கர்ணனின் கொடை பற்றி நான் படித்த கதை ஒன்று.
அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் கோபம் கொண்டான் 'நீங்கள் எப்போதும் கர்ணனையே புகழ்கிறீர்கள் 'என்று.'ஏன் நாங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு தர்மமாக தெரியவில்லையா' என கோபித்தான் .கிருஷ்ணன் சொன்னார் 'சரி, ஒரு போட்டிவைக்கிறேன் .இதில் தெரிந்து விடும் யாருடைய கொடை பெரிதென்று'.இரு தங்க மலைகளை உண்டாக்கினார்.அர்ச்சுனனிடம் 'ஒரு நாள் பொழுதில் இதை
முழுவதும் நீ தானம் செய்ய வேண்டும்' என்றும் கூறினார்.'இது என்ன
பிரமாதம்?' என்று ஆரம்பித்த அர்ச்சுனன் பாளம் பாளமாக வெட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தான். மலை முடியவில்லை.நம்மால் முடியாதது கர்ணனாலும் முடியாது என்ற இறுமாப்புடன் காத்திருந்தான் .அடுத்த நாளும் அதே தங்க மலைகளை உண்டாக்கினார் கிருஷ்ணன் .கர்ணன் வந்தான் இரண்டுவழிபோக்கர்களை அழைத்து ஆளுக்கொரு மலையென கொடுத்தான். கிருஷ்ணன்அர்ச்சுனனைப் பார்த்தார்,'இப்போது சொல்' என்பது போல.

No comments:
Post a Comment