ஒருவரின் இன்னல்களுக்கு ஜோதிட சாஸ்திர பரிகாரங்கள்!
குழந்தை பிறக்கும் நேரத்தில் நவக்கிரகங்களின் நிலைகள், அது இவ்வுலகில் தங்கி வாழும் அனுபவங்களை முன் அனுமானித்து விடுகிறது. நவக்கிரகங்கள் ஒரு தனிமனிதனுக்கு நல்லதை மட்டும்மேயோ அல்லது கெடுதல்களை மட்டுமேயோ செய்வதில்லை, சில கிரகங்கள் சில நிலைகளில் இருக்கும்போது சோதனைக்கால சுமைகளையோ, கஷ்டங்களையோ ஒரு மனிதனுக்கு அளிக்கிறது. இந்திய ஜோதிட சாஸ்திரம் பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே பேசுவதில்லை, அதற்குப் பரிகாரங்களையும், தீர்வுகளையும் கூறுகிறது.
கிரகங்களின் வீழ்ச்சிக்காலங்களிலோ, அல்லது வேறு ஸ்தானங்களை அடையும் போதோ, அவைகளின் இயக்கத்தை, சோதிடவியல் கணக்குகளின் மூலம் கணக்கிட்டு, எந்த ஒரு தீமையான விளைவையும் முன்கூட்டியே கணிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கான பரிகாரங்களையும் சொல்லிவிடுவதில்தான் சோதிடத்தின் சிறப்பே அடங்கியிருக்கிறது. ஒரு பாதசாரியை மழையிலிருந்தும், கடும் வெயிலிலிருந்தும் காப்பாற்றும் குடை போலவோ, சந்தனம் போலவோ ஜோதிடம் கூறும் பரிகாரங்கள், ஒரு தனி மனிதனை கிரகஸ்தானங்களால் தீர்மானிக்கப்படும், தீமைகளிலிருந்தும், சோதனைகளிலிருந்தும் பாதுகாக்கிறது.
ஜோதிட சாஸ்திரம் ஒரு பொதுப்படையிலான தீய விளைவுகளை கணித்து பரிகாரம் அளிக்கிறது என்றால், இந்திய தாந்திரிகத் தத்துவம் ஒரு குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு பரிகாரங்களை அளிக்கிறது. உதாரணமாக கல்யாணம் நின்று போதல், குழந்தை பாக்கியமின்மை போன்ற குறிப்பிட்ட பிரச்சனைகள். பண்டையகால ரிஷிகளால் உருவாக்கப்பட்ட தாந்திரிக பரிகார முறைகள் - கிரகங்களின் ஸ்தானம் பற்றிய சரியான கணிப்பு முறையில் அவற்றின் பலம், பலவீனம் ஆகியவற்றை கண்டுணர்ந்து நல்ல முடிவுகளைக் கொண்டதாக இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட இலக்கை மட்டுமே கருத்தில் கொள்ளும்போது, ஜாதகத்தின் ஒரு குறிப்பிட்ட கிரகஸ்தானங்களையும் இந்த கிரகங்களின் மீதான மற்ற ஸ்தானாதிபதிகளின் தாக்கங்களையும், மற்ற ஸ்தானாதிபதிகளின் மீதான இந்தக் குறிப்பிட்ட கிரகத்தின் தாக்கங்களையும் மிகச் சரியாக கணிக்க வேண்டும். இப்படி கணித்தால் மட்டுமே, ஒரு மனிதனின் ஆசைப்படக் கூடிய இலக்கை எட்டுவதற்கு, ஜாதகம் பயனுள்ளதாய் இருக்கும். ஆகவே ஜாதகம் பார்ப்பவர்கள் ஒரு திறமையான மருத்துவரைப் போல் இருக்க வேண்டும் இதுவே அடிப்படை நிபந்தனை.
பணத்திற்காக ஜாதகம் பார்க்கும் போலி சோதிடர்களால், தெளிவான பகுப்பாய்வை செய்ய முடியாது. இது போன்ற போலி - சோதிடம், பலரை பல தீமைகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. ஒரு திறமையான உண்மையான ஜோதிடனின் கணிப்பின் படி தீமைகளைக் கண்டுணர்ந்து, அவர் கூறும் பரிகாரங்களை செய்துவந்தால், அவன் வாழ்வை புரிந்து கொண்டு சந்தோஷமான வாழ்வை திட்டமிட்டு நடத்தலாம்.
No comments:
Post a Comment