Thursday, July 28, 2011

கோமாதா வழிபாடு!

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. இவற்றில் இருந்துவரும் கோமயம்(சாணம்), கோமூத்திரம்(கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது. இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம். தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம். வைகுண்டத்திற்கும் ஊர்த்தவ பாகத்தில் விளங்குவது விளங்குவது கோலோகம்.
1. பசு (கோமாதா) வழிபாடு
மேற்கத்திய வரலாற்று இயல் காலத்துக்கும் முன்பிருந்தே சனாதன தர்மம் என்ற இந்துமதம், எல்லாம் இறை மயம் என்றும் தத்வமசி, அதாவது, நீயும் பரம்பொருளே என்றும் அத்வைதம் - எல்லாம் ஒன்றே - அதாவது, பரம்பொருளின்றி வேறொன்றும் இல்லை என்றும் காண்பவை எல்லாம், கடவுளின் எண்ணற்ற தோற்றங்களே என்றும் கூறி வந்திருக்கின்றது. இந்நிலையில்,மிருக இனங்களில், பசுவையும், யானையையும், ஊர்வனவற்றில் நாகப் பாம்பையும், தாவர இனத்தில் அரசு, வேம்பு போன்ற சிலவற்றை மட்டும், மிகச் சிறப்புடையதாக, நம்மிலும் மேலாக, தெய்வங்களாக, தொன்று தொட்டு வழிபட்டு வருவதும் அவ்வழக்கத்தை தொடர்ந்திட வேண்டும் என்று கூறுவதும்.
பாரபட்சமற்ற செயல் தானா? நியாயமான பரிந்துரை தானா?
இந்துக்கள், பசுவையும், யானையையும், பாம்பையும், வேம்பையும் சிறப்புடையதாகப் போற்றி வந்திருக்கின்றனரே தவிர, பிறவற்றை இழிவு படுத்தவில்லை, அழிக்கச் சொல்லவுமில்லை.எந்த சிற்றின உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்றும் அவற்றைப் போற்றிப் பேண வேண்டும் என்றுமே இந்துக்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். திருக்குளங்களில் மீன்களுக்கு இரை போடுவதும் ஈ, எறும்பு, எலி போன்றவற்றுக்கு உணவாக வாசலில், வாயிற்படிகளில் பச்சரிசி மாக்கோலம் போடுவதும். புற்றுகளில், பாம்புக்குப் பாலும், முட்டையும் வைப்பதும் அன்றாடம், பகலில், காக்கைக்கு உணவளிப்பதும், இரவு வேளையில் நாய்களுக்கு உணவளிப்பதும், பறவைகளுக்கு உணவாக நெற்கதிர்களைத் தொங்க விடுவதும் இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இதோடு, சிற்றினங்களை, நமக்குச் சமமாக மட்டுமின்றி, மேலானவையாகவும் நாம் கருத வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான தெய்வங்களின் வாகனங்கள் மிருகங்களாகவே பறவைகளாகவே இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளன.
விநாயகன் யானைத்தலையன், அவன் ஆட்கொண்டு அமர்ந்திருப்பது மூஞ்சுறு
தம்பி முருகன் மகிழ்ந்து வருவது மயிலில்
தகப்பன் சிவன் அணிந்திருப்பது நாகம்
மாமன் திருமால் படுப்பது பாம்பணையில், அவன் ஏறும் வாகனம் கருடன், எடுத்த உருவங்கள் மீனும், பன்றியும், சிங்கமும்
தர்மதேவன் வருவது எருமையின் மீது
சனீஸ்வரனை சுமப்பது காகம்
இப்படி நூற்றக் கணக்காக பட்டியலிடலாம். மேலும், பல இனங்களின் நிலையை ஆய்ந்து, சிலவற்றை, உதாரணமாக, பூரான், தாய்க்கு ஒரு பிள்ளை என்பதற்காக கொல்லப்படக்கூடாது என்றும் சட்டம் இருக்கிறது.
2. பசுவை மட்டும் வழிபாட்டுக்குரியதாக கருதுவது ஏன்?
எட்டிக்காயும் இறைவன் படைப்பே. எள்ளும் அவன் படைப்பே. அன்னாசிப்பழமும் அரளிக்காயும் அவன் படைப்பே. இருந்தாலும், எள்ளும் அன்னாசிப்பழமும் மனிதருக்கு ஏற்றதாக இருப்பது போல எட்டிக்காயும், அரளிக்காயும் இன்னும் பலவும் இல்லை. அருவி நீரும், ஆற்று நீரும், கிணற்று நீரும், கடல் நீரும், குளத்து நீரும், நீர்தான் என்றாலும், எல்லா நீரும் அனைத்து மனிதர்க்கும் ஒரே அளவிலும், எப்பொழுதும் எல்லாத் தேவைகளுக்கும் பயன்படுவதாக அமையவில்லை. தொன்றுதொட்டு மனித இனம், தான் கண்டவற்றில், சிலவற்றையே மிக்க பயன் அளிப்பதாக அனுபவித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே, அவற்றைப் போற்றி பாராட்டி தெய்வமாகவும் வழிபட்டு வந்திருக்கின்றது. மரங்களில் வாழையையும், தென்னையையும், வேம்பையும், நம்மிடம் நன்றி பாராட்டுவதில் நாயையும் போற்றுவது போல பசுவையே எல்லா இனங்களுக்கும் மேலாக வணங்கி, அட்சய பாத்திரமாக வற்றா ஊற்றாக போற்றி வருகிறது. வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் இந்து மதம் அளித்து வந்திருக்கிறது. பசுவை, வெறுமனே மாடு என்று அழைக்காமல் பசுத்தாய், கோமாதா என்று வழங்கிவந்திருக்கிறது. பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே மிருகம் பசு மட்டுமே.
3. ஐக்கிய ஸ்வரூபம் கோமாதா
எல்லாமே இறை வடிவம் என்றாலும், நாம் தொன்று தொட்டு, சிலவற்றிலேயே, சில வடிவங்களிலேயே, அனைத்து குணங்களின், ஐக்கியத்தை உணர்ந்திருக்கிறோம்.
