மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் எட்டு வித செல்வங்களுக்கு மகாலட்சுமி அதி
தேவதையாகும். மகாலட்சுமியின் எட்டு விதமான தோற்றத் உருவங்களை, முழுமையான பக்தியோடு
வழிபடும் எவரும் மகாலட்சுமியின் அருளால் இன்பமும் மகிழ்ச்சியும் இழையோடும் எட்டு
விதமான அஷ்ட போக வாழ்க்கையைப் பெறுவார்கள். அவை வருமாறு:-
1.குடும்பத்தில் அன்பும், பண்பும், அழகும் கொண்ட, கணவன்-மனைவி அமைவார்கள்.
2.மன உல்லாசத்துக்கு ஆதாரமாக விளங்கும் சிறந்த உடைகளைப் பெறுவார்கள்.
3.அழகு மிளிரும் அணிகலன்களை அடைவார்கள்.
4.ருசி மிளிரும் உணவு வகைகள் கிடைக்கும்.
5.நலன் தரும் தாம்பூல வகைகள் குறைவில்லாமல் கிடைக்கும்.
6.அற்புதமான நறுமணப் பொருள்களைப் பெறுவார்கள்.
7.மனத்திற்கு மகிழ்ச்சியூட்டும் இன்னிசை.
8.மன உல்லாசத்துக்கு உதவும் மண மலர்கள் கிடைக்கும்.
இந்த எட்டு போகங்களும் முழுமையாக அமையப் பெற்றதுதான் உயர்ந்த வாழ்க்கை
No comments:
Post a Comment