நவராத்திரி நாட்களில், அம்பாளுக்கு விதவிதமான சுண்டல், பாயாச வகைகள் நிவேதனம்
செய்யப்படுகிறது. இந்தப் பழக்கம் உருவாக காரணம் உண்டு. நவராத்திரி, புரட்டாசி,
ஐப்பசி மாதங்களில் தான் வரும். இந்தக் காலம் அடை மழைக் காலம். மக்கள் பயிர்கள்
செழித்து மகிழ்ச்சியுடன் இருக்கும் நேரம். தேவர்களுக்கு சிவ, விஷ்ணு அமிர்தம்
தந்து, அவர்களை நிரந்தரமாக வாழச்செய்தது போல, பூமி உயிர்வாழ "மழை' என்னும்
அமிர்தத்தைத் தருகிறார்கள். இதனால் பூமி "சக்தி' பெறுகிறது. அந்த சக்தியை பெண்ணாகப்
பாவித்து வழிபட்டனர். அந்த சக்திக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள்
பக்குவப்படுத்தப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம்
பெற்றது.அறிவியல் ரீதியாகவும் இதற்கு காரணம் உண்டு. புரட்டாசி, ஐப்பசி அடைமழை
காலத்தில் தோல்நோய் அதிகமாக ஏற்படும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு.
சுண்டலிலுள்ள சத்துக்கள் தோல்நோய் வராமல் தடுக்கும். நமது ஆன்மிகம் சாதாரணமானதல்ல.
ஒவ்வொன்றையும் நம் பெரியவர்கள், அர்த்தத்துடன் தான் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment