Monday, April 9, 2012

* ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் பழமொழியின் பொருள் என்ன?


*கிருஷ்ணர்வெண்ணெய் திருடுவதில்உள்ளதத்துவம் என்ன?

மேலோட்டமாக பார்க்கும்போது திருடுவது போலத் தெரிந்தாலும், அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் அதை திருட்டாக எண்ண மாட்டோம். வெண்ணெய் என்பது பக்தி நிறைந்த வெள்ளை உள்ளத்தைக் குறிக்கும். அதை பரம்பொருளான கிருஷ்ணர் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்.


** நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா நடப்பது ஏன்?

பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

* ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் பழமொழியின் பொருள் என்ன?

மாலறு நேயமும் மலிந்தவர் வேடமும் தான் அரன் எனத் தொழுமே என்கிறது சிவஞான போதம். உண்மை பக்தியுடன் சிவாலயம், சிவனடியார்களைத் தொழுதால் அறிவும், நல்வாழ்வும் கிட்டும் என்பது இதன் பொருள். நல்லறிவே மகிழ்ச்சியான வாழ்வின் அடித்தளம். இதனைத் தரும் ஆற்றல் ஆலய வழிபாட்டிற்கு மட்டுமே உண்டு. ஊர்கள் தோறும் சிவ, விஷ்ணு கோயில்கள் எழுப்பப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. வீட்டில் எவ்வளவு தான் ஜெபம்,ஹோமம், பூஜை செய்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தான் நிறைவு உண்டாகும். சித்தாந்தம் கூறும் இவ்வளவும் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று' எனும் ஒரே வரியில் கூறிவிட்டார் அவ்வைப் பிராட்டியார். 

* பஞ்சாங்கத்தில் நட்சத்திரம், திதி போன்றவை மதியம் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை இருப்பதாக பார்க்கிறோம். விரதம், வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்?

விரதம், வழிபாடு மேற்கொள்வதிற்கு இரவில் திதி வியாபித்து இருக்கவேண்டும் என்பது நியதி. அதனால், முதல்நாளிலேயே விரதத்தை மேற்கொள்ளுங்கள். திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.


* விளக்கேற்றக் கூடிய திசைகள் யாவை?

கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் ஏற்றலாம். தெற்கில் மட்டும் ஏற்றக்கூடாது.

* நம்முடைய இஷ்டதெய்வத்தின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா?

இஷ்டதெய்வ சிலையை வைத்து வழிபடலாம். வழிபாட்டின் போது காலை, மாலை வேளைகளில் பால், பழம் பிரசாதமாக வைத்து பூஜை செய்யுங்கள்.

* பிரதோஷம் என்றால் என்ன? அத்தருணத்தில் இறைவனை வழிபட்டால் என்ன பலன் உண்டாகும்?

தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக்கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.



No comments:

Post a Comment