அர்த்த நாரீஸ்வரரில் சிவ -சக்தி ஐக்கியத்தையும், சங்கர நாராயணரில் சிவ - விஷ்ணு ஐக்கியத்தையும், லக்ஷ்மி நாராயணரில் விஷ்ணு - லக்ஷ்மி ஐக்கியத்தையும், நரசிம்மரில் மனித - மிருக ஐக்கியத்தையும், தாணுமாலயனில் ஹரி -ஹர - ப்ரும்ம ஐக்கியத்தையும், கணபதியில் யானை - தேவர்கள் ஐக்கியத்தையும், ஏகபாத த்ரீமூர்த்தியில் மூவரின் இணைவையும் காண்கிறோம். பலவற்றுள் ஐக்கியப்பாடு வெளிப்படையாக தெரியாவிட்டாலும் எல்லாமே சர்வ குண ஐக்கிய வடிவமே. யாவுமே நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஒவ்வொரு வகை அளவு கலவை வடிவமே, ஆணும் பெண்ணும் வித்தியாசமாகத் தோன்றினாலும், இரு பாலருமே 45 எக்ஸ் ஒய் க்ரோமோசோம்களின் கூட்டே. இவற்றில் (எக்ஸ் ஒய் ல்) ஒன்று கூடினால் ஆண் என்றும் மற்றொன்று கூடினால் பெண் என்றும் கூறுகிறோம். ஒவ்வொரு ஜீவ அணுவின் அடிப்படை அமைப்பான டிஎன்ஏ, ஒரு மனிதரின் பல்லாயிரக் கணக்கான மூதாதையர்களின் குணங்களை உள்ளடக்கி இருப்பது போலவும், மிகச்சிறிய ஆலம் விதை ப்ரும்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போலவும், ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒருமை வடிவாகும்.இந்து மதம் பசுமாட்டைத் தவிர வேறு எந்த இனமும் தெய்வ சக்தியற்றது என்று கூறவில்லை. காலையில் எழுந்தவுடன் நம் உள்ளங் கைகளைப் பார்த்து நுனிப்பகுதியில் மகாலக்ஷ்மியும் இடையில் சரஸ்வதியும், கணுப்பகுதியில் பார்வதியும், (முச்சக்திகளும் இருப்பதை) நினைவுபடுத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது. எனினும், தோட்டத்துக் கனியை அறியாமல் இருப்பதே பொது குணம் என்பதால் நாம் நம்மை அறிவதற்கு ஏதுவாக பரம்பொருளை, முதலில் பிறவற்றில் இருப்பதை உணர, பல வழிவகைகளை இந்து மதக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இவ்வடிப்படையில் தோன்றியதே கோபூஜை (பசு வழிபாடு).
உலகில் உள்ள கோடிக்கணக்கான கீரை, காய், கனிகளையும், தெரிந்த பின்னரே சிலவற்றை உபயோகிப்போம் என்பதில்லை. நமக்கு நன்மை அளிப்பதாக அறிந்ததை
உடனே பயன்படுத்திடுகிறோம். இது போல பூச்சி முதல் பிரமாண்டமான இனம் வரை, ஒவ்வொன்றின் தெய்வ அம்சத்தை உணரும் வரை காத்திராமல், பசுமாடு போன்று, தெய்வாம்சம் அறியப்பட்ட இனங்களை வழிபட்டு பயன்பெறுவதே அறிவுடைமை. நன்மை அளிப்பதாக அறிந்ததை மறந்திடக் கூடாது என்றும் கிடைத்த கனியை நழுவவிடக்கூடாது என்பதற்காகவும் துவங்கப்பட்டுத் தொடர்வதே கோமாதா பூஜையாகும். எல்லாரும் தத்தம் வீட்டிலேயே, பசு வழிபாடு செய்ய இயலாதிருக்கலாம் என்றே ஒவ்வொரு ஆலயத்திலும், பசுத்தொழுவம் அமைத்து, அன்றாடமும் கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆலயத்திலும் கோ சாலை (பசு மடம்) இருந்தால் அருகில்வாழ் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும் பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும். தினமும் பசுமடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை. அதோடு முக்கிய நாட்களில் அல்லது பல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108, கோ பூஜை, 1008 கோபூஜை செய்யலாம். ஆலயத்திற்கு மட்டுமின்றி, அருகிலுள்ள மக்களுக்கு மட்டுமின்றி அகிலத்திற்கே அனைத்து நன்மையும் அளிக்கும்.
கோபூஜை செய்வோம் கஷ்டங்கள் தீரப்பெறுவோம். பசுவை வழிபடுவோம் பரம்பொருளை அறிந்திடுவோம்.
4. பசுவைப் போற்றும் முக்கிய நூல்கள்
வேத காலம் தொடங்கி, இன்று வரை பசுவின் (கோமாதாவின்) பெருமையைப் பேசாத நூல்களோ இல்லை எனலாம். அவற்றுள் சில நூல்களின் பெயர்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது.
1. ருக்வேதம்
2. யஜூர் வேதம்
3. ஸ்ரீ மஹாபாரதம்
4. ஸ்ரீமத்பாகவதம்
5. ஸ்ரீ மத்ராமாயணம்
6. பிரகத்ஸம்ஹிதை
7. சுக்கிர நீதி
8. காமிகாகமம்
9. சுப்பிரபேதம்
10. காசிபம்
11. வாதூளாகமம்
12. மகுடாகமம்
13. சிவதருமோத்திரம்
14. பெரியபுராணம்
15. சாரதா திலகம்
16. சகலாகம சங்கிரகம்
17. பிரம்மாண்ட புராணம்
18. கருடபுராணம்
19. விஷ்ணு புராணம்
20. சூதசம்ஹிதை
21. வாயுசம்ஹிதை
22. சங்கரசம்ஹிதை
23. காசி மண்டபம்
24. பிரமோத்தரகாண்டம்
25. மனுஸ்ம்ருதி
26. போதாயன கற்பம்
27. பக்த விலாசம்
28. பதார்த்த குண சிந்தாமணி
29. நாலாயிர திவ்யப் பிரபந்தம்
30. சிவ மகாபுராணம்
31. வைத்யநாத தீஷிதம்
32. ஹரி ஹர தாரதம்மியம்
33. திருவாரூர் ஸ்தல புராணம்
34. திருக்கோகரண மான்மியம்
35. காஞ்சி ஸ்தல புராணம்
36. திருவான்மியூர் புராணம்
37. திருக்கழுக்குன்றம் புராணம்
38. திருவாமாத்தூர் புராணம்
39. திருமாத்தனை நல்லூர் புராணம்
40. திரு ஆயர்பாடி புராணம்
41. திருச்சேய்ஞலூர் புராணம்
42. திரு வானைக்காபுராணம்
43. திருத்தென்குடி திட்டை புராணம்
44. திருஆவூர் புராணம்
45. திருவாவடுதுறை புராணம்
46. திருக்கொண்டீசுவரம் புராணம்
47. திருச்சிக்கல் புராணம்
48. திருவண்டாம்படி புராணம்
49. திருக்கருவூர் புராணம்
50. வெண்ணைமலை புராணம்
51. திருச்செங்கோடு புராணம்
52. திருப்போரூர் புராணம்
53. கபில வாசகம்
54. அர்த்த சாஸ்திரம்
55. குமரேச சதகம்
56. கோமுக்தீசுவர சதகம்
57. ஏரெழுபது
58. ஜோதிஹ சாஸ்திரங்கள்
59. சாஸ்த்ர ரத்நாகரம்
60. மாட்டு வைத்திய நூல்
61. காலப்பிரகாசிகை
