Sunday, March 30, 2014

ராமபிரான் மீனும் தேனும்

மீனும் தேனும்
ராமபிரான் ஒருமுறை கங்கையில் குளிக்கச் செல்லும்போது தன் தோளில் இருந்த அம்பறாத் துணியைக் கழற்றி வைத்தார் . அதில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது . அதைப் படுக்க வைத்துச் செல்வது வீரனுக்கு அழகல்ல எனத் தரையில் குத்திவிட்டுச் சென்றார்.
குளித்து முடித்துவிட்டுத் திரும்ப அந்த அம்பைத் தரையிலிருந்து பிடுங்கியபோது ஒரு தவளை ரத்தம் வெளியேற உயிருக்குத் துடித்துக்கொண்டு அதன் நுனியில் ஒட்டி இருந்தது. அதைக் கண்ட ராமபிரான் நெஞ்சம் பதைபதைத்து.
...
“தவளையே! நான் உன்னை அம்பால் குத்தியபோது நீ குரல் கொடுத்திருக்கலாமே” என்று கலங்கினார் .
“எம்பெருமானே ! எனக்குப் பிறர் தீமை செய்தால் என்னைக் காப்பாற்றிக்கொள்ள ‘ராமா! ராமா!’ என அழைப்பேன் . ஆனால், ராமனாலேயே எனக்கு ஆபத்து என்னும்போது யாரைக் கூவி அழைப்பேன்?” என்றது தவளை.
மீனும் தேனும்
ராமன் காட்டுக்கு வந்ததும் முதலில் அவரைச் சந்தித்தது குகன். வேடனான குகனும், அரச குமாரரான ராமனும் முதல் சந்திப்பிலேயே ஆத்மார்த்தமான உறவு கொண்டார்கள். அந்தச் சந்திப்பின்போது குகன் தேனையும், மீனையும் ராமனுக்குக் கொடுத்தான் .
ராமன் கிளம்பிச் சென்ற பிறகு பிறர் குகனிடம் இதைப் பற்றி விசாரித்தார்கள்: “ராஜகுமாரனான ராமருக்கு நீ மீனையும், தேனையும் கொடுத்ததில் என்ன பெருமை? எத்தனையோ உயர்ந்த விருந்தை உண்டவராயிறே ராமர்?” என்று கேட்டார்கள்.
அதற்குக் குகன், “நான் கொடுத்த இந்தப் பொருட்களில் மற்றவர்களுக்குப் புரியாத உட்பொருள் உண்டு. அதைப் புரிந்து ஏற்றுக்கொண்டார் ராமர்” என்றான் .
“என்ன?” என்று மற்றவர்கள் கேட்க, “தேன் உயர்ந்த மலையில் உள்ள மரத்தின் உச்சியில் கிடைப்பது. மீன் கடலின் ஆழத்தில் கிடைப்பது. எங்கள் நட்பு கடலின் ஆழம் போன்று இதய ஆழத்தில் இடம் பெற்றால் அது மலையைப் போல் உயர்ந்ததாக இருக்கும் என்பதே உட்பொருள்” என்று குகன் கூறினான் .
இதைவிட ஆழமில்லை என்றும் இதைவிட உயர்ந்ததில்லை என்றும் போற்றும்படி அமைவது நட்பு என்பதைக் கம்பன் குகனையும் ராமனையும் வைத்துக் காட்டுகிறார்.
பேச்சில் தெரியும் பண்பு
ராமனைப் பற்றிக் கூறும்போது, பூர்வ பாஷிண:, மித பாஷிண:, ம்ருது பாஷிண: என்று சொல்கிறார்கள்.
பூர்வ பாஷிண என்றால் முதலில் வணக்கம் கூறுவது. யாரைச் சந்தித்தாலும் ராமன்தான் முதலில் வணக்கம் சொல்லுவான். தன்னைவிடக் கீழோராயினும் ராமனே முதலில் சென்று பேசுவான்.
மித பாஷிண என்றால் குறைவாகப் பேசுதல். ராமன் கொஞ்சம்தான் பேசுவான். மற்றவர்கள் பேசுவதை அதிகம் கேட்பான்.
ம்ருது பாஷிண என்றால் மென்மையாகப் பேசுதல். ராமன் எப்போது பேசினாலும் மிருதுவாகவே இனிமையாகவே பேசுவான்.

இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?

ஒரு அரசன், ""இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?'' என ஒரு துறவியிடம் கேட்டான்.
""நடத்துகிறபடி நடத்தினால் ஒவ்வொன்றும் சிறந்ததே'' என்று அவர் பதில் கூறினார்.
அரசனுக்கு புரியவில்லை.
...
""வா! என் கருத்தை விளக்குகிறேன்,'' என்று அரசனைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டார்.
வழியில் ஒரு அரண்மனையில் ராஜகுமாரிக்கு நடந்த சுயம்வரத்தை வேடிக்கை பார்க்க இருவரும் சென்றனர். ராஜகுமாரி அங்கு நின்ற ஒரு சந்நியாசியின் கழுத்தில் மாலையிட்டாள். சந்நியாசியோ, ""எனக்கேது குடும்ப வாழ்வு,'' என்று சொல்லி மறுத்து விட்டு, வேகமாக வெளியேறினார்.
இளவரசியோ,""இவரைத் தவிர வேறு யாரையும் கனவிலும் கூட நினைக்க மாட்டேன்,'' என்று அவரை பின்தொடர்ந்தாள்.
அரசனும், துறவியும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். எப்படியோ சந்நியாசி தப்பி விட்டார். பின் தொடர்ந்து வந்த துறவியையும், அரசனையும் பார்த்த ராஜகுமாரி, தன் கதையைக் கூறினாள். அவர்களும் ஏதும் அறியாதவர்கள் போல கேட்டனர். அப்பொழுது இரவாகி விட்டதால், அங்கேயே தங்கிவிட்டு, அடுத்தநாள் காலை செல்ல தீர்மானித்தனர்.
அவர்கள் தங்கிய இடத்தில் இருந்த ஆலமரத்தில், புறா ஒன்று தன் பெண் துணையோடும், குஞ்சுகளோடும் குடும்பம் நடத்தி வந்தது.
இவர்களைக் கண்டதும், ஆண்புறா ""நமது வீட்டிற்கு விருந்தாளிகள் வந்துவிட்டார்கள். இரவோ, ரொம்பவும் குளிராக இருக்கிறது.
குளிர் காய இவர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றது. மேலும் குச்சிகளையும் எடுத்து வந்து அவர்கள் அருகில் போட்டது.
அவர்கள் அவற்றை அருகில் கிடந்த சருகுகளுடன் சேர்த்து "தீ' மூட்டி குளிர் காய்ந்தனர்.
அப்போது ஆண் புறா, மற்ற புறாக்களை நோக்கி, ""நாமே இல்லறத்தில் இருப்பவர்கள். விருந்தாளிகளை சுகப்படுத்த வேண்டியது நமது கடமை. நம்மிடம் அவர்களுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லை. என் உடம்பைக் கொடுத்தாவது இவர்களின் பசியைப் போக்குகிறேன்,'' என்று சொல்லி, சற்றும் தாமதிக்காமல் எரியும் தீயில் விழுந்து உயிர்விட்டது. இந்த உண்மை தெரியாத அரசன் அதை எடுத்து சாப்பிட முற்பட்டான். அப்போது பெண்புறா, ""என் கணவரால் மட்டும் இந்த மூவரின் பசி எப்படி அடங்கும்? கணவன் செய்த தர்மத்தை மனைவி முழுதாக செய்ய வேண்டுமல்லவா!'' என்றபடி தானும் தீயில் விழுந்தது.
இப்படி இரண்டு புறாக்களும் நெருப்பில் விழவே, அவர்கள் மூவரும் திகைப்படைந்தனர்.
துறவி, அந்த இரண்டு புறாக்களின் இல்லற தர்மத்தைப் பற்றி போற்றி, பாராட்டினார்.
அப்போது குஞ்சு புறாக்கள் இரண்டும், ""பெற்றோர் செய்த தான, தர்மத்தை பின்பற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை,'' என்று சொல்லி அவையும் தீயில் விழுந்து மாண்டன. தர்ம ஆத்மாக்களான, அந்த புறாக்களை தின்ன அவர்களுக்கு மனம் வரவில்லை.
அடுத்தநாள் இளவரசியை அவளது தந்தையிடம் ஒப்படைத்து விட்டு, அரசனும் துறவியும் தமது ஊர் நோக்கி திரும்பினர். வழியில் துறவி அரசனிடம், ""சந்நியாசி என்றால், சுயம்வர சந்நியாசியைப் போல தன்னை விரும்பி வலிய வந்த பெண், ராஜகுமாரி என்று தெரிந்தும் ஏற்காதது போல் இருக்க வேண்டும். இல்லறத்தான் என்றால், புறாக்களைப் போல் தங்கள் உயிரையும் ஒருவருக்கொருவர் கொடுக்கத் தயங்கக்கூடாது,'' என்று விளக்கினார். அரசனும் உண்மையை உணர்ந்தான்.

Saturday, March 29, 2014

துவார பாலகர்கள்

துவார பாலகர்கள்

முக்தியின் வாசலில் நான்கு துவார பாலகர்கள் உண்டு என்கிறார் வசிஷ்டர். அவை:

1. சமம்: புலன்களை தீமையில்லாத நல்ல வழிகளில் திருப்பி கட்டுப்படுத்துதல். ...

2. விசாரம்: எதையும் ஆழமாய் சிந்தித்து தெளிந்து அதன்படி வாழ்தல். கொள்ளத்தக்கன எவை, தள்ளத்தக்கன எவை என்பதில் தெளிவாயிருத்தல்.

3. சந்தோஷம்: வேட்கைகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் பின் ஓடி சஞ்சலப்பட்டு துயரம் கொள்ளாமல் தான் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்து நிறைவாக, சந்தோஷமாய் வாழ்தல்.

4. சத்சங்கம்: உண்மையான சாதுக்கள் மற்றும் அறநெறியில் உயர்ந்தோரை அணுகி இருத்தல்.

(அவர்கள் பேசும் சாஸ்திரங்களுக்கும் வாழும் வாழ்க்கைக்கும் இடையே முரண்பாடுகள் இல்லாமல் இருக்கும் என்பதால் அவர்களோடு சேர்ந்திருத்தல் பெரும்பலன் கிடைக்கும்.)

இந்த நான்கு வழிகளில் ஒன்றையேனும் முழுமையாகப் பின்பற்றினால் மீதி மூன்றும் தானாகவே அமையும் என்கிறார் வசிஷ்டர். துக்க வடிவான சம்சாரத்திலிருந்து விடுதலையைப் பெற ஒரே வழி மனதை வசப்படுத்துதலே என்கிறார் வசிஷ்டர்.

...............................................................................................

கோவிலில் நுழையும் போது `துவார பாலர்கள்' என்று இரு வாயிற்காப்போரைக் காணலாம். ஒரு துவார பாலகர், தன் ஆள்காட்டி விரலை மட்டும் உயர்த்தி காட்டி நிற்பது ஏன் தெரியுமா? கடவுள் ஒருவர் தான் என்று நமக்கு நினைவுபடுத்துவதற்காக. மற்றொரு துவார பாலகர், கையை விரித்து காட்டுவது- கடவுள் ஒன்றைத் தவிர, வேறொன்றில்லை என்பதை உணர்த்துவதற்காக.

இதையே வேதம் `ஏகம் ஏவஅத்விதீயம் ப்ரம்மம்' என கூறுகிறது. `நிந்தா ஸ்துதி' என்று ஒன்று உண்டு. ஈசனை, கள்ளன், பிச்சைக்காரன், கிறுக்கன் என்றெல்லாம் வசைபாடியே அவனை துதிப்பதுதான் அது. அன்பு இருக்கும் இடத்தில் தானே கோபமும் இருக்கும்! அடியார்களுக்காக எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்பான் ஈசன்
...................................................................................................

பெருமாள் கோயில் துவார பாலகர்கள்:

விஷ்ணு ஆலயங்களில் உள்ள துவாரபாலகர்கள் ஜயனும், விஜயனும் ஆவர். இவர்கள் வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு துவாரபாலகர்களாக இருந்தவர்கள் சனத்குமாரர்களின் சாபத்தினால் மூன்று பிறவிகளில் அசுரர்களாக இருந்து, பின்னர் திருமாலின் சேவைக்கே அவர்கள் வந்து சேர்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த துவாரபாலகர்கள் கரங்களிலே சங்கும் சக்கரமும் கதாயுதமும் ஏந்திக் காட்சி தருகின்றனர்.

சிவன் கோயில் துவார பாலகர்கள்:

சிவாலயங்களில் துவார பாலகர்களுக்கு சண்டன், பிரசண்டன் என்ற பெயர்கள் வழங்குகின்றன. இவர்கள் வீராதி வீரர்கள். தமிழில் வழங்கப்படும் ஒரு பழமொழி தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன் இதன்மூலம் இந்த துவாரபாலகர்கள் பற்றிய விவரத்தை முற்காலத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதை உணரலாம்.

அம்மன் சன்னதியைப் பாதுகாக்கும் துவாரபாலகி

(பெண்)களை ஹரபத்ரா, சுபத்ரா என்று அழைக்கிறார்கள். மூலஸ்தானத்தின் வாயிலில் மட்டுமன்றி தேர்களிலும், தெப்பங்களிலும், ராஜகோபுரங்களிலும்கூட இந்தத் துவார பாலகர்களைக் காணலாம். தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுர துவாரபாலகர்கள் காண்போரைக் கவரும் விதத்தில் உள்ளனர். கோயிலுக்குள் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் துவார பாலகர்களின் எதிரில் நமஸ்கரித்து, உட்செல்ல அனுமதி பெற்று, பிறகே மூல ஸ்தானத்தை வழிபடச் செல்லவேண்டும் என்பது ஆலய தரிசன விதி
சுப முகூர்த்த நிர்ணய விதிகள்- 21 ..




சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்தத்தை நிர்ணயம்
செய்யும்போது கீழ்கண்ட 21 விதிகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும் என கால
விதானம் எ...னும் நூல் கூறுகிறது.அவற்றை இனி காண்போம்.
1.உல்கா:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 19 வது நட்சத்திரம் உல்கா
எனப்படும்.இதில் சுப முகூர்த்தம் கூடாது.
2.பூகம்பம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 9வது நட்சத்திரம் பூகம்பம்
எனப்படும்.இதுவும் சுபமுகூர்த்தத்திற்கு ஆகாது.
3.உபாகம்:
சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் ஏற்படும் நாளும் அதற்கு முன் மூன்று
நாட்களும்,பின் மூன்று நாட்களும் சுப முகூர்த்தத்திற்கு ஆகாத நாட்கள்.
4.குளிகன்(அ)மாந்தி:
ஒவ்வொரு நாளிலும் குளிகன் அல்லது மாந்தி உதயமாகும் நேரத்திற்குறிய
லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
5.சஷ்டாஷ்டம அந்திய இந்து:
முகூர்த்த லக்னத்திற்கு 6-8-12-ல் சந்திரன் இருக்கக்கூடிய காலம்
முகூர்த்தத்திற்கு ஆகாது.
6.அசத் திருஷ்டம்:
முகூர்த்தம் வைத்துள்ள நேரத்திற்கு உரிய லக்னத்தை பாபக்கிரகங்களான
சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர் பார்க்கக்கூடாது.அவ்வாறு
பாபக்கிரகங்கள் பார்க்கும் லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
7.அசத் ஆரூடம்:
பாபக்கிரகங்கள் அமர்ந்துள்ள ராசியில் முகூர்த்த லக்னம் அமைக்கக்கூடாது.
8.அசத் விமுக்தம்:
பாபக்கிரகங்களாகிய சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர்
அமர்ந்திருந்து பெயர்ச்சியான ராசியில் முகூர்த்த லக்னம்
வைக்கக்கூடாது.எனினும் இந்த ராசியில் சந்திரன் அமர்ந்திருக்குமானால் அந்த
தோஷம் பரிகாரமடைகிறது.
9.சித த்ருக்:
சுக்கிரன் பார்க்கும் ராசியை முகூர்த்த லக்னமாக அமைப்பது தோஷம்.ஆயினும்
சாந்தி முகூர்த்தத்திற்கு இந்த விதி பொருந்தாது.
10.சந்தியா காலம்:
சூரிய உதயத்திற்கு முன் இரண்டு நாழிகையும்(48 நிமிஷம்),சூரிய அஸ்தமனம்
அடைந்த பின் இரண்டு நாழிகையும் சந்தியா காலம் எனப்படும்.இதில் சுப
முகூர்த்தம் வைக்கக்கூடாது.
11.கண்டாந்தம்:
அஸ்வினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திரங்களின் முதல் பாதமும்
ஆயில்யம்,கேட்டை,ரேவதி ஆகிய நட்சத்திரங்களின் நான்காம் பாதமும்
கண்டாந்தமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைக்கக்கூடாது.
12.உஷ்ணம்:
பின்வரும் நட்சத்திரங்கள் தொடங்கியது முதல் அதில் கொடுக்கப்பட்டுள்ள
நாழிகை வரை உஷ்ண காலமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைப்பது தோஷமாகும்.
A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)
B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)
C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)
D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)
E.அனுஷம்,பூராடம்,அவிட்டம்,உத்திரட்டாதி(52 TO 60)
F.கேட்டை,உத்திராடம்,சதயம்,ரேவதி(20 TO 30)
13.விஷம்:
தியாஜ்ஜிய காலமே விஷம் எனப்படும்.இதிலும் சுப முகூர்த்தம் கூடாது.
14.ஸ்திர கரணம்:
சகுனி,சதுஷ்பாதம்,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகிய நான்கும் ஸ்திர
கரணங்களாகும்.இதிலும் முகூர்த்தம் கூடாது.
15.ரிக்தை:
சதுர்த்தி,நவமி,சதுர்தசி இவை ரிக்தை எனப்படும்.இதுவும் விலக்கத்தக்கதே
16.அஷ்டமி:
அஷ்டமியிலும் முகூர்த்தம் கூடாது.தேய்பிறை அஷ்டமி சுபம் என்பது சிலர் கருத்து.
17.லாடம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து மூல நட்சத்திரம் வரை எண்ணி வந்த
தொகையை பூராடம் முதல் எண்ணினால் கிடைக்கும் நட்சத்திரம் எதுவோ அதுவே லாட
நட்சத்திரமாகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
18.ஏகார்க்களம்:
அன்றைய சூரிய ஸ்புடத்தை 360 பாகையிலிருந்து கழித்து வரும் ஸ்புடத்திற்கு
உதய நட்சத்திரத்திலிருந்து 1,2,7,10,11,14,16,18,20 ஆகிய நட்சத்திரங்கள்
ஏகார்க்களம் ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
19.வைதிருதம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 14 வது நட்சத்திரம் வைதிருதம்
ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
20.அஹிசிரசு:
வியதீபாத யோகத்தின் பிற்பகுதி அஹிசிரசு எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
21.விஷ்டி:
வளர்பிறை அஷ்டமி,ஏகாதசியில் 6 முதல் 12 நாழிகை வரையிலும் பௌர்ணமியில்
18முதல் 24 நாழிகை வரையிலும் சதுர்தசியில் 24முதல் 30 நாழிகை வரையிலும்,
தேய்பிறை திருதியையில் 30முதல் 36 நாழிகை வரையிலும் சப்தமியில் 12முதல்
18 நாழிகை வரையிலும் தசமியில் 42முதல் 48 நாழிகை வரையிலும் சதுர்தசியில்
முதல் 6 நாழிகை வரையும் விஷ்டி எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
1.அம்ஹஸ்பதி:
ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்படுமாயின் அது அம்ஹஸ்பதி
எனப்படும்.இதனை அதிமாதம் என்றும் சொல்லுவர்.இந்த மாதத்தில் முகூர்த்தம்
செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.
2.மலமாதம்:
ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அது மலமாசம் எனப்படும்.இந்த
மாசத்திலும் சுப முகூர்த்தம் செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.
3.சமசர்ப்பம்:
அமாவாசையே நேரிடாத மாதம் சமசர்ப்பம் எனப்படும்.இந்த மாதத்திலும் சுப
முகூர்த்தம் கூடாது.
4.திர்சியதாஹி குரு சிதயோஹோ:
சங்கவ காலமென்று சொல்லக்கூடிய சூரியன் உதித்து 6முதல் 12நாழிகைக்குள்
குரு,சுக்கிரர் தோன்றும் காலம் முகூர்த்தத்திற்கு கூடாது.
5.குரு,சுக்கிர மௌட்யம்:
குருவும்,சுக்கிரனும் அஸ்தமனம் அடைந்துள்ள காலம் சுப முகூர்த்தம்
வைக்கக்கூடாது.(ஒன்று அஸ்தமனமாகி மற்றது நட்பு,ஆட்சி,உச்சம்
பெற்றிருந்தால் அது தோஷமில்லை)
6.குரு சுக்கிர மிதோ திருஷ்டி:
குருவும் சுக்கிரனும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ளும் காலம்
முகூர்த்தத்திற்கு உகந்த காலம் அல்ல.மேலும்
கீழ்கண்ட கிழமைகளுக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள திதி,நட்சத்திரங்கள்
அமையுமானால் அந்த நாளில் திருமணம் முதலிய சுப காரியங்களை செய்யக்கூடாது.
A.ஞாயிறு-பரணி
திங்கள்-சித்திரை
செவ்வாய்-உத்திராடம்
புதன்-அவிட்டம்
வியாழன்-கேட்டை
வெள்ளி-பூராடம்
சனி-ரேவதி
B.ஞாயிறு-பஞ்சமி&கிருத்திகை
திங்கள்-த்விதீயை&சித்திரை
செவ்வாய்-பௌர்ணமி&ரோகினி
புதன்-சப்தமி&பரணி
வியாழன்-த்ரயோதசி&அனுஷம்
வெள்ளி-ஷஷ்டி&திருவோணம்
சனி-அஷ்டமி&ரேவதி
C.ஞாயிறு-பஞ்சமி&அஸ்தம்
திங்கள்-ஷஷ்டி&திருவோணம்
செவ்வாய்-சப்தமி&அஸ்வினி
புதன்-அஷ்டமி&அனுஷம்
வியாழன்-திருதீயை&பூசம்
வெள்ளி-நவமி&ரேவதி
சனி-ஏகாதசி&ரோகினி
D.ஞாயிறு-சதுர்த்தி
திங்கள்-சஷ்டி
செவ்வாய்-சப்தமி
புதன்-த்விதீயை
வியாழன்-அஷ்டமி
வெள்ளி-நவமி
சனி-சப்தமி ..

அபிவாதயே

) அபிவாதயே,
(2) _______ _______ ______ (ரிஷிகளின் பெயர், உங்கள் கோத்திரத்திற்கேற்ப, கீழ்கண்ட பட்டியலில் காணவும்.)
(3) ____________ (உங்கள் கோத்திரத்திற்கேற்ப..., - ஏகா, த்வயா, த்ரயா, பஞ்சா, ஸப்தாரிஷேய
என்பனவற்றை கூட்டிக்கொள்ளவும்),

(4) ப்ரவரான்வித:
(5) _______________ ஸூத்ர (ஆபஸ்தம்ப ஸூத்ர, போதாயன ஸூத்ர),
(6) _______________ (யாஜூஷா, ஸாமோ, ரிக் -)காயாதி
(7) ________________ கோத்ரஸ்ய (உங்கள் கோத்ரம்)
(8) ______________________ (உங்கள் பெயர்)
(9) சர்மண: அஹம் அஸ்பிபோ.

#01. ஏகார்ஷேய கோத்ரா;
#02. த்வயார்ஷேய கோத்ரா;
#03. த்ரயார்ஷேய கோத்ரா;
#04. பஞ்சார்ஷேய கோத்ரா;
#05. ஸப்தார்ஷேய கோத்ரா;
பிரவரங்களுடன் கூடிய சில கோத்ரங்கள்

01. (ப்ருகு;(20)
கோத்ரப் பெயர்; ப்ரவரநாமங்கள்
ஜமதக்னி பார்கவ, சியாவன,ஆப்னவான,த்ரயார்ஷேய ப்ரவரான் வித
ஜாபாலி பார்கவ,வைதஹவ்ய,ரைவஸத்ரயார்ஷேய ப்ரவரான் வித
ஜாமதக்ன்ய பார்கவ,ஔர்வ,ஜாமதக்ன்ய த்ரயார்ஷேய ப்ரவரான் வித
ஜைமினி பார்கவ,வைதஹவ்ய,ரைவஸ,த்ரயார்ஷேய ப்ரவரான் வித
பௌலஸ்த்ய பார்கவ,ஔர்வ ஜாமதக்ன த்ரயார்ஷேய ப்ரவரான் வித
மாண்டுகேய பார்கவ,ஔர்வ ஜாமதக்ன்ய,த்ரயார்ஷேய ப்ரவரான் வித
மௌனபார்கவ பார்கவ,வைதஹவ்ய ஸாவேதஸ த்ரயார்ஷேய ப்ரவரான்
வித
வாதூல பார்கவ,வைதஹவ்ய ஸாவேதஸ த்ரயார்ஷேய ப்ரவரான்
வித
ஸ்ரீவத்ஸ பார்கவ,ச்யாவன,ஆப்னவான ஔர்வ,ஜாமதக்யை
பஞ்சார்ஷேய ப்ரவரான் வித
கார்த்ஸமத பார்கவ,கார்த்ஸமத,த்வயார்ஷேய ப்ரவரான்வித,
கனக பார்கவ, கார்த்ஸ்மத த்வயார்ஷேய
யஞ்ஞபதி பார்கவ, கார்த்ஸமத த்வ்யார்ஷேய
அவட பார்கவ, ஔர்வ,ஜாமதக்ன்ய த்ரயார்ஷேய
ஆர்ஷ்டிஷேண பார்கவ, ஆர்ட்டிஷேண,ஆனூபத்ர யார்ஷேய
ஆஸ்வலாயன பார்கவ, வாத்யக்ஷ,தைவோதாஸ, த்ரயார்ஷேய
கஸ்யபி பார்கவ, வைதஹவ்ய, ஸாவேதய,த்ரயார்ஷேய
காத்யாயன பார்கவ, ஆர்ஷ்டிஷேண ஆனூப த்ரயார்ஷேய
கார்க்ய பார்கவ, வைத்ஹவ்ய ரைவஸ த்ரயார்ஷேய,
க்ருத்ஸமத பார்கவ, சைளன ஹோத்ர,கார்த் ஸமத,த்ரயார்ஷேய,
நைர்ருதி பார்கவ, ஆர்ஷ்டிஷேண ஆனூபத்ர யார்ஷேய
ஆங்கீரஸ; (27)
உத(ச)த்ய ஆங்கீரஸ,ஔதத்ய கெளதம த்ரயார்ஷேய ப்ரவரான்
வித
கம்யாங்கிரஸ ஆங்கீரஸ,ஆமஹாவ்ய,ஔருக்ஷய,த்ரயார்ஷேய
ப்ரவரான் வித
கார்கேய ஆங்கீரஸ,கார்க்ய,சைத்ய த்ரயார்ஷேய ப்ரவரான்,வித
கார்கேய ஆங்கீரஸ,பார்ஹஸ்பத்ய,பார்தீவாஜ,சைன்ய்,கார்க்ய
பஞ்சார் ஷேய
கெளதம் ஆங்கீரஸ,ஆயர்ஸய கெளதம,த்ரயார்ஷ்ய,
பெளருகுத்ஸ ஆங்கீரஸ,பெளருகுத்ஸ,த்ராஸதஸ்ய,த்ரயார்ஷேய
பாதராயண ஆங்கீரஸ,பெளருகுத்ஸ,த்ராஸதஸ்ய,த்ரயார்ஷேய
பாரத்வாஜ ஆங்கீரஸ,பாற்ஹஸ்பத்ய,பாரத்வாஜ,த்ரயார்ஷேய,
மெளத்கல்ய ஆங்கீரஸ,அம்பரீஷ,மெளத் கல்ய,த்ரயார்ஷேய,
மெளத்கல்ய ஆங்கீரஸ,பார்க்யஸ்வ,மெளத்கல்ய த்ரயார்ஷேய,
ராதீதர ஆங்கீரஸ,வைரூப,ராதீதர,த்ரயார்ஷேய,
விஷ்ணுவ்ருத்த ஆங்கீரஸ,பெளருகுத்ஸ,த்ராஸதஸ்ய,த்ரயாஷேய
ஷ்டமர்ஷண ஆங்கீரஸ,த்ராஸதஸ்ய,பெளருகுத்ஸ,த்ரயாஷேய
ஸங்க்ருதி சாத்ய,ஸாங்க்ருத்ய கௌரிவீத,த்ரயார்ஷேய,
ஸங்க்ருதி ஆங்கீரஸ,ஸாஸ்க்ருத்ய,கௌரீவீத,த்ரயார்ஷேய
ஹரித ஆங்கீரஸ,அம்பரீஷ,யௌவனாச்வ,த்ரயார்ஷேய
ஆபஸ்தப ஆங்கீரஸ,பார்ஹஸ்பத்ய,பாரத்வாஜ,த்ரயார்ஷேய
ஆயாஸ்ப ஆங்கீரஸ,ஆயாஸ்ய,கௌதம,த்ரயார்ஷேய
கண்வ ஆங்கீரஸ,ஆஜமீட,காண்வ,த்ரயார்ஷேய
கண்வ ஆங்கீரஸ,ஆமஹீயவ, ஔருக்ஷயஸ,த்ரயார்ஷேய
கபில ஆங்கீரஸ,ஆமஹீயவ, ஔருக்ஷ்யஸ,த்ரயார்ஷேய
கர்க ஆங்கீரஸ,சைன்ய,கர்க(கார்க்ய),த்ரயார்ஷேய
குத்ஸ ஆங்கீரஸ,அம்பரீஷ,யௌவனாச்வ,த்ரயார்ஷேய
குத்ஸ ஆங்கீரஸ,மாந்தாத்ர,கௌத்ஸ,த்ரயார்ஷேய
கௌண்டின்ய ஆங்கீரஸ,பார்ஹஸ்பத்ய,பாரத்வாஜ,த்ரயார்ஷேய
பௌருகுத்ஸ ஆங்கீரஸ,பௌருகுத்ஸ,ஆஸதஸ்ய.த்ரயார்ஷேய
லோஹித ஆங்கீரஸ,வைச்வாமித்ர,லோஹித,த்ரயார்ஷேய
ஆத்ரி;(13)
ஆத்ரேய ஆத்ரேய ஆர்சநானஸ,ச்யாவாச்வ,த்ரயார்ஷேய
மௌத்கல்ய ஆத்ரேய ஆர்சநானஸ பௌர் வாதித,த்ரயார்ஷேய
அத்ரி ஆத்ரேய ஆர்சநானஸ ச்வாவாச்வ,த்ரயார்ஷேய
உத்தாலக ஆத்ரேய, ஆர்சநானஸ ச்வாவாச்வ,த்ரயார்ஷேய
முத்கல ஆத்ரேய ஆர்சநானஸ,பௌர்வாதித,த்ரயார்ஷேய
கௌரிவீத ஆத்ரேய ஆர்சநானஸ, பௌர்வாதித,த்ரயார்ஷேய
தத்தாத்ரேய ஆத்ரேய ஆர்சநானஸ, ச்வாவாச்வ,த்ரயார்ஷேய
தனஞ்ஜய ஆத்ரேய ஆர்சநானஸ,காவிஷ்டிர,த்ரயார்ஷேய
தக்ஷ(தக்ஷி) ஆத்ரேய காவிஷ்டிர,பௌர்வாதி,த்ரயார்ஷேய
பாலேய ஆத்ரேய வாமரத்ய,பௌத்ரிக,த்ரயார்ஷேய
பதஞ்சல ஆத்ரேய ஆர்சநானஸ,ச்வா வாச்வ,த்ரயார்ஷேய
பீஜாவாப ஆத்ரேய ஆர்சநானஸ,ஆதித த்ரயார்ஷேய
மாஹுலி ஆத்ரேய ஆர்சநானஸ,ச்வாவாச்ஸ,த்ரயார்ஷேய
விஸ்வாமித்ர;(13)
கௌசிக(குசிக) வைஸ்வாமித்ர, ஆகமர்ஷண.கௌசிக,த்ரயார்ஷேய
லோஹித வைச்வாமித்ர,அஷ்டக,லோஹித்ர யார்ஷேய
விச்வாமித்ர வைச்வாமித்ர, தேவராத,ஔதல,த்ரயார்ஷேய
சாலாவத வைச்வாமித்ர, தேவராத, ஔதல,த்ரயார்ஷேய
கதக வைச்வாமித்ர, கதக த்வயார்ஷேய
ஆகமர்ஷ்ண வைச்வாமித்ர, ஆகமர்ஷண,கௌசிக த்ரயார்ஷேய
கத வைச்வாமித்ர, மாதுச்சந்தஸ,ஆஜ,த்ரயார்ஷேய
காத்யாயன வைச்வாமித்ர,காத்ய,அத்கீத த்ரயார்ஷேய
காமகாயன வைச்வாமித்ர,தேவசீரவஸ,தைவ தரஸ(ரேதஸ)
த்ரயார்ஷேய
காலவ வைச்வாமித்ர, தேவராத,ஔதல,த்ரயார்ஷேய
கௌசிக வைச்வாமித்ர, சாலங்காயன, கௌசிக த்ரயார்ஷேய
ஜாபால(லி) வைச்வாமித்ர, தேவராத,ஔதல,த்ரயார்ஷேய
தேவராத வைச்வாமித்ர, தேவராத,ஒலிதல, த்ரயார்ஷேய
வஸிஷ்ட;(13)
கௌன்டின்ய வாசிஷ்ட,மைத்ராவருண,கௌன்டின்ய த்ரயார்ஷேய
பராசர வாசிஷ்ட,சாக்த்ய, பாராசர்ய,த்ரயார்ஷேய
வாசிஷ்ட வாசிஷ்ட,மைத்ராவருண,கௌன்டின்ய,த்ரயார்ஷேய
வசிஷ்ட வாசிஷ்ட,ஏகார்ஷேய
ஹரித வாசிஷ்ட, ஏகார்ஷேய
ஆச்வலாயன வாசிஷ்ட,ஜந்த்ரப்ரமத,ஆப்ரத்வஸவ்ய,த்ரயார்ஷேய
உபமன்யு வாசிஷ்ட,ஜந்த்ரப்ரமத,ஆபர்த்வஸவ்ய,த்ரயார்ஷேய
காண்வ வாசிஷ்ட,ஜந்த்ரப்ரமத,ஆபரத்வஸவ்ய,த்ரயார்ஷேய
ஜாதூகர்ண்ய வாசிஷ்ட,ஜந்த்ரப்ரமத,ஆபரத்வஸவ்ய,த்ரயார்ஷேய
போதாயன வாசிஷ்ட,ஆத்ரேய,ஜாதூகர்ண்ய த்ரயார்ஷேய
மித்ராவருண வாசிஷ்ட,மைத்ராவணெ,கௌன்டின்ய த்யார்ஷேய
மௌத்கல வாசிஷ்ட,மைத்ராவருண, கௌன்டின்ய த்யார்ஷேய
வாசிட வாசிஷ்ட,ஜந்த்ரப்ரமத,ஆபரத்வஸவ்ய,த்ரயார்ஷேய
கச்யப;(13)
நைத்ருவகாச்யப காச்யப, ஆவத்ஸார,நைத்ருவ,த்ரயார்ஷேய
(நித்ருவ)
ரேப(காச்யப) காச்யப, ஆவத்ஸார, ரேபா,த்ரயார்ஷேய
சாண்டில்ய காச்யப, ஆவத்ஸார, சாண்டில்ய,த்ரயார்ஷேய
காச்யப காச்யப, ஆவத்ஸார, நைத்ருவ,ரேப,ரைபசாண்டில
சாண்டில்ய,ஸப்தார்ஷேய
சாண்டில்ய காச்யப, தைவல அசித,த்ர யார்ஷேய
சாண்டில்ய காச்யப, ஆவத்ஸார,நைத்ருவ,ரேப,ரைப,சாண்டில
சாண்டில்ய,சப்தார்ஷேய
காஸ்யப காச்யப, ஆஸித,தைவல,த்ரயார்ஷேய
ப்ருகு காச்யப, ஆவத்ஸார,நைத்ரவ,த்ரயார்ஷேய
மாரீச காச்யப, ஆவத்யார,நைத்ருவ,த்ரயார்ஷேய
ரைப்ய(ரேப) காச்யப, ஆவத்ஸார,ரைப்ய,த்ரயார்ஷேய
பௌகாக்ஷி காச்யப, ஆவத்ஸார, ஆஸித,த்ரயார்ஷேய
வாத்ஸ்ய காச்யப, ஆவத்ஸார, ரைப்ய,த்ரயார்ஷேய
சாரத்வத காச்யப, ஆவத்ஸார,ஆஸித,த்ரயார்ஷேய
அகஸ்த்ய;(7)
அகஸ்த்ய அகஸ்த்ய ஏகார்ஷேய,
இத்மவாஹ அகஸ்த்ய ஏகார்ஷேய,
ஆகஸ்தி(ஆகஸ்த்ய) அகஸ்த்ய,மாஹேந்திர,மாயோபுவ த்ரயார்ஷேய
அகஸ்தி(ஆகஸ்த்ய) ஆகஸ்த்ய,தார்ட்யவ்ருத,ஜத்மவாஹ, த்ரயார்ஷேய
இத்மவாஹ ஆகஸ்த்ய,வாத்யஸ்வ,ஜத்மவாஹ ,த்ரயார்ஷேய
புலஹ ஆகஸ்த்ய,மாஹேந்திர,மாயோபுவ,த்ரயார்ஷேய
மாயோபுவ ஆகஸ்த்ய,மாஹேந்திர,மாயோபுவ த்ரயார்ஷேய

Wednesday, March 26, 2014

கர்வமுள்ள மனதில் கடவுள் தெரியமாட்டார்

கர்வமுள்ள மனதில் கடவுள் தெரியமாட்டார்
ஒரு இளைஞனுக்கு கடவுளை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. அவன் ஒரு வேத பாடசாலைக்கு சென்றான். அங்கிருந்த பண்டிதரிடம் ...தனது விருப்பத்தை சொன்னான். அவர் இளைஞனுக்கு வேதம் கற்றுக்கொடுத்ததோடு, பல நூல்களையும் படிக்கச் செய்தார். இளைஞனும் புலமை பெற்றான். ஆனால், கடவுள் காட்சி கிடைக்கவில்லை. வெறுப்படைந்த அவன் அங்கிருந்து வெளியேறினான். இவ்வளவு கற்றிருக்கிறோம். ஆனாலும் நமக்கு தரிசனம் கிடைக்கவில்லையே என்று நினைத்தான். சிலகாலம் அமைதியாக இருந்தான். ஒருசமயம், ஒரு மகானிடம் தன் மனதில் இருந்த எண்ணத்தை கொட்டினான். தான், படித்த மேதாவியாக இருந்தும் கடவுள் தன்னைக் கண்டுகொள்ளவில்லையே என்றும் ஆணவமாகப் பேசினான். அவனது கர்வத்தைக் கவனித்த மகான்,தம்பி! ஒரு நிமிடம் நான் சொல்வதைக்கேள். நீயோ நிறைய கற்றதாகவும், பல அனுபவங்கள் பெற்றதாகவும் சொல்கிறாய். அவற்றையெல்லாம் நான் சோதிக்க வேண்டுமானால் அதற்குரிய அவகாசம் எனக்கு இல்லை. எனவே, உனக்கு என்னென்ன தெரியுமோ, அவற்றையெல்லாம் ஏட்டில் எழுதி வா! நான் ஓய்வாக இருக்கும் வேளையில் அவற்றை படித்து உனக்கு கடவுளைக் காணும் பாக்கியம் இருக்கிறதா என்பதை அறிந்து சொல்கிறேன், என்றார்.
இளைஞன் வீட்டிற்கு திரும்பினான். தான் படித்ததையெல்லாம் எழுத ஆரம்பித்தான். இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. பின்பு அவற்றை ஒரு பையில் கட்டி, மகானை சந்திக்கச் சென்றான். மகான் அவனிடம், மகனே! இவ்வளவு ஏடுகளை படிக்கும் பொறுமை என்னிடம் இல்லை. இதில், தேவையற்றதை நீக்கி, சுருக்கமாக ஒரே ஒரு ஏட்டில் நீ படித்ததன் சாராம்சத்தை மட்டும் எழுதி வா! என்றார். இளைஞனும் சில மாதங்கள் முயற்சி செய்து, அவர் சொன்னதைச் செய்தான். அவரைச் சந்திக்கச் சென்றான். அப்போது மகான் அவனிடம், அடடா! இப்போது எனக்கு முன்புபோல் பார்வை சரியாக இல்லையே! சரி, இந்த ஏடுகளில் இருப்பதை இன்னும் சுருக்கமாக ஒரு ஏட்டில் எழுதி வா. பதில் சொல்கிறேன்,என்றார். இளைஞன் சளைக்கவில்லை. அதையும் எழுதிக்கொண்டு, இன்னும் சில மாதங்கள் கழித்து அவரிடம் வந்தான். அப்போதும் மகான் அதை படிக்கவில்லை. நீ கற்றவற்றை ஒரே ஏட்டில் எழுதி கொண்டு வந்தது மகிழ்ச்சிதான். ஆனாலும், இதையே இன்னும் சுருக்கமாக ஒரு வரியில் எழுதிக் கொண்டு வா. உனக்கு பெரிய வேலையும் அல்ல, என்று சொல்லி அனுப்பிவைத்தார். இப்போது இளைஞனுக்கு என்ன எழுதுவெனத் தெரியவில்லை. எனவே, வெற்று ஏட்டுடன் வந்தான். மகான் புன்னகையுடன், மகனே! நீ கேட்ட கேள்விக்கான பதிலை இப்போது நீயே புரிந்துகொண்டிருப்பாய். நீ கற்றதாக சொன்னதெல்லாம், இந்த வெற்று ஏட்டைப் போன்றது தான். வெறும் கல்வி, கடவுளைக் காண உதவாது. அவரைக் காண வேண்டுமானால் முதலில் அவரிடம் மனப்பூர்வமான பக்தி செலுத்து. அதைவிடுத்து நான் அவ்வளவு படித்தவன், இவ்வளவு தெரிந்தவன், என்று பேசுவதால் பயன் ஏதும் ஏற்படாது. இதனால் கர்வமே உண்டாகும். கர்வமுள்ள மனதில் கடவுள் தெரியமாட்டார்,என்றார்.

