Thursday, November 29, 2012

செருப்பணிந்து பெண்கள் கோலமிடுவது சரியானதா?

 செருப்பணிந்து பெண்கள் கோலமிடுவது சரியானதா?
.
வீடு என்பது கோயில் போன்றது. வீட்டிற்குச் செய்யப்படுகின்ற எல்லாமே கோயிலுக்கு செய்யப்படுவதாக எண்ண வேண்டும். சாணம் தெளித்து கோலம் போடுவது என்பது, மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்கும் நிகழ்ச்சியாகும். கிருமிகளை வீட்டிற்குள் வராமல் பார்த்துக் கொள்ளும் ஆற்றலும் அதற்கு உண்டு. அரிசி மாவினால் தான் கோலம் போடவேண்டும். எறும்பு, பறவைகள் அதை உண்பதால் நமக்கு புண்ணியம் சேரும். இவ்வளவு தெய்வீகமான செயலைச் செருப்பணிந்தபடி செய்வது கூடாது.

தீட்டு என்றால் என்ன என்பதை விளக்குங்கள்
பிறரைத் தீண்டக்கூடாத நாட்களை சுருக்கமாகத் தீட்டு என்பர். பங்காளிகள் வீட்டில் பிறப்பு, இறப்பு நிகழ்ந்தால் பத்துநாட்கள் தீட்டு உண்டு. பெண்களின் மாதவிடாய் காலமான மூன்றுநாள் தீட்டு. இக்காலங்களில் கோயிலுக்குச் செல்வது கூடாது. பிறரைத்
தீண்டக்கூடாது. இதனால் லட்சுமி கடாட்சம் குன்றி வறுமை உண்டாகும். ஆயுள் குறையும் என சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், தற்காலத்தில் பலர் இதை ஏற்றுக் கொள்வதில்லை.

ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
.

ஒவ்வொருவரும் பிறக்கும் போது அந்தந்த நட்சத்திரங்களின் அடிப்படையில் ஏதாவது ஒரு கிரகத்தின் தசையில் வாழ்வு தொடங்குகிறது. உதாரணமாக ஒருவர் பரணி நட்சத்திரத்தில் பிறந்தால் சுக்கிரதசையில் பிறந்திருக்கிறார். பொதுவாக சுக்ரதசை நல்லது என்றாலும், தொடர்ந்து வரும் தசாபுத்திகளான செவ்வாய், ராகு நடக்கும் காலத்தில் திருமண வயதை அடைவார். இதே பரணியில் பிறந்த பெண்ணை மணம் முடித்தால் இருவருக்கும் ஒரே தசாபுத்தி நடக்கும். இதற்கு "தசாசந்தி' என்று பெயர். நல்ல தசை நடந்தால் இருவருக்கும் நன்மை. கெட்ட தசை நடந்தால் இருவருக்கும் கஷ்டம் ஏற்படும். எனவே தான் ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது என்பர். இது தவிர ஜாதகத்தில் கிரகபலம் அதிகமிருந்து, தசை சந்திப்பு இல்லாவிட்டால் ஒரே நட்சத்திரக்காரர்கள் திருமணம் செய்யலாம். சிறந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

**மெகாசைஸ் சிலைகளை சில கோயில்களில் வைக்கிறார்களே. சாஸ்திரத்தில் இதற்கு இடமுண்டா?
மிகவும் பழமை வாய்ந்த கோயில்களில் அமைந்திருக்கும் சிலைகளைப் பற்றி ஆராயக்கூடாது. இவை கோயில் தலவரலாறோடு சம்பந்தப்பட்ட விஷயமாக அமைந்திருக்கும். ஆனால், தற்போது இதுபோல மெகாசைஸ் சிலைகள் அமைப்பதற்கான காரணம் புரியவில்லை. மூலஸ்தான விக்ரஹத்தின் அளவைக் கணக்கிட்டே மற்ற சிலைகளைச் செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

* கழுத்தில் சந்தனம் குங்குமம் வைக்கலாமா?
நெற்றி, கழுத்து, மார்பு, இரு புறங்கைகள் ஆகிய ஐந்து இடங்களில் சந்தனம் குங்குமம் திலகமிட்டுக் கொள்ளலாம். அவரவர்களின் சமயம் மற்றும் குடும்ப வழக்கப்படி மாறுபடலாம்.

பற்று வைப்பதால் உயிர்கள் அழிகின்றன---அபிநவவித்யா தீர்த்த சுவாமி

மானைப் பிடிக்க இசையை வைத்து வலை விரிப்பார்கள். ஆண் யானையைப் பிடிக்க அழகான பெண் யானையை அதன் முன் நிறுத்தி வைப்பார்கள். விட்டில் பூச்சியை நாம் பிடிக்கவே வேண்டாம். தீபம் ஏற்றிவிட்டால் தானாகவே அதில் வந்து விழுந்து விடும். புழுவுக்கு ஆசைப்பட்டு மீன் தூண்டிலில் சிக்கிக் கொள்கிறது. பூக்களின் மணத்தை நாடிச்செல்லும் தேனீக்கு, அது சேகரித்த தேனே எமனாகிறது. ஆம்..அதிலேயே சிக்கி உயிர் விடுகிறது. இப்படி செவி, உடல் (ஸ்பரிசம்), கண், நாக்கு, மூக்கு ஆகிய ஐந்து புலன்களின் மீதும் பற்று வைப்பதால் உயிர்கள் அழிகின்றன.
* மற்ற உயிர்களெல்லாம் ஏதோ ஒரு புலனைத் தான் (உறுப்பு) பயன்படுத்துகின்றன. ஆனால், மனிதன் ஐம்புலன்கள் மீதும் பற்று வைத்து, அவை சொல்வது போலவே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான். ஆனால், இந்த புலன்கள் சொல்வதை கடைசி வரை அவனால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இவையெல்லாம் ஒருநாள் கெட்டுப்போனால், அவனால் செயல்படவே முடியாது. எனவே, மனிதன் விரும்பி அடைய வேண்டியது இறைவனின் திருவடித் தாமரைகளைத் தான்.
* "புலன்கள் தரும் இன்பத்தை விட்டு விட மனமே இல்லை' என்கிறான் மனிதன். சம்பாதிக்கும் ஒருவனுக்கு பத்துலட்சம், பத்துகோடி, நூறு கோடி என விரிவடைந்து கொண்டே போனாலும் திருப்தி ஏற்படுவதில்லை. அதே நேரம் அவனிடம்,""இவ்வளவு கோடிகள் சம்பாதித்து விட்டாயே...நூறு ரூபாய் தர்மம் செய்,'' என்றால், ""இல்லை...இதெல்லாம் ஒரு பணமா! இன்னும் வரட்டும், அப்போது நூறென்ன..ஆயிரம் ஆயிரமாய் தருகிறேன்,'' என்று தான் சொல்லுவான். அந்த இலக்கை அவன் எட்டிய பிறகு, அவனிடம் சென்றால், ""இது ஒன்றும் பெரிசில்லையே! இன்னும் வரட்டும், பார்க்கலாம்,' 'என்று தான் சொல்வான். தர்மம் செய்ய அவன் முன் வருவதே இல்லை. ஆகவே, மனிதனால் ஆசைகளில் இருந்து விடுபடவே முடியாது என்றால் அதில் மிகையில்லை.
* மனிதனுக்கு இளமை இருக்கும் போது அவன் தியானம் உள்ளிட்ட ஆன்மிகப்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஏனென்றால், வயதான பின் அவனால் எந்த ஒரு யக்ஞத்தையோ, ஹோமத்தையோ செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் கூட செய்ய முடியாமல் போய்விடும். இளமையிலேயே ஆசைகளை மனச்சிறைக்குள் பூட்டினால் தான் இது சாத்தியம்.
* ஆசையானது அதை அனுபவிப்பதனால் அடங்குவதில்லை. அதற்கு மாறாக மென்மேலும் அது நெய்யினால் வளர்க்கப்பட்ட தீயைப் போல பெருகவே செய்யும்.
* சம்பாதிக்க விரும்பும் ஒருவன் மென்மேலும் சம்பாதிக்கவே விரும்புவான். எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் மேலும் வாழவே விரும்புவான். ஆசைகளை அனுபவித்த பின்னும் மேலும் அவற்றையே நாடிச்செல்லவே விரும்புவான். ஆகையால், இவையெல்லாம் ஓய்ந்தபின் பக்தியில் ஈடுபடுவது என்பது நடக்காத காரியம்.
* மனிதசரீரம் நல்லநிலையில் இருக்கும் வேளையிலேயே அதை நன்கு பயன்படுத்தி நற்செயலைச் சாதிக்க எண்ண வேண்டும். இப்படி ஓர் எண்ணம் வந்துவிட்டால், மனித மனம் வேறு எந்த விஷயத்தையும் நாடி அலையாது.

சத்யசாய்பாபா

புட்டபர்த்தியில் சத்யசாய்பாபா 1926, நவம்பர் 23ல் அவ தரித்தார். அவருக்கு, 87வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
சாய்பாபா பிறந்த ஊர் ஆந்திராவிலுள்ளபுட்டபர்த்தி. ஒரு காலத்தில் "கொல்லப்பள்ளி' எனப்பட்டது.
"பசுக்கூட்டம் நிறைந்த ஊர்' என்பது இதன் பொருள். பசு ஒன்று பாம்புப்புற்றில் பால் சொரிந்ததன் காரணமாக, பாம்பை மாடு மேய்க்கும் ஒருவர் கொன்றார். அதன்பின் அவ்வூர் முழுக்க பாம்பு புற்றுகள் தோன்றின. எனவே கொல்லப்பள்ளி என்ற பெயர் "புட்டவர்த்தினி' என்றானது. இதற்கு புற்றுகள் நிறைந்த இடம் என்று பெயர். காலப்போக்கில், இது புட்டபர்த்தி ஆனது.
இங்கு வசித்த வெங்கப்பராஜு- ஈஸ்வரம்மா தம்பதியின் புத்திரரே சத்ய சாய்பாபா. கிருஷ்ணர் தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தது போல, பாபா ஈஸ்வரம்மாவின் எட்டாவது குழந்தையாக, அக்ஷயவருஷம், கார்த்திகை சோமவாரம் (திங்கள்கிழமை), திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இது சிவனுக்கு உகந்த நாள். அவரது இடது கன்னம் மற்றும் மார்பில்
மச்சங்கள் இருந்தன. பாதங்களில் விஷ்ணுவிற்குரிய சங்கு, சக்கர ரேகைகள் ஓடின. பிள்ளைக்கு சத்யநாராயணன் என்று பெயரிட்டனர். பாபாவின் தாத்தா கொண்டமராஜு சத்யாவை எப்போதும் பூஜை அறையிலேயே வைத்துக் கொள்வார். அங்கு வசித்த கிராம அதிகாரியின் மனைவி சுப்பம்மா, பாபாவைத் தன் பிள்ளையாக கருதி அன்பு காட்டினார். கண்ணனை வளர்த்த யசோதை போல் விளங்கினார்.
பாபா கருணை மிக்கவர். யாராவது பசி என்று வந்தால், <உணவு வழங்குவார் குளிரால் வாடுபவர்களுக்கு துணிமணி வழங்கி மகிழ்வார். பசு,காளைகளை இம்சை செய்தால் சத்யாவின் மனம் படாத பாடுபடும். முதலில் புட்டபர்த்தியில்
பள்ளிப்படிப்பைத் தொடங்கிய பாபா, பின்னர் புக்கபட்டணத்திற்குச் சென்றார். தன் பள்ளித்தோழர்கள் விரும்பும் பொருள்களை வரவழைத்துக் கொடுத்தார்.
பாபாவின் தாய் கல்வி, குடிநீர் மற்றும் மருத்துவ வசதியின்றி தவிக்கும் மக்களுக்காக இரக்கப்படுவார். அவர்களுக்கு இந்த அடிப்படை தேவைகளை வழங்க வேண்டும் என தன் மகனுக்கு அறிவுரை வழங்கினார். தாயின் விருப்பத்திற்கேற்ப மருத்துவமனை, குடிநீர், கல்வி உள்ளிட்ட சேவைகளை இலவசமாக வழங்கினார்.
புட்டபர்த்தியில் அவர் அமைத்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சர்வதேச தரம் கொண்டது.
ஏழைகளுக்கு இருதயநோய் ஆபரேஷன் இலவசமாக நடப்பது இதன் ஸ்பெஷாலிட்டி. ஆந்திரா மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம், சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் என என்றும் அழியாத பணிகளைச் செய்தார். ஏப்ரல்24, 2011ல் ஸித்தியடைந்த, பகவான் பாபா அனைவர் இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சாய்பாபா சொல்கிறார்

 உங்களது மனதில் பக்திப்பூர்வமான எண்ணங்கள் வளரும் நாளே, எனது உண்மையான பிறந்த நாள்.
* துன்பங்களை சந்தித்தவர்களால் மட்டுமே, பிறரது துன்பங்களை அறிந்து கொண்டு, அவர்கள் மீது கருணை செலுத்த முடியும்.
* சமுதாயத்திற்கு செய்யப்படும் தீங்கு, நாட்டையும் பாதிக்கும். நாட்டின் நலன், சமுதாயத்தை முன்னிறுத்தியே இருக்கிறது.
* கடவுள் மீது பக்தி கொண்ட உலகம், பக்தி செலுத்தாத உலகத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது.
* யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பேசுவதைவிட, உரக்கப்பேசுவதே மேலானது (கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுவதே உயர்ந்தது).
* மனிதர்கள் மற்றும் நாடுகளுக்கிடையே சிறந்த நட்புறவை வளர்க்கும்படியாக அறிவியல் வளர்ச்சி பெற வேண்டும்.
* ஓய்வும், தூக்கமும் மனிதர்களுக்கு அவசியம். ஆனால், அவற்றையும் அளவாகவே வைத்துக்கொள்ள வேண்டும்.
* மகிழ்ச்சி துன்பங்களை போக்கும் மாமருந்தாக இருக்கிறது.
* மனம் எப்போதும் அறிவைச் சார்ந்திருப்பதில்லை. அறிவுதான் மனதைச் சார்ந்திருக்கிறது.
* பால், பழம், விதைகள் போன்ற உணவைச் சாப்பிடுங்கள். அவை நல்ல சிந்தனைகளைத் தரும்.
* எப்போதும் இறைவனைச் சார்ந்து, அவரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருங்கள். அதுவே மிகப்பெரிய தியானமாகும்.
* சேவை செய்வதை ஒரு வீடாகக் கருதினால் அதன் சுற்றுச்சுவராக உதவியும், மேற்கூரையாக தெய்வத்தன்மையும், வீட்டு உரிமையாளராக ஞானமும் இருக்கின்றன. இதற்கெல்லாம் அடித்தளமாக மனம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வீட்டினால் பயன் ஏதுமில்லை.
* விருப்பங்களின் தொகுப்பே மனம். ஆனால், விருப்பமில்லாத மனம்தான் சுத்தமாக இருக்கும்.
* இறைவன், ஒவ்வொருவரிடமும் அமைதியின் மூலமாகவே பேசிக்கொள்கிறார். ஆகவே, அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
* கடுமையாக உழைப்பவர்களுக்கு அதற்கேற்ப பலன் கிடைக்கும்.
* அன்பிற்கு மொழி கிடையாது. மொழிகள் புரியாத இடத்தில் அன்பினால் அனைத்தையும் சாதிக்கலாம்.
* இறைவன், உடலுக்கு சக்தி தரும் ஊட்டச்சத்தைப்போல இருக்கிறார்.
* மனப்பூர்வமான பக்தியினால், இறைநிலையை யாராலும் அடைய முடியும். இதில் ஆண், பெண் என்ற பேதம் கிடையாது.
* இல்லாதவர்களுக்கு உதவி செய்வதே, மிகச்சிறந்த நற்செயலாகும்.

மகாவீரர் கூறுகிறார்

உண்மையைக் கடைபிடிப்பவனின் வாழ்வில் எத்தனை துன்பங்கள் சூழ்ந்தாலும் மனக்கலக்கம் உண்டாகாது.
* கோபம், பேராசை, அறியாமை ஆகிய காரணங்களால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் துன்பம் இழைக்கின்றனர். அச்சம், பகை உணர்வில் இருந்து விடுபட்டவர்கள் எந்த உயிருக்கும் துன்பம் தர விரும்ப மாட்டார்கள்.
* கூட்டுமுயற்சியால் கிடைத்த பலனை கூட்டாளிக்கு பகிர்ந்து அளிக்காமல், சுயநலத்துடன் வாழ்பவன் நற்கதி பெற முடியாது.
* பேராசை பிடித்த மனிதன் இந்த உலகில் மட்டுமின்றி மேலுலகிலும் துன்பத்திற்கு ஆளாவது உறுதி.
* விருப்பு வெறுப்பற்றவர்களாக வாழுங்கள். பிறரால் ஏற்படும் துன்பத்தை சகிப்புத்தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.
* இன்பம் வந்தபோது மகிழ்ச்சியில் துள்ளாமலும், துன்பம் வந்தபோது துவண்டு வருந்தாமலும் மனதை சமநிலையில் வைக்க வேண்டும்.
* வாழ்க்கை என்னும் கடலில் இன்ப, துன்ப அலைகள் ஆர்ப்பரித்து அலைக்கழிக்கின்றன. இருந்தாலும் ஆழ்கடல் அமைதியைப் போல வாழ்விலும் அமைதியைப் பெற வழியுண்டு.
* சமுதாயத்தில் பெரும்பாலானவர்களுக்கு நன்மை தரும் வாழ்க்கை முறைகளையே ஒழுக்கநெறி என்று குறிப்பிடுகிறோம்.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தீமைகளைச் செய்பவன் விலங்குப் பிறப்பை அடைந்து அளவில்லாத துன்பங்களைப் பெறுவான்.
* மனிதன் அவனவன் செய்த வினைப்பயன்களை அனுபவித்தே கழிக்க வேண்டும். ஒருபிறவியில் செய்த நன்மையோ, தீமையோ மறுபிறவியிலும் அவனைத் தொடர்ந்து வரும்.
* ஒருவன் ஒருபிறவியில் செய்த தர்மத்தின் பயன், அடுத்தடுத்த பிறவியிலும் அவனுக்குத் துணையாக நின்று உயிரைக் காக்கும். நாளைக்கும், இன்றைக்கும் தேவையான நன்மைகளை வாரி வழங்கும்.
* இல்லற நெறியைப் பின்பற்றி வாழ்பவர்கள் அன்பு, அடக்கம், ஒழுக்கம், பொறுமை போன்ற நற்பண்புகளைப் பெற்றிருத்தல் அவசியம்.
* தாவர உணவு வகைகளை மட்டும் உண்ணுங்கள். இதனால், உடல் ஆரோக்கியம் அடைவதோடு மனதிலும் தர்மசிந்தனையும், அமைதியும் நிலைபெற்றிருக்கும்.
* சத்தியத்தை பின்பற்றினால் எதற்கும் அச்சப்படத்தேவையில்லை. சத்தியம் இருக்குமிடத்தில் வஞ்சம், கபடம் காணாமல் போய்விடும்.
* அலைகின்ற மனதை ஒருநிலைப்படுத்த தியானம் பயில வேண்டும். தியானத்தை தொடர்ந்து பயின்று வந்தால் அற்ப எண்ணங்கள் மறைந்து மனதில் தூய எண்ணங்கள் வளரத் தொடங்கும்.
* நாவடக்கம் கொண்டவர்களே நல்ல மனிதர்கள். இவர்கள் பிறரை ஒருபோதும் பழித்துப் பேச மாட்டார்கள். பிறரைப் பற்றி குறை பேசாதவர்களே சான்றோர் ஆவர்.
* பிறரை ஏமாற்றிப் பிழைப்பது கொடிய பாவம். பிறருக்குரிய பொருளை அடுத்தவர் அறியாமல் பெற முயல்பவன் ஏழேழு பிறவிக்கும் தீங்கைத் தேடிக் கொள்கிறான்.
* மனதில் உறுதி இருந்தால் மட்டுமே ஐம்புலன்களை அடக்க முடியும். புலனடக்கம் கை வரப் பெற்றவன் மனதில் ஆசைகளுக்கு இடம் இருப்பதில்லை

நேதாஜி கூறுகிறார்

 கடவுளை தாய், தந்தை, குழந்தை, நண்பன் என அவரவர் விருப்பத்திற்கேற்ப வழிபட்டாலும், தாயாக வழிபடுவதே எளிதாகும். இதன் மூலம் குழந்தையைப் போல, அவருடன் நெருங்கி உறவாட முடியும்.
* மன ஒருமையுடன் உள்ளம் கரைந்து உருகினால், கடவுளின் அருளை நிச்சயமாகப் பெற முடியும்.
* தளராத மனஉறுதி, நன்னடத்தை, தூய்மை, நம்பிக்கை இவையே ஆன்மிகத்தில் உயர்வு பெறுவதற்கான வழிமுறைகள்.
* ஏற்றுக்கொண்ட கொள்கையில் துன்பம் நேரிட்டாலும், உயிரே போக நேர்ந்தாலும் குறிக்கோளில் இருந்து பின்வாங்காமல், அதை நிறைவேற்றிய தீர வேண்டும்.
* உயிர் வாழ உணவு அவசியம் போல சுதந்திரமாக வாழ்வதற்கு தியாக உணர்வு அவசியம்.
* மற்றவர்களின் நன்மைக்காக தன்னையே தியாகம் செய்பவன் மனதில் எப்போதும் அமைதி குடிகொண்டிருக்கும்.
* உண்ணும் உணவுக்கு ஏற்ப மனிதனின் குணம் அமைகிறது. சாத்வீகமான உணவு நல்ல பண்புகளை வளர்க்கும்.
* மனிதருக்குரிய அடிப்படையான குணம் அன்பு. அன்பில்லாதவன் வாழ்வதில் அர்த்தமில்லை.
* சிறிய செயல் செய்பவனைப் பார்த்து நாம் சிரித்தால், நம்மைப் பார்த்து இறைவன் சிரிப்பான். உயர்வு தாழ்வு கருதி யாரையும் இழிவாக நினைப்பது கூடாது.
* துக்கப்படுவதால் வாழ்வின் எந்தப் பிரச்னையும் தீர்ந்து விடப்போவதில்லை. மாறாக பிரச்னையின் தாக்கம் தான் அதிகமாகும்.
* துன்பத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே சுகத்தின் அருமையை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
* அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதீர்கள். உயிர் உள்ள வரை அறிவுக்கதவு திறந்தே இருக்கட்டும். நாம் வளர்வதோடு அறிவையும் வளர்த்துக் கொள்வதே உண்மையான வளர்ச்சி.
* கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும் கொண்டவன் எச்செயலிலும் சாதனை புரிய முடியும்.
* கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் நம் குடும்பவாழ்விலும் சரி, சமுதாயவாழ்விலும் சரி.. வளர்ச்சியைக் காண முடியாது.
* நீதியுணர்வே வாழ்வின் ஜீவநாடியாக இருக்கிறது. அதனால் நீதியை நிலைநாட்ட நம்மால் இயன்றதைச் செய்ய முற்பட வேண்டும்.
* சுதந்திரம் இல்லாத மனிதன் உயிர் இல்லாத உடலைப் போன்றவன்.
* பிழையைச் சரிப்படுத்திக் கொள்ள முயலுங்கள். இதனால் யாருக்கும் அவமானம் இல்லை.
* பிறருக்கு உபகாரம் செய்வது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி. பரோபகாரம் செய்வதில் யாரும் அலுத்துக் கொள்ளக்கூடாது.
* நியாயமற்ற ஆசை மனதில் எழும் போதே அதை வளர விடாமல் கிள்ளி எறிந்து விட வேண்டும். இதில் தாமதிப்பது ஆபத்தில் முடிந்து விடும்.
* தர்மத்திற்கு முரண்படாத நல்ல விருப்பங்கள் அனைத்தும் கடவுளுக்கு உகந்தவையே. அதை அடைய முயல்வதில் தவறொன்றும் இல்லை.
* ஒரு தீய எண்ணம் பல தீய எண்ணங்களுக்கு வழி வகுத்து விடும். அதனால், மனம் என்னும் கோட்டையில் பகைவரின் படைகள் நுழைய அனுமதிக்காதீர்கள்.

பெரிய ரோஜாமலர் மாலையைக் காட்டிலும் அன்போடு வழங்கும் ஒற்றை மலர் சிறப்பானது --சின்மயானந்தர்.

எங்கு சென்றாலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள் பண்புள்ளவர்கள். பண்பில்லாதவர்கள் ஓரிடத்தை விட்டு சென்ற பிறகே மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள்.
* கண்ணுக்குத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், உணர்ந்தாலும், உணராவிட்டாலும் மனம் என்னும் வீட்டில், கடவுள் குடியிருக்கத்தான் செய்கிறான். நம்மை இயக்குபவனும் அவனே. அவனுடைய அருளால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
* மனிதன் தன்னை அறிய முயற்சிக்க வேண்டும். தன்னை அறிந்து கொண்டவன் எந்தவிஷயத்தில் ஈடுபட்டாலும் சாதனை படைக்க முடியும். உயர்ந்தாலும் தாழ்வடைந்தாலும் நெஞ்சை நிமிர்த்தி வாழ முடியும்.
* கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். உண்மையான பக்தி இருந்தால் நம்மால் அவரைக் காணமுடியும். அப்படிப்பட்டவர்கள் எல்லா உயிர்களிலும், எல்லாப் பொருள்களிலும் கடவுளைக் காணும்பேறு பெறுவர்.
* அன்றாடம் செய்ய வேண்டிய கடமையே வழிபாடு. சிலர் ஆபத்து வந்தால் மட்டும் கூச்சல் போட்டு, ஆண்டவனை அழைக்கின்றனர். இது முறையல்ல.
* இறைவழிபாட்டால் மனப்பக்குவம் உண்டாகும். வாழ்க்கை சீராகி நலம் சேரும். எதிர்பாராமல் துன்பம் நேரும்போது அதைச் சமாளிக்கும் சமயோசிதமும் நிதானமும் ஏற்படும்.
* பக்தியில், விரதத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. விரதம் மேற்கொள்ளும் போது நாம் தூய்மைப்படுகிறோம். மனதில் உறுதி இருக்கும்போது பட்டினி கிடப்பதோ, கண் விழித்திருப்பதோ சிரமமாகத் தோன்றாது.
* நாம் அனுபவிக்கும் நன்மைதீமைகள் முன்வினைப்பயனால் உண்டாகின்றன. இதையே விதி என்கிறோம். அதை மாற்ற முடியாவிட்டாலும், அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது.
* தியாகசிந்தனை கொண்ட நம் முன்னோர்கள் துன்பப்படும் நேரத்தில் கூட தங்களின் நேர்மையைக் கைவிட்டதில்லை. உண்மை பேசுவதால் மட்டுமே வாழ்வில் உயர்வு பெற முடியும் என்பதை நமக்கு எடுத்துக் காட்டியுள்ளனர். நாமும் அதைப் பின்பற்றி வாழ்வில் உயர வேண்டும்.
* நல்ல பண்புகளுடன் நாம் வாழும் போது உலகியல் தேவைகள் பூர்த்தியாகாமல் போகலாம். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், ஆன்மிக வாழ்வுக்குரிய மிகச் சிறந்த பலன்களை நற்பண்புகளால் மட்டுமே பெற முடியும்.
* உள்ளத்தில் அன்பு ஊற்றெடுக்குமானால் எளிய காணிக்கையைக் கூட இறைவன் பெரிதாக ஏற்று மகிழ்ச்சி அடைவான். காணிக்கைப் பொருளின் மதிப்போ, விலையோ முக்கியம் அல்ல. பெரிய ரோஜாமலர் மாலையைக் காட்டிலும் அன்போடு வழங்கும் ஒற்றை மலர் சிறப்பானது.
* மக்களுக்குச் செய்யும் சமூகத்தொண்டு கூட மிகக் குறுகியது தான். ஆனால், துறவிகள் உலக நன்மைக்காகச் செய்யும் பிரார்த்தனைகளின் ஆற்றல் உயர்ந்தது. அது நம் கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும், அதனால் ஏற்படும் நன்மைகள் எல்லை இல்லாதவை.

எக்காலத்திலும் அழியாத செல்வம் கல்வியே. -வள்ளுவர்

மன மாசு நீங்க அறநெறிகளை உணர்த்தும் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவேண்டும். அந்நூல்கள் வலியுறுத்தும் நெறிமுறைகளைப் பின்பற்றி வாழவேண்டும்.
* எண், எழுத்து ஆகிய கணிதமும், இலக்கியமும் கண்களைப் போல வாழ்விற்கு துணை செய்கின்றன.
* கல்வி கற்றவர்களே கண்ணுடையவர்கள். மற்றவர்களோ, முகத்தில் இரு புண்களைப் பெற்றவர்கள்.
* பிறருடன் கூடி நல்லவிஷயங்களை மட்டுமே பேச வேண்டும். நல்லவர்களைப் பிரிய நேர்ந்தால், "ஐயோ! இவர்களை விட்டுப் பிரிகிறோமே!' என்று வருந்திப் பிரிய வேண்டும். இதுவே கற்றவர்கள் செய்யும் செயலாகும்.
* செல்வம் படைத்த பணக்காரர் முன் ஏழை உதவி கேட்டுப் பணிந்து நிற்பதைப் போல, ஆசிரியரிடம் மாணவர்கள் பணிவாகப் பாடம் பயில வேண்டும். ஆசிரியருக்கு பணியாதவர்கள் கீழோராகக் கருதப்படுவர்.
* தோண்டத் தோண்ட மணலில் நீர் சுரப்பது போல, நல்ல நூல்களைப் படிக்கப் படிக்க மனிதர்களின் அறிவு பெருகும்.
* கல்வியில் சிறந்தவன் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அது அவனுடைய சொந்தநாடே. எந்த ஊருக்குச் சென்றாலும் சொந்த ஊரே. நாம் வாழும் காலம் வரை கல்வி கற்பதில் ஆர்வம் கொள்ள வேண்டும்.
* ஒரு பிறவியில் நாம் கற்ற கல்வி, தொடர்ந்து வரும் ஏழேழு பிறவிக்கும் பாதுகாப்பாக வரும்.
* நமக்கு இன்பம் அளிப்பதோடு, மற்றவர்க்கும் மகிழ்ச்சியை வழங்குவ தால்,கல்வியை விருப்பத்துடன்கற்க வேண்டும்.
* பொன்னும் பொருளும் ஒருவருக்குச் செல்வம் ஆகாது. எக்காலத்திலும் அழியாத செல்வம் கல்வியே.
* கற்றவர்கள் கூடிய சபையில் படிக்காதவர்கள் அமைதி காப்பது நல்லது. இதனால், ஒருவரின் அறியாமை வெளிப்படாது. நல்லவர் என்ற பெயரையும் வாங்கலாம்.
* படிக்காவிட்டால் அறிஞர்களுடன் உறவாட முடியாது. படிக்காதவன் தன்னைப் பற்றி பெருமையாக நினைத்தால், அது அவனுடைய அறியாமையையே காட்டும்.
* உருவத்தால் மனிதராக இருந்தாலும், கல்வி கற்காவிட்டால் பயனற்ற தரிசு நிலத்துக்கே சமமாவர்.
* மதிநுட்பம் இல்லாத மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வது உயிரற்ற மண்பொம்மையை அழகுபடுத்துவது போலாகும். கல்வியே ஒருவருக்கு அழகைக் கொடுக்கும்.
* நல்லவர்களிடம் இருக்கும் வறுமை கொடியது. கல்வியறிவு இல்லாத கயவர்களிடம் இருக்கும் செல்வம், அதை விடக் கொடியது.
* செல்வச் செழிப்பு மிக்க நல்ல குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும், கல்விபெறவில்லை என்றால் அவர் உயர்குடியில் பிறந்தவராக மாட்டார்.
* அறிவை வளர்க்கும் நல்ல நூல்களை படித்து பின்பற்றும் மேலோர்களுடன் படிக்காதவர்களை ஒப்பிடும் போது, அவர்களை விலங்குகள் என்றே சொல்ல வேண்டும்.
* அறிஞர்களிடம் நல்ல விஷயங்களைக் கேட்டுப் பெறும் கேள்விச் செல்வமே சிறந்த செல்வம்.
* கேள்விச் செல்வம் என்னும் உணவைப் பெறுவதில் விருப்பம் கொள்ளுங்கள். செவிக்கு உணவு இல்லாத நேரத்தில் சிறிதளவு வயிற்றுக்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

விளக்கில் இருக்கும் ஐந்து முகங்கள்


* விளக்கில் இருக்கும் ஐந்து முகங்கள் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசிதம், சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகளும் பெண்களுக்கு அவசியம் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளன.
* தரையில் விளக்கேற்றி வைக்கக்கூடாது. மரப்பலகையில் கோலமிட்டு, அதன் மேல் விளக்கு இருக்க வேண்டும். விளக்கிற்கு மலர் சூடுவது மிக நல்லது.
* தீபலட்சுமியாகப் போற்றப்படும் திருவிளக்கிற்கு சந்தனம், குங்குமம் இடுவது அவசியம். ""தீபலட்சுமியே! எங்கள் வீட்டில் எப்போதும் நிலைத்திருப்பாயாக!'' என்று சொல்லிக்கொண்டே விளக்கேற்ற வேண்டும்.
* அம்மன் கோயில்களில் மாவிளக்கு வழிபாடு செய்வது சிறப்பானது. உடல் ஆரோக்கியம் பெற செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நேர்த்திக்கடனாக மாவிளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.
* நாயன்மார்களில் நமிநந்தியடிகள், கணம்புல்லர், கலியநாயனார் ஆகியோர் விளக்கு வழிபாட்டினால் சிவன் அருளைப் பெற்றவர்கள். வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் அணைய இருந்த விளக்கைத் தூண்டிய எலி மறுபிறவியில் மகாபலிச்சக்கரவர்த்தியாகப் பிறந்தது.
* விளக்கேற்ற எக்காலமும் உ<கந்தது பஞ்சுத்திரி. விழா நாட்களில் தாமரைத்தண்டுத்திரியால் விளக்கேற்ற முன்வினைப்பாவம் தீரும். எருக்கம் பட்டைத்திரியால் விளக்கேற்ற செல்வம் சேரும்.
* விளக்கை ஒருமுகம் ஏற்ற ஓரளவு பலனும், இரண்டுமுகம் ஏற்ற குடும்ப ஒற்றுமையும், மூன்றுமுகம் ஏற்ற புத்திரபாக்கியமும், நான்குமுகம் ஏற்ற செல்வவளமும், ஐந்து முகம் ஏற்ற சகலசவு பாக்கியமும் உண்டாகும்.
* கிழமைகளில் செவ்வாய், வெள்ளியும், திதிகளில் அமாவாசை, பவுர்ணமியும், நட்சத்திரத்தில் கார்த்திகையும், பிரதோஷமும், தமிழ் மாதப்பிறப்பு நாளும் கோயில்களில் திருவிளக்கு பூஜை நடத்த உகந்தவை.
* கிழக்குநோக்கி விளக்கேற்ற துன்பம் நீங்கும். மேற்கு நோக்கி ஏற்றுவதால் கடன்தொல்லை அகலும். வடக்குநோக்கி ஏற்ற செல்வவளம் பெருகும். தெற்கு நோக்கி ஏற்றுவது கூடாது.
* நதிகளில் ஏற்றி வைக்கும் தீபத்தை "ஜலதீபம்' என்பர். காசியில் தினமும் மாலையில் ஜலதீபங்களை ஏற்றி கங்கைநதியை வழிபடுவது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.
* திருவிளக்குபூஜை நடத்துவது புண்ணியம் மிக்கதாகும். பலர் கூடி ஒரே மனதுடன் பூஜையில் கலந்து கொள்ளும்போது, யாகம் செய்வதற்கு ஈடானதாக ஆகிறது. கூட்டுப் பிரார்த்தனையால் இறையருளை எளிதாகப் பெற முடியும்.

கொலு பொம்மை தத்துவம்:

கொலு பொம்மை தத்துவம்: மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேற வேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது. கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது சிறப்பு.
முதல் படியில் புல், செடி, கொடி ஆகிய தாவர பொம்மைகளை வைக்க வேண்டும். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை இது குறிக்கிறது.
இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம் பயக்கும். நத்தை போல மெதுவாக நிதானமாக சென்று உயர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று உறுதி கொள்வதே இதன் பொருள்.
மூன்றாம் படியில் எறும்பு, கரையான் புற்று பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பைப் போல சுறுசுறுப்பு, எத்தனை முறை தகர்த்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போன்ற திட மனப்பான்மை வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.
நான்காம் படியில் நண்டு, வண்டு பொம்மைகள் இடம்பெற வேண்டும். இவற்றின் குணம் ஆழமாக ஊடுருவி பார்ப்பது. எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயலாற்றுவதை இந்த பொம்மைகள் குறிக்கும்.
ஐந்தாம் படியில் மிருகம், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட வேண்டும். பறவை போல் கூடி வாழ வேண்டும் என்பதே இதன் பொருள்.
ஆறாம் படியில் மனித பொம்மை வைக்க வேண்டும். வாழ்க்கையில் மேற்கண்ட ஐந்து படிகளில் உள்ளது போன்ற குணங்களை கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.
ஏழாம் படியில் முனிவர்கள், மகான்கள் பொம்மை வைக்க வேண்டும். மனிதன் உயரிய பக்தி மார்க்கத்தை கடைபிடித்தால் மகான்கள் ஆகலாம் என்பதே இதன் பொருள்.
எட்டாம் படியில் தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகான் நிலையை அடையும் மனிதன் தேவர் நிலைக்கு உயர்வதை இது காட்டுகிறது.
ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி சிலையை நடுவில் பெரிய அளவில் வைக்க வேண்டும். உயிர்கள் தங்கள் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே கொலு உருவானது.
நம் வீட்டு குழந்தைகளிடம் கொலு பொம்மைகளை காட்டி மகிழ்ச்சிப்படுத்துவதுடன், அவர்களின் வயதுக்கேற்ற முறையில், இந்த தத்துவார்த்தங்களையும் எளிதில் புரியுமளவு கற்றுத்தர வேண்டும்

குருநானக் விரும்புகிறார்

மனம் என்னும் நிலத்தைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள். அதில் இறைவனின் திருநாமம் என்னும் விதையைத் தூவுங்கள்.
* பணக்காரர்களிடம் தர்மசிந்தனையும், இரக்கமும் இருக்க வேண்டும். அது குறையத் தொடங்கினால், அவனை அழிக்க கடவுள்
முடிவெடுத்து விட்டார் என்று பொருள்.
* நன்மை செய்தவருக்கு திரும்ப நன்மை செய்வது உலக வழக்கம். ஆனால் தீமை செய்த பாவிக்கும் நன்மை செய்வது உத்தமர்களின் குணம்.
* குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலரில் தண்ணீர் ஒட்டாதது போல, இந்த உலகத்தின் மீது பற்றின்றி இருக்கப் பழகுங்கள்.
* பொறாமை நிறைந்தவன், பொய் பேசுபவன், பிறர் செல்வத்தை அபகரிப்பவன் ஆகிய தீயபண்பு நிறைந்தவன் அறிஞனாக இருந்தாலும் நரக தண்டனையை அடைவான்.
* மனிதனது இதயத்தில் இருந்து வழிநடத்துபவன் இறைவன். உலகம் அவருக்கு உரிமையானது. கடவுளுடைய காலடியில் சரணடைந்து விடுவதே அவருக்குச் செலுத்தும் காணிக்கை.
* பக்தி முழுமையானதாக இருந்தால் மட்டுமே பணத்தின் மீதுள்ள ஆசையில் இருந்து நம்மால் விடுபட முடியும்.
* உண்மையும், அன்பும் ஆன்மிக வாழ்வின் அடிப்படை விஷயங்கள். இவை தவிர மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரம் தான்.
* நான் என்ற ஆணவமும், எனது என்ற ஆசையும் இருக்கும் வரையில் மனிதனால் கடவுளிடம் நெருங்க முடியாது.
* பொறுமையை விட சிறந்த தவம் கிடையாது. திருப்தியைத் தவிர உயர்ந்த இன்பம் உலகில் வேறில்லை.
* சத்தியம் நிரந்தரமானது. முதலோ, முடிவோ கிடையாது. தன் நிலையில் இருந்து எப்போதும் ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
* நீதி தவறாத வகையில் பணத்தைச் சம்பாதியுங்கள். நாலு பேருக்காவது தானம் செய்யுங்கள்.
* மனத்தூய்மை பெற கடும் முயற்சி தேவை. தூய்மை பெற்ற பின்பே கடவுள் வழிபாட்டைத் தொடங்க வேண்டும்.
* வாய்மை என்னும் வாசனை திரவியத்தை பூசிக் கொள்ளுங்கள். அப்போது உங்களின் முகம் பிரகாசத்துடன் விளங்கும்.
* அழகு, பெருமை, இளமை, செல்வம் போன்ற விஷயங்கள் திருடர்களைப் போல நம்மிடம் இருக்கும் ஞானத்தை அபகரித்து விடும்.
* விடியற்காலைப் பொழுது மகத்துவம் மிக்கது. ஜபம், தியானம், வழிபாடு ஆகியவை செய்ய ஏற்ற வேளையாகும்.
* ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவன் பக்திக்கு தகுதியில்லாதவன். யுகம் யுகமாய் ஆய்வு செய்தாலும் அவனுக்கு ஆன்மிகம் வாய்க்காது.
* சாந்தம் என்பது அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். வெறும் உதட்டளவில் இருக்கும் மவுனம் உள்ளத்தில் அமைதியை உண்டாக்கப் போவதில்லை.
* உலகத்தில் உள்ள செல்வம் அனைத்தையும் செலவழித்தாலும் திருப்தியை ஒருவரால் விலைக்கு வாங்க முடியாது.
* மன்னிப்பதைக் காட்டிலும் மகத்தான ஆயுதம் வேறொன்று உலகில் கிடையாது.

அளவோடு உணவுண்டால் உடல் அதை ஜீரணிக்கும்.வேதாத்ரி மகரிஷி

அளவோடு உணவுண்டால் உடல் அதை ஜீரணிக்கும். அதிகமாக உணவு உண்ணும்போது உணவு, உடலை ஜீரணித்துவிடும்.
* பழக்கம், புலன்கவர்ச்சி, சூழ்நிலை ஆகிய காரணங்களால் மனிதன் தவறுகளைச் செய்கிறான். செய்த தவறுகளே பின்னர் துன்பமாக முளைக்கின்றன.
* பெரும்பாலும் நாம் செய்யும் தவறுகள்நமக்குத் தெரிவ தில்லை. விழிப்புணர்வுடன் இருந்து தவறுகளைக் கண்டறிவதோடு, மீண்டும் நிகழாமல்தடுக்கவும்வேண்டும்.
* மனம் தான் மனித வாழ்வின் விளைநிலம். மனதின் தன்மையே மனிதனிடம் வெளிப்படுகிறது. மனதின் உயர்வே மனிதனின் உயர்வாகும்.
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கிவிடும். மனதின் குறைகளைக் களைவதோடு நல்வழியில் செல்லும் மனவலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* இன்பமும், அமைதியும் மனதிற்குள் இருந்து தான் வரவேண்டும். ஒருவன் தன்னைத் தாழ்த்திக்கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனதிடத்தில் தான் இருக்கிறது. மனம் தன்னை உணரத் தொடங்கிவிட்டால் மனிதனும் தெய்வ நிலையைப் பெற முடியும்.
* மனமும், எண்ணமும் ஒன்றுதான். எண்ணத்தில் நன்மையும், உறுதியும், ஒழுங்கும் அமைந்துவிட்டால் எண்ணியதையெல்லாம் பெறமுடியும்.
* தீர்க்க முடியாத துன்பம் என்று ஒன்று உலகில் கிடையாது. அதைக்கண்டு வருத்தப்படக்கூடாது. துன்பத்தைத் தீர்க்கும் வழியை அறியாமல் மனிதன் கவலையால் தவிக்கிறான். திறக்க முடியாத பூட்டே கிடையாது. சரியான சாவியைக் கண்டுபிடிக்காதவர் கள் தான் உண்டு.
* வேண்டாத விருந்தாளி என்றால் ஒருமுறை முகத்தைச் சுளித்துவிட்டால் ஓடிவிடுவார். ஆனால், வேண்டாத தீய எண்ணமோ விரட்ட விரட்ட மீண்டும் வரும். அதனால், தீய எண்ணத்திற்கு ஒருபோதும் இடம் தருவது கூடாது.
* ஆரோக்கியம் இருந்தால் தான் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு வாழ முடியும். அறிவும் திறம்பட இயங்க ஆரோக்கியம் அவசியம். எனவே, ஒவ் வொருவரும் திடமான உடல்நலத்துடன் வாழும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
* நாம் அனைவரும் இந்த பரந்த சமுதாயத்தின் ஓர் அங்கம். சமுதாயத்தில் பெற்ற வசதி வாய்ப்புகள், பொருட்கள் மூலமாகத் தான் இந்த உடலை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். எனவே, நம்முடைய இந்த உடலும் சமுதாயத்தின் சொத்து.
* நோய் வந்த பின் அதைப் போக்க முயற்சி செய்வதைவிட, நோய் வராமல் தடுப்பதே சிறந்தது. மனத்தூய்மை,சத்துள்ள உணவு, உழைப்பு, ஓய்வு இவற்றில் போதிய அக்கறை இருந்தால் உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
* ஆசையை அடியோடு ஒழிப்பது என்பது நடக்காத செயல். அதற்கான தேவையும் நமக்கு இல்லை. அதனைச் சீர்படுத்தி வாழக் கற்றுக் கொள்வது அறிவுடைய செயலாகும்.
* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்வது கூடாது. இல்லாவிட்டால் சுகபோகங்களிலேயே மனம் ஈடுபடத் தொடங்கிவிடும். இயன்றவரை குறைத்துக் கொள்ள முயலவேண்டும்.
* எந்தச் சூழ்நிலையிலும் ஒருவனைக் கோபம் அணுகவில்லை என்ற நிலையைப் பெற்றுவிட்டால், அவன் ஞானம் அடைந்து விட்டான் என்று பொருள் கொள்ளலாம்.
* தேவையான இடத்தில் கோபம் கொண்டது போல நடிக்கவேண்டுமானால் செய்யலாம். நமது மனம் அப்போது அமைதியாக சலனமற்று இருப்பது அவசியம்.

Tuesday, October 30, 2012

காந்தி எப்படி மகாத்மா ஆனார்?

தென் ஆப்பிரிவிக்காவில் அந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்பு அவரும் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதர்; அங்கிருந்து வீறு கொண்டு கிளம்பிய அந்த மனித சக்தி, அகிலம் முழுவதும் தனது அஹிம்சை நெறியை ஆற்றலோடு பரப்பியதெப்படி? மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எப்படி மகாத்மா ஆனார்? சத்குருவின் வார்த்தைகளில் அழகாக வெளிப்படுகிறது அந்த அற்புத உண்மை... படித்து மகிழுங்கள்...


அனைத்து ஆன்மீகச் செயல்முறைகளையும் ஒவ்வொருவரும் செய்யமுடியும். இதில் கேள்விக்கே இடமில்லை. அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால், அது மிகவும் துன்பகரமானது. ஏதோ ஒன்றுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதால்தான் அவர்கள் ஓர் எல்லைக்குள் தங்களை குறுக்கிக் கொள்கிறார்கள். நம் அடையாளங்கள் குறுகிய எல்லைக்குள் இருப்பதால், நம்முடைய சாத்தியங்களும் குறுகிய எல்லைக்குள்ளேயே இருக்கிறது. உடலுடன் உள்ள அடையாளத்தை விட, எவ்வளவு பெரிய செயல்களைச் செய்ய முடியும் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

சரித்திரத்தில் இடம் பெற்ற பலருடைய வாழ்க்கையில் இப்படி நடந்திருக்கிறது. ஒரு குறுகிய எல்லைக்குள் வாழ்ந்துகொண்டு இருந்திருப்பார்கள். ஏதோ ஒரு காரணத்தால், அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏதாவது நடந்து அவர்கள் எல்லையை உடைத்துவிடும். பிறகு அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விரிந்த செயல்முறைகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தாங்களே எதிர்பார்க்க முடியாத விஷயங்களைச் செய்வார்கள். உங்களுக்கெல்லாம் தெரிந்த ஓர் உதாரணம்... மகாத்மா காந்தி, மிகுந்த எல்லைக்குள் இருந்த மனிதர். அவர் திறமையான வழக்கறிஞரும் அல்ல. நீதிமன்றத்தில் தைரியமாக எழுந்து சரளமாக பேசக்கூடியவரும் அல்ல. ஆனால் ஒரே ஒரு சம்பவம், திடீரென அவருடைய அடையாளங்கள் கழன்றுவிட்டன.

தென் ஆப்பிரிக்காவில் அவர் வழக்கறிஞர் தொழில் செய்துகொண்டு இருந்தபோது ஒரு நாள் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார். அப்போது நடுவில் ஒரு ரயில் நிறுத்தத்தில் ஏறிய ஒரு வெள்ளைக்காரர், காந்தியிடம் ஒழுங்கான பயணச்சீட்டு இருந்தபோதும் அவர் கறுப்பர் என்பதால் இறங்கச் சொன்னார். காந்தி மறுக்க, அந்த வெள்ளைக்காரர் பயணச்சீட்டு பரிசோதகருடன் சேர்ந்து காந்தியை அவருடைய உடைமைகளுடன் அந்த பெட்டியிலிருந்து தூக்கி வெளியே வீசினார்.

அப்போது பிளாட்பாரத்தில் விழுந்த காந்தி பல மணி நேரங்களுக்கு அங்கிருந்து எழுந்திருக்கவே இல்லை. "எனக்கு இது ஏன் நடந்தது? நானும் முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தேன், பிறகு நான் ஏன் தூக்கி எறியப்பட்டேன்? இதற்கு வழி காண வேண்டும்" என்று அன்று முதல் மக்களின் பெரிய பிரச்சனைகளுடன் தன்னை தானே அடையாளப்படுத்திக் கொள்ள, காந்தி மகாத்மாவாய் மலர்ந்தார். சிறிய அடையாளங்களைத் தகர்த்தெறிந்து மிகப் பெரிய அடையாளங்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால் மகாத்மாவானார்.

மகாத்மா காந்தியைப் போல் வேறு யாரும் இந்தப் பிரபஞ்சத்தில் இவ்வளவு மனிதர்களை வழிநடத்தியதில்லை. அதுவும் மிக எளிய வழிகளில். இந்த நாட்டில் நன்றாக வேர் ஊன்றியிருந்த அன்னியரை போர், வன்முறை போன்ற எந்த வழிகளுமின்றித் துரத்தினார். இந்தப் பிரபஞ்சத்தில் இதற்கு முன் நடந்திராத அதிசயம் இது. இந்த நாட்டை வென்றவர்கள் அதற்கென்று சில விலை கொடுத்துதான் இந்த நாட்டைக் கைப்பற்றினர். அவர்களும் எளிதாகப் போய்விடவில்லை. ஆனாலும், சண்டையில்லாமல், துப்பாக்கி ஏந்தாமல், வன்முறையைக் கடைப்பிடிக்காமல் அவர்களைத் துரத்தியடித்தார் மகாத்மா. இந்த நாட்டு மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுத்த அவரால் முடிந்தது.

காவலர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுடுவது ஒரு விஷயம். அவர்கள் மீது குண்டு எறிவது மற்றொரு விஷயம், ஆனால் நிராயுதபாணிகளாகத் தெருவில் சென்று தலையில் அடிவாங்கி மண்ணில் வீழ்வது முற்றிலும் வேறு விஷயம். முதல் பகுதி மக்கள் அடிபட்டு வீழ்ந்தவுடன் அடுத்த குழுவைச் சார்ந்த மக்கள் அடிவாங்கப் போய் நிற்பது என்பது மிகவும் வேறுவிதமான வலிமையான விஷயம். அது அவ்வளவு எளிதல்ல. ஒருவர் அப்படிச் செய்வதற்கு மிகவும் ஆழமான மன வலிமை வேண்டும். லட்சக்கணக்கான மக்களை அவரால் அப்படி ஈடுபடுத்த முடிந்தது.

தான், தன் குடும்பம், தன் வாழ்க்கை என்ற எல்லையை விட்டுவிட்டு அப்போது சமூகத்தில் நிலவிவந்த மக்களின் முக்கியப் பிரச்சனைகளோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால் அவருடைய சிறிய அடையாளம் சிதறியது. எனவே நீங்கள் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று நிர்ணயித்து ஓர் எல்லைக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

உங்களால் செய்ய முடிந்த எதையும் செய்யுங்கள். செய்ய முடியும் என்று நினைக்கும் எதையும் செய்யுங்கள்!

கோயிலில் கொடுக்கும் இறைவனுக்கு சூட்டிய மலர்களை என்ன செய்ய வேண்டும்?

ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் மலர்கள் மற்றும் அனைத்து பிரஸாதங்களும் நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் எனில் அழுக்கற்றது, தூய்மையானது. அவற்றில் இறைவனின் அருட்சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்கக்கூடாது. ரூபாய் நோட்டுக்கும் வெறும்தாளுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா. ரூபாய் நோட்டுக்களிலும் கூட அதனில் பதிக்கப்பட்ட எண்களைப் பொறுத்து மதிப்பு மாறுகிறது. இதுபோன்று ஒவ்வொரு கடவுளர்களின் பிரஸாதமும் ஒவ்வொரு சக்தி உடையது. அவற்றை நாம் பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு, நமது நெற்றியிலும், இருதயத்திலும் வைத்து அந்த இறை அருள் நம்முள் உட்புகுவதாக எண்ணுதல் வேண்டும். பிறகு வீட்டில் பூஜை அறை இருப்பின் அங்கு வடக்கிலோ, வடகிழக்கு திசையிலோ ஒரு தாம்பாளத்தின் மீது வைத்துவிடல் வேண்டும். வீட்டில் பெண்கள் அவற்றிலிருந்து சிறிது எடுத்து பக்தியுடன் தலையில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காய்ந்த மலர்களை நீர்நிலைகளிலோ, மரங்களின் கீழோ வைத்திட வேண்டும். நமது வீட்டில் உள்ள இறை உருவங்களுக்குவேறு மலர்களை சார்த்துவது சிறந்தது

மரணத்தின் பின்.. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது?

மரணத்தின் பின்.. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது?
 
மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன அவை..
பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது. இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன. நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.

Saturday, October 13, 2012

விநாயகர் உருவத் தத்துவம்

தோப்புக்கரணம் போடுவது ஏன்?
 
 
விஷ்ணு தாம் காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று சக்ராயுதம். அவர் அச்சக்கரத்தை ஒரு போரில் ததீசி என்ற முனிவர் மேல் ஏவ அது சக்தி இழந்து திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச் சென்றார்.


அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றார். இதனால் விஷ்ணு மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை அறியாத விஷ்ணு சிவனை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவனின் ஆயிரம் திருநாமங்களாகிய "சஹஸ்ர நாமம்'' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.


மனம் மகிழ்ந்த சிவபெருமான் முன்பொருசமயம் ஜலந்தராசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சுதர்சனம் எனும் சக்கரப்படையை விஷ்ணுவுக்கு கொடுத்தார். விஷ்ணு திரும்பி வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார். விஷ்ணுவின் கையிலிருந்த சுதர்சனக் சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக் கொண்டார்.


அதனைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு, தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்தார். அவரை வணங்கி, தமது நான்கு திருக்கரங்களாலும் இருகாதுகளையும் பற்றிக்கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோர்பி, கர்ணம் இட்டார். இந்த செயல் பார்க்க மிகவும் நகைச்சுவையாக இருந்ததால் விநாயகர் தம் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.


அப்போது அவர் வாயில் இருந்த சுதர்சனச் சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசி பெற்றார் விஷ்ணு. (இந்த கணபதி விகடச்சக்கர விநாயகர் என போற்றப்படுகிறார். இவர் காஞ்சீபுரம் கோவிலில் வீற்றிருந்த அருளாட்சி செய்கிறார்). இப்படி தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள் புரிவார் என்பதாலேயே இச்செயல் நடைமுறைக்கு வந்தது.
 
விநாயகருக்கு 21 வகை இலை அர்ச்சனை
 
விநாயகர் சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்து கொள்வது நலம் பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:-
1. முல்லை இலை: அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி இலை: இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. விஸ்வம் இலை: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
5. இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடை யலாம்.
6. ஊமத்தை இலை: பெருந்தன்மை கைவரப் பெறும்.
7. வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.
8. நாயுருவி: முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.
10. அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
11. எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்.
12. மருதம் இலை: மகப்பேறு கிடைக்கும்
13. விஷ்ணுகிராந்தி இலை: நுண்ணிவு கைவரப் பெறும்.
14. மாதுளை இலை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.
15. தேவதாரு இலை: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.
16. மருக்கொழுந்து இலை: இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.
17. அரசம் இலை: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.
18. ஜாதிமல்லி இலை: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.
19. தாழம் இலை: செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.
20. அகத்தி இலை: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை: நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.
 
 
விநாயகர் 12 அவதாரம்
 
விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் என்ற நூல் கூறு கிறது.
  வக்ரதுண்ட விநாயகர்:பஇவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போது தோன்றி, மீண்டும் உலகத்தை படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவவடிவம்) ஆகியோருக்கு அருளுவார்.
கஜானனபவிநாயகர்: சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.
விக்கிரனபராஜர்: காலரூபன் என்ற அரக் கனை கொல்வதற்காக பிறந்தவர்.
மயூரேசர்: பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர்.
உபமயூரேசர்:சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர்.
பாலச்சந்திரர்:தூமராசன் என்ற அசுரனை கொன்றவர்.
சிந்தாமணி:கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புத பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர்.
கணேசர்:பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர்.
கணபதி:கஜமுகாசுரனை வென்றவர்.
மகோற்கடர்:காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.
துண்டி:துராசதன் என்ற அசுரனை வென்றவர்.
வல்லபை விநாயகர்:மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர்.டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
 
 
விநாயகர் சிலை முன்பு நின்று தலையில் குட்டிக் கொள்ளும் பழக்கம் எப்படி தோன்றியது தெரியுமா?

* விநாயகர் முன் தோப்புக் கரணம் இடுவதனால் அறிவு வளர்ச்சியும், உடல் நலமும் உண்டாகும். அகத்திய முனிவர் சிவனிடம் இருந்த காவிரி நதியைக் கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வரும்போது குடகு மலையில் சிவ பூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது இந்திரன் சீர்காழியில் பூஜை செய்து கொண்டிருந்தான்.

மழையின்றி நந்தவனம் வாடியது. நாரத முனிவர் இந்திரனை பார்த்து, "அகத்தியருடைய கமண்டலத்தில் உள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும்'' என்று கூறினார். இந்திரன் விநாயகரை வழிபட்டு வேண்டிக் கொண்டான். விநாயகர் காக்கை வடிவம் எடுத்து சென்று காவிரி அடங்கிய கமண்டலத்தின் மீது அமர்ந்தார்.

அகத்தியர் காகத்தைக் கரத்தால் ஓட்டினார். காகம் காலால் உந்திப் பறந்தது. கமண்டலம் கவிழ்ந்து காவிரி பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியர் காகத்தின் மீது சீறிப்பாய்ந்தார். அது சிறுவனாகி நின்றது. அச்சிறுவனை இரு கரங்களாலும் குட்டும் பொருட்டுக் குறுமுனி ஓடினார். பிள்ளையார் அவருக்கு அகப்படாமல் அங்கும் இங்குமாக ஓடினார்.

அகத்தியர் அச்சிறுவனை அணுகிக் குட்டுவதற்கு இரு கரங்களையும் ஓங்கினார். ஐங்கரங்களுடன் விநாய க்ஷ்கர் காட்சி தந்தருளினார். அகத்தியர் திகைத்து போனார். விநாயகப் பெருமானே உம்மைக் குட்டுவதற்கா கையை ஓங்கினேனே? என்று தன் தலையிலேயே குட்டிக் கொண்டார்.

விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றி "இன்று முதல் என் முன் பயபக்தியுடன் தலையில் குட்டிக் கொண்டோர் கூரிய மதியும் சீரிய நிதியும் பெறு வார்கள்'' என்று அருளினார். இதனால் விநாயகர் முன் பக்தர்கள் தலையில் குட்டிக் கொள்ளும் மரபு உண்டாயிற்று.*
 
பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
 
வராக புராணத்தில் இதற்கொரு கதை சொல்லப்பட்டுள்ளது. ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதாகவும் எண்ணிக் குழப் பம் அடைந்தனர். இதற்குத் தீர்வு காண பரமேஸ்வர னிடம் சென்று முறையிட்டனர்.

பரமன் தனது தர்ம பத்தினி யாம் பார்வதி தேவியை ஞானக் கண் ணால் உற்று நோக்கி னார். அந்த சமயத் தில் அதிசயிக் கும் வகை யில், மோகன வடிவத்தில், எல்லோரை யும் கவர்ந் திழுக் கும் அழகோடு பிள்ளை ஒருவன் தோன்றினான்.

மற்றவர்களது கண்கள் படாமல் இருக்கப் பார்வதி தேவியானவர் பிறரை மயங்கச் செய்யும் இந்த அழகான வடிவத்தை விடுத்துப்பருமனான தொந்தியும் யானைத் தலையும் ஏற்பாய் என்று சொல்லி உருவத்தை மாற்றினாள். பரமன் தன் பிள்ளையை அழைத்து, விநாயகன் என்று பெயர் சூட்டிக் கனங்களுக்கெல்லாம் தலைவனாக நியமனம் செய்தார்.

இனிமேல் எந்தக் காரியங்கள் செய்தாலும் அவரை வைத்தே தொடங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்குத் தடைகள் ஏற்படும் என்றும் அறிவித்து விட்டார். அன்றைய நாள் முதல் இந்நாள் வரை பிள்ளையாரை முதலில் வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது.
 
 
32 விநாயகர் மூர்த்தங்கள்
 
1. பால கணபதி
2. தருண கணபதி
3. பக்தி கணபதி
4. வீர கணபதி
5. சக்தி கணபதி
6. துவிஜ கணபதி
7. சித்தி கணபதி
8. உச்சிட்ட கணபதி
9. விக்ன கணபதி
10. க்ஷிப்ர கணபதி
11. ஏரம்ப கணபதி
12. லட்சுமி கணபதி
13. மஹா கணபதி
14. விஜய கணபதி
15. நிருத்த கணபதி
16. ஊர்த்துவ கணபதி
17. ஏகாட்சர கணபதி
18. வர கணபதி
19. திரயாக்ஷர கணபதி
20. க்ஷிப்ரபிரசாத கணபதி
21. ஹரித்திரா கணபதி
22. ஏகதந்த கணபதி
23. சிருஷ்டி கணபதி
24. உத்தண்ட கணபதி
25. ரணமோசன கணபதி
26. துண்டி கணபதி
27. துவிமுக கணபதி
28. மும்முக கணபதி
29. சிங்க கணபதி
30. யோக கணபதி
31. துர்க்கா கணபதி
32. சங்கடஹர கணபதி
 
விநாயகர் உருவத் தத்துவம்
தத்துவங்கள் தோன்றும் முறையில் முதற்கண் சுத்தமாயையில் இருந்து `ஓம்` என்ற பிரணவ நாதமே தோன்றியது. பிள்ளையார் பிரணவ வடிவினர் ஆதலால் `பிரணவன்' என்றும் `மூத்த பிள்ளையார்' என்றும் அறியப்படுகின்றது. `ஓங்கார நாத தத்துவம்` சிவனையும் சுட்டி நிற்பதால் சிவனும், பிள்ளையாரும் ஒன்றேயென்றும் கொள்ளமுடிகின்றது.

பிரணவத்தை முற்றறிந்தவர் என்பதால் பிரணவன், பிரணவநாதன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். `ஓம்` என்ற பிரணவ மந்திர ரூபியான அவர் ஞானமே வடிவானவர். அவரது திருமேனிய ஒரு தத்துவ வித்தென ஆன்றோர் விஸ்தரித்துள்ளனர். அவருடைய இரு திருவடிகளிலே வலது திருவடியை "முற்றறிவு'' அதாவது `ஞானசக்தி' என்றும்" இடது திருவடியை "முற்றுத்தொழில்'' அதாவது `கிரியாசக்தி' என்றும் உணர்த்தப்படுகின்றது.

அவ்விரு திருவடிகளின் துணையின்றி உயிர்கள் ஒன்றினை அறிந்து கொள்ளவோ, செயலாற்றவோ முடியாது. எல்லாப் பொருட்களையும் ஆகாயம் தன்னுள் அடக்கவும், உண்டாக்கவும், விரிக்கவும், ஒடுக்கவும் கூடிய தன்மையைக்கொண்ட பரந்து விரிந்ததொரு பூதம். ஆகாயம் போலவே சகலவற்றையும் உள்ளடக்கியதாகவே அவரது பேருந்தி காட்சி கொடுக்கின்றது.

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து கருமங்கட்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு `ஐங்கரன்' என்ற நாமம் விளங்குகின்றது. அவரை `பஞ்சகிருத்திகள்' என்றும் கூறுவர்.

அவரது முற்றறிந்த ஞானத்தை முறம் போன்று பரந்து விரிந்த இருசெவிகளும் விளக்குகின்றன. வலது பக்கமுள்ள ஒடிந்த கொம்பு "பாசஞானத்தையும்` இடது பக்கமுள்ள கொம்பு "பதிஞானத்தையும்` உணர்த்துவதாக உள்ளன. விநாயகரின் அடிக்கீழ் மூஷிகம் அழுந்தி அமைதியாகக் காணப்படுவதை, பிரணவ மூர்த்தியின் அடிக்கீழ் ஆணவ மலம் வலிகெட்டு அமைதி காக்கும் என்பதை விளக்குகின்றது.

அவரது உந்தியைச் சுற்றியுள்ள சர்ப்பம் `குண்டலினி சக்தியின்' வடிவம் என்பர். அதன் விரிவுகளும், சுருக்கங்களுமே பிரபஞ்சத்தின் தோற்றம், சுருக்கம் எனப்படுகின்றது. அதை அவர் உந்தியில் அணிந்திருப்பதானது, உலகிற்கு நிமித்த காரணர் அவர்தாம் என்பதையும் உணர்த்துகின்றது. மேலும் விநாயகர் முக்கண் உடையவரெனவும் விளக்கப்பட்டுள்ளது. முக்கண்ணுடைய பெருமை சிவனுக்கே உரியது.

ஆயினும் கிரியா வழி, ரூப வழி நோக்குமிடத்து சிவனும் பிள்ளையாரும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். மேலும், விநாயகருக்கு `சித்தி', `புத்தி' என இரு சக்திகள் உள்ளதாகவும் புராணங்களில் பேசப்படுகின்றது.

விநாயகரின் வலது முன்கை அபய முத்திரையக் காட்டும், வலது பின்கையில் மழுவாயுதமும், இடது முன்கையில் மோதகம் அல்லது மாதுளம்பழம் வைத்திருப்பது போலவும், இடது பின்கையில் பாசக் கயிறோ அல்லது செந்தாமரை மலரோ கொண்டிருப்பது போலவும் சித்தரிக்கப்படுகின்றது. துதிக்கையில் நீர்க் கலசம் ஜகமண்டலம் ஒன்றை ஏந்தியிருப்பார்.

செம்பட்டு வஸ்திரத்தையே அணிந்திருப்பார். விநாயகருக்கு உகந்த முக்கிய நிவேதனப் பொருட்கள் மோதகம், கொழுக்கட்டை பஞ்சாமிர்தம், தேங்காய், அப்பம், அவல், பொரி, கரும்பு, சர்க்கரை முதலியனவாகும். செம்மலர்கள், அறுகம் புல் ஆகியவற்றைக் கொண்டு விநாயகரை அர்ச்சிப்பது மிகச் சிறந்தது.

உலகிலுள்ள சைவ மக்கள் எதையாவது எழுதத் தொடங்கும் பொழுதும், எழுதும் தாளின் தலைப்பில் முதலாவதாக பிள்ளையார் சுழி எழுதிய பின்னரே விடயத்தை எழுதத் தொடங்குவர். பிள்ளையார் சுழி `ள' என்ற ஒரு வட்டமும் ஒரு கோடும் இணந்து இருக்கும். இதற்கு ஒரு தத்துவம் உண்டு, புஜ்ஜியமன வட்டதை `0' பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டை `' நாதம் என்றும் கொள்கின்றனர்.

எனவே பிள்ளையார் சுழியை `நாதபிந்து' என்பர். பிள்ளையாருடன் சிவசக்தியின் இணைப்பை இது உணர்த்துவதாக உள்ளதெனக் கூறப்படுகின்றது. எக்கருமத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிள்ளையாரை வழிபட்ட பின்னரே ஆரம்பிக்கும் வழக்கம் சைவ மக்களிடையை காலாதிகாலமாக நிலவிவருகின்றது. அவரை வழிபட்டுத் தொடங்கினால் செய்கருமம் இடையே எதுவித விக்கினங்களும் இன்றி நிறைவுபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை .
 
யானை முகனுக்கு உகந்த நான்கு லட்ச ஜப வழிபாடு
 
 
விநாயகருக்குப் பல வழிபாடுகள் வித்யாசமான முறையில் இருப்பதை காண பத்ய முறையிலும் விநாயகப் புராணத்திலும், காணலாம். சகங்ரநாமம் என்கிற ஆயிரத்தெட்டு நாமங்கள் தொகுப்பில் கணபதியின் பூரண அருளைப்பெற்றிட சதுர் லட்ச ஜபம் எனனும் நான்கு லட்சம் மூலமந்திர உச்சரித்தல் வழிபாட்டைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது கணபதி சகஸ்ரநாமத்தில் உள்ள 1016-வது நாமா வளியில்லும் சதுர்லட்ச ஜபப்ரீதாயை நம என்று வருகிறது. அடுத்ததாக வரும் 1017-ம் நாமாவனியில் ஓம் சதுர்வசட்ச ஜபப்ரகாசிதாய நம: என்று வருகிறது.

அதாவது நான்கு லட்சம் மூல மந்திர ஜபம் செய்பவர்களுக்கு விநாயகர் கனவில் ப்ரசன்னமாகி வேண்டும் வரங்களை அருள்வார் என்று பொருள். சதுராவர்த்தி தர்ப்பணம் என்ற விதிப்படி இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் மங்களங்கள் உண்டாகும் என்பது பெரியோர்கள் மற்றும் கணபதி உபாசகர்களின் கருத்து.

சதுர் ஆவர்த்தி தர்ப்பண பூஜை செய்முறை:.........


விநாயகர் வழிபாடு மட்டும் அல்லாமல் மற்ற எல்லா தெய்வங்களுக்கும் விசேட வழிபாடுகள் செய்யும் பொழுத ஹோமம் செய்வது முதல் அங்கமாக விளங்குகிறது. விநாயகருக்குச் சதுராவர்த்தி என்கிற நான்கு லட்சம் ஜபம் செய்கின்ற போது முதலில் அஷ்ட திரவியம் என்ற எண் வனகக் கலவையால் 10 % ஹோமம் செய்தல் வேண்டும்.

மோதகம், அப்பம், கரும்பு துண்டு, அவல், எள், வாழைப்பம் சத்துமாவு, நெல்பொறி, ஆகியன மேலும் இந்த வகை ஹோம பூஜையின் போது சமர்ப்பிக்கப்படுகிற சமித்துக்களுக்கும் ஒவ்வொரு வேண்டுதல்கள் இருக்கின்றன. சமித்து ஓம குச்சிகள். அத்தி குச்சியால் ஓமம் செய்ய - மக்கட் பேறு உண்டாகும். நாயுருவி குச்சி- மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும். எருக்கன் குச்சி- எதிரிகள் இல்லாத நிலை உருவாகும்.

• அரசங்குச்சி- அரசாங்க நன்மையை எதிர்பார்க்கலாம்
• கருங்காலிக் கட்டை- ஏவல்கல் பில்லி சூன்யங்கள் விலகிவிடும்.
• வன்னிக்குச்சி- கிரஹத் கோளாறுகள் நீங்கி விடும்.
• புரசங்குச்சி- குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
• வில்வக்குச்சி- செல்வம் சேர வாய்ப்பு உண்டாகும்
• அருகம்புல்- விஷபயம் நீங்கும்.
* ஆலங்குச்சி- புகழைச் சேர வைக்கும்.
• நொச்சி- காரியத்தடை விலகி வழக்குகளில் வெல்லச் செய்யும்.

யக்நத்தைச் செய்த பிறகு தர்ப்பணம் 10% செய்தல் வேண்டும். மகாகணபதியின் மூல மந்திரத்தைக் கூறி 108 தடவைகள் அல்லது 54 முறை, ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதியே சர்வ ஜனம்மே வசமாயை ஸ்வாஹா சித்தலட்சுமி சமேத ஸ்ரீமகா கணபதிம் தர்ப்பயாமி மிகச் சிறிய மகாகணபதி சிலையை இரு தட்டில் வைத்து அதில் இந்த யந்திர கேசை வடிவை போட்டு மகா கணபதியைப் பிரார்த்தனை செய்து கொண்டு தொடர்ந்து இந்த 54 தர்ப்பண வழிபாட்டைச் செய்ய வேண்டும்.

கணேசருக்கு தர்ப்பணமிடும் போது கடைசியில் கிழுள்ள பிரார்த்தனையை மனதுக்குள் மானசீக மந்திரமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

1. எனது சங்கடங்கள் அனைத்தும் விலகிடச் செய்வாய் ஸ்ரீகணபதியே
2. நவக்கிரகங்கள் ஒன்பதும் நன்மையே அருளச் செய்வாய்.
3. சகல விதமான தோஷங்களும் என்னை விட்டுப் போகட்டும்
4. எல்லா விதமான வருத்தங்களும் என்னை விட்டு அகல வேண்டும்
5. துக்கங்களிலிருந்து நிவாரணம் எனக்குக் கிடைக்கட்டும்.
6. என்னுடைய தாபங்கள் தீர்ந்து விட அருள் செய்வாய்.
7. பாவங்கள் என்னிடம் நெருங்காமல் போகட்டும்.
8. என்னை வாட்டுகிற நோய்கள் உடலை விட்டு ஓடிவிடட்டும்
9. எதிரிகள் என்னை விட்டு விலகிப் போவார்களாக
10. உடல் சார்ந்த நோய்கள் தீர்ந்து போகட்டும்
11. என்னைச் சுற்றுகிற பீடைகள் மறைந்து விடட்டும்
12. எனக்கு பயம் என்பதே இல்லாமல் போக வேண்டும்.
13. எனக்கு சத்ரு உபாதைகள் தொந்தரவுகள் அகலட்டும்
14. கெட்ட சம்பவங்கள் வராமல் தடுக்கப்பட வேண்டும்.
15. கெட்ட கனவுகள்வராமலேயே நசிந்து போகட்டும்.
16. தரித்திரம் என்ற சொல்லுக்கு இடமின்றி போக வேண்டும்.
17. தீய சக்திகள் நெருங்காமல் விலகியே இருக்கட்டும்.
18. என்னைக் கடும் விஷம் பாதிக்கப்படாமல் இருக்கட்டும்
19. எல்லா வகையிலும் லாப நிலைகள் வந்து அடையட்டும்.
20. நெருங்குகிற போதே நோய்கள் நசிந்து குலையட்டும்.
21. தீய நினைவுகள் என்னிடம் வராமல் போகட்டும்.
22. சம்பத்துக்கள் மலைபோல வளரட்டும்
23. மனம் போல விருப்பங்கள் நிறைவேறட்டும்
24. நான் வசிக்கும் இல்லத்தில் மங்களங்கள் உண்டாகட்டும்.
25. உலகத்திற்கு உரிய நலன்களைக் கொடுப்பாயாக.
26. எனக்குள் அபூர்வ சக்திகள் வந்து சேரட்டும்.
27. என் வாழ்வில் பேரன் பேத்திகள் உருவாக வேண்டும்.
28. எப்போதும் சுப நிகழ்வுகளையே அருளுவாய்.
29. கல்வி அறிவு அபரிமிதமாக வளர்ந்து விடட்டும்
30. எங்கும் எப்போதும் சாந்தி நிலவிட அருள்க.
31. நான் சொல்லும் மந்திரங்கள் சித்தியாக வேண்டும்.
32. எனது சொல்லும் வாக்கும் பலருக்கும் பயனாக அருள்வாய்.
33. நான் செய்யும் யந்திர பூஜை சித்தியைத் தரட்டும்
34. நான் பயின்ற தந்திர சாஸ்திரங்கள் வெற்றியைத் தரட்டும்
35. முழுமையான வாழ்நாளை எனக்குத் தந்தருள்வாய்
36. என் நினைவுகளில் நல்லதே வந்து உதிக்கட்டும்.
37. மனதில் தோன்றும் விருப்பங்களை வெற்றி அடையச் செய்வாய்.
38. எனக்கு எப்போதும் மன நிம்மதியைக் கொடுப்பாயாக.
39. எனக்கு விருப்பம் எனத் தோன்றுவதைத் தந்து விடுக.
40. திரியும் விலங்குகள் எனக்கு வசமாக வேண்டும்.
41. அனைவருக்கும் சுகாதாரத்தை வளரச் செய்வாய்.
42. மனதில் வைராக்கியத்தை வளரச் செய்திடுக.
43. உலகில் எல்லா யோக பாக்யங்களும் சேர்ந்திட அருள்வாய்.
44. என் ஆத்மா புனிதத்தன்மை அடைந்து விடட்டும்.
45. என் குருவிடம் நான் அதிகமான பக்தி கொள்ச் செய்வீராக.
46. எனது சுயரூபத்தைப் பிரகாசமடையச் செய்வீராக.
47. கலிகாலத்தின் தோஷம் எங்களை விட்டு அகல வேண்டும்.
48. தனம், தான்யங்கள் வளர்ந்து செழிக்க வேண்டும்.
49. குடும்பத்தில் சூன்யங்கள் பிறரால் வைக்கப்படாமல் போகட்டும்.
50. மனவருத்தங்கள் கணவன- மனைவியரிடையே வராமல் இருக்கட்டும். 51. மனக்கிலேசம் விலகி அன்பு பெருகட்டும்.
52. வேண்டாத பயம் என் மனதை விட்டு நீங்கி விடட்டும்
53. அனைத்து பூத ப்ரேத பிகாச உபத்திரவங்கள் விலகி விடட்டும்.
54. வழக்கு வெற்றி முதல் சகல காரியங்களிலும் வெற்றியே தொடரட்டும்

மகா கணபதியே! தர்ப்பண பூஜை முடிந்த பிறகு சுற்றுப்புறங்களில் அங்கு வைக்கப்பட்ட கலசத்தில் உள்ள நீரை பார்ஜனம் என்ற வகையில் தெளித்தல் வேண்டும். பொதுவாக ஒரு பூஜை செய்யும் வகைகளில் விநாயகர் வழிபாடு முதல் கலச பூஜை, அக்னி ஓமம் என்று வசைப்படுத்தப்படும் பூஜாவிதி இச்த சதுராவர்த்தி தர்ப்பண பூஜையில் மட்டும் விநாயகர் வழிபாடு. வரிசையாக ஜெபம்.

யக்ஞம், தர்ப்பணம் (நீர் வார்த்தல்), மார்ஜனம் (தெளித்தல்), என்று அமைகிறது. இங்கே அபரிமிதமான பலன்களைத் தரக் கூடிய சதுர் ஆவர்த்தி தர்ப்பண பூஜை எளிமையாக உலக நலன் பொருட்டு கொடுக்கப்பட்டுள்ளது. பலர் கூடிப் பலன் பெற செய்ய நினைப்பவர்கள் விநாயகர் கோவில், மற்ற ஆலயங்களில் உள்ள விநாயகர் சன்னதி மண்டபங்களில் பொதுவாகச் செய்யலாம்.

விரிவாகக் செய்யும் இந்த வழிபாட்டு முறையில் நான்கு லட்சம் ஆவர்த்திகள் (தடைகள்) மூலமந்திர ஜெபமும் 40,000, ஆவர்த்திகள் அக்னி ஹோமமும். 4,000 ஆவர்த்திகள்- தர்ப்பண முறையும் 400 ஆவர்த்திகள் மார்ஜனம், என்ற தெனித்தல் நிகழ்வும் அடங்குகின்றன. அதாவது 4,444 என்று மொத்தம் 16 ஜக் காட்டுகிற இதன் எண்ணிக்கை முறை 16 லட்சுமி தேவிகளையும் அதன் மூலமாக வரும் வளங்களையும் காட்டுகின்றன.

என்ன பலன் கிடைக்கும்?

கணபதி வழிபாட்டு முறைகளில் இதுவரை வெளியிடப்படாத ரகசியமாகவே இருந்து வந்த சதுராவர்த்தி விதி இன்று எல்லோரும் அறியும்படி வெளியிடப்படுவதற்குக் காரணம் நாட்டில் எல்லோருக்கும் கடன் தொல்லைகள் அதிகமாகி விட்டது. இந்த வழிபாட்டைச் செய்வதால் கடன் தொல்லை தீர்ந்து விடும்.

தொழில் வியாபாரம் அமோகமா நடைபெற, இந்த பூஜையை பல தொழில் அதிபர்கள் சேர்ந்து செய்வதால் பலன் கிடைக்கும். வியாபார எதிரிகள் போட்டியிடுவோர் கோர்ட்டு, வழக்குகளில் சிக்க வைப்போர்களிடமிருந்து விடுதலை, தீர்வு, வெற்றிகள் கிடைக்கும். சர்வ சம்பத்துகளும் உண்டாகும்.

அம்பிகையைக் குறித்து செய்யப்படுகிற சண்டியாகங்கள் பெரும் பொருட்செலவில் பல திருத்தலங்கள், மடங்கள் பீடங்களில் உற்சவ காலங்களில் செய்யப்படுவதை போன்று விநாயக சதுர்த்தி விழாக்கள் தொடங்கும் இக்கால கட்டத்தில் சதுராவர்த்தி தர்ப்பண வழிபாட்டைப் பலன் வேண்டுவோர் செய்து கொள்ளலாம்.
 
 
விநாயகருக்கு செய்யவேண்டிய வைவேத்தியங்கள் அவல், பொரி, சோளம், விளாம்பழம், நாவல்பழம், வடை, சுண்டல், மோதகம், வாழப்பழம், ஆப்பிள், கரும்பு. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம்,காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம்.காரிய சித்திமாலை துதியை 3 வேளைகள் அதாவது காலை,மதியம்,மாலை உரைப்பவர்கள் நினைத்த காரியம் கைக்கூடும்.

8 நாட்கள் ஒதிவர மகிழ்ச்சி உண்டாகும்.சங்கடஹர சதுர்த்தியன்று 8 ஒதினால் அஷ்டமாசித்தி கைகூடும்.தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும்,செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.
விநாயகரின் ஜாதகத்தின் மகிமை.
 
சனிபகவான் ஒரு முறை விநாயகரைப் பார்த்து உங்களை நாளை வந்து பிடிக்க வேண்டும். நாளைக்கு வருகிறேன். என்றார். சனீஸ்வரனே எனக்கும் கணேசபுரியில் வேலைப்பளு அதிகம், உமக்கும் அதிக வேலை இருக்கும். என்னைப் பிடிக்க வரும் நீங்கள் என் முதுகில், நாளைக்கு வருகிறேன் என்று எழுதி விட்டுப் போங்கள் என்று முதுகைக் காட்டினார் விநாயகர்.

அதில் நாளை மறவாமல் வருகிறேன் என்று எழுதினார். சனீஸ்வரன் போய்விட்டு மறு நாள் வந்த போது முதுகைக் காட்டி என்ன எழுதி உள்ளீர் என்று கேட்க, சனீஸ்வரன் அவரிடம் அடி பணிந்தார். என்னை வணங்குபவர்களைப் பிடித்தால் உமக்கும் இது போல சங்கடம் ஏற்படும் என்றார்.

விநாயகர் கணேசப்பிரபுவே தங்கள் கட்டளைப்படியே செய்கிறேன் என்றார். உங்கள் ஜாதகத்தில் சனியின் பிடிப்புக் காலம் வந்தால் விநாயகர் ஜாதகத்தை ஒரு அட்டையில் எழுதி செவ்வாய் சனிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள் சனி தசையும், யோக தசை காலமாக அமைந்து விடும். இதுவே விநாயகரின் ஜாதகத்தின் மகிமை.
 
 
 
 

கடவுளால் மட்டுமே மனிதனுக்கு நல்லபுத்தியைக் கொடுக்க முடியும்.

எம்பார் சுவாமி என்ற வைணவ ஆசார்யர் ஸ்ரீரங்கத்தில் காலட்சேபம் செய்தார். பலர் வந்தனர். ஒருவர் மட்டும் வர மறுத்து, வீட்டுத்திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டார்.
"அங்கே வந்தால் நல்ல விஷயங்கள் காதில் விழுமே, வாருமே!' என்று பலர் வற்புறுத்தியும் அவர் காதில் விழவில்லை.
ஒருநாள் விடாப்பிடியாக அவரை இழுத்து வந்துவிட்டனர். மறுநாளில் இருந்து அவர் தான் முதல் ஆளாக வந்தார். காலட்சேபம் துவங்கும் முன்பே வந்து காத்திருந்தார்.
""இவரது இந்த மாற்றத்துக்கு காரணம் இவரை வற்புறுத்தி அழைத்து வந்தவர்கள் தான் காரணம்,'' என்பவர்கள் கை தூக்கலாம்'' என்றார் எம்பார்.
சிலர் கை தூக்கினர்.
""சரி...நீங்கள் அழைத்தாலும், மனம் மாறி வந்த அவரே தான் காரணம்'' என்பவர்கள் கை தூக்கலாம்,'' என்றார். அதற்கும் சிலர் கை தூக்கினர். ""இல்லை...இல்லை...இங்கே கதை சொல்பவர் மிக அழகாகச் சொல்கிறார். அதனால் தான் இவர் வந்தார் என்பவர்கள் கை தூக்குங்கள்,'' என்றார். அதற்கும் சிலர் கை தூக்கினர்.
கடைசியாக எம்பார் சுவாமியே கை தூக்கினார்.
""நான் கேட்காத ஒரு கேள்வி இருக்கிறது. இவர் இங்கு வர காரணம் இந்த மூன்றுமே அல்ல! வர மறுத்த ஒருவர் இங்கு வருகிறார் என்றால், அந்த புத்தியை கடவுள் தான் கொடுத்திருக்கிறார்,'' என்றார்.
கடவுளால் மட்டுமே மனிதனுக்கு நல்லபுத்தியைக் கொடுக்க முடியும்.

சமயோசிதமும் தலைகாக்கும்.

பாண்டியநாட்டுப் புலவர் வடநாட்டுக்கு போனார். அங்குள்ள ராஜாவைப் பற்றி தமிழில் அழகாக கவிபாடினார். அதை அங்கிருந்த பல்மொழி அறிஞர், மன்னருக்கு மொழி பெயர்த்துச் சொன்னார். மன்னருக்கு ரொம்பவே சந்தோஷம். நூறு ரூபாய் சன்மானம் கொடுத்தார்.
""அடடா! டில்லிக்கு ராஜாவாய் இருந்தாலும், இந்த ஆசாமி வெறும் நூறைத் தானே கொடுத்தான்...சரி..சரி...எங்கு போனாலும் நம்மை வறுமை விடாமல் துரத்தும் போலும்!'' என நினைத்தவர், பல்மொழி அறிஞர் நிற்பதைக் கவனிக்காமல், ""உப்பும் காயும் வாங்கத்தான் போதும்'' என வாய் விட்டு சொன்னார். இதைக் கவனித்த பல்மொழி அறிஞர் ராஜாவிடம் போட்டுக் கொடுத்து விட்டார்.
""ராஜா..ராஜா! நீங்கள் கொடுத்த சன்மானத்தை இவன் துச்சமாக பேசிவிட்டான்,'' என்றார்.
ராஜாவுக்கு கடும் கோபம். புலவர் ஆபத்தில் சிக்கிக்கொண்டதை உணர்ந்து சமயோசிதமாக சமாளித்தார்.
""ராஜா அவர்களே! நான் சொன்னதை இந்த அறிஞர் தவறாகப் புரிந்து கொண்டார் என நினைக்கிறேன். <உங்களைப் புகழ்ந்ததால் தான் நூறு ரூபாய் கிடைத்தது. மற்றவர்கள் கொடுத்திருந்தால் அஞ்சோ, பத்தோ உப்பும், காயும் வாங்கும் அளவுக்கு குறைவாகத் தான் கொடுத்திருப்பார்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன்,'' என்றார்.
ராஜாவுக்கு இது மொழி பெயர்க்கப்பட்டதும், அவர் அகம் மகிழ்ந்து, ""என் தர்ம குணத்தை இவ்வளவு உயர்த்தியா பேசினீர்,'' என்றதுடன், பத்தாயிரம் ரூபாயைத் தூக்கிக் கொடுத்து விட்டார்.
சிலருக்கு பேச்சாலேயே ஆபத்தான சூழல் வந்து விடுகிறது. அப்படி வந்துவிட்டாலும், சமயோசிதமாக பேசி சரி செய்து கொள்ள வேண்டும். சிலநேரங்களில் சமயோசிதமும் தலைகாக்கும்

தானத்தில் பெரிய தானம்,--புத்தர்

அமைதியே வடிவான புத்தபிரானுக்கு மேளம் அடிப்பதில் அலாதி இன்பம் தெரியுமா!
அவரது கையில் எப்போதும் ஒரு மேளம் இருக்கும். யார் தனக்கு பெரிய அளவில் காணிக்கை தருகிறார்களோ, அப்போது மகிழ்ச்சியுடன் அந்த மேளத்தை அடித்து, காணிக்கை அளித்தவரின் பெருமையைப் பறைசாற்றுவார்.
ஒரு சக்கரவர்த்திக்கு இந்த விஷயம் தெரியவந்தது. காணிக்கை கொடுப்பதில் தன்னை விட உயர்ந்தவர் யாரும் இருக்கக்கூடாது. தனக்கு மட்டுமே அந்தப் பெருமை சேர வேண்டும் என்ற எண்ணத்தில், யானைகள் மீது முத்து, பவளம், வைரக்கற்கள், தங்கக்
கட்டிகள், பழம், உணவு வகைகளை ஏற்றிக்கொண்டு சென்றார். வழியில் ஒரு மூதாட்டி வந்தாள்.
""மாமன்னரே! புத்தர் பிரானைத் தரிசிக்க போய்க் கொண்டிருக்கிறேன். பசி உயிர் போகிறது! அவரைப் பார்ப்பதற்குள் என் பிராணன் போய்விடக்கூடாது. ஏதாவது உணவளியுங்கள்,'' .
அவள் கேட்டதும், ஒரு மாதுளம்பழத்தை அவளிடம் வீசினார் மன்னர். சற்றுநேரத்தில், அவர் புத்தரின் இருப்பிடத்தை அடைந்து காணிக்கையைச் செலுத்தினார். தான் கொடுத்த தானத்தின் அளவிற்கு, புத்தர் அரைமணி நேரமாவது மேளம் அடிப்பார் எனக் கருதினார்.
புத்தர் எழவே இல்லை.
அரசர் அதிர்ச்சியில் உறைந்திருந்த நேரத்தில், மாதுளம்பழம் பெற்ற மூதாட்டி அங்கு வந்தாள். புத்தரின் காலடியில், அரசரிடம் பிச்சையாகப் பெற்ற மாதுளம்பழத்தைச் சமர்ப்பித்தாள்.
புத்தர் எழுந்தார். மேளத்தை வேகமாக அடித்தார்.
அரசருக்கு கோபம்.
""புத்தரே! இதென்ன அநியாயம்! இந்தக்கிழவி ஒரு பழத்தைத் தந்ததற்காக மேளம் அடித்தீர்கள். நான் இவ்வளவு காணிக்கை கொடுத்தும் எழாமல் இருந்தீர்களே!''.
புத்தர் பதிலளித்தார்: ""மன்னா! நீ காணிக்கை அளித்ததன் நோக்கம் உன் புகழ் வெளிப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்திற்காக! இவளோ, உன்னிடம் பிச்சையாகப் பெற்ற பழத்தை, கடும் பசியிலும் கூட சாப்பிடாமல், உயிர் போனாலும் போகட்டும் என்று என்னிடம் அளித்தாள். தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில், அதையும் பொறுத்துக் கொண்டு பிறருக்கு உதவுவதே தானத்தில் பெரிய தானம்,'' என்றார்.
மன்னனின் குனிந்த தலை நிமிரவில்லை.