62. ஹேமாத்திரி புராணம்
63. தேவிமான்மியம்
64. திருவாலவாய் புராணம்
5. வயதான பசுக்களும் வயிரவம் கோயில் அம்மனும்
திருசெந்தூரின் தென்மேற்கே 25 கி.மீ. ல் தட்டார்மடம் அருகே அருணகிரியார் வழிபட்ட வயிரவம் என்ற ஊரில், தொன்மையான, சிவகாமி ஞானாதீஸ்வரர் கோயில் உள்ளது. 1994ல் குடமுழுக்கு பெற்ற இக்கோயிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பும் குடமுழுக்கு முயற்சி நடந்தது. அப்போது, சிவகாமி அம்மன் நேரில் கூறிய வார்த்தைகளை கோமாதா பராமரிப்புக்கு மிகவும் ஏற்றதாகக் கொள்ளலாம். சிவகாமி அம்மனின் திருவுரு லக்ஷணம் சிதைந்து இருந்ததால் பக்தர்கள், வேறு அம்மன் வைக்கத் தீர்மானித்து விட்டனர். அன்றிரவே, சிவகாமி பக்தர் கனவிலும் சிற்பியின் கனவிலும் நெஞ்சை உருக்குகின்ற ஒரு கேள்வியை எழுப்பினாள்.உன்தாய் வயதாகி மெலிந்து, தளர்ந்து, தேய்ந்து இருந்தால் அவளை ஒதுக்கிவிட்டு இன்னொருவளை தாயாக ஏற்பாயோ? பக்தர்கள் சிலைமாற்ற எண்ணத்தை அன்றே விட்டுவிட்டனர். பழைய திருவுருவே இன்றும் பூஜையில் உள்ளது. வயதாகி, கறவை நின்று விட்ட ஒவ்வொரு பசுமாட்டைப்பற்றியும் அன்று சிவகாமி கேட்ட கேள்வியை நினைவு கொண்டால், எந்தப் பசுமாட்டுக்கும், அடிமாடாக விற்க பட்டு பல மைல்கள் நடந்தோ, லாரிகளில் நசுக்குப்பட்டோ, கசாப்புக் கடையில் பலியாகி, துண்டம் துண்டமாக பெட்டிகளில் அடைபட்டு ஏற்றுமதி ஆகும் நிலையே வராது. ஒரு அரசன், நாட்டுப் பொருளாதாரத்தை சீர்படுத்த எண்ணி, 50 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் அழிக்க உத்தரவிட்டான் சில வருடங்களுக்கு பின்பு ஏற்பட்ட பஞ்சத்தின் போது, அது வரை கொலை செய்யப்படாமல், பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு கிழவனே அதை தீர்த்திட வழி கூறியதை ஒரு கதை விவரிக்கிறது. பெற்ற தாயின் ஆரோக்கியத்தையும் நம் ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுக்காகின்ற பசுவை ஈன்ற தாயினும் இருமடங்கு பராமரிப்பது அனைவரின் கடமையாகும்.
6. பசுவுள் இருந்து அருளும் தேவர்கள்
நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான அணுக்களையும் நம் மூளையின் நுண்ணியமான பகுதிகள் பாதுகாத்தாலும், பொதுவாக கை, கால், இடுப்பு, மார்பு, கண், காது, மூக்கு, வாய், வயிறு, கல்லீரல், இதயம் ஆகிய முக்கிய உறுப்புக்களை மூளையின் சில பகுதி காக்கிறது என்றே கூறுகிறோம். அதுபோல, உலகை காக்கின்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் கோமாதாவின் (பசுவின் உடலில்) அடங்கி இருந்தாலும், கல்வி, செல்வம் போன்ற முக்கிய தேவைகளை நிறைவேற்றும் முக்கிய தெய்வங்கள் கோமாதாவின் திருவுருவில் எங்கெங்கு உள்ளனர் எனத் தெரிவிப்பதே வழக்கமாக இருக்கிறது. இதையே பல தெய்வங்களை உள்ளடக்கிய காமதேனு என்ற படத்தில் காண்கிறோம்.
கோமாதாவின் உடற் பகுதியும் அங்கே அருளும் தெய்வங்களும்
1. முகம் மத்தியில் சிவன்
2. வலக் கண் சூரியன்
3. இடக் கண் சந்திரன்
4. மூக்கு வலப்புறம் முருகன்
5. மூக்கு இடப்புறம் கணேசர்
6. காதுகள் அஸ்வினி குமாரர்
7. கழுத்து மேல்புறம் ராகு
8. கழுத்து கீழ்புறம் கேது
9. கொண்டைப்பகுதி ப்ரும்மா
10. முன்கால்கள் மேல்புறம் சரஸ்வதி, விஷ்ணு
11. முன்வலக்கால் பைரவர்
12. முன் இடக்கால் ஹனுமார்
13. பின்னங்கால்கள் ப்ராசரர், விஷ்வாமித்திரர்
14. பின்னகால் மேல்பகுதி நாரதர், வசிஷ்டர்
15. பிட்டம் - கீழ்ப்புறம் கங்கை
16. பிட்டம் - மேல்புறம் லக்ஷ்மி
17. முதுகுப்புறம் பரத்வாஜர், குபேரர் வருணன், அக்னி
18. வயிற்றுப்பகுதி ஜனககுமாரர்கள் பூமாதேவி
19. வால் மேல் பகுதி நாகராஜர்
20. வால் கீழ்ப்பகுதி ஸ்ரீமானார்
21. வலக்கொம்பு வீமன்
22. இடக்கொம்பு இந்திரன்
23. முன்வலக்குளம்பு விந்தியமலை
24. முன்இடக்குளம்பு இமயமலை
25. பின் வலக்குளம்பு மந்திரமலை
26. பின் இடக்குளம்பு த்ரோணமலை
27. பால்மடி அமுதக்கடல்
7. பசு வழிபாடு வகை
பசு வழிபாடு இரண்டு வகைப்படும்.
1. பசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால் அலங்கரித்து, எல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்து, தூப, தீப, நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை. ஈசனை விக்ரஹங்கள் வைத்து விரிவாக வழிபட முடியாதவர் இறைவனின் படத்தை மட்டும் வைத்து வழிபடுவது போல, வீட்டில், கோமாதாவின் படத்தை மட்டும் வைத்து வழிபாடு செய்வதும் முதல் வகையிலேயே அடங்கும்.
2. பசுவைத் திருநாமங்கள் கூறி வழிபடா விட்டாலும், வீட்டுப்பசுவுக்கு மட்டுமின்றி பசு இனத்துக்கே உதவுவதாக அவற்றின் நலனைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் பசுவழிபாடே. இரண்டாம் வகை பராமரிப்பு வழிபாடு இருந்தால் தான் முதல் வகை பூஜை வழிபாடு நடக்க முடியும்.
பசுப்பராமரிப்புச் செயல்பாடுகள்
1. நம் வீட்டில் பசு மாடு வளர்க்க வாய்ப்பு இல்லையெனில், பசுமாடு வைத்திருப்போருக்கு நாமாக உதவ வேண்டும்.
2. அவர்களை, மாட்டுக்காரன் என்று இழிவாக பேசக்கூடாது. பசு உள்ள குடிசை வாசியை விட பசு இல்லாத பங்களா வாசியே ஏழை.
3. அன்றாடம், சிலர் நாய் போன்ற பிராணிகளை வாக்கிங் என்ற பெயரில் வெளியே அழைத்துச் செல்கிறார்கள். அப்படி இருக்கும் போது பசு மேய்ப்பராக இருப்பதில் கேவலம் இல்லை.
4. வீட்டில் பசு இல்லாதவர், அன்றாடமும், ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு, ஒரு பிடி அருகம்புல்லோ, வாழைப்பழமோ அகத்திக் கீரையோ, பிற தீவனமோ கொடுக்க வேண்டும்.
5. வெளியில் மேயும் பசுக்களுக்கு, நம் வீட்டின் அல்லது தோட்டத்தின் வெளிப்புறம் தண்ணீர் தொட்டி வைக்கலாம்.
6. சிறு குழந்தைகளுக்கு எங்கு வலிக்கிறது என்று சொல்லத் தெரியாவிடினும், கத்தியாவது நம் கவனத்தை ஈர்க்க முடியும். மாடுகளுக்கு அதுவும் முடியாது. எனவே, அவைகள், தாமாகவே, அரிப்பைத் தீர்த்து கொள்ளும் வகையில் சாலையோரமாக கருங்கற்களை நட்டு வைப்பது நல்லது.
7. மலஜலம் கழித்தவுடன், தானே சுத்திகரித்துக் கொண்டு, நுகர்ந்து கொள்ளத் தெரியாதக் குழந்தையை கவனிப்பது போல மாடுகளைத் தொழுவத்தில் கட்டிப் போட்டிருக்கும் வரை, சாணத்தையும், நீரையும் அவ்வப்போது அப்புறப்படுத்தி தொழுவத்தையும், மாடுகளையும் தூய்மையாகக் காக்க வேண்டும்.
8. நமக்கு தினமும் ஆறு, குளத்தில், குளிக்க வசதியில்லாவிடில் அவ்வப்போதாவது, பெரும் நீர் நிலைகளில். ஆசைதீர, அதிக நேரம் நீராடி, பயன்பெறுவது போல, மாடுகளுக்கும், அதிக நேரம் நீந்திக் குளிக்க வகை செய்ய வேண்டும்.
9. விளை நிலங்களில் சிறு பகுதியையாவது வருடந்தோறும் மாறி மாறித் தரிசாக விடுவது நிலங்களுக்கு நல்லது. மாடுகளுக்கும் புல் மேய்விடம் கிடைக்கும்.
10. வசதியுள்ள விவசாயிகள் வேலிக்குள்ளேயே எல்லா வைக்கோல் போர்களையும் போடாமல் சிறிய வைக்கோல் குட்டான்களையாவது வழிப்போக்கு மாடுகளுக்காக வெளியே அமைப்பது நல்லது.
11. மனித இனத்தவர், பெண் பூப்படைந்த பிறகும், பல வருடம் திருமணம் செய்விக்க, செய்து கொள்ளத் தயங்கும் போது, பசுங்கன்றுகளை மட்டும் பால் - மணம் மாறும் முன்பே, சினைப்படுத்தி, கன்று ஈனச் செய்து பால் கறப்பது முறையல்ல.
12. பிள்ளை கதறினாலும், தன் அழகு குறைந்திடுமோ என்று கடமையை மறந்திடும் சில தாய்மார்கள் இருக்க, தன் கன்றுக்கு பால் விட மாட்டார்களோ என்ற நிலையில், பால் கறக்கும் போது உதைக்கின்ற மாடுகளை, கால்களை கட்டி அல்லது தாங்க முடியாத அரிப்பை ஏற்படுத்தும் காஞ்சரங்காய் இலையால் அடித்து, பால் கறப்பது முறையல்ல.
13. சில தாய்மார் குழந்தைகட்கு பால் ஊட்டத் தயங்கும் போது பசுக்களுக்கு ரசாயனத் தீவனங்கள் மற்றும் உடனடியாக அதிகப்பால் கறப்பதற்கான ஊசிகள் போடக்கூடாது.
14. பல மணி நேரம் பிரிந்து உள்ள தாயையும் கன்றையும் பால் கறந்த பிறகாவது, காலையும், மாலையும் அவை, மனமாற இணைந்து இருக்கின்ற வாய்ப்பு அளிக்க வேண்டும்.
15. தாய் தந்தையரை நன்கு கவனிக்க முடியாவிட்டால், சிலர் அவர்களை அனாதை ஆசிரமத்தில் விடுவது போல, நமக்கு வருவாய் அளிக்க இயலாத மாடுகளை, அடிமாடாக விற்காமல், நலிந்த மாடுகளையும் பராமரிக்கின்ற பசுமடங்களிலும் தொழுவங்களிலுமே சேர்ப்பிக்க வேண்டும்.,
16. ஆலயத்திற்கு உபயமாக்கப்படும் மேஜை உடைந்துவிட்டாலும் கணக்கு காண்பிப்பதற்காவது பத்திரமாக வைப்பது போல, ஆலயத்திற்கு விடப்படும் மாடுகளையும், எப்படியாவது, பராமரிக்க வேண்டுமே தவிர ஏலம் விட்டு காசாக்கக் கூடாது.
17. அரசாங்க மிருக - இன ஆணையங்கள், சிற்றினங்களை நமக்கு எப்படி சாதகமாக்கி கொள்வது என்ற நோக்கை விடுத்து அவற்றின் இயற்கையான அந்திமக் காலம் வரை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று கருத வேண்டும்.
18. பால் விற்பதற்கு மட்டும் கூட்டுறவு மையங்களை விட பசுமாடுகளை வளர்க்கின்ற கூட்டுறவு மையங்கள் மேன்மை.
ஒவ்வொருவரும் ஒரு பசு மீது மட்டும் கருத்தை செலுத்துவதைவிட பல பசு மாடுகளை கவனித்த பயன் கிடைக்கும். ஊரார் பிள்ளைகளுக்கு ஊட்டிட தன் பிள்ளையும் வளர்ந்திடும்.
19. சொத்துக்குக் காவலாக வளர்க்கும் நாய்க்குப் பெயர் வைத்து, அன்போடு அழைப்பதுபோல, பசுக்களையும் காளைகளையும் நல்ல பெயர்களை வைத்தே கூப்பிட வேண்டும்.
20. மடியில் கொஞ்சிய காவல் நாயை, அது வயதாகி இறந்தபின் அடக்கம் செய்வது போல், தாய்ப்பாலுக்கு ஈடாக, அத் தாய்ப்பால் இல்லாத போது, நமக்கு உயிர்ப்பால் அளிக்கும் பசுவை அதன் வாழ்நாள் முழுவதும் காத்து, நல்லடக்கம் செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.
21. மரம் குறைய, மழை குறைந்து, மனிதர் இன்னலுறுவதுபோல பசு போன்ற சிற்றினங்கள் அல்லலுற்றால் அகிலமே அல்லலுறும்.
22. தேவையைக் கூற இயலாத பசுவைப் பேணிட, நம்மிடையே, பிறர் கேட்கும் முன்பே குறிப்பறிந்து உதவிடுவது வளரும்.
பிறவிலேயோ, இடையிலேயே அல்லது வயதினாலோ சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலாதவற்கு உதவுகின்ற போக்கும் நம்மிடையே வளரும்.
