Thursday, July 28, 2011

நடனமாடும் நடராஜர்,கண்ணன் படங்களையும் விக்கிரகங்களையும் வீட்டில் வைக்கலாமா?

நடராஜர் என்பவர், எல்லாம்வல்ல பரமேஸ்வரனின் மஹேச்வர மூர்த்தங்களில் முதன்மையானவர். அவரே பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணமானவர். அவரில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கின்றன. நான் இவற்றை எழுதுவதும், பதிப்பகத்தார் பதிப்பிப்பதும், நீங்கள் படிப்பதும் என்ற அனைத்து காரியங்களும் அவனது அசைவுகளே! நம்முள் இயங்கிவரும் கோடிக்கணக்கான அணுக்களின் அசைவுகளும் அவனே. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் இதனால்தான்! இது மட்டுமல்ல. காற்று வீசுவதும், தண்ணீர் சென்றுகொண்டிருப்பதும், பறவைகள் பறப்பதும், மீன்கள் நீந்துவதும், எறும்பு நகர்வதும்-இப்படி எல்லா விதமான ஆற்றலும் அவரே. இதனாலேயே இவரை விதமான காஸ்மிடான்சர் என்கிறோம். அதாவது, பிரபஞ்சகூத்தாடி எனப் போற்றுவது வழக்கம். இவரை தெற்கு நோக்கி வைத்து வழிபட்டால், நமது ஆற்றல் மேம்படும். இப்பேராற்றல் மிக்க நடராஜப் பெருமானை வழிபடுவதினால், உடலாலும் உள்ளத்தாலும் சோர்வு பெற்றிருக்கும் உயிர்கள், சோர்வு நீங்கி ஆற்றல் பெறுவார்கள் என்பது நமது முன்னோர்கள் கண்ட உண்மை.
கிருஷ்ணரை, கோபாலன் எனகூறுவர். கோ எனில் பசு; பாலயதி எனில் காப்பாற்றுதல். இங்கு பசு என்பது, நாம் வழக்கத்தில் கொண்டுள்ள பசுக்களை மட்டும் குறிக்காது. அனைத்து ஜீவராசிகளையும் குறிக்கும். அவரின் புல்லாங்குழல் ஓசையினால், அனைத்து பசுக்களுமே அவரிடம் ஈர்க்கப்படுகிறது. இதுபோன்று நாமும் குழல் ஊதும் கண்ணனை வழிபடுவோமானால், தெய்வ ஆற்றல் பெற்றவர்களாக விளங்குவோம். இதுமட்டுமல்லாமல், அக்காலத்தில் ஒரு மனிதனுடை செல்வத்தை அவனிடம் இருக்கும் பசுக்களை கொண்டே கணக்கிட்டார்கள். ஆதலால், இவரை நாம் வணங்குவதினால், அனைத்து செல்வங்களையும் பெற்று இன்பமாக வாழ்வோம் என்பதில் ஐயமில்லை.

பெருமை வாய்ந்த பிள்ளையார்..

கணபதியை கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பார்கள். விநாயகரின் நாபி பிரம்மனின் அம்சமாகவும், முகம் விஷ்ணுவின் அம்சமாகவும், இடது பாகம் சக்தியின் அம்சமாகவும், வலது பாகம் சூரிய அம்சமாகவும், முக்கண் சிவனின் அம்சமாகவும் விளங்குகிறது. இதனால் விநாயகர் ஒருவரை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைப்பதாக விநாயகர் புராணம் கூறுகிறது.
விநாயகர் - தனக்கு மேல் யாரும் இல்லாத வெற்றி நாயகர்
பிள்ளையார் - சிவசக்தியின் மூத்த பிள்ளை
கணேஷ், கணபதி - சிவனின் பூத கணங்களுக்கு தலைவர்
விக்னேஸ்வரர் - தடைகளைத் தகர்ப்பவர்
கஜமுகன், கஜராஜன் - யானை முகம் கொண்டவர்.
முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் இருப்பதைப்போலவே, விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் இருக்கின்றன. இவை விநாயகர் தலங்களில் பிரதானமானவையாக கருதப்படுகிறது.
முதல் படைவீடு - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
இரண்டாம் படைவீடு - கடலூர் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்
மூன்றாம் படை வீடு - நாகப்பட்டினம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
நான்காம் படைவீடு - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
ஐந்தாம் படைவீடு - காசி துண்டிவிநாயகர் திருக்கோயில்
ஆறாம் படைவீடு - கடலூர் திருநாரையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்
யார் பட்டம் ஏன் வந்தது?
தாயை தாயார், தந்தையை தந்தையார் மாமியை மாமியார், என்று யார் அடைமொழி போடுவது ஒரு மரியாதைக்காக. நம் வீட்டு பிள்ளைகளை பிள்ளையாரே வருக என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், சிவ பார்வதியின் மூத்த பிள்ளை தெய்வக்குழந்தை இல்லையா? எனவே, தெய்வத்துக்குரிய மரியாதையுடன் பிள்ளையார் என்கிறோம். இந்த தெய்வத்தின் அருள்பெற்ற ஒரு பெண்மணியும் யார் பட்டம் பெற்றார். தமிழ் மூதாட்டி அவ்வையை பிள்ளையார், தன் தும்பிக்கையால் தூக்கி கைலாயம் கொண்டு போய் சேர்த்தார். எனவே, இந்தத் தெய்வப்புலவரையும் அவ்வையார் என்கிறோம்.
விநாயகரை கடலில் கரைப்பது ஏன்?
ஒருசமயம் பார்வதி தேவி, கங்கையில் நீராடிய போது தன் உடலிலிருந்த அழுக்கை திரட்டி பொம்மையாக்க, அது யானை முகமும், மனித உடலும் கொண்டிருந்தது. அதை அவள் கங்கையில் எறிந்தாள். அந்த பொம்மை விநாயகராக வெளிப்பட்டது. இவரை பார்வதியும் கங்கையும் பிள்ளையாக ஏந்தி கொண்டனர். இதனால், விநாயகருக்கு பார்வதியும், கங்கையும் அன்னையர் ஆனார்கள். இந்த காரணத்தினால் தான் விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் விநாயகரை கங்கையில் கரைக்கும் பழக்கம் முதலில் ஏற்பட்டது. பின்னர் கங்கையும் சேரும் இடம் கடல் என்பதால் விநாயகரை கடலில் கரைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
விக்ன ராஜர்
விநாயகருக்கு விக்ன ராஜர் என்ற பெயர் உண்டு. வரேணியன் என்ற மன்னனின் மனைவி புட்பகை கருவுற்றிருந்தாள். விநாயகர் கருவிலிருந்த குழந்தையை மறைத்து அதற்கு பதில் யானை முகத்துடன் தானே குழந்தையாக அவதரித்தார். இதனைக் கண்ட ராஜா குழந்தையை காட்டில் விடும் படி உத்தரவிட்டார். காவலர்கள் குழந்தையை காட்டில் பராசரமுனிவர் ஆஸ்ரமத்தின் அருகே விட்டனர். முனிவர் இந்த குழந்தையை வளர்த்து வந்தார். அப்போது கிரவுஞ்சன் என்ற அசுரன் பெருச்சாளி உருவெடுத்து அங்கிருந்த முனிவர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தான். இவனுக்கு விக்னன் என்ற பெயரும் உண்டு. விநாயகர் அவனை அடக்கி தன் வாகனமாக்கி கொண்டார். அன்றிலிருந்து விநாயகர் விக்னராஜா ஆனார்.
பிள்ளையாரின் ஆயுதங்கள்
பொதுவாக பிள்ளையார் ஐந்து கைகளில் மேல் இரண்டு கைகளில் ஆயுதங்கள் வைத்திருப்பார். இவை ஒவ்வொரு இடத்திலும் மாறுபடும். இவரது ஆயுதங்கள் மொத்தம் 29. பாசம், அங்குசம், தந்தம், வேதாளம், சக்தி, அம்பு, வில், கத்தி, கேடயம், சம்மட்டி, கதை, நாக பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி, தண்டம், கமண்டலம், பரசு, கரும்புவில், சங்கம், புஷ்ப பாணம், கோடரி, அட்சர மாலை, சாமரம், கட்டு வாங்கம், சக்கரம், அகல் விளக்கு, வீணை ஆகியவை.
விநாயகரின் 16 திருநாமங்கள்
பாலகணபதி, தருண கணபதி, பக்தி கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, துவிஜ கணபதி, சித்தி கணபதி, உச்சிஷ்ட கணபதி, விக்னராஜா கணபதி, க்ஷிப்ர கணபதி, ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி, மகா கணபதி, புவனேச கணபதி, நிருத்த கணபதி, ஊர்த்துவ கணபதி.
வீணை விநாயகர்
விநாயகரை கையில் மோதகம், கொழுக்கட்டை வைத்தபடி பார்த்திருப்பீர்கள். ஆனால், அவரை சரஸ்வதிக்குரிய வீணையை கைகளில் வைத்தபடி ஈரோடு அருகிலுள்ள பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் தரிசிக்கலாம். இங்கு அம்பாள் வேதநாயகி சன்னதி முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் இவர் சிற்ப வடிவமாக இருக்கிறார். புலிக்கால்களுடன் இருக்கும் இவருக்கென தனி வழிபாடு கிடையாது. அம்பாள் வேதநாயகியின் இடது காலடியிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இசைப் பயிற்சி பெறுபவர்கள் அம்பாள் சன்னதி முன்பு நின்று இவ்விரு விநாயகர்களையும் தரிசித்தால், இசைக்கலையில் சிறப்பான தேர்ச்சி பெறலாம் என்பது நம்பிக்கை.
அருகம்புல் அணிய ஏற்ற நட்சத்திரங்கள்
விநாயகருக்கு எல்லா நாளிலும் அருகம் புல் அணிவித்து வழிபடலாம் என்றாலும், கிழமைகளில் திங்கள் கிழமையும், நட்சத்திரங்களில் உத்திராடமும் மிகவும் உயர்ந்தது. விநாயகர் உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை ஆவார். இதுதவிர, அசுவதி, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை. புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, ஆகிய 16 நட்சத்திர நாட்களில் அருகம்புல் மாலை அணிவித்து வணங்கினால் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை.
அபிஷேக நட்சத்திரங்கள்
விநாயகருக்கு எந்தெந்த அபிஷேகம் என்னென்ன நட்சத்திரங்களில் செய்ய வேண்டும் தெரியுமா?
பாலபிஷேகம் - உத்திராடம்
சந்தன அபிஷேகம் - பரணி, ரோகிணி, புனர்பூசம், அஸ்தம், மூலம்
தேனபிஷேகம் - ரேவதி
திருநீறு அபிஷேகம் - மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம்
மஞ்சள் அபிஷேகம் - மிருகசீரிஷம், பூரம், அனுஷம்
செந்தூரக் காப்பு - திருவாதிரை
அன்னாபிஷேகம் - பூரம்
ஸ்வர்ண (தங்க இலை) அபிஷேகம் - திருவோணம்
விநாயகரின் ஐந்து கைகள்
விநாயகப்பெருமானுக்கு ஐந்து கைகள் உள்ளன. இதனால் இவர் ஐந்து கரத்தான் என அழைக்கப்படுகிறார். இந்த ஐந்து கைகளும் சிவாயநம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உணர்த்துகிறது.
அங்குசம் தாங்கிய வலது மேல் கை - சி
பாசம் பற்றிய இடது மேல் கை - வா
தந்தம் ஏந்திய வலது கை - ய
மோதகமுள்ள இடது கை - ந
துதிக்கை - ம
வெல்லப் பிள்ளையார்
விநாயகரை மஞ்சள், வெள்ளெருக்கு வேர் ஆகியவைகளில் செய்து வழிபடுவார்கள். அத்துடன் சாணம், புற்றுமண், வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் செய்து வழிபாடு செய்தால் மறுபிறப்பில்லா நிலையை அடையலாம் என புராணங்கள் கூறுகின்றன.
விநாயகர் விளக்கு
விநாயகர் சதுர்த்தியன்று கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விநாயகர் விளக்கேற்றி வழிபடலாம். இதற்காக விநாயகர் உருவத்துடன் அமைந்த விளக்குகள், குத்து விளக்கின் உச்சியில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற அமைப்பிலும் கிடைக்கிறது. விநாயகர் தன் கையில் விளக்கை பிடித்து, அதில் தும்பிக்கையை வைத்தபடி ஒரு விளக்கு வந்துள்ளது. பரந்த வயிற்றுடன் இருக்கும் விநாயகரின் வயிறு, உலகத்தை குறிக்கிறது. அதாவது ஜீவராசிகள் அனைத்தும் அவருக்குள் ஐக்கியம் உணர்த்தும் வகையில் இவ்விளக்கு உள்ளது.

