Thursday, November 28, 2013

ஸ்ரீசந்தோஷிமாதா போற்றி-108

 
ஸ்ரீசந்தோஷிமாதா போற்றி-108
 
சந்தோஷிமாதா  போற்றி
சகலமும் அருள்வாய் போற்றி
வேதங்கள் துதிப்பாய் போற்றி
வெற்றிகள் தருவாய் போற்றி
கன்னியிற் சிறந்தாய் போற்றி
கற்பகத்தருவே  போற்றி
கருணைக் கடலே போற்றி
காரணத்தினுருவே போற்றி
காரியமும் ஆனாய் போற்றி
கரசித்தலமுறைவாய் போற்றி 
கதை கேட்டு மகிழ்வாய் போற்றி
கால தேசம் கடந்தாய் போற்றி
கஜமுகன் குழந்தாய் போற்றி
முக்குண உறுவே  போற்றி
மூவுலகிற் சிறந்தாய் போற்றி
இனியநின் உருவே போற்றி
இனிப்பினை விரும்புவாய்  போற்றி
வாட்டமில்லா முகத்தாய் போற்றி
வரம் மிகத் தருவாய் போற்றி
அகர முதல எழுத்தே போற்றி 
ஆதி அந்தமில்லாய் போற்றி
ஈடிணையற்றாய்  போற்றி
இணையடி தொழுதோம் போற்றி
கோரியது கொடுப்பாய் போற்றி
குலம் காக்கும் சுடரே போற்றி
விரதத்திற்கு உரியாய் போற்றி
விளக்கத்தின் விளக்கம் போற்றி
பிறப்பு இறப்பு அற்றாய் போற்றி
பிறப்பினைத் தருவாய் போற்றி
பெருவாழ்வு அருள்வாய் போற்றி 
பிழைகளைப் பொறுப்பாய் போற்றி
வணக்கத்திற் குரியாய் போற்றி
வணங்கினால் மகிழ்வாய் போற்றி
ஒலிக்குமோர் ஓசை போற்றி
உயர்வுகள் தருவாய் போற்றி
கோள்களும் போற்றப் போற்றி
குறைகளைத் தவிர்ப்பாய் போற்றி
நிறைவினைத் தருவாய் போற்றி
சக்தியின் உருவே போற்றி
ஸரஸ்வதி ஆனாய் போற்றி 
திருமகள் உருவே போற்றி
தெய்வத்தின் தெய்வம் போற்றி
குலத்தைக் கொண்டாய் போற்றி
வாஸனை ஏற்றாய் போற்றி
தீமைகளை அழிப்பாய் போற்றி
திசைகளெட்டும் நிறைந்தாய்போற்றி
அற்புத உருவே  போற்றி
ஆனந்த சிலையே போற்றி
தாமரை அமர்ந்தாய் போற்றி
தக்கன் தருவாய்  போற்றி 
தருமத்தின் உருவே போற்றி
தாயாக வந்தாய்  போற்றி
நினைத்ததைத் தருவாய் போற்றி
நிம்மதி அருள்வாய் போற்றி
உமையவள் பேத்தி போற்றி
உன்னதத் தெய்வம் போற்றி
செல்வத்தின் உருவமே போற்றி
ஜெகமெல்லாம் காப்பாய் போற்றி
உயிருக்கு உயிராவாய் போற்றி
உலகமெல்லாம் நீயே போற்றி 
ஆபரணமணிவாய் போற்றி
ஆடைகள் தருவாய் போற்றி
ஒளிமிகு முகத்தாய் போற்றி
கருணை சேர் கரத்தாய் போற்றி
மனைவி மக்கள் ஈவாய்  போற்றி
மங்களம் தருவாய் போற்றி
உன்னையே துதித்தோம் போற்றி
உடமைகள் தருவாய் போற்றி
நங்கையர்க்கு நாயகி போற்றி
நலமெலாம் தருவாய் போற்றி 
ஆர்த்தி ஏற்பாய்  போற்றி
ஆனந்த உருவே  போற்றி
பாடல்கள் கேட்டாய் போற்றி
பாசத்தைப் பொழிவாய் போற்றி
குணமென்னும் குன்றே போற்றி
குன்றென அருள்வாய் போற்றி
தேவியர் தேவி  போற்றி
தரிசனம் தருவாய் போற்றி
சிவனருள் பெற்றாய் போற்றி
சிறப்பெல்லாம் கொண்டாய் 
போற்றி  விஷ்ணுவருள் பெற்றாய் 
போற்றி விண்ணவர் போற்றப் போற்றி
நான் முகன் கருணை பெற்றாய் போற்றி
நலன்களின் உருவம் நீயே போற்றி
போற்றிக்கு அருள்வாய் போற்றி
புண்ணிய நாயகி  போற்றி
செல்வத்தின் உருவே போற்றி
செல்வத்தைப் பொழிவாய் போற்றி
சரணமடைந்தால் மகிழ்வாய் போற்றி
சற்குணவதியே  போற்றி 
ஐங்கரன் மகளே  போற்றி
அனைத்துமே நீதான் போற்றி
கண்களின் ஒளியே போற்றி
கனக மாமணியே  போற்றி
அன்பருக்கு அன்பே போற்றி
அனைவருக்கும் அருள்வாய்போற்றி
செல்வமாம் நிதியே போற்றி
செல்வத்தின் பதியே போற்றி
தத்துவமானாய்  போற்றி
வித்தகச் செல்வி  போற்றி 
பழங்களை ஏற்பாய் போற்றி
பாயசம் உண்பாய்  போற்றி
வெல்லம் கடலை சேர்த்து விருப்பமாய் உண்பாய் போற்றி
குடும்பத்தில் நலன்கள்தந்து கொலுவிருந்தருள்வாய் போற்றி
ஓம்கார உருவே  போற்றி உன்னதத் தெய்வம் போற்றி
ஸந்தோஷி மாதா  போற்றி
சவுளபாக்கியம் அருள்வாய் போற்றி 

No comments:

Post a Comment