Saturday, October 26, 2013

ஆன்மீக வாழ்வில் முழுமைத் தன்மை பெற வள்ளலார் கூறும் நான் வகை ஒழுக்கங்கள்

ஆன்மீக வாழ்வில் முழுமைத் தன்மை பெற வள்ளலார் கூறும் இந்த நான் வகை ஒழுக்கங்களை கை கொள்ளும் சாதகன் இறை சித்தியும், நினைத்தை அடையும்
ஆற்றலும் பெறுவான் இது திண்ணம்.

இந்திரிய ஒழுக்கம்
...
இந்திரிய ஒழுக்கம்,

கன்மேந்திரிய ஒழுக்கம், ஞானநேந்திரிய ஒழுக்கமென இருவகைப்பட்டது,

கொடிய சொல் செவி புகாது நாதம் முதலிய ஸ்தோத்திரங்களைக் கேட்டல்; அசுத்த பரிசமில்லாது தயா வண்ணமாகப் பரிசித்தல்; குரூரமாகப் பாராதிருத்தல்; உருசி (சுவை) விரும்பாதிருத்தல்; சுகந்தம் விரும்பாதிருத்தல்; இன் சொல்லாடல்; பொய் சொல்லாதிருத்தல்; ஜீவஹிம்சை நேரிடுங் காலத்தில் எவ்வித தந்திரத்தினாலாவது தடை செய்தல்; பெரியோர்கள் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்; ஜீவ உபகார நிமித்தமாய் சாதுக்கள் வாசஸ்தானங்களிலும் திவ்ய திருப்பதிகளிலும் சஞ்சரித்தல்; நன் முயற்சியில் கொடுத்தல்; எடுத்தலாதி செய்தல்; மலஜல உபாதிகளை அக்கிரமம் அதிக்கிரமம் இன்றி கிரமத்தில் நிற்கச் செய்வித்தல், எவ்விதமெனில், மித ஆகாரத்தாலும் மித போகத்தாலும் செய்வித்தல், கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஔஷதி வகைகளாலும் பௌதிக மூலங்களாலும், சரபேத அஸ்தபரிச தந்திரத்தாலும், மூலாங்கப் பிரணவத் தியான சங்கற்பத்தாலும் தடை தவிர்த்துக் கொள்ளல்; சுக்கிலத்தை அக்கிரம அதிக்கிரமத்தில் விடாது நிற்றல் - மந்ததரம், தீவிரதரம் எவ்வகையிலுஞ் சுக்கிலம் வெளிப்படாமல் செய்வித்தல்; இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் மறைத்தல், இதுபோல் உச்சி மார்பு முதலிய அங்கங்களையும் மறைத்தல்; சஞ்சரிக்குங் காலத்தில் காலிற் கவசந்தரித்தல்; அழுக்காடை உடுத்தாதிருத்தல் முதலியன இந்திரிய ஒழுக்கமாம்.

கரண ஒழுக்கம்

கரண ஒழுக்கமாவது: மனத்தைச் சிற்சபை என்னும் அறிவாகிருதி ஆக்கல்: இதன் பூர்வத்தில் புருவமத்தியில் நிற்கச் செய்தல்; இதன்றி, துர்விஷயத்தைப் பற்றாதிருக்கச் செய்தல்; சீவதோஷம் விசாரிய திருத்தல்; தன்மதிப்பில்லா திருத்தல்; இராகாதி நீக்கி இயற்கைச் சத்துவ மயமாதல், தனது தத்துவங்களை அக்கிரமத்திற் செல்லாது கண்டித்தல்.

ஜீவ ஒழுக்கம்

ஜீவ ஒழுக்கமாவது: ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய யாவர்களிடத்திலும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரசம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோரேன்னும் பேதம் நீங்கி, எல்லவரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுவது.

ஆன்ம ஒழுக்கம்

ஆன்ம ஒழுக்கமாவது: யானை முதல் எறும்பு வரை தோன்றிய ஜீவர்களினது சூக்குமம் தனி தலைவன் ஆதலால் அவ்வச் சீவர்களின் ஆன்மாவே திருச்சபை அதனுள் ஒளியே பதியாய் நிற்பதால் யாதும் நீக்கமறக் கண்டு எவ்விடத்தும் பேதமற்று எல்லாந் தானாக நிற்றல்.

No comments:

Post a Comment