கல்யாண வரம் தரும் கட்டை பிரம்மச்சாரி
தனக்கொருத்தி இல்லாமல் தனித்திருக்கும் சுவாமியை சுற்றிச்சுற்றி வந்து, எனக்கொருத்தி வேண்டுமென கேட்கிறார்கள் பிரம்மச்சாரிகள். கல்யாணம் செய்து கொள்ளாத இந்த கட்டைப் பிரம்மச்சாரியிடம் இதை கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது தெரியுமா? வள்ளியை மணம் முடிக்க முருகப்பெருமாள் பகீர தப்பிரயத்தனம் செய்து பார்த்தார். கதை நடக்கவில்லை. கடைசியில் அவர் கூப்பிட்டது தன் அண்ணனைத் தான்! அவர் யானை வடிவில் வந்தார். வள்ளியை விரட்டினார். அவள் பயந்து போய், வேடன் வடிவில் வந்த முருகனைத் தழுவி நின்று கொண்டாள். காதல் மலர்ந்தது. கல்யாணத்தில் முடிந்தது. தனக்கு கிடைக்காத ஒன்றை யாருக்கும் கிடைக்க விடக்கூடாது என்ற எண்ணமுள்ளவர்கள் தான் உலகத்தில் அதிகம். ஆனால், விநாயகரோ, தனக்கு இல்லாததை கூட பிறருக்கு தரும் அருள் வள்ளல். அதனால் தான் பிரம்மச்சாரிகள் அவரைத் தேடிப் போகிறார்கள்.

சடாரியை தலையில் வைப்பதன் தத்துவம்!

ஒரு குழந்தை கருப்பையில் இருந்து வெளியேறும் போது சடம் என்ற வாயு வெளியேறுகிறது. இந்த வாயு உலகமாயை என்னும் குடும்பப் பாச பிணைப்பில் மக்களை தள்ளிவிடும் சக்தி கொண்டது. ஆனால், ஒரே ஒருவர் மட்டும் மாயை என்னும் சக்தியை வென்றவராக பிறப்பின் போதே பகவானால் பூமிக்கு தரப்பட்டார். அவரே நம்மாழ்வார். பெருமாளின் பாதங்களுக்கு சமமானவர். எனவே அவரது பாதம் பொறித்த சடாரி என்னும் கலனை தலையில் சார்த்துகிறார்கள். இதனால் பாச பந்தங்களிலிருந்து மனிதன் விலகுவான். சடம் என்ற சொல்லில் இருந்து சடாரி என்ற வார்த்தை பிறந்தது. தினமும் சடாரியை தலையில் சார்த்தி பாச பந்தங்களை அறுத்து, விரைவில் இறைவன் திருவடியை அடையலாம்

கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடு!

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். பார்க்கும் பார்வை இயல்பாக இருந்து விட்டால் பாதிப்பு ஏதும் கிடையாது. அதே சமயம் பார்வையில் பொறாமை கலந்திருந்தால், அது ஒரு குடும்பத்தைப் பாதிக்கும் என்பது காலம் காலமான நம்பிக்கை. இதைத்தான் கண்திருஷ்டி என்கிறார்கள். குழந்தைக்கு திருஷ்டிபடக் கூடாது என்பதற்காக தாய் கன்னத்தில் திருஷ்டி பொட்டு இடுகிறாள். அகத்திய முனிவர் கண் திருஷ்டியில் இருந்து விடுபட, சுபதிருஷ்டி கணபதி என்ற மகா சக்தியை தோற்றுவித்தார். இது கணபதியின் 33 வது மூர்த்தமாகும். இவர் விஷ்ணுவின் அம்சமாக சங்கு சக்கரம், மூன்று கண்கள் (சிவாம்சம்), சூலம் (சக்தி அம்சம்), அனைத்து தெய்வங்களின் ஆயுதங்கள், சீறும் சிங்கம், முஞ்சூறு வாகனம் ஆகியவற்றுடன், லட்சுமிக்குரிய விரிந்த செந்தாமரையில் போர்க்கோலத்துடன் உதித்தார். இவரது தலையை சுற்றி ஒன்பது நாகங்களும், அக்னி பிழம்பும் உள்ளன. 51 கண்களைக் கொண்டுள்ளார். விஸ்வரூப வடிவில் ஸ்ரீ சுபதிருஷ்டி கணபதி என்ற பெயர் கொண்டுள்ளார். இவரை வீடு, வியாபார தலங்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் அலுவலகங்களில் வடக்கு திசை நோக்கி வைத்து வழிபட்டால் கண்திருஷ்டி விலகும் என்பது நம்பிக்கை. புதன்கிழமை இவருக்கு உகந்த நாளாகும்

கண்ணனின் அருள் கிடைக்க வேண்டுமா?

கண்ணனின் அருள் கிடைக்க வேண்டுமானால் அவன் அருளிய கீதையையும், அவரது லீலா வினோதங்களைக் குறித்து எழுதப்பட்ட ஸ்ரீமத்பாகவதம், ஆண்டாள் எழுதிய திருப்பாவை, ஆழ்வார்கள் எழுதிய நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். அவற்றைப் படிப்பவர்கள் கிருஷ்ண உணர்வை வெகுவிரைவில் எட்டி விடுவார்கள். கிருஷ்ணன் கோயிலுக்குச் செல்லும் போது, வெறுங்கையுடன் செல்லாமல், முடிந்த அளவுக்கு தீபமேற்ற எண்ணெய், மலர்கள், பழவகை, பாயாசம், வெண்ணெய் அல்லது நெய்யில் செய்த பண்டங்களை எடுத்துச் செல்ல வேண்டும். பகவத்கீதையின் 12ம் அத்தியாயமான பக்தி யோகத்தில், பகவான் எத்தகைய பக்தனை விரும்புகிறான் என்பதைப் பற்றி படிக்க வேண்டும். இதையெல்லாம் படிக்குமளவு கல்வியறிவும், நைவேத்யம் படைக்குமளவு பொருள் வசதியும் இல்லாதவர்கள், ஒரு துளசி இலையை அவனுக்கு அர்ப்பணம் செய்தால் போதும். ஓடிவந்து அருள் செய்வான் சின்னக்கண்ணன்.

தியானத்தின் பலன்

தியானம் உடல் ஆரோக்கியத்திற்காகவும், மன நலனுக்காகவும் செய்யப்படும் ஒரு மன ஒருமைப்பாட்டு பயிற்சி. தியானம், உடல் நலனுக்கு நல்லது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மன அழுக்கை போக்குகிறது. என்பது எல்லாம் தற்போது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது சாதாரணமாக உலக மக்கள் பழகுகின்ற தியானமாகும். ஆன்மிக வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில், ஆன்ம நலனுக்காக செய்யப்படும் தியானத்திற்கு உபாசனை என்று பெயர். ஆன்மிக ஒளி அல்லது ஆன்மிக ஞானம் பெறுவதுதான் உபாசனையின் முக்கிய நோக்கமாகும். இத்தகைய ஆன்மிகத்தியானத்திற்கு உயர்ந்தது மன ஒருமைப்பாடும், மனப்பக்குவமும் இருக்க வேண்டும். இந்த வகை ஆன்மிக தியானப்பாதை மிகவும் நீண்டது. ஒவ்வொரு அடியிலும் ஏராளமான தடைகளும், சந்தேகங்களும் ஏற்படும். பொறுமை, நம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய இவற்றின் மூலம் தான் இந்த தியானப்பாதையில் நாம் வெற்றி பெற முடியும்.
பிறந்தது புண்ணியமே! வாழ்வது சந்தோஷமே!
முதலில் தியானத்தில் கடவுளைக் கண்டோமா இல்லையா என்பதை விட்டு, மன அமைதியைப் பெறுவது எப்படி என்பதையும், சிறந்த முறையில் தியானம் செய்வது எப்படி என்பதையும் புரிந்து கொள்வோம். ஆண்டவனை அடைய அனேக வழிகள் உண்டு. அதில் தேர்ந்து, தெளிந்த வழி எது? தியான நேரம் தவிர, மற்ற நேரங்களில் அமைதியாக இருக்க முடியாதது ஏன்? ஆன்மிக இதழில் வரும் தொடர் கட்டுரை ஆன்மிக செயல்முறை, வழிகாட்டவும் உங்களுக்கு அனைத்து வெற்றிகளையும் தரவும் தான். ஏதோ வழியால் நாம் அனைவருமே ஆன்மிக நாட்டம் கொண்டு தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகாவில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் பலனளித்தது எவ்வளவு? முதலில் தியானத்தில் கடவுளைக் கண்டோமா இல்லையா என்பதைவிட்டு, மன அமைதியைப் பெறுவது எப்படி என்பதையும், சிறந்த முறையில் தியானம் செய்வது எப்படி என்பதையும் புரிந்து கொள்வோம்.
தியான நேரத்திலும் கூட சொந்தப் பிரச்சனை, தொழில் பிரச்சனை, குடும்ப பிரச்சனை என்றே எண்ணங்கள் வெளிப்படுகிறது என்பதை எப்படி வெல்லலாம் என்பதை கற்றுக் கொள்வோம். உடல் சரியாக இருந்தால் பத்மாசனம் சரிதான். இடுப்பு, மூட்டுவலி இருப்பவர்கள் அடம்பிடித்து பத்மாசனம் போட முயல்வது சரியில்லை. தனி அறை இல்லையெனில் அறையின் ஒரு மூலையை தேர்ந்தெடுங்கள். சுத்தமாக வைத்திருங்கள். வெள்ளை துணியை விரிக்கவும். குருவின் படத்தை முன் வைக்கவும். நீங்கள் எவ்விதம் மூச்சு விடுகிறீர்கள் என்பதை கவனிக்கவும். முதுகு, முடிந்தவரை நிமிர்ந்து உட்காரவும். நிதானமாக மூச்சை உள்ளிழுத்து விடவும். முயற்சி, சிரமம் இன்றி சுவாசிக்கவும், தலை, கழுத்து, கை, நெஞ்சு, முதுகு என கால்விரல் வரை நினைத்து சுவாசிக்கவும். எத்தனை என்பது தேவையில்லை. சிரமமற்ற, எளிதான சுவாசமே முக்கியம். தளர்வான உடை அணியவும். இப்போது உங்களின் அனைத்து பிரச்சனைகளையும் நினைவு கூரவும். சொந்தப் பிரச்னை, குடும்பம், தொழில், வேலை என அனைத்தையும் நினைத்துப் பார்க்கவும். பின் ஒவ்வொன்றாக வெளியேற்றவும். சுவாசிக்கும் போது ஒவ்வொரு பிரச்னையையும் வெளியே தள்ளுவதாக எண்ணி சுவாசிக்கவும். இதை முறைப்படி செய்தால் 5 நிமிடத்தில் நிச்சயமான ரிலாக்ஸேஷன் கிடைப்பதை உணரலாம்.
தியானத்தின் பலன்
கண்ணை மூடிக்கொண்டு ஓம் கேசட்டைப் போட்டுக் கொண்டு தியானம் செய்கிறார்கள் என்றால் அதனால் நிறையவே பலன் இருக்கிறது. ஏனெனில், சிவபெருமான் தவத்தில் இருப்பதாகப் புராணங்களில் படிக்கிறோம். (அந்த தவத்தைக் கலைக்கப் போய், மன்மதன் மாண்ட கதை நமக்குத் தெரியும்). மகாவிஷ்ணு சயனத்தில் இருக்கும் போது கண் மூடியிருக்கிறார். அசுரர்கள் கூட தவம் செய்த பிறகு தான் பலன்களை அடைந்துள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் மனம் கட்டுப்படுகிறது. மனம் கட்டுப்பாட்டால் ஆசை குறைகிறது. ஆசை குறைந்தால் உலகில் பிரச்சனையே இல்லை. உழைப்பது மூன்று வேளை சாப்பாட்டுக்கும், கடவுளின் கங்கர்யத்திற்கும் மட்டும் போதும் என நினைத்து விட்டால் ஒருவனுக்கு ஏது கஷ்டம்?

