கங்காதேவியின் புத்திரனான பீஷ்மர், தந்தையின் நலனுக்காக திருமணமே செய்து கொள்ளாத
உத்தமர். அவர் தனது தம்பி விசித்திரவீரியனுக்காக காசிராஜனின் அரண்மனையில் நடந்த
சுயம்வரத்தில் கலந்து கொண்டு, அவர்களது மகள்களை அழைத்துச் சென்றார்.
அவர்களில் ஒருத்தியான அம்பை, சாலுவ தேசத்து அரசனான பிரம்மதத்தனை விரும்பியதால். தன்னை அவனது நாட்டிற்கு அனுப்பிவிடும்படி, பீஷ்மரிடம் வேண்டினாள். பீஷ்மரும் அவ்வாறே செய்துவிட்டார். கடத்தப்பட்ட அம்பையை பிரம்மதத்தன் ஏற்க மறுத்துவிட்டான். மீண்டும் பீஷ்மரிடமே திரும்பிய அம்பை, தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினாள். அவரோ
பிரம்மச்சர்யத்தில் உறுதியாக இருந்ததால் மறுத்து விட்டார். எனவே, அம்பை பீஷ்மரின் குருவான பரசுராமரிடம் உதவி வேண்டி நாடினாள்.
அம்பைக்காக பரிந்துபேச வந்த பரசுராமர், பீஷ்மரிடம் அவளை மணம் முடிக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், பீஷ்மர் மறுத்தார். கோபம் கொண்ட அவர், குருவின் பேச்சைக் கேட்காத சீடனுடன் போரிட்டார்.
அவரிடம் வில்வித்தை கற்றிருந்த பீஷ்மர், அவரையே வெற்றி கொண்டார். தோல்வியடைந்த பரசுராமர், அவரது பிரம்மச்சரிய விரதத்தின் மகிமையை அறிந்து சென்று விட்டார்.
குருவே சொன்னாலும்கூட, ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதியில் இருந்து தவறக்கூடாது என்பதற்கு பீஷ்மரின் வாழ்வில் நடந்த இந்நிகழ்வு ஒரு உதாரணம்.

No comments:
Post a Comment