சித்தர்களின் உடலுறவு கொள்கை
பரத்துவாஷர் மற்றும் வால்மீகி முதலிய மகான்களால் விதிக்கப்பட்ட உடலுறவு கொள்கை
விலக்கான 3 நாட்களையும் தள்ளி 4ம் நாள் முதல் 16ம் நாள் வரை உடலுறவு கொண்டால்தான் குழந்தை உற்பத்தியாகும். மற்ற நாட்களில் கருப்பை மூடிக் கொள்ளும்.
4ம் நாளில் கூடி கருத்தரித்தால் பக்தியுடன் கூடிய ஒரு ஆண் மகன் உருவாகும்.
5ம் நாள் கூடினால் வேசித் தன்மையுள்ள, அவதூராண பெண் மகள் உருவாகும்.
6ம் நாள் கூடினால் ஆயுள் முழுவதும் வறுமையில் வாழும் ஆண்மகன் உருவாகும்.
7ம் நாள் கூடினால் தன் கணவனுடனும் பிறருடனும் வாழும் ஒரு பெண்மகள் உருவாகும்.
8ம் நாள் கூடினால் பக்தியுள்ள யாவரும் போற்றும் அற்புத ஆண்மகன் உருவாகும்.
9ம் நாள் கூடினால் கற்புக்கரசியாய் பக்தியுள்ளவளாய் பூரண ஆயுளோடுக் கூடிய பெண்மகள் உருவாகும்.
10ம் நாள் கூடினால் அளவற்ற செல்வந்தனாகி பூரண ஆயுளுடன் கூடிய மகன் உருவாகும்.
11ம் நாள் கூடினால் மஹாப்பதிவிரதை, உலகரிந்த உபகாரியான அழகுடைய பெண்மகள் உருவாகும்.
12ம் நாள் கூடினால் சன்மார்க்க சாதனையாளனாக உலகம் புகழும் ஆண்மகன் உருவாகும்.
13ம் நாள் கூடினால் ஆடல் பாடல்களில் வல்லவனாய் பூரண ஆயுளுடன் வாழும் பெண்மகள் உருவாகும்.
14ம் நாள் கூடினால் தர்ம சிந்தை, அதிகாரம் செய்யும் அற்புத புகழுடன் வாழும் ஆண்மகன் உருவாகும்.
15ம் நாள் கூடினால் 32 லட்சணங்களுடன் அநேக குழந்தைகளுடன் அரச பத்தினியாய் வாழும் பெண்மகள் உருவாகும்.
16ம் நாள் கூடினால் அநேக சிறப்புகளுடன் அற்புத அரசனாக வாழும் ஆண்மகன் உருவாகும்.
மேற் கண்டவைகளை மனதில் கொண்டு நல்ல குழந்தைகளையே உலகிற்கு வரவிடுங்களேன.
No comments:
Post a Comment