எந்த இடத்தில் எப்படி நீராட வேண்டும்?

ஸ்நானம் என்றால் நதியில் நீராடுவதும் அல்லது பக்கெட்டில் இருந்து எடுத்து உடலில் ஊற்றிக்கொள்வதும் பளிச் சென்று நம் நினைவுக்கு வரும். ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்களில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது. ஸ்நானங்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்கிய ஸ்நானம், கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம் மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.
க்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதுதான் க்ரியா ஸ்நானம். நதிகளில் நீராடும்போது, நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.
காம்ய ஸ்நானம்: ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில ÷க்ஷத்திரத்தில் இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.
நைமித்திக ஸ்நானம்: சூரிய கிரகணம், சந்திர கிரகணம், துக்கத் தீட்டு, பிரசவத் தீட்டு, க்ஷவரத் தீட்டு, தம்பதியர் சேர்க்கைத் தீட்டு இவற்றுக்காகச் செய்யப்படும் ஸ்நானமே நைமித்திக ஸ்நானம் ஆகும். இந்தத் தீட்டைக் களைய, குளங்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு நீராட நேர்ந்தால், கிழக்கு நோக்கியபடி நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். அதைத் தவிர, கிணற்றங்கரையிலோ பாத்ரூமிலோ குளிப்பவர்கள், கிழக்கு முகமாகப் பார்த்தவண்ணம் ஸ்நானம் செய்ய வேண்டும்.
க்ரியாங்க ஸ்நானம்: ஹோமம், ஜபம், பித்ருகர்மா முதலியவை செய்வதற்காக நீராடுவதுதான் க்ரியாங்க ஸ்நானம். ஹோமம், ஜபம் முதலியவை செய்வதை முன்னிட்டு, ஸ்நானம் செய்யும்போது கிழக்கு திக்கைப் பார்த்தும், பித்ருகர்மா செய்யும்போது தெற்கு திக்கைப் பார்த்தபடியும் நின்று கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.
மலாபாஹர்ஷண ஸ்நானம்: சரும வியாதிகளைப் போக்கிக் கொள்ள தைலங்கள் தேய்த்துக்கொண்டு குளித்தல் மற்றும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு மலாபாஹர்ஷண ஸ்நானம் என்று பெயர். இந்த ஸ்நானத்துக்கும் கிழக்கு நோக்கித்தான் நீராடவேண்டும். சூரிய உதயத்துக்குப் பின் உச்சிவேளைப் பொழுதுக்கு ஸ்நானம் செய்ய வேண்டும்.
நித்ய ஸ்நானம்: அன்றாடம் உடலிலுள்ள அழுக்கைப் போக்கிக் கொள்வதற்காச் செய்யப்படும் ஸ்நானமே நித்ய ஸ்நானம் எனப்படுகிறது. சாஸ்திரத்தில் தினமும் மூன்று முறை ஸ்நானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
கௌண ஸ்நானம்: மேற்கூறிய முக்கிய ஸ்நானங்களுக்குப் பதிலாக, தேக ஆரோக்கியம் காரணமாக சாஸ்திரத்தில் கூறிய முறைப்படி அல்லாமல் மாற்று முறையில் செய்யப்படுவதுதான் கௌணஸ்நானம். உதாரணமாக, தலையில் ஜலம் ஊற்றிக்கொள்ள உடல்நலம் இடம் தராமல் கழுத்தோடு குளிப்பது அல்லது அதுவும் முடியாமல் மஞ்சள் கலந்த நீரை ப்ரோக்ஷித்துக்கொண்டு விபூதியை இட்டுக்கொள்வது போன்றவை முக்கிய விதியைத் தவிர்த்து, கௌண விதியை அனுசரித்து மேற்கொள்ளும் முறையாகும். சாஸ்திர முறைகள் ஒருபக்கம் இருக்க, லௌகீகமாக பஞ்ச ஸ்நானங்கள் என்பதும் உண்டு. அதாவது, பஞ்சபூதங்களின் சக்திகள் நம்மை இயக்குகின்றன என்பதை பஞ்ச ஸ்நானங்களின் மூலம் லோகாயதமாக அறிந்துகொள்ள முடிகிறது.
1. அக்னி சம்பந்தமுடைய பஸ்மத்திலிருந்து விபூதி கிடைப்பதால், விபூதி தரித்துக்கொள்வதை ஆக்நேய ஸ்நானம் என்றும் தேயுவுக்கு சம்பந்தமாகவும் கூறப்படுகிறது.
2. பசுக்கள் செல்லும்போது அவற்றின் குளம்படிகளிலிருந்து கிளம்பும் மண் காற்றின் மூலம் மேலே படுவது சிரேஷ்டமாகக் கூறப்படுகின்றது. அதற்கு வாயவ்ய ஸ்நானம் என்று பெயர். இது, வாயுவின் பெயரால் பெறப்படும் ஸ்நானம்.
3. சாதாரணமாக, வெறுமனே நீரை மட்டும் தேகத்தில் விட்டுக்கொண்டு குளிப்பது வாருண ஸ்நானம் அதாவது, வாருணம்தான் அப்பு என்பது.
4. மந்திரங்கள் யாவும் ஆகாசத்தில் ஒலியாக வியாபித்திருக்கின்றன. பூஜைகளின்போதும் ஹோமங்களின்போதும், ஒரு கலசத்தில் இருக்கும் நீரை மந்திரங்கள் கூறிய படி தர்ப்பையால் புரோகிதர் நம்மேல் தெளிப்பதற்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர். பஞ்சபூதங்களில் ஆகாயத்துக்கானது இது.
5. நடக்கும்போது பசுக்களின் குளம்படி மண்ணானது வாயுதேவனின் உதவியோடு நம்மேல் பட்டாலும், அந்த மண்ணானது (கோ தூளி) ஒருவரைப் புனிதமாக்குவதாகப் கூறப்படுகிறது. மேலும், ரோக நிவாரணத்துக்காக மேனியில் பூசப்படும் புற்றுமண் போன்றவையால் இதை மிருத்திகை ஸ்நானம் என்கிறார்கள். இவை இரண்டுமே ப்ருத்விக்காகக் கூறப்படுகிறது. இவையெல்லாவற்றையும்விட விசேஷமாகவும் ஸ்ரேஷ்டமாகவும் சொல்லப்படுவது திவ்ய ஸ்நானம் என்பது. அதாவது, வெயில் காயும்போதே சில சமயங்களில் மழைத் தூறல்களும் சம்பவிக்கும். அப்போதைய மழைத்துளிகள் தேவலோகத்தில் இருந்துவரும் தீர்த்தத்துக்குச் சமமாகக் கருதப்படுகின்றது. அப்படிப்பட்ட வேளையில் எல்லோரும் அந்தப் புனித நீரில், அதாவது, திவ்ய ஸ்நானத்தில் நனைந்து நம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா கூறியிருக்கிறார்.
இது பெண்களுக்கு மட்டும்
விசேஷ தினங்களைத் தவிர, மற்ற நாட்களில் பெண்கள் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மஞ்சள் தண்ணீரை, தலைக்கு புரோக்ஷணம் செய்து கொண்டாலே போதும் என்று சாஸ்திரத்தில் கூறியிருக்கிறது என்கிற தகவலையும் ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா தெரியப்படுத்தியிருக்கிறார். ஸ்நானம் என்பது, உடல் அழுக்கை மட்டும் போக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு எனக் கொள்ளக் கூடாது. ஆன்மாவின் பாவங்களைக் களைவதற்காகவும் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்ப என்பதை மனதில் ஆழமாக பதியவைத்துக்கொண்டு நீராட வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்நானம் செய்யும்பொழுதும்,
கங்கேச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு
என்கிற ஸ்லோகத்தைக் கூறி ஸ்நானம் செய்தால், ஏழு புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.

சப்தவிடங்கத்தலங்கள்

சப்தவிடங்கத்தலங்கள் திருவாரூர், நாகபட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ளன. சப்தம் என்றால் ஏழு. டங்கம் என்றால் உளி. வி என்றால் செதுக்காதது. உளியால் செதுக்காத சுயம்பு மூர்த்தங்கள் உள்ள தலங்கள் இல்லை. இந்த ஏழு தலங்களிலும் தியாகராஜரே அருள்பாலிப்பார். அவருக்கு வெவ்வேறு பெயரும், நடனமும் உண்டு.
1. திருவாரூர் - வீதிவிடங்கர் - அசபா நடனம் (மேலும் கீழுமாக ஏறியும், இறங்கியும் முன்னும் பின்னுமாகச் சென்று வந்தும், அடியவர்கள் மந்திரத்தை மானசீகமாக ஏற்கும் நிலையில் உள்ளம் மகிழ்ந்து ஆடுவது.)
2. நாகப்பட்டினம் - சுந்தரவிடங்கர் - பாராவாரகரங்க நடனம் (கடல் அலைகள் அசைவதுபோல் ஆடுவது.)
3. திருக்காறாயில் - ஆதிவிடங்கர் - குக்குட நடனம் (கோழி நடப்பது போல் ஆடுவது.)
4. திருக்கோளிலி - அவனிவிடங்கர் - பிருங்க நடனம் (மலருக்குள் வண்டு குடைந்து செல்வது போல் ஆடுவது.)
5. திருவாய்மூர் - நீலவிடங்கர் - கமல நடனம் (நீர் நிறைந்த குளத்தில் நிற்கும் தாமரை மலர் காற்றில் அசைந்தாடுவது போல் மெல்ல ஆடுவது.)
6. திருமறைக்காடு - புவனிவிடங்கர் - அம்ஸபாத நடனம் (அம்ஸம் என்பது அன்னம், பாதம் என்பது கால், அன்னம் நடப்பது போன்று ஆடும் நடனம்.)
7. திருநள்ளாறு - தகவிடங்கர் - உன்மத்த நடனம் (பக்தர்களின் அன்பைத் தாங்க முடியாமல் பித்து பிடித்தது போல் ஆடுவது.)

ஆடியில் அம்பிகை நேரில் வருவாள்

தெய்வீகமான ஆடி : சூரியன் தெற்கு நோக்கி, தன் பயணத்தைத் துவக்கும் தட்சிணாயனத்தின் தொடக்க மாதமான ஆடியில், மாதம் முழுக்க தெய்வீக விழாக்கள் சிறப்பாக இருக்கும். ஆடி விருந்து என்று புதுமணத்தம்பதியருக்கு ஆடிச்சீர் அளித்து விருந்து கொடுப்பர். முதல் ஆடி, நடுஆடி, கடைசிஆடி ஆகிய மூன்று நாட்களும் விருந்துக்குரிய நாளாக உள்ளது. ஆடிசெவ்வாய், ஆடிவெள்ளி ஆகிய நாட்கள் அம்பிகை, முருகப்பெருமானுக்கு உகந்தவை. ஆடிப்பூரம் ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரம். இவைதவிர, ஆடிவெள்ளி, செவ்வாய், ஆடிஅமாவாசை, ஆடிப்பெருக்கு, கருடபஞ்சமி, வரலட்சுமி விரதம், மகாசங்கடஹர சதுர்த்தி ஆகிய விழாக்கள் வருகின்றன. மொத்தத்தில் வழிபாட்டுக்குரிய தெய்வீக மாதம் ஆடி என்றால் மிகையில்லை.
அம்பிகைக்குரிய மாதம் : ஆடிமாதத்தை அம்பிகை மாதம் என்பர். சுவாமியும், அம்பாளுமாக வீற்றிருக்கும் கோயில்களில் முளைகொட்டுத்திருவிழா இந்த மாதம் தான் நடைபெறும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா பத்துநாட்கள் நடக்கிறது. இவ்விழா மீனாட்சியம்மனுக்குரிய தனி விழாவாகும். அம்மன் கோயிலுக்குள் இருக்கும் ஆடிவீதியில் வாகனத்தில் பவனி வருவதை தரிசிக்கலாம். விழா நடக்கும் மாதத்தின் பெயரையே இந்த வீதிக்கும் சூட்டியுள்ளனர் முன்னோர். ஆடிப்பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருள்வார். அங்கு மீனாட்சிக்கும், உற்சவருக்கும் ஒரே சமயத்தில் சடங்கு உற்சவம் (பூப்புனித நீராட்டு) நடத்துவர்.
தட்சிணாயன விழாக்கள் : ஆடிமுதல் மார்கழி வரை ஆறு மாதம் தேவலோகத்தில் இரவுப்பொழுது. தை முதல் ஆனி வரை பகல்பொழுது. ஆடியிலிருந்து சூரியன் தன் சுற்றுப்பாதையை தெற்கு நோக்கிச் செலுத்துவதால் இக்காலத்தை தட்சிணாயனம் என்று சொல்வர். "தட்சிணாயனம் என்பதற்கு "தெற்கு நோக்கிய பயணம் என்று பொருள். இதில் ஆடியில் மாரி, காளி, பேச்சி போன்ற பெண் தெய்வ வழிபாடுகள் கிராமப்புறங்களில் சிறப்பாக நடக்கும். அம்பாளுக்குய தனிவிழாவான நவராத்திரி புரட்டாசியில் கொண்டாடப்படுகிறது. நாடு வளம் பெற மழைவளமும், நல்ல மணவாழ்வு பெற கணவன் அமையவும் கன்னிப்பெண்கள் மேற்கொள்ளும் பாவைநோன்பும் தட்சிணாயனத்தில் வரும் மார்கழியில் இடம்பெறுகிறது.
மனசுக்கு புடிச்ச மாப்பிள்ளை அமைய... : கன்னிப்பெண்களும், சுமங்கலிப்பெண்களும் கடைபிடிக்கும் விரதம் அவ்வையார் விரதம். இவ்விரதமிருக்கும் பெண்களைப் பார்க்க ஆண்களை அனுமதிப்பதில்லை. மாவை உப்பில்லாமல் பிசைந்து கொழுக்கட்டை செய்து வேப்பிலை, புளிய இலை, புங்கஇலைகளைப் பரப்பி அதில் கொழுக்கட்டையைப் படைப்பர். நள்ளிரவில் நடத்தப்படும் இவ்வழிபாடு வயதான சுமங்கலியின் தலைமையில் நடக்கும். அப்போது அப்பெண் அவ்வையாரின் வரலாற்றை மற்ற பெண்களுக்கு எடுத்துச் சொல்வார். ஆடிச் செவ்வாயன்று இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மரபு. தை, மாசி செவ்வாய்க்கிழமைகளிலும் அவ்வையார் விரதம் மேற்கொள்வதுண்டு. இதனை சுலவடையாக" மறந்தா மாசி, தப்பினா தை, அசந்தா ஆடி என்பர். இவ்விரதம் மேற்கொள்ளும் கன்னியருக்கு மனதிற்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்பது ஐதீகம்.
மாங்கல்ய பலத்திற்கான விரதம் : ஆடி அல்லது ஆவணிமாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளும் விரதம் வரலட்சுமி விரதம். ஸ்கந்த புராணத்தில், இவ்விரதத்தின் மகிமை பற்றி சிவபெருமான் விளக்குகிறார். இந்த ஆண்டு ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட்11) இவ்விரதம் அனுசரிக்கப்படுகிறது. பூஜையறையில் பசுஞ்சாணத்தால் மெழுகி மாக்கோலமிட வேண்டும். அரிசியைப் பரப்பி பூரணகும்பம் வைத்து லட்சுமியை ஆவாஹனம் செய்யவேண்டும். இயலாதவர்கள் லட்சுமி படம் வைத்து மலர் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். நெய் விளக்கேற்றி சர்க்கரைப்பொங்கல், இனிப்புவகைகளை நைவேத்யம் செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் நோன்புக்கயிறு கட்டுவது அவசியம். வீட்டுக்கு வந்த சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும். பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால், கணவருக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும். இந்நாள் புதுநகை, புதுப்பொருட்கள் வாங்க உகந்தது.
முருகனுக்கு ஆடிக்கிருத்திகை : ஆடியில் வரும் கார்த்திகை முருகப்பெருமானுக்கு உகந்த சிறப்பான நாளாகப் போற்றப்படுகிறது. இதை "ஆடிக்கிருத்திகை என்பர். இந்நாளில் குன்றில் குடியிருக்கும் குமரப்பெருமானை வேண்டி கிரிவலம் வருதல் சிறப்பு. முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரம் விசாகம் என்றாலும், இவருக்குரிய விரதமாக கார்த்திகை நட்சத்திரம் அமைந்துள்ளது. தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு நன்றி தெரிவிக்கும் அடிப்படையில், இந்நாளில் முருகப்பெருமான், தன்னை வழிபடுவோருக்கு வேண்டிய வரங்களைத் தந்தருள்வார். சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், கார்த்திகைப்பெண்கள் சிலைவடிவில் காட்சியளிக்கின்றனர். ஆடிக்கிருத்திகை நாளில் இவர்களையும் வழிபட்டு வரலாம். இவ்வாண்டு, ஜூலை25ல் ஆடிக் கிருத்திகை நிகழ்கிறது.
நகை வாங்க நல்லநாள் : தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக்கூடாது என்பார்கள். தண்ணீர் வாழ்விற்கு ஆதாரமாக இருக்கிறது. நீர்நிலைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆடி மாதத்தில் "ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரியை பெண்ணாக பாவித்து மஞ்சள், குங்குமம், மலர்களால் பூஜிப்பர். புதுமணத்தம்பதியர் ஆற்றங்கரையில் நீராடி மாங்கல்யத்தைப் புதுகயிற்றில் கட்டிக் கொள்ளும் சடங்கு நடைபெறும். காவிரிக்கரையோரத்தில் மட்டுமில்லாமல், தீர்த்தம், ஆறு இருக்குமிடமெல்லாம் ஆடி18ல் (ஆக. 3ல்) நீராடி நதிகளை காவிரி அன்னையாக கருதி வழிபடும் வழக்கமும் உண்டு. நதி, குளக்கரைகளில் தீபம் மிதக்க விடும் வழக்கம் அந்நாளில் இருந்தது. நதித்தாயை வணங்கினால் இயற்கைச்சூழல் பாதுகாப்பும், விவசாயத்தில் நல்ல லாபமும் கிடைக்கும். ஆடியில் நகை, புதுப்பொருட்கள் வாங்க நன்னாள். தொழில்களும் பெருகி வளரும் என்ற அடிப்படையில், இந்நாளில் தொழிலும் துவங்குவதுண்டு.
ஆடியில் திருக்கல்யாணம் : ராமபிரான் வழிபட்ட சிவபெருமான் அருள்புரியும் ராமேஸ்வரம் சிறந்த பாவநிவர்த்தி தலமாகத் திகழ்கிறது. சைவமும், வைணவமும் சங்கமிக்கும் இத்தலத்தில், பர்வதவர்த்தினி அம்மனுக்கும், ராமநாதசுவாமிக்கும் ஆடியில் திருக்கல்யாண விழா(ஆக.4) சிறப்பாக நடக்கிறது. காசியாத்திரை சென்று வந்த பக்தர்கள் ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடுவதை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். மற்ற மாதங்களைக் காட்டிலும் ஆடிமாதம் முழுவதும் இங்கு தீர்த்த நீராடுதல் சிறப்பானதாகும். பிதுர்வழிபாட்டுக்குரிய தலமாக ராமேஸ்வரம் திகழ்வதால், ஆடி அமாவாசையன்று இங்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு.
ஆடியே வருக .... ஆனந்தம் தருக!
ஆடி மாதப் பிறப்பு- தட்சிணாயண புண்ணிய காலம், ஆடிப் பண்டிகை என்று தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. மார்கழியைப் போல ஆடி மாதமும் தெய்வீக மாதமாகும். சுப காரியங்கள் செய்வது தவிர்க்கப்பட்டு, இறைவழிபாட்டில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் மாதம். தட்சிணாயண சமயத்தில் சூரியன் பூமத்திய ரேகையின் தெற்குப் பக்கத்தில் சஞ்சரிக்கும்போது, வட பாகத்தில் வெயில் கடுமையாக இருக்காது. காற்று, மழை, பனி என்று பருவநிலை காணப்படும். ஆடி மாதம் அம்மனின் மாதமாகவும் கருதப்படுகிறது. இம்மாதத்தில் அம்மனின் அருள் பூரணமாக வெளிப்படும். அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, அம்மனுக்குப் பொங்கல் இடுதல், கூழ் காய்ச்சி ஊற்றுதல் என நிவேதனம் செய்து அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்து அவர்கள் பசி நீக்கும் மாதமும் இதுவே! ஆடி மாதத்தில்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிப் பாத்திகளுக்கு நடுவே பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தருக்கு அரங்கனையே ஆளப்போகும் ஆண்டாள் கிடைத்தாள்.
ஆடி என்பது ஒரு அசுரனின் பெயர். ஒருமுறை உமையம்மை, சிவபெருமானை விட்டு விலகி இருந்தபோது, சிவபெருமானது தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு இந்த அசுரன் பாம்புருவில் உள்ளே நுழைந்து பார்வதி தேவியாக உருமாறி, சிவபெருமான் அருகில் சென்றான். தன்னோடு மகிழ்ந்திருக்க வந்திருப்பது அசுரன் என்பதை உணர்ந்த இறைவன், அவனோடு களித்திருப்பது போல் உறவாடி அவனைக் கொன்றார். இந்த நிகழ்வின் நினைவாகவே இந்த மாதம் ஆடி எனப் பெயர் பெற்றது. ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியர் ஒன்றாக இருக்கக்கூடாது என்ற மரபு பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனெனில், ஆடி மாதத்தில் கர்ப்பம் தரித்தால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். அது கடுமையான வெயில் காலம். ஆகையால் தாய், குழந்தை இருவருக்குமே ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கயிலையில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் இருந்த சுந்தரர் பூவுலகில் நம்பியாரூரார் என்ற பெயருடன் சிவபெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட நாள் ஆடி மாத மூல நட்சத்திர நாளில்தான் ! இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட ஆடி மாதத்தில், அனைவரையும் வணங்கி வாழ்வில் வளம் பல பெறுவோம்.
கோமதிக்கு ஆடித்தபசு : அம்பிகை தவமிருந்த அற்புத தலம் சங்கரன்கோவில். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இக்கோயிலில், அம்பாளின் தவத்தை மெச்சிய இறைவன் அரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் சங்கரநாராயணராக காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சி ஆடிபவுர்ணமியில் நிகழ்ந்ததாக ஐதீகம். ஆடித்திருவிழாவின் 12ம் நாளில் "ஆடித்தபசு என்னும் பெயரில் இவ்விழா நடைபெறும். அன்று கோமதி அம்பாளுக்காக ரிஷபவாகனத்தில் சங்கநாராயணர் எழுந்தருள்வார். இவ்வாண்டு ஆகஸ்ட்11ல் இவ்விழா நடக்கிறது.
ஆண்டாளின் ஆடிப்பூரம் : பன்னிரு ஆழ்வார்களில் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகத் திருமாலைப் பூமாலையாலும், பாமாலையாலும் துதிக்கும் பேறு பெற்றவள் ஆண்டாள். இவள் அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம். உயிர்கள் மீது கொண்ட கருணையால் அவர்களுக்கு அருள்பாலிக்க பூமாதேவி, ஆண்டாள் நாச்சியாராக பிறப்பெடுத்தாள். வேதங்களின் வித்தாக விளங்கும் திருப்பாவையை நமக்கு வழங்கினாள். திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் உள்ளன. "" ஏழேழு பிறவிக்கும் கண்ணா நீயே எனக்கு உற்ற உறவு என பாவைப்பாடலில் வலியுறுத்துகிறாள். ஆயிரமாயிரம் ஆபரணம் இருந்தாலும், கழுத்துக்கு அணிகலனான மாங்கல்யம் தான் உயர்ந்த ஆபரணம். இளம் பெண்களுக்கு மனதிற்கேற்ற நல்ல கணவன் வாய்க்க, ஆடிப்பூர நன்னாளில் ஆண்டாளை அவசியம் வணங்க வேண்டும். இவ்வாண்டு ஆகஸ்ட்2ல் ஆடிப்பூரம் நிகழ்கிறது.
மகா சங்கடஹர சதுர்த்தி : விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தியும் உகந்ததாகும். இதனைச் சங்கடஹரசதுர்த்தி என்று சொல்வர். ஆவணியில் விநாயகர் சதுர்த்திக்கு முன்வரும் பெரிய சதுர்த்தியே மகா சங்கடஹர சதுர்த்தியாகும். இந்த ஆண்டு இச் சதுர்த்தி ஆடியின் கடைசி நாளான ஆக., 17ல் வருகிறது. ஆற்றல், அறிவின் அடையாளமாக விநாயகர் திகழ்வதால், இவரை "மேலான தலைவர் என்னும் பொருளில் "விநாயகர் என்று குறிப்பிடுகிறோம். செய்யும் செயல்கள் தடையின்றி நிறைவேற விநாயருக்கு உகந்த சங்கடஹரசதுர்த்தி வழிபாடு அவசியம்.

பூஜைக்குரிய பூக்களும் காலங்களும்

கொன்றை, செவ்வந்தி, செண்பகம் முதலிய மஞ்சள் நிற பூக்கள் விடியற்காலை பூஜைக்குரியவை. செந்தாமரை, செவ்வரளி, பாதிரி முதலிய சிவப்பு நிற பூக்கள் பகல் பூஜைக்குரியவை. மல்லிகை, முல்லை, தும்பை முதலிய வெள்ளை நிற பூக்கள் மாலை நேர பூஜைக்குரியவை. நீலோற்பவம் எனப்படும் பூ தற்போது உபயோகத்தில் இல்லை. இதை தவிர வேறு எந்த நீல நிற பூவும் பூஜைக்கு தகுதியற்றது. பொதுவாக மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிற பூக்கள் தான் பூஜைக்க உகந்ததாக கருதப்படுகிறது.

விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்?

விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும் என விநாயகர் புராணம் கூறுகிறது. மகப்பேறு பெற மருத இலை, எதிரிகளின் தொல்லை நீங்க அரச இலை, இதர துன்பங்கள் நீங்க அகத்தி இலை, சுகமான வாழ்வு பெற வில்வ இலை, சுகமான வாழ்வு பெற வெள்ளெருக்கு இலை, புகழ் பெற மாதுளை இலை, லட்சுமி கடாட்சம் பெற கண்டங்கத்திரி இலை ஆகியவற்றால் பூஜிக்க வேண்டும். அருகம்புல், செம்பருத்தி, வெள்ளெருக்கு, மாவிலை இவைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் இவை எல்லாவற்றையும் ஒன்றாக அடையலாம்.

துர்க்கையை எவ்வாறு வழிபட வேண்டும்?

ராகு கேது பெயர்ச்சியான ஜாதகரீதியாக சில சிரமங்கள் வருமானால், துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.
ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.
திங்கள் : திங்கள்கிழமைகளில் காலை 7.30-9க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.
செவ்வாய் : ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதன் : மதியம் 12 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.
வியாழன் : வியாழக்கிழமைகளில் மதியம் 1.30-3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
வெள்ளி : வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.
சனி : காலை 9-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.

வாரணாசி (காசி) ன் சிறப்பு

அலகாபாத் நகலிருந்து 123 கி.மீ. தூரத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள புராண சிறப்புள்ள தொண்மையான நகர். கங்கையின் வடக்கே அருணை நதி கலக்கிறது. தெற்கே அஸி நதி கலக்கிறது. இந்த இரண்டு எல்லைகளுக்கு நடுவில் உள்ள நகரம் தான் வாரணாசி என்று அழைக்கப்படுகிறது. காசியின் நீளம் கங்கை கரையில் ஓரமாக நான்கு மைல்கள். இதில் அறுபத்து நான்கு ஸ்நான படித்துறைகள் இருக்கின்றன. அவற்றில் உயர்ந்த மாளிகைகளும், ஆலயங்களும் உள்ளன. ஐந்து ஸ்நான கட்டங்களை முக்கியமானதாக குறிப்பிடுகிறார்கள். அவை-
1. அஸி கட்டம்,
2. தசாசுவமேத கட்டம்,
3. வருணா கட்டம்,
4. பஞ்சகங்கா கட்டம்,
5. மணிகர்ணிகா கட்டம். - இந்த இடுகாட்டில் தான் உயிர்களை சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பதாக சிவன், விஷ்ணுவிடம் ஒரு சத்தியம் செய்து கொடுத்தார்.
ஐந்து கட்டங்களிலும் படகில் பயணம் செய்து கங்கையில் ஸ்நானம் செய்து வரவேண்டும். மணிகர்ணிகா காட் படித்துறையில் நீராடுவதும், பித்ரு காரியங்களை செய்வதும் மிகவும் விசேஷம். மணிகர்ணிகா காட் ஆதிசங்கரர் மணிகர்னிகாஷ்டகத்தில் மிகச் சிறப்பாக கூறியுள்ளார். ஆகையால் இங்கு சிறுதானங்கள் செய்வது மேன்மையை தரும். அவற்றின் பலன் பல மடங்கு உயரும் என்றும் கூறுவார்கள். ஆகையால் ஏராளமான யாத்திரியர்கள் இங்கே அன்னதானம் முதல் கோதானம் வரையில் செய்வதுண்டு. கங்கையில் நீராடி காரியங்களை செய்பவர்கள் பிறர்மீது படாமல் மடியாக இருப்பதில்லை. யார் மீது யாரும் படலாம். படகோட்டி, பசுமாட்டை அழைத்து வருபவர், பண்டா யார் பட்டாலும், புனிதம் குறைவதில்லை. அனைவரும் ஒன்றே என்ற தத்துவத்தை இங்கே நிதர்சனமாக காண்கின்றோம். காசியில் இக்காரியங்களை செய்ய வருபவர்களுக்கு உதவ பல தென்னிந்திய புரோகிதர்கள் உள்ளனர். சங்கரமடம், குமரகுருபரர் மடம், திருப்பனந்தாள் மடம் போன்றவை உள்ளன. எந்தவொரு ஐந்தும் தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து சிவலோகம் செல்வதாக ஐதீகம். ஆகையால் ஏராளமான மக்கள் காசியிலே இறந்துவிட தங்கள் கடைசி காலத்தை இங்கேயே கழிக்கின்றனர்.

ஆறு சமய வழிபாடு

ஆதிசங்கரர் ஆறு சமயங்களைத் தொகுத்து, வகுத்து சிறப்பித்தார். இது ஷண்மத வழிபாடு எனப்படும். இறைவழிபாட்டிற்குரிய மாதமான மார்கழி மாதத்தில் ஆறு சமயங்களுக்கு உரிய திருநாள்கள் வருவது சிறப்பு.
காணாபத்யம்-கணபதி வழிபாடு தினமும் காலையில் சாணப் பிள்ளையாரை நிறுத்தி கணபதியை வழிபடுகின்றனர்.
சைவம்-சிவ வழிபாடு-திருவாதிரை
வைணவம்-விஷ்ணு வழிபாடு-வைகுண்ட ஏகாதசி
கௌமாரம்-முருக வழிபாடு-படி உற்சவம்
சாக்தம்-சக்தி வழிபாடு-பாவை நோன்பு
சௌரம்-சூரிய வழிபாடு- தைப் பொங்கலன்று சூரியனை வழிபடுகின்றனர். மார்கழி இறுதி நாளன்று கொண்டாடப்படுவது போகிப் பண்டிகை. இதுவே தைப்பொங்கல் விழாவின் தொடக்க நாளாகும்

திருவேணி சங்கமம் (பிரயாகை) என்பதன் பொருள் தெரியுமா?

