணிடமுள்ள ''சுக்கிலம்'' எனப்படும் தாதுவாகும்.

இந்தத் தாதுவில் எண்பத்து நான்கு அம்சங்கள் உள்ளன. அதில் இருபத்து எட்டு அம்சங்கள் அந்த மனிதன் உட்கொள்ளும் உணவு மற்றும் அருந்தும் நீர் முதலியவற்றால் உண்டாவான; பெற்றோரிடமிருந்து இருபத்தியொரு அம்சமும், பாட்டனாரிடமிருந்து பதினைந்து அம்சமும், முப்பாட்டனாரிடமிருந்து பத்து அம்சமும், நான்காம் மூதாதையிடமிருந்து ஆறு அம்சமும், ஐந்தாம் மூதாதையிடமிருந்து மூன்று அம்சமும், ஆறாம் மூதாதையிடமிருந்து ஒரு அம்சமும் என ஆறு தலைமுறையினரின் ஐம்பத்தியாறு அம்சங்கள் ஏழாம் தலை முறை மனிதனின் சுக்கிலத்தோடு தொடர்பு கொண்டவை.

இதில் அதிகமாக தங்கள் அம்சத்தை தங்கள் வாரிசுகளுக்குத் தருபவர்கள், பெற்றோர், பாட்டனார், முப்பாட்டனார் ஆகிய மூவரே. எனவேதான், திவசத்தின் போது இந்த மூவரின் பெயர்களைக் கூப்பிட்டு பிண்டம் கொடுக்கப்படுவது வழக்கத்திலுள்ளது

சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்

சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்


சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். அதற்கு தடைகளும், இடையூறுகளும் வருவது இயற்கையே. இதற்கு காரணம் நமது கர்மவினைகளே. கர்மவினைகளை அழிக்க பல எளிய வழிகள் உண்டு. கர்மவினைகளை அழிக்கும் செயலே இயற்கைக்கு மாறான ஒன்றாகும். நாம் பிறந்த இந்த பூமியானது ஒரு கர்ம பூமி. இதில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் தம் கர்ம வினைகளை தொலைக்க பிறந்தவர்களே. இந்த கர்மவினைகள் இரண்டாகும். அவை நல்வினை மற்றும் தீவினை ஆகும். நல்வினை மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் விதியை மதியால் வெல்லலாம். ஆம் மதி என்பது இங்கே முதலில் சந்திரனையும் பின்பு அதே சொல் நமது அறிவையும் குறிக்கிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மதி என்கிற சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் அவர் தம் அறிவின் துணை கொண்டு விதியை வெல்லுவார் என்பது திண்ணம். சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருப்பது என்பது நல்ல நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஷட்பல நிர்ணயம் என்றொரு கணக்கீடு இருக்கிறது. அதன் படி சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் விதியை மதியால் வெல்லுவார்.

மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை. இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.

முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி). இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர். பைரவர் என்றால் எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64 சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை. தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும். தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள். இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை நாம் காணலாம்.



தட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர். தென் திசையை நோக்குபவர். இவரை வழிபடுவது மிகவும் எளிது. இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும். நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும். மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே. இவரை வழிபட மனம் அமைதி பெறும். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே. மனநிம்மதியை தருபவரும் இவரே.

“ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”

மேற்கண்ட மந்திரம் தட்சணாமூர்த்தியின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. தட்சணாமூர்த்தியின் முன்பு எவ்வித தோஷமும், பாவமும்ங நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.



