Saturday, July 2, 2016

பைரவ முகூர்த்தம்:

பைரவ முகூர்த்தம்:
24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை. இவ்வாறு நான்கு நாழிகைகள் சேர்ந்ததே அதாவது ஒன்றரை மணி நேரமே ஒரு முகூர்த்தம் எனப்படும். இது பொதுவான கணக்கு. மேலும், முகூர்த்தம் என்பது புனிதமான காலம் என்றும் பொருள்படும். இடத்தைப் பொறுத்தும், காரியத்தைப் பொறுத்தும் முகூர்த்தத்தின் கால அளவு மாறுபடும் என்பது உண்மையே. உதாரணமாக, சன்னியாசி என்பவர் ஒரு பசு மாடு பால் கறக்கும் நேர அளவிற்குத்தான் ஒரு வீட்டின் முன்பு பிச்சை யாசிப்பதற்காக நிற்கலாம் என்பது சன்னியாச முகூர்த்தம். கோதூளி முகூர்த்தம் என்பது பசு மாடுகள் காலையில் புல் மேய்வதற்காக செல்லும் நேரமாகும். எனவே இத்தகைய முகூர்த்தங்களுக்கு இத்தனை மணி, நிமிடம் என்ற கால வரையறையை நிர்ணயிக்க முடியாது.
சித்தர்கள் கணக்கில் பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற் காலையில் மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரைக்கும் உள்ள நேரமாகும். அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் நேரமாகும். இதுவும் கால தேச மாறுபாடு உடையதே.
இத்தகைய முகூர்த்த நேரத்தின் இடையில்தான் சித்தர்கள் கணக்கிடும் அமிர்த நேரம் என்ற சித்த முகூர்த்தங்கள் அமைகின்றன. சித்தாமிர்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே அமையும்.
அதுபோல பைரவ முகூர்த்தம் என்ற அற்புதமான முகூர்த்த நேரம் உண்டு. சித்தர்களின் கிரந்தங்களில் மட்டுமே காணப்படும் இந்த அற்புத அமிர்த நேரத்தை முதன்முதலாக உலகிற்கு வழங்கியவரே நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார்கள்.
சூரிய உதயத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நான்கு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று வழங்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு நாள் காலை சூரிய உதயம் 6 மணி 12 நிமிடம் என்று வைத்துக் கொண்டால் சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள நான்கு நிமிடங்களும் சூரிய உதயத்திற்குப் பின் உள்ள நான்கு நிமிடங்களும், அதாவது 6 மணி 8 நிமிடத்திலிருந்து 6 மணி 16 நிமிடம் வரை உள்ள எட்டு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று சித்தர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.
திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற எந்த நற்காரியத்திற்கும் முகூர்த்தம் லக்ன நேரம் குறித்துதான் காரியங்களை நிகழ்த்த வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், போதிய ஜோதிட ஞானம் இல்லாதோரும் சூழ்நிலை காரணங்களால் இத்தகைய முகூர்த்த லக்னங்களில் நற்காரியங்களை நிகழ்த்த இயலாதபோது மேற்கூறிய முகூர்த்தங்கள் நற்காரிய சித்தி அளிக்கவல்லதாய் அமைகின்றன. சூன்ய திதி, அசம்பூர்ண நட்சத்திரங்கள், பகை ஹோரைகள் போன்ற பற்பல பஞ்சாங்க தோஷங்களைக் களையக் கூடிய சக்தியை உடையதே அபிஜித் போன்ற விசேஷ முகூர்த்தங்கள் ஆகும்.
இவ்வாறு பைரவ முகூர்த்த நேரத்தில் இயற்ற வேண்டிய வழிபாடுகள் ஏராளமாக உண்டு. அவ்வழிபாடுகள் நாம் காலத்தை முறையாகப் பயன்படுத்தாத தோஷங்களுக்கு ஒரளவு பரிகாரமாக அமைகின்றன. சித்தர்கள் அருளிய பைரவ முகூர்த்த நேரத்தைக் குறிப்பதே பைரவ மூர்த்திகளின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாய்களின் வால் பகுதியாகும். எந்த அளவிற்கு பைரவ மூர்த்திகளின் வாகனங்களின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகளை மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்கு பைரவ முகூர்த்தத்தைப் பற்றிய ரகசியங்களை நாம் தெரிந்து உணர்ந்து அதை நற்காரிய சித்திக்குப் பயன்படுத்த முடியும் என்பது சித்தர்களின் அறிவுரை,
பைரவ வாகனத்தின் வால் பகுதியில் அப்படி என்ன விசேஷம் விரவி உள்ளது? பைரவ வாகனம் என்பது தர்ம தேவதையே. எம்பெருமானின் வாகனமான நந்தி மூர்த்தியாகவும் தர்ம தேவதை எழுந்தருளி உள்ளது நாம் அறிந்ததே. கிருத யுகத்தில் நான்கு கால்களில் திரமாக நின்ற தர்ம தேவதை தற்போதைய கலியுகத்தில் ஒரே ஒரு காலில் மட்டும்தான் நிற்கின்றது. எனவேதான் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற தகாத நிகழ்ச்சிகளையே நாம் சந்திக்கிறோம்.
இத்தகைய தகாத நிகழ்ச்சிகள் நம்மைத் தாக்காது நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் தர்ம தேவதையின் ஆசீர்வாத சக்திகளை நாம் பெற்றாக வேண்டும். கலியுகத்தில் பூமியில் நிலை கொண்டிருக்கும் தர்ம தேவதையின் நாலாவது கால்தான் பைரவ வாகனத்தின் வால் பகுதியாகும். நாம் பைரவ வாகனத்தின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகள் இயற்றும் அளவிற்கு நாம் தர்ம தேவதையின் அனுகிரக சக்திகளைப் பெற்றவர்கள் ஆகிறோம்.
பைரவ வாகனத்தில் வால் பகுதியைப் பொறுத்து பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளும் பலவிதமாய் பரிமாணம் கொள்கின்றன.
உதாரணமாக,பைரவ வாகனத்தின் வால் பகுதி சுருட்டிக் கொண்டு வட்ட வளையம் போல் இருக்கும். இந்த பைரவ மூர்த்திகள் தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்றழைக்கப்படுகின்றனர். பூமி சூரியனைச் சுற்றும் கால அளவை இந்த பைரவ மூர்த்திகள் நிர்ணயிப்பதால் இரவில் செய்ய வேண்டிய காரியங்கள்,பகலில் செய்ய வேண்டிய காரியங்கள் போன்றவற்றில் ஏற்படும் குழப்பங்கள்,அவற்றால் ஏற்படும் கால தோஷங்கள் இவற்றை இத்தகைய பைரவ மூர்த்திகள் களைகிறார்கள்.
கணவன் மனைவி இவர்களுக்கு இடையே உள்ள தாம்பத்திய உறவிற்கு இரவு நேரமே ஏற்றது. பகல் நேர புணர்ச்சி நரம்புக் கோளாறுகளையும் சந்ததிகளின் அவயவ குறைபாடுகளையும் தோற்றுவிக்கும்,
அதே போல பகலில் தூங்குவதும் உட்கார்ந்த, நின்ற நிலையில் தூங்குவதும் உடல் நலத்திற்கு உகந்ததன்று. இரவு நேர எண்ணெய்க் குளியலும் ஆரோக்கியத்தை அளிக்காது.
இரவு நேரப் பயணங்களும், இரவில் நெடு நேரம் கண் விழித்லும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
இது போன்ற பகலிரவு கர்ம மாறுபாடுகளில் ஏற்படும் தோஷங்களை ஓரளவு நிவர்த்தி செய்வதே தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் வழிபாடாகும்.
பைரவ வாகன மூர்த்திகளின் வால் பகுதி கொடியைப் போல் மேல் பகுதியில் வளைந்திருக்கும். இத்தகைய வாகனங்களை உடைய பைரவ மூர்த்திகள் தர்மக் கொடி பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். பதவி, செல்வாக்கு,பணம், ஆரோக்கியம் போன்ற நிலைகளில் உயர் நிலையிலிருந்து விதி வசத்தால் தாழ்ந்த நிலையை அடைந்தவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே தர்மக் கொடி பைரவ மூர்த்தி ஆவார்.
நீதிபதிகள், ஆட்சியாளர்கள், மந்திரிகள் திடீரென்று பல்வேறு காரணங்களால் தங்கள் பதவியை இழந்து வாடும்போது அவர்களை இதுவரை அண்டியிருந்த நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மறந்து விடுவார்கள். இது அன்றாடம் நடக்கக் கூடிய நிகழ்ச்சியாகும். ஆனால், இத்தகைய துன்பங்களால் பாதிக்கப்படும்போதுதான் அதன் உண்மை வேதனை புரிய வரும். இத்தகைய எதிர்பாராத துன்பங்களைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே, தர்மக் கொடி பைரவர் ஆவார், மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் அளிக்க வல்லதே தர்மக் கொடி பைரவ மூர்த்தியின் வழிபாடாகும்.
பைரவ மூர்த்திகளின் வாகனங்கள் வலது புறம் நோக்கியும் இடது புறம் நோக்கியும் பார்த்தவாறு அமைவதுண்டு. பைரவ மூர்த்திக்கு இடது புறம் பார்க்கும் வண்ணம் வாகனம் அமைந்த மூர்த்தி ஆடபீஜ பைரவ மூர்த்தி என்றும், பைரவ மூர்த்திக்கு வலப் புறம் பார்க்கும் வண்ணம் அமைந்த வாகனத்தை உடையவர் மகபீஜ பைரவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.
எண்ணிக்கை குறைவு, அடர்த்திக் குறைவு போன்ற விந்துக் குற்றங்களால் அவதியுற்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் மகபீஜ பைரவ மூர்த்திகளை செவ்வாய், வியாழக் கிழமைகளில் வழிபடுவதால் நற்சந்ததிகள் இறைப் பிரசாதமாக கிட்ட வாய்ப்புண்டு.
இரத்தச் சோகை, கர்பப்பை கோளாறுகள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் ஆடபீஜ பைரவ மூர்த்திகளை வெள்ளிக் கிழமைகள் தோறும் வணங்கி வழிபடுவதால் நற்குணம் மிக்க குழந்தைகளைப் பெற இறைவன் அருள் புரிவார்.
வாகனம் ஏதுமின்றி அருள்புரியும் பைரவ மூர்த்திகளும் உண்டு. இவர்கள் சுதர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். எவ்வளவோ படிப்பு, புத்திசாலித்தனம் போன்ற நல்ல தகுதிகளைப் பெற்றிலிருந்தாலும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிட்டாமல் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோர் இத்தகைய பைரவ மூர்த்திகளை வணங்கி வழிபடுவதால் படிப்பு, அறிவுத் தகுதிகளுக்கு ஏற்ற நல்ல வேலைகள் அமையும்

பூணூல் அணிவது பற்றி

பூணூல் அணியும் சம்பந்த பற்றி ஸ்வாமிநாத சிவாச்சாரியார் பட்டுக்கோட்டையில் இருந்து கேட்டற்தற்கு என்னுடைய கருத்து அவரால் யாவரும்
பயன்பேற....
காயத்ரி ஜபத்தால் மனது ஒருமை படுவதுடன் ஜபம் செய்பவர் புத்தி, மேதா விலாஸம் ஆகியன மிகச்சிறந்த விருத்தியை அடைகிறது. ஞான ஒளியை தருவது இது. காயத்ரி ஜபமும் மற்ற நல்ல கர்மங்களும் மேலும் நல்ல ஞாபக சக்தியையும், நீண்ட ஆயுளையும், வலிமையையும் தருகின்றன.
காமம் உள்புகுந்தபின் மந்திரம் நிலைக்காது. அதனால்தான் காம விகார உணர்வுகள் உள்ளே போகும் முன்பே காயத்ரீ உபதேசமும் ஜபமும் ஆரம்பித்துவிட வேண்டும் என்கிறார்கள். அதனால்தான் சிறு வயதிலேயே இதை செய்து கொள்ள சொல்கிறார்கள். எண்ணை பூசிக்கொண்ட கையால் பலாச்சுளைகளை பிரிப்பது போல மந்திரம் நிலைத்த பின் மனதை காமம் அதிகம் பாதிக்காது.
பத்து வயதில் க்ஷத்திரியனும் 11 இல் வைச்யனும் உபநயனம் செய்ய காலம். மற்ற மதத்தவர் கூட இதே வயதில் இது போன்ற கர்மா செய்கின்றனர். பார்சிகள் குழந்தையின் 6 வயது 3 மாதங்களில் நவ்ஜோத் என்று செய்கிறார்கள்.
மனிதனுக்கு இதற்கு முன்னால் செய்யப்பட்ட கர்மாக்கள் அனைத்துமே இதற்கு தகுதியை உண்டாக்கத்தான்.
உடல் சுத்திக்காக முதலில் வபனம் (முடி திருத்தம்); நீண்ட ஆயுளுக்காவும், தன் பிள்ளைபோல மாணவனை காப்பாற்றவும் அக்னியை வேண்டுகிறார்கள். முன் சொன்னபடி கருங்கல் மீது ஏறி மந்திரங்கள் சொல்லி ஆசீர்வாதம் செய்த பின் ஆடை, மேகலை, மான்தோல், தண்டம் முதலியன பல தேவதைகளின் அருளை வேண்டிக்கொண்டு மாணவனுக்கு தரப்படும்.
வாமன அவதாரத்தின் போது அவருக்கு நடந்த உபநயனம் விரிவாக பாகவதத்தில் எட்டாம் ஸ்கந்தம் 18 வது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. சூரியன் அவருக்கு நேரில் காயத்திரியை உபதேசம் செய்தான். உபவீதத்தை ப்ரஹஸ்பதியும்; மேகலையை கச்யப ப்ரஜாபதியும்; நீண்ட ஆயுள், யஷஸ் தரும் மான்தோலை பூமிதேவையும்; நல்ல புத்தி, வேதத்தை காத்தல் இவை பொருட்டு பலாச தண்டத்தை ஸோமனும்; இந்திரிய நிக்ரஹத்தை தர கௌபீனத்தை அதிதியும்; குடையை தேவலோகமும்; தீர்த்த பாத்திரத்தை ப்ரம்மாவும்; சுத்தம் தரும் குச புற்களை ஸப்த ரிஷிகளும்; ஜப மாலையை ஸரஸ்வதியும் பிட்சை எடுக்கும் பாத்திரத்தை குபேரனும்; உலகுக்கே தாயாரான உமாதேவி பிக்ஷையும் அளித்ததாக சொல்லி இருக்கிறது.
இந்த தேவதைகளின் அருளினால் வாமனர் பிரகாசித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் ஹோமங்கள் செய்வதில் பயனாகும் மந்திரங்கள் மாணவனின் நீண்ட ஆயுள், செல்வம், ஐச்வர்யம், மேதாவிலாசம், புகழ் இவற்றை வேண்டி அக்னியை பிரார்த்திப்பதாக உள்ளது. பின் ஸமித்துக்களை மாணவன் ஹோமம் செய்கிறான். இந்த ஸமிதாதானம் ப்ரம்மசாரியால் தினமும் செய்யப்பட வேண்டியது.
முப்புரி நூலை எப்போதும் தரித்து இருக்க வேண்டும். அந்தணர் அல்லாத பலர் இதை சில விசேஷங்களுக்கு மட்டும் போட்டுக்கொண்டு (திருமணம், அந்திம காரியம்) மற்ற நேரங்களில் அணிவது இல்லாமல் போய் விட்டது. பூணூல் மூன்று இழைகள் கொண்டதாக செய்து அதை கட்டைவிரல் அல்லாத மற்ற 4 விரல்களில் 96 முறை சுற்றி துணித்து; இந்த நூலை நனைத்து மீண்டும் மூன்றாக முறுக்கி (இப்போது 9 இழை ஆகிவிட்டது) மூன்றாக சுற்றி முடி போட வேண்டும். இது பிரம்ம கிரந்தி. இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் உள்ளனர். பூணூலின் நீளம் தொப்புள் வரை இருக்க வேண்டும்.
இந்த பூணூல் என்கிற பிரம்ம சூத்திரம்தான் ஒருவன் தபஸை காப்பாற்றுகிறது. இந்த பூணூல் இல்லாது செய்யும் கர்மாக்கள் பலன் சரியாக தருவதில்லை. தேவ காரியங்கள் செய்யும் போது இடது தோளில் இருந்து வலமாகவும், பித்ரு கார்யங்களில் வலது தோளில் இருந்து இடமாகவும் அணிய வேண்டும். மற்ற நேரங்களில் சாதாரணமாக மாலை போல் அணிய வேண்டும் என்றாலும் பலரும் இதை பின் பற்றுவதில்லை.

Thursday, June 30, 2016

கல்வியில் தேர்வில் வெற்றி பெற

கல்வியில் தேர்வில் வெற்றி பெற
(1) படிக்கும் அறையை / இடத்தை கண்டிப்பாக சுத்தமான முறையில் எபோதும் வைத்திருக்க அறிவுறுத்தவும்.
(2) குரங்குகளுக்கு வெல்ல கட்டி கொடுப்பது, படிக்கும் முன் அஞ்சநேயரை வழிபட்டு பின்பு படிப்பது அல்லது பரீட்சைக்கு செல்வது நல்ல பலன் தரும்
(3) குரங்குகளுக்கு உணவிடமுடியாதோர், பறவைகளுக்கு உணவிட்டு வரலாம்.
(4) அடிக்கடி மறதி ஏற்படும் மாணவர்கள் மற்றும் தோல்வி பயத்தில் எப்போதும் உள்ளோருக்கு, பாக்கெட்டில் சிறிய கற்பூர கட்டி மற்றும் படிகார கட்டி வைத்து வர எதிர் மறை பயங்கள் நீங்கி, வெற்றி கிட்டும். பெண் குழந்தைகளுக்கு இவை இரண்டையும் கண் மூடி கையில் 10 நிமிடம் வைத்திருக்க கூறி பின்பு பர்சில் அல்லது பையில் வைத்திருக்க சொல்லவும்.
(5) குழந்தைகள் ஸ்கூல் அல்லது காலேஜ் செல்லும் முன் சிறிய கிண்ணத்தில் தயிரில் சிறிது சக்கரை கொண்டு கலக்கி, அதை உண்டு விட்டு செல்ல செய்யவும்.
(6) கீழ்காணும் முத்திரையில் உங்கள் குழந்தைகளை தினசரி 23 நிமிடங்கள் இருக்க செய்வீர்களேயானால் நூறு சதவீதம் தேர்வில் வெற்றி கிட்டும்.

செல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்

செல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்
நாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி.
அன்றாடம் நாம் பிறருக்கு பணத்தை கொடுக்கும் பொழுது, அதாவது செலவழிக்கும் பொழுது பெரும்பாலும் பணத்தை அப்படியே எடுத்து கொடுத்து விடுகிறோம். மாறாக, பணத்தை நன்கு கைகளால் தடவி, உணர்ந்து பின்பு "சென்று வா-திரண்டு வா" என்ற மந்திரத்தை 3 முறை மனதினுள்கூறியவாறே பணத்தை கொடுக்க, கொடுக்கும் பணம், பன் மடங்காக நம்மிடம் திரும்பும் என்பது உறுதி. முடிந்தால் பணத்தை நெற்றி பொட்டருகே மடித்து வைத்து மந்திரம் கூறியும் கொடுக்கலாம்.

காசிக்கு சென்றால் ஏதாவது விட்டுவிட்டு வரவேண்டும் என்பது ஏன்?


காசிக்கு சென்றால் ஏதாவது விட்டுவிட்டு வரவேண்டும் என்பது ஏன்?


எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழவேண்டும். அவ்வாறு வாழ்பவனுக்கு ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்துவிடும்.

பற்று அற்ற நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அக்காலத்தில் குடும்பப் பொறுப்பினை நடத்தி முடித்தவர்கள் காசிக்குச் செல்வது வழக்கம். எந்த ஒரு பொருளின் மீதும் அதிக பற்றோ அல்லது விருப்பமோ இருக்கக்கூடாது, எதன் மீதும் எந்த ஒரு ஆசையும் இன்றி இறைவன் ஒருவனையே மனதில் சதா தியானித்து இருக்க வேண்டும் என்பதற்காக உண்டான பழக்கம் இது.

பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து பேரன், பேத்தி களைக் கொஞ்சி மகிழ்ந்து தன் இல்வாழ்க்கைக் கடமையைச் செவ்வனே செய்து முடித்தவர்கள் காசி, ராமேஸ்வரம் என தீர்த்த யாத்திரை மேற்கொள்வர். மோட்ச கதியை வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்வோர் இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் புண்ணிய நதியாம் கங்கையில் ஸ்நானம் செய்து முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து ஆராதனை செய்வர்.


கங்கையில் ஸ்நானம் செய்தால் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது நம்பிக்கை. கங்கையில் ஸ்நானம் செய்து புதுமனிதனாக வெளிவரும்போது எதன் மீதும் அதிகப் பற்று இருக்கக்கூடாது என்பதற்காக மிகவும் பிரியமான வஸ்துக் களை இனிமேல் உபயோகிப்பதில்லை என விட்டுவிடுவர்.

எனக்குப் பிரியமான கத்தரிக்காயை காசியில் விட்டுவிட்டேன், இனிமேல் சாப்பிடமாட்டேன் என்று பெருமை பேசுவதால் மட்டும் எந்தப் பலனும் கிடைத்துவிடாது. அதன் உண்மையான பொருளைப் புரிந்துகொண்டு எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழவேண்டும். அவ்வாறு வாழ்பவனுக்கு ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்துவிடும்

குருமார்கள் பூஜையில் அப்படி என்ன சொல்கிறார்கள்..?

குருமார்கள் பூஜையில் அப்படி என்ன சொல்கிறார்கள்..?
முக்கியமாக பொருள் தெரியாமல் தவறாக விமர்சனம் செய்யும் அறிவாளிகளும் இதை படிக்கலாம்..
பஸ்மதாரணம்:
விபூதி சிவ சின்னங்களுள் ஒன்று. சைவர்கள் எந்நேரமும் விபூதி அணிந்திருத்தல் அவசியம். “ஆளடையாளத்திற்காகத் திருநீறு இட்டுக்கொள்என உபநிடதவாக்கியம் கூறுகிறது. நாம் எப்போதும் சிவ சிந்தனையிலிருந்து நீங்காதிருப்தற்கு விபூதி உதவுகின்றது. “வாழ்க்கை நிலையற்றது. நாம் என்றோ ஒரு நாள் சாபராகி விடுவோம்: என்ற எண்ணம் எங்கள் மனத்தில் இருப்பதற்கும் ஒருவகையில் உதவுகின்றது இந்தத் திருநீறு. இந்த எண்ணம் இருக்குமானால் நாம் தீயவற்றை நீக்கி நல்லவற்றைச் செய்ய முயற்சிப்போமல்லவ?
விபூதி பசுஞ் சாணத்தினை நீறாக்குவதால் பெறப்படுகின்றது. பசு சைவர்களின் போற்றுதலுக்குரியது. எல்லாத் தெய்வாம்சங்களும் பசுவில் இருப்பதால் கோமாதா என்றும், காமதேனு என்றும் போற்றி வணங்குகிறோம். அதன் சாணமே நீறாகி வருவதால் அதற்கு ஒரு தனித் தன்மை உண்டு. பசுஞ் சாணம் நல்ல ஒரு தொற்று நீக்கி என்றும் அதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன என்றும் மருத்துவ ரீதியிலும் நிரூபிக்கப் பெற்றுள்ளது. விபூதியிலும் அத்தகைய சிறப்பம்சங்கள் உண்டு. உடலில் உள்ள தேவையற்ற நீத்தன்மையை உறுஞ்சும் தன்மையும் விபூதிக்குண்டு. இவ்வாறு பல சிறப்பம்சங்கள் உள்ள விபூதியை நாம் ஒரு நற்கருமம் தொடங்குமுன் தரித்துக் கொள்வது அவசியமல்லவா? நெற்றியில் திருநீறு இன்றிச் செய்யும் எக்காரியமும் பலனளிக்காது. அதனால் எந்தக் கிரியையும் ஆரம்பிக்கும் போது விபூதி தரித்தல் அவசியம். அதுவும் மந்திர சகிதமாக தரிக்கும்போது இன்னும் சிறப்பல்லவா? அவ்வேளையில் சொல்லப்பெறும் சுலோகம்:
ஸ்ரீ கரம் பவித்திரம் ரோக தோஷ நிவாரணம்
லோக வஸ்யகரம் புண்ணியம் பஸ்மம் த்ரைலோக்ய சாதனம்
பவித்ரதாரணம் (தர்பை அணிதல்):
விபூதி தரித்து நம்மை ஈடுபடுத்தி, சிவசிந்தனையில் நம்மை ஆயத்தம் செய்து கொண்டோம். இனி அந்தக் காரியத்தில் ஈடுபடுவதற்கு நம்மைத் தயார்செய்ய வேண்டுமல்லவா? அதற்காக, தர்ப்பைப் புல்லினால் ஆன பவித்திரம் என்னும் ஒன்றை நமது மோதிர விரலில் அணிந்து கொள்கின்றோம். தற்னை புனிதமானது. நமது சமயக் கிரியைகள் யாவற்றிலும் அது முக்கிய இடம் பெறுகின்றது.
சூழலில் இருக்கும் மாசுக்களை நீக்கித் தூய்ம செய்வதுடன் மந்திர ஒலிகளைக் கிரகித்துச் சேகரித்துப் படிப்படியாக் வெளிவிடுவதில் வல்லது. ஒரு கும்பத்தை உருவாக்கும்Bஓது கும்பத்தினுள்ளேயும் வெளியேயுமாக இரு கூர்ச்சங்களும் ஒரு பவித்திரமும் தர்ப்பையால் செய்யப்பட்டு அங்கு போடப்படுகின்றன. தெய்வ சக்தியைக் கும்பத்தில் தேக்கிவைக்க அவை உதவுகின்றன. அதேபோலக் கிரியைகளில் ஈடுபடும் நாம் நமக்கு மனத்தூய்மை, மனத்தெளிவு, மன ஒருமைப்பாடு என்பனவை ஏற்பட்டுக் கிரியைகளில் மனமொன்றி நிற்பதற்காகப் பவித்திரம் அணியப் பெறுகின்றது. அதிக சக்திச் செறிவும் சிறப்பான அதிர்வுகளும் தர்ப்பையில் இருப்பதாக விஞ்ஞான ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
நமது மோதிரவிரல் மிகச் சிறப்பான ஓரிடம். நமது உடலில் சில இடங்கள் நரம்புகளின் சந்திப்புகளாகவும், பல உணர்வுகளைத் தூண்டல் செய்யக்கூடிய இயல்புடையவைகளாகவும் உள்ளன. இந்த இடங்களில் அதற்குரிய ஊசிகளை முறைப்படி ஏற்றுவதன் மூலம் உடல் நோய்களை நீக்கி ஆரோக்கியம் ஏற்படுத்தும் சீன வைத்திய முறைகயாகியஅக்யூபன்சர்முறையை இப்போது பலரும் அறிவர். இதனை முன்னரே அறிந்திருந்த நம் முன்னோகள் இத்தகைய இடங்களில் துளையிட்டு தங்கம், வெள்ளி முதலிய உலோகங்களினால் ஆன நகைகளை அணிந்தும், பலன் பெற்று இருக்கின்றனர். செடில் காவடியும், இத்தகைய ஒன்றே. கழுத்திலும், மணிக்கட்டிலும் நகைகளை அணிவதன் மூலம் இத்தகைய நற்பலன்களைப் பெறமுடியும் என்பதை விஞ்ஞான ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
மோதிர விரலின் அடிப்பகுதி இத்தகைய சிறப்புப் பொருந்திய ஒரு இடமாகவும் தர்ப்பை நாம் முன்னரே பார்த்தபடி நல்ல உணர்வுகளைத் தூண்டக்கூடியதாகவும் இருப்பதனால் சங்கல்பம் செய்வதன் ஓரங்கமாகப்ப் பவித்திரம் அணிதல் நடைபெறுகின்றது. இந்நேரத்தில் தர்பையினால் ஆன ஆசனத்தில் இருக்கும்படியும் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான வசதி குறைவுகள் காரணமாக பாவனையாக இரு தர்ப்பைகளைக் காலின் கீழ் போட்டுவிட்டு அமரும்படி கேட்கப்பெற்றுகிறார்க. அதேபோலக் கைவிரலில் பவித்திரம் அணிந்தபின் மலர்களுடன் சில ர்கர்ப்பைகளை உள்ளங்கைகளுக்குள்ளே இட்டுக்கொண்டுதான் சங்கல்பம் ஆரம்பமாகின்றது. தர்ப்பை அணியும் போது சொல்லப் பெறும் மந்திரம்:
ததேவ லக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்த்ர பலம் ததேவ
வித்யாபலம் தைவபலம் ததேவ கஊரீபதே தேங்க்ரீ யுகம் ஸ்மரராமி
கௌரீ பதியாகிய சிவபிரானே உனது பாதங்களிரண்டையும் நினைக்கின்றேன். அதனால் (இச்செயல் தொடங்கும் இந்த நேரத்திற்குரிய) நாள், லக்னம் என்பன சுலபமானவையாகவும் தாரை, சந்திரன் ஆகியவற்றின் அடிப்படையிலும் சுகம் செய்வனவாகவும் கல்வியறிவினாலும் தெய்வத்தின் துணையினாலும் அவை சிறந்து விளங்குகின்றன.
ப்ராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு):
யோகமார்க்கத்தில் ஓரம்சம் பிராணாயாமம். யோகம் என்பது உடலையும் மனதையும் நமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒருமுகப்படுத்தும் மார்க்கம். அதற்குதவும் சுவாசக் கட்டுப்பாட்டுப் பயிற்சியே பிராணாயாமம். உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் எமக்கு; அதுவும் இந்த இயந்திரமான இன்றைய வாழ்க்கையில் ஒரே நேரத்தில் எததனையோ பிரச்சினைகள் இருக்கும். அவை யாவும் நமது மனத்தைக் குடைந்து கொண்டிருக்கும். அலைபாயும் மனத்தினால் நாம் இறைவனை வழிபடுதல் இயலாது.
மனம் இறைவன் மீது லயித்து நமது சிந்தனை ஒருங்கு குவிக்கபடும் போதுதான் பிரார்த்தனைகள் பலனளிக்கும். அதற்கு வழிவகுப்பதே பிராணாயாமம். புறச்சிந்தனைகளை ஒதுக்கி மனத்தை அகவயப்படுத்தி இறைநினைவைக் கிளரவைத்து நாம் இப்போது மற்றெல்லாவற்றையும் மறந்து இக்கிரியைஅயில் ஒன்றுபடப் போகிறோம் என்ற உணர்வோடு இந்த சுவாசப் பயிற்சியில் ஈடுபடுகிறோம். இப்போது சாதாரணமாக நமக்காகக் கிரியைகளைச் செய்யப் போகின்ற அர்ச்ச்கரே பிராணாயாமத்தில் ஈடுபடுவது வழக்கம்.
ஓம்பூ: ஓம் புவ: ஓம் சுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் சத்யம்.
ஓம் த்த்சவிதுர்வரேண்யம். பர்க்கோ தேவஸ்ய தீமஹீ. தியோ யோ :: ப்ரசோததயாத்.
ஒமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரம்ம பூர்புவஸ்வரோம்.
சுவாசக் கட்டுப்பாடாகிய பிராணாயாமம் பிரணவ மந்திரமாகிய ஓங்காரத்தில் தொடங்கி பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் எனப்படும் ஏழுலகங்களையும் கூறி அதன் பின் காயத்திரி மந்திரத்தைச் சொல்லி நிறைவு பெறுகிறது.
காயத்திரி மந்திரத்தின் பொருள்; எந்த ஒளிக்கடவுள் நமது புத்தியைத் தூண்டுகிறாரோ அவரை மனதில் தியானிப்போமாக.
விநாயகரைத் துதித்தல்
எக்காரியமும் விநாயகர் வழிபாட்டோடு தொடங்குவது நமது பாரம்பரிய மரபுமுறைப்படி அமைவதாகும்.இது விக்கினங்கள் இன்றி நமது கருமம் நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனையோடு நெற்றியிலே குட்டுகின்றோம். ஏன் குட்டி வணங்க வேண்டும் என்பதற்குக் கயமுகாசுரன் கதையும், அகத்தியர் கதையும் காரண விளக்கங்களைத் தருகின்றன. என்றாலும் முன்னர் குறிப்பிட்டவாறு நமது உடலில் சில இடங்களில் சில முக்கிய இயல்புகள் இருக்கின்றன.
அவ்வையில் நெற்றியின் இரு மர்ங்கிலும் குட்டும் போது அமிர்த கலசங்கள் கலங்கி உடலை நனைக்கின்றன.என்று ஞானியர் கூறுவர். இவ்வாறான செயல்பாடுகளில் நமது உடலின் கருவிகள் (அங்கங்கள்) ஈடுபட; வாய் மந்திரங்களையோ திருமுறைகளையோ கூற மனம் இறைவனின் திருவுருவையும் அவரது கருணைச் செயல்களையு நினைக்க அவ்வேளையில் நமது ஆன்ம ஈடேற்றத்தின் முதல் நிலையாகிய ஒருமைப்பாடு சித்திக்கத் தொடங்குகிறது.
திரிகரணங்களாலும் அதாவது; மனம், வாக்கு, காயம் (நினைவு,சொல்,செயல்) இறைவனோடு ஒன்றிநிற்றல் எனப்படும் நிலை இதுவே. இவ்வேளயில் சொல்லப்பெறும் விநாயகர் வணக்க சுலோகமும் அதனைத் தொடர்ந்து சொல்லப் பெறும் சில மங்கள சுலோகங்களும் இவை:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாத்தயே
வெண்மநிற வஸதிரம் தரித்தவரும், எங்கும் நிறைந்தவரும், நான்கு கரங்களை உடையவரும், மலர்ந்த முகத்தை உடையவருமாகிய விநாயகரை எல்லா இடையூறுகளும் நீங்குதற் பொருட்டுத் தியானிப்போமாக.
மானசம் வாசிகம் பாபம் கர்மணா சமுபார்ஜிதம்
ஸ்ரீ சிவஸ்மரணேனைவ வ்யபோஹதி ஸம்ஸயஹ
மனதாலும், வாக்காலும், செயல்களாலும் நாம் செய்துகொண்ட பாவங்கள் சிவனை நினைப்பதால் ஐயமின்றி அழிந்துவிடுகின்றன.
திதிஸ் சிவஸ் ததாவாரோ நக்ஷ்த்ரம் சிவ ஏவச
யோகஸ்ச்ச கரணம் சைவ சர்வம் சிவமயம் ஜகத்
திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம் என்னும் பஞ்சாங்க உறுப்புக்களாகிய இவ்வுலகிலுள்ள காலவரையறை எல்லாமே சிவமயமாக, மங்கலமாக இருக்கட்டும். என்பனவாம்.