முருகன் பிரம்மனைக் குட்டிய வரலாறு கந்தபுராணத்தில் இடம்பெற்றுள்ளது. சிவனை வணங்க
கயிலாயம் வந்தார் பிரம்மா. படைப்புக்கடவுள் என்ற கர்வத்தோடு, முருகன் சிறுவன் தானே
என்ற எண்ணத்தில் வணங்காமல் <உள்ளே நுழைந்தார். ஆனாலும், முருகன் பிரம்மனைத்
தண்டிக்க விரும்பவில்லை. சிவதரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த போதும்
பிரம்மாவுக்கு அகங்காரம் நீங்கவில்லை. "வழிபாடு' என்ற சொல்லுக்கு "அகங்கார நீக்கம்'
என்று பொருள். இதைக்கூட உணராத பிரம்மனை தண்டிக்க முடிவெடுத்தார். அவரது தலையில்
குட்டி சிறையிலிட்டார். தானே படைப்புக்கடவுளாகி சிருஷ்டித் தொழில் செய்தார்.
செல்வமும், திறமையும், புகழும் இருந்தாலும் இறைவனுக்கு அடங்கி நடப்பது கடமை என்பதை
இதன் மூலம் உணர்த்தினார். இதையே வள்ளுவர், "எல்லாருக்கும் நன்றாம் பணிதல்
அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்கிறார். செல்வச்செழிப்புள்ளவர்க்கும்
பணிவு தேவை என்பது இது உணர்த்தும் கருத்து.
எந்த தெய்வமாக இருந்தாலும் முகங்கள் பல, திருவடி இரண்டு மட்டுமே இருக்கும். முருகனுக்கு ஆறு முகம். பக்தன் எங்கெல்லாம் அழைக்கிறானோ, அங்கெல்லாம் திரும்பிப் பார்க்க பன்னிரண்டு கண்கள். அவனது கடைக்கண் பார்வை பட்டாலே போதும், நினைத்தது நடந்து விடும். கேட்டது கிடைத்து விடும். ஆனால், அவனையே வேண்டுமென கேட்கிறார்கள் அடியார்கள். அது அவ்வளவு சாதாரணமான விஷயமா என்ன! இருந்தாலும், தன்னையே தர அவர் தயாராக இருக்கிறார்.
அதற்கு அவரது திருவடியைத் தான் கெட்டியாகப் பிடிக்க வேண்டும். அருணகிரியார் தனது திருப்புகழில், அவனது திருவடி தரிசனத்தையே கேட்கிறார். காரணம் பிறப்பற்ற நிலையை அடைய! பக்தன் உலக வாழ்வை வெறுத்து, மனதார அவனது திருவடியில் ஐக்கியமாக வேண்டும் என உருகிக் கேட்டால், அந்த வரத்தை நிச்சயம் தருவான்.

No comments:
Post a Comment