23. தாய் - பிள்ளை, கணவன் - மனைவி ஆகியவரை பிரிக்காதது போல, பசுவையும், கன்றையும் பார்வைக்கு அப்பாற்பட்டு பிரித்துக் கட்டக் கூடாது.
24. திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு, எல்லோரையும் சுற்றம் சூழ வரவேற்பது போல, பசுவழிபாட்டில் தாயைக் கன்றுடன் சேர்த்தே பூஜிக்க வேண்டும்.
9. பசுவினால் பெரும் பயன்
பொதுவாக, எல்லா பொருட்களின் எல்லா பகுதிகளும், நம்முள் எல்லா வயதினருக்கும். ஏற்புடையதாக இருப்பதில்லை. உதாரணமாக, பல கீரைகளில், வேர் காம்பு, நரம்பு போன்றவை நமக்கு அதிகம் உபயோகப் படுவதில்லை. ஆனால், பசுவிடமிருந்து கிடைக்கும் எல்லாப் பொருளுமே பால், தயிர், நெய், சாணி (கோமயம்) நீர் (ஆகியன), நமக்கு உணவாகவும், மருந்தாகவும், பாதுகாப்பு அரணாகவும் உள்ளன. குழந்தைகளுக்குத் தேவையான அளவு, தாய்ப்பால் ஊறாவிட்டாலும், தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாவிட்டாலும், பசும்பால் உயிர்ப்பாலாக குழந்தையை வளர்க்கிறது. மேலும் ஆவியில் சமைக்கப்பட்ட, இட்லி, ஆகியவற்றை விட பசும்பாலே மிக எளிதாக ஜீரணமாகி ஊட்டம் அளிக்க வல்லது அடுப்பில் காய்ச்சாமல் அப்படியே அருந்தவும் தக்கது. பிற பாலிலிருந்து உருவாகும் தயிர்களை விட, பசுந்தயிரே, நமக்க மிக ஏற்புடையதாக உள்ளது. பசுநெய், கொழுப்புச் சத்துக் குறைவாக இருப்பதோடு, அதை எரிக்கும் போது ஏற்படும் புகையும் பாதிப்பதில்லை. இதனால் தான், விளக்கேற்றுவது முதல், வேள்வி வரை பசு நெய் முக்கியமாக, சிறப்பாக கருதப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான உயிரினங்களில், மனிதனும் உட்பட, ஆடு, மாடு போன்ற மிகச் சிலவற்றின் கழிவே (மலம், சிறுநீர்) பயிர்களுக்கு உரமாக மட்டுமின்றி மனிதருக்கும் நேரடியாக சிறந்த மருந்தாகப் பயன்படுகின்றன.
இவற்றுள், பசுஞ் சாணிக்கும் பசு நீருக்கும் ஈடு வேறில்லை. பசுஞ்சாணி, கிருமிநாசினியாக (ஆண்டிபையோடிக்) மட்டுமின்றி, பில்லி, சூனியம், திருஷ்டி (தீய கண்நோக்கு) கெட்ட எண்ணம் ஆகியவற்றிலிருந்தும் நம்மை காக்கும் சக்தி உடையது. இதனால் தான், வீட்டின் முன் வாசலிலும் பின் வாசலிலும், அன்றாடம், பசுஞ்சாணி கரைத்துத் தெளிக்கிறோம். வீட்டினுள் துடைக்கும் போதும், மார்பின் தரையானாலும் பசுஞ்சாணியை பயன்படுத்தும் படி கூறப்படுகிறோம். புதிதாக வாங்கும் மனையில், ஆயிரக்கணக்கான வருடங்களாக நமக்குத் தெரிய வாய்ப்பின்றி ஏற்பட்டிருக்கக் கூடிய தீவினைகள் மற்றும் மனைக்கடியில் இருக்கக்கூடிய தீயவற்றின் பாதிப்புக்கு நாம் உள்ளாகாமலிருக்க, தொடர்ந்து பல நாட்கள் பசுஞ்சாணி நீர் தெளிப்பது வழக்கமாக உள்ளது. வீடுகளில் மட்டுமின்றி, ஆலயத் திருக் குடமுழுக்கின் போதும் ஆலய வளாகத்தை, நுண்ணிய சக்தி வாய்ந்த, மந்திர ஒலியால் தூய்ப்பிப்பதற்கு ஈடாக, பசுஞ்சாணியையும் பயன்படுத்துவது இன்றும், மிக முக்கியமான வழக்கமாக உள்ளது.
பசுஞ்சாணியிலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு மட்டுமே பல்மதத்த வரும் ஏற்கும் சின்னமாக உள்ளது. இத்திருநீறு அறிவு கூட்டும் ; ஆணவம் ஒழிக்கும்; இம்மை நலம் சேர்க்கும்; ஈர்க்கும் அழகு தரும்; உடல்வலு கூட்டும்; ஊறு (துன்பம்)களையும், எதிரியைத் தவிர்க்கும்; ஏவல் குலைக்கும், ஐயம் தீர்க்கும் ; ஒருமையும் ஒருப்பாடும் அளிக்கும்; ஓங்காரம் உணர்விக்கும்; ஒளடதமும் ஆகிடும். இப்படி நாம் விரும்பக்கூடிய பலவற்றையும் கொடுக்கவல்ல திருநீற்றை தயாரித்து, பயன்படுத்தி, அருள்பெறும் வகையை அனைவரும் அறிந்து நலம் பெறுவோம். பஞ்சகவ்வியத்தில், பால், தயிர், நெய், சாணியோடு நீரும் சேர்வதோடு, பசு நீர், தனியாகவும் பலவகையில் பயன்படுகிறது. பசு நீர் புற்றுநோயை தீர்ப்பதில் ஒரு அரு மருந்தாகும். அதோடு, பிறரின் தீயப் பார்வையினால் பாதிக்கப்பட்டவர்கள், பசு நீரை, எண்ணெய் போல, தேய்த்து கொள்வதும், அதிகம் கிடைப்பின்,பசு நீரிலேயே, அவ்வப்போது குளிப்பதும் மிகச் சிறந்த பாதுகாப்பாகும். கடலில் குளித்த பின் சில நிமிடங்கள் கழித்து நன்னீரில் குளிப்பது போல, பசு நீர்க் குளியலுக்குப் பிறகும் வேறு நீரில் நீராடிவிடலாம். இடம் கருதி, பசுவிடமிருந்து கிடைக்கும் பயன்களில் மிகச்சிலவே குறிப்பிடப்பட்டுள்ளன. பயன்கள் அளப்பரியன.
10. கோ பூஜை பசுவழிபாடு
ஒவ்வொரு வருஷமும் மகர ஸங்க்ராந்தி (தைமாதப்பிறப்பன்று) இந்த்ர பூஜையும் சேர்த்தே கோ பூஜை செய்வர். பிற நாட்களிலும் செய்வது மேன்மை. சுருக்கமான விக்நேச்வர பூஜை மஞ்சள் பிள்ளையார் செய்து புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு விநாயகரை த்யானிக்கவும்.
கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹமணஸ்பத
ஆந: ஸ்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்
அஸ்மின் ஹரித் ராபிம்பே மஹா கணபதிம் த்யாயாமி;
மஹா கணபதிம் ஆவாஹயாமி; ஆஸநம் ஸமர்ப்பயாமி;
அர்க்யம் ஸமர்ப்பயாமி; பாத்யம் ஸமர்ப்பயாமி;
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி; ஒளபசாரிக ஸ்நாநம் ஸமர்ப்பயாமி;
ஸ்நாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி;
யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி;
கந்தாந் தாரயாமி ;
அலங்கரணார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி;
ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி;
புஷ்பை : பூஜயாமி (புஷ்பம், அøக்ஷதையால் பூஜிக்கவும்)
ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்நராஜாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷõய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜாநநாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் ஸுர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி;
தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷநாத் ஸமர்ப்பயாமி;
(வெற்றிலை, பாக்கு, பழம் மந்திரங்கள் கூறி நிவேதிக்கவும்)
ஓம் பூர்வபுஸ்ஸுவ; தத்ஸவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய,
தீமஹி, தியோ யோந: ப்ரசோயாத், தேவஸவித: பர்ஸுவ,
ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி. அம்ருதோபஸ்தரணமஸி.
ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா
ஓம் ஸமாநாயஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா
ப்ரஹ்மணிமே ஆத்மா அம்ருதத்வாய : மஹா கணாபதயே நம:
குளகண்டம், சுதளிபலம் மகா நிவேதநம் ஸமர்ப்பயாமி;
மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
அம்ருதாபிதாநமஸி - உத்தரா போஜநம் ஸமர்ப்பமாயி; நீர் விடவும்
தாம்பூலம் ஸமர்ப்பயாமி; தீர்த்தத்தை வெற்றிலையில் விடவும்.
நீராஜநம் ஸமர்ப்பமாயி; கற்பூரம் ஏற்ற வேண்டும்.
நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி; தீர்த்தம் விடவும்.
வக்ரதுண்ட மஹாகாய ஸுர்யகோடி ஸமப்ரப
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா
என்று கூறி ப்ரதக்ஷிணமும் நமஸ்காரமும் செய்யவும்.
கணபதி பிரசாதத்தை தலைமேல் கொள்ளவும்.
பிரதான பூஜை - பசு வழிபாடு ஆரம்பம்
ஸுக்லாம்பரதம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே
ப்ராணாயாமம், சங்கல்பம்
ஓம் பூ : ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம்ஜந: ஓம்தப: ஓம்ஸத்யம்:
ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோதயாத்: ஓமாப: ஜ்யோதீரஸ:
அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.
மமோபாத்த, ஸமஸ்த, துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸுபே ஸோபநே முஹூர்தே ஆத்யப்ரஹ்மண; த்விதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வன்தரே அஷ்டாவிம்ஸதி தமே கலியுகே - ப்ரதமேபாதே -ஜம்பூத்வீபே - பாரத வர்ஷே - பரதகண்டே மேரோ: தஷிணே பார்ஸ்வே, சகாப்தே, அஸ்மின் வர்த்தமானே ப்ரபவாதீநாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே (சித்ரபானு) நாமஸம்வத்ஸரே (உத்தர) அயநே (க்ரீஷ்ம) ருதௌ (மிதுன) மாஸே (க்ருஷ்ண) ப÷க்ஷ (ஷஷ்ட்யாம்) ஸுபதிதௌ, (பானு) வாஸர யுக்தாயாம் (சதபிஷக்) நக்ஷத்ர யுக்தாயாம் ஏவங்குண விஸேஷேண விஸிஷ்டாயாம் அஸ்யாம் கோபூஜதினே தைர்ய வீர்ய, விஜய ஆயுராரோக்ய ஐஸ்வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம், இந்த்ராணி ஸமேத இந்த்ர ப்ரீயர்த்தம், இந்த்ரபூஜாம் கோபூஜாம் ச கரிஷ்யே. ததங்கம் கலஸ பூஜாம் ச கரிஷ்யே. (வருடம், மாதம், திதி, நக்ஷத்ரம், கிழமை ஆகிய செய்திகளை அன்று அன்று உள்ளதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும்.)
விக்நேஸ்வரம் யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி என்று கூறி மஞ்சள் பிள்ளையார் மீது அஷதை சமர்ப்பித்து வடக்கே நகர்த்தவும்
கலச பூஜை
தீர்த்த பாத்திரத்தை சந்தனம், குங்குமம் பூவால் அலங்கரித்து வலது கையால் மூடிக்கொண்டு கீழ்வருமாறு ஜபிக்கவும்
கலஸஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர: ஸமாஸ்ரிதா:
மூலே தத்ரஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:
குöக்ஷளது ஸாகரா: ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோத யஜுர்வேத: ஸாமவேதோபி அயதர்வண:
அங்கைஸ்ச ஸஹிதா: ஸர்வே கலஸாம்பு ஸமாஸ்ரிதா:
ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா :
கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந் நிதிம் குரு
கலஸ தீர்த்தத்தை எடுத்து பூஜாதிரவ்யங்களையும் பசுவையும், தன்னையும், ப்ரோக்ஷணம் செய்து கொள்க.
கண்டா (மணி) பூஜை
ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வாந லாஞ்சநம்
(என்று மணியடிக்கவும்)÷ஷாடஸோபசர (16 உபசரிப்பு) பூஜை
ஐராவத கஜாரூடம் ஸஹஸ்ராக்ஷம் ஸசீபதிம்
வஜ்ராயுத தரம் தேவம் ஸர்வ லோக மயீபதிம்
இந்த்ராண்யா ச ஸமாயுக்தம் வஜ்ரபாணிம் ஜகத்ப்ரபும்
இந்த்ரம் த்யாயேத்து தேவேஸம் ஸர்வமங்கள ஸித்தயே
அஸ்மிந் கோமயபிம்பே இந்த்ராணீ ஸமேத இந்த்ரம் த்யாயாமி;
இந்த்ராணீ ஸமேத இந்த்ரம் ஆவாஹயாமி ;
இந்த்ராய நம: ரத்ந ஸிம்ஹாஸநம் ஸமர்ப்பயாமி;
ஐராவத கஜாரூடாய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி;
வஜ்ரபாணயே நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி;
ஸசீபதயே நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
ஸஹஸ்ராக்ஷõய நம: ஸ்நபயாமி;
ஆபோஹிஷ்ட்டாம யோபுவு : மந்திரம் கூறி நீர் ப்ரோஷிக்கவும்
ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
ஸர்வலோக மஹீபதயே வஸ்த்ரார்த்தம் அக்ஷநாத் ஸமர்ப்பயாமி;
தேவேஸாய நம: உபவீதார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி;
இந்த்ராணீ ஸமேதாய நம: ஆபரணார்த்தம் அக்ஷதாந்
ஸமர்ப்பயாமி; ஜகத் ப்ரபவே நம: கந்தாந் தாராயாமி;
கந்தோபுரி குங்குமம் ஸமர்ப்பயாமி; அக்ஷதாந் ஸமர்ப்பயாமி;
அர்ச்சனை
ஓம் இந்த்ராய நம:
ஓம் மஹேந்த்ராய நம:
ஓம் தேவேந்த்ராய நம:
ஓம் வ்ருத்ரயே நம:
ஓம் பாகஸாஸநாய நம:
ஓம் ஜராவத கஜாரூடாய நம:
ஓம் பிடௌஜலே நம:
ஓம் ஸவர்ணாயகாய நம:
ஓம் ஸஹஸ்ரநேத்ராய நம:
ஓம் ஸுபதாய நம:
ஓம் ஸத மகாய நம:
ஓம் புரந்தராய நம:
ஓம் த்ரிலோ கேஸாய நம:ஓம் ஸசீபதயே நம:
ஓம் இந்த்ராணீ ஸமேதாய இந்த்ராய நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி;
இந்த்ராணீ ஸமேதாய இந்த்ராய நம: தூபமாக்ராபயாமி;
இந்த்ராணீ ஸமேதாய நம: தீபம் தர்ஸயாமி;
மஹாநைவேத்யம் ஸமர்ப்பயாமி; தாம்பூலம் ஸமர்ப்பயாமி;
கர்ப்பூர நீராஜநம் தர்ஸயாமி; ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
அநந்த கோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்ப்பயாமி;
ஹே தேவ காம் ரக்ஷ, மாம் ரக்ஷ, மம குடும்பம் ரக்ஷ
என்று பிரார்த்தனை செய்து கொள்ளவும்.
