வெற்றி வேண்டுமா? வன்னிமரத்தை வழிபடுங்கள்
வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும். மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞானவாசத்தின் போது தமது ஆயுதங்களை வெற்றி தரும் வன்னி மரப்பொந்து ஒன்றில் மறைத்து வைத்ததாக சொல்லப்படுகிறது.உமா தேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
வன்னிமரம் விநாயப்பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களில் அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகில் உள்ள சாத்தனூர், பாசிகுளம் விநாயகர் சாஸ்தாவுக்கு அக்னி சொரூபமாக வன்னிமர வடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது.
வன்னிமர இலையை வட மொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள்.
இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும்.
விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.வன்னிமரம் புகழ் பெற்ற சில சிவாலயங்களில் இருக்கிறது.இந்த மரத்தை வணங்கி வழிபட்டால் பரிட்சையில், வழக்குகளில், வாழ்வில் வெற்றி மீது வெற்றிகளைக் குவிக்கும் என்பது நிச்சயம். வன்னி மரத்தை வழிபட்டு வாழ்வில் வெற்றி பெருவோமாக.
No comments:
Post a Comment