Wednesday, October 30, 2013

இஞ்சி, சுக்கு, கடுக்காய், உண்ணும் முறை

இஞ்சி, சுக்கு, கடுக்காய், உண்ணும் முறை

கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசிகுலாவி நடப்பானே.

சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.

சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.

நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.

வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு.
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு.
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு.

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் - காற்று - 1, மாத்திரை அளவு -- சுக்கு.
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு -- இஞ்சி.
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -- கடுக்காய்.

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் , நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

சுக்கு சுத்தி ;

தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும். பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் . இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.

கடுக்காய் சுத்தி ;

கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ;

இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.

உண்ணும் முறை :

காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.

பழமொழி :

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.

ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை

இறை வழிபாடு, பக்தி, பூஜைகள், பஜனை. சத்சங்கம் இதெல்லாம் எதற்காக ?

இறை வழிபாடு, பக்தி, பூஜைகள், பஜனை. சத்சங்கம் இதெல்லாம் எதற்காக ? தவத்தை செய்து இறையாற்றலை நேரடியாக அடைந்து விட வேண்டியது தானே ? என்றால், அதற்குக் காரணம் இருக்கி...றது. பக்குவப்படாத, அன்பு இல்லாத பேதமுள்ள மனம் ஒரு போதும் பேராற்றலை உணர முடியாது. அந்த எல்லாம் வல்ல சக்தியானது ஈர்க்கும் சக்தியை உடையது. அது தன்னடுடைய பிணைப்பாற்றலின் சக்தியைக் கொண்டு எல்லாவற்றையும் ஈர்த்து, இயக்கி வருகிறது. நம் உடலில் அந்த பிணைப்பாற்றல் என்கிற சக்தியின் வெளிப்பாடே அன்பு என்கிற உணர்வாகும். பயமே பக்தி என்பார்கள். அது தவறு. பயம் எப்போதும் இருப்பதில்லை. பயம் தெளியும் போது பக்தி ஓடி விடும். ஆனால் அன்புடைய உள்ளத் தோடு கூடிய பக்தி எப்போதும் நிலைத்திருக்கும். ஏனென்றால் அன்பு ஒன்றே பேராற்றலின் யதார்த்த நிலை. எனவே அன்போடு கூடி பக்தி செலுத்தி இறைவனை வழிபாடு செய்பவர்கள் மனதில் ஈகை, இரக்கம் போன்ற நல்ல குணங்கள் வளரும். தீய குணங்கள் படிப்படியாக விலகிவிடும். அன்பு பெருக்கெடுத்து ஓடும் உள்ளத்தை உடையவன் எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் நேசிப்பான். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பான். இறைவன் படைத்துள்ள உயிர்களை நேசிக்காதவன், அவற்றின் மேல் இரக்கம் இல்லாதவன், அவற்றின் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தி அவற்றிற்கு உதவாதவன் இறைவனையே ஏமாற்றி விடலாம் என்று நினைக்கும் ஒரு கபட நாடக வேசதாரியே ஆவான். இத்தகையவர்கள் செய்யும் பூஜைகள் சுயநலத்தின் பொருட்டேயாகும். எத்தகைய வழிபாடாக இருந்தாலும் சரி, இரக்க உணர்வையும், ஈகை உணர்வையும் தூண்டாமல் போனால் அது போலி பூஜையே ஆகும். புரட்டு வழிபாடாகும். இறைவனை வழிபடும் போது உள்ளத்தில் அன்பு பெருக்கெடுத்தல் வேண்டுமே அல்லாது அச்சம் எழக் கூடாது. விநயம் இருக்க வேண்டுமே அல்லாது, வியாபார நோக்கம் இருக்கக் கூடாது. சிலர் சொல்கிறார்கள் இறைவன் எல்லாம் வல்லவன். அவனை அணுகும் போது பயம் வேண்டும் என்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கும் மனிதர்களும் ஆலயங்களுக்குச் சென்று ஐயா, நான் எளியவன், பாவி, முட்டாள், அறிவில்லாதவன், ஆற்றலில்லாதவன் என்னைக் காப்பாற்றுங்கள் என்று பயத்தோடு வேண்டுகிறார்கள். தனக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பையே ஆறியாத இவர்கள் மற்ற உயிர்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும். ஒரு குற்றவாளி அரசனுடைய காலில் விழுந்து கதறுவது போல இறைவன் முன்னே நடுங்குகிறார்கள். அல்லது நடுங்குவது போல நடிக்கிறார்கள். இதைத்தான் நாதன் உள்ளில் இருக்கிறான் என்று உணராதவர்களிடம் நட்ட கல்லில் உள்ள இறைவன் எப்படி பேசுவான் ? என்கிறார் சித்தர். இப்படிப்பட்டவர்கள் இறைவனின் கருத்துக்கு மாறாக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதே உண்மை. இன்னும் சில பணம் படைத்தவர்களோ அல்லது நடுத்தர வாசிகளோ இறைவனிடம் வியாபாரம் பேசுவார்கள். ஐயா நான் உனக்கு நூறு ரூபாய் செலவு செய்து அபிஷேகம் செய்கிறேன் நீ எனக்கு அதிக பணம் கிடைக்கச் செய்ய வேண்டும். உனக்கு கோவில் கட்டி கும்பாபிஜேகம் செய்து வைக்கிறேன், என் வியாபாரத்தில் எனக்கு அதிக லாபம் கிடைத்திடச் செய்ய வேண்டும். இந்த ஆண்டு வருமானம் பத்து இலட்சம் கிடைத்தால் உன் உண்டியலில் இரண்டு இலட்சம் போடுகிறேன் என்றெல்லாம் பேரம் பேசுவார்கள். இன்னும் சில பேர் இருக்கிறார்கள், எவ்வளவு கிடைத்தாலும்திருப்தி என்பதே இல்லாமல் இறைவனிடம் போய் எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று பிச்சைக் காரன் கேட்பது போல கேட்டுக் கொண்டிருப்பார்கள். இல்லாதவர்கள் இருப்பவர்களை நாடி பிச்சை கேட்பது போல இவர்கள் இறைவனிடம் கேட்பார்கள். இதை எல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் பயத்தோடோ, வியாபார நோக்கத்துடனோ, பிச்சைக்காரன் மனநிலையிலோ போய் இறைவனை வேண்டுவது என்பது எந்த வகையிலும் நம்மை மேன்மை அடையச் செய்யாது. மனிதர்களாகிய நம்மிடம் தெய்வத் தன்மை புதைந்து கிடக்கிறது. அதை வெளிப்படுத்தும் வல்லமை மனிதர்களாகிய நமக்கு மட்டுமே உண்டு என்பதை உணர்ந்து அன்போடு இறைவனை வழிபடுவதாலும், இறையருள் பெற்ற அருளாளர்களோடு கூடி ஒழுகுவதாலும், பிறர் படும் துன்பங்களைக் களைய நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதாலும் மட்டுமே நம்மால் அகம், புறம் இரண்டையும் அடக்கி வசப்படுத்தி தவநிலைக்கு முன்னேற முடியும். இத்தகைய செயல்களால் புனிதமும், தியாகமும் வெளிப்படுகின்றது. சுயநலம் பரநலமாக மாறி மனதை அமைதிப்படுத்தி, நல்வழியில் இயங்கத் தூண்டுகிறது. எனவே இறைவழிபாடு என்பது சாதனையில் நுழைய விரும்புபவர்களுக்கு முதல்
நான் இந்த உடல், நான் மனிதன், நான் சத்ரியன், நான் சூத்திரன் என்று அறியாமையால் எண்ணுவது ஜீவன். நான் இந்த உடலல்ல, நான் சத்ரியனுமல்ல, சூத்திரனுமல்ல, நான் மனிதனே அல்ல என்ற எண்ணத்தில் தீர்மானமாக பற்றறுந்த நிலையில் நான் பிரம்மம், நான் வேறு பிரம்மம் வேறல்ல என்ற நிலையில் இருப்பவன் ஜீவன் முக்தன். இனி, ஆதியில்லாதது அவித்தை என்பார்கள். அதாவது அவித்தையின் காரணமாக ஜீவன் பிறப்பதால் அவனுக்கு ஆதியில்லை என்பார்கள். அவித்தையின் நிமித்தம், பல பிறவிகளையும், பல சரீரங்களையும் எடுத்து இரு வினைகளையும் புரிந்து கொண்டேயிருக்கிறான். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணமும், ஒரு பயனும் உண்டு. காரணம் என்பது நோக்கம். பயன் காலப் போக்கில் எற்படக் கூடியது. அது எந்த நோக்கத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறதோ, அதற்கேற்ற வண்ணம் நுண்மையான வடிவில் எதிர்ச் செயலாகிய ஊழ்வினை அமைகிறது. இதையே கர்மம் என்கிறோம்.

பிராப்த கர்மத்தின் விளைவாக பிறப்பெடுத்த ஜீவன் பயனை அனுபவத்துக் கொண்டே தன் உடலாலும், மனதாலும்(நான் செய்கிறேன்) செய்யும் இரு வினைகளும் ஆகாமிய கர்மம் எனப்படும். இப்பிறவி முடியும் நிலையில் ஆகாமிய கர்மங்கள் சஞ்சித கர்மங்களாக மாறி விடும். இவை எதிர் காலத்தில் பயன் தரக்கூடியவை. கடந்த பல பிறவிகளிலும் செய்யப்பட்ட கோடிக்கணக்கான வினைகளும் விதை வடிவாய் இருந்து கொண்டு கோடிக்கணக்கான பிறவிகளைத் தோற்றுவிப்பதாய் இருக்கக் கூடிய கர்மங்களுக்கு சஞ்சித கர்மம் என்று பெயர். எடுத்துக் கொண்ட பிறவியில் சஞ்சிதத்திலிருந்து அனுபவிக்க கொண்டு வரும் கர்மங்களே பிராப்தம். இதை அனுபவித்தே ஆக வேண்டும். அந்த அனுபவங்கள் இரு வினைகளின் பலனாகவே இருக்கும்.

ஜீவன் முக்தர்களின் நான் ப்ரம்மம் என்கிற ஞானத்தால் சஞ்சித கர்மம் நசிந்து விடுகின்றது. ஆகாமிய கர்மமும் ஞானாக்னியால் பொசுங்கிப் போய் விடுகின்றது. இனி மீதமுள்ள பிராப்த கர்மத்தை அனுபவிக்கும் வரை அவர் வாழ்ந்து வருவார். இப்போது ஒரு கேள்வியை முன் வைத்து லாஜிக் இல்லையே என்கிறார்கள். அப்படியானால் ஜீவன் முக்தர் தான் செய்யும் தற்போதைய கர்மங்கள்(ஆகாமிய) என்னாகும் ? இதைத்தான் சொன்னேன் ஞானாக்கினியால் ஆகாமியம் பொசுங்கி விடும் என்று. ஏனென்றால் நான் கர்த்தா என்கிற எண்ணம் இல்லாமல் போய்விடுவதால் அவர் தாமரை இலைத் தண்ணீராகவே வாழ்ந்து வருவார். எனவே ஆத்ம ஞானம் பெற்ற ஜீவன் முக்தர்களை ஆகாமிய கர்மம் அடைவதில்லை. அப்படியானால் அவர் புரியும் கர்மா என்னவாகும் ? அவரை உணர்ந்து, அவர் மனதோடு தங்கள் மனதை ஒன்றச் செய்து போற்றி வழிபடுபவர்களுக்கு ஞானியால் செய்யப்பட்ட நல் வினைகள் போய்ச் சேரும். அவரை அறியாமலேயே அவர் செய்யும் பாவப் பலன்கள் அவரைத் தூற்றி, இகழ்ந்து, துன்புறுத்துபவர்களைப் போய்ச் சேரும். எனவேதான் சிவனடியார்களையும், ஞானிகளையும் இகழ்ந்து பேசக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

தன்னையறிந்தவன் எல்லா வினைகளையும் கடக்கிறான் என்பது வேத வாக்கு. அந்த அடிப்படையில் ப்ரம்மஞானம் பெற்ற அளவில் ஜீவன் முக்தர்கள் கர்ம பந்தங்களில் இருந்து விடுதலை அடைந்திடுவார்கள். வினைக்கட்டே பிறப்பிறப்புக்குக் காரணமாக அமைகிறது. இந்த சரீரத்தின் ப்ராப்தமல்லாது மற்ற எல்லா கர்மங்களிலிருந்தும் ஜீவன் முக்தர் விடுபட்டு விடுகிறார். அவருக்கு இனி கர்ம்ப் பிணிப்பு இல்லை. தூங்கி எழுந்தவனை எப்படி கனவின் வினைகள் பாதிப்பதில்லையோ, அது போல விழிப்பு நிலையிலிருந்து விழிப்படைந்து துரியத்தை அடைந்து விட்ட ஜீவன் முக்தர்கள் வினைகளைக் கடந்து வினைகளில் இருந்து விடுதலை அடைந்து விடுகிறார்கள். அவித்தையை ஞானம் அழித்து விடுகிறது. ஞானாக்கினியால் வெந்து போன விதை இனி முளைக்காது.

இயற்கையில் இறைத்தன்மை

இந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்

இயற்கையில் இறைத்தன்மை

இந்துத்துவத்தின் மற்றொரு தன்மை இயற்கையில் இறைத் தன்மை காணுதல். பூமியை, நதியை, பேசும் மொழியை என்று அனைத்தையும் தெய்வத் தன்மையின் வெளிப்பாடாகக் கொண்டாடுவது ஹிந்துத்துவத்தின் முக்கிய அம்சம்.
ஹிந்து பண்பாட்டின் அனைத்து அம்சங்களும் ஏதோ ஒரு பெரும் விபத்தால் அழிந்து போய்விட்டதென்று வைத்துக் கொள்வோம். அப்படி ஒரு சூழ்நிலையிலும் கூட ஒரே ஒரு இந்து வாசகம் பிழைத்தால், மொத்த இந்துப்பண்பாடும் அதே செழுமையுடன் மீண்டும் பிறந்துவிடும் என மகாத்மா காந்தி ஒரு உபநிடத வாக்கியத்தைக் குறிப்பிட்டார்.
“ஈஸாவாஸ்யமிதம் ஸர்வம்’ என்பதே அந்த வாக்கியம்.
இந்த பிரபஞ்சம் அனைத்தும் இறைவனால் நிறைக்கப் பட்டிருக்கிறது எனும் அந்த வாக்கியம் நம்முள்ளும் நம்மைச் சுற்றியும் இருக்கும் அனைத்தையும் இறைவடிவாகக் காணவும் மதிக்கவும் வைக்கிறது. இந்த வேத ஞானமும் இந்திய மண்ணிலிருந்து எழுந்ததாகும். இந்தியா முழுவதிலும் இதைப் பார்க்கலாம். உதாரணமாக, இந்தியா முழுவதும் ஒவ்வொரு பிராந்தியத்திலுள் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு புனித வனங்கள் இருக்கின்றன. இந்த வனங்களைப் பாதுகாத்துப் போற்றி வணங்கும் பண்பாடு இந்தியா முழுவதும் நிலவுகிறது.

போபாலில் உள்ள இந்திரா காந்தி ராஷ்டிரீய மானவ் சங்கிரகாலயா எனும் அமைப்பு 4875 புனித வனங்களை கணக்கெடுத்துள்ளது. இவற்றின் பரப்பளவு 39,063 ஏக்கர்கள். ஆனால், இந்தக் கணக்கெடுப்பில் அடங்காமல் பல புனித வனங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் வனங்கள் கூட நலிவடைந்து வரும் இந்தக் காலகட்டத்திலும், புனித வனங்களின் பரப்பளவு அப்படியே இருந்து வருகிறது என இந்திய வன நிர்வாகத்துறையின் இயக்குநரே கூறுகிறார்.
இன்றைய தேதியில் கேரளாவில் 500 ஹெக்டேருக்கு மேலாக 2000 நாகக் காடுகள் (ஸர்ப்ப காவுகள்) உள்ளன. இந்த 2000 காடுகளில் 761 காடுகளில் சுற்றுச்சூழல் தாவரவிய லாளர்கள் 722 தனித்தனி பூப்பூக்கும் தாவர இனங்களை கண்டறிந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 304 காடுகள் இன்றும் உள்ளன. மிகச்சிறந்த மூலிகைச் செடிகள் கிடைக்கும் இடமாக இந்தக் காடுகள் அறியப்படுகின்றன. சூழலியல் உணர்வு என்பது ஹிந்து தர்மத்தில் அன்றாட வாழ்க்கையிலும் வெளிப்படுவது.
ஹிந்துத்துவத்தின் இரண்டு முக்கியத் தன்மைகளை நாம் மேலே காண்கிறோம். பௌத்த அறிஞர் பேராசிரியர் லோகேஷ் சந்திரா இந்த இரண்டையும் ஒன்றோடொன்று இணைந்த இறையியல் பன்மை (theo -diversity) உயிரியல் பன்மை (bio-diversity) என அழைக்கிறார். இந்த இரண்டையும் பேணிக் காப்பதாக நம் பண்பாடு அமைந்துள்ளது. இந்தப் பண்பாட்டு வாழ்வியலின் வரலாற்றுப் பெயர்தான் ஹிந்துத்துவம்.

இந்துத்துவம் மிளிரும் பாரத இறையாண்மை
மேலே கூறிய இரண்டு அடிப்படைகளும் பரந்துபட்ட தத்துவங்களாகத் தோன்றலாம். ஆனால், அவை இந்த தேசத்தில் தலைமுறைகள் தாண்டிப் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இந்த உண்மைகளை நம்முடைய நவீன பாரத அரசாங்கத்தை ஏற்படுத்திய தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவேதான் நம் தேச இறையாண்மையைக் காட்டும் சின்னங்கள் இந்துத்துவத் தொல்மரபினை வெளிக்காட்டுபவையாக அமைக்கப்பட்டன.

நம் தேசத்தின் முத்திரை வாக்கியமான “சத்யமேவ ஜெயதே’ என்பது முண்டக உபநிடதத்தின் வாசகம்.
இந்தியக் கடற்படையின் முத்திரை வாக்கியம் “சம் நோ வருணா:’ வருணன் நமமைக் காப்பாற்றட்டும் என்பது அதன் பொருள்.
இந்திய விமானப்படையின் முத்திரை வாக்கியம் “நப: ஸ்ப்ருசம் தீப்தம்’. இது பகவத் கீதையின் 11வது அத்யாயத்தின் 24வது சுலோகம். “வான்முகத்தை தொடுபவன் ஒளி வீசுபவன்’ என பகவான் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனத்தை கூறும் வாசகமே அது.
மத்திய அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மையத்தின் (என்.சி.இ.ஆர்.டி) முத்திரை வாக்கியம் “அறிவின் மூலம் அழியா வாழ்வு’ என்பது. இது ஈஸாவாஸ்ய உபநிடதத்திலிருந்து பெறப்பட்டது.
எல்.ஐ.சியின் முத்திரை வாக்கியம் “யோகஷேமம் வஹாம்யகம்’ “உங்கள் நலன் எம் பொறுப்பு’ எனும் கீதையின் வாசகம். இவ்வாறு இந்திய இறையாண்மை நம் கலாசார தேசியத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் 21.2.1957, காஞ்சிபுரத்தில் ஆற்றிய உரையிலிருந்து:...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் 21.2.1957, காஞ்சிபுரத்தில் ஆற்றிய உரையிலிருந்து:...

ஏன் இத்தனை தெய்வங்கள் ?

’ஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ என்றுதானே கூறியிருக்கிறார்கள் அப்படியிருக்கும் போது பல தெய்வங்கள் இருப்பானேன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது யார் சொன்ன வார்த்தை? அது அநேக மக்களுக்கு தெரியாது. சரியாகப் புரியாதவர்கள், நாஸ்திகர் பேசினார் என்று சொல்வார்கள். இந்த வாக்கு திருமூலர் வேதவாக்கு. அவர் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதை முழுவதும் கூறாமல்,’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு விடுகிறார்கள் நாஸ்திக கும்பல்.