கோபூஜை
காமதேநோ : ஸமுத்பூதே ஸர்வகாம பலப்ரதே
த்யாயாமி ஸெளரபேயி த்வாம் வ்ருஷபத்நீ நமோஸ்து தே
காம் த்யாயாமி; ஆவாஹயாமி தேவேஸி ஹவ்யகவ்ய பலப்ரதே
வ்ருஷபத்நீ நமஸ்துப்யம் ஸுப்ரீதா வரதா பவ: காம் ஆவாஹயாமி
காமதேநவே நம: ஆஸநம் ஸமர்ப்பயாமி;
பயஸ்விந்யை நம: பாத்யம் ஸமர்ப்பயாமி;
ஹவ்யகவ்ய பலப்ரதாயை நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி;
கவே நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
ஸெளரபேய்யை நம: ஸ்நபயாமி;
ஆபோஹிஷ்ட்டாமயோ என்ற மந்திரத்தால் ப்ரோக்ஷிக்கவும், ஸ்நா நாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
க்ஷீரதாரிண்யை நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி;
மஹாலக்ஷ்ம்யை நம: ஆபரணம் ஸமர்ப்பயாமி;
ரோஹிண்யை நம: கந்தாந் தாரயாமி;
அக்ஷதாந் ஸமர்ப்பயாமி; ஸ்ருங்கிண்யை நம: புஷ்பை பூஜயாமி.
அர்ச்சனை
ஓம் காமதேநவே நம
ஓம் பயஸ்வின்யை நம
ஓம் ஹவ்யகவ்யாயை நம
ஓம் பலப்ரதாயை நம
ஓம் வ்ருஷபத்ந்யை நம
ஓம் ஸெளரபேய்யை நம
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம
ஓம் ரோஹிண்யை நம
ஓம் ஸ்ருங்கிண்யை நம
ஓம் க்ஷீரதாரிண்யை நம
ஓம் காம்போஜஜநகாயை நம
ஓம் ஜநகாயை நம
ஓம் யவநஜநகாயை நம
ஓம் மாஹேய்யை நம
ஓம் நைசிக்யை நம
ஓம் ஸபள்யை நம
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி;
(மஹாலக்ஷ்மி அஷ்டோத்திரம் கூறியும் அர்ச்சனை செய்யவும்)
(தூபம் முதல் இந்திரனுக்கும் பசுவுக்கும் சேர்த்தே செய்யவும்)
தஸாங்கம் குக்குலூபேதம் ஸுகந்தம் ச மநோஹரம்
தூபம் தாஸ்யாமி தேவேஸி வ்ருஷபத்ந்யை நமோஸ்துதே
இந்த்ராய நம: இந்த்ராண்யை நம: தூபமாக்ராபயாமி;
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வன்ஹீநா யோஜிதம் மயா
க்ருஹாண மங்களம் தீபம் த்ரைலோக்ய திமீராபஹம்
ஜயந்தஜநகாய நம; காம்போஜஜநகாயை நம: தீபம் தர்ஸயாமி
தீபாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
திவ்யாந்தம் பாயஸாதீநி ஸாகஸூப யுதாநி ச
ஷட்ரஸாதீநி மாஹேயி காமதேந்வை நமோஸ்து தே
மஹேந்த்ராய நம; மாஹேய்யை நம; திவ்யாந்தம், க்ருதகுள
பாயஸம், நாளிகேர கண்டத்வயம், கதளீபலம், ஸாகஸூப தேஹி
தம் ஸர்வம் அம்ருதம் மஹாநைவத்யம் நிவேதயாமி
நிவேதநானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
ஏலா லவங்க கர்ப்பூர நாகவல்லீ தளைர் யுதம்
பூகீபல ஸமாயுக்தம் தாம்பூலம் பரதிக்ருஹயதாம்
காஸ்யபேயாய நம: ஸெளரப்யை நம: தாம்யபூலம் ஸமர்ப்பயாமி
நீராஜநம் க்ருஹாணேதம் கர்ப்பூரை: கலிதம் மயா
காமதேநு ஸமுத்பூதே ஸர்வாபீஷ்ட பலப்ரதே
ஹரயே நம: மஹாலக்ஷ்ம்யை நம: கர்ப்பூர நீராஜநம் தர்ஸயாமி
இந்த்ராய நம: வ்ருஷபத்ந்யை நம:
வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
யோபாம் புஷ்பம் வேத, புஷ்பவாந், ப்ரஜாவாந் பஸுமாந்பவதி
சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பஸுமாந்பவதி
யாநி காநி ச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி ச
தாநி தாநி விநஸ்யந்தி ப்ரதக்ஷிணபதே பதே
ப்ரக்ருஷட பாபநாஸாய ப்ரக்ருஷ்ட பலஸித்தயே
ஜயந்த ஜநகோ தேவ: ஸ்ஹஸ்ராக்ஷ: புரந்தர
புலோமஜா பதிர் ஜிஷ்ணு: தஸ்மை நித்யம் நமோ நம:
இந்த்ராணீ பதயே நம: வ்ருஷபத்ந்யை நம:
அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்ப்பயாமி;
சத்ர சாமராதி ஸமஸ்த ராஜோபசாராந் ஸமர்ப்பயாமி;
யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமாக்யா தப: பூஜா க்ரியாதிஷு
ந்யூநம் ஸம்பூர்ணதாமேதி தம் வந்தே பாகஸாஸநம்
மந்த்ரஹீநம் க்ரியா ஹீநம் பக்திஹீநம் ஸசீபதே
யத் பூஜிதம் மயா பக்த்யா பரிபூர்ணம் ததஸ்து தே
மயா க்ருத்யா பூஜா பகவாந் ஸர்வாத்மக: ப்ரீயதாம்
ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து
உபாயநதாநம் (குருவுக்கு தானம் அளித்தல்)
இந்த்ர ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸநம் ஸகலாராதநை: ஸ்வர்ச்சிதம்
ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாஸஹோ:
அநந்த புண்ய பலதம் அதஸ் ஸாந்திரம் ப்ரயச்ச மே
மயா க்ருத தேவேந்த்ர பூஜா - கோபூஜா -ஸாத்குண்யார்த்தம்
யத்கிஞ்சித் ஹிரண்யம் ஸதக்ஷிணாகம், ஸதாம்பூலம்
தேவேந்த்ர ப்ரீதிம் காமயமாந: துப்யமஹம் ஸம்ப்ரததே நமம.