கடைசியாக வருபவர் கர்மவினைகளை தன் பார்வையாலே எரிக்கும் வல்லமை கொண்ட பைரவர் ஆவார். இவரே சிவத்தலத்தில் இறுதி சிவ வடிவம் ஆவார். பைரவர்களுள் சொர்ணபைரவரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். மற்ற அனைத்து பைரவ வடிவங்கள் கோவிலிலோ அல்லது காடுகளிலோ அல்லது மலைகளிலோ வைத்து வழிபடத்தக்கன. பைரவ வடிவம் சிவ வழிபாட்டில் ஏற்படும் கர்மவினை பாதிப்புகளை நீக்க வல்ல வடிவம் ஆகும். பைரவரை தொடர்ந்து வழிபடுவதால் மட்டுமே நாம் செய்யும் சிவ வழிபாட்டின் பலனை அடையமுடியும். பைரவரே நவக்கோள்களின் அதிபதி ஆவார். சிவ வழிபாட்டின் பலனை நமக்கு தருமாறு நவக்கோள்களுக்கு ஆணையிடும் தலைவரும் பைரவரே ஆவார். இவரை வழிபடாமல் இருந்தால் நமக்கு சிவ வழிபாட்டின் பலன் கிடைக்காது.பைரவரே காலத்தையும், காலனையும் வென்றவர். காலகாலர் என்ற பெயரை கொண்டவரும் பைரவரே ஆவார். தெற்கு திசை நோக்கும் பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

பைரவர் சிவபெருமானின் கோபமே உருவான ருத்ர வடிவம். பைரவர் நம்மை நவக்கோள்களின் பாதிப்பிலிருந்து காப்பார். கர்மவினைகளை வேரோடு சாய்ப்பார். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். சிவ வழிபாட்டின் இறுதி நிலையே பைரவர் வழிபாடு ஆகும். எத்தனையோ பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே பைரவர் வழிபாடு செய்கின்றனர். முதலில் காலபைரவரை வழிபாடு செய்யும் அனைவரும் படிப்படியாக சொர்ணபைரவர் வழிபாடும் செய்வார்கள். பின்பு இரண்டு வழிபாடுகளும் தொடர்ந்து செய்வார்கள். இறுதியில் சொர்ணபைரவர் வழிபாடு மட்டும் செய்வார்கள். இது தான் பைரவர் வழிபாட்டின் ரகசியம் ஆகும். தன் கர்ம வினைகளை முற்றிலும் நீக்கி பிறவியில்லா பெருநிலையை அடைய தகுதி படைத்தவர்களே பைரவர் வழிபாட்டை தொடர்ந்து செய்கிறார்கள். கர்மவினைகளை அழித்து முக்தியை அடைகிறார்கள். பைரவரை வழிபாடு செய்வது மிகவும் எளிது.

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சொர்ணபைரவாய ஹும் பட் ஸ்வாஹா”


மேற்கண்ட மந்திரம் சொர்ணபைரவரின் சிறப்பான மந்திரம் ஆகும். இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது. மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும். (ஆம் தட்சணாமூர்த்தி சந்நிதியில் தான் செபிக்க வேண்டும்). பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும். இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது. சொர்ணபைரவரின் அருள் கிட்டினால் சகல தோஷங்களும், பாவங்களும் நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.



தென்திசை நோக்கும் கடவுள்கள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.

சந்திரனை சூடிய மற்ற கடவுள்கள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.

மந்திர செபம் செய்ய ஏற்ற இடங்கள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.



தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

திருநீறு அணிவதால்.......

திருநீறு அணிவதால்
 
திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும்

குரு பக்தி!



அரிஸ்டாட்டிலிடம் குருகுலவாசம் செய்து, தத்துவம் படித்து வந்தான் சிறுவன் அலெக்ஸôண்டர்.

ஒருமுறை இருவரும் ஒரு ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது....
ஆற்றைக் கடக்கும்போது, "ஆழமாக இருக்குமோ!' என குரு தயங்குவதைக் கவனித்தான். உடனே, ""குருவே, நான் முன்னால் செல்கிறேன். நீங்கள் பின்னால் வாருங்கள்'' என்று கூறிவிட்டு, ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.

குரு பின் தொடர்ந்தார். ஆற்றில் குறைந்த நீரோட்டமிருந்ததால் இருவரும் எளிதாக அக்கரைக்கு சேர்ந்தனர்.

அப்படி வந்தவுடன் குரு கோபமாக, ""அலெக்ஸôண்டர், நீ மன்னன் மகன் என்ற மமதையைக் காட்டி விட்டாயே! குருவுக்குப் பின்னால்தானே சிஷ்யன் வரவேண்டும்?'' என்றார்.

""மன்னிக்க வேண்டும், குருவே! ஆழம் தெரியாமல் ஆற்றில் இறங்கி, நீங்கள் ஆற்றோடு போய்விட்டால், ஆயிரம் அலெக்ஸôண்டர் சேர்ந்தாலும் ஒரு அரிஸ்டாட்டிலை உருவாக்க முடியாது. ஆனால், இந்த அலெக்ஸôண்டர் ஆற்றோடு போய்விட்டால், உங்களால் ஆயிரம் அலெக்ஸôண்டர்களை உருவாக்க முடியுமே!'' என்றான்.

அரிஸ்டாட்டில் நெகிழ்ந்து போனார்

Friday, December 27, 2013

உலகின் தலைசிறந்த ஏழு மருத்துவர்கள்....
.
.
.
....
.
.
.
.
.
நல்ல தண்ணீர்
நல்ல காற்று
நல்ல அளவான உணவு
நல்ல சூரியஒளி
உடற்பயிற்சி
ஓய்வு
நல்ல நண்பர்கள்
இன்றைய அறிவியல் உலகில்,

இயற்கை தரும் பாடம்!

இயற்கை தரும் பாடம்!
--------------------------------
“மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனி தன் வணங்குகிறானே… மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக்கி யுள்ளானே… இதெல்லாம் மூடநம்பிக்கை இல்லையா?’ என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.

தத்தாத்ரேயர் இவர்களுக்கெல் லாம் பதில் சொல்லி உள்ளார். இவர், அத்திரி முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார்.
தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.

“எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்…’ என்றார்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், “சுவாமி! ஒரு வருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே…’ என்றான்.
அவனிடம், “பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்…’ என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்…
“மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்; தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன். பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன். எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது; பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.
“ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

“வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
“எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன். பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
“எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன். பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

“பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.

“புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்…’ என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே!

நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும்

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது.
இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை உணரமுடியும்.
நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது....
புத்திர் பலம் - அறிவில் வலிமை
யசோ - புகழ்
தைர்யம் - துணிவு
நிர்பயத்வம் - பயமின்மை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - ஊக்கம்
வாக் படுத்வம் - பேச்சு வலிமை
ச - இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
பவேத் - பிறக்கின்றன.
அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன

செவ்வாய்க்கிழமை ராகு கால துர்க்கை வழிபாடு..!

செவ்வாய்க்கிழமை ராகு கால துர்க்கை வழிபாடு..!

இந்துக்கள் பயப்படும் விஷயங்களின் லிஸ்ட் பெரிசு.

அந்தப் பய பட்டியலில் சனிக்கிரகம், ராகு காலம் முதலியவையும் அடங்கும். ராகு காலம் எல்லா நல்ல காரியங்களுக்கும் விலக்கு என்று நினைக்கப் பழக்கப் படுத்திக்கொண்டுவிட்டோம். ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விசேட பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால்தான் அவற்றின் ஆற்றல்கள் கூடுதலாகும்.

ராகு காலம் என்பது மூன்றே முக்கால் நாழிகை கொண்டது. மூன்றே முக்கால் நாழிகை என்பதை ஒரு முகூர்த்த காலம் என்பார்கள். ஒரு நாழிகைக்கு சர்வதேச கால அலகையால் இருபத்து நான்கு நிமிடங்கள். ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை நாழிகைகள். ஆகவே மூன்றேமுக்கால் நாழிகை என்பது ஒன்றரை மணி நேரமாகும்.

ராகு காலத்தின் எல்லாப் பகுதிகளும் கெட்டவை என்று சொல்லமுடியாது. சில குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் வலு வாய்ந்தவை; ஆற்றல் வாய்ந்தவை.

ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை. 'ராகு கால துர்க்கா பூஜை' என்று ஒரு தனி வழிபாட்டு முறையே இருக்கிறது.

இதில் மிகவும் விசேடமாகக் கருதப்படுவது செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. இதற்குரிய தெய்வம் 'மங்கல சண்டிகா'.

செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் இடையூறுகள் இருந்தால் செய்யப்படும் பூஜை இந்தப் பூஜை. அதுமட்டுமல்லாது நீண்ட நாட்களாகத் தடங்கலாக இருந்த காரியங்கள் தொடர்ந்து வில்லங்கமில்லாமல் நடப்பதற்காகவும் செய்யப்படுவது. பெண்களுக்குத் திருமணமாவதற்காகவும் இதனைச் செய்வார்கள். இதற்கென பூஜா விதானம் இருக்கிறது.

ஒன்பது வாரங்களுக்கு விரதமிருந்து செய்யப்படுவது இந்தப் பூஜை. எலுமிச்சம்பழத்தை அறுத்து, சாற்றைப் பிழிந்துவிட்டு, அந்த மூடியைப் புரட்டிப்போட்டு, அதில் நெய்யை ஊற்றி, சிறிய திரியைப்போட்டு, தீபம் வைத்து வழிபடுவது வழக்கம். அப்போது 'மங்கல சண்டிகா ஸ்தோத்திரம்' என்னும் வழிபாட்டு மந்திரப் பாடலைப் படிப்பார்கள்.
'மங்கலன்' என்பது செவ்வாய் கிரகத்தின் பெயர்களில் ஒன்று. ஆகவேதான் 'மங்கல சண்டிகா' என்ற பெயர்.

செவ்வாய்க்கும் ராகுவுக்கும் கிரகப் பதவி கிடைப்பதற்காக அவர்கள் சண்டிகையை வழிபட்டார்கள் என்ற ஐதீகம். முறையே அவர்களுக்குரிய நாள், நேரம் ஆகியவற்றில் இந்தப் பூஜையைச் செய்தால் காரியசித்தியும் சண்டிகையின் பேரருளும் கிட்டும் என்ற வரத்தையும் அவ்விருவரும் சண்டிகையிடம் பெற்றார்கள் என்று தேவீ பாகவதம் கூறும். ஆகவேதான் செவ்வாய் தோஷம், நாக தோஷம் போன்றவற்றிற்கும் இந்தப் பூஜையை உரிய விரதமிருந்து செய்கிறார்கள்.

மங்கல சண்டிகை ஸ்தோத்திரம்.

தேவீம் ஷோடச வஷியாம் ஸ¤ஸ்த்ர யௌவனாம்
பிம்போஷ்டிம் ஸ¤ததீம் சுத்தாம் ஸரத்பத்ம நிபாநநாம்
ஸ்வேத சம்பக வர்ணாம் ஸ¤நீலோத்பல லோசநாம்
ஜகத் தாத்ரீம் ச தாத்ரீம் ச ஸர்வேப்ய: ஸர்வ ஸம்பதாம்
ஸம்ஸார ஸாகரே கோரே ஜ்யோதிரூபாம் ஸதாபஜே
தேவ்யாஸ்ச த்யாநம் இத்யேவம் ஸ்தவநம் ஸ்ருயதாம் முநே

ரக்ஷ ரக்ஷ ஜகந்மாத: தேவீ மங்கள சண்டிகே
ஹாரிகே விபதாம் ராஸே: ஹர்ஷ மங்கள காரிகே
ஹர்ஷ மங்கள த§க்ஷச ஹர்ஷ மங்கள தாயிகே
சுபே மங்களே த§க்ஷச சுபே மங்கள சண்டிகே
மங்கள மங்களார்ஹேச ஸர்வமங்கள மங்களே
ஸதாம் மங்கள தே தேவீஸர்வேஷாம் மங்களாலயே
பூஜ்ய மங்களவாரே ச மங்களாபீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மநுவம்ஸஸ்ய ஸந்ததம்
மங்களாதிஷ்டாத்ரு தேவீ ச மங்களாநாம் ச மங்களே
ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷமங்கள தாயினீ
ஸாரே ச மங்களாதாரே பாரே ச ஸர்வகர்மணாம்
ப்ரதி மங்களவாரே ச பூஜ்யே மங்கள ஸ¤கப்ரதே

பலஸ்ருதி

ஸ்தோத்ரேணா நேந சம்பிஷ்ச ஸ்துத்வா மங்கள சண்டிகாம்
ப்ரதி மங்கள வாரே ராஹ¤ காலௌ ச பூஜாம் தத்வ கதர் சிவா
தேவ்யாஸ்ச மங்கள ஸ்தோத்ர ய: ஸ்ருணோதி ஸமாஹித:
தத்மங்களம் பவேத் தஸ்ய ந பவேத் தத் மங்களம்
வர்த்ததே புத்ர பௌத்ரஸ்ச மங்களம் ச திநே திநே

வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்?

 
 
 
வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்?

வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருக வேண்டும். ஏதேனும் ஒரு சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். "ப்ர என்றால் "கடவுள். நாம் படைக்கும் வெறும் சாதம், "ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது, "ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும்.
 
 

பணிவு - வாழ்வை உயர்த்தும் பண்பு





பணிவு - வாழ்வை உயர்த்தும் பண்பு

சிலர் நிறைய திறமை, அறிவு இருந்தும் வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாக போராடியே அடைகிறார்கள். ஆனால் அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் கூட எளிதில் நல்ல வேலை , அந்தஸ்து என உயர்ந்த நிலைக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் எளிதில் கிடைக்கிறது.

வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்பவர்களை உற்று நோக்கினால் அவர்களுகிடையே ஒரு ஒற்றுமை தெரியும். அவர்களிடம் பிரதானமாக பணிவு என்னும் குணம் மேலோங்கி இருப்பதைக் காணலாம்.

ஒருவன் தன் தலை முடியைத் தானே தூக்கி தன்னை மேலே உயர்த்திக்கொள்ள முடியாது. சுற்றியுள்ளவர்கள் தான் அவனது பணிவால் ஈர்க்கப்பட்டு பணிவுடைய ஒருவனை தனக்கு மேலே தூக்கி இருத்துவார்கள்.

இங்கே பணிவு என்று குறிப்பிடுவது தற்பெருமை இன்றி அடக்கமாக இருப்பதாகும். அடிமையாகவோ சுயமரியாதையின்றி இருப்பதோ அல்ல. பிறரது சுய மரியாதையை தாக்காமல் இருப்பது. காக்காய் பிடித்தல் முகஸ்துதி எல்லாம் பணிவு ஆகாது இது ஏமாற்று. தீமைகளுக்கு பணிவதும் கூடாது.

மற்றவர்களை புண்படுத்தாத, பிறரை மதிக்கும் பிறர் உணர்வை புரிந்து கொண்டு நடக்கும் பணிவு ஒருவரை லிப்டில் உயரே போவது போல் வாழ்வில் உயரச்செய்யும். மற்றவர்கள் படிப்படியாகக் கஸ்டப்பட்டுத் தான் ஏற வேண்டும். ஓசையை யாரும் விரும்ப மாட்டார்கள். மெல்லிய இசை தான் மனதை மயக்கும்.

பெற்றோர் பேச்சு கேட்கும் பணிவுள்ள பிள்ளைகளுக்கு தான் அதிகம் பாசம் கிடைக்கிறது. அவர்கள் தேவைகள் கேட்காமலேயே நிறைவேற்றப்படுகிறது. அதுவே பள்ளியிலும் தொடர்கிறது . ஆசிரியர்கள் அடிப்பதில்லை. சிறப்பாக கவனித்து பாடம் சொல்லிக்கொடுகிறார்கள். பாராட்டுகிறர்கள். அதிக மார்க் வாங்குகிறார்கள். பணிவு நல்ல நட்பை தருகிறது, எளிதில் வேலை கிடைக்க உதவுகிறது. பணி உயர்வுக்கு பிறரிடமிருந்து சிபாரிசு பெற்றுத்தருகிறது. போட்டிகள் பொறாமைகள், எதிர்ப்புகள், தடைகள் எதுவும் இருக்காது.

மற்றவர்கள் கருத்துக்கு எதிர் கருத்தை கூட பணிவுடன் சொல்லும்போது அதற்கு நிச்சயம் அங்கீகாரமோ கவனிப்போ இருக்கும். இனிமையாக் பேசுதலும் பிறர் நலனில் அக்கறை காட்டுதலும் எப்போதும் நமக்கு பல மடங்காகத் திருப்பிக் கிடைக்கும். திறமையான பாய்மரக்கப்பல் மாலுமிகள் காற்றின் சக்தியைக் கொண்டே காற்றுக்கு எதிர் திசையில் கூட கப்பலை செலுத்த கூடியவர்கள்.

அதிகமான கல்வி, புகழ், பதவி, அதிகாரம், செல்வம் நம்மிடம் சேர்ந்தால் அதைக் கொண்டு பிறர் பயன் பெறும் வரை தான் நமக்கு உயர்வு. மாறாக அது தரும் செருக்கால் மற்றவர்களது உணர்வுகள் காயப்படும் போது நாம் நாம் கீழ் நோக்கி செல்லத் தொடங்குகிறோம். அப்படி பிறர் நோகும் படி மமதையில் வாழ்பவர்கள் கீழே விழ நேர்ந்தால் அவன் கதி மாட்டிக்கொண்ட பிக் பாக்கட் கதி தான்.

அறிவை , அதன் பலனை பிறருக்கு பகிர்ந்து கொள்ளாத அறிவாளிகளை யாரும் மதிப்பதும், விரும்புவதுமில்லை. யாருக்கும் பயன் படாத பணத்தை காக்கும் பணக்காரனைப் பற்றி தெரிந்து கொள்ள திருடனைத் தவிர யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. புகழ் வரும்பொது தன்னடக்கத்தை பேண வேண்டும். புகழ் மமதையை தருமானால் மமதை விரைவில் அந்த புகழை அழித்து விடும்.

கல்வியும் சிந்தனையும் ஒருவனுக்கு சாபக்கேடாக கூட மாறலாம். கல்வியும் சிந்தனையும் ஒருவனை, அவனது உலகத்தை விரிவு படுத்துகிறது. அதோடு சேர்ந்து அவனது ஈகோவும் அதாவது "தான்" என்ற அகந்தையும் வளர்கிறது. பிறருக்கும் அவனுக்கும் இடையே முதலாளி தொழிலாளி போன்ற இடைவெளி அதிகரிக்கிறது. தனித்தனி தீவுகளாக மாறுகிறார்கள். இதனால் தான் கற்றவர்கள் ஒத்துப்போவதில்லை. படித்தவர்கள் தான் அதிகம் விவாகரத்து செய்கிறார்கள். கற்றவர்கள் தான் அதிகம் குழம்புகிறார்கள். உதாரணம் பாருங்கள் நாட்டு வைத்தியத்தில் எல்ல நோயும் வாதம், பித்தம், கபம் என்பதில் அடங்குகிறது. ஆங்கில மருத்துவத்தில் இதற்கு எத்தனை பிரிவுகள் தேவைப்படுகிறது. ஒரு கணினியியல் இன்று எத்தனை பிரிவுகளில் அறியப்படுகிறது. எத்தனை வித லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ளன.

பிறர் பேச்சை காது கோடுத்து கேட்பதும் பணிவு தான். தன்னடக்கம் உடையவனது அதிகாரம் மந்திரக்கோல் போன்றது. பணிவுள்ளவன் தான் சிறந்த தலைவனாக முடியும். அரசு இயந்திரத்தின் பல் சக்கரங்கள் பலருக்கும் பதவி மட்டும் தான் அடையாளம். அதிகார போதையில் பொதுமக்களிடம் பணிவின்றி நடந்து கொண்டவர் பலரும் பதவி போன பின் கிழிந்த துணி தரை துடைக்க போவது போல் ஆகி விடுகிறர்கள். ரவுடிகள் வாழ்வின் பிற்பகுதியில் அனாதை பிணமாகிறார்கள்.