அப்படியானால் ஒரு வக்கீல் ஒரு statementன் ஒரு பகுதியை மாத்திரம் வாசித்துக் காட்டிவிட்டு, இன்னொரு பகுதி வேண்டாம் என்று கூறினால், அடி முட்டாளாக இருந்தால்தான் அதை கேட்பான். இல்லாவிட்டால் எடுத்துக் கொண்ட பகுதியைப் பூராவும் படி என்று சொல்லுவான். அதுதான் முறை.

பல தெய்வ உருவங்களை வைத்து வணங்குகிற மக்களுக்கு, ஒரு தெய்வம் தான் உண்டு என்று சொல்வதற்கு என்ன காரணம்? என்று சாதாரண மக்களுக்கு தெரியாது.

ஒருவர் வீட்டுக்கு போகிறோம். அந்த வீட்டில் பல படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. அந்த வீட்டுக்காரர் வந்து, இதுதான் என்னுடைய தகப்பனார் படம் என்று ஒரு படத்தைக் காட்டுகிறார். அதற்கு பின்னால் ஒரு பெண்ணோடு இருப்பவர் படத்தைக் காட்டி, இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னால் ஆணும், பெண்ணும், ஒரு குழந்தையுடன் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னர் விருத்தாப்பியப் பருவத்தில் ஒருவரும், கல்யாண கோலத்தில் இருக்கிற ஒரு ஆணும், பெண்ணும் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னால் ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். இவ்வளவையும் பார்த்துக் கொண்டு வருகிறவர் உனக்கு எத்தனை தகப்பனார் என்று கேட்கலாமா? (கைதட்டல்). அப்படிக் கேட்பவன் அறிவுடையவன் ஆவானா?

முதல் படம் இவன் தகப்பனார் வாலிபனாக இருந்தபோது எடுத்த படம்.அடுத்த படம், இவனுடைய தாயை, தகப்பனார் கல்யாணம் செய்து கொண்ட போது எடுத்த படம்.

அடுத்தது, இவன் குழந்தையாகப் பிறந்த போது எடுத்த படம்.

அடுத்து இவனை மண அறையில் மனைவியோடு தகப்பனார் ஆசீர்வாதம் செய்கிற படம்.

அடுத்தது இவன் பெற்ற குழந்தையைத் தகப்பனார் கொஞ்சுகிற படம்.ஒரே தகப்பனார் பல காலத்தில் பல உருவில் இருக்கிறார்.

அதே போல் பரம்பொருள் ஒரே பிரம்மம், உல்கத்திலே துஷ்ட நிக்ரக பரிபாலனம் செய்ய பல ரூபத்தோடு பல காட்சிகளை எடுக்கிறார். இதை ஞாபகார்த்தம் செய்ய வேண்டுமென்பதற்காக, அந்தத்தத் திருக்கோலங்களாக - உருவங்களாக வைத்திருக்கிறார்கள். அத்தனை தெய்வம் இருக்கிறது என்று சொல்லவில்லை. இதுதான் ரகசியம்.

இதைச் சாதாரண அறிவற்ற நிலையில் “இத்தனை தெய்வங்களா ?” என்று கேட்பது நாலாம்தரக் கேள்வி…”

பூமியின் மையப் பகுதி சிதம்பரம்

பூமியின் மையப் பகுதி சிதம்பரம் என்பார்கள். பல்லாயிரக்கணக்கான கோவில்கள் இருந்தாலும், கோவில் என்றால் அது சிதம்பரத்தையே குறிக்கும். உருவம், அருவம், அருஉருவம் என்று மூன்று நிலைகளில் இறைவனை வழிபடுவது சைவசமயத்தின் சிறப்பாகும். அந்த வகையில் உருவமாகவும், அருவமாகவும் இறைவனைக் கொண்டாடும் இடம் சிதம்பரமாகும். சிதம்பரத்தைத் தவிர்த்து மற்ற சைவ ஆலயங்களிலெல்லாம் லிங்கத்தையே வழிபடுவார்கள். இந்த வழிபாடானது உருவமுள்ளதாகவும், உருவம் இல்லாததாகவும் கருதப்படுவதால் அது அருஉருவ வழிபாடாகும். சிதம்பரத்தில் காட்சி தரும் ஆனந்தத் தாண்டவ நடராஜரின் திருவுருவமானது எல்லா சமயங்களின் தத்துவங்களையும் உள்ளடக்கியதாகும்.

நடராஜரின் அந்தத் திரு நடனக் கூத்து ஒவ்வொரு அணுவிலும் நடைபெறுவதாகச் சொல்வார்கள். அகிலம் முழுவதையும் வெளியாக - அரங்கமாகக் கொண்டு இறைவன் அங்கே நடனம் புரிகிறார். ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், அடக்கல் என்ற ஐந்தொழில்களையும் திரு நடனத்தின் மூலம் புரிகிறார். இச்செயலே ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இடைவிடாது நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அவருக்கு நான்கு கரங்கள். வலக்கரம் ஒன்றில் ...ஏந்தியிருக்கும் டமருகம் ஒலி மூலம் அவர் உலகைப் படைக்கிறார் என்பதைக் குறிப்பதாகும். மற்றொரு வலக்கரம் சகல விதமான ஜீவர்களையும் அவர் ஆசிர்வதிக்கிறார் என்பதைக் குறிப்பதாகும். இடது கரம் ஒன்றைத் தூக்கி நிற்கும் பாதத்தைச் சுட்டிக் காட்டி ஒவ்வொரு ஜீவனும் இறைவனின் திருவடியை அடைய முயல வேண்டும் என்பதைக் குறிப்பதாகும். மற்றொரு இடக் கரத்தில் இருக்கும் நெருப்பு அனைத்து மலங்களையும் பொசுக்கி ஜீவனைப் பரிசுத்தமாக்கும் தெய்வத் தன்மையை குறிக்கிறது.

ஆணவ மலத்தை அடக்கிக் கட்டுப்படுத்தினால்தான் இறைவன் திருவடிப் பேறு கிட்டும் என்பதை முயலகனைக் காலால் மிதித்து நசுக்குவது போல் காட்டப்பட்டுள்ளது. துள்ளும் பாவனையில் இருக்கும் மான் உருவம் ஜீவர்களின் சஞ்சலத்தைக் குறிப்பதாகும். புலிக்கு இருப்பதைப் போன்ற வலிமையும், கொடிய குணமும் தன்னல உணர்வுக்கு உண்டு. அதை அடியோடு அழித்து நம்மிலிருந்து பிரித்து எடுத்து விட வேண்டும் என்பதை அரையில் கட்டியிருக்கும் புலித்தோல் உணர்த்துகிறது. கங்கையும், திங்களும் இன்பத்தையும், தண்மையையும் குறிக்கின்றன. தாண்டவமாடும் முழுத் தோற்றமும் முடிவில் அடைய வேண்டிய பேரானந்த நிலையைக் குறிப்பதாகும். இப்படி அனைத்து இறைத் தத்துவங்களையும் உள்ளடக்கிய நடராஜரின் திருவுருவைக் கண்டு மேலைநாட்டினரே வியந்து போற்றுகிறார்கள். இத்தகைய கலை வடிவம் தமிழ் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கூட லிங்க வழிபாடுதான் நடைபெறுகிறதேயன்றி நடராஜர் வழிபாடு கிடையாது. மேலும் சிதம்பர இரகசியம் என்பது அருவ வழிபாடாகும். வெட்ட வெளியாகிய விண்ணாகிய ஆகாசமே இறைவன் என்பதை உணர்த்துவதாகும். தமிழனின் பண்பாடையும், கலாச்சாரத்தையும், ஆன்மிக பேருணர்வையும் உலகுக்கே பறைசாற்றும் ஒப்பற்ற கோவில் சிதம்பரம் நடராஜர் கோவிலாகும்.

சந்தானம்(குழந்தை) இல்லாத மங்கையர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்படியான


 
சந்தான வித்தை - அகத்தியர்

குழந்தை இல்லாமல் வாடும் பல பெண்கள் நம் நாட்டில் மலடி எனவும், பிள்ளை இல்லாதவள் எனவும் பலவாராக இச்சமுகத்தாரால் பேசப்பட்டு அத்தகையோரின் உள்ளத்தை வாடச்செய்கின்றனர்,
குழந்தையின்மையின் காரணமாய் பல ஆண்கள் இன்னொரு திருமணம் செய்து கொள்வதும், பல மருத்துவர்கள் குழந்தையின்மைக்காக பல லட்சங்கள் பறிப்பது நம் சமுகத்தின் அவல நிலையைக்காட்டுகின்றது. பல சகோதரிகள் குழந்தையின்மையால் மனம் நொந்து உயிரை விடவும் துணிகின்றனர் .அத்தகைய நிலைகள் மாறி நல்லமுறையில் குழந்தை பிறக்க அகத்தியர் தனது பரிபூரணத்தில் சந்தானம்(குழந்தை) இல்லாத மங்கையர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்படியான
அரியதொரு மந்திரத்தைஅருளியுள்ளார். அதைப்பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். ...

இருந்து கொண்டு குருபரனைத் தியானம் பண்ணி
இன்பமுடன் ஓம் ரீங் அங்வங் கென்று
வருந்திமனக் கனிவதனால் தேனில் மைந்தா
மார்க்கமுடன் நூற்றெட்டு உருவே செய்து
அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா
அன்புடன் பெண்களுக்கு யீய்ந்தாயானால்
திருந்தியந்த மங்கையர்க்குக் கெற்பமுண்டாம்
திட்டமுடன் கண்மணியைக் காண்பாய் பாரே.

பாரப்பா மலடாகி இருந்தாலென்ன
பக்குவமாய் வொன்பதுக்குள் கெர்பமுண்டாம்
நேரப்பா மணிமந்திர மிதுதானாகும்
ஆரப்பா அறிவார்கள் சந்தான கரணி
அறிந்துமன துருமையானா லடக்கம்பண்ணி
சதாகாலம் பூரணத்தில் சார்ந்து வாழே.

- அகத்தியர் பரிபூரணம் 1200

பொருள்:

வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு கணபதி எண்ணி மந்திரம் சித்திபெற வேண்டுமென தியானம் பண்ணி விட்டுபின்னர் கீழ்க்காணும் மந்திரத்தை செபிக்கவும்.

பூசை முறை

கணபதியை முன்னால் வைத்து தேங்காய், பத்தி, சூடம், மஞ்சள்,குங்குமம்,பால், பழம் வெல்லம், சர்க்கரைப்பொங்கல் முதலியனவைத்து இதன் நடுவில் சுத்தமான தேனை(original) வைத்துக்கொண்டு
அத்தேனுக்கு கற்பூரம்,சாம்பிராணி கட்டி விட்டு அத்தேனைப்பார்த்தவாரே "ஓம் ரீங் அங்வங்" என்ற மந்திரத்தை 108 உரு செபித்தால் மந்திரம் சித்தியாகும். இதனால் அத்தேன் மந்திரசத்தி உடையதாகிவிடும்.

பின்னர் இத்தேனை குழந்தை இல்லையென்று மனம் வருந்தும் மங்கையர்க்கு மாதவிலக்கான சமயத்தில் உண்ணும்படி கொடுத்தால் அத்தேனை உண்ட மங்கையர்க்கு உறுதியாக கெற்பம் உண்டாகி குழந்தை பிறக்கும்.

ஜபம் செய்யும் இடமும் பலனும்


ஜபம் செய்யும் இடமும் பலனும்


 வீடு- பத்து மடங்கு பலன் பலன்
கோவில் அல்லது வனம் நூறு மடங்கு பலன்
குளம்- ஆயிரம் மடங்கு பலன்
ஆற்றங்கரை லட்சம் மடங்கு பலன்
மலை உட்சி ஒரு கோடி மடங்கு பலன்
சிவன் கோயில் இரண்டு கோடி மடங்கு பலன்
அம்பிகை சன்னிதி பத்து மடங்கு பலன்
சிவன் சன்னிதி பல கோடி மடங்கு பலன்

ஜபம் செய்யும் திசையும் பலனும்

ஜபம் செய்யும் திசையும் பலனும்

கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம்
தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்
தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை...
தென்மேற்கு நோக்கு ஜபம் செய்தால் வருமை
மேற்கு நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு
வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்
வடக்கு நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்
வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்

பொறாமை ஒருவருக்குள் எப்படி வருகிறது

...பொறாமை ஒருவருக்குள் எப்படி வருகிறது
 
பொறாமை ஒருவருக்குள் எப்படி வருகிறது என்பதைப்பற்றி பார்ப்போம். தனக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை தான் பொறாமையாக வெளிப்படுகிறது. கீழ்கண்ட நான்கு விஷயத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு தன்னைத்தானே தாழ்த்திக்கொள்வார்கள்.

1. அழகு

2. அறிவு...

3. புகழ்

4. பணம்

இதைத் தவிர வேறு ஏதாவது இருக்க முடியுமா? ஆனால் உண்மை என்ன என்றால் யாருமே தாழ்ந்தவர்கள் அல்ல என்பது தான். கடவுளின் படைப்பு அனைத்தும் உயர்வானவை தான். ஆனால் அதை அறிந்து கொள்ளாமல் தன்னைத்தானே தாழ்த்தி அழிவை தேடிக்கொள்கிறார்கள். பொறாமை மனம் கொண்டவர்கள் மனம் எப்போதும் துன்பத்திலேயே இருக்கும். இதுவே ஒரு பெரிய கொடுமையான விஷயம் ஆகும்.

ஆனால் தன்னை தாழ்வாக எண்ணாமல் உயர்வாக நினைக்க ஆரம்பித்துவிட்டாலே போதும் பொறாமை என்ற அரக்க குணம் வெளியேறிவிடும் என்பது தான் உண்மை

அசுரர்களும் தேவர்களும் இன்று எங்கே???

அசுரர்களும் தேவர்களும் இன்று எங்கே???

தேவர்கள், அசுரர்கள்னு புராணங்களில் படித்துள்ளோமே, இன்று அவர்கள் எல்லாம் எங்கே???

எனக்கு தெரிந்த வகையில் ஒரு சின்ன விளக்கம்:...

சத்ய யுகம்/கிருத்த யுகம்:
அசுரர்கள் பாதாள உலகிலும் தேவர்கள் மேலுலகிலும் மனிதர்கள் பூலோகத்திலும் வாழ்ந்தனர்.

திரேதா யுகம்:
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வாழ்ந்த யுகம். அசுரர்களும், தேவர்களும் பூமியின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.
ராமர் அயோத்தியுலும் ராவணன் இலங்கையிலும் வாழ்ந்தனர்.

துவாபர யுகம்:
பகவான் கிருஷ்ணன் வாழ்ந்த யுகம்.
அசுரர்களும் தேவர்களும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்தனர்.
கிருஷ்ணர்-கம்சன்/சிசுபாலன்.

கலி யுகம்:
அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்கிவிட்டனர்.
சில நேரம் நாமே தேவராகி அடுத்தவர் கஷ்டப்படும் போது உதவுவோம். நம்மை வருத்தப்படுத்தி அடுத்தவருக்காக உதவும் அந்த சில நேரங்களில் நாம் தேவராகிறோம்.
ஒரு சில நேரங்களில் நாமே நமது சுய நலத்திற்காக பிறரை கஷ்டப்படுத்தி அசுரராகிறோம்.
சில நேரங்களில் உதவ முடியாமல் மனதளவில் வருத்தப்பட்டு மனிதனாகி நிற்கிறோம்...

ஏதோ என்னளவில் தோன்றிய ஒரு விளக்கம்.

விபூதி உருவான கதை

விபூதி உருவான கதை
 =================
ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்தது திருநீறு பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவ...ம் புரிந்தான்.ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தது. பசியால் முகம் வாடி இருந்தவனை கண்ட பறவைகள் பழங்களை பறித்து பர்னாதன் முன் வைத்தது. இது ஈனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தை தொடர்ந்தான். இப்படியே பல வருடங்கள் கடந்தோடியது. தவத்தை முடித்து கொண்டு சிவவழிபாட்டை தொடங்கினான். ஒருநாள் தர்பைபுல்லை அறுக்கும் போது அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது. ஆனால் அவனுக்கோ எந்த பதற்றமும் இல்லை. குழந்தைக்கு ஆபத்தென்றால் தாய் பதறுவதை போல பதறியது ஈசன்தான். சிவபெருமான் வேடன் உருவில் தோன்றி, பர்னாதன் கையை பிடித்து பார்த்தார். என்ன ஆச்சரியம்.... ரத்தம் சொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது. வந்தது தாயுமானவர் என்பதை அறிந்தான். “ரத்தத்தை நிறுத்தி சாம்பலை கொட்ட செய்த தாங்கள் நான் வணங்கம் சர்வேஸ்வரன் என்பதை அறிவேன். இந்த அடியேனுக்கு தங்கள் சுயஉருவத்தை காணும் பாக்கியம் இல்லையா?“ என்று வேண்டினான் பர்னாதன். ஈசன் தன் சுயரூபத்தில் காட்சி கொடுத்தார். “உனக்காகவே இந்த சாம்பலை உருவாக்கினேன். அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என்று அழைக்கப்படட்டும். உன் நல்தவத்தால் விபூதி உருவானது. அக்னியை எதுவும் நெருங்க முடியாததை போல விபூதியை பூசி அணிந்து கொள்பவர்களின் அருகில் துஷ்டசக்திகள் நெருங்காது. விபூதி என் ரூபம். அதற்கு நீயும் துணையாக இருந்த வா“ என்று ஆசி வழங்கினார் சிவபெருமான். விபூதியை கட்டை விரலாலும் மோதிர விரலாலும் சேர்த்தெடுத்து மோதிர விரலால் நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் கட்டை விரலும் நடுவிரலும் சேர்ந்து விபூதியை எடுக்கக்கூடாது. கட்டைவிரலாலும் நெற்றியில் விபூதியை வைக்க கூடாது என்கிறது சிவபுராணம். விபூதியால் என்ன நன்மை? என்று ஸ்ரீ ராமர், அகத்திய முனிவரிடம் கேட்டார். “பகை, தீராத வியாதி, மனநல பாதிப்பு, செய்வினை பாதிப்பு இப்படி எது இருந்தாலும் தொடர்ந்து விபூதியை அணிந்து வந்தால் அந்த பிரச்சனைகள் விலகும்“ என்று அகத்திய முனிவர் ஸ்ரீ ராமருக்கு உபதேசம் செய்தார். ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்ததும் விபூதி. அதனை விரும்பி விபூதி கலந்த நீரில் தினமும் அவள் நீராடுகிறாள். திரு என்றால் மகாலஷ்மி. அதனால்தான் விபூதியை திருநீறு என அழைக்கிறோம். “மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு .......... வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு காண இனியது நீறு கவினைத் தருவது நீறு தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே“

முருகன் சிவனுக்கு உபதேசம் செய்தார் என்றால், சிவன் ஏதும் அறியாதவர் போல ஆகிறதே.

முருகன் சிவனுக்கு உபதேசம் செய்தார் என்றால், சிவன் ஏதும் அறியாதவர் போல ஆகிறதே.
நமக்குத் தெரிந்த விஷயத்தை, நம் குழந்தைகளின் வாயிலாகக் கேட்கும்போது ஏற்படும் ஆனந்தத்தையே முருகன் உபதேசிக்க, சிவன் அனுபவித்தார். நம் குழந்தைகளிடம் கேட்பதனால், நாம் அறியாதவர்களாக ஆகி விடுகிறோமா? பிரணவத்தின் பொருள் சிவன் தான் என்பதை முருகன் வாயிலாக வெளிப்படுத்தியது சிவன் செயல். ஏனெனில், முருகன் சிவனுடைய ஞானத்தின் அடையாளம்.

பூஜையறையில் எப்போதும் விளக்கு எரிந்து கொண்டே இருக்க வேண்டுமா?

பூஜையறையில் எப்போதும் விளக்கு எரிந்து கொண்டே இருக்க வேண்டுமா?
நாள் முழுவதும் எரிய வேண்டும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் மலர் கொண்டு அமர்த்தி விடலாம்.

நல்ல விஷயம் பேசும்போது மணி ஒலித்தால் நல்லது என்கிறார்களே உண்மையா?