வேணி என்றால் நதி என்பது பொருள். மூன்று நதிகள் (கங்கை, யமுனை, சரஸ்வதி) சங்கமத்தில் சென்று நீராடுகிறோம். அதன் மூலம் நமக்கும் நமது முன்னோர்களுக்கும் புண்ணியம் கிடைக்கச் செய்கிறோம். கங்கா நதி நீர், வெண்மையாகவும், யமுனை நதி நீர், கருணையாகவும், சரஸ்வதி அந்தர்வாகினியாக கண்ணுக்குத் தெரியாமல் கீழே ஒடிக்கலப்பதாக ஐதீகம். இத்தகைய திரிவேணி சங்கமத்தில், ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி நீராடிய புண்ணிய பூமி. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளாகவும், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அர்த்கும்பமேளா திருவிழாவும், சிறப்பாக நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் இங்கே வந்து முன்னோர்களை வணங்கி நீராடுவர். பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம் என்ற ஒரு வழக்கு உண்டு. இவற்றின் முக்கிய நோக்கம்,பாவம் களைவது. பாவம் அண்டாமல் தடுப்பது, பாவம் நீங்கி இறையோடு ஒன்றாவது ஆகும். முண்டம் என்பது முடி எடுத்தல். உடலில் வளரும் கேசங்கள் தாமாகவே அகலக்கூடியவை. அகற்றினாலும், உபத்திரவம் தாராதவை. அவற்றைப் போல் நம் பாவங்கள் களையப்படவேண்டும் என்பதற்காக பிரயாகை ஷேத்திரத்திலே முடி எடுத்து பாவங்களை களைய வேண்டும். பிரயாகையில் முக்கியமானது அட்சயவடம் என்று அழைக்கப்படும் ஆலமரம். இதன் வேர் பகுதி பிரயாகையிலும், நடுப்பகுதி காசியிலும், நுனி கயாவிலும், இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் இந்த மூன்று இடங்களிலும் வரிசையாக, பித்ரு காரியங்களை செய்ய வேண்டியது தமது கடமை என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.

ஸ்ரீஜானகி காந்த ஸ்மரணம்

உங்கள் ஊரில் நடக்கும் ஆன்மிக சொற்பொழிவு, பஜனை நிகழ்ச்சிகளுக்கு செல்கிறீர்கள். அது ராமனை பற்றிய சொற்பொழிவாக இருந்தால் ஸ்ரீஜானகி காந்த ஸ்மரணம் என்று சொற்பொழிவாளர் ராகத்துடன் சொல்வார். உடனே சுற்றியிருப்பவர்கள் ஜெய் ஜெய் ராமா என்பார்கள். கிருஷ்ணரை பற்றிய சொற் பொழிவாக இருந்தால், ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் என்றோ, கோபிகா ஜீவன் ஸ்மரணம் என்றோ சொல்வார். அப்போது, சுற்றியிருப்பவர்கள் கோவிந்தா கோவிந்தா! என்பார்கள். இதற்கு ஒரு காரணம் உண்டு. ஆன்மிக சொற்பொழிவுகளில் கலந்து கொள்பவர்கள். பேச்சு துவங்கும் முன் பலவிதமான உலக நினைவுகளில் இருக்கலாம். அவர்களுக்கு இறைச்சிந்தனையை ஊட்டவே இவ்வாறு செய்யப்படுகிறது. தங்களுக்கு இறைவனின் நினைவு வந்துவிட்டதாக ராமா என்றோ, கோவிந்தா என்றோ சொல்லி நாங்கள் இறைநிலைக்கு வந்துவிட்டதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள். மேலும் இந்த நாமங்கள் எத்தகைய இன்னல்களையும் தீர்க்கவல்லவை. பாஞ்சாலி கோவிந்தா என அலறியபோது, கண்ணன், அவளது மானத்தை காப்பாற்றியதில் இருந்தே இதை தெளிவாக அறியலாம்.

108ன் சிறப்பு தெரியுமா?

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.
* வேதத்தில் 108 உபநிடதங்கள்.
* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.
* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.
* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.
* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108
* அர்ச்சனையில் 108 நாமங்கள்
* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.
* சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.
ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.
* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.
* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108
* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.
* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.
* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.
* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.
* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.
* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.
* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.
"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.
ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?
ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்த எண்ணிக்கைகளைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7).

திருவிளக்கு பூஜையின் பலனும் சிறப்பும்!

இந்து சமயத்தில் திருவிளக்கு வழிபாடு உன்னதமானதான இடத்தைப் பிடித்துள்ளது. எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்தில் எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாடாகும். ஆதியில் வேதரிஷிகள் ஹோமம் வளர்த்து இறைவனை வழிபட்டனர். இந்த முறையே தற்போது தீப வழிபாடாக மாறியிருக்கிறது. விளக்கு வழிபாடு சுற்றுப்புறத்தில் இருக்கும் இருளை அகற்றுவதோடு நம் மனதின் இருளையும் அகற்றுகிறது. வீட்டின் வாசலை மெழுகி மாக்கோலம் இட்டு அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து, பின் அதனை வீட்டு பூஜையறையில் வைத்தால் அவ்விளக்குடன் மகாலட்சுமியும் நம் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம். தற்போது பெண்கள் குழுவாக சேர்ந்து கோயில்களில் விளக்கு வழிபாடு செய்வது பிரபலமடைந்து வருகிறது. இந்த விளக்கு வழிபாட்டால், பல ஹோமங்களை நடத்துவதால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விளக்கை ஏற்றி வழிபடாதவர்கள் அவ்விளக்கு அணைந்து விடாமல் பாதுகாக்கவாவது செய்யலாம்.
விளக்குபூஜை எப்போது ?
பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். மாதங்களுக்கேற்ப இப்பலன்கள் வேறுபடுகின்றன
சித்திரை - தானிய வளம் உண்டாகும்.
வைகாசி - செல்வம் செழிக்கும்.
ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும்.
ஆடி - ஆயுள்பலம் கூடும்.
ஆவணி - புத்தித்தடை நீங்கும்
புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும்
ஐப்பசி - நோய்கள் உண்டாகும்
கார்த்திகை - நற்பேறு கிட்டும்
மார்கழி - ஆரோக்கியம் கூடும்.
தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
மாசி - துன்பங்கள் நீங்கும்.
பங்குனி - தர்மசிந்தனை வளரும்.
விளக்கு பூஜையின்போது கவனிக்கவேண்டியவை
* விளக்குகளை நன்றாக கழுவி அதனை சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்கவேண்டும். பூஜைக்கு உடைந்த, கீறல் விழுந்த விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. திரி ஏற்றியபின்பு விளக்கு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
* விளக்கிற்கு பூமாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்டலாம். சுடரில் இருந்து பத்தி, சூடத்தை கண்டிப்பாக கொளுத்தக் கூடாது.
* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு பக்கம் பார்த்து வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* விளக்குகளை தீக்குச்சியால் நேராக பற்ற வைக்காமல் துணைவிளக்கின் உதவியோடு மட்டுமே ஏற்ற வேண்டும்.
* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை எல்லோரும் சேர்ந்து ஒரே மாதிரியான குரலில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.
ராஜயோகம் தரும் வழிபாடு
வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நீண்ட நேரமாக எரிந்ததால் அது அணையும் நிலையில் மிகக்குறைவான சுடருடன் எரிந்தது. அவ்விளக்கில் இருந்த நெய்யை உண்பதற்காக ஒரு எலி தீபத்தை நோக்கி தாவியது. அப்போது எலி தன்னை அறியாமலேயே திரியை தூண்டிவிட்டது. இந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தி மன்னனாக பிறந்தது. வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தால் மோட்சமும் அடைந்தது. தெரியாமல் திரியை தூண்டிவிட்டதற்கே ஒரு எலிக்கு ராஜயோகம் கிடைத்தது என்றால் நாம் இறைவனை எண்ணி ஏற்றும் விளக்கிற்கு என்ன பலன் கிடைக்கும்.
ஐந்து முக விளக்குகள் ஏன் ?
நாம் வாழும் உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலும் ஐம்பொறிகளால்தான் இயங்குகிறது. பெண்கள் வைத்திருக்க வேண்டிய நற்குணங்களும் ஐந்து. இவ்வாறு, ஐந்து என்ற எண் நம் வாழ்க்கையில் பிரதானமாக இருக்கிறது. இதனை உணர்த்தும் விதமாகத்தான் குத்து விளக்கை ஐந்து திரியுடன் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டது.
எதற்காக எட்டு?
திருவிளக்கு பூஜைக்கு பயன்படும் குத்துவிளக்கின் மீது எட்டு இடங்களில் பொட்டு வைக்கவேண்டும் என்பது நியதி. இதற்கு காரணம் இருக்கிறது. உச்சியில் ஒன்று, அதற்கு கீழ் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் குறிக்கும் பொருட்டு மூன்று பொட்டுகள், அதனையடுத்து கைகளாக கருதி இரண்டு மற்றும் திருவடியில் ஒன்று என பொட்டு வைக்க வேண்டும். இதனால் விளக்குபூஜை பரிபூரணமானதாய் இருக்கும் என்பதாக ஐதீகம்.
பூஜைக்கு தயாராவோம்!
முதலில் பூஜை செய்யும் இடத்தை மெழுகியும், விளக்கை நன்கு துலக்கியும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பூஜை செய்வதற்கு முன்பு அவ்விடத்தில் தலைவாழை இலையை விரித்து, அதில் முனை முறியாத அரிசியை (அட்சதை) பரப்பி, அதன் மீது விளக்கை வைத்து சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து மலர்களாக அலங்கரிக்க வேண்டும். பின்பு துணை விளக்கினால் திரியை ஏற்ற வேண்டும். எச்செயலைச் செய்யும் முன்பும் விநாயகரை வழிபடவேண்டும் என்பதால் மஞ்சளில் சிறிய விநாயகரைப் பிடித்து ஒரு வெற்றிலையில் வைத்து அவரையும் அலங்கரிக்க வேண்டும். பின்பு பூஜைக்கு தேவையான பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு, விளக்கை வணங்கி விட்டு அமரவேண்டும். பின் ஓம் ஒளிர்வளர் விளக்கே போற்றி என்று சொல்லிக்கொண்டே திரியை ஏற்ற வேண்டும். பின் தொடர்ந்து அம்பாள் துதிப்பாடல்களை பாடியபடி பூஜையை துவங்கிவிடலாம்.
திரிகளும், பயன்களும்
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.
விளக்கு பூஜைக்கான விதிகள்
* திருவிளக்கு பூஜைக்கு எவர்சில்வர் விளக்குகள் உகந்தது அல்ல என்பதால் பித்தளை, வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* பூஜையின்போது, தலைவாழை இலை மீது குத்து விளக்கை வைக்க வேண்டும். இதனால் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும் என்பதாக ஐதீகம்.
* விளக்கின்மீது எட்டு இடங்களில் சந்தனம், குங்குமப்பொட்டு வைக்க வேண்டும்.
* ஒரு திரி கொளுத்துவதனால் கிழக்கு முகமாக மட்டுமே கொளுத்த வேண்டும்.
* கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் அணைக்கலாம்.
விளக்கு பூஜைக்கு தேவையான பொருட்கள்
விளக்கு பூஜைக்கு தயாராகும் முன்பு கீழ்கண்ட பொருட்களை முன்னதாகவே தயாராக வைத்துக்கொள்ளுங்கள். திருவிளக்கு, தேவையான எண்ணெய், சாம்பிராணி, கற்பூரம், கோலமிடுவதற்கு பச்சரிசி மாவு, வாழை இலை, சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி, மாலை, அட்சதை அரிசி, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கிழங்கு, நைவேத்திய பொருட்கள், துணை விளக்கு, தீர்த்த பாத்திரம், தாம்பாளம் மற்றும் அமர்ந்து கொள்வதற்கு சிறிய விரிப்பு.
கணபதி பாடல்
விளக்கு துதிப்பாடல் பாடுவதற்கு முன்பு மஞ்சளால் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையாரை கீழ்க்கண்ட பாடலைப்பாடி பூஜை செய்ய வேண்டும்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துப் போற்றுகின்றேனே.
எண்ணெயும் பலன்களும்
குத்துவிளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கேற்ப பலன்களும் மாறுபடுகிறது. சுடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது.
பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும்.
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
திருவிளக்கில் எத்தனை பொட்டு வைப்பது?
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
விளக்கேற்றும் பலன்கள்
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்
யாருக்கு என்ன எண்ணெய்
கணபதி - தேங்காய் எண்ணெய்
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
ருத்திரர் - இலுப்பெண்ணெய்
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்
விளக்கேற்றும் திசைகள்
கிழக்கு - துன்பங்கள் நீங்கி குடும்பம் விருத்தி பெறும்
மேற்கு - கடன், தோஷங்கள் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
நல்ல நாளில் விதிவிலக்கு
விளக்கை செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் துலக்க கூடாது என்றாலும் விசேஷ நாட்களான பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை தீபம், குடும்பத்தில் நடத்தப்படும் சுபநிகழ்ச்சிகள் மற்றும் இதர விழாக்களின்போது, பரிசுத்தமான நீரால் விளக்கை துலக்கி, சுத்தமான புதிய துணியால் துடைத்து விபூதியால் விளக்கை தேய்க்க வேண்டும். விசேஷ நாட்களில் துலக்க விதிவிலக்கு உண்டு.
விளக்கு துலக்கும் பலன்கள்
* ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கு துலக்கி தீபமேற்றினால் கண் தொடர்பான நோய்கள் குணமாகும், பார்வை பிரகாசமடையும்.
* திங்களன்று விளக்கு துலக்கினால் மனசஞ்சலங்கள், குழப்பங்கள் நீங்கி மனதில் அமைதி ஏற்படும். தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளரும்.
* வியாழக்கிழமை துலக்கினால் குருபார்வை கிடைத்து கோடி நன்மைகள் உண்டாகும், கவலைகள் நீங்கி மனம் நிம்மதியடையும்.
* சனிக்கிழமையன்று விளக்கை கழுவினால் வாகனங்களில் பாதுகாப்பான பயணம் கிட்டும்.
விளக்கு துலக்க வேண்டிய நாட்கள்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது.
திங்கள் வியாழக்கிழமைகளில் விளக்கேற்றி குளிர வைத்த பிறகு (சுமார் இரவு 9 - 9.30 மணிக்குள்) விளக்கை துலக்குவது நல்லது. வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநதியட்சணி குடியேறுகிறாள். எனவே விளக்குகளை திங்கள் மற்றும் வியாழன் முன்னிரவிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் துலக்குவதே நல்லது.
திருவிளக்கு வழிபாடு
விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே!ஜோதி மணிவிளக்கே! சீதேவி பொன்மணியே!அந்தி விளக்கே! அலங்கார நாயகியே!காந்தி விளக்கே! காமாட்சித் தாயாரே!பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய்விட்டு
கோலமுடன் ஏற்றிவைத்தேன்;ஏற்றினேன் நெய்விளக்கு
எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு
மாளிகையும் தான்விளங்க
மாளிகையில் ஜோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன்!யான் தரணியிலே ஜோதியுள்ள
தாயாரைக் கண்டுவந்தேன்!மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா!சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா!பெட்டி நிறையப் பூஷணங்கள் தாருமம்மா!பட்டி நிறையப் பால் பசுவைத் தாருமம்மா!கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாருமம்மா!புகழுடம்பைத் தாருமம்மா!பக்கத்தில் நில்லுமம்மா!அல்லும்பகலும் எந்தன்
அண்டையிலே நில்லுமம்மா!சேவித்து எழுந்திருந்தேன்;தேவி வடிவங்கண்டேன்
வச்சிரக் கிரீடங்கண்டேன்;வைடூர்ய மேனி கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்;முழுப்பச்சை மாலை கண்டேன்
சவுரி முடி கண்டேன்
தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்;பிறைபோல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்;தாயார் வடிவம் கண்டேன்
குறுக்கிடும் நெற்றி கண்டேன்;கோவைக்கனி வாயும் கண்டேன்
கமலத் திருமுகத்தில்
கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன
மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகல என
கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென
ஜொலிக்கக் கண்டேன்
காலிற் சிலம்புகண்டேன்;காலணி பீலி கண்டேன்
மங்கள நாயகியை
மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன்
அடியாள் நான்
அன்னையே அருந்துணையே!அருகிருந்து காருமம்மா!வந்தவினையகற்றி
மகாபாக்கியம் தாருமம்மா!தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவேயுன்றன் மலரடியில் நான் பணிந்தேன்.இந்த அகவலைப் பாடி முடித்த பின்னர் தீபாராதனை செய்து வேண்டிய வரங்களைத் தந்தருளும்படி பிரார்த்திக்க வேண்டும்.
திருவிளக்கு போற்றி
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
ஓம் முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
ஓம் மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி
ஓம் வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
ஓம் இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
ஓம் ஈரேழுலகும் ஈன்றாய் போற்றி
ஓம் பிறர் வயமாகா பெரியோய் போற்றி
ஓம் பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
ஓம் பேரருட் கடலாம் பொருளே போற்றி
ஓம் முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி
ஓம் மூவூலகுந் தொழ மூத்தோய் போற்றி
ஓம் அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
ஓம் ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
ஓம் இருள் கெடுத்து இன்பருள் ஈந்தாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே மாமணி போற்றி
ஓம் வளமை நல்கும் வல்லியே போற்றி
ஓம் அறம் வளர்நாயகி அம்மையே போற்றி