நாராயணன்' என்றால் "வாழும் காலத்தில் செல்வம் அருள்பவன்', "வாழ்வுக்குப் பின் பிறவிப்பணி தீர்ப்பவன்'

எல்லாம் அறிந்த நாரதருக்கே ஒரு சந்தேகம். ஒரு முனிவரிடம் கேட்டார்.
""நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?''
முனிவர் சொன்னார். ""ரொம்ப சுலபம்..."நாரம்' என்றால் "தண்ணீர்'. "அயனன்' என்றால் "சயனித்திருப்பவன்'. அவன் கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா? அதனால் நாராயணன் என்றார்.
நாரதருக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை.
நாராயணனிடமே ஓடினார்.
""ஐயனே! உம்மை நான் நாராயணா...நாராயணா என்று துதிக்கிறேன். ஆனால், அதற்கு சரியான விளக்கம் தெரியவில்லை! அது உம் பெயர் தானே! நீரே விளக்கம் சொல்லுமே!''
குறும்புக்கார நாரதர் கேட்ட கேள்விக்கு, குறும்பு நாராயணனும் குறும்பாகவே பதிலளித்தான்.
""அடடா...எனக்கும் தெரியாதே! எதற்கும் நீ நர்மதைக்கரையில் இருக்கும் வண்டிடம் போய் கேள். அதற்குத் தெரியும் என்று கேள்விப்பட்டேன்''.
நாரதர் வண்டிடம் ஓடினார்.
""வண்டே! நாராயணன் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியுமா?''
கேள்வியைக் கேட்ட மாத்திரத்திலேயே வண்டு விழுந்து இறந்து போனது.
நாரதர் நாராயணனிடம் திரும்பினார்.
""நாராயணன் என்ற நாமம் கேட்பவர்கள் இறந்து விடுவார்கள்..அப்படியானால் அது தானே அர்த்தம்,'' என்றார்.
""அப்படி நான் கேள்விப் பட்டதில்லையே! எதற்கும் அதோ! அந்தக் கிளியிடம் கேள்,'' என்று ஒரு மரத்தை நோக்கி கைநீட்டினார் பகவான்.
கிளியிடம் இதே கேள்வியை நாரதர் கேட்க, கிளி சுருண்டு விழுந்து இறந்து போனது.
நாரதருக்கு திக்கித்து விட்டது. மூச்சுக்கு முன்னூறு தடவை "நாராயணா' என்கிறோமே! நாமும் செத்து விடுவோமா!'' பயத்துடன் நாராயணனிடம் வந்தார்.
""பெருமாளே! அதற்கு அர்த்தம் "அது'தான்...உறுதியாகி விட்டது.
""நாரதா! அவை விதிமுடிந்து இறக்கின்றன. எதற்கும் அந்த பசுவின் கன்றிடம் போய் கேள்''.
""நல்லாயிருக்கு நாராயணா! இதை நான் போய் கேட்க, அந்த கன்று இறந்து போக, பசுக்கன்றை கொன்ற கொடியபாவம் என்னை அணுக வேண்டுமென திட்டம் போடுகிறீரா! முடியாது'' என்றார் நாரதர்.
""அப்படி ஏதும் ஆகாதென்றே நினைக்கிறேன். நீ ஒரு தபஸ்வி! தபஸ்விக்கு தைரியம் வேண்டாமோ!'' என்று உசுப்பிவிட்டார் பெருமாள்.
நாரதரும் சற்று தைரியத்துடன் கன்றிடம் போய் கேட்க, கன்றின் கதை முடிந்தது.
""நாராயணா! எல்லாம் போச்சு! இனிமேல் உம்மிடமில்லை பேச்சு! பசுக்கன்றைக் கொன்ற கொடிய பாவத்துக்கு என்னை ஆளாக்கி விட்டாய்! வருகிறேன்!'' எனக்கிளம்பியவரை, பெருமாள் தடுத்தார்.
""நாரதா! கலங்காதே! இதுவரை நீ கேட்டது பூச்சி, பறவை, விலங்குகளிடம்! இனி காசி இளவரசனிடம் போய் கேள், அவன் மனிதனாயிற்றே! அவனுக்கு ஏதும் ஆகாது!'' என்ற நாராயணனை,"" அய்யா! என்னை அரசதண்டனைக்கு ஆளாக்க எத்தனை நாள் திட்டம் போட்டு வைத்திருந்தீர்! முடியாதைய்யா! முடியாது'' என்ற நாரதரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
நாரதர் பயந்தபடியே இளவரசனிடம் கேட்டார். அவனுக்கு ஏதும் ஆகவில்லை. அவன் அழகாகப் பதில் சொன்னான்.
""நாரதரே! வண்டாய், கிளியாய், கன்றாய் உம் முன் காட்சி தந்தது நானே! உம் வாயால் "நாராயணா' என்ற நாமத்தை திரும்பத் திரும்பக் கேட்டு உயர்ந்த மனிதப்பிறவி... அதிலும் செல்வங்களையெல்லாம் அனுபவிக்கத்தக்க இளவரசனாய் பிறந்திருக்கிறேன். தொடர்ந்து நாராயண மந்திரத்தை பக்தியுடன் ஓதி வைகுண்டம் செல்வேன்!'' என்றான்.
""ஆகா! "நாராயணன்' என்றால் "வாழும் காலத்தில் செல்வம் அருள்பவன்', "வாழ்வுக்குப் பின் பிறவிப்பணி தீர்ப்பவன்' என்றல்லவா அர்த்தம் எனப்புரிந்து கொண்டார் நாரதர்.

மனிதனின் எதிரி யார்?

ஆசை நம்மிடம் அடங்கமாட்டேன் என்றாலும், திரும்பத் திரும்ப அடக்கப் பார்த்துக் கொண்டே தானிருக்க வேண்டும். வைராக்யம் என்பதான ஆசையின்மையை, பற்றின்மையை சம்பாதித்துக் கொள்ள விடாமுயற்சி பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும்.
ஏனென்றால் ஆசை என்ற இந்த ஒரே சத்ருவை (எதிரி) எப்படியோ பாடு பட்டாவது ஒழித்துக் கட்டி விட்டால் போதும், அப்புறம் நீங்க ராஜா தான். ராஜா என்றால் இந்த உலகத்து ராஜா இல்லை. அவனுக்குள்ள ஆசையும் தொல்லையும் நமக்கு வேண்டவே வேண்டாம். ஆசை கிட்டேயே வராத சாஸ்வத சாந்தத்தை உடைய ராஜா.
மனதில் எழும் பல நூறாயிரம் கெட்ட விஷயங்களை ஒவ்வொன்றாக அடக்கப் பார்த்து பிரயோஜனமில்லை. அது முடியாத காரியம். ஆகையால் அவை கிளைகள் என்றால் அவற்றுக்கு வேராக உள்ள ஆசை என்ற ஒன்றை வெட்டிவிட்டால் போதும். ஆனால், வெளியே நீண்டிருக்கும் கிளையை வெட்டுவதைவிட, உள்ளே புதைந்துள்ள வேரைத் தோண்டி அழிப்பது ரொம்பவும் கஷ்டம் தான். இருந்தாலும் இதைச் செய்யாவிட்டால் வெட்டிய கிளைகள் மறுபடி மறுபடி முளைத்துக் கொண்டு தான் இருக்கும் என்பதால் எப்படியாவது இதைசாதித்துத் தான் ஆகவேண்டும்.

விஞ்ஞானம் -மெய்ஞ்ஞானம்

மனிதன் விஞ்ஞானத்தில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறான்.
உலகத்தின் எல்லையை விட்டு சந்திர மண்டலம், செவ்வாய் கிரகம் என அவன் சாதித்தவை அனைத்தும் மிக மிக பாராட்டுக்குரியவை. தனது அறிவைப் பயன்படுத்தி அவன் இதைச் சாதித்திருக் கிறான். ஆனால், இந்த சாதனைக்காக அவன் தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதையும், கடவுளை வென்று விட்டதாக கூறுவதையும் ஒப்புக்கொள்ள முடியாது.
காரணம், வெறும் குதிரையும், யானையும் படைகளாக இருந்த காலத்தில் அவற்றை அடக்க பீரங்கியைக் கண்டுபிடித்தான். பீரங்கியை அடக்க வெடிகுண்டுகளை தயாரித்தான். சாதாரண குண்டுகளைத் தகர்க்க அணுகுண்டை கொண்டு வந்தான். காட்டையும் ஆற்றையும் விளைநிலங்களையும் அழித்து செயற்கை உணவு வகைகளை அவன் தயாரித்ததும், நோய்கள் கடுமையாகத் தாக்கின. ஆக, மனித அறிவு கடைசியில் அழிவைத் தான் தந்தது.
மெய்ஞ்ஞானம் அப்படியல்ல! அது அன்பைப் போதிக்கிறது. நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. அது நமக்கு அளித்துள்ளதை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வினை உண்டாக்குகிறது. அக்கால மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர். அதனால் அவர்களுக்கு பிரச்னைகள் மிகக்குறைவாக இருந்தது. எனவே, மெய்ஞ்ஞானத்தை விஞ்ஞானம் வென்றுவிட்டதாகக் கூறுவதை எக்காலமும் ஏற்கமுடியாது.

ஹேமாவதி'

உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் தாயாக இருப்பவள் அம்பிகை. உபநிடதத்தில் அம்பிகைக்கு "ஹைமவதி' என்று பெயருண்டு. தற்காலத்தில் இதை "ஹேமாவதி' என்கிறார்கள். இந்தச் சொல்லுக்கு இருவிதமான பொருள் உண்டு. "ஹிமம்' என்றால் பனி. பனிமலையான இமயமலைக்கு "ஹிமாசலம்' என்று பெயர். அந்த மலைக்கு அரசனான ஹிமவானின் மகள் என்பதால் அம்பிகைக்கு "ஹைமவதி' என்று பெயர் ஏற்பட்டது. "ஹேமம்' என்னும் வேர்ச்சொல்லில் இருந்து வந்தது ஹைமம். "ஹேமா' என்றால் "தங்கம்'. அம்பாள் "தங்கம் போல பொன்னிறத்தில் ஜொலிப்பவள்' என்பதால் "ஹேமாவதி' எனப் பெயர் கொண்டதாகவும் கூறுவர்.

12 ஆண்டுகள் படிக்க வேண்டிய படிப்பை, இரண்டே மாதத்தில் முடித்தவர்கள்

12 ஆண்டுகள் படிக்க வேண்டிய படிப்பை, இரண்டே மாதத்தில் முடித்தவர்கள் கிருஷ்ணரும், அவரது அண்ணன் பலராமனும். இவர்கள் சாந்தீபனி முனிவரிடம் குருகுலவாசம் செய்தனர். கிருஷ்ணர் தெய்வ அவதாரம் என்றாலும், மனிதனாகப் பிறந்து விட்டதால், மனிதனுக்குரிய குறைநிறைகளை அந்த அவதாரத்தில் அவர் காட்ட வேண்டியதாயிற்று. மனிதனுக்கு குருபக்தி அவசியம் என்பதை உலகிற்கு உணர்த்த அவர் குருகுலத்தில் சேர்ந்ததாக பாகவதம் கூறுகிறது. இருந்தாலும், கிருஷ்ணருக்கு அந்த அவதாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறைய இருந்ததால், மனிதனைப் போல மரபை மீறவும் செய்தார். அக்காலத்தில் 12 ஆண்டுகள் குருகுலவாசம் செய்வது மரபு. ஆனால், கிருஷ்ணரும், பலராமனும் 64 நாட்கள் மட்டும் குருகுலத்தில் இருந்து, நாளைக்கு ஒரு சாஸ்திரமாக கற்று முடித்தனர். கிருஷ்ண, பலராமரின் தெய்வீகசக்தியே அவர்கள் பாடங்களை விரைந்து முடித்ததன் ரகசியம் என்கிறார் சாந்தீபனி முனிவர்.

சாஷ்டாங்க நமஸ்காரம்


கோயிலுக்குள் வலம் வரும்போது, ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி மட்டுமே வணங்க வேண்டும். கீழே விழுந்து வணங்குவது கூடாது. கொடிமரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும். கிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும், வடக்கு, தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
சிவனுக்குரிய ஸ்லோகம் ஒன்றில், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இருவித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ""ஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது''.
முற்பிறவியில் சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது சிவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று அந்த ஸ்லோகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தீட்டு என்றால் என்ன



தீட்டு என்றால் என்ன
பிறரைத் தீண்டக்கூடாத நாட்களை சுருக்கமாகத் தீட்டு என்பர். பங்காளிகள் வீட்டில் பிறப்பு, இறப்பு நிகழ்ந்தால் பத்துநாட்கள் தீட்டு உண்டு. பெண்களின் மாதவிடாய் காலமான மூன்றுநாள் தீட்டு. இக்காலங்களில் கோயிலுக்குச் செல்வது கூடாது. பிறரைத்
தீண்டக்கூடாது. இதனால் லட்சுமி கடாட்சம் குன்றி வறுமை உண்டாகும். ஆயுள் குறையும் என சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், தற்காலத்தில் பலர் இதை ஏற்றுக் கொள்வதில்லை.


