காஞ்சிப்பெரியவர் ""மாதா, பிதா, குரு, தெய்வம்'' என்னும் வேதவாக்கியத்தை
பக்தர்களுக்கு அடிக்கடி உபதேசிப்பார். பிறருக்கு உபதேசம் செய்வதோடு தானும் வாழ்வில்
கடைபிடித்து நடப்பதே நல்ல குருநாதரின் அடையாளம்.
தன் வாழ்க்கையின் கடைசிநாளில் இதைக் கடைபிடித்து நமக்கு வழிகாட்டியிருக்கிறார்.
1994 ஜனவரி 8ல், அவர் ஸித்தியடைந்தார். அதற்கு முந்தியநாள் இவரது தாயாருடைய ஊரான ஈச்சங்குடியில் வைப்பதற்காக பெற்றோரின் புகைப்படங்கள் பெரிதாக்கப்பட்டு தயாராக இருந்தன. ஸித்தியடைவதற்கு முன் அவரது மரக்குவளையைச் சுத்தம் செய்வதற்காகச் சென்ற சீடரிடம், "நீ கலவை சென்றிருக்கிறாயா? அங்கே தான் என் குரு, பரமகுரு ஆகியோரின் பிருந்தாவனம் இருக்கிறது'' என்று சொல்லி அவர்களை நினைவு கூர்ந்தார். பின் அவரிடம் ஈச்சங்குடிக்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்த பெற்றோரின் புகைப்படங்களை எடுத்துவரச் சொல்லிப் பார்த்தார். சிறிதுநேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.
மாதா,பிதா, குரு, தெய்வம் என்னும் உபதேசத்தை பின்பற்றி வாழ்ந்த பெரியவரின் பிருந்தாவனத்தை பிர்லா குடும்பத்தினர் கலையழகு மண்டபமாக அமைத்தனர். அதில் நித்ய வாசம் செய்யும் சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பூஜையறையில் பெரியவரின் பிருந்தாவனப்படத்தை வைத்து பூஜித்தால் அவரது பூரண அருள் பெறலாம்.

No comments:
Post a Comment