Sunday, June 17, 2012

* ஒரு வயது வரை குழந்தைக்கு ஜாதகம் கணிக்கக்கூடாது என்பது ஏன்?


* ஒரு வயது வரை குழந்தைக்கு ஜாதகம் கணிக்கக்கூடாது என்பது ஏன்?

அதற்குள் ஜாதகம் கணித்து என்ன செய்யப்போகிறீர்கள்? ஒரு வயது வரை குழந்தையின் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை கூட செய்யக்கூடாது. குங்குமம் இடுதல், பூ வைத்தல் போன்றவை கூடாது. தாய்ப் பாலைத் தவிர வேறு உணவு தரக்கூடாது. இவற்றையெல்லாம் ஏன் ஏற்படுத்தினார்கள் என்றால் குழந்தைக்கு உடல் ரீதியாக பாதிப்பு எதுவும் வரக்கூடாது என்பதற்காகத்தான். ஓராண்டு முடிந்து ஆயுஷ்யஹோமம் செய்யப்படும் வரை குழந்தை தெய்வ சம்பந்தமுடையதாக இருப்பதால் அர்ச்சனை செய்வது, ஜாதகம் பார்ப்பது போன்றவை தேவையில்லை.


** உலகிலேயே பாரதம் சிறந்த ஆன்மிக பூமியாகத் திகழ்வதற்கு சிறப்பான காரணம் உண்டா?

ஆன்மிகத்தின் மூலம் மக்களை நெறிப்படுத்தும் வழியை முதலில் கூறியது வேதங்கள் தான். மதம் என்ற பெயரில் ஆன்மிகம் பிரிவதற்கு முன்பே அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சநாதன தர்மம் என்ற பெயரில் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு தான் ஆன்மிகம் உலக மக்களிடையே பரவியிருந்தது. தேவர்களின் நிலைப்பாடுகளையும், யாகங்களின் மூலம் அவர்களை திருப்தி செய்து, மழை, பயிர் வளம், மகிழ்ச்சியான வாழ்க்கை போன்றவற்றைப் பெறலாம் எனவும் கூறும் வேதங்கள், தெய்வ வழிபாட்டுக்குரிய விஷயங்களாக சிலவற்றைக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக ராமேஸ்வரத்துக்கும் இமயமலைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை (இமயம் முதல் குமரி வரை என்றும் சொல்லலாம்) புண்ணிய காரியங்களைச் செய்ய ஏற்ற இடமாகக் கூறுகிறது. வேதத்தில் குறிப்பிடப்படுகின்ற புண்ணியநதிகளாகிய கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி நதிகள் இங்கு தான் உள்ளன. சிவன், விஷ்ணு, பார்வதி, விநாயகர், முருகன் போன்ற தெய்வங்களின் திருவருட் செயல்கள் இங்குதான் நிகழ்ந்தன. யாராலு<ம் தோற்றுவிக்கப்படாதது என்ற சிறப்புடைய சநாதன தர்மம் பல அருளாளர்களாலும், குருமார்களாலும் இன்றளவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு இந்து மதமாக வளர்ந்துள்ளது. எந்த நாட்டவராயினும் பிறரையும் அரவணைத்துக் கொள்வது நம் பாரததேசம் தான். ஆன்மிகம் என்பது உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு ஆலமரம் என்றால் அதன் ஆணிவேர், நமது புண்ணிய பாரததேசம்தான்.

* திருஷ்டி போவதற்கு பூசணிக்காயை நடு ரோட்டில் உடைப்பது முறையானதா?

இருசக்கர வாகனங்களில் செல்வோரும் நடந்து செல்வோரும் இதில் சறுக்கி விழுந்து கஷ்டப்படுகிறார்கள். எனவே விழுந்தவர்களுக்கு இருந்த திருஷ்டி தோஷம் நீங்கி விடுகிறது. விழுந்தவர்கள் கடும் சாபமும் பூசணிக்காயை நடுரோட்டில் முறையில்லாமல் உடைத்தவரையே சேருவதால், திருஷ்டி தோஷம் கழிவதற்கு பதில் பல தோஷங்கள் சேர்ந்து விடுகின்றன.



* கோயிலில் விளக்கேற்றி வழிபடுவதால் ஏற்படும் மகிமை என்ன?

"விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்' என்பது ஆன்றோர் வாக்கு. அதாவது, சுவாமிக்கு விளக்கேற்றினால் அதன் ஒளி நமது அறிவில் புத்தொளியைத் தரும். நாம் நன்றாக சிந்தித்து செயல்பட்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.

No comments:

Post a Comment