இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதில் எந்தவிதமான மாற்றுக்  கருத்தும் கிடையாது. சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும்  நிறைந்திருந்தாலும் வெயிலில் ஒரு காகிதத்தையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது  நன்றாகக் காயுமே அன்றி தீப்பற்றாது. 
அதே வெயிலில் ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் காகிதம் அல்லது  பஞ்சு தீப்பற்றி எரியும். அதாவது, எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை  சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி அனுப்புவது போல, எல்லா இடங்களிலும்  நிறைந்துள்ள இறையருளானது மந்திர, யந்திர சக்திகளினால் ஒன்றாக திரட்டி ஆலயங்களில்  வைக்கப்பட்டுள்ளது. 
அதனால் ஆலயங்களில் சென்று இறைவனை வணங்கும் பொழுது நாம் செய்த ஊழ்வினைகள்  யாவும் வெதும்பி, அவற்றின் வேகம் குறைந்து போய்விடும் என்கிறார்கள் ஆன்மிகப்  பெரியவர்கள். 
No comments:
Post a Comment