Friday, April 22, 2016

உடம்பில் உண்டாகும் நோய்கள் 4448

உடம்பில் உண்டாகும் நோய்கள் 4448

தலையில் ஏற்படும் நோய்கள் குறித்து சித்தர்கள் கூறுவது
தலையில் ஏற்படும் நோய்கள் குறித்து சித்தர்கள் கூறுவது
தலைநோய்:

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. 

ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

 

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை:

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு, புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடுகின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.


எதற்காக பால், தேன், சந்தனம் போன்ற அபிஷேகங்கள் கோவில்களில் நடைபெறுகிறது?

எதற்காக பால், தேன், சந்தனம் போன்ற அபிஷேகங்கள் கோவில்களில் நடைபெறுகிறது? இதற்கு ஏதாவது அறிவியல் அல்லது மெய்ஞானக் காரணங்கள் உள்ளதா?
----------------------------------------------------------------------------------
காரண காரியங்கள் இல்லாமல் எமது சநாதன தர்மத்தில் எந்த ஒரு வழிபாட்டு முறையும் சொல்லப்படுவதில்லை. அதில் ஒன்றுதான் பால், தேன், அரிசி மாவு, திருநீர், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம், எழுமிச்சை, மஞ்சல், வில்வம், போன்ற அபிஷேகங்கள். நாம் முதலில் இதற்கான அறிவியல் காரணங்களை ஆராய்வோம்.
காந்த அலைகளும் கோவில்களும் (Magnetic Waves):
--------------------------------------------------------------------------
அனைத்து இந்து தர்ம கோவில்களும் வட மற்றும் தென் துருவம் சேரும் இடத்திலேயே அமைந்திருக்கும். குறிப்பாக கர்ப கிரகம் இந்த திசையில்தான் அமைந்திருக்கும். மூலவரை பிரதிஷ்ட்டை பண்ணும் போது செப்பு (Copper) தகட்டின் மேல்தான் பிரதிஷ்ட்டை செய்வர். இந்த செப்பு தகடானது காந்த அலைகளை பிரதிபளிக்க வல்லது. மூலவரானவர் வட மற்ரும் தென் துருவம் சேரும் இடத்தில் அமையப் பெற்றிருப்பதால் காந்த அலைகள் சூழ்ந்து இருக்கும். அவ்வாரு தன் மீது படும் காந்த அலைகளை செப்பானது தன்னை சூழ்ந்திருக்கும் பக்தர்கள் மீது பிரதிபளிக்கிறது. பக்தர்களுக்கு ஒருவித நல்ல அலைகள் (Positive energy)
கிடைக்கிறது. செப்பு பிரதிபளிக்கும் தன்மை உடையது என்பதர்க்கு அறிவியல் ஆதாரம் வேண்டுவோர்:http://www.physlink.com/Education/AskExperts/ae512.cfm
இதற்கும் அபிஷேகத்திற்கும் என்ன சம்பந்தம்:
--------------------------------------------------------------------
தமிழகத்திலும் ஒட்டு மொத்த இந்தியாவையும் எடுத்துக் கொண்டால் பொதுவாக அனைத்துமே உஷ்ண பிரதேசங்கள்தான். பொதுவாக நமது உடல் சூட்டை தனிப்பதற்கு குளிர் பிரதேசங்களுக்கும். நீர் நிலகளுக்கும் செல்வதுண்டு. ஆனால் அதை அடிக்கடி செய்ய முடியாது. அதற்கு பதிலாகத்தான் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது. இங்கே அபிஷேகம் செய்யப்படும் பொருள்கள் அனைத்து குளிர்ச்சியை தரும் பொருள்களே. ஒவ்வொரு முறை மூலவர் முன் செய்யப்படும் அபிஷேகத்தின் குளிர்ச்சி சூழ்ந்திருக்கும் பக்தர்கள் மீது செப்பு மூலம் பாய்கிறது. பக்தர்களின் உடலும் மனமும் குளிர்ச்சி அடைகிறது.
மெய்ஞானம்:
-------------------
இந்துக்கள் அனைவரும் இயற்கையை வழிபடக் கூடியவர்கள். இந்த ஒட்டு மொத்த இயற்கையையும் இறைவனே படைத்தான் என்பதில் தீர்க்கமாக நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே இறைவன் படைத்த இயற்கையை தாம் பயன்படுத்துவதற்கு முன்பு இறைவனுக்கு கொடுப்பது வளக்கம். இதை இன்றைக்கு நேற்றைக்கு அல்ல காலம் காலமாக செய்கிறார்கள்.
---------------------------------------------------------------------------------
சற்று சிந்தித்துப் பாருங்கள் மக்களே!!!!!! நாம் யார் சோற்றிலும் மண்ணை அள்ளிப் போட்டு பால் அபிஷேகம் பண்ணவில்லை. நமத்கு உழைப்பையே இறவனுக்கு படைக்கிறோம். அந்த நேரத்தில் குழந்தை பசியால் அழுதால் குழந்தைக்குதான் அந்த பாலை நாம் கொடுப்போம். இது சில தற்குறிகளுக்கு புரியப் போவதில்லை. அறிவியலின் அடிசுவடு கூட படாத அந்த காலத்தில் நம் முன்னோர்கள் செப்பை குறித்தும் காந்த அலைகள் குறித்து சிந்தித்து உள்ளார்கள் எனில் இது சாதாரண விசயமா?

Tuesday, April 19, 2016

விதி என்றால் என்ன?

விதி என்றால் என்ன?
விதி விளையாடி விட்டது. அது அவன் விதி. விதிப்படி நடந்தது என்றெல்லாம் சொல்கிறோமே! இந்த விதி என்பது என்ன? யார் இதை நிர்ணயிக்கிறார்கள்?
ஒருவனுக்கு விதி எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? விதி தான் ஒருவனது வாழ்க்கையை நிர்ணயிக்க வேண்டும் என்றால் நாம் ஏன் ஒரு காரியம் செய்ய முயற்சிக்க வேண்டும். விதிப்படித்தான் எல்லாம் நடக்கும் என்றால் எனக்கு ஏன் ஆசைகள் வர வேண்டும்? நான் அதை அடைய உழைக்க வேண்டும்? எல்லாம் விதி தான் என்றால் வாழ்வில் எனது பங்கு என்ன? இன்னும் இந்த விதியைப் புரிந்து கொள்ள நிறைய கேட்டுக் கொண்டே போகலாம்.
முதலில் இந்த விதி என்ற நம்பிக்கை மூலமாக நமக்கு மனதளவில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதைப் பார்த்து விடுவோம். பிறகு விதி நிர்ணயிக்கப்படும் விதத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.
விதி என்பது பெரும்பாலும் நமது மன சமாதானத்திற்க்காகவே பயன்படுவதை நம்மால் பார்க்க முடியும். அவன் விதி முடிந்து விட்டது போய் விட்டான். தோற்க்க வேண்டும் என்று விதி அதனால் தான் தோற்றேன். எனக்கு விதிக்கப்படவில்லை அதனால் தான் கிடைக்கவில்லை. அவன் விதி நல்லாயிருக்கு அதான் நல்லா இருக்கான் என்றெல்லாம் சமாதானம் செய்து கொள்வதற்க்காக நாம் விதியைப் பயன்படுத்துகிறோம்.
உண்மையில் இப்படி நமது செயல்பாடுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு விதி என்ற ஒன்றின் மீது பழிபோடா விட்டால் நம்மில் பலர் மிகப்பெரும் மனநோயாளிகளாக சட்டையைக் கிழித்துக் கொண்டு அலைந்திருப்போம் என்பதே உண்மை. இத்தகைய சமாதானத்திற்கு விதி பயன்படுகிறது
.
இப்போது விதி என்பது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். விதி மூன்று வகைகளில் மனித வாழ்வில் விளையாடுகிறது.
ஒன்று. சுய நிர்ணய விதி.
இரண்டு. சமூக விதி.
மூன்று. பிரபஞ்ச விதி.
இவற்றை ஒன்வ்வொன்றாகப் பார்ப்போம்.
1. சுய நிர்ணய விதி.
விதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதே கற்பனைக்கு விளங்காத ஒரு வலைப்பின்னலாக இருக்கிறது. இதில் சுய நிர்ணய விதி என்பது என்ன?
எனது வெற்றிக்கும் தோல்விக்கும் நானே விதியை நிர்ணயம் செய்து கொள்கிறேனா? எப்படி எனது வாழ்க்கைக்கான விதியை என்னால் நிர்ணயம் செய்து கொள்ள முடியும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்...முடியும் . உங்கள் விதி உங்களாலேயே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல். புரிந்திருக்காது. புரியவைக்க முயற்சிக்கிறேன்.
சுய நிர்ணய விதியைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அடிப்படையில் மறுபிறப்பு என்பதை நம்ப வேண்டிய அவசியம் உள்ளது.
பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்
அர்ஜுனனைப்பார்த்துச் சொல்கிறார் "அர்ஜுனா! நீயும் நானும் இந்த மன்னில் பலமுறை பல வடிவங்களில் பிறந்திருக்கிறோம்! அது எனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது" என்று சொல்லி அர்ஜுனனின் முற்பிறவி பற்றி எடுத்துரைக்கிறார்.
மேலும் மனிதனின் உடல் தான் இறக்கிறது. ஆத்மா என்ற நமது உணர்வு ஸ்வரூபம் இறப்பதில்லை. அத்தகைய ஆத்மா உடலை விட்டுப் பிரியும் போது தான் வாழ்ந்த பூமியில் தனக்கு சொந்த மானவற்றின் மீது பற்றுதல் கொண்டு மறைந்தாலோ, பிடிக்காத விஷயத்தின் மீது அதீத கோபத்துடன் மறைந்தாலோ தனது அடுத்த பிறவியில் தான் விட்டுப்போன உணர்வுகளுக்கு பதில் கிடைக்குமாறு வாழ முயற்ச்சிக்கும். முற்பிறவியின் ஞாபகங்கள் இருக்காததால் தான் எதற்க்காக இப்படி நடந்து கொள்கிறோம் என்று சில நேரங்களில் வாழ்பவர்களுக்குத் தெரியாது.
உதாரணமாக நல்ல தெய்வபக்தியுடன் கூடிய அமைதியாக தர்மத்தைக் கடைபிடித்து வாழும் ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவர் அடிதடியும் முரட்டு குணமுமாக போலீஸ் கேஸ் என்று அலையும் நிலையில் இருப்பார். உங்க குடும்பத்துக்கே இல்லாத புத்தி உனக்கு எங்கே இருந்துடா வந்தது என்ற புரியாமல் கேட்பார்களே அது இப்படித்தான்.
ஒருவன் முற்பிறவியில் என்ன குணத்தில் இருந்தானோ அந்த குணத்தின் மிச்சம் இப்பிறவியில் அவனது அடிப்படைக் குணத்தை நிர்ணயிக்கும்.
இப்பிறவியில் எந்த வகையான குடும்பத்தில் பிறக்கிறானோ அக்குடும்பத்தின் வளர்ப்பு ஒருவனது குழந்தைப்பருவத்தைப் பாதிக்கிறது. அந்த பாதிப்பே அவன் இளமைபருவத்தின் நடவடிக்கைகளுக்கு விதியாக அமைகிறது. அந்த விதிப்படி அவன் இளமைப்பருவத்தில் செய்யும் காரியம் முழுவதும் அவனது வாழ்க்கை முழுவதுக்குமான விதியாக அமைகிறது. இவ்வாறு ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை தீமைகளுக்கான அடிப்படை விதி நிர்ணயிக்கப்படுகிறது.
2. சமூகத்தாலான விதி
நான் நல்லவனாகத்தானே இருக்கிறேன் எனக்கு ஏன் கெட்டது நடக்க வேண்டும் என்று சில நேரங்களில் குழம்பிப் போவோம். குடும்பம் என்பது மிகச் சிறிய சமூகம். சமூகம் என்பது மிகப் பெரிய குடும்பம். எனவே ஒரு சமூகத்தில் நடக்கும் எல்லா காரியங்களும் நம் குடும்பத்தில் பாதிப்பை விளைவிக்கும். இந்த சங்கிலித்தொடர் இருக்கிறதே இது சமூகத்தால் உண்டாகும் விதி.
உதாரனமாக நமக்கு முந்தைய தலைமுறையில் ஆண் குழந்தை தான் பெரிசு என்று பெண்குழந்தைகளைக் கருவிலேயே கலைத்தார்களானால் இந்த தலைமுறைக்குத் திருமணத்திற்க்குப் பெண்ணே கிடைக்காமல் போகிறது. ஆனால் தனி ஒரு மனிதனுக்கு, தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று புரியாமல் போகும். ஆனால் இது சமூகத்தின் நடவகிக்கையால் உண்டான விதி. அது நமக்கு சம்மந்தமில்லாமல் நம்மை பாதிக்கும் போது அது சமூகத்தால் உண்டான விதி ஆகும்.
அதேபோல இரு வேறு இனங்களுக்கு இடையே நடக்கும் அடிமைப்போர்கள் அதனால் ஏற்படும் மரணமும் இதற்கு உதாரணமகச் சொல்லலாம்.
இவைகள் கடந்தகாலத்தின் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட விதிகளாகிறது.
3. பிரபஞ்சத்தால் உண்டாகும் விதி:
சுனாமி. இதை விட இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல முடியாது. ஆம். இயற்க்கையின் அபரிமிதமான சீற்றத்தால் குவியல் குவியலாக இறந்து போகும் மனிதர்களுக்கு எந்த விதத்திலும் காரண காரியம் சொல்ல முடியாது. ஆனால் இயற்க்கையின் மாற்றம் ஒரு சங்கிலித்தொடர் போல காலங்காலமாக‌ நடந்து வரும். அவைகளும் ஒரு விதிக்கு உட்பட்டே செயல் பட்டு வருவதால் இது பிரபஞ்சத்தால் உண்டாகும் விதியாகும்.
இப்படி ஒருவருக்கு நடக்கும் எந்த ஒரு செயலும் இம்மூன்று விதிக்குட்பட்டே நடக்கும். இந்த அடிப்படை விதிகளைக் கொண்டு வாழ்க்கையில் ஒருவருக்கு நடக்கும் சம்பவங்களை மேக்ரோ முதல் மைக்ரோ வரை கணக்குப்பன்னிப் பாருங்கள். இந்த மூன்று விதிகளையும் மீறி ஒருவரால் வாழ்ந்திருக்க முடியாது.
இப்படி பல நேரங்களில் நமது கட்டுப்பாடில் இல்லாமலேயே நம்மை பாதிக்கும் பல சம்பவங்கள் நமக்கு விதிக்கப்படுவதாலேயே நாம் விதியை நம்புவது நமது விதியாகிறது.
ஆக கடந்தகால இயற்க்கையின் நிகழ்வு, சமூக நிகழ்வு, மனித வாழ்க்கை இவற்றின் விளைவுகள் யாவும் நிகழ்காலத்தின் விதியை நிர்ணயிக்கின்றன. நிகழ் காலத்தில் நாம் வாழும் வாழ்வும் அதன் விளைவும் எதிர்கால விதியை நிர்ணயிக்கிறது. எனவே இதை நன்றாக உணர்ந்து நிகழ்காலத்தில் முடிந்த வரை தர்மங்களிலிருந்து மீறாமல் வாழ்வது எதிர்காலத்தில் நமக்கு நாமே நல்ல விதியை எழுதிக்கொள்வது போல் ஆகும். எழுதுவோமா?
அதெல்லாம் சரி, விதியை மதியால் வெல்ல முடியுமா? முடியும். உதாரணம். மகாத்மா காந்தி. அடிமைகளாக இருப்பது இந்தியர்களின் விதியாக இருந்தது. தனது நிகழ்கால நடவடிக்கைகளின் மூலம் எதிர்கால இந்தியர்களின் விதியை அவர் மாற்றினார்.
சுய நிர்ணய விதி சமூக விதியை மாற்றியது. அதனாலேயே அவர் மகாத்மா என்று அழைக்கப்படுகிறார். சரியா!

Sunday, April 17, 2016

ஒன்று முதல் பத்து எண்கள் வரைக்கும் ஸ்ரீராமருக்கும் உள்ள தொடர்பு.

ஒன்று முதல் பத்து எண்கள் வரைக்கும் ஸ்ரீராமருக்கும் உள்ள தொடர்பு.
1. ஏக (1) பத்தினி விரதன்
2 இரண்டு மகன்களுக்கு (லவ, குசன்) தந்தையானவன்
3 மூன்று அன்னையர்களான கௌசல்யா, சுமித்திரை, கைகேயியின் மடிகளில் வளர்ந்தவன்
4 தசரதனின் நான்கு புதல்வர்களில் ஒருவன்
5 ஐம்புலன் அடக்கமுள்ள சீதாதேவியின் துணைவன் மற்றும் குஹனை தன் ஐந்தாவது சஹோதரானாக ஏற்றவன்
6.ஆறெழுத்து ராமாயணமும் ஸ்ரீராமஜெயமும் ஆருயிர்களின் வாழ்க்கைக்கு ஊட்ட மருந்தாக இருக்கின்றது.
7 ஏழு காண்டங்களான பால, அயோத்யா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்திர காண்டங்கள் அவரோடு தொடர்புடையவை.
8.எட்டெழுத்து எழிலான சுந்தர காண்டத்தின் நாயகன் ஆஞ்சநேயரின் தோழன்
9. நவமி (9) திதியில் சூர்ய குலத்தில் மனிதனாக அவதரித்தவன்
10. பத்து தலை அரக்கனான ராவணனை அழித்தவன்

Saturday, April 16, 2016

நல்வினைக்கான நன்மைகள் :-

நல்வினைக்கான நன்மைகள் :-
1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.
2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்.
3 பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.
4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்.
5 தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய்,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.
6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.
7 இரத்தம,; கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்.
8 ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்.
9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.
10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்.
11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்.
12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.
13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.
14 தீர்த்த யாத்திரை புரிகின்றனர் சத்தியலோக வாசம் கிட்டுகிறது.
15 ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்.
16 பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்.
17 பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள் .
18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள் .
19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்.
20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்.
21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.
22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.
23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.
24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.
25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்.
26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்.
27 விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்.
28 சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்.
29 ஷோடச மகாலெட்சுமி பூஜையை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.
30 இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.
- கருட புராணம்.
எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்

Sunday, April 10, 2016

ம்ருத்யுஞ்ஜய மந்திரம்

மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம்
இது மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்ற பெயருடையது. ருக் வேதத்திலும் (7.59.12) யஜூர் வேதத்திலும் (1.8.6.i; VS3.60) காணப்படுகிறது. இம்மந்திரத்தைக் கண்டறிந்தவர் மார்கண்டேய முனிவர். இது முக்கண்களையுடைய சிவபிரானிடம், சாகாமையை வேண்டுவதாக அமைந்துள்ளது.
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் l
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத் ll
சொற்பொருள்:-
ஓம் = ஓம்; த்ரயம்பகம் = முக்கண்ணுடையவரே; யஜாமஹே = நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம்; சுகந்திம் = நறுமணமும் (எல்லா வளமும்); புஷ்டி = ஊட்டமும் (எல்லா நலமும்); வர்த்தனம் = பெருகும்படியாகச் செய்பவரே; உர்வாருகம் = வெள்ளரிப்பழம்; இவ = போல; ம்ருத்யோர் = (என்னை) இறப்பின்; பந்தனாத் = பிடியிலிருந்து; முக்ஷீய = விடுவித்து; மா = எனக்கு; அம்ருதாத் = இறவாமையை அருளும்.
மந்திரத்தின் பொருள்:-
ஓம் முக்கண்ணுடையவரே! எல்லா வளமும், எல்லா நலமும் பெருகும்படிச் செய்பவரே! நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம். வெள்ளரிப் பழம் போல, என்னை இறப்பின் பிடியில் இருந்து விடுவித்து, எனக்கு இறவாமையை அருளும்.
விளக்கவுரை:-
ஓம் என்பது எல்லா மந்திரங்களுக்கும் பொதுவானது. அதைத் தனியாக உச்சரிக்க சன்யாசிகளுக்கு மட்டுமே உரிமையுள்ளது. ஆகையால், மற்றோர்களும் அதை உச்சரித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக, அந்த ஓரெழுத்து மந்திரம் அனைத்து மந்திரங்களுக்கும் முதலில் உச்சரிக்கப் பெறுகிறது. இங்கும் அதுவே பின்பற்றப்பட்டுள்ளது.
சிவபிரானுக்கு மற்ற பல அங்க அடையாள, அணிகலன்கள் இருக்க, இங்கு அவர் முக்கண்ணரே! என விளிக்கப்படுகிறார். காரணம், மற்றெந்த தெய்வத்திற்கும் இல்லாத இந்தச் சிறப்பை உடையவரே, மற்றெந்த தெய்வத்தாலும் அளிக்க இயலாத, பின்னால் கேட்கப் போகும் (இறவாமை என்ற) வேண்டுகோளை நிறைவேற்ற சக்தியுள்ளவர் என்று சுட்டிக் காண்பிப்பதற்காகவே ஆகும். மூன்றாவது கண்ணால் காமவேளை எரித்தவருக்கு, அதேபோல, யமனை எரிப்பது ஒரு பெரிய காரியமல்ல என்று கூறுவதுவும் ஏற்புடையதே.
சிவபெருமான் காரணமின்றியே, அவர் மீது பக்தி இல்லாவிடினும், அருள் செய்து (இதற்கு வடமொழியில் ’அவ்யாஜ கருணா’ அல்லது ’நிர்ஹேதுக க்ருபா’ என்று பெயர்), நறுமணத்தையும், ஊட்டத்தையும் அளிக்கிறார். அவர் மீது நமது பக்தி கூடக் கூட, அவற்றை அதிகரிக்கச் செய்பவர் என்பதையே ’வர்தனம்’ என்ற சொல் உணர்த்துகின்றது. நறுமணம் என்பது மனமகிழ்ச்சி, போன்ற உள்ளம் சார்ந்த வளங்களையும், ’புஷ்டி’ என்பது உடலுடன் தொடர்புடைய நோயின்மை, சுகம் என்ற நலன்களையும் சுட்டுகின்றன. வடமொழியில் ’யஜனம்’ என்றால் யாகம் செய்தல் என்று பொருள். பொதுவாக பூசிப்பது என்பது பொருளானாலும் சிறப்பாக யாகத்தால் பூசிப்பதையே குறிக்கிறது.
மரத்தில் ஏற்றி விடப்பட்ட வெள்ளரிக் கொடியில் காய் காய்த்துப் பழுக்கிறது. பக்குவம் வந்தவுடன் பழம் கொடியிலிருந்து விடுபடுகிறது. நிலத்தில் விழும் அதற்கு என்ன நேருகிறது? அதே கொடி நிலத்தில் படருகிறது, காய்க்கிறது, பழுக்கிறது. பழம் எடை கூடுதலாக இருப்பதால், பக்குவம் வந்தவுடன், பழத்திற்குச் சேதமில்லாமல், கொடி பழத்திலிருந்து விடுபடுகிறது. அந்த நிலையே இங்கு விளக்கப்பட்டுள்ளது. நம்மைப் தன்பால் பிணைத்து வைத்துக் கொண்டுள்ள இறப்பு, நம்மிடம் இருந்து விலக அருள் புரிய வேண்டும் என வேண்டப்படுகிறது. வெள்ளரிக்காய் பழுத்த உடனேயே கொடி அதை விட்டுப் பிரிவதில்லை. பக்குவம் வர வேண்டியதுள்ளது. அதுபோல, சாகாமையை வேண்டினாலும் பக்குவம் வரும் போதுதான் அதை அடைய முடிகிறது. அதுதான் குருவருள். இறையருள் கிடைத்தாலும், குருவருளின்றிக் காரியம் கை கூடாது என்பது இங்கே, அதாவது பக்குவம் வந்தபோது தானாக விடுபட்டுப் போகும் கொடியினால், குறிப்பாக விளக்கப்பட்டுள்ளது.
இறவாமை என்றால் என்ன? பிறந்த உடனேயே சாவதும் உறுதி. எவரும், எதுவும் நிலையல்ல; அப்படியிருக்க இறவாமையை எப்படி வேண்டிப் பெற முடியும்? இறவாமை, இப்பொழுது எடுத்துள்ள இப்பிறவியில் அல்ல. இனிப் பிறந்து-பிறந்து, இறந்து-இறந்து இளைக்காமல் இருப்பதுவே வேண்டப்படுகிறது. அதற்கு இம்மனிதப் பிறவி ஒரு கருவியாக இருக்கிறது. இம்மாதிரியான மந்திரங்களைச் சொல்லி, கேட்டு, சிந்தித்து, உணர்ந்து பயன் அடைய முடிகிறது.
எந்த மந்திரத்தை உச்சரித்தாலும், அதற்கேற்ற பயன் கிடைப்பது உறுதி. அதில் ஐயமில்லை. ஆனால் ஒலிநாடா சொல்லிக் கொண்டிருப்பது போலன்றி, அதன் பொருளறிந்து சொல்லுவது, பன்மடங்கு பயனை, உடனே அளிக்க வல்லது.
இந்த மந்திரத்தை நெற்றியில் திருநீறு அணியும் போது சொல்வது மிகவும் விசேஷம்.

சிரார்த்தம் செய்யாமல் செய்யும் பூஜைகளை விஷ்ணுவும், சிவனும் ஏற்றுக்கொள்வதில்லை.

சிரார்த்தம் செய்யாமல் செய்யும் பூஜைகளை விஷ்ணுவும், சிவனும் ஏற்றுக்கொள்வதில்லை.
மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தத்தையும், தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்
பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம் கிடையாது.
தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்
அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில்
இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்
அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.
இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர் வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள். சிரார்த்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான்
நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.

Saturday, April 9, 2016

மகாபாரதம் சொல்லும் நல்லொழுக்கம்

மகாபாரதம் சொல்லும் நல்லொழுக்கம்


மகாபாரதத்தின் சாந்தி பர்வத்தில், பீஷ்மர் ‘நல்லொழுக்கம்’ என்றால் என்ன என்பதைப் பற்றி சொல்லும் ஒரு கதை அமைந்துள்ளது.


ஒரு காலத்தில் ஓர் அடர்ந்த வனத்தில் ஜஜாலி எனும் துறவி வாழ்ந்து வந்தார். அந்த துறவி மிகவும் எளிமையான ஒரு வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து வந்தார். நெடுங்காலமாக தவமிருந்து நிறைய ஆன்மீக அறிவைப் பெற்றார். ஆயினும் இதனால் அவர் தற்பெருமை கொள்ள ஆரம்பித்தார்.

”இந்த உலகத்திலே நான் தான் சிறந்த ஞானி. என்னுடைய தவோபலத்தால் நான் அளவற்ற ஆன்மீக அறிவைப் பெற்றுவிட்டேன். என்னைவிட சிறந்தவன் யாருமே இல்லை” என சத்தமாக சூளுரைத்தார்.

திடீரென்று அசரீரியாக ஒரு குரல் கேட்டது. அந்த குரல், “அவ்வாறு தற்பெருமை கொள்ளலாகாது, ஜஜாலி. ஊருக்குள் துலாதரன் எனும் வணிகன் இருக்கிறான். அறிவிலும் செயலிலும் உம்மை விட சிறந்தவன் அவன். எனினும் அவன் கூட இவ்வாறு தற்பெருமை கொண்டதில்லை.” என்றது.

ஜஜாலி வியப்படைந்தார். துலாதரன் என்பவர் யார்? அவர் தம்மை விட சிறந்தவனாக இருப்பது எப்படி? என ஆராய்ந்து அறிந்து கொள்ள ஆவல் கொண்டார். உடனே ஜஜாலி ஊருக்குள் சென்று துலாதரனைப் பற்றி விசாரித்தார். நெடுநேர தேடலுக்குப் பின்னர், வாரணாசியின் சந்தை ஒன்றில் அவரைக் கண்டார்.

துலாதரன் ஜஜாலியைக் கண்டவுடன் பணிவுடன் எழுந்து கைக்கூப்பி வணங்கினார். “துறவியாரே, உங்களின் வருகையால் நான் மிகவும் அகமகிழ்கிறேன்.”என்று சொன்னார்.

ஜஜாலியும் தன் வருகைக்கான காரணத்தைக் கூறினார். வனத்தில் அசரீரியாக எழுந்த குரல் சொன்னதையும் துலாதரனிடம் கூறினார். துலாதரனும் புன்னகைத்தபடி“துறவியாரே, தங்களைப் பற்றியும் தங்களின் வாழ்க்கையைப் பற்றியும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். உங்களின் துறவற வாழ்க்கை எனக்கொரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது” என சொன்னார். துலாதரனும் சில நேரம் பேசினார். அவரின் அறிவாற்றல் மிகுந்த பேச்சு ஜஜாலியை வியப்பில் ஆழ்த்தியது.

ஒரு வணிகனுக்கு இவ்வளவு ஞானமா? எப்பொழுதும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் எவ்வாறு இவ்வளவு ஞானத்தைப் பெற்றிருப்பான்? என்று சிந்திக்கலானார். “துலாதரா, உமக்கு எவ்வாறு இவ்வளவு ஞானம் கிடைத்தது?” என கேட்டார்.

“துறவியாரே, நான் ஒரு வணிகன் தான். அன்றாடம் பண்டங்களை வாங்குதல் மற்றும் விற்றல் என செய்துவருகிறேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு செயல்களிலும் எந்தவொரு உயிரும் துன்புறுத்தப்படுவதில்லை. என்னால் இயன்றவரை மற்றவர்களுக்கு நன்மைகள் செய்கிறேன். தவறியும் மற்றவர்களுக்கு கேடு விளைவிக்க நினைத்ததில்லை. யாரிடமும் கடுமையாக நடந்து கொண்டதில்லை. நான் யாரையும் இதுவரை வெறுத்து ஒதுக்கியதுமில்லை.” என துலாதரன் கூறினார்.

“இதுவே, நல்லொழுக்கம் என சான்றோர்கள் கூறுவது. இதனாலே ஒருவன் பக்குவநிலை அடைந்து ஞானமடைகின்றான். இதைவிட புண்ணிய செயல் பிரிதில்லை.” எனவும் துலாதரன் தொடர்ந்தார். பிறகு துலாதரன் நிறைய நல்ல விஷயங்களை எடுத்துக் கூறினார்.

”துறவியாரே, அங்கே பாருங்கள். ஓர் இளங்கன்று தன் தாயிடம் எவ்வளவு பாசமாக இருக்கின்றது. அதுபோல தான் நாமும் நம் தாயிடம் பாசமாக இருந்திருப்போம். பாசமும் நேசமும் மிருகங்களுக்கும் உண்டு. அவ்வாறு உணர்ச்சிகள் நிறைந்த உயிர்களைக் கொல்லுவதும் அவற்றின் உடம்பை தின்பதும் குற்றம். எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்கவேண்டியது தானே மனிதர்களின் கடமை.” என கொல்லாமை தத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவர் நெடுநேரம் உணர்த்தினார். துலாதரனின் அகன்ற அறிவாற்றலும் பக்குவநிலையும் ஜஜாலியின் மனக்கண்ணைத் திறந்தன.

ஜஜாலியின் ஆணவமும் தற்பெருமையும் ஒழிந்துபோக அவர் துலாதரனை கைக்கூப்பி வணங்கினார். இ

பிட்டுக்காக மண் சுமந்த பெருமான்


பிட்டுக்காக மண் சுமந்த பெருமான்

பிட்டுக்காக மண் சுமந்த பெருமான்

- தத்துவம் என்ன?


சனாதன தர்மத்தின் புராணக் கதைகள் பெரும்பாலும் ஆழ்ந்த ஆன்மீக தத்துவங்களையும் நன்னெறி பண்புகளையும் நமக்கு எளிதாக எடுத்துரைப்பதற்காக அருளப்பட்டவை. அந்த வகையில் “பிட்டுக்காக மண் சுமந்த பெருமான்” எனும் புராணக் கதை அரசு தர்மத்தை உணர்த்துகின்றது.

அரசு தர்மம்

சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை, ஒரு நாட்டின் தலைவராக இருப்பவர் முதற்கொண்டு ஒரு குடும்பத்திற்கு தலைவராக இருப்பவர் வரை ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய கடமைகள் மற்றும் தவிர்க்கவேண்டிய செயல்கள் ஆகியவை தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் தலைவன் ஆற்றவேண்டிய கடமைகள் அர்த்தசாஸ்திர நூலில் குறிக்கப்பட்டுள்ளன. அதிலொரு முக்கிய கடமையை தான் ஈஸ்வரன் இப்புராண கதையின் மூலமாக நமக்கு விளக்குகின்றார்.

புராணம்


மதுரை வைகை அணையில் ஏற்பட்ட உடைப்பினை சரிசெய்ய பாண்டிய மன்னன் அந்த ஊரைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தினரும் உதவிக்கரம் தந்து கரையை அடைக்க ஆணையிட்டான். அவ்வூரில் அம்மை என்ற வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி வாழ்ந்து வந்தார். மூப்பெய்திய காலத்திலும் ஈசன் மீது கொண்ட பக்தி சற்றும் குறையாமல் அனுதினமும் ஈசனை வழிபட்டு வந்தார். சிவத்தொண்டு ஆற்றவேண்டி அந்த மூதாட்டி தன் ஊரில் புட்டுக்களை விற்று வாழ்ந்து வந்தார். பாண்டிய மன்னனின் ஆணையைக் கேள்விபட்ட மூதாட்டி,

“மன்னனின் ஆணையை நிறைவேற்ற என்னிடம் உடல்பலம் இல்லை. அணையை அடைக்க உதவிக்கரம் கொடுக்க ஈசனின்றி எனக்கென்று வேறு யாரும் இல்லையே” என மிகவும் வருத்தப்பட்டார்.

தம்மிடம் சரணடைந்த பக்தையின் வருத்தத்தைக் கண்டுகொண்ட சிவபெருமான் தாமே கூலி ஆளாக தோன்றினார். அப்போது அம்மையாரிடம் விளையாட வேண்டி ஒரு வேண்டுகோளும் விடுத்தார்.

“அம்மையே, உம் சார்பாக நான் மண் சுமக்கிறேன். அதற்கு கூலியாக நீர் தயாரித்த புட்டுகளை எமக்கு கொடுப்பாயா?” என கூலியாளாக தோன்றியிருந்த சிவபெருமான் கேட்டார்.

அம்மையும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். தெய்வீக புன்னகை மலர புட்டுகளை உண்டுவிட்டு மண் சுமக்க புறப்பட்டார்.

இப்போது மன்னனுக்கு பாடம் கற்பிக்க வேண்டி ஈசன் மற்றொரு திருவிளையாடலும் மேற்கொண்டார். மன்னன் கூலியாட்களிடம் மிகவும் கடுமையாகவும் அவர்களை அடிமையாகவும் நடத்தி வந்தான். கூலியாளாக தோன்றியிருந்த சிவபெருமான் களைப்பு மிகுதியால் வேலையை நிறுத்திவிட்டு உறங்குவதைப் போல பாசாங்கு செய்தார். இதைக் கண்ட மன்னன் கடும் கோபம் கொண்டான். சற்றும் சிந்திக்காமல் கோபத்தால் கூலியாளாக தோன்றியிருந்த சிவபெருமானை பிரம்பால் அடித்தான்.

அப்போது மன்னனுக்கே முதுகில் பிரம்படிபட்டது போல வலித்தது. கூலியாளின் மீது பட்ட ஒவ்வொரு அடியும் உண்மையில் மன்னனின் மீதே பட்டன. வியப்படைந்த மன்னன் கூலியாளாக தோன்றி திருவிளையாடல் புரிந்தது இறைவன் என்பதை உணர்ந்தான். கோபத்தால் சிந்தனையை இழந்து தான் செய்த செயலையும் கூலியாட்களிடம் கடுமையாக நடந்து கொண்டதையும் எண்ணி மிகவும் வருந்தினான். இறைவனை வேண்டி தன் தவற்றை திருத்திக் கொண்டான்.

இறைவன் அம்மையாரை வாழ்த்திவிட்டு, மாணிக்கவாசகர் பெருமையையும் கூறி அருளினார்.

நன்னெறி

வேலையாட்களை அடிமையாக நடத்தும் முதலாளிகளுக்கு இறைவன் ஒரு நல்ல பாடம் புகட்டியுள்ளார். தன்னுடைய வேலையாட்களிடம் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளவேண்டியது முதலாளிகளின் தர்மமாகும். அவர்களை அடிமை போல் நடத்தினால் அது தன்னை தானே பிரம்பால் அடித்துக் கொள்வதற்கு ஒப்பாகும். காரணம் முதலாளிக்காக தான் வேலையாட்கள் தங்களின் உடல்பலத்தை செலவிட்டு உழைக்கிறார்கள். முதலாளியிடம் கருணை இருந்தால் தான் தொழிலாளிகளிடம் விசுவாசம் இருக்கும். அதுபோல, ஒரு நாட்டை ஆளும் பெரிய பதவியில் உள்ளவர்கள் தன் மக்களின் வயிற்றில் அடித்தால், இறுதியில் அது அவர்களுக்கே வினையாக வந்து முடியும் என்பதையும் இந்த புராணம் எடுத்துக் காட்டுகின்றது.

இப்போது இருக்கும் சூழலில் இந்த புராணம் ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

“மக்களே ஒரு நாட்டின் முதுகெலும்பு. அவர்களை அடிமைப்படுத்துவதும் அவர்கள் வயிற்றில் அடிப்பதும், தர்மநியதிக்கு எதிரான செயலாகும்.”(அர்த்தசாஸ்திரம்)

இதுபோன்ற கதைகளில் அடங்கியிருக்கும் தத்துவங்களை நாம் கிரகித்துக் கொள்ள வேண்டும். அதுவே புராணங்களின் அடிப்படை நோக்கமாகும்

அன்னபூரணியின் அன்ன நியதி

அன்னபூரணியின் அன்ன நியதி
அன்ன நியதி என்றால் உணவுமுறை சார்ந்த நெறிமுறைகள் எனப் பொருள்படும். அவை:
1) உணவை வீணாக்க கூடாது - பசித்த போது தான் உணவு உட்கொள்ள வேண்டும். எனவே போதுமான அளவு உணவை தட்டில் போட்டு உட்கொள்ள வேண்டும். இன்னும் பசித்தால் பிறகு சேர்த்துக் கொள்ளலாம்.
2) உணவை பகிர்ந்து உண்ண வேண்டும் - நமக்கு கிடைத்த உணவை நம்முடைய நண்பர்களோடும் சுற்றத்தாரோடும் பகிர்ந்து உண்ணலாம். இது நமக்கிடையே உள்ள ஒரு நல்ல உறவை மேலும் வலுவாக்கும். மற்ற வேளைகளில் நாம் தயாரித்த உணவை அண்டை வீட்டுக்காரர்கள் போன்றவர்களுக்கு கொடுக்கலாம். விரத நாட்களில் காக்கைக்கு உணவளிப்பர். பறவைகளிலே காக்கைகளிடம் ”பகிர்ந்து உண்ணும் குணம்” பரவலாக உள்ளது. ஆகவே காக்கைகளுக்கு உணவளிப்பதன் மூலமாக அவற்றிடமிருந்து பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை நாம் பாடமாக படித்துக் கொள்ளலாம்.
3) அன்போடு வழங்கப்பட்ட உணவை அலட்சியப்படுத்தக் கூடாது – ஒருவர் ’அன்போடு’ நமக்கு கொடுக்கும் உணவை நாம் ஏற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூறவேண்டும். பிறகு அந்த உணவை இல்லத்தாரோடு பகிர்ந்து உண்ணவேண்டும். இவர் வேண்டாதவர், இவர் கொடுத்த உணவை உண்டால் ‘தீட்டாகிவிடும்’ என்று அந்த உணவை அலட்சியப்படுத்துவது மிகப்பெரிய தீவினை. அன்போடு கொடுக்கப்படும் உணவு என்பதால் அது கண்டிப்பாக ஆரோக்கியமானதாக தான் இருக்கும். எனவே, தாராளமாக அதை உண்ணலாம்.
4) ஆரோக்கியமற்ற உணவை உண்ண வேண்டாம் – ஆரோக்கியமற்ற உணவை நாமும் உண்ணக் கூடாது மற்றவர்களுக்கும் கொடுக்க கூடாது. உணவை வீணாக்க கூடாது என்ற பட்சத்தில் ஆரோக்கியமற்ற உணவை நாம் உண்ணுதல் நம் உடலைப் பாதிக்கும். உடலை பாதிக்கும் இயல்புடையது ‘அன்னம்’ அல்ல. உடலுக்கு ஊட்டத்தை அளிப்பதே அன்னம் ஆகும். எனவே, அதை நாம் தூக்கிவீசுவதில் எந்தவொரு பிழையும் இல்லை.
5) புலால் உணவுகளைத் தவிர்க்க அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும் – புலால் என்றால் இறைச்சி எனப் பொருள்படும். இறைச்சி என்பது யாதெனில் அது பிறிதொரு உயிரினத்தின் சதை ஆகும். மற்ற உயிரினத்தின் உடலை உண்பதால் அதன் உள்ளுணர்வுகளும் நம் உணர்வுகளில் கலக்கின்றன. இது மனிதர்களிடம் இருக்கும் தெய்வீக குணங்களை முடக்கி மெல்ல மெல்ல மிருக குணங்களை உருவாக்கும். கட்டுப்பாடில்லாத புலால் உணவு நாளடைவில் பெரிய அளவிலான நோய்களை ஏற்படுத்தி மனிதனைக் கொல்கின்றன. மனரீதியிலும் உடல்ரீதியிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் புலால் உணவுகளை குறைத்துக் கொள்வது ஆரோக்கியமாகும். ஆன்மீக வாழ்வில் புலால் உணவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்மீகப் பயிற்சிக்கு புலால் மறுத்தல் மிக முக்கியமான ஒழுக்கநெறியாகும். ஆயினும் எல்லா இந்துக்களும் ஆன்மீகப் பயிற்சியில் முழுமையாக ஈடுபாடு காட்டுவதில்லை. சமூக வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் இந்துக்கள் புலால் உணவுகளை குறைத்துக் கொண்டு தாவர உணவுகளை மிகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். சிலருக்கு புலாலை முழுவதுமாக மறுக்க அடிப்படையான பயிற்சி தேவைபடும். அதனால் தான் நம் முன்னோர்கள் வெள்ளிவிரதம், புரட்டாசிவிரதம் என அறிமுகப்படுத்தினர். ஆகவே முடிந்தவரை சில முக்கிய நாட்களிலாவது விரதமிருந்து புலால் மறுத்தலைக் கடைப்பிடியுங்கள்.

ஏழு சக்கரங்களின் இயக்கத்தினால்தான் மனித உயிர் தங்குகிறது

7 என்றாலே புனிதமும் மகத்துவமும் வாழ்வில் இன்றியமையாததும் ஆகும் !
இந்த ஏழு சக்கரங்களின் இயக்கத்தினால்தான் மனித உயிர் தங்குகிறது.
அவை
மூலாதாரம்,
ஸ்வாதிஷ்டானம்,
மணிப்பூரகம்,
அனாகதம்,
விஷீத்தி,
ஆக்ஞா,
சகஸ்ரஹாரம்.
வீரிய சக்தியான மூலாதாரம் முதுகெலும்பின்
கடைசிப்பகுதியில் (நமது மலத்துவாரத்துக்கு சற்று மேலே)
அமைந்துள்ளது.
இது விநாயகரின் ஆசி பெற்ற இடமாகும்.
ஐம்பூதங்களில் இது மண்ணுக்குரியது.
ஆசாபாசங்கள்,மனிதனின் அடிப்படை உணர்வுகள் மற்றும்
சிருஷ்டிக்குரிய ஸ்வாதிஷ்டானம் தொப்புளுக்குக்
கீழே அமைந்துள்ளது.
இது அக்கினிக்குரியது.
தொப்புள் பகுதியில் அமைந்துள்ளது மணிப்பூரகம்.
இது பயம்,பதற்றத்துக்குரியது.
இது பஞ்சபூதங்களில் நீருக்குரியது.
இது பெண்களுக்குரிய சக்தி மையம் ஆகும்.
இரண்டு மார்புகளுக்கு நடுவே அமைந்திருப்பது அனாகதம்.
கருணை,அன்பு போன்றவற்றின் இருப்பிடமான இது
ஐம்பூதங்களில் காற்றிற்குரியது.
தொண்டைக்குழியில் இருப்பது விசுத்தி.
சிந்தனை,சுதந்திர உணர்வு,தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்
திறன் ஆகிவற்றிற்குக் காரணகர்த்தாவான இது
ஆகாயதத்துவத்தின் அடிப்படையில்
இயங்கிவருகிறது.
புருவத்தின் நடுப்பகுதியில் இருப்பது ஆக்ஞா.
இது உள்ளுணர்வின் இருப்பிடம் ஆகும்.
ஐம்பூதங்களில் மனதின் சக்தியிது.
சஹஸ்ரஹாரம் உச்சந்தலை தியானமும்,
பிரபஞ்ச பிரக்ஞையும் பிறக்குமிடம்.

Friday, April 1, 2016

மயிலுக்கு இருப்பதைப் போன்ற அழகு மிகுந்த தோகை, வேறு எந்த பறவைக்கும் கிடையாது. யானையின் தந்தங்களைப் போல, வேறு எந்த விலங்குக்கும் அழகு மிகுந்த தந்தங்கள் இல்லை. ஹார்ஸ் பவர் என்று சொல்லப்படும் குதிரையின் ஓட்டத்திற்கு இணை உண்டா? இருந்தும், அவை எல்லாம் கர்வப்படுவதில்லை. ஆனால், அவற்றை எல்லாம் தன் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் மனிதனுக்கோ ஆணவம் கண்ணை மறைக்கிறது. பைரவரைச் சுற்றி, நான்கு நாய்கள் இருப்பதை படத்தில் பார்த்திருப்போம். பைரவரின் திருமேனி, அபூர்வமான அமைப்பு கொண்டது. அவரின் திருவடி முதல் இடுப்பு வரை, பிரம்மதேவரின் வடிவம்; இடுப்பு முதல் கழுத்து வரை, மகாவிஷ்ணுவின் வடிவம்; கழுத்து முதல் திருமுடி வரை, ருத்ர வடிவம். இவ்வாறு, மும்மூர்த்திகளின் வடிவாகத் திகழ்பவர், பைரவர். ஒருநாள், சிவபெருமானை தரிசிக்க, கைலாயம் வந்தார் பைரவர். வெளியில், தன் வாகனமான சுவானத்தை (நாயை), நிறுத்தி விட்டு, கைலாயத்திற்குள் பிரவேசித்து, சிவபெருமானை தரிசித்து திரும்பும் போது, சுவானத்தை காணவில்லை. பல இடங்கள் தேடியும் தென்படவில்லை.
வருத்தத்தோடு மறுபடியும் கைலாயநாதரை தரிசித்து, முக்கண் முதல்வரே... தங்கள் ஆணைப்படி, உலகெங்கும் வலம் வந்தேன்; தீயவர்களை தண்டித்தேன். இன்று, தங்களை தரிசித்து திரும்பிய போது, அடியேனின் வாகனத்தை காணவில்லை; எங்கு தேடியும் பலன் இல்லை. ஏன் இப்படி என்பது புரியவில்லை... என முறையிட்டார்.
பைரவா... உன் வாகனமான சுவானம், சாதாரண சுவானங்களில் ஒன்றல்ல; வேதமே அவ்வடிவில் உனக்கு வாகனமானது. இது உனக்குத் தெரிந்திருந்தும், ஆணவத்தில், அதை சாதாரண சுவானமாக நினைத்து விட்டாய்... அகங்கார வசப்பட்டோருக்கு வேதத்தின் பொருள் விளங்காது. அதன் காரணமாகவே, உன் வாகனம் மறைந்தது... என்றார். அதைக் கேட்டதும், பைரவர் நடுங்கி, பரம் பொருளே... அடியேன் அகங்கார வசப்பட்டதற்கு சரியான தண்டனை கிடைத்து விட்டது; மன்னித்து, அருள் புரியுங்கள்... என வேண்டினார். பைரவா... மதுரைக்கு வடமேற்கில், வாதவூர் எனும் தலத்திற்கு செல். அங்கு உன் துயரம் தீரும்... என்று அருள் பாலித்தார் சிவபெருமான்.
வாதவூர் என அழைக்கப் பட்ட திருவாதவூருக்கு புறப்பட்டார் பைரவர். இவ்வூருக்கு வேதபுரி என்ற பெயரும் உண்டு. இங்கு, தன் பெயரால் குளம் உண்டாக்கி, நீராடியவர், திருநீறு அணிந்து, ருத்ராட்ச மாலை சூடி, ஆலயத்திற்குள் புகுந்து, சிவனை பூஜித்தார்.
பெருமானே... பொல்லாத ஆணவத்தால், நான் பட்ட துன்பம் போதும். வேத மயமான வாகனத்தை இழந்த அடியேனின் துயரத்தை தீருங்கள்... என மனமுருகி வேண்டினார். அப்போது, மூல லிங்கத்தில் இருந்து நான்கு சுவானங்களுடன் வெளிப்பட்ட சிவபெருமான், பைரவா... வேத மயமான இந்நான்கு சுவானங்களையும் பெற்றுக் கொள்; இவை அனைத்து விதமான பேறுகளையும் தரும். உன்னால் உருவாக்கப்பட்ட பைரவ தீர்த்தத்தில் நீராடியவர்கள், எல்லா மங்கலங்களையும் அடைவர்... என்று அருளி, மறைந்தார். அகங்காரம் நீங்கி, சிவபெருமானால் அருளப்பட்ட நான்கு சுவானங்களுடன் அங்கிருந்து புறப்பட்டார் பைரவர். மனிதன், ஒவ்வொரு படியாக முன்னேற முன்னேற, அவனை அறியாமலே, ஆணவம் தலையெடுக்கும். சிறிதளவு ஏமாந்தால் கூடப் போதும். நம் முன்னேற்றத்திற்கு காரணமானவை, நம்மிடம் இருந்து மறைந்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்!

Monday, March 28, 2016

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!
குருசேத்திர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் தீவிரமாய் போர் செய்து கொண்டிருக்கிறார்கள். கவுரவர் அணியில் இருந்து துரோணர் உக்கரமாய் போர் செய்கிறார். துரோணர் சிறந்த வீரர். அவரை போரிட்டு வெல்ல முடியாது என்பது பகவான் கிருஷ்ணனுக்கு தெரியும்.எனவே துரோணரை தந்திரமாக வீழ்த்த எண்ணுகிறார்.
துரோணரின் ஒரே பலவீனம் அவரது மகன் அஸ்வத்தாமன் மீது அவருக்குள்ள பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் துரோணர் தவித்துப் போய்விடுவார் என்று கணக்கு போடுகிறான் கிருஷ்ணன்.
உடனே கிருஷ்ணன் தருமரை அழைத்து சொல்கிறான் " தருமா! துரோணரை போரில் வீழ்த்த உங்களால் இயலாது. எனவே நான் ஒரு உபாயம் சொல்கிறேன். அதன்படி செய்" என்கிறான். தருமர் உடனே ,"சொல் கிருஷ்ணா" என்கிறார்.
கிருஷ்ணன் சொல்கிறான் " தருமா! துரோணருக்கு தன் மகன் அஸ்வத்தாமன் மீது அளவு கடந்த பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் இவர் துடித்துப் போய்விடுவார்.அந்த நேரத்தில் நாம் அவரை வீழ்த்திவிடலாம். அதனால் நீ இப்போது "அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்" என்று சத்தம் போட்டு சொல்.அதை கேட்டவுடன் அவர் போரை நிறுத்திவிடுவார். பிறகு அர்ஜுனன் அவரை தாக்கட்டும்"
.இதைக்கேட்ட தருமர் , "கிருஷ்ணா! என்னைப் பற்றி நன்கு அறிந்த நீயா இப்படி சொல்கிறாய். எந்த காரணம் கொண்டும் நான் பொய் சொல்ல மாட்டேன் என்பது உனக்கு தெரியாதா? நான் நிச்சயம் இந்த பாவத்தை செய்யமாட்டேன் " என்கிறார்.
கிருஷ்ணன் யோசிக்கிறான்."இந்த தருமனை பொய் சொல்ல வைப்பது சிரமம்.அதேநேரம் தருமன் சொன்னால் தான் துரோணர் நம்புவார்.என்ன செய்யலாம்" என யோசிக்கிறான்.
பிறகு பீமனை அழைக்கிறான்.ஓடோடிவந்த பீமனிடம், "பீமா! நீ ஒரு முக்கியமான் வேலை செய்ய வேண்டும்" என்கிறான். என்ன என்று கேட்கும் பீமனிடம் , "பீமா! கவுரவ சேனையில் அஸ்வத்தாமன் என்னும் யானை இருக்கிறது.அது போர்க்களத்தில் புகுந்து நமது வீரர்களை பந்தாடுகிறது. நீ உடனே பொய் அதை கொன்றுவிட்டு வா" என்கிறான். பீமனும் சரி என்று சொல்லி கையிலே கதையை எடுத்தான். நேரே அந்த யானையிடம் சென்று கதையால் ஒரு போடு.யானை கீழே விழுந்து இறந்தது.
பீமன் கிருஷ்ணனிடம் ஓடோடி வந்து நடந்ததை சொல்கிறான். கிருஷ்ணர் இப்போது தருமரைப் பார்க்கிறார். "தருமா! கேட்டாயா? பீமன் அஸ்வத்தாமன் என்னும் யானையை கொன்றுவிட்டான்.அதனால் நீ இப்போது தாராளமாக அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்று சொல்லலாம்" என்கிறான்.
அதற்கு தருமர், "கிருஷ்ணா! நான் நீ சொன்னபடி செய்கிறேன்.ஆனால் அஸ்வத்தாமன் எனும் யானை இறந்துவிட்டது என்றுதான் சொல்வேன் " என்கிறார்.
கிருஸ்ணன் உடனே, " தருமா! நான் சொல்வதைக் கேள்.இல்லையென்றால் துரோணரை வீழ்த்தவே முடியாது.அதனால் , ' இறந்துவிட்டான் அஸ்வத்தாமன் என்னும் யானை' என்று சொல்.இதில் 'இறந்துவிட்டான் அஸ்வத்தாமன்' என்பதை சத்தமாகவும் , 'என்ற யானை' என்பதை மெதுவாகவும் சொல்" என்கிறான்.
இதற்கு தருமர் சம்மதிக்கிறார். அதற்குள் கிருஷ்ணன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற செய்தியை பரப்புகிறார்.இந்த செய்தி துரோணர் காதில் விழுகிறது. ஆனால் அவர் அதை நம்ப மறுக்கிறார்.ஏனென்றால் அஸ்வத்தாமன் ஒன்றும் சோற்றுக்கு செத்தவனல்ல. நிகரற்ற வீரன்.அவனை வீழ்த்துவது மிகக் கடினம்.
அதனால் எப்போதும் சத்தியமே பேசும் தருமரைப் பார்த்து துரோணர் கேட்கிறார், "தருமா! நீ சொல்.அஸ்வத்தாமன் என்ன ஆனான்? இறந்துவிட்டானா ?" அதற்கு தருமர், ஆமாம்! 'இறந்துவிட்டான் அஸ்வத்தாமன்' என்று சத்தமாகவும், 'என்ற யானை' என்று மெதுவாகவும் சொல்கிறார்.
இதைக்கேட்ட துரோணர் கலங்கி போய் தனது வில்லை தூக்கி எறிந்து இனி போர் செய்ய மாட்டேன் என்று அமைதியாய் அமர்ந்து விடுகிறார்.
உடனே கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கண் காட்டுகிறான்.புரிந்துகொண்ட அர்ஜுனன் தனது சக்திவாய்ந்த பாணத்தால் துரோணரை வீழ்த்துகிறான்.
இந்த சம்பவத்தின் முக்கிய நிகழ்வு என்ன தெரியுமா? தருமர் எமதர்மனின் அம்சமாக குந்திதேவி வயிற்றில் உதித்தவர்.மகா சத்யவான்.பொய்யே பேசாதவர்.
இதனால் போர்க் களத்தில் அவரது தேர் இந்த பாவ பூமியில் படாமல் ஒரு அடி உயரத்திலேயே நிற்கும்.அதாவது அந்தரத்தில் நிற்கும்.
அவர் சொன்ன இந்த சிறிய பொய்யினால் அவரது தேர் தடாலென்று பூமியில் வந்து விழுந்தது.
இந்த சம்பவத்தின் முக்கிய பாத்திரமான அஸ்வத்தாமன் பிற்பாடு சிரஞ்சீவி பட்டம் பெறுகிறான்,அதாவது ஆஞ்சிநேய சுவாமி போல் அவனும் இன்றும், என்றென்றும், இந்த உலகம் உள்ளளவும் வாழ்வான்.

கீதை சொல்லும் பாதை!

கீதை சொல்லும் பாதை!
ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம். அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம், நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால், எனக்கு என்ன ிரயோஜனம்? என்று கேட்டான். அடுப்பில் கரியைப் போட்டுக்கொண்டிருந்த தாத்தா, அமைதியாக அந்தக் கரிக் கூடையைச் சிறுவனிடம் கொடுத்து, நதிக்குப் போய் இந்தக் கூடையில் நீர் கொண்டு வா என்றார். பேரனும் கூடையுடன் ஆற்றுக்கு ஓடினான். ஆனால், மூங்கில் கூடையில் தண்ணீர் தங்குமா என்ன? அவன் வீடு திரும்புவதற்குள் தண்ணீர் முழுவதும் ஒழுகிவிட்டது. தாத்தா சிரித்துக்கொண்டே, நீ இன்னும் வேகமாக வர வேண்டும் என்று சொல்லி, மறுபடியும் அவனைத் தண்ணீர் எடுத்து வர அனுப்பினார்.
இந்த முறை சிறுவன் வேகமாக ஓடி வந்தான்; ஆனாலும், வீடு சேர்வதற்குள் கூடை காலியாகிவிட்டது. கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்று புரிந்துகொண்ட சிறுவன், வாளி ஒன்றைக் கையில் எடுத்தான். ஆனால் தாத்தாவோ, எனக்கு வாளியில் நீர் வேண்டாம். கூடையில்தான் வேண்டும். நீ இன்னும் தீவிரமாக முயற்சி செய் என்று அவனை மறுபடியும் ஆற்றுக்கு அனுப்பினார். அந்த முறையும் அவனால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. போங்க தாத்தா, இது பயனற்ற வீண் வேலை! என்றான், மூச்சு வாங்கியபடி. அவனைப் பார்த்து புன்னகைத்த தாத்தா, நீ இதைப் பயனற்றது என்கிறாய். ஆனால், கூடையைப் பார், தெரியும் என்றார். பையன் கூடையைப் பார்த்தான். முதல் தடவையாக அது முற்றிலும் வேறாக மாறியிருப்பதைக் கண்டான். பழைய, கரி படிந்த கூடை, இப்போது உள்ளும் புறமும் சுத்தமாகிப் புத்தம் புதியது போல் காணப்பட்டது! தாத்தா சொன்னார்: குழந்தாய்! கீதை படிக்கும்போது இதுதான் நமக்கும் நேர்கிறது. உனக்கு அர்த்தம் புரியாமல் இருக்கலாம்; நினைவில் நிற்காமல் போகலாம். ஆனால், நீ உள்ளும் புறமும் தூய்மையடைந்து முற்றிலும் புதிய மனிதனாகிவிடுவாய்! இது கீதாச்சார்யனான கிருஷ்ண பரமாத்மா, நம் வாழ்வில் நிகழ்த்தும் அற்புதம்!