அஸ்மாத் கோமய பிம்பாத் இந்த்ராணீ ஸமேதம் இந்த்ரம்
யதாஸ்தாநம் ப்ரதிஷ்ட்டாபயாமி ; இந்த்ர கோ பூஜை முற்றிற்று.
11. சில துதிகள்
1. கவாஷ்டகம்
1. ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை ஸுரபியைச நமோ நம:
கவாம், பீஜஸ்வரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே.
2. கல்பவிருக்ஷ ஸ்வரூபாயை ஸர்வேஷாம் ஸததம்பரே
க்ஷீரதாயை தனதாயை புத்திதாயை நமோ நம:
3. சுபாயைச சுபத்ராயை கோப்ரதாயை நமோ நம:
யசோதாயை கீர்த்திதாயை தர்மதாயை நமோ நம:
4. பவித்ரரூபாம் பூதாஞ்ச பக்தானாம் ஸர்வகாமதம்
யதா பூதம் ஸர்வம் விசுவம் தாம் தேவீம் சுர பிம்பஜே.
5. கவார்ச்சனம் மகா புண்ணியம் தேவானுக்கிரக காரகம்
மகா பாப ப்ராயச்சித்தம் புக்தி முக்தி ப்ரதாயகம்.
6. யஸ்மாத் சரீரேஸான் நித்யம் த்ரிவிம்சத்கோடி தேவதா
ஸாதேனுர்பவ பூஜ்ய நித்யம் ஸ்ரீ கிருஷ்ணஸ்யாஜயா.
7. தர்மராஜ பிரதிஷ்டாம்ஸ்தி கோ, லக்ஷ்மீ பிரமதாமதா
கல்பவிருக்ஷ ஸ்வரூபாயை ஸாந்நித்யம் ஸேவ்ய பிரயத்னதா
8. கோபிரதிஷ்டா வினாசைய்வா வியர்த்தா ஸர்வ பிரதிஷ் டிதா
ஸர்வபிரதிஷ்டா மூலம்ஸ்யாத் ரக்ஷணீயா பிரயத்நதா
9. ஜாத்வாபூஜா ரகஸ்யஞ்ச பக்தி யுக்திச்ச மானவா
யபூஜ யச்சஸுரபி ஸச பூஜ்யோ பவேத்புஜிஹி.
10. அஷ்டகமிதம் ஸபுண்யம் பக்தியுக்திச்சயப் ப்டேத்
ஸ்ர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா.
2. கோமதீவித்யா (அக்னி புராணம்)
கோமதீம் கீர்தயிஷ்யாமி ஸர்வ பாப ப்ரணாஷிநீம்
தாம் து மே வததோ விப்ர ஷ்ருணுஷ்வ ஸுஸமாஹித :
காவ: ஸுரபயோ நித்யம் காவோ குக்குலு கந்திகா:
காவ: ப்ரதிஷ்டா பூதாநாம் காவ: ஸ்வஸ்த்யயநம் பரம்
அந்நமேவ பரம் காவோ தேவாநாம் ஹவிருத்தமம்
பாவநம் ஸர்வ பூதாநாம் ரக்ஷந்தி ச வஹந்தி ச
ஹவிஷா மந்த்ர பூதேந தர்ப்பயநந்யமராந் திவி
ருஷீணாமக் நிஹோத்ரேஷு காவோ ஹோமே ப்ரயோஜிதா
ஸர்வேஷாமேவ பூதா நாம் காவ: சரணமுத்தமம்
காவ பவித்ரம் பரமம் காவோ மங்க லமுத்தமம்
காவ: ஸ்வர்கஸ்ய ஸோபாநம் காவோ தந்யாஸ் ஸநாதநா:
(ஓம்) நமோ கோப்ய: ஸ்ரீமதீப்ய: ஸெளரபே யீப்ய ஏவ ச
நமோ ப்ரஹ்ம ஸுதாப்யஸ்ச்ச பவித்ராப்யோ நமோ நம:
ப்ராஹ்மணாஷ்சைவ காவஷ்ச குலமேகம் த்விதா ஸ்திதம்
ஏகத்ர மந்த்ராஸ்டதி ஹவிரேகதர திஷ்டதி
தேவ ப்ராஹ்மணகோ ஸாதுஸாத்வீபி: ஸகலம் ஜகத்
தார்யதே வை ஸதா தஸ்மாத் ஸர்வே பூஜ்யதமா: ஸதா
யத்ர தீர்தே ஸதா காவ: பிபந்தி த்ருஷிதா ஜலம்
உத்தரந்தி பதா யேந ஸ்திதா தத்ர ஸரஸ்வதீ
காவம் ஹி தீர்தே வஸதீஹ கங்கா
புஷ்டிஸ்ததா தத் ரஜஸி ப்ரப்ருத்தா
லக்ஷ்மீ: சுரேஷே ப்ரணதௌ ச
தர்மஸ்தாஸாம் ப்ரணாமம் ஸததம் சகுர்யாத்
12. கோதானம்
அல்லல் அனைத்தும் அறுத்து, நல்லன யாவும் கூட்டுகின்ற தானங்களில் கோதானம் மிகச் சிறந்த ஒன்றாகும்.
1. தத்தம் வாழ்நாளில் அவரவரே செய்வது நல்லது.
2. நம்மால் பராமரிக்க இயலவில்லை என்பதற்காக, அடுத்தவர் தலையில் பாரத்தை கட்டுவதாக இருக்க கூடாது.
3. தலை ஈற்றுப் பசுவை தானம் செய்வது சிறப்பு.
4. பால் கறக்கும் போதே பசுவை கொடுப்பதே முறை.
5. தாயையும், பால் அருந்தும் கன்றையும் பிரித்து அளிக்கலாகாது.
6. பசுவோடு காளையும் சேர்த்து தானம் செய்வது மேன்மை.
7. பால் கறக்க பாத்திரமும் சேர்த்து கொடுப்பதுச் சிறப்பு.
8. மாடு கன்றோடு, அதற்கு குறைந்தது ஒரு வருட உணவிற்கு, பரமரிப்புக்கும் பொருளாகவோ, பணமாகவோ வகைசெய்வது இன்னும் சிறப்பு.
13. பசு நேசிப்பால் நன்மை பெற்றவர்கள் நன்மையை நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு. கோபால கிருஷ்ணனைப் போல நாமும் பசுவை போற்றுவோம். ஆவினம் காப்போம் அனைத்தும் பெறுவோம்.

1 comment: