சித்திரையின் சிறப்புகள்
சங்கக் காலத்தில் இருக்கக் கூடிய பல நூல்கள் சித்திரையின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றன.சித்திரையில் சித்ராப்பவுர்ணமி கொண்டாடப்படுவது சிறப்பு. அதுவல்லாமல் பல கேளிக்கைகள், பொழுதுபோக்குகள் இந்த மாதத்தில் நடத்தப்படுகின்றன.அரசு பல நலத்திட்டங்களை அறிவிப்பது சித்திரையில்தான். முதலில் தை மாதம்தான் தமிழ் மாதத்தில் முதல் மாதமாக இருந்துள்ளது. பிறகு சித்திரையாக மாறியுள்ளது. அது வழி வழியாக தமிழ் மாதமாக இருந்து வந்திருக்கிறது. தற்போது மீண்டும் தை மாதம் தமிழ் புத்தாண்டாக மாற்றப்பட்டுள்ளது.சித்திரை அக்னி அதிகமாக உள்ள மாதம். இறைவனுக்கு அதிகமாகப் படையல்கள் இடும் காலம். அன்னப் படையல் போன்றவை இந்த காலங்களில்தான் அதிகமாக செய்யப்படுகிறது. நீர், மோர் அளித்தலும் அதிகமாகக் காணப்படும்.சித்திரைக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது முதல் மாதமாக அறிவிக்கப்பட்டு நடைமுறையில் பல காலம் இருந்துள்ளது. மன்னர் ஆட்சியில் தையை விட சித்திரைக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். தனி மனித வாழ்க்கையில்தான் தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.மன்னர் காலத்தில் சித்திரையில்தான் பல நலத்திட்டங்களை அறிவித்தனர். மக்களை நேரடியாக சென்று பார்த்து அவர்களது குறைகளைக் கேட்டு அறிந்துள்ளனர்.தையை தமிழ் முதல் மாதமாக மாற்றிவிட்டதால் சித்திரையின் சிறப்புத் தன்மை குறைந்துவிடாது. அதன் சிறப்பு அப்படியேத்தான் இருக்கும்.

No comments:
Post a Comment