நல்ல விஷயம் பேசும்போது மணி ஒலித்தால் நல்லது என்கிறார்களே உண்மையா?
நல்ல விஷயம் பேசும்போது நல்ல விஷயங்களே காதிலும் ஒலிக்க வேண்டும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கெட்டது காதில் விழாமலாவது இருக்க வேண்டும். இதைத் தடுக்கவே மங்கள வாத்தியம் முழங்கச் செய்கிறார்கள். நல்ல விஷயங்களைப் பேசும்போது, டேப் ரிக்கார்டர் மூலம் மணி ஓசை, மங்கள இசை கூட ஒலிக்கச் செய்யலாம்

திருவிழா காலத்தில் கொடிமரத்தில் தர்ப்பையைக் கட்டுவது ஏன்?

திருவிழா காலத்தில் கொடிமரத்தில் தர்ப்பையைக் கட்டுவது ஏன்?
"தர்ப்பக ரஜ்ஜுமாலாம்' என்கிறது ஆகம சாஸ்திரம். கொடி மரத்தின் அங்கங்களில் முக்கியமானது தர்ப்பைக்கயிறு. கொடியேற்றம் என்பது உயிரானது பாசங்களைக் கடந்து இறைவனைச் சென்று அடைவதைக் குறிப்பதாக சைவ சித்தாந்தம் கூறுகிறது. கொடிமரத்தின் மேல் பாகம் இறைவனையும், கொடி உயிர்களையும், தர்ப்பை பந்தபாசத்தையும் குறிக்கிறது

மகாலட்சுமி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்.

மகாலட்சுமி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்.

திருமால் மார்பு :

திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன் -ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.

பசுவின் பின்புறம்:

பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா. காரணம், பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருப்பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். `யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயிறை' என்றார் திருமூலர்.

யானையின் மத்தகம்:

யானையின் மத்தகம் பிரணவம் போன்றது. (ஓங்காரம் போன்றது) அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள்.

தாமரை:

மலர்களில் சிறந்தது தாமரை. `பூவெனப்படுவது பொறிவாழ் பூவே' என்றும், `பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை' என்றும் கூறுவர். தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளனர். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை. ஆதலின் அவளை மலர்மகள் என்பர்.

திருவிளக்கு:

விளக்கின்றி பூஜையில்லை. எல்லாத் தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம். ஆதலின் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய் ஆண்டவரைக் கண்டார். எல்லாத் தெய்வகங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை லட்சுமியாகக் கருதுவது நம் மரபு.

சந்தனம்:

மங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலட்சுமி உறைகிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியஙக்ளில் சந்தனம் அவசியம்.

தாம்பூலம்:

தாம்பூலம் மங்கள கரமானது. சுபகாரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தாயிற்று என்றே பொருள்.

கோமயம்:

பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பர். `ஐந்தாடுவான் அரன்' என்பார் அப்பர். வாயிலில் சாணம் தெளித்தால் வீட்டைச் சாணத்தால் மெழுகினால் கிருமிகள் வாரா, லட்சுமி வருவாள். பஞ்சகவ்யம் பருகினால் நோய் வராது. பஞ்ச கவ்யம் பரம ஒளஷதம் என்பர்.

கன்னிப்பெண்கள்:

தூய கன்னியர் தெய்வ நலம் பொலிபவர். அவர்களிடத்து லட்சுமி கடாட்சம் உண்டு. பெண்ணைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று சொல்வது உலக வழக்கு.

உள்ளங்கை:

உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள். காலையில் எழுந்ததும் கையைப் பார்க்க வேண்டும். கையை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கிறது. கையால் உழைத்தால்தான் தனலட்சுமியைக் காண முடியும். கை என்றாலே சக்தி என்றுதான் பொருள். "அவர் பெரிய கை'' என்றால் அவர் செல்வமுடையவர் என்று பொருள்.

பசுமாட்டின் கால்தூசு:

புனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் நில்லாது. அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். மாடு என்றால் செல்வந் தானே!

வேள்விப்புகை :

வேள்விப் புகை உயிர் காக்கும். போபாலில் வேள்வி நடந்த இரு வீடுகளுக்குள்ளே நச்சுக்காற்று நுழையவில்லை. வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப் புகையில் வானம் பொழியும். வையகம் செழிக்கும்.

சங்கு:

சங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை. நிதியின் ஓர் அளவை சங்கம் என்பர். `சங்கநிதி... பதுமநிதி இரண்டுந்தந்து' எனும் நாவரசர் சொல் உணர்வோம்.

வில்வமரம்:

வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றினாள். வில்வம் சிவபெருமானுக்கு உகந்த பத்திரம். அதைவிடச் சிறந்த பத்திரம் ஒன்றும் இல்லை. வைணவத் தலமான ஸ்ரீரங்கத்தில் தல விருட்சம் வில்வம், திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால்தான் அர்ச்சனை. வில்வ மரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்.

நெல்லி மரம்:

நெல்லி ஆயுளை வளர்க்கும்: ஆரோக்கியம் தரும். அதனடியில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லிதிருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயர். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாசிப் பலன் உண்டு.

16. தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்.
17. வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம்
18. கலகமில்லாத மகளிர் வாழும் இடம்
19. தானியக் குவியல்
20. கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்
21. பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர்
22. பகிர்ந்துண்டு வாழும் மனிதர்
23. நாவடக்கம் உள்ளவர்
24. மிதமாக உண்பவர்
25. பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்
26. தூய்மையான ஆடை அணிகிறவர் ஆகிய இடங்களிலும் மனிதர்களிடத்தும் மகாலட்சுமி எப்போதும் இருக்கிறாள்.

`சத்தியம், தானம், விரதம், தவம், வீரம், தர்மம் ஆகியவைகளில் நான் எப்போதும் இருக்கிறேன். என்னை நான்காகப் பிரித்து வழிபடு. உன்னைவிட்டு நீங்காமல் இருப்பேன் என்று லட்சுமி இந்திரனிடம் கூறினாள். இந்திரன், லட்சுமியை பூமி, நீர், நெருப்பு, உண்மை பேசும் மனிதர் ஆகிய நான்கு இடங்களிலும் வைத்து வழிபட்டான்.

ஆதலின் பூமி, நீர், அக்னி, சத்யம் ஆகியவையும் மகாலட்சுமியின் இருப்பிடங்களாகும். அச்சமின்மை, சுறுசுறுப்பு, வீரம், சோம்பலின்மை, நோயின்மை, செல்வத்தைத் துய்த்தல் ஆகியன உடையவரை லட்சுமி தேடி வருவாள்.

யாரேனும் பூ, பொன், சந்தனம், தாம்பூலம், தண்ணீர், ரத்தினம் அகியவற்றை அன்புடன் கொடுத்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும், அவற்றை மறுத்தல் கூடாது. ஏனெனில் அவை மகாலட்சுமியின் சின்னங்களாகும். செந்தமிழ் ஏடு, தாம்பூலம், திருநீறு, பல்லக்கு, பொன்னாரம், ஆடை, கன்னி ஆகியன தன்னை வந்தடையும்போது இருகை ஏந்தி வாங்கினால் லட்சுமி வருவாள்.

மகாலட்சுமி வாசம் செய்யும் தாமரை, யானை, விளக்கு, வேள்வி, வில்வம், நெல்லி, பசு, பஞ்சகவ்யம் ஆகியவற்றை வணங்க வேண்டும். தாமரை, வில்வம், தும்பை ஆகியவற்றைத் தலையில் அணியக் கூடாது. பிற மலர்களையே அணிய வேண்டும். சந்தனம், மஞ்சள், குங்குமம், தாம்பூலம் பொன்னாரம் ஆகியவற்றைத் தரித்தல் வேண்டும். திருமகளைத் திருமாலுடன் இணைத்து வழிபட்டு வந்தால் லட்சுமி வருவாள்.

மகாலட்சுமி தங்காத இடங்கள்

1. கடவுள் நம்பிக்கையற்றவர்கள்,
2. கடமையைச் செய்யாதவர்கள்,
3. குலதர்மம் தவறியவர்கள்,
4. செய்ந்நன்றி மறந்தவர்கள்,
5. புலனடக்கம் இல்லாதவர்கள்,

6.பொறாமை கொண்டவர்கள்,
7. பேராசை கொண்டவர்கள்,
8. கோபம் கொள்பவர்கள்,
9. சான்றோரை மதிக்காதவர்கள்,
10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள்.

11. குரு நிந்தனை செய்பவர்கள்,
12. கால்நடைகளுக்கு ஊறு செய்பவர்கள்,
13. இறைச்சி உண்பவர்கள்,
14. விருந்தினரை உபசரிக்காதவர்கள்,
15. பொய் பேசுபவர்கள்,

16. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள்,
17. பிறர்மனை விரும்புகிறவர்கள்,
18. மனத்துணிவு அற்றவர்கள்,
19. அகத் தூய்மை அற்றவர்கள்,
20. புறத்தூய்மை அற்றவர்கள்.
21. கொடுஞ்சொல் பேசுகிறவர்கள்,

22. ஆணவம் கொண்டவர்கள்,
23. சோம்பேறியாய் இருப்பவர்கள்,
24. அழுக்கு ஆடை அணிபவர்கள்,
25. பகலில் உறங்குபவர்கள்,
26. பகலில் உடல் உறவு கொள்பவர்கள்,

27. பசுக்களை வதை செய்பவர்கள்,
28. விரதங்கள் மேற்கொள்ளாதவர்கள்,
29. நம்பிக்கை துரோகம் செய்பவர்கள்,
30. நகத்தால் புல்லைக் கிள்ளுபவர்கள். 
31. நீரில் கோலம் போடுபவர்கள்,

32. நிலத்தில் நகத்தால் கீறுபவர்கள்,
33. சந்தியா வந்தனங்கள் செய்யாதவர்கள்,
34. நித்திய அனுஷ்டானங்களைப் புறக்கணிப்பவர்கள்,
35. குலதெய்வத்தை நிந்தனை செய்பவர்கள்,
36. கல்வி கற்காதவர்கள்,

37. கற்றவழி நிற்காதவர்கள்,
38. வீண் சண்டை விரும்புகிறவர்கள்,
39. விவேகம் இல்லாதவர்கள்,
40. இரக்கம் அற்றவர்கள். 
41. பிறர் பொருளைக் களவாடுபவர்கள்,

42. தந்திரமாக ஏமாற்றுபவர்கள்,
43. உழைப்புக்கேற்ற ஊதியம் தராதவர்கள்,
44. திருமணத்தைத் தடை செய்பவர்கள்,
45. நீதி சாஸ்திரங்களைக் கற்க மறுப்பவர்கள்,
46. தற்புகழ்ச்சி கொள்பவர்கள்,

47. பிறரை ஏளனம் செய்பவர்கள்,
48. காலைக் கழுவாமல் வீட்டிற்குள் நுழைபவர்கள்,
49. ஈரக் காலோடு படுக்கையை மிதிப்பவர்கள்,
50. ஆடையின்றி நீராடுபவர்கள்.
51. எண்ணெய்க் குளியலன்று உறங்குபவர்கள்,

52. வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பவர்கள்,
53. அந்தியில் தீபம் ஏற்றாதவர்கள்,
54. அந்திம வேளையில் உணவு உண்பவர்கள்,
55. தெய்வப் பிரசாதங்களைப் புறக்கணிப்பவர்கள்,

56. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள்,
57. கோள் மூட்டுபவர்கள்,
58. தீய பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள்.

மகாலட்சுமி சக்கரம்

எல்லாவிதமான வசதிகளையும்- அதாவது வீடு, மனை, மாடு, கன்றுகள், நிலம், புலம், செல்வ வளம் பிறரால் பாராட்டப்படும் நிலை போன்றவை அனைத்தையும் பெற்று வாழ்வில் சகலவிதமான சுக போகங்களுடன் வாழ்வதற்கு அவசியம் லட்சுமி கடாட்சம் வேண்டும். இதற்குத் துணைபுரிவது மகாலட்சுமி மந்திரமும் சக்கரமுமாகும்.

மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவர் மீது விழுந்துவிட்டால் அவருக்குச் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது. பொருட்செல்வம் வர ஆரம்பித்து விட்டால் இதர செல்வங்களும் தானாகவே தேடி வரும் என்பதில் சந்தேகமில்லை.

"ஸர்வ ஸம்பத் ஸம்ருத்யர்த்தம்'' என்ற மந்திரத்தைத் தினந்தோறும் இருபத்தைந்தாயிரம் முறை ஆறு நாட்கள் உச்சரித்து வர வேண்டும். அதிகாலை வேளையில் காலைக் கடன்களை முடித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

மகாலட்சுமியை வணங்கும் போது தேவிக்கு நிவேதனமாக தேன் அல்லது பாயாசம் வைத்து வழிப்பட வேண்டும். தேவியின் கடைக்கண் பார்வைப்பட்டால் வாழ்வில் முன்னேற்றம் தானாக வரும் அத்தனை செல்வங்களும் பெருக ஆரம்பிக்கும்.

ஒருவருக்கு வாழ்வில் நல்ல காலம் ஆரம்பித்து விட்டது என்றால் முனைப்புடன் செயல்படும் ஆற்றலும், தைரியமும், பக்கபலமும் வந்துவிடும். இவ்விதம் வருவதற்கு மகாலட்சுமி சக்கரத்தை வைத்துப் பூஜை செய்து வர வேண்டும்.

எல்லா செல்வங்களும் தரும் மகாலட்சுமி சக்கரம்

லட்சுமி இருக்கும் இடங்கள்


 ஸ்ரீலட்சுமி திருமாலின் தலங்களில் நித்திய வாசம் புரிகின் றாள். சுமங்கலிகள், பூரண கும்பம்-மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்கலப் பொருட்களில் மகா லட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்மசிந்தனை, பொறுமை, தெய்வபக்தி, ஐம்புலன் அடக்கம், சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள். தேவர்களிடத்திலும் பிரம்ம ஞானியர் களிடத்திலும் பரமனடியார்களிடத்திலும் பக்தி உள்ளோர் வீடுகளிலும், கிருகஸ்தர்களிடத்திலும், பசுக்களிடத்திலும், அந்த பசுக்களை பராமரிக்கும் பெண்களிடத்திலும் ஸ்ரீதேவி நித்யவாசம் புரிகிறாள்.

வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீலட்சுமி வசிக்கிறாள். ஸ்ரீ லட்சுமியை வில்வத் தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அவ்வாறு அர்ச்சிக்கும் போது, வில்வத்தை தளப் பக்கமாக பூஜிக்க வேண்டும். ஏன் என்றால் வில்வ தளத்தில் அமிர்த தாரையாக லட்சுமி வாசம் செய்கிறாள்.

அதேபோல் தாமரை மலரால் பூஜிக்கும் போதும் தாமரையின் பூ உள்ள பக்கமாக பூஜிக்க வேண்டும். ஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். ஸ்ரீரங்க சேத்திரத்தின் தல விருட்சம் வில்வம், திருவகீந்தபுரத்து ஹேமாம் புஜநாயகி தாயாருக்கு வில்வார்ச்சனை தான் செய்து வருகிறார்கள்.

வில்வ மரத்தைப் பிரதசிணம் செய்வது ஸ்ரீ லட்சுமியை வலம் வருவதற்குச் சமமாகும். திருமலை ஸ்ரீ வெங்கடேச பெருமானுக்கு மார்கழி மாதம் வில்வார்ச்சனை செய்கிறார்கள். வைகாசன ஆகமத்தின் போது வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது. ஸ்ரீலட்சுமி தவம் செய்வதற்கு வில்வ மரத்தடியில் எழுந்தருளினாள் என்பதைப் பற்றி வாமன புராணம் சொல்கிறது.

வாமன புராணத்தில் திருமகளின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்ப மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள். இப்பேற்பட்ட மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே ஸ்ரீ லட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது புராணம்.

நெல்லி மரம் திருமாலின் பேரருளைப் பெற்றது. அது காரணம் பற்றியே நெல்லி மரத்தை ``ஹரி பலம்'' என்று கூறுவர். நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் ஸ்ரீ லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள்.  நெல்லிக்கனியை பிச்சை இட்டதற்காக, கடும் வறுமையில் வாடிய குடும்பத்தவர்களுக்கு கனகமணி கட்டிகளை வர்சித்தவள் மகாலட்சுமி.

குபேர பட்டணத்தில் நெல்லி விருட்சங்களை நெடுகிலும் காணலாம். அதனால் தான் நெல்லி மர வழிபாடு குபேர சம்பத்தைக் கொடுக்கும் என் கிறார்கள்.  துளசி செடியிலும் லட்சுமி எழுந்தருளியுள்ளாள். இதேபோல் மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள்.

மஞ்சள் செடியை வளர்ப்பது விசேஷம். மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது. மஞ்சள் கலந்த மந்திராசத்தை - மங்களார்த்தி என்று கூறப்படும் மஞ்சள் நீர், மஞ்சள் பூசிய மாங்கலய சரடு என்று பல மங்களகரமான பொருட்களோடு, மஞ்சள் கலந்து சர்வ மங்களமாகிறது.

பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது. குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவது நமது மரபு. ஸ்ரீ வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், ஸ்ரீமகளும் வாசம் செய்கின்றனர்.

ஸ்ரீ சூர்ணத்தை ஹரித்ராசூர்ணம் என்று கூறுவர். மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி. அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்று பொருள். திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. திருமண்ணையும் ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது தான் நல்லது.

ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவையும், சீதா பிராட்டியாரையும் சேர்த்துப் போற்றிப் பணிந்த ஆஞ்சநேயரும், அவரது திருவடியைச் சிந்தனையிலே கொண்ட பக்தர்களும் சகல சவுபாக்கியங்களுடனும் வாழ்கின்றனர்.

இல்லங்களை ஸ்ரீ லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவள் நம்முடன் வாசம் செய்வாள்.  அதிகாலையில் எழுந்து, நீராடி, சூரியன் உதய மாவதற்கு முன்னால் வீட்டு வாயிலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

கோலம் போடும் பழக்கம் என்பது தொன்று தொட்டு இருந்து வருவதால் தான் மாக்கோலம், இழை கோலம், புள்ளிக்கோலம், வர்ணப் பொடிகளைத் தூவி போடும் ரங்கோலி போன்ற கோலங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. மாக்கோலத்தை சுற்றி காவி பூசுவதும் பழக்கத்தில் உள்ளது.

புராண காலத்தில் யாக சாலைகளில் விதவிதமான வண்ணக் கோலங்களை போட்டு, அக்கோலங்களின் மீது ஹோம குண்டங்களை அமைப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர். ஸ்ரீ லட்சுமி தேவி ஜோதியாக விளங்குகிறாள். இல்லத்திலே விளக்கு எரிவதால் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிவாள் என்று ஐதீகம்*

லட்சுமி இருக்கும் இடங்கள்

ஸ்ரீலட்சுமி திருமாலின் தலங்களில் நித்திய வாசம் புரிகின் றாள். சுமங்கலிகள், பூரண கும்பம்-மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்கலப் பொருட்களில் மகா லட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்மசிந்தனை, பொறுமை, தெய்வபக்தி, ஐம்புலன் அடக்கம், சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள். தேவர்களிடத்திலும் பிரம்ம ஞானியர் களிடத்திலும் பரமனடியார்களிடத்திலும் பக்தி உள்ளோர் வீடுகளிலும், கிருகஸ்தர்களிடத்திலும், பசுக்களிடத்திலும், அந்த பசுக்களை பராமரிக்கும் பெண்களிடத்திலும் ஸ்ரீதேவி நித்யவாசம் புரிகிறாள்.

வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீலட்சுமி வசிக்கிறாள். ஸ்ரீ லட்சுமியை வில்வத் தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அவ்வாறு அர்ச்சிக்கும் போது, வில்வத்தை தளப் பக்கமாக பூஜிக்க வேண்டும். ஏன் என்றால் வில்வ தளத்தில் அமிர்த தாரையாக லட்சுமி வாசம் செய்கிறாள்.