செருப்பணிந்து பெண்கள் வாசல் தெளித்துகோலமிடுவது சரியானதா?
வீடு என்பது கோயில் போன்றது. வீட்டிற்குச் செய்யப்படுகின்ற எல்லாமே கோயிலுக்கு செய்யப்படுவதாக எண்ண வேண்டும். சாணம் தெளித்து கோலம் போடுவது என்பது, மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்கும் நிகழ்ச்சியாகும். கிருமிகளை வீட்டிற்குள் வராமல் பார்த்துக் கொள்ளும் ஆற்றலும் அதற்கு உண்டு. அரிசி மாவினால் தான் கோலம் போடவேண்டும். எறும்பு, பறவைகள் அதை உண்பதால் நமக்கு புண்ணியம் சேரும். இவ்வளவு தெய்வீகமான செயலைச் செருப்பணிந்தபடி செய்வது கூடாது.

ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

 
ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
ஒவ்வொருவரும் பிறக்கும் போது அந்தந்த நட்சத்திரங்களின் அடிப்படையில் ஏதாவது ஒரு கிரகத்தின் தசையில் வாழ்வு தொடங்குகிறது. உதாரணமாக ஒருவர் பரணி நட்சத்திரத்தில் பிறந்தால் சுக்கிரதசையில் பிறந்திருக்கிறார். பொதுவாக சுக்ரதசை நல்லது என்றாலும், தொடர்ந்து வரும் தசாபுத்திகளான செவ்வாய், ராகு நடக்கும் காலத்தில் திருமண வயதை அடைவார். இதே பரணியில் பிறந்த பெண்ணை மணம் முடித்தால் இருவருக்கும் ஒரே தசாபுத்தி நடக்கும். இதற்கு "தசாசந்தி' என்று பெயர். நல்ல தசை நடந்தால் இருவருக்கும் நன்மை. கெட்ட தசை நடந்தால் இருவருக்கும் கஷ்டம் ஏற்படும். எனவே தான் ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது என்பர். இது தவிர ஜாதகத்தில் கிரகபலம் அதிகமிருந்து, தசை சந்திப்பு இல்லாவிட்டால் ஒரே நட்சத்திரக்காரர்கள் திருமணம் செய்யலாம். சிறந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.



* கழுத்தில் சந்தனம் குங்குமம் வைக்கலாமா?
நெற்றி, கழுத்து, மார்பு, இரு புறங்கைகள் ஆகிய ஐந்து இடங்களில் சந்தனம் குங்குமம் திலகமிட்டுக் கொள்ளலாம். அவரவர்களின் சமயம் மற்றும் குடும்ப வழக்கப்படி மாறுபடலாம்.

Monday, October 8, 2012

வேண்டத் தக்க தறிவோய்நீ


வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.

பொழிப்புரை :

உயிர்களுக்குத் தேவையானது இது என்று அறிவோன் நீயே! மேலும் அவ்வுயிர்கள் எவற்றை வேண்டினாலும், அவையெல்லாவற்றையும் அருளுபவனும் நீயே! உன்னைக் காண விரும்பிய பிரமன், திருமால் என்பவருக்கும் அருமையாய் நின்ற வனாகிய நீ நீயாகவே விரும்பி, என்னையாளாகக் கொண்டனை. என் பொருட்டு நீ விரும்பி எதனை அருள் செய்தனை; அதனையே யானும் விரும்புவதல்லது, நானாக விரும்புகின்ற பொருள் ஒன்று, உளதாகு மெனில் அந்தப் பொருளும் உன்னிடத்தில் நான் வைக்கின்ற அன்பே யன்றோ?

குறிப்புரை :

வேண்டத் தக்கது - இரந்து பெறத்தக்க பொருள். `தாம் சாவ மருந்துண்ணார்` என்பதுபோலத் தமக்கு நன்மை பயப்பதனை யன்றித் தீமை பயப்பதனை ஒருவரும் இறைவன்பால் வேண்டார் எனினும் தீமை பயப்பதனைத் தீமைபயப்பது என்று அறியும் ஆற்றல் இலராகலின், இறைவன்பால் வேண்டத் தக்கது இதுவென்பதனையும் அவனே அறிதலன்றி, உயிரினத்தவருள் ஒருவரும் அறியார் என்க. ``வேண்ட`` என்றது. `தம் அறியாமையால் உயிர்கள் எவற்றை வேண்டினும்` என்றவாறு. தீமைபயப்பதனையும் இறைவன் மறாது தருதல்` அவற்றின்கண் பற்று நீங்குதற்பொருட்டாம். வேண்டும் அயன் மால் - உன்னை அளவிட்டறிய விரும்பிய பிரமனும் மாலும். இவர்க்கு அரியனாதலைக் கூறியது, தமக்கு எளிவந்தமையைப் புலப்படுத்தற்கு. எனவே, `அரியோயாகிய நீ` என ஒரு சொற்றன்மைப் படுத்து உரைக்கப்படும். ``பணி கொண்டாய்`` என்றதன்பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. வேண்டி - எனக்கு உரியதாகக் கருதி. அருள் செய்தாய் - உணர்த்தியருளினாய். `அதுவே யானும் வேண்டினல்லால்` என மாற்றுக. வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் - பயிற்சிவயத்தால் ஒரோவொருகால் நான் உன்பால் இரக்கும் பொருள் வேறு ஒன்று இருக்குமாயின் அதுவும் உன்றன் விருப்பன்றே - அவ்வாறிருத்தலும் உன்றன் திருவருளே யன்றோ; என்றது, `வேண்டத் தக்கது அறிவோய் நீ என்பது முதலியவற்றை யான் அறிந்து உன் அருள்வழியே நிற்பேனாயினும், ஒரோவொருகால் பயிற்சி வயத்தால் அந்நிலையினின்றும் பிறழ்தலும் உனது திரோதான சத்தியின் செயலே` என்பதை விண்ணப்பித்து, `அக்குற்றத்தைப் பொறுத்து என்னை நின்பால் வருவித்துக் கொள்ளுதல் வேண்டும்` என வேண்டியதாம். இதன் இறுதிப் பகுதிக்கு மாதவச் சிவஞான யோகிகள் இவ்வாறே பொருள்கொள்ளுதல் காண்க. (சிவஞான சித்தி.சூ.10.3.)

பாடல் எண் : 7

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே.

பொழிப்புரை :

எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடைய, எம் தலைவனே! மலையை ஒத்த பெரியோனே! என்னை ஆட்கொள்ள வந்த அன்றே, என்னை ஆட்கொண்ட அப்பொழுதே, என்னுடைய உயிரையும், உடம்பையும், பொருள் எல்லாவற்றையும் உன்னுடையனவாக ஏற்றுக் கொள்ளவில்லையோ? அங்ஙனமாக இப்பொழுது ஒரு துன்பம் எனக்கு உண்டாகுமோ? உண்டாகாது. ஆதலின், எனக்கு நீ நன்மையே செய்வாய் எனினும், தீமையே செய்வாய் எனினும் இத்தன்மைக்குத் தலைவன் யானோ?

குறிப்புரை :

``அன்றே`` என்றதனை இறுதிக்கண் கூட்டி, அதன்பின், `ஆதலின், நின் திருவுள்ளத்திற்கு ஏற்றது செய்க` என்னும் கையறு கிளவியாகிய குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. இவ்வாறன்றி, வலியுறுத்தற் பொருட்டு, `அன்றே, என்னை ஆட்கொண்ட போதே` என இருகாற் கூறினார் என்றலுமாம். ஆவியாவது, சீவபோதம். உடைமையாவது, பிராரத்தமும், ஆகாமியமும் ஆகிய வினைகள். இறைவனுக்கு ஆட்பட்டார் பிற உடைமையை முன்னரே துறந்தமை யின், அவர்க்கு உடைமையாவன இவையன்றி இல்லை என்க. சிறுபான்மை எக்காரணத்தாலேனும் பிற உடைமை உளவாயின், அவையும், `உடைமை` என்பதனுள் அடங்கும். உடைமையை, `பொருள்` என்று கூறி, `உடல், பொருள், ஆவி மூன்றையும் இறைவன் பால் ஆக்குவிப்பவரே ஞானியர்` என்பது வழக்கு. `ஆவியும் உன்னுடையதாயினமையின், இப்பொழுது எனக்கென்று வரும் இடையூறு ஒன்று இல்லை` எனவும், `வருகின்ற இடையூற்றைத் தடுத்தும், வந்த இடையூற்றைப் போக்கியும் என்னை நான் காத்துக்கொள்ளுதலும், காவாது தீமையுறுதலும் ஆகிய செயல்களும் எனக்கு இல்லை; எல்லாவற்றிற்கும் உரியவன் நீயே` எனவும் கூறுவார், இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ? நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகம்` என்றும் அருளினார்.
``செய்வாய்`` என்றவை, `உன் விருப்பப்படி செய்தற்குரியை` என்னும் பொருளன. நன்று, பிழை என்னும் இரண்டனுள் தம்பால் செய்யப்படுவது ஒன்றேயாதலின், ``இதற்கு`` என ஒருமையாற் கூறப்பட்டது. நாயகம் - தலைமை; இஃது ஆகுபெயராய், `தலைவன்` எனப் பொருள் தந்தது.

 

Saturday, October 6, 2012

மனிதநேயப் பரிவு (திருமந்திரம் : -1857)

.4.6 அன்பே சிவம்
திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் உணரும் எளிமையும், இனிமையும் உடைய பாடல்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘அன்பே சிவம்’ என்ற தொடரைப் பலரும் அறிவர். மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. திருவள்ளுவர் முதலிய அறநூலாசிரியர்களும் அன்பின் சிறப்பையும், இன்றியமையாமையையும் எடுத்துரைத்துள்ளனர். சைவர்களின் இறைவன் சிவன். அவன் யார்? அவன் இயல்பு எத்தகையது என்ற வினாக்களுக்குத் திருமூலர் தரும் விடை ஆழ்ந்த பொருட்சிறப்புடையது. அன்புதான் எங்கள் சிவன். சிவம் வேறு அன்பு வேறு என்பார் அறியாமை மிக்கவர்கள். இரண்டும் ஒன்றே என்று உணரும் உணர்வில் இறைமைப் பேறு வாய்க்கும்.



அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
(திருமந்திரம் : -270)


என்பது அன்பின் சிறப்புரைக்கும் அரிய பாடல்.
2.4.7 மரமும் யானையும்
உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும் கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும் உள்ளது. குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக் கண்டு ‘யானை! யானை’ என்று அஞ்சித் தாயிடம் தஞ்சம் அடைகிறது. தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக் குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது. யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை. இவற்றைப் போல் உலகத்தையும், உலகப் பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு அவை புலப்படுவதில்லை. உலகமாகவே காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை. இவ்வழகிய உண்மையைத் திருமந்திரம் மிக அழகிய கவிதை ஒன்றில் வைத்து விளக்குகிறது.


மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே
(திருமந்திரம் : -2290)


இக்கருத்தையொட்டியே நாயைக்கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழி எழுந்தது. எளிய இனிய எடுத்துக்காட்டுகளால் அமைந்துள்ள இத்தகு கவிதைகள் திருமந்திரத்தில் நிறைவாக இடம் பெற்றுள்ளன.
2.4.8 மனிதநேயப் பரிவு
சைவம் மனித நேயத்தை வற்புறுத்தும் ஓர் அன்பு நெறி. சிற்றுயிர்கள் இடத்தும் கருணை காட்டவேண்டும் என்று அது வற்புறுத்துகின்றது. இறைவன் உலகத்தையும், நுகர் பொருள்களையும் உயிர்கள் பெற்று இன்புறுவதற்கே படைத்தளித்தான். உயிர்களிடமிருந்து இறைவன் அன்பு ஒன்றைத் தவிர வேறு யாது ஒன்றும் பெற விரும்புவதில்லை. ஆனால் சமயவாதிகள், சடங்கு நெறியில் பற்றுக் கொண்டு நின்று, மனிதனின் பசிக்கு உணவிட விரும்பாது இறைவனுக்குப் படையலிட்டு மகிழ்கின்றனர். இறைவன் மனிதன் அளிக்கும் உணவையும், படையலையும் உண்டு மகிழ்கின்றானா என்றால் இல்லை. இறைவன் கவனத்திலும் கணக்கிலும் அவனுக்குப் படைக்கப்படும் படையல் இடம் பெறுவதில்லை. அவன் கணக்கில் இடம்பெற விரும்பினால் பசித்திருப்போருக்கு உணவு அளியுங்கள். அதுவே அவனைச் சென்றடையும் அரிய பெருநெறி என்று காட்டுகிறார் திருமூலர்.


படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே
(திருமந்திரம் : -1857)

(படமாடக் கோயில் = இறைவன் உருவத்தை ஓவியமாக எழுதி வைத்துள்ள இடம், பகவன் = இறைவன், நடமாடக் கோயில் நம்பர் = நடமாடும் கோயிலாகிய மனிதர்கள், ஆமே = போய்ச் சேரும்)
அது என்ன ‘நம்பர்க்கு’ என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது; ‘நம்பர்’ என்ற சொல் ‘நம்மவர், எம்மைப்போன்ற மனிதர்கள்’ என்ற பொருள் தரும். மனிதரின் உள்ளத்தில் இறைவன் குடி கொண்டுள்ளான். எனவே மனிதர்கள் இறைவனின் நடமாடும் கோயில்கள், நடமாடும் கோயில்களாகிய நம் போன்ற மனிதர்க்கு ஒன்று கொடுப்பது இறைவனுக்குக் கொடுப்பதற்கு ஒப்பாகும்.
2.4.9 வாழ்வியல் உண்மைகள்
இறைவனைச் சென்று அடைதற்கு உரிய எளிய வழி குருவை வழிபடுதலால் கிட்டும். பிறன் மனை நோக்காத பேராண்மையை ஆடவர் பெறல் வேண்டும். காக்கை தன் இனத்தைக் கூவி அழைத்துக் கலந்து உண்பது போல், சக மனிதர்களோடு கலந்து உண்ணல் வேண்டத்தக்கது. கற்றவர்களுக்கு மட்டுமே பேரின்பம் வாய்க்கும். கேள்விச் செல்வமே மனிதர்களுக்கு உற்ற துணை. மிகுந்த காமமும் கள்ளுண்டலும் கீழோர் என்று அடையாளம் காட்டும். விரும்பியவாறு ஆண் அல்லது பெண் குழந்தை பெற்றுக் கொள்வதற்குரிய மூச்சுப்பயிற்சி முறை, (வியப்பாக உள்ளதா? திருமந்திரம் பாடலில் இவ்விவரம் தரப்பட்டுள்ளது: பாடல் எண்-482) குழந்தைகள் குருடாய், ஊமையாய், முடமாய்ப் பிறப்பதற்குரிய காரண விளக்கம், திருக்கோயில் வழிபாட்டின் இன்றியமையாமை முதலான பல அரிய செய்திகளை வழங்கும் களஞ்சியமாகத் திருமந்திரம் அமைந்துள்ளது.

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்


என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே
(திருமந்திரம் : 81)

 

என்று குறிப்பிட்டிருப்பது கருதத்தக்கது. தமிழில் ஆகமங்களின் சாரங்களைத் தொகுத்தளிப்பதே அவர் வருகையின் நோக்கம் என்பது உறுதியாகிறது.

 

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

(திருமந்திரம் : 147)