** ஆலய வழிபாட்டிற்கு நல்லநேரம் பார்த்துச் சென்றால் தான் பலன் கிடைக்குமா?
நல்லவேளை! சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு, காலை எழுந்திருப்பதற்கு இவற்றிற்கும் நல்லநேரம் பார்க்கலாமா என்று கேட்கவில்லையே! ஆலய வழிபாடு என்பது தினமும் செய்யவேண்டிய வழக்கங்களில் ஒன்று. இதற்கெல்லாம் நல்லநேரம் பார்ப்பதும், அதைக் காரணம் காட்டி போகாமல் இருப்பதும் சோம்பேறிகளின் வழக்கம்
நியாயம் தங்கள் பக்கம் இருந்தாலும், ஆண்கள் உடன்பிறந்த சகோதரியின் சாபத்திற்கு ஆளாக நேரிடுகிறதே. இது பலிக்குமா?
.நியாயம், அநியாயம் பார்க்கும்படி உடன் பிறந்தவர்களிடையே அப்படி என்ன மனக்கசப்பு? சட்டென்று கோபப்படும் சுபாவமுள்ளவர்களாக இருந்தாலும், பெண்களுக்குப் பிறந்த வீட்டாரிடம் தனிப்பாசம் எப்போதும் இருக்கும். சகோதர, சகோதரிகளிடையே சாதாரண பேச்சுவார்த்தை சண்டையாக முற்றும்போது அமைதி காக்க வேண்டும். இந்த பிறவியில் சகோதர சகோதரிகளாகப் பிறந்திருக் கும் நாம், அடுத்த பிறவிகளில் எங்கு எப்படி பிறப்போமோ? எனவே, ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் விட்டுக் கொடுத்துப் போவதில் தவறில்லை. நியாயமும், தர்மமும் உங்கள் பக்கம் இருக்கும் பட்சத்தில் யாருடைய சாபமும் பாதிக்காது. பயப்படவேண்டாம். எனினும், சகோதரிகளின் மனம்கலங்காமல் பார்த்துக் கொள்வது சிறப்பு.
* குலதெய்வம் தெரியாவிட்டால் யாரை குலதெய்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்?
உங்கள் தந்தைவழி உறவினர்களில் யாருக்காவது தெரிந்திருக்கும். அவர்களிடம் கேட்டுத் தெரிந்து வழிபடுவது சாலச்சிறந்தது. முடியாதபட்சத்தில் உங்கள் பெயர், ராசிப்படி சயனகோலத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமியை குலதெய்வமாக ஏற்கலாம்.
.

No comments:
Post a Comment