Friday, November 29, 2013

கலியுக அரக்கர்களிடமிருந்து எம்மைக் காப்பாற்று கிருஷ்ணா!

கலியுக அரக்கர்களிடமிருந்து எம்மைக் காப்பாற்று கிருஷ்ணா!
_________________________________________________________________
“எப்பொழுதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட அவதாரம் செய்வேன்” என்றாயே! இன்னும் நேரம் வரவில்லை என்று நினைக்காதே!

கிருகயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் ஆகிய மூன்று யுகங்களிலும் வாழ்ந்து உன்னுடைய அவதாரங்களால் அழிக்கப்பட்ட அரக்கர்கள் ஒரு விதத்தில் மிகவும் நேர்மையானவர்கள். அவர்கள் தங்களை அரக்கர்களாகவே பறைச்சாற்றிக் கொண்டார்கள். அத்துனை அதர்மங்களையும் வெளிப்படையாகவே செய்தார்கள்....

இன்றைய கலியுக அரக்கர்கள் அவர்கள் அளவிற்கு நேர்மையானவர்களாக இல்லை, தாங்கள் நல்லவர்கள் என்று மக்களை நம்ப வைத்து, அவர்களுக்கே துரோகம் செய்கிறார்கள்.

நாட்டின் மண் முதல் மலை வரை நீர் முதல் நிலக்கரி வரை என்று பஞ்ச பூதங்களில் வாயு மற்றும் ஆகாயத்தைத் தவிர அத்துனையையும் திருடி விட்டார்கள், அல்லது அந்நிய தேசங்களுக்குத் தாரை வார்த்து விட்டார்கள். வாயு, காற்றினைத் திருடமுடியாததாலோ என்னவோ, அதை நச்சாக்கி விட்டார்கள். இவர்கள் நாளை அந்த ஆகாயத்தைக் கூடத் தங்களது ஆகாரம் ஆக்கிவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை.

அந்த வகையில் முதல் மூன்று யுகங்களில் வாழ்ந்த அரக்கர்களை விட இவர்கள் மிகவும் ஆபத்தானவர்களாகிவிட்டார்கள்.
கலியுகத்தில், பெருமாலான மக்கள் இன்னும் தன்னிலை உணராதவர்களாகவே இருக்கின்றார்கள். அதனாலேயே அவர்கள் சில நூறு அல்லது சில ஆயிரம் பேர்களின் கொடுமைகளுக்கும் நம்பிக்கைத் துரோகங்களுக்கும் ஆளாகி அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எனது தேசத்தின் இந்தத் தற்காலிகமான இழி நிலையை மாற்றி, நமது பாரம்பரியம் தர்மம் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு தாங்களும் சிறப்பாக வாழ்ந்து உலக சமுதாயத்தையும் சிறப்பானதாக மாற்ற அவர்களுக்கு உன் அருளை வழங்கு!

ஹரே கிருஷ்ண! ஹரே கிருஷ்ண! கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!!

No comments:

Post a Comment