அதேபோல் தாமரை மலரால் பூஜிக்கும் போதும் தாமரையின் பூ உள்ள பக்கமாக பூஜிக்க வேண்டும். ஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். ஸ்ரீரங்க சேத்திரத்தின் தல விருட்சம் வில்வம், திருவகீந்தபுரத்து ஹேமாம் புஜநாயகி தாயாருக்கு வில்வார்ச்சனை தான் செய்து வருகிறார்கள்.

வில்வ மரத்தைப் பிரதசிணம் செய்வது ஸ்ரீ லட்சுமியை வலம் வருவதற்குச் சமமாகும். திருமலை ஸ்ரீ வெங்கடேச பெருமானுக்கு மார்கழி மாதம் வில்வார்ச்சனை செய்கிறார்கள். வைகாசன ஆகமத்தின் போது வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது. ஸ்ரீலட்சுமி தவம் செய்வதற்கு வில்வ மரத்தடியில் எழுந்தருளினாள் என்பதைப் பற்றி வாமன புராணம் சொல்கிறது.

வாமன புராணத்தில் திருமகளின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்ப மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள். இப்பேற்பட்ட மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே ஸ்ரீ லட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது புராணம்.

நெல்லி மரம் திருமாலின் பேரருளைப் பெற்றது. அது காரணம் பற்றியே நெல்லி மரத்தை ``ஹரி பலம்'' என்று கூறுவர். நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் ஸ்ரீ லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள்.  நெல்லிக்கனியை பிச்சை இட்டதற்காக, கடும் வறுமையில் வாடிய குடும்பத்தவர்களுக்கு கனகமணி கட்டிகளை வர்சித்தவள் மகாலட்சுமி.

குபேர பட்டணத்தில் நெல்லி விருட்சங்களை நெடுகிலும் காணலாம். அதனால் தான் நெல்லி மர வழிபாடு குபேர சம்பத்தைக் கொடுக்கும் என் கிறார்கள்.  துளசி செடியிலும் லட்சுமி எழுந்தருளியுள்ளாள். இதேபோல் மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள்.

மஞ்சள் செடியை வளர்ப்பது விசேஷம். மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது. மஞ்சள் கலந்த மந்திராசத்தை - மங்களார்த்தி என்று கூறப்படும் மஞ்சள் நீர், மஞ்சள் பூசிய மாங்கலய சரடு என்று பல மங்களகரமான பொருட்களோடு, மஞ்சள் கலந்து சர்வ மங்களமாகிறது.

பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது. குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவது நமது மரபு. ஸ்ரீ வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், ஸ்ரீமகளும் வாசம் செய்கின்றனர்.

ஸ்ரீ சூர்ணத்தை ஹரித்ராசூர்ணம் என்று கூறுவர். மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி. அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்று பொருள். திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. திருமண்ணையும் ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது தான் நல்லது.

ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவையும், சீதா பிராட்டியாரையும் சேர்த்துப் போற்றிப் பணிந்த ஆஞ்சநேயரும், அவரது திருவடியைச் சிந்தனையிலே கொண்ட பக்தர்களும் சகல சவுபாக்கியங்களுடனும் வாழ்கின்றனர்.

இல்லங்களை ஸ்ரீ லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவள் நம்முடன் வாசம் செய்வாள்.  அதிகாலையில் எழுந்து, நீராடி, சூரியன் உதய மாவதற்கு முன்னால் வீட்டு வாயிலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

கோலம் போடும் பழக்கம் என்பது தொன்று தொட்டு இருந்து வருவதால் தான் மாக்கோலம், இழை கோலம், புள்ளிக்கோலம், வர்ணப் பொடிகளைத் தூவி போடும் ரங்கோலி போன்ற கோலங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. மாக்கோலத்தை சுற்றி காவி பூசுவதும் பழக்கத்தில் உள்ளது.

புராண காலத்தில் யாக சாலைகளில் விதவிதமான வண்ணக் கோலங்களை போட்டு, அக்கோலங்களின் மீது ஹோம குண்டங்களை அமைப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர். ஸ்ரீ லட்சுமி தேவி ஜோதியாக விளங்குகிறாள். இல்லத்திலே விளக்கு எரிவதால் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிவாள் என்று ஐதீகம்*

மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட

மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் எல்லா வளமும் கிடைக்கும். லட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்க 12 வழிகள் உள்ளன.

1. தன்னம்பிக்கை மற்றும் தெய்வநம்பிக்கை வேண்டும்.

2. சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.

3. காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும்.

4. வரும் சந்தர்ப்பங்களை நழுவவிடக்கூடாது.

5. உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும்.

6. தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.

7. செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.

8. திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.

9. செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு பார்க்க கூடாது.

10. லாபத்தால் மகிழ்ச்சியும், நஷ்டம் வந்தால் வருத்தமும் அடையக்கூடாது.

11. சுயநலம் அறவே இருக்கக் கூடாது.

12. எந்த சூழலிலும் கடன் வாங்கவே கூடாது.

மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே லட்சுமியின் அருளைப் பெற முடியும்.

தைரியலட்சுமிதான் முக்கியம்

அஷ்ட லட்சுமிகளில் அடிப்படையானவள் தைரிய லட்சுமி தான். இதை விளக்குவதற்கு ஒரு கதை உள்ளது. போஜ மகாராஜாவிற்கு அஷ்டலட்சுமிகளின் பாக்கியம் இருந்து வந்தது. அவன் அவர்களை தினம் பூஜித்து வந்தான். ஒருநாள் பூஜையின் போது அவர்களின் முகம் வாடியிருப்பதை கண்டு காரணம் கேட்டான்.

அவர்கள் நாளையுடன் உன்னுடன் எங்களுக்கு தொடர்பு அறுபடுகிறது. நாளை நாங்கள் உன்னை விட்டுப் போகிறோம். நீ இத்தனை நாட்கள் எங்களை வழிபட்டு வந்ததற்காக நீ கேட்கும் வரத்தை தருகிறோம் என்றார்கள். சரி நாளை நீங்கள் போகும் போது அவ்வரத்தை கேட்கிறேன் என்று போஜன் கூறிவிட்டான்.

மறுநாள் வந்தது, ஒவ்வொரு லட்சுமியாக அவனிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். அவன் யாரிடமும் எவ்வரமும் கேட்கவில்லை. ஏழு லட்சுமிகள் போன பின்பு கடைசியாக தைரிய லஷ்மி வந்தாள். அம்மா நான் கேட்கும் வரம் நீ மட்டும் என்னிடம் தங்க வேண்டும் என்பதே என்றான் போஜன்.

பக்தன் கேட்ட வரத்தின்படி தைரியலட்சுமி மட்டும் அங்கேயே தங்கி விட்டாள். மறுநாள் போஜன் பூஜைக்கு புறப்படும் போது தினம் எட்டு லட்சுமிகளை பூஜிப்பேன், இன்று ஒரு லட்சுமியை மட்டுமே பூஜிக்க போகிறேன் என்று நினைத்துக் கொண்டு பூஜைக்கு போனான். அங்கு பூஜாக் கிரகத்தில் அஷ்ட லட்சுமிகளும் இருக்கக்கண்டு ஆச்சரியம் அடைந்தான்.

நீங்கள் ஏழு பேரும் நேற்று போய் விட்டீர்களே, இப்போது இங்கு இருக்கிறீர்களே என்று கேட்டான் போஜன். எங்கள் தலையில் தைரிய லட்சுமி எங்கு இருக்கிறாளோ அங்கு நாங்கள் ஏழு பேரும் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது. நீ தைரிய லட்சுமியை உன்னுடனேயே இருத்திக்கொண்டதால் நாங்கள் மீண்டும் இங்கேயே வந்து தங்க நேர்ந்தது என்றார்கள் அந்த ஏழு லட்சுமிகள்

அஷ்ட லட்சுமிகளில் யாருடைய அனுக்கிரகம் மிகவும் முக்கியமானது

இதை விளக்க ஒரு கதை உண்டு. பணக்காரனான ஒருவனது வாழ்வில் திடீரெனத் துன்பங்கள் சூழ ஆரம்பித்தன. கிரகங்கள் பலமின்றி, அவன் கெட்ட காலம் நடந்துகொண்டிருந்தது. பணம், வீடு, வாசல், குடும்பம் ஆகியவற்றை அவன் ஒவ்வொன்றாய் இழக்க நேரிட்டது.

நொந்துபோன அவன், தனது பிரமாண்டமான வீட்டின் வெளிவாசல் அருகே சிறிது நேரம் உட்கார்ந்தான். ஒவ்வொரு லட்சுமியாக அவன் வீட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். தான்ய லட்சுமி வெளியேறினாள். வீட்டில் சாப்பிட ஏதுமில்லாமல் ஆயிற்று.

அதன்பின், தனலட்சுமி வெளியேறினாள். வீட்டில் உள்ள பணமும், பொன்னும், பொருளும் போயின. சந்தானலட்சுமி வெளியேறியதும் அவன் மனைவி, மக்கள் அவனைத் தனியே விட்டுச் சென்றனர். தொடர்ந்து கஜலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி ஆகியோரும் வெளியேறினர்.

அவர்கள் தன்னை விட்டுப் போவதை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான் அந்தப் பணக்காரன். கடைசியாக தைரியலட்சுமி அவனை விட்டுக் கிளம்ப முற்பட்டாள். அவள் வெளியேறும்போது அவன் ஓடிச்சென்று அவள் பாதங்களில் விழுந்து, `'தாயே! தயவுசெய்து நீங்கள் மட்டும் என்னை விட்டுப் போய்விடாதீர்கள்!'' என்று கதறினான்.

அவனது வேண்டுகோளுக்கு இணங்க தைரியலட்சுமி வெளியேறாமல் மீண்டும் அவன் வீட்டுக்குள் சென்றாள். அதன்பின், வெளியே சென்ற மற்ற லட்சுமிகளும் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வந்தனர்.

இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெற்றான் அந்தப் பணக்காரன். தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வீற்றிருந்து அருள்புரிவார்கள் என்பது சாஸ்திரம் கூறும் உண்மை!

