பள்ளிக் குழந்தைகள் ஆரம்பநிலையில் எல்லாப் பாடங்களையும் படிப்பர். மேல்நிலைக்குச்  செல்லும்போது அவரவர் விருப்பப்பாடத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இதைப் போலவே, ஆன்மிக  வாழ்வின் ஆரம்பத்தில் ஒரு பக்தர் பல தெய்வங்களையும் வழிபடுகிறார். காலம்  செல்லச்செல்ல ஒரு இஷ்டதெய்வத்தை வணங்க ஆரம்பித்து விடுகிறார். இவ்வாறு ஒரே  தெய்வத்தை வழிபடுவதால், இறைவழிபாட்டில் மனம் எளிதில் லயித்து விடும். தியானம்  கைகூடும். இஷ்ட தெய்வ மூலமந்திரத்தை ஜெபித்து வந்தால் எண்ணிய செயல்கள் விரைவில்  நிறைவேறும். விநாயகர், முருகன், அம்பிகை, சிவன், திருமால்,காளி என்று எந்த  தெய்வத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து பூஜித்து வாழ்வில் வளம் பெறுங்கள். 
No comments:
Post a Comment