வலம் வருதல் என்பது 16 உபசாரங்களில் ஒன்று. இந்தப் பணிவிடைக்கு பிரதக்ஷிணம் என்று பெயர். மூன்று முறை வலம் வந்தால், பிரதக்ஷிணம் என்ற இந்த உபசாரம் முற்றுப்பெறும். தெய்வத் திருவுருவங்களுக்கும் வலம் வருதலின் எண்ணிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. 9 கிரகங்கள் என்பதால், 9 முறை வலம் வரவேண்டும் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதேபோல், இடமாகச் சுற்றுவதும் தவறு. அது, வலம் வருதலில் அடங்காது. இடமாகச் சுற்றுவது என்பது அபசாரமாக மாறிவிடும்.தெய்வத் திருவுருவங்களின் இயல்பை வைத்து வலம் வருதல் எழவில்லை. நாம் செய்யும் பணிவிடைகளே அதன் அளவுகோல். மூன்று முறை செய்தால் முற்றுப்பெறும் என்ற மரபு உண்டு, சாந்தி : சாந்தி : சாந்தி : என மூன்று முறை சொல்வோம். தம்பதி அக்னியை மூன்று முறை வலம் வருவார்கள். சாஸ்திரம் சொல்லும் சடங்குகளிலும் மூன்று முறை வலம் வருவோம். ஏலத்தில் மூன்று முறை சொன்னால் முற்றுப் பெற்றதாக எடுத்துக்கொள்வோம். கோர்ட்டிலும் மூன்று முறை சாட்சியை அழைப்பார்கள். இப்படி நடைமுறையிலும் மூன்று முறைக்கு முன்னுரிமை இருப்பதைக் காண்கிறோம். நவக்கிரகங்கள் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வலம் வர இயலாது. ஒட்டு மொத்தமாக அத்தனை பேரையும் மூன்று முறை வலம் வந்தால், முழுமையான உபசாரத்தை எட்டிவீடுவீர்கள்; உரிய பலனும் கிடைத்துவிடும். அதேபோல் குறிப்பிட்ட சாமியை குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வரவேண்டும் என்கிற கூற்றும் ஏற்கத்தக்கதல்ல. இப்படி, குறிப்பிட்ட தெய்வத்துக்கு உகந்த எண்ணிக்கையில் வலம் வரவேண்டும் எனும் தகவல், தெய்வ உருவின் பெருமையை மிகைப்படுத்தக் கையாளும் வழிகளில் ஒன்றே ! வலத்தில் மூன்று முடிந்தாலே, முழுப் பயனும் கிட்டிவிடும்
No comments:
Post a Comment