அஷ்டலட்சுமிகள் விவரம்

ஸ்ரீ மகாலட்சுமி தேவி அஷ்டலட்சுமிகள் என்ற வகையில் எண்வகைப் பெரு வடிவங்கள் கொண்டும் தம்மை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு சகல விதமான வாழ்க்கை வளங்களையும் அள்ளி அள்ளித் தந்து ஜொலிக்கிறாள். அதன் விவரம் வருமாறு:-

1. ஸ்ரீ ஆதி லட்சுமி    - அக அழகும், புற அழகும், கல்யாண வாழ்வும் தருபவள்.

2. ஸ்ரீ சந்தான லட்சுமி    - குழந்தைப் பேறு தருபவள்.

3. ஸ்ரீ வித்யா லட்சுமி    - கல்வியையும், கலைஞானங்களையும் கற்கச் செய்பவள்.

4. ஸ்ரீ தன லட்சுமி    - சகல செல்வங்களும் அள்ளித் தருபவள்.

5. ஸ்ரீ தான்ய லட்சுமி    - தானியங்கள் அனைத்தையும் செழிக்கச் செய்பவள்.

6. ஸ்ரீ கஜ லட்சுமி    - ராஜ போகமான வாழ்வளிப்பவள்.

7. ஸ்ரீ வீர லட்சுமி    - மனஉறுதியும், உடலுறுதியும், செயலாற்றலும் தருபவள்.

8. ஸ்ரீ விஜய லட்சுமி    - வெற்றிகளை அள்ளித்தருபவள்.

மகாலட்சுமி என்றென்றும் நம்மோடு இருக்க

8 வகை செல்வம் தருபவள்:

லட்சுமிகள் எட்டு, அதனையே `அஷ்ட லட்சுமிகள்' எனறு அழைக்கின்றோம். செல்வம், ஞானம், உணவு, மனவுறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வரியங்களாகும். இந்த அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஒருவனால் பெற முடியும். அதற்கு அந்தத் திருமகளின் அருட்கடாட்சம் இருக்க வேண்டும்.

பெண்களை திட்டாதீர்கள்:

முக மலர்ச்சியுடன் இருக்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்பார்கள். அதனால்தான் இல்லத்துக்கு அரசியாக இருக்கும் பெண்களை கிரகலட்சுமி என்று சொல்வார்கள். பெண்கள் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தால்தான் அந்த வீடே, லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்கும்.

ஆகவே இல்லப் பெண்மணிகளை தீயச்சொல் கூறி திட்டுவதோ அல்லது அப்பெண்கள் பிறரை திட்டுவதோ கூடாது. பக்தியுடன் தெய்வீகமாக பெண்கள் திகழும் இல்லத்தில் திருமகள் நிரந்தரமாக குடிகொண்டு வசிப்பாள். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நம் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கும். இல்லங்களில் செல்வம் பெருகும்.

தினமும் கோலம் போடுங்கள்:

மகாலட்சுமி என்றென்றும் நம்மோடு இருந்து நல்லருள் புரியவும் நம்மை விட்டு நீங்காதிருக்கவும் தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி வாசலில் மாக்கோலமிட்டு மகாலட்சுமியை நம் இல்லங்களுக்கு வரவேற்க வேண்டும். அதேபோன்று வீட்டின் தலைவாயிலைத் துடைத்து படியில் கோலமிட்டு இரண்டு புறமும் பூக்களை வைத்து மகாலட்சுமியை நினைத்து போற்றி பூஜிக்க வேண்டும்.

மகாலட்சுமி வீட்டு வாயில்களில் ஐந்து வடிவங்களில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றாள். ஆகவே தினமும் வீட்டு வாயிலைத் துப்புரவு செய்து கோலமிடுவதாலும் மாவிலைத் தோரணம், மாலைகள், வாழைகள் கட்டுவதால் லட்சுமி தேவி மிகவும் மகிழ்ச்சியுறுவாள்

கடவுள் எப்படி உதவி செய்வார்?

கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்
 
 ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற...்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை. கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான். "கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.
 
{படியுங்கள் பகிருங்கள்}

தீபாவளி

தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இரு...ட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும். சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு. எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன? சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கிறோம். தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம். நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல. தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி. அகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல.   கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள். நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம். தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்

துர்க்குணங்களுக்கும் அஸ்திவாரம், கர்வம்தான் !

.
 
 
 
 துர்க்குணங்களுக்கும் அஸ்திவாரம், கர்வம்தான் !
 
குரு÷க்ஷத்திர யுத்தம் முடிவுக்கு வந்தது. அர்ஜுனன் மனதுக்குள், அவன் பெற்ற
 
வெற்றி உற்சாகத்தை தர... அடுத்த கணம், அதுவே கர்வமாக உருவெடுக்கிறது. எத்தனை பாணங்களை எய்தோம்; எத்தனை எதிரிகளை வென்றோம் ! இதோ.... இன்று தன்னிகரில்லாத வீரனாக நிற்கிறோம் ! என்று இறுமாப்புடன் யோசித்தவன், தேரில் இருந்து இறங்க முனைந்தான் கைலாகு கொடுத்துத் தேரில் இருந்து இறங்குவதற்குச் சாரதி உதவவேண்டும் என்பது மரபு. கிருஷ்ணா, கொஞ்சம் கை கொடேன். தேரை விட்டுக் கீழிறங்க வேண்டும் என்றான்.

அவனது மனஓட்டத்தை அறியாமல் இருப்பாரா ஸ்ரீகிருஷ்ணர் ? ! மனதுக்குள் சிரித்துக் கொண்டார். இத்தனைக் காலம் தேரினைச் செலுத்தி, களைப்பாகிவிட்டேன் நீயே இறங்கிக்கொள்ளேன் என்றார். அர்ஜுனனும் சம்மதித்தான். ஆனால் கர்வம் மட்டும் இறங்கினபாடில்லை. வெற்றி மமதையுடன் கீழே இறங்க... அவனையடுத்து ஸ்ரீகிருஷ்ணரும் கீழே இறங்கினார் அவ்வளவுதான்.. தேர் குபீரென்று தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்துபோனது. அதிர்ந்துபோனான் அர்ஜுனன்.

மெல்லப் புன்னகைத்தார் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனா ! உனக்கு நினைவிருக்கிறதா ? போரில் உன் மீது கர்ணன் நாகாஸ...்திரத்தை எய்தபோது, உடனே தேரை கீழே அழுத்தினேன்; உன் தலை தப்பியது. அந்த பாணத்தின் பாதிப்பை, கொடியில் இருந்த அனுமன் இதுவரை ஏற்றிருந்தான். இப்போது தேரை விட்டு நான் இறங்கியதும், அனுமனும் இறங்கிவிட்டான். அஸ்திரம் தனது வேலையைக் காட்டிவிட்டது. இதோ, தேர் சாம்பலாகிப் போனது ! என்றார்.
எரிந்து சாம்பலானது தேர் மட்டுமா ? அர்ஜுனனின் கர்வமும்தான் ! ஸ்ரீகிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டான். மற்றவர்கள் அனைவரும் தான் என்ற அகந்தையோடு இருக்கிறார்கள்.

நான் அவர்களைப் போல அல்லாமல், தன்னடக்கத்தோடு இருக்கிறேன் என்று ஒருவன் தன்னைப் பற்றியே பெருமையாக நினைத்துக் கொள்கிறான் என்றால் அவனும் கர்வம் பிடித்தவன் தான்.ஒரு மனிதனின் அனைத்து துர்க்குணங்களுக்கும் அஸ்திவாரம், கர்வம்தான் !

Tuesday, October 29, 2013

பிறர் மீது பழிபோடுவதும், கொலைக்கும்,உன்னை நீயே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்கு சமம்

பாரதப்போரின் உச்சக்கட்டம்...கர்ணனுடன் அர்ஜுனன் விற்போர் செய்தான். ஆனால், கர்ணனின் ஆக்ரோஷத்துக்கு முன்னால், அர்ஜுனனின் காண்டீப சாகசங்கள் எடுபடவில்லை. பாசறைக்கு திரும்பிய அவனை தர்மர் அழைத்தார். போர் செய்யும் லட்சணமா இது! உனது காண்டீபத்தை (வில்) உலகப்புகழ் பெற்றது என்றும், நீயே வில்வித்தையில் சிறந்தவன் என்றும், நீ வைத்த குறி தப்பாது என்றும் ஆன்றோர்கள் சொல்வதாக பெருமையடித்துக் கொண்டாய். இப்போது என்னாயிற்று உன் காண்டீபத்தின் வல்லமை, என இகழ்ச்சியாகப் பேசினார் தர்மர்.

அண்ணன் தர்மர் சொன்ன வார்த்தைகள் தம்பி அர்ஜுனனின் மனதை உறுத்தியது. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தன் காண்டீபத்தை யாராவது கேலி செய்தால், அவர்களைக் கொன்று விடுவதாக சபதம் செய்திருந்தான் அர்ஜுனன்.

எனவே, அண்ணன் என்றும் பாராமல், அவரை நோக்கி வில்லை உயர்த்தினான். கண்ண பிரான் ஓடிவந்து தடுத்தார். அவரிடம், தனது சபதத்தை விளக்கினான் அர்ஜுனன். கண்ணன் ஒரு யோசனை சொன்னார். ...

அர்ஜுனா! ஒருவரைக் கொலை செய்து தான் அவரது உயிர் போக வேண்டும் என்பதில்லை. அவர் மீது வீணான பழி போட்டாலே கொலை செய்ததற்கு சமம். எனவே, தர்மர் மீது ஏதாவது பழிபோடு, என்றார். அர்ஜுனனும் ஏதோ ஒரு பழியைப் போட்டு சபதத்தை நிறைவேற்றினான்.

பின்னர், தன் அண்ணனைக் கொன்றதற்கு சமமான பாவத்தை செய்துவிட்டோமே என மனம் வருந்தி தற்கொலைக்கு முயன்றான். அப்போதும் கண்ணன் தடுத்தார்.

அர்ஜுனா! இதென்ன விபரீதம்! சாஸ்திரத்தில் இதற்கும் பரிகாரம் உண்டு. உன்னை நீயே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்கு சமம். நீ உன்னைப் பற்றி ஜம்பமாக பிறரிடம் ஏதாவது பேசு, என்றார்.
பிறர் மீது பழிபோடுவதும், கொலைக்கும்