வாஸ்து சாஸ்திரம்


வாஸ்து சாஸ்திரம்
(சோ-வின் எங்கே பிராமணன் பகுதி-2லிருந்து தொகுக்கப்பட்டது)
ஒவ்வொரு பழக்கவழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால் சுவாரஸ்ய கதை, நிகழ்வு அல்லது நியதி கோர்க்கப்பட்டிருக்கும். ஜோதிட சாஸ்திரத்தைப் போலவே நம்பிக்கையுடன் பின்பற்றப்படுவது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து சாஸ்திர வல்லுனர்களை நாடி வீட்டிற்கு ஹோமமும் ஷாந்தியும் செய்த பின்னரே குடிபெயரும் பழக்கம் பலரிடம் நிலவி வருகிறது.
ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளபடி வாஸ்தோத்வன் எனப்படும் வாஸ்து அதிபதி ஈஸ்வரனின் அம்சம். அவன் கருணா மூர்த்தி. நல்லன எல்லாம் நடத்திக்கொடுப்பவன். அவனை வேண்டியும் அவன் அருளை துதி பாடும் ஸ்தோத்திரங்கள் உள்ளன, எனினும், வாஸ்து புருஷனைப் பற்றி ஆகம சாஸ்திரத்தில் வேறு விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் கொடூரம் நிறைந்தவன், அவனுக்கு ஷாந்தி செய்து திருப்தி செய்யவிட்டால், நம்மை ஆட்டுவிக்கக் கூடியவன் என்பது இன்னொரு நம்பிக்கை.
அரக்கனை அழிக்க தேவர்கள் சிவபெருமானை வேண்டி நிற்க, அவரின் வியர்வை துளியிலிருந்து தோன்றியவன் வாஸ்து புருஷன் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. அரக்கனை அழித்த பின்பும் அவன் குரூரம் கட்டுக்குள் அடங்காமல் போக, சிவன் அவனை தன் காலடியில் அமிழ்த்தி, அஹம் அழிக்கிறான். வாஸ்து புருஷன் சிவனிடம் தஞ்சம் புகுந்த பிறகு, மனிதர்களுக்கு நிறைவும், செல்வமும் அருளி நிற்கும் வாஸ்து அதிபதியாக்கி பூமிக்கு அனுப்பப்படுகிறான். அவனை வணங்கி நிற்போருக்கு அருள் பாலிக்கிறான் என்று கூறுகிறது.
இன்னொரு சாராரின் கருத்து படி வாஸ்து புருஷன் கட்டுக்கடங்காமல் போன போது தேவர்கள் பலரும் அவனை அமுக்கி வீழ்த்தியதாகவும், அவன் உடம்பின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு தேவன் அதிபதியாகி அமுக்கியதால் அந்தந்த பாங்கங்களை அந்த தேவதைகளைக் கொண்டு குறிப்பிடுகின்றனர். தன் தோல்வியை வேண்டி நின்ற அவனுக்கு வருடத்தில் எட்டு நாட்கள் முழித்திருக்கும் வரமும் அதிலும் பிரத்தியேகமாக சில மணிகளே அவன் முழித்திருப்பான் என்று வரமருள்கின்றனர். வாஸ்து புருஷனின் அருளை சம்பாதிக்காதவர்களை அவன் பலவாறாக சோதனைக்கு ஆட்படுத்துகிறான் என்பது நம்பிக்கை. வாஸ்து புருஷனின் தலை - கிழக்கு நோக்கி ஈசான்ய மூலையிலும், கால் - தென் மேற்கு மூலையிலும் அமைந்திருக்கிறது. இவனை திருப்தி படுத்திய பின்னரே கட்டிட வேலைகளைத் துவக்கி எந்தெந்த இடங்கள் எந்தெந்த திசை நோக்கி இருக்க வேண்டுமோ அப்படி அமைத்தால் சுபீஷம் நிலவுவதாக கருத்து.
தேவலோகத்தில் கட்டிட கலையில் நிபுணராக அதிபதியாக கருதப்படும் மயனே தேர்ந்த வாஸ்து சாஸ்திர நிபுணன் என்பதால் அவனே வாஸ்து புருஷனாக பாவிக்கப்படுகிறான் என்றும் வேறு கோணமும் உண்டு.
கட்டிடங்களின் கட்டமைப்புகளை சாஸ்திரமாக வழங்கி வருவது சைனாவிலும் feng shui என்ற பெயரில் கடைபிடிக்கபடுகிறது. விஞ்ஞான முறைப்படியான விளங்கங்களுடன், வானவியல் சாஸ்திரத்தின் தொடர்போடு அலசி ஆராய்ந்து, பாஸிடிவ் அதிர்வுகள் அலைகளை வரவேற்க வல்லதாய் அமைத்துக் கொள்கிறார்கள். சிரிக்கும் புத்தர் சிலையோ, மீன் தொட்டியோ சரியான் இடத்தில் வைக்கப்பட்டால் சுபீஷம் தரும் என்பதும் இவ்வழக்கத்தின் நம்பிக்கை. வாஸ்து சாஸ்திரமும், feng shui-ம் நிறைய இடங்களில் சற்றே வேறுபடுகிறது.
சாஸ்திரம் எது எப்படியாயினும், நம் சுற்றுப்புற சுழலின் அமைதிக்காக சிறு பிரார்த்தனையுடன் கட்டிட வேலைகளைத் துவங்கி, எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே எல்லா சாஸ்திரங்களிலும் அவற்றின் அதிபதியாகவும் விளங்குகிறான் என்ற தெளிந்த அறிவுடனும் பணிவுடனும், குடிபெயர்ந்த பின்பும், தினமும் கூட இறைவழிபாட்டை மேற்கொண்டால், இல்லமும், சுற்றுப்புறமும், இன்பமாய் அமைத்திட எளிது

Tuesday, March 25, 2014

காய்கறிகளை பறிப்பது ஜீவ ஹிம்சையா?

இந்து தர்ம நுட்பங்கள் - காய்கறிகளை பறிப்பது ஜீவ ஹிம்சையா? ஒரு தெளிவான பார்வை:-
ஆடு - கோழி - மாடு போன்றவை ஐயறிவு கொண்ட உயிரினங்கள். மரம் - செடி - கொடிகள் ஓரறிவு கொண்ட உயிரினங்கள். பிராணிகள் தாங்கள் கொல்லப் படும் பொழுதும் - வதைக்கப் படும் பொழுதும், பரிதாபமான முறையில் வலியால் கதறித் துடிக்கின்றன.
ஐயறிவு உயிரினங்களைப் போல் நரம்பு மண்டலமோ (Nervous System) - புலன்கள் சார்ந்த உணர்ச்சிகளை உணரும் அமைப்போ (Sensory System) மரம் - செடி - கொடிகளுக்கு கிடையாது. பழங்கள் - காய்கறிகள் இவைகளை...ப் பறித்த பின்னரும் மரமோ, செடியோ மடிவதில்லை. காலத்துக்கு காலம் தளிர் விடுவதும் பூப்பதும் காய்ப்பதும் பழுப்பதும் இயற்கை.
தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் இது குறித்த ஒரு கேள்விக்கு 'செடி கொடிகளை வேருடன் பிடுங்குவதில் சிறிது பாவம் உண்டு. காய்கறிகளை எடுப்பது பாவம் ஆகாது. இது நமக்கு நகமும் முடியும் அகற்றுவது போல்' என்று அறத்தை அறிவுறுத்துகிறார்.
திருமந்திரம் - கொல்லாமை:-
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற்றால் கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே!!!!

Monday, March 24, 2014

இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது

உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது.ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமியநாடாக ஆக்க வேண்டும் என்று அரபுநாடுகளும், கிறிஸ்தவ நாட...ாக ஆக்கவேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பியநாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் தெரியாது. இந்து மதத்திற்கேஅந்தப் பெயர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம்மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டில் ஐரோப்பவிலும் இரண்டாம்நூற்றாண்டில் அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டதுபோக, மூன்றாம் நூற்றாண்டில் அதேநிலை வலுவான ஆசியா கண்டத்திலும்ஏற்பட்டது. இவ்வாறு மதம் மாத்தும் தொழில் செய்பவர்கள் மிஷனரிகளைஉருவாக்கினர். இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக உலகம் முழுவதிலும்மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.கிறிஸ்தவ மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டுஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின்எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்றுபாருங்கள். அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக்82%, காங்கோ 62% , எத்தியோப்பியா52%,கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென்ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%.இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அடிப்படையில் பெரிய கலாச்சாரமோஅல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்கமுடிந்தது. ஆனால் இந்தியாவில் பல ஆயிரக்கனக்கான வருடங்கள் பாரம்பரியமுள்ளமதமும் வாழ்வியல் தர்மங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கேயேஇவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது.இந்தியாவில் ஏறக்குறைய *4000*மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்துவருகின்றன. சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில்கிறிஸ்தவர்களே கிடையாது. இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2லக்ஷம். அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 கிறிஸ்தவ்ர்க**ளாகஇருந்தவர்கள் இன்று 12 லக்ஷம். அங்கு சர்சுகள் மட்டும் 780 உள்ளன. இதுபோன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும்தீவிரமாக மதமற்றம் நடைபெறுகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்டவேண்டும் என்ற டார்கெட்டில் மத மாற்றம் நடைபெறுகிறது.இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும்ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள்வருகிறது என்கிறது புள்ளிவிபரம்.யோசித்துப் பாருங்கள் . வெறுமனேஒருவனை இந்த சாமியைக் கும்பிடு என்றால்எப்படிக் கும்பிடுவான். அதனால் அவனுக்கு ஆதாயம் அதிகமாக இருந்தால் தானேமாறப்போகிறான். அந்த ஆதாயத்தை கொடுக்கவே இந்த பண பரிவர்த்தனை.180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள்ஆகியவை 300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டுவிநியோகிக்கப்படுகின்றன. இவற்றில்பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள், கிறிஸ்தவத்தைகடைபிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகம்இருக்கும்.சராசரியாக ஒரு மனித மத மாற்றத்திற்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்செலவிடப்படுகிறது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள்கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும் , அவற்றை நடத்துபவர்களின் சுகபோகவாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.1500வது வருடத்திலேயே 30 லட்சம்மிஷனரிகள் உருவாகியிருந்த நிலையில், இன்று65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளன. இதில் வெட்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயேநடத்தப்படுகிறது. சுக போகத்திற்கும் பணத்திற்க்கும்ஆசைப்பட்டு விலைபோனவர்கள் தான் இவர்களில் அதிகம்.**==============மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் தான் அதிகம் அழிவுக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் சொந்த கடவுளரை இழிவுபடுத்துவதை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வருகிறார்கள்.அதாவது நம்கண்ணைக் குத்திக் கொள்ள நம் விரல்களையேபயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக்கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும். கடமையும் கூட.யோசியுங்கள்...இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் கருணாநிதிஇஸ்லாத்தில்தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அதே ராமர் பாலபிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளைஅவமதித்துப் பேசுகிறார்.இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?யோசியுங்கள்...வேறு எந்த மதத்தின் சம்பிரதாயங்களையும் காயப்படுத்தாத அரசியல் வாதிகள் இந்துதர்மத்தின் பண்டிகைகளை தங்கள் இஷ்டத்திற்க்கு மாற்றியமைப்பது எதற்க்காக.அதுவும் தமிழ் புத்தாண்டை ஆங்கிலப்புத்தாண்டு காலத்துடன் இணைக்கமுற்ப்படுகிறார்கள்.இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?யோசியுங்கள்...தரங்கம்பாடி கடற்க்கரையில் டச்சுக் கோட்டை அருகிலே ஆயிரம் வருடம் பழமை வாய்ந்தசிவன் ஆலயம் இடிந்த (இடிக்கப்பட்ட?) நிலையில் வெறும் சிவன் சந்நிதி மட்டும்பூட்டப்பட்டு காட்சி அளிக்கிறது. ஆனால் அதற்குப் பக்கத்திலே ஆடம்பரமாகதேவாலயங்கள் தினந்தோறும் பிரார்தனைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.அந்த ஊரில் இந்த சிவன் ஆலயத்தை செப்பனிடவும் அந்த பழமையின் சின்னத்தைக்காக்கவும் அரசு முன்வரவில்லை. அப்படியே ஊர் மக்கள் முன் வந்தாலும் தமதுசெல்வாக்கை வைத்து இந்த மிஷனரிகள் தடுத்து விடுகின்றன. பழமையின் சின்னம்என்ற பெயரில் டச்சுக் கோட்டையின் மேல் அரசு காட்டும் அக்கறை, இந்த சிவன்கோவில் மேல் ஏன் காட்டப்படுவதில்லை.இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?யோசியுங்கள்...மிஷனரிகள் இந்தியாவில் நிலங்களும் கட்டிடங்களும்வாங்கிக் குவிக்கும் வேலையில் ,நம்மூர் அரசியல் வாதிகள் இந்து மத கோவில்நிலங்களை விற்று காசாக்குகிறார்கள். இதே நடவடிக்கைகளை முஸ்லீம்களின்வஃக்போர்டு நிலங்களின் விஷயத்தில் செய்வார்களா?இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?யோசியுங்கள்...குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் இந்துக்கள் மட்டுமேகாண்பிக்கப்படுகிறார்கள். அதாவது இந்து அடையாளத்துடன் இருக்கும் ஆண் ,பெண் மட்டுமே. வேறு எந்த மதத்தினரும் காண்பிக்கப்படுவதில்லை. இந்துக்கள்மட்டுமே குடும்பக்கட்டுப்பாடுசெய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மக்கள்தொகை பெருகினால் பரவாயில்லையாம்.இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே!யோசியுங்கள்...இந்தியாவில் தினம் கோடிக்கணக்கான கோவில் வருவாயில் முக்கால் பாகம் அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் மற்ற மத வருவாயை இவ்வாறு அரசு எடுக்க எவனும் துணிவதில்லை.யோசியுங்கள்...வசிக்க இடமில்லாத ஒரு பிக்பாக்கெட், போலீஸைக் கண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும்ஒரு ரவுடி கூட பாதிரியாராக மாறிவிடுகிறான். அவனுக்கு சொந்த பங்களா, கார்என்று வசதிகள் வந்து விடுகின்றது. இன்னும் வேகத்துடனும் ஆர்வத்துடனும்அவன் மத மாற்றத்தில் ஈடுபடுகிறான்.ஆனால் நாம் என்ன செய்கிறோம். கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழிலாகநம்பியிருக்கும் பிராமணர்களை தொடர்ந்து வறுமையிலேயேவைத்திருக்கிறோம். அவர்களை விரட்ட வேண்டும் அடியோடு ஒழிக்க வேண்டும்என்றும் கூவிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தட்டில் போடும் இரண்டுரூபாய் காசுக்கு சட்டம் பேசுகிறோம்.இந்து தர்மம் வளர்வதற்க்கு இது உதவுமா?நாம் வேறு மதத்தவரை அவமதிக்க வேண்டாம். மற்றவர்களை புன்படுத்துவது நம் தர்மமும்அல்ல**. குறைந்த பட்சம் நமது மத அடையாளங்கள் அவமதிக்கப்படாமலாவதுபார்த்துக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களையாவது தவறாமல் கடைபிடியுங்கள்.இன்று இந்தியாவில் இருக்கும் மதமாற்றிகள் அனைவரும் ஆசையினாலும் ஆங்கிலேயஅடக்குமுறையாலும், பணத்தாலும் மாற்றப்பட்ட இந்துக்களின் சந்நதியினரே. அவரகளை அவர்களைபாதையிலேயே விட்டுவிடுவோம், ஆனால் அந்த கொடிய நோய் நம்மை பற்றாமல் நம்மைகாப்பாற்றிக்கொள்வோம்*






மனதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற அடிப்படையில் மனிதனுக்கும், குரங்குக்கும் உள்ள உறவு காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குரங்கின் குணம் மரத்திற்கு மரம் தாவுவது. மனிதனின் மனமும் அவ்வாறுதான். குரங்கு தாவினால் அதற்கு எந்தவொரு தீங்கேதும் ஏற்படப்போவதில்லை.
ஆனால் மனிதனின் தாவுகின்ற மனத்தால் அவன் அடையும் துன்பத்திற்கு அளவே இல்லை. என்னதான் மனக்குரங்கு மனிதனை ஆட்டிவைத்தாலும், மனிதன் ...
குரங்கை ஆட்டிவைப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறான்.
அவதார புருஷர்களுக்கே துணைசெய்த இந்த அரிய மிருகம் எதையும் புரிந்து கொள்ளும் திறனையும், புத்திகூர்மையும் கொண்டது. இதை மனிதன் பழக்கிப் பல பேரிடம் பிச்சை கேட்க வைப்பது தான் வேடிக்கையான விஷயம்.கராத்தே நிபுணர் ஒருவர் தன் மாணவர்களுக்கு அந்தக் கலையைக் கற்றுக் கொடுத்து காசு சேர்ப்பதை விட்டுவிட்டு. ஒரு மனிதக் குரங்குக்கு கற்றுத் தந்து அதில் வெற்றியும் பெறுகிறார்.

ஏனென்றால் ஒரு மிருகத்துக்கு எண்ணச் சிதறல்கள் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. அதன் ஆசைகளும், தேவைகளும் மிகக் குறைவு. அதனால் தான் இந்த மனிதக்குரங்கால் தன் மனதைக் குவித்து மனிதன் செய்வதைப் பார்த்து தானும் அப்படியே செய்து ஓர் அற்புதக் கலையைக் கற்க முடிந்திருக்கிறது. ஆனால் பேசும் மனிதனால் ஒன்றைக் கற்றுக்கொள்வதென்பது மிகவும் கடினமாகவே இருக்கிறது. ஒரு விஷயத்தை உள்வாங்குகிற அதே சமயத்தில் மனம் வெளிச்சென்று வேறு விஷயங்களை நாடுகிறது. மனத்தை ஒருநிலைப்படுத்துவது மனிதனிடம் குறைவாகவே உள்ளது. மனத்தை ஒருநிலைப்படுத்த வேண்டுமானால் எண்ணச் சிதறல்களின் எண்ணிக்கையைக் குறைப்பது நலம் பயக்கும். எனவே மனிதனை விட மிருகங்களுக்கு எளிதில் கற்றுக்கொடுக்கமுடியும் என்பதை இந்த நிபுணர் நிரூபித்திருக்கிறார்.
ஒரு மிருகத்தை மனிதனாக்க எடுத்துக் கொள்கிற முயற்சியைப் போன்றே, ஒவ்வொரு மனிதனும் தன்னிலிருந்து உயர்ந்து தெய்வமாகிற முயற்சியை
மேற்கொள்ள வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. ஒரு மனிதக் குரங்குக்கு தற்காப்புக் கலையைப் பழக்கி அதில் வெற்றி கண்ட மனிதன் தன் மனக்குரங்கைப் பழக்கித் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்

கடமையில் இருந்து தவறாதிர்கள்..!











கடமையில் இருந்து தவறாதிர்கள்..!
கடல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதில் எவ்வளவு நீர் நிறைந்திருந்தாலும் அந்த நீர் நம் தாகத்தைத் தணிப்பதில்லை. ஆனால், ஊற்று நீர் சிறியதாக இருந்தாலும், நம் தாகத்தைத் தணித்து விடும். அதுபோல, வாய்பேசும் பண்டிதனைக் காட்டிலும், ஞானியின் ஒரு வார்த்தை கூட நமக்கு நல்வழிக் காட்டும் தன்மையுடையது.
உலகம் இயற்கையாகவே இயங்குவது போல் தோன்றினாலும், இதனை இயக்கும் அருட்சக்தியைத் தான் பகவான் என்று குறிப்பிடுகிறோம். பகவான் இன்றி உலகில் எச்செயலும் நடைபெறுவதில்லை.
...
மண் இல்லாமல் எப்படி மண்குடம் உண்டாகாதோ, எப்படி தங்கம் இல்லாமல் ஆபரணம் உண்டாகாதோ அதுபோல கடவுள் இல்லாமல் உலகம் உண்டாவதில்லை.
தோலால் ஆன பர்ஸ் அழகாக இருந்தாலும், அதில் பணமிருந்தால் மட்டுமே மதிப்பு உண்டாகும். அதுபோல சரீரம் என்னும் இந்த பையிலும் உயிர் இருந்தால் மட்டுமே உடம்புக்கு மதிப்புண்டு.
ஒவ்வொரு நாளும் பாடம் நடத்தும் ஆசிரியர் முதல்நாள் விட்ட இடத்திலிருந்து பாடத்தைத் தொடங்குவது போல, நாமும் சென்ற பிறவியின் தொடர்ச்சியையே இப்பிறவியில் தொடர்கிறோம்.
*பிராணிகள் கூட கடமையிலிருந்து ஒருபோதும் விலகுவதில்லை. நாய் வீட்டைக் காக்க தவறுவதில்லை. பசு பால் தர மறுப்பதில்லை. ஆனால், மனிதன் மட்டும் தன் கடமையிலிருந்து தவறி விடுகிறான்.

Saturday, March 22, 2014

எதனால் வேண்டாம் அசைவம் ?

ஏன் வேண்டும் சைவம் ? எதனால் வேண்டாம் அசைவம் ?
விஞ்ஞான ரீதியாகவும் , மெய்ஞான ரீதியாகவும் (ஆன்மீக) சைவ உணவே சாலச் சிறந்தது என்று நிருபிக்கப் பட்டுள்ளது. ஏன்? எதனால் ? வேண்டும் சைவம், மற்றும் வேண்டாம் அசைவம் என்று ஆன்மீக அன்பர்களுக்கு விளக்கமளிப்பது இக்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். கடமையும் ஆகும்.
சைவ உணவு உண்ணும் மனிதர்களின் உடல் அமைப்பும் தாவர உணவுகளை மட்டும் உண்ணும் விலங்குகளின் உடல் அமைப்பும் ஒன்றை ஒன்று ஒத்துப் போவதாகவே இருக்கின்றது.
ஆனால் அசைவ உணவினை உட்கொள்ளும் புலி, சிங்கம், நாய், பூனை மற்றும் சைவ உணவினை உட்கொள்ளும் விலங்குகளோடு சிறிதும் ஒத்துப் போகாமல் பல்வேறு மாறுபட்ட ஜீரண உறுப்புகள் மற்றும் உடல் அமைப்பினைக் கொண்டதாக உள்ளது.
மனிதன் மற்றும் சைவ உணவு உண்ணும் விலங்குகளின்
கடவாய்ப் பற்கள் தட்டையாக அரைத்து விழுங்குவதற்கு ஏற்றதாக உள்ளது.
உமிழ்நீர் உணவின் ருசிக்கு ஏற்றபடி குறைந்த அளவு சுரப்பதோடு அதில் கார சக்தி அதிகம் உள்ளதாகவும், ஜீரண சக்தியினை தரும் வகையில் பெரிய உமிழ் நீர் சுரப்பிகளைக் கொண்டதாகவும் உள்ளது.
உதடுகளால் நீரினை உறிஞ்சிக் குடிக்கும் வண்ணம் வாய் அமைப்பினை பெற்றிருக்கிறது.
உணவினை இரவிலோ அல்லது இருளிலோ பார்க்கும் தன்மை சைவ உணவு விரும்பிகளுக்கு இல்லை.
கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகங்கள், இரைப்பை, போன்ற வயிற்றின் உள்ளுறுப்புகள் சைவ உணவு விரும்பிகளுக்கு சிறியவைகளாகவும் உள்ளது.
மேலும் உணவுக் கழிவுகளை அதிக அளவில் வெளியேற்ற இயலாதவாறு உள்ளது.
இன்னும் கெட்டுபோன உணவுகள் பல சமயங்களில் விஷமாகவிடுவதால் மேற்படி உறுப்புகள் அந்த விஷத்தில் இருந்து தன்னையும் (தன் உறுப்புகளை), உடலையும் பாதுகாக்க முடியாமல் செயல்பாடுகளில் தோல்வி அடைகின்றன.
இந்த நிலையில் மருந்தின் உதவியாலோ அல்லது உண்ணா நோன்பினாலோ அந்த ஜீரணக் கருவிகள் சரி செய்யப்படுகின்றன.
மேலும் மனித உடலின் தன்னைத் தானே காத்துக்கொள்ளும் அமைப்பின் படி இயல்பாகவே உடல்கோளாறுகள் சரி செய்யப்படுகின்றன.
மேலும் ஜீரண மந்தம் வயிற்று உபாதைகள் வருகின்றபோது ஜீரண கருவிகளுக்கு வேலைப்பளு ஏற்படாமல் தவிர்க்க பசியற்ற நிலை உணவில் விருப்பமின்மை, ஆகியவைகளால் உணவு மறுப்பு செயல்கள் இயல்பாக நிகழ்கின்றன.
சைவ உணவு உட்கொள்கின்ற மனித மற்றும் விலங்கினங்களின் குடல் அவைகளின் உடல் நீளத்தைப் போல 10 மடங்கு அதிகமாக அமையப் பெற்றிருக்கிறது.
தாவர உணவினில் இருந்தும், பெறப்பட வேண்டிய வெவ்வேறு உயிர்ச் சத்துக்கள் , தாதுக்கள், உடலில் முழுமையாக சேரும் வண்ணம் அந்த உணவு உண்ட பிறகு நீண்ட நேரம் குடலில் தங்குகிறது.
அவ்வாறு தங்குவதால் தாவர உணவினை தவிர வேறு கடினமான மாமிச உணவை எடுத்துக் கொள்ளும்போது அந்த உணவு நீண்ட நேரம் குடலில் தங்குவதால் விஷத் தன்மை பெற்று அந்த விஷம் சிறிது சிறிதாக உடலில் சேர்வதால் பல வித நோய்களுக்கு மனிதன் ஆளாகின்றான்.
நீர்க் கழிவுகள் தொடர்பான வரையில் வியர்வை மூலம் வெளியேறும் வகையில் தோல் அமைப்பில் நுண்ணிய பல லட்சம் துளைகளின் மூலம் வெளியேற்றப் படுகின்றது.
இந்த அமைப்பு மாமிச பட்சிணிகளுக்கு இல்லை. அவைகள் உடலில் விஷ நீர் வெளியேற்றத்திற்கு தனது நாக்குகளை தொங்கப் போட்டு, வெளியே தொங்க வைத்து அதன் மூலம் வடிகால் நிகழ்வு நடைபெறுகின்றது.
இன்றைய விஞ்ஞான உலகின் மக்கள் தொகை , அதிக அளவு உணவின் அவசியம் மற்றும் குறைந்த கால உற்பத்தி என்ற நோக்கில் ரசாயன உரம் தாவரங்களுக்கு அளிப்பதால் அவற்றின் விஷத் தன்மை தாவர உணவின் மூலம் மனித உடலுக்கு கேடு தருகின்றவையாக இருக்கத்தான் செய்கிறது.
இதன் காரணமாக உரங்களின் விஷத் தன்மை மனித மற்றும் இதை உண்ணும் உயிர்கள் அனைத்தும் சிறிது சிறிதாக உடல் பாதிப்பை பெறுகின்றன.
இதன் தீர்வாக ரசாயன உரத்திலிருந்தும் விலகி இயற்கை உரத்திற்கு மாறுதலுக்கு உரிய சூழல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் நேரடியாகவே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அசைவ உணவினை பற்றிய ஒரு நீண்ட கட்டுரையினை பல்வேறு விளக்கங்களுடன் மனித நலம், நேயம் கருதி வெளியிட முனைகிறது

என் கணவர்” என்ற தலைப்பில் 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.

என் கணவர்” என்ற தலைப்பில் 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.
"என் கணவர்” என்ற தலைப்பில் 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய இரண்டாவது உரை.
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்தது என்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்.
விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடு ஒட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாய்த்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாய் இருப்பது கஷ்டம்.
கவிஞர்கள் போக்கே தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப் போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் ஒரு பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்கு உணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவே இன்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?
கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும், அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே?
சுகமாக வாழ்வதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளில் இருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிடமிருக்க முடியுமா?
கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகள் சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல், தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.
காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். சூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!
இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.
புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.
புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.
புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதி மிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.
மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று;
ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
..

Friday, March 21, 2014

இராமாயணம் நமக்குச் சொல்லி கொடுக்கும் தர்மங்கள் எத்தனையோ உள்ளன.


ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
இராமாயணம் நமக்குச் சொல்லி கொடுக்கும் தர்மங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது பின்பற்றினால் நம் வாழ்க்கை இன்பகரமாக அமையும். இராமாயணத்தில் கவிநயம் இருக்கும் அதேப்போல் நீதிகளும் நிறைய இருக்கும். அதில் உள்ள ஸ்லோகங்களைக் கூர்ந்து படித்தால் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் வாழ்க்கைக்கு வேண்டிய நீதிகள் பொதிந்து கிடப்பது தெரிய வரும். ராமாயணத்தில் விதியின் விளையாட்டை நிறைய பார்க்கிறோம். ஆனால் இவை அனைத்தும், கடைசியில் ஒற்றுமையில் முடிவதைப் பார்க்கிறோம். ஆகவே நம் வாழ்க்கையிலும் விதி என்னதான் ஆட்டி வைத்தாலும் அதற்கு உட்பட்டு எல்லாம் ஒற்றுமையால் முடியும் என்கிற நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.
இராமாயணம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையோடு கலந்து விட்டதோ அதேபோல, இராமாயண பாத்திரமான ஆஞ்சநேயரும் நம் வாழ்வோடு கலந்து விட்டவர். இவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அவற்றில் சிலவற்றை கூர்ந்து பார்ப்போமேயானால் அவர் எவ்வாறு இவ்வளவு பெரிய உன்னத ஸ்தானத்தை அடைந்தார் என்பது தெரிய வரும்.
பகவானை நினைக்கும்போது, பொதுவாக அம்பிகையையும் சேர்த்துதான் நினைக்கிறோம். ஆனால் ராமாவதாரத்தில் அவதரித்த ராமனை மட்டும் ஸீதா ஸமேதராக மட்டும் அல்லாது, வாயு குமாரனாகிய ஆஞ்சனேயரையும் சேர்த்துதான் வணங்குகிறோம். இந்த ஆஞ்சனேயர் தாசனாகவும் இருக்கிறார். தானே தெய்வமாகவும் இருக்கிறார். ராமனோடு இருக்கும்போது தாசன். தனியாக இருக்கும்போது நாம் வணங்கும் தெய்வம்.
ஸ்ரீராமனை எப்பொழுதும் வேறு சிந்தனை எதுவுமின்றி எந்நேரமும் பூஜித்து சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே பிரம்மசாரியாக இருந்துவிட்டவர். சிரவண பக்தியை இன்றும் செய்து கொண்டிருப்பவர். எங்கு ராமாயணம் நடந்தாலும் அங்கு இரு கைகளையும் தலையின் மேல் குவித்து அஞ்சலி செய்த வண்ணம் கேட்டுக் கொண்டிருப்பார். ராமனையும் லக்ஷ்மனையும் தனது தோளில் தாங்கும் பாக்யத்தைப் பெற்றவர்.
தியாகத்தின் மொத்த உருவம் ஆஞ்சனேயர். சீதையை அன்னையாக துதித்து காப்பாற்ற முன் வந்தவர். பல அரிய குணங்களைப் பெற்றிருந்த இவர் 'பணிவு' என்கிற சிறப்பான குணத்தை ஒருங்கே பெற்றிருந்ததால் ஒரு அவதார புருஷராகவே திகழ்ந்தார்.
இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம் பக்தியைப் பற்றி கூறுகிறது. ராம பக்தரான ஹனுமார், இந்த காண்டத்தில்தான் முதலாவதாகத் தோன்றுகிறார். ராமனிடம் பக்தியையும், ராமநாமத்தின் மகிமையையும் இவர் எங்கிருந்து கற்றுக் கொண்டார்? சிறகை இழந்த ஜடாயுவின் சகோதரன் ஸம்பாதி சீதையைத் தேடிக் கொண்டு தன்னைப் பார்க்க ராம தூதர்களாக வந்த வானரங்களை ராம நாமத்தைச் சொல்ல வேண்டுகிறார். அவர்கள் அவ்வாறே ராம நாமத்தைச் சொல்ல சொல்ல சூரிய வெப்பத்தினால் கருகிய சிறகுகள் வானளவில் முளைக்கின்றன. அவர் பழைய உருவை அடைகிறார். அதைப் பார்த்து பரவசமடைந்த அனுமார் ராமனிடத்தில் பக்தியும் ராமநாமத்தின் மகிமையையும் அறிகிறார்.
கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதுல் கூறுவதை யே ஒரு வரமாக வைத்துக் கொண்டிருந்தவர் ஹனுமார். முதன்முதலாக கிஷ்கிந்தா காண்டத்தில் தோன்றும்போதே இக்காரியத்தைச் செய்துக் காட்டினார். அண்ணன் வாலியினால் அடித்துத் துரத்தப்பட்ட சுக்ரீவன், கடைசியில் ரிஷிமுக பர்வதத்தில் வந்து தங்குகிறான். ஒரு சாபத்தின் காரணமாக வாலியினால் அங்கு வர முடியாது. அப்பொழுது அனுமார் 'கவலைப் படாதே! உனக்கு சீக்கிரமே நல்ல காலம் வரப்போகிறது' என்று மனம் நொந்து கிடக்கும் சுக்ரீவனுக்கு ஆறுதல் கூறுகிறார். அப்பொழுது ராமனும் லட்சுமணனும் அங்கு வருகிறார்கள். மனைவியை இழந்த ராமருக்கு சுக்ரீவன் தயவு வேண்டும். அப்பொழுதுதான் சுக்ரீவனுடைய படைபலம் இவருக்குக் கிடைக்கும். சுக்ரீவனுக்கும், ராமனுடைய தயவு வேண்டும். ஏனெனில் சுக்ரீவன், இழந்த அரசையும், மனைவி உமையையும் களவாடிய வாலியைக் கொன்று அவைகளை மீட்டுத் தர ராமன் ஒருவனால்தான் முடியும்.
இருவர் சினேகம் பண்ணிக் கொள்ள வேண்டுமானால் இருவருக்கும் சமமான துக்கம், அல்லது இருவருக்கும் சமமான குறைகள் இருக்க வேண்டும். அதனால்தான் மனைவியையும் அரசையும் இழந்த ராமரும், சுக்ரீவனும் நண்பராகிறார்கள். ஒரு காரிய வெற்றிக்கு முயற்சி மட்டும் போதாது. முயற்சி, தவம் இரண்டும் தேவை. தவம் என்றால் நம் முன்னோர்கள் செய்த புண்ணியம் நாம் செய்த புண்ணியம் இரண்டும் கலந்தது. ராமரும் சுக்ரீவனும் நண்பர்களாக இணைந்ததைக் கம்பன் ''முன்னர் ஈட்டிய தவமும், பின்னர் முயற்சியும் இணைத்தது ஒத்தார்'' என்று வர்ணிக்கிறார். சுக்ரீவனுக்கு ராமரின் நட்பு கிடைத்ததற்கு ஹனுமார் தான் காரணம். அவர்கள் இருவரையும் தன் சொல் வன்மையால் சேர்த்து வைக்கிறார். அதனால் அன்றோ கம்பன் சொல்லின் செல்வன் என்று அனுமாரை அழைக்கிறார்.
''நூறு யோசனை தூரம் உள்ளக் கடலை, யார் தாண்டி இலங்கையை அடைவது'' என்கிற பிரச்சினை எழுகிறது. அப்பொழுது ஒன்றும் பேசாமல் இருந்த ஹனுமாரைப் பார்த்து ஜாம்பவான் அவன் பிறப்பை ஞாபகப்படுத்தி ''உமக்குள்ள பலத்தை நீர் அறிய மாட்டீர். நீர் சிறு குழந்தையாக இருந்தபோதே, சிவப்பாக இருந்த உதய சூரியனை நோக்கி பாய்ந்தவர்'' என்று ஞாபகப்படுத்துகிறார். உடனே ஹனுமாருக்கு கடலைத் தன்னால் தாண்ட முடியும் என்ற சுயநம்பிக்கை வருகிறது. உடனேயே வானளாவ உயர்ந்து, கடலைத் தாண்ட தயாராகிறார். நமக்கும், நாம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்போம் என்கிற சுய நம்பிக்கை வந்தால், எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும்.
இராமாயணத்தில் 'சுந்தர காண்டம்' தான் மிகச் சிறந்தது என்று போற்றப்படுகிறது. மற்ற காண்டங் களை கதாநாயகன் என ராமனைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறது. ஆனால் 'சுந்தர காண்டம்' ஒன்றுதான் சீதையைப் பற்றியும் பக்தன் ஆஞ்சனேயரைப் பற்றியும் கூறுகிறது. ஹனுமாரின் சாகச செயல்களை விவரிக்கும் இந்த காண்டத்திற்கு வால்மீகி முதலில் 'ஹனுமத் காண்டம்' என்று பெயரிட்டார். உடனே ஹனுமார் அவர் முன் தோன்றி தன் பெயரில் ஒரு காண்டமும் இருக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். உடனே வால்மீகிக்கு ஆஞ்சனேயர் குழந்தையாக இருந்த காட்சி கண் முன் வர, அவருடைய தாயார் அஞ்சனா தேவி குழந்தை ஹனுமனை ''சுந்தரா'' என்று வாஞ்சையுடன் அழைத்தது தெரிந்தது. ஆகவே அக்காண்டத்திற்கு 'சுந்தர காண்டம்' என்று பெயரிட்டார்.
பாவம் ஹனுமார்! ராமர் அழகானவர் ஆனதால் அவர் பெயர் தான் வைக்கப்பட்டுள்ளது என்று சந்தோஷமடைந்தார். இது ஏன் சுந்தர காண்டம் என்றால் பகவானுடைய திவ்ய மங்கள உருவம் மிக அழகாக வர்ணிக்கப்படுகிறது. ராமனுடைய அழகை ஹனுமார் சீதைக்கு மிக அழகாக வர்ணிக்கிறார். உபமானங்கள் சிறந்து விளங்குவது இந்த காண்டத்தில்தான். இலங்கையில் ஹனுமான் சந்திரோதயத்தை வர்ணிப்பதை இன்றெல்லாம் படித்து மகிழலாம்.
சீதையைத் தேடிச் சென்ற ஹனுமார், தன் காரியத்தில் வெற்றி பெற்றார். காரியத்தை தொடங்கும் முன் சூரியனை வணங்கினார். அவர் ஹனுமாரின் குரு. பிறகு குழந்தை ஹனுமாரை தன் ஜராயுதத்தால் அடிக்கப் போகத்தான், பல வரங்கள் கிடைக்கின்றன. ஆதலால் இந்திரனை வணங்கி னார். பிறகு பிரம்மாவை வணங்கினார். பிரம்மாதானே அவரை மூர்ச்சை தெளிவித்து சிரஞ்சீவியாக இரு என்று ஆசிர்வாதம் செய்தவர். பிறகு தகப்பனார் வாயுதேவனை வணங்கினார். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எந்தக் காரியத்தையும் தொடங்கும் முன்னர் பெரியவர்களை வணங்கி அவர்கள் ஆசியை பெற வேண்டும் என்பது.
கடலைக் கடக்க ஹனுமான் ஒரே தாவலில் கடக்கவில்லை. வழியில் மூன்று தடைகளைக் கடந்து சென்றதாக வால்மீகி கூறுகிறார். முதலில் நட்பு முறையில் மைநாகம் என்ற பர்வதமும், சுரசை என்கிற ஒரு கோர அரக்கியும், பின் விரோத மனப்பான்மை கொண்ட ஸிம்ஷிகா என்ற அரக்கியும் தடை செய்கிறார்கள். ஹனுமாரோ வாயில் ராமனுடைய மோதிரத்துடன் ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டு இத்தடைகளை கடந்து இலங்கையை அடைகிறார்.
கடலைத் தாண்ட கிளம்பும் ஹனுமார் சற்று மார்தட்டி பேசுகிறார். ''திரும்பினால் சீதையுடன் திரும்புவேன். இல்லாவிடில், இராவணனோடு கூட இலங்கையைப் பெயர்த்துக் கொண்டு வருவேன்' என்று சொல்லுகிறார். ஆனால் சீதையை இலங்கையில் பல இடங்களில் தேடியும் காணவில்லை. அதனால் மனம் உடைந்து போகிறார்.
சீதையை இராவணனின் அந்தப்புரத்தில் தேடுகிறார். திடீரென்று அவருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. ''இப்படி பரஸ்திரீகளை பல அலங்கோல நிலைகளில் பார்த்தேனே, அதன் காரணமாக என் தர்மத்திற்கு ஏதாவது கெடுதல் ஏற்பட்டால் என்ன ஆவது என்று நடுங்குகிறார். பிறகு அவர் தம்மைத் தாமே தேற்றிக் கொள்கிறார். அந்தப் பெண்ணை நான் பார்க்கத்தான் செய்தேன். ஆனால் அதன் காரணமாக என் மனதில் ஒரு விகாரமும் ஏற்படவில்லை. என் மனதோ துளியும் சஞ்சலப் படவில்லை'' என்று தேற்றிக் கொள்கிறார். ஹனுமார் தன் மனதை சோதித்துக் கொண்ட மாதிரி, நாமும் நம்மனதை அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும்.
எங்கு தேடியும் சீதை கிடைக்காமல் போகவே, எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டவர், ராமனை மனதார வேண்டிக் கொள்ளவில்லையோ என்கிற அச்சம் அவருக்கு ஏற்படுகிறது. உடனே ராமனைக் குறித்து 'நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய' என்று தொடங்கும் ஸ்லோகத்தால் ராமனை துதிக்க இன்னும் அசோக வனத்தில் தேடவில்லையே என்கிற எண்ணம் தோன்றுகிறது. அசோக வனத்தில் தேடுகிறார். சீதை அகப்படுகிறாள்.
ஹனுமாரைக் கண்டதும் சீதையின் முகம் மலர்கிறது. பத்து மாத காலமாக காணாத கணவரின் மோதிரத்தைக் கண்டவுடன் அவள் அடைந்த மகிழ்ச்சி சொல்லி முடியாது. உடனே ஹனுமாரை 'இன்றென இருத்தி' அதாவது இன்று போல் என்றும் சிரஞ்சீவி யாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினாள். ''இன்று நீ எனக்கு உதவியதைப் போலவே எல்லோருக்கும் உதவ வேண்டும்'' என்று பொருள் கொள்ளலாம்.
சீதையைக் கண்டுபிடித்து அவளிடமிருந்து சூடாமணியைப் பெற்றுக் கொண்டு இலங்கையிலிருந்து திரும்பிய ஹனுமாரை பாராட்டும் ராமர் அவரை 'உத்தமசேவகன்' என்று குறிப்பிடுகிறார். உத்தமசேவகன் எஜமானன் கொடுத்த கஷ்டமான காரியத்தை சரிவர நிறைவேற்றுவதோடு அதற்கு அனுசரணையாக உள்ள பல காரியங்களையும் நிறைவேற்றிவிட்டுத்தான் திரும்புவான். ஹனுமாரும் அவ்வாறே செல்கிறார். சீதையைக் கண்டுபிடித்த தோடு அவள் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதையும் தடுக்கிறார். ராமர் வந்துவிடுவார் என்று உற்சாகப்படுத்துகிறார். அத்துடன் நின்றாரா! ராவணனின் பலாபலத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றே அசோகவனத்தை அழித்துத் தம்மை யார் எதிர்க்கிறார்கள் என்று கவனிக்கிறார். பிறகு ராவணனை சந்திப்பதற்காக வேண்டுமென்றே இந்திரஜித்திடம் அகப்பட்டுக் கொண்டு ராவணனைச் சந்திக்கிறார். யுத்தத்தை தவிர்ப்பதற்காக அவனுக்கும் பல நீதிகள் எடுத்துரைக்கிறார். இவை ராவணனின் இருபது காதுகளில் விழவில்லை. அவன் கேட்காமல் போகவே, அவனை பலவீனப்படுத்த இலங்கையை எரிக்கிறார்.
ஹனுமாருக்கு ஞானம், பக்தி, வைராக்கியம், வாக்கு வன்மை முதலிய குணங்கள் இருந்தது. ஜீவாத்மா சீதையைத் தேடி, பரமாத்மா ராமன் மிதிலை சென்று, அந்த ஜீவாத்மாவை தம்மோடு சேர்த்துக் கொள்கிறது. எதுவும் வலுவில் நம்மைத் தேடி கொண்டு வருவதால் அதற்கு நாம் அதிக மதிப்பு கொடுக்க மாட்டோம். அதே மாதிரி, இந்த ஜீவாத்மாவும் தன்னைத் தேடி வந்த பரமாத்மாவிற்கு அதிகம் மதிப்பு வைக்காமல் தன் ஞானேந்திரியங்களையும், கர்மேந்திரியங் களையும் கட்டுப்படுத்தாமல், ஒரு மாயமான் மீது மோகம் கொள்கிறது. அதன் காரணமாக பரமாத்மா விடமிருந்து பிரிகிறது. தன் பத்து இந்திரியங்களையும் கட்டுப்படுத்த முடியாத தசமுகனால் களவாடிச் செல்லப்படுகிறது. பரமாத்மாவைப் பிரிந்து ஜீவாத்மா துடிக்கிறது. ஒரு நல்ல ஜீவாத்மாவை விட்டு பிரிந்து விட்டோமே என்று இங்கு பரமாத்மாவும் துடிக்கிறது. இப்பொழுது இந்த பரமாத்மாவையும் ஜீவாத்மாவை யும் ஒன்று சேர்த்து வைக்க வருகிறார் ஆசாரிய ரூபத்தில் ஹனுமார். இருவரையும் ஒன்று சேர்க் கிறார்.
பல விதங்களிலும் உதவி செய்த ஹனுமாருக்கு என்ன பிரதி உபகாரம் செய்வது என்று தவிக்கிறார் ராமர். ''நீ சீதையை கண்டுபிடித்தால், என் ரகுவம்ச குலத்தையே காப்பாற்றினாய் மேலும் விர லக்ஷ்மணனைக் காப்பாற்றினாய். உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை. உனக்கு நான் என்னையே கொடுப்பேன் என்று சொல்லி ஹனுமாரை இறுகத் தழுவிக் கொள்கிறார்.
இராமாயணம் மகாபாரதம் இந்த இரண்டு இதிகாசங்களிலும் எத்தனையோ உயர்ந்த கதா பாத்திரங்கள் வருகிறார்கள். ஆனால் இவர்கள் யாவருக்கும் கோவில் கிடையாது. ஆனால் ஹனுமாருக்கு மட்டும் கோவில் கட்டி வணங்கு கிறோம். போதாக்குறைக்கு அவருக்கு வடை மாலை வேறு சாத்தி மகிழ்கிறோம் ஏன்? இதற்கு காரணம் அவர் ஞானி. பராக்கிரசாலி. மிகச் சிறந்த பக்தர்.
ஹனுமான் மிகச் சிறந்த ஞானி. ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். சூரிய பகவானிடமிருந்து ஞானத்தைப் பெற்றவர். ஆனால் பீஷ்மரை விட சிறந்த ஞானியா? அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டே பீஷ்மர் எத்தனை தர்மங்களை எடுத்துரைக்கிறார். அவர் சொல்லாத தர்மங்களே இல்லை. ஆனால் அவருக்கு கோவில் இல்லை. ஹனுமாருக்குத்தான் கோவில்.
பராக்கிரமத்தை எடுத்துக் கொண்டால் ஹனுமார் பராக்கிரமசாலிதான். அவர் ராவணனை வெல்ல ராமருக்கு எத்தனையோ வழிகளில் உதவினார். ஆனால் பீஷ்மரோ மகாபாரதப் போரின் எட்டாம் நாள் இரவு துரியோதனன், தம்மை சற்றுக் குறைவாக பேசினான் என்பதற்காக ஒன்பதாம் நாள் ஒரு கடும்போர் புரிகிறாரே, அதைப் போன்ற பராக்கிரமத்தை நாம் பார்க்க முடியுமா? ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சொன்ன கர்ணனையே ஆயுதம் எடுக்க வைத்து விட்டாரே அந்தக் கடும் போரினால்! ஆனால் அவருக்கு கோவில் இல்லை.
ஹனுமார் சிறந்த பக்தர்தான். சந்தேகமில்லை. ராமர் வைகுண்டம் சென்றபோது ஹனுமானைத் தன்னுடன் வரும்படி அழைக்கிறார். ''வைகுண்டத்தில் ராமாயணமும் இல்லை. ராம நாமமும் இல்லை'' என்பதற்காக அவருடன் போக மறுத்துவிடுகிறார் ஹனுமார். ஆனாலும் ஐந்து வயது பிரஹலாதனைவிட இவரை சிறந்த பக்தன் என்று சொல்ல முடியுமா? ஆனால் பிரஹலாதனுக்கு கோவில் இல்லை. ஹனுமாருக்கு கோவில்.
ஏன்? இதற்கு இரண்டு கோணங்கள் உள்ளன. ஒரு பக்தர் பகவானை பார்த்து, ''ஹே பிரபோ! எங்களுக்கு ஏதாவது கஷ்டம் என்றால் நாங்கள் உன்னிடம் ஓடி வருகிறோம். உனக்கு கஷ்டம் என்றால் நீ எங்குப் போவாய் என்று உருகுகிறார். ஆனால் ஹனுமாரோ கஷ்டத்தில் இருந்த பகவானுக்கே உதவி செய்தார். இதைவிட சிறந்த காரணம் லோக மாதா சீதையின் பரிபூரண அருள் கிடைத்ததால்தான் அவருக்கு நாடெங்கும் கோவில்கள்.
ஒருமுறை அனுமன் சீதையிடம் அவள் நெற்றியில் காணப்பட்ட ஸிந்தூரத்தின் அழகை ரசித்து வாத்ஸல்யத்துடன் அதை நெற்றியில் வைத்திருக்கும் காரணத்தை அறிய, ஆவலுடன் கேட்கிறார். ''ராமனுக்கு மிகவும் பிடித்தமான இந்த செந்தூரத்தை நெற்றியில் வைத்திருப்பதால் அவருடைய அன்புக்கும், ஆசைக்கும் பாத்திரமானவளாக இருக்கிறேன்'' என்று சீதை கூறுகிறாள். மறுநாள் ராமனிடம் சென்ற அனுமனைப் பார்த்து ராமன் சிரித்தபடியே ''என்ன இது. உடம்பு முழுவதும் செந்தூரம்'' என்று அன்பொழுக கேட்டபோது, ஹனுமன் ''உங்களுக்கு பிடித்த இந்த செந்தூரத்தினால் உங்கள் அன்புக்கும், ஆசைக்கும் என்றென்றும் நான் உங்கள் அடிமையாக இருக்க வேண்டும்'' என வேண்டிக் கொள்கிறான். இப்பொழுதும் எல்லா ஆஞ்சநேயர் கோவில்களிலும், அவர் விக்கிரகம் முழுவதும் செந்தூரத்தாலேயே அலங்கரிக்கப் பட்டிருக்கும்.
ஹனுமனின் அவதார நாள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது. தமிழகத்தில் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தன்று ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இராமனுடைய நாமத்தைச் சொல்லும்போது ராமனுடைய குணங்கள் நமக்கு வர, நாம் ராமனாக மாறிவிடுவோம். ராம பக்தனுக்கு ராமனுடைய குணங்கள் வந்துவிடும் என்பதற்கு ஹனுமாரே உதாரணம். பட்டாபிஷேகத்தின்போது ராமர் ஒரு முத்துமாலையை சீதையிடம் கொடுத்து உனக்கு யார் இஷ்டமோ அவருக்குக் கொடு என்கிறார். சீதை மாலையை ராமனிடம் காணப்பட்ட அத்தனை நற்குணங்களையும் கொண்ட ஹனுமாருக்குக் கொடுக்கிறாள்.
திருமாள் கிருஷ்ணாவதாரத்தில் விஸ்வரூபம் எடுத்துக் காட்டிய பெருமையை ராமாவதாரத்தில் ராமனாக அவதரித்தபோது எடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால் ஹனுமாரோ பல சந்தர்ப்பங்களில் விஸ்வரூபமெடுத்து தன் பெருமையை உலகிற்கு உணர்த்தி இருக்கிறார். தனது உருவத்தை சிறிதாக்கிக் கொள்ளவும், பெரிதாக்கிக் கொள்ளவும் வரம் பெற்றவர் பல கோவில்களில் இன்றும் சிறிய ஹனுமார் சிலைகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருவதாக கருதுகிறார்கள்.
இக்கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான தீமைகளை விரட்டும் ஹனுமாரை, சதா ராமநாமத்தை ஸ்மரிக்கும் ஆஞ்சனேயரை சீதாராம லட்சுமண பரத சத்ருகன ஸமேதராக விளங்கும் சுந்தர ஹனுமானை வணங்குவோம்.

பக்திக்கு அகிம்சை என்னும் தர்மமே ஆதாரம்:-


இந்து சனாதன தர்மம் - பக்திக்கு அகிம்சை என்னும் தர்மமே ஆதாரம்:-
இறைவனின் ஆணையான தர்மங்களை முழுமனதாக ஏற்று, அவற்றை பின்பற்றுவதாகவும் உறுதி பூண்டு, பின்னர் இறைவனிடம் அன்பு செலுத்தும் முறையே 'பக்தி' என அழைக்கப் பெறும். தர்மங்களை முழுவதுமாக புறக்கணித்து விட்டு இறைவனிடம் கொள்ளும் அன்பு 'பக்தி' ஆகாது என்ற புரிதல் மிகவும் அவசியம் ஆகிறது.
மணிக்கணக்கில் கிருஷ்ண நாம ஜெபம் செய்ய விழையும் மனம், கண்ணனின் வாக்கான கீதையை பின்பற்ற மறுக்கிறது. ஸ்ரீராமாயண நிகழ்வுகளை ரசித்து மகிழும் மனம், ஸ்ரீரா...மாயணம் உணர்த்தும் தர்மங்களை உணர மறுக்கிறது. சீரடி பாபாவின் பஜனைகளுக்கு பழகிய மனம் - அப்பரம ஞானியின் போதனைகளை தெரிந்து கொள்ள ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை.
எண்ணற்ற மகான்களை வணங்கத் தயங்காத மனம் - அந்த அருளாளர்களின் தெய்வ வாக்கில் இருந்து உதிக்கும் தர்மங்களை கடைபிடிக்க மறுக்கிறது. ஞானிகளின் படங்களை விட அவர்களின் பாடங்கள் மிக முக்கியம். படங்களால் முக்தி பெற முடியாது - அப்பெருமக்களின் பாடங்களான தர்மங்களே முக்தி நெறிக்கு நம்மை இட்டுச் செல்ல வல்லது.
தர்மமே பக்திக்கு ஆதாரம். தர்மத்தை பின்பற்றாத நிலையில் பக்தி செயல் இழக்கிறது. எது தர்மம் ? அகிம்சையே உயர்ந்த தர்மம். அகிம்சையே உன்னதமான கடமை. 'மற்றொரு உயிருக்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதே' ஞானப் பாதையில் பயணிக்க விரும்பும் ஒவ்வொருவரின் லட்சியமாக இருத்தல் வேண்டும்.
மனு தர்ம சாத்திரம் (அத்தியாயம் 5 - சாத்திரம் 51 & 52):-
ஒரு உயிரினத்தை கொல்ல அனுமதிப்பவர் - கொல்பவர் - கூறுகளாக வெட்டுபவர் - மாமிசமாக்கி விற்பவர் - வாங்குபவர் - சமைத்து உணவாக்குபவர் - பரிமாறுபவர் - உட்கொள்பவர் - இவர்கள் அனைவருமே அந்த உயிரைக் கொன்றவர்களாகவே கருதப் படுவர். தன் உடம்பை வளர்க்கும் பொருட்டு பிற உயிர்களின் மாமிசத்தை உண்பதை விட பெரிய பாவச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

நாமும் நம் வாழ்வில் வெற்றி பெற முடியும்.


நாமும் நம் வாழ்வில் வெற்றி பெற முடியும்.


 


 


ஸ்காட்லாந்து மன்னர் புரூஸ் தனது அரண்மனையில் உட்கார்ந்திருந்தார். நாட்டை இழந்தசோகம் அவர் முகத்தில் வலை பின்னியிருந்தது. ஏன்…? தோல்விதோல்விஎல்லாப் போரிலும் அவருக்குத் தோல்விக்கு மேல் தோல்வி? மேலும் மேலும் முயன்று தோல்வி என்பதால் போர் முயற்சியைக் கைவிடலாமா என்று கவலையுடன் யோசித்தார். கன்னத்தில் கை வைத்த படியே மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்த மன்னருக்கு அங்கே ஒரு ஆச்சரியமான காட்சி காத்திருந்தது.


வீட்டு மேல் கூரையில் ஒரு சிலந்தி தனது எச்சிலை நூலாக்கி வலை பின்னி...க் கொண்டிருந்தது. மிகமிக மெல்லிய நூல் இழை. அதில் தொங்கிக் கொண்டே தன் கால்களை அப்படியும் இப்படியும் அசைத்து அசைத்துத் தனது குடியிருப்பைவலைப்பின்னலை உருவாக்கிக் கொண்டிருந்தது. சிலந்தி வலை அறுந்து அறுந்து போனாலும் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல், ஓய்ந்து விடாமல் பாய்ந்து பாய்ந்து வலை பின்னியது சிலந்தி. தோல்வி அந்தச் சிலந்தியைப் பாதிக்கவே இல்லை.