சில பெரிய வியாபார ஸ்தாபனங்களில் முதலாளியே கஸ்டமர்களை கும்பிட்டு வரவேற்பார்கள். அல்லது அதற்கென்றே தனி ஆள் நியமித்திருப்பார்கள். அவர்கள் போடும் கும்பிடுகள் தான் அந்நிறுவனத்தின் மூல தனம். வாடிக்கையாளர்களை மதிக்காத எந்த கம்பனியும் உருப்பட்டதில்லை. customer is always right என்பதும் இது தான்.

தன்னைச் சுற்றித்தான் உலகம் எனும் மாயையை ஒழித்து, உலகத்தில் தான் ஒரு பாகம் எனும் அகந்தயற்ற நிலை மிக உயர்வான நிலை. எதையும் நாம் கொண்டுவரவில்லை, எதையும் எடுத்துச் செல்லப்போவதுமில்லை. எதையும் புதிதாகஅறிகிறோம் அன்றி எதையும் நாம் உருவாக்கி விடவும் இல்லை. நம் உலகத்தில் தான் மாற்றங்களை ஏற்படுத்துகிறோம். பூமி சுழல்வதை நிறுத்தும் சக்தி நமக்கில்லை பின் ஏன் அகந்தை?

ஒரு பெண் பூப்பெய்தக்கூடிய வயது 12

பதினெண் மையக்கணக்கு நூலிலிருந்து - இரகசியம் ஒன்று

ஆரோக்கியமான தேகம் கொண்ட ஒரு பெண் பூப்பெய்தக்கூடிய வயது 12. ஏன் 12? இதற்கு சித்தர்கள் சித்தர்கள் அளித்த விளக்கம் என்ன?

எப்படி ஒரு செடி நான்கு பருவங்களையும் கண்டபின் பூ பூக்கிறதோ , அது போல் நம் உடலில் உள்ள 12 அவயங்களும் முழு வளர்ச்சி அடைந்து தன்னை தனது அடுத்த பயணத்திற்கு தயார் செய்துக் கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவு 12 வருடங்கள்....

இந்த 12 வருடங்கள் 12 இராசி/நட்சத்திர மண்டலங்களைக் குறிக்கின்றது. ஒரு குழந்தை பிறந்த பின், பூமி இந்த 12 நட்சத்திர மண்டலங்களையும் 12 முறை கடந்து முடிக்கும் பொது, உடலின் 12 அவயங்களின் அடிப்படை வளர்ச்சியும் முற்று பெரும். இங்கிருந்து தொடங்குவதே இவ்வுடலின் அடுத்த பயணமான தன்னுள் இருந்து மற்றொரு ஜீவனை உருவாக்கும் பணி.

இதன் காரணம் கொண்டே, உடலில் ஏற்படும் இந்த மாற்றத்தை சித்தர்கள் - " பூப்பெய்துதல்" என்றும் "பருவம் அடைதல்" என்றும் அழைத்தனர். ( தமிழ் அழகானது மட்டுமல்ல ஆழமானதும் கூட )

12 அவயங்கள் என்ன என்ன என்று கேட்போருக்கு- இதயம், மூளை, நுரையீரல், கணையம், குடல், சிறுநீரகம், கருப்பை, ஐம்புலன்கள்(5)

கடவுளைக் காண தேவைப்படும் கண்ணாடி !!!

கடவுளைக் காண தேவைப்படும் கண்ணாடி !!! ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கு...ம், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். “ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்” என்றான். “தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.” “ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?” “தம்பீ, காண முயலுகின்றேன்.” “கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?” “இல்லை.” “கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?” “இல்லை.” “ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை; இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?” “அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?” “தேன் பாட்டில்.” “தேன் இனிக்குமா, கசக்குமா?’ “என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.” “தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.” மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான். “ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.” பெரியவர் புன்முறுவல் பூத்தார். “அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும். “தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்! தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!” என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர். மாணவன் வாய் சிறிது அடங்கியது. “பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.” “தம்பீ! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?” “இல்லை.” “என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால் தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.” மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான். “என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?” “உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?” “என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.” “தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?” “ஆம். நன்றாகத் தெரிகின்றது.” “அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?” “என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?” “அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?” “ஆம்! தெரிகின்றன.” “முழுவதும் தெரிகின்றதா?” அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “முழுவதும் தெரிகின்றது” என்றான். “தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?” மாணவன் விழித்தான். “ஐயா! பின்புறம் தெரியவில்லை.” “என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?” “முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.” “அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு….” “எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.” “தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.” “ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.” “தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா? மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான். தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே! முகம் தெரியவில்லை!” என்றான். “குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.” “ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.” “தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.” “ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?” “அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம். “தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?



கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?
கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.
ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.
ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். தமிழ்நாட்ட...ில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு.
உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது கருங்கல். இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.
நீர்: கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில், சில கோவில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலாம்.
நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.
நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.
காற்று: கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.
ஆகாயம்: ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது. திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.
இக்காரணங்களினால், இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம்பூதங்களின்)வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம். அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன.அக்கோவிலில் நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படுகின்றன.
இதுவே, கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.
 
 

Thursday, December 26, 2013

எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும்

 
எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்....

பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை
அதிகரிக்கும்.

மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்
 
 
 
 

சன்னியாசிகள் ஏன் பிட்சை வாங்க வேண்டும்?

சன்னியாசிகள் ஏன் பிட்சை வாங்க வேண்டும்?

சன்னியாசிகள் தங்களுக்குத் தேவையான உணவை அந்தந்த வேளைக்கு மட்டும் பிட்சை எடுத்து உண்ண வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதில் மிகப்பெரிய தத்துவம் அடங்கியுள்ளது. தம்மைத் தாமே பக்குவப்படுத்திக் கொள்கிறார்கள். மானம், அவமானம் இவற்றைக் கடந்து எந்தவித விருப்பு, வெறுப்பும் இல்லாமல் பிட்சை எடுக்க வேண்டும். பிட்சை போட்டாலும், போடாவிட்டாலும், அது ருசித்தாலும், ருசிக்காவிட்டாலும் சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருவதற்காகவே பிட்சை உள்ளது. பிட்சை ...போடாத மனிதர்களை வெறுப்பது கூடாது. அவர்களையும் சமமாக நினைக்க வேண்டும்.

உண்மையான ஞானிக்கு சாப்பிடாமல் கூட இருக்க முடியும். அவர்களுக்கு பசி கிடையாது. ஞானிகளுக்கு நாம் உணவு அளிக்கும் பொழுது நம்முடைய பாவத்தை போடுகிறோம். ஞானிகள் தங்களுடைய புண்ணிய பலத்தை நமக்குத் தருகிறார்கள். எவ்வளவு உயர்ந்த தத்துவம் !

ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் ஒரு வாரம் முழுவதும் பிட்சைக்குப் போகாமல் மவுன விரதமிருந்தார். சீடர்கள் தாங்கள் ஏதேனும் தவறு செய்து விட்டோமோ என வருந்தி பெரியவரிடம் கேட்டனர். உங்கள் யாரிடமும் எனக்குக் கோபமோ, வருத்தமோ இல்லை. போன முறை பிட்சைக்குச் சென்ற பொழுது ஓர் அகத்தில் இட்ட கீரை மிகவும் சுவையாக இருந்தது. மறுநாளும் அதுமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் விரும்ப ஆரம்பித்தது. சுவையில் நாட்டம் சென்றதும் மனதைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் உண்ணாவிரதமும் மவுன விரதமும் இருக்கத் தீர்மானித்தேன். ஆதலால்தான் பிட்சைக்குப் போகவில்லை. இது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை. நீங்கள் யாரும் வருந்த வேண்டாம்! என்றாராம். எப்பேர்ப்பட்ட மகான் !

இது ஞானிகளின் மனப்பக்குவத்திற்கு உதாரணம். ஆதிசங்கரர் பிட்சை கேட்ட சமயம் ஓர் ஏழைப் பெண்மணி தனக்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை (வேறு உணவு எதுவுமே இல்லாததால்) பிட்சை இட்டதால் அவர் வீட்டில் மகாலட்சுமி பொற்காசுகளை மழையாகப் பெய்வித்தாள் என்பது வரலாறு.