ஓம் மின் ஒளியம்மையாம் விளக்கே போற்றி
ஓம் மண் ஒளிப்பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் தையல் நாயகித் தாயே போற்றி
ஓம் தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
ஓம் முக்கட் சுடரின் முதல்வி போற்றி
ஓம் ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
ஓம் சூளாமணியே சுடரொளி போற்றி
ஓம் இருள் ஒளித்து இன்பமும் ஈவோய் போற்றி
ஓம் அருள் மொழிந்து எம்மை ஆள்வாய் போற்றி
ஓம் அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
ஓம் இல்லக விளக்காம் இறைவி போற்றி
ஓம் சுடரே விளக்காம் தூயாய் போற்றி
ஓம் இடரைக் களையும் இயல்வினாய் போற்றி
ஓம் இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
ஓம் எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
ஓம் ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
ஓம் அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
ஓம் தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
ஓம் ஜோதியே போற்றி சுடரே போற்றி
ஓம் ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
ஓம் இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
ஓம் சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
ஓம் பலா காண் பல்லக விளக்கே போற்றி
ஓம் நல்லக நமசிவாய விளக்கே போற்றி
ஓம் உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
ஓம் உணர்வு சூழ் கடந்தோர் விளக்கே போற்றி
ஓம் உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
ஓம் உள்ளத் தகளி விளக்கே போற்றி
ஓம் உயிரெணும் திரிமயக்கு விளக்கே போற்றி
ஓம் இடர்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
ஓம் நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
ஓம் ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
ஓம் அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
ஓம் ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
ஓம் தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
ஓம் கற்பனை கடந்த ஜோதி போற்றி
ஓம் கருணை உருவாம் விளக்கே போற்றி
ஓம் அற்புத கோல விளக்கே போற்றி
ஓம் அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
ஓம் சிற்பர வியோம விளக்கே போற்றி
ஓம் பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி
ஓம் உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி
ஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
ஓம் உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
ஓம் பெருகுஅருள் சுரக்கும் பெரும போற்றி
ஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
ஓம் அருவே உருவே அருவுருவே போற்றி
ஓம் நந்தா விளக்கே நாயகி போற்றி
ஓம் செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி
ஓம் தீப மங்கள ஜோதி போற்றி
ஓம் மதிப்பவர் மாமணி விளக்கே போற்றி
ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி
ஓம் ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஏகமும் நடஞ்செய் எம்மான் போற்றி
ஓம் ஊழி ஊழி உள்ளோய் போற்றி
ஓம் ஆழியான் காணா அடியோய் போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி
ஓம் அந்தமில் இன்பம் அருள்வாய் போற்றி
ஓம் முந்தை வினையை முடிப்போய் போற்றி
ஓம் பொங்கும் கீர்த்தி பூரண போற்றி
ஓம் தன்னருள் சுரக்கும் தாயே போற்றி
ஓம் அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
ஓம் இருநில மக்கள் இறைவி போற்றி
ஓம் குருவென ஞானம் கொடுப்போய் போற்றி
ஓம் ஆறுதல் எமக்கிங் களிப்போய் போற்றி
ஓம் தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
ஓம் பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
ஓம் எத்திக்குந் துதி ஏய்ந்தாய் போற்றி
ஓம் அஞ்சலென் றருளும் அன்பே போற்றி
ஓம் தஞ்சமென் றவரைச் சார்வோய் போற்றி
ஓம் ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி
ஓம் ஓங்காரத் துள்ளொழி விளக்கே போற்றி
ஓம் எல்லா உலகமும் ஆனாய் போற்றி
ஓம் பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் புகழ் சேவடி என்மேல் வைத்தோய் போற்றி
ஓம் செல்வாய செல்வம் தருவாய் போற்றி
ஓம் பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
ஓம் உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
ஓம் உயிர்களின் பசிப்பிணி ஒளித்தருள் போற்றி
ஓம் செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி
ஓம் நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
ஓம் விளகிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
ஓம் நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
ஓம் தாயே நின்னருள் தந்தாய் போற்றி
ஓம் தூய நின்திருவடி தொழுதனம் போற்றி
ஓம் போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
ஓம் போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
ஓம் போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
ஓம் போற்றி போற்றி திருவிளக்கே போற்ற
மங்கல விளக்கே மாதா போற்ற
மங்கையர் போற்றும் மாமணி போற்றி
குங்குமம் மஞ்சள் கொடுப்பாய் போற்றி
குலநலம் காக்கும் கோமகள் போற்றி
சங்கடம் எல்லாம் சரிப்பாய் போற்றி
சந்தோஷம் என்றும் தருவாய் போற்றி
பொங்கிப் பெருகும் பொலிவே போற்றி
புன்னகை மிளிரும் பூவே போற்றி
செந்தாமரை வாழ் திருவே போற்றி
சிந்தா குலந்தீர் சிவையே போற்றி
வந்தா தரிக்கும் வாணி போற்றி
கொந்தார் மலர்ப்பூங்குழலீ போற்றி
அந்தாதி இல்லா அன்னையே போற்றி
அன்பும் அறிவும் அளிப்பாய் போற்றி
இன்பம் தீர்க்கும் துணையே போற்றி
அன்பர் அகத்தில் அமர்வாய் போற்றி
அழியா ஆன்ம அழகே போற்ற
வழியாய் வந்து வாழ்த்துவாய் போற்றி
பழியாவும் களைத்தருள் பாலிப்பாய் போற்றி
விழியாய்த் திகழ்திரு விளக்கே போற்றி
அண்டம் அனைத்தும் ஈன்றாய் போற்றி
தெண்டர்க் கென்றும் சுகம்நீ போற்றி
கண்டார் உள்ளம் கவர்வாய் போற்றி
வண்டார் பூங்குழல் வஞ்சீ போற்றி
பூவும் பொட்டும் காப்பாய் போற்றி
தேவை அனைத்தும் தெரிவாய் போற்றி
ஆவல் மிகுந்தார் அகத்தாய் போற்றி
காவல் நிற்கும் கருணையே போற்றி
பொன்னும் மெய்பொருளும் பொழிவாய் போற்றி
புலமைத் திறம்நீ புகட்டுவாய் போற்றி
துன்னும் இருளைத் துரத்துவாய் போற்றி
மன்னும் புகழில் மகிழ்வாய் போற்றி
நீராய் நெருப்பாய் நிறைந்தாய் போற்றி
ஆரா அமுதம் அனையாய் போற்ற
சீராய் ஞானம் சேர்ப்பாய் போற்றி
பேரா வினைகளைப் பேர்ப்பாய் போற்றி
பொன்னே மணியே பூவே போற்றி
அன்னே அழியா அன்பே போற்றி
முன்னும் பின்னும் இல்லாய் போற்றி
மின்னும் மகுடம் மிளிர்வாய் போற்றி
சுடரே போற்றி ஜோதியே போற்றி
இடரைக் களையும் இன்னொளி போற்றி
ஊனில் உயிராய் ஒளிர்வாய் போற்றி
தேனில் இனிப்பாய் திகழ்வாய் போற்றி
பொற்றா மரையில் பொலிவாய் போற்றி
வற்றாச் செல்வம் வழங்குவாய் போற்ற
மூலப் பொருளாம் முதல்வீ போற்றி
காலக் கடலின் களிப்பே போற்றி
கோலக் கிளியாம் குமரீ போற்றி
மாலுக் கினியநல் மனைவியே போற்றி
வரந்தர விரைந்தே வருவாய் போற்றி
நிரந்தர சுகந்தரும் நிமலீ போற்ற
இகபர சுகந்தரும் இறைவீ போற்றி
ஈடொன் றில்லா ஈசையை போற்றி
அம்மா தாயே அபயம் போற்றி
செம்மா துளம்பூ நிறத்தாய் போற்றி
பெம்மான் இடத்தமர் பிறைநுதல் போற்றி
இம்மா நிலத்தை ஈன்றாய் போற்ற
அக இருள் அகற்றும் விளக்கே போற்றி
ஆன்ம சுகந்தரும் விளக்கே போற்றி
ஆய கலைதரும் விளக்கே போற்றி
தூய நிலை தரும் விளக்கே போற்றி
ஏகம் ஆன என்தாய் போற்றி
மோகம் தீர்க்கும் மோகினி போற்றி
யாகம் வளர்க்கும் யாமினி போற்றி
யோகம் வளர்க்கும் உமையவள் போற்றி
கண்ணே கண்ணின் மணியே போற்றி
பண்ணே பண்ணின் சுவையே போற்றி
நங்காய் நந்தா விளக்கே போற்றி
தங்க மேனி விளக்கே போற்றி
வேதப்பொருளாம் விளக்கே போற்றி
நாதக் கனலாம் நாரீ போற்றி
இல்லக விளக்காம் எழிலே போற்றி
சொல்லக விளக்காம் சுடரே போற்றி
தொல்லக விளக்காம் ஜோதீ போற்றி
நல்லக விளக்காம் நாயகீ போற்றி
கற்பனைக் கெட்டாக் கவினொளி போற்றி
காரிருள் அகற்றும் கதிரொளி போற்ற
சொற்பதம் கடந்த தூயொளி போற்றி
அற்புதம் பலசெய்யும் அருளொளி போற்றி
நற்பதம் வழங்கும் நாயகீ போற்றி
பற்பல வடிவாம் நாயகி போற்றி
கற்பகத் தருவே கண்ணொளி போற்றி
விற்பனர் போற்றும் வியனொளி போற்றி
இருவினை இடர்தீர் இன்னொளி போற்றி
கருவினை களைந்தருள் தண்ணொளி போற்றி
அடிமுடி காணா அனலே போற்றி
கடிமலர்ப் பாதப் புனலே போற்ற
அம்மா அன்னபூரணி போற்றி
அன்பே ஆதி காரணி போற்றி
ஞால விளக்கே நடனீ போற்றி
கோல விளக்கே கோமதீ போற்றி
மூலவிளக்கே மூகாம்பிகை போற்றி
மோன விளக்கே முத்தே போற்றி
ஞான விளக்கே நலமே போற்றி
கருணை விளக்கே காமாட்சி போற்றி காருண்ய விளக்கே மீனாட்சி போற்றி
அறிவொளி யூட்டும் விளக்கே போற்ற
உறவென வளர்க்கும் விளக்கே போற்றி
பேரின்பக் கடலே பேரொளி போற்றி
பேரருட் கடலாம் பெண்மயில் போற்றி
இல்லற விளக்காம் இறைவீ போற்றி
நல்லறம் வளர்க்கும் நாயகீ போற்றி
கண்கண்ட தெய்வக் கலைவிளக்கே போற்றி
மாங்கல்யம் காக்கும் மணிவிளக்கே போற்றி
தீங்கனைத்தும் போக்கும் திருவிளக்கே போற்ற
அஷ்டலட்சுமி அஷ்டோத்திரம
ஓம் அகில லட்சுமியை நம
ஓம் அன்ன லட்சுமியை நம
ஓம் அலங்கார லட்சுமியை நம
ஓம் அஷ்ட லட்சுமியை நம
ஓம் அமிர்த லட்சுமியை நம
ஓம் அமர லட்சுமியை நம
ஓம் அம்ச லட்சுமியை நம
ஓம் அபூர்வ லட்சுமியை நம
ஓம் ஆதி லட்சுமியை நம
ஓம் ஆத்ம லட்சுமியை
ஓம் ஆனந்த லட்சுமியை நம
ஓம் இஷ்ட லட்சுமியை நம
ஓம் இன்ப லட்சுமியை நம
ஓம் இதய லட்சுமியை நம
ஓம் ஈஸ்வர்ய லட்சுமியை நம
ஓம் ஈகை லட்சுமியை நம
ஓம் உண்மை லட்சுமியை நம
ஓம் உதய லட்சுமியை நம
ஓம் உத்தம லட்சுமியை நம
ஓம் உபாசன லட்சுமியை
ஓம் ஊர்ஜித லட்சுமியை நம
ஓம் எட்டு லட்சுமியை நம
ஓம் ஏக லட்சுமியை நம
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியை நம
ஓம் ஒற்றுமை லட்சுமியை நம
ஓம் ஒளிப்பிரகாச லட்சுமியை நம
ஓம் ஓங்கார லட்சுமியை நம
ஓம் ஒளதார்ய லட்சுமியை நம
ஓம் ஒளஷத லட்சுமியை நம
ஓம் ஒளபாஷன லட்சுமியை
ஓம் கருணை லட்சுமியை நம
ஓம் கனக லட்சுமியை நம
ஓம் கபில லட்சுமியை நம
ஓம் கந்த லட்சுமியை நம
ஓம் கஸ்தூரி லட்சுமியை நம
ஓம் குக லட்சுமியை நம
ஓம் சந்தான லட்சுமியை நம
ஓம் சங்கு லட்சுமியை நம
ஓம் சக்கர லட்சுமியை நம
ஓம் சர்வ லட்சுமியை
ஓம் சந்தோஷ லட்சுமியை நம
ஓம் சரச லட்சுமியை நம
ஓம் சகல லட்சுமியை நம
ஓம் சுப்பு லட்சுமியை நம
ஓம் ஞான லட்சுமியை நம
ஓம் தர்ச லட்சுமியை நம
ஓம் தன லட்சுமியை நம
ஓம் தவ லட்சுமியை நம
ஓம் நவ லட்சுமியை நம
ஓம் தான லட்சுமியை
ஓம் வைர லட்சுமியை நம
ஓம் நீல லட்சுமியை நம
ஓம் முத்து லட்சுமியை நம
ஓம் பவள லட்சுமியை நம
ஓம் மாணிக்க லட்சுமியை நம
ஓம் மரகத லட்சுமியை நம
ஓம் கோமேதக லட்சுமியை நம
ஓம் பதுமராக லட்சுமியை நம
ஓம் பத்ம லட்சுமியை நம
ஓம் வைடூர்ய லட்சுமியை
ஓம் பிரம்ம லட்சுமியை நம
ஓம் விஷ்ணு லட்சுமியை நம
ஓம் சிவ லட்சுமியை நம
ஓம் ஜோதி லட்சுமியை நம
ஓம் தீப லட்சுமியை நம
ஓம் தீன லட்சுமியை நம
ஓம் தீர்த்த லட்சுமியை நம
ஓம் திவ்விய லட்சுமியை நம
ஓம் தைரிய லட்சுமியை நம
ஓம் தான்ய லட்சுமியை
ஓம் வீர லட்சுமியை நம
ஓம் வித்ய லட்சுமியை நம
ஓம் விஜய லட்சுமியை நம
ஓம் விபுல லட்சுமியை நம
ஓம் விமல லட்சுமியை நம
ஓம் ஜெய லட்சுமியை நம
ஓம் கெஜ லட்சுமியை நம
ஓம் வர லட்சுமியை நம
ஓம் மஹா லட்சுமியை நம
ஓம் வேணு லட்சுமியை
ஓம் பாக்கிய லட்சுமியை நம
ஓம் பால லட்சுமியை நம
ஓம் பக்த லட்சுமியை நம
ஓம் பாமா லட்சுமியை நம
ஓம் புவன லட்சுமியை நம
ஓம் புனித லட்சுமியை நம
ஓம் புண்ணிய லட்சுமியை நம
ஓம் பூமி லட்சுமியை நம
ஓம் சோபித லட்சுமியை நம
ஓம் ராம லட்சுமியை
ஓம் சீதா லட்சுமியை நம
ஓம் சித்த லட்சுமியை நம
ஓம் சிங்கார லட்சுமியை நம
ஓம் ஸ்வர்ண லட்சுமியை நம
ஓம் நாக லட்சுமியை நம
ஓம் யோக லட்சுமியை நம
ஓம் போக லட்சுமியை நம
ஓம் புவன லட்சுமியை நம
ஓம் கோமள லட்சுமியை நம
ஓம் மாத லட்சுமியை
ஓம் பிதா லட்சுமியை நம
ஓம் குரு லட்சுமியை நம
ஓம் தெய்வ லட்சுமியை நம
ஓம் தாமரை லட்சுமியை நம
ஓம் நித்திய லட்சுமியை நம
ஓம் சாந்த லட்சுமியை நம
ஓம் பிரசன்ன லட்சுமியை நம
ஓம் மங்கள லட்சுமியை
திருவிளக்கு பாடல்
மங்கலப் பொருளாம் விளக்கிதுவே
மாதர் ஏற்றும் விளக்கிதுவே
பொங்கும் மனத்தால் நித்தமுமே
போற்றி வணங்கும் விளக்கிதுவ
இருளை நீக்கும் விளக்கிதுவே
இன்பம் ஊட்டும் விளக்கிதுவே
அருளைப் பெருக்கும் விளக்கிதுவே
அன்பை வளர்க்கும் விளக்கிதுவ
இல்லம் தன்னில் விளக்கிதுவே
என்றும் ஏற்றித் தொழுதிடவே
பல்வித நன்மைப் பெற்றிடலாம்
பாரில் சிறந்தே வாழ்ந்திடலாம
விளக்கில் ஏற்றும் ஜோதியினால்
விளங்காப் பொருளும் துலங்கிடுமே
விளக்கில் விளங்கும் ஜோதிதனை
விமலை என்றே உணர்ந்திடுவோம.
தீபமங்கள ஜோதி நமோ நமோ
தூய அம்பல லீலா நமோ நமோ
தேவ குஞ்சரி பாகா நமோ நமோ
அருள் தாராய் என நாளும் உன் புகழே பாடி
நான் இனி அன்புடன் ஆச்சார பூஜை
செய்து உய்ந்திட அருள் செய்வாய