மன்னருக்குப் பொறி தட்டியது. இத்தனை தோல்விக்குப் பிறகும் தளராமல் சிலந்தி செயல்படும் போது, காரிய சாதனை செய்யும் போது நாம் இப்படித் தளர்ந்து போகலாமா என்று தன் உணர்வு பெற்றார். சிலந்தியின் முயற்சி அவரைச் சிந்திக்க வைத்தது! நாட்டை மீட்டு மீண்டும் அரியணை நாற்காலியில் ஏற வைத்தது! முடியாது என்று சிலந்தி கூட ஒதுங்குவது இல்லை. முதுகெலும்புடைய மனிதன் நாம் ஒதுங்கலாமா? நம்மால் முடியும்? முதலில் தோல்விகளையே சந்திக்க கூடும். பிறகு சிலந்தியை போல நாமும் நம் வாழ்வில் வெற்றி பெற முடியும்.


இந்த முயற்சியனை திருவள்ளுவர் இவ்வாறு அழகாக கூறுகிறார்:
அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.


குறள் விளக்கம்: நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்

பிறரைத் தோற்கடிப்பதே வெற்றி என்று தவறுதலாக அர்த்தம் கொள்ள வேண்டாம்”.

நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு”. இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனைபேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை.
இதற்கு சொல்வேந்தர். சுகிசிவம் கூறும் உதாரணம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்...டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு… காட்டாத்து வெள்ளம்… திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது… அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது.. பயங்கர வெள்ளம் கீழே… அது எப்படித் தப்பிக்கும் சொல்லுங்கள்?” என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.
அரைமணி நேரம் மாறி மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். “அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும் … தெரியலை, நீயே சொல்லு” என்றார் மகளிடம். “ஆம்… இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை… அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள்.
அந்தச் சின்னப் பெண். அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம் தான் எங்கும் நடக்கிறது.
பிறரை வாய் மூடச் செய்வது, செயலிழக்கச் செய்வது, தோற்றுப் போகச் செய்வது, ஆளவிடாமல் தடுப்பது, முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது… இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறோம். இந்தத் தவறுதலான எண்ணத்திலிருந்து தயவு செய்து வெளியே வரவேண்டும். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல… நமது வெற்றியே நமது குறிக்கோள் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.
நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.
“நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு, பிறரைத் தோற்கடிப்பதே வெற்றி என்று தவறுதலாக அர்த்தம் கொள்ள வேண்டாம்”.

Wednesday, March 19, 2014

முதல் திறவுகோல்.

முதல் திறவுகோல்.
--------------------------
சிறந்த குரு அவர் என்பதை அறிந்து ,காண சென்றான் மன்னன். தனது மனதில் உள்ளதை வெளிப்டுத்தினான்
"அரசபோகங்கள் வெறுத்து விட்டது.., வாழ்வின் நிலையாமை புரிகிறது, ஆன்மவிழிப்புணர்வு மீதே நாட்டமாக இருக்கிறது..ஞானத்தை தேடி உங்களிடம் வந்தேன்..!" என்றா...ன் மன்னன்.

அப்போது குருவின் சீடன் ஒருவன் துடப்பத்தால்
அந்த இடத்தைப் பெருக்கி கொண்டு வர.., தூசுகள் மன்னனின் அழகிய உடையில் தூசின் தும்புகள் படிந்தன. கோபம் கொண்ட மன்னன் அந்த சீடனிடம் சீறினான்.
"கண் தெரியவில்லையா.. பாத்து பெருக்கு..!" என்றான்.

இதை கவனித்த குரு சொன்னார்.
"ஞானம் கிடக்கட்டும், முதலில் ஞானம் பெற உன்னை தகுதியாக்கி கொள்.. உன்னிடம் பாம்பு இருக்கிறது. முதலில் அதை கொண்று விட்டு வா..!" என்றார்.

புரியாது சிந்தித்து கொண்டே சென்றன் மன்னன். மீண்டும் ஒராண்டு கழித்து வந்தபோது. அந்நேரம் சீடன் வாளியில் கரைசலுடன் வந்து மன்னனுடன் மோதினான். இப்போது கோபிக்காது அமைதியுடன் "நன்றி..!" என்றான் மன்னன்.

இம்முறை குருவே ஒடிவந்து..,
"நீ இப்போது ஞானம் பெற முழுதகுதியும் உடையவன்.. ஆனால் உனக்கு சொல்லி க்கொடுக்க இனி என்னிடம் என்ன இருக்கிறது..!" என்றார் பெருமிதத்துடன்..!

(சகிப்பு தன்மையே ஞானத்தின் முதல் திறவுகோல். சகிப்புதன்மை இல்லாத இடத்தில் அகந்தையே இருக்கும். பயிரை வித்தைக்க வேணுமானால் நிலத்தை உழுது பண்படுத்த வேணுமல்லவா. ஞானம் என்பது எதையும் மறுத்தல் அல்ல, அதை அதை அப்படியே ஏற்று கொள்வதுதான்.)















              • ஸங்கல்பம் : கால கணக்கு :

                ஸங்கல்பம் :
                கால கணக்கு :
                - படித்தது வியந்தது . . . .
                ஆன்மீக பிரார்த்தனைகள், க்ரியைகள் எனும் செயல்கள், பூஜைகள் மற்றும் பிற காரியங்கள் அனைத்திற்கும் ...ஸங்கல்பம் எனும் ஸ்லோகம் முதலாவதாகச் சொல்லியே செய்யப்படுகின்றது.அந்த ஸ்லோகம் நிகழ்கால நிகழ்வை எடுத்துக் காட்டுகின்றது.உதாரணமாக, ஒருவர் கணபதி ஹோமம் செய்ய இருக்கின்றார் என்றால், அந்த செயலின் முதல் பூஜையாக ஸங்கல்பம் என்பது அமையும். ஸங்கல்பம் என்பது இறைவனிடம் இந்த கணபதி ஹோமம் வாயிலாக பலனை அடையக் கேட்கப்படும் மந்திரமாக அமைகின்றது.அந்த மந்திரம், விக்னங்கள் எனும் வினைகளை நீக்கும் விநாயகரை வழிபடும் ஸ்லோகமாகிய "ஓம் சுக்லாம் பரதம் ..... சாந்தயே" என்ற மந்திரத்தோடு ஆரம்பித்து,
                "சுபாப்யாம் சுபேசோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண:த்வீதிய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்த்ரே அஷ்டாசாவிகும்சதி தமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்புத்வீபே பாரத வருஷே பரத கண்டே மேரோ: தக்ஷ’ணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவகாரிகே பிரபவாதீனாம் சஷ்டியா: ஸம்வத்ஸராணாம் மத்யே ..... நாம ஸம்வத்ஸரே (உத்தர/தக்ஷ¢ண) அயனே (வஸந்த/ க்ரீஷ்ம/ வருஷ/ சரத்/ ஹேமந்த/ சிசிர்) ருதௌ ...... மாஸே (சுக்ல/ கிருஷ்ண) ப§க்ஷ ......சுபதிதௌ வாஸர: (பானு/ இந்து/பௌம/ ஸெளம்ய / குரு/ ப்ருகு/ ஸ்திர) வாஸர யுக்தாயாம் ....... நக்ஷத்ர ஸம்யுக்தாயாம் சுப நக்ஷத்ர சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷெண வசிஷ்டாயாம் அஸ்யாம்"
                என்று முடிந்து, யார் இந்த கணபதி ஹோமத்தைச் செய்கின்றார்களோ அவர்களின் பெயர் நக்ஷத்திரங்கள் சொல்லப்பட்டு, அந்த ஹோமத்தினால் கிடைக்கும் பலன்களை வேண்டுவதாக முடியும்.
                மேலே சொல்லப்பட்ட "சுபே சோபனே ...... அஸ்யாம்" வரையில் நிகழ்கால கணிதத்தைச் சொல்ல விழையும் ஸ்லோகம் ஆகும்.
                பரம்பொருளின் காலம் = 2 கல்பம்60 தத்பராக்கள் = 1 பரா60 பராக்கள் = 1 லிப்தம்60 லிப்தம் = 1 விநாழிகை60 விநாழிகை = 1 நாழிகை60 நாழிகை (24 மணி நேரம்) = 1 நாள்30 நாள் = 1 மாதம்12 மாதங்கள் = 1வருடம்60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)3000 சுழற்சிகள் = 1 யுகம்4 யுகங்கள் = 1 சதுர்யுகம்71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்
                த்விதீய பரார்த்தே - இரண்டாவது பரார்த்தம் - பிரம்மாவிலிருந்து தொடங்குகிறது கால கணக்கு. பிரம்மாவானவர் சிருஷ்டியைத் தொடங்கி பிறகு முடிப்பது வரை உள்ள காலக் கணக்கு மஹா கல்பம்.நாம் வாழும் காலத்தைத் தொடங்கிய பிரம்மாவிற்கு முன் பல பிரம்மாக்கள் தங்கள் படைத்தல் - முடித்தல் காரியத்தை செய்து முடித்திருக்கிறார்கள்.மஹா கல்ப காலத்தில் ஒரு பிரம்ம காலம் என்பது நூறு பிரம்ம வருடங்கள். அதில் பாதி (அர்த்தம்) ஐம்பது பிரம்ம வருடங்கள். (பிரம்ம வருடங்களைக் கணக்கிட முந்தைய பதிவைக் காணவும்.) ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மனுட வருடங்கள் (கணக்கதிகாரம்). இதில் பாதி முடிந்து விட்டது.இப்பொழுது நடந்துகொண்டிருப்பது, த்விதீய பரார்த்தம் - இரண்டாவது பரார்த்தம்.
                ஸ்வேதவராஹ கல்பே - இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன. இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.
                வைவஸ்வத மன்வந்தரே - நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது.14 மன்வந்திரங்களாவன : 1.ஸ்வாயம்புவ மன்வந்திரம், 2.ஸ்வரோசிஷ மன்வந்திரம், 3.உத்தம மன்வந்திரம், 4.தாமச மன்வந்திரம், 5.ரைவத மன்வந்திரம், 6.சாக்ஷ¤ஷ மன்வந்திரம், 7.வைவஸ்வத மன்வந்திரம், 8.சாவர்ணிக மன்வந்திரம், 9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம், 10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம், 11.தர்ம சாவர்ணிக மன்வந்திரம், 12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம், 13.தேவ சாவர்ணிக மன்வந்திரம், 14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்.ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் இருக்கின்றோம்.
                அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே - 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று கண்டோம். வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில்28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.இந்தக் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும். அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும்.
                இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள். இவற்றைச் சற்றே சுருக்கமாகக் காண்போம்.
                ஜம்பூத்வீபே - பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான். ஏழு தீவுகள் உள்ளன. (1. ஜம்பூ த்வீபம் (நாம் வசிப்பது - நீரால் சூழப்பட்டுள்ளது), 2. பிலக்ஷ த்வீபம், 3. சான்மலி த்வீபம், 4. குச த்வீபம், 5. க்ரௌஞ்ச த்வீபம், 6. சாக த்வீபம், 7. புஷ்கர த்வீபம்)
                பாரத வர்ஷே - த்வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கின்றோம். (1. பாரத வர்ஷம், 2.ஹேமகூட வர்ஷம், 3. நைஷத வர்ஷத்ம், 4.இளாவ்ருத வர்ஷம், 5. ரம்ய வர்ஷம், 6. ச்வேத வர்ஷம், 7. குரு வர்ஷம், 8. பத்ராச்வ வர்ஷம், 9.கந்தமாதன வர்ஷம்)
                பரத கண்டே - பாரத வர்ஷம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. 1.பரதகண்டம், 2. கிம்புருகண்டம், 3. அரிவருடகண்டம், 4. இளாவிரதகண்டம், 5. இரமியகண்டம், 6. இரணியகண்டம், 7. குருகண்டம், 8. கேதுமாலகண்டம், 9.பத்திராசுவகண்டம இதில் நாம் பரத கண்டத்தில் வசிக்கின்றோம்.
                மேரோர் தக்ஷ¢ணே பார்ச்வே - பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்திலிருக்கின்றோம்.
                மேற்கண்ட பிரம்ம காலம் தொடங்கி, பரத கண்டத்தின் தெற்கு புறத்திலிருக்கும், ஹோமத்தை செய்யும் கர்த்தாவானவர் 60 வருடங்கள் கொண்ட சுழற்சியில், தற்காலம் விக்ருதி எனும் பெயர் கொண்ட வருடத்தின் பனிரண்டு மாதங்கள் கொண்ட ஸம்வத்ஸரத்தில், உத்தராயணம் அல்லது தக்ஷ¢ணாயனம் எனும் இரு அயன காலத்தில் உத்தராயண காலத்தில், ஆறு ருதுக்கள் கொண்டவற்றில் வஸந்த ருதுவில், சித்திரை மாதத்தில், வளர்பிறை சதுர்த்தி தினத்தில், ஞாயிறு கிழமை, ரோகிணி நக்ஷத்தரம் இணைந்த சுபமுஹ¥ர்த்த சுப யோக தினத்தில் செய்யப்படும் கணபதி ஹோமம், கர்த்தாவின் பெயர் நக்ஷத்திரம் சொல்லப்பட்டு, அவர்களின் நல்வாழ்க்கைக்காக செய்யப்படுகின்றது என்பதே "சுபே சோபனே .... கரிஷ்யே" என்பது வரை சொல்லப்படும் ஸ்லோகத்தின் அர்த்தமாகின்றது.
                எண்ணற்ற பிரம்மாக்களின் சிருஷ்டி வரிசைகளில், ஒரு பிரம்மாவின் படைப்பில், அவரின் இரண்டாவது காலத்தின், முதல் தினத்தில் (கோடிக்கணக்கான வருடங்களுக்கு இடையில்) வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
                மேலே சொல்லப்பட்டுள்ள கணித வகைகள் தமிழின் தொல்லிய நூலாகிய காரி என்பவர் எழுதிய கணக்கதிகாரத்தை மையமாகவும் கொண்டு சொல்லப்பட்டுள்ளது.

                Tuesday, March 18, 2014

                வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன்

                ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.
                ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
                அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூ...ர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.
                நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
                இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
                பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.
                விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.